டியர் சுப்பு
உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம் . முதலில் உங்களை தரமின்றி தாக்கிய பதிவிற்கு
ஆம் / இல்லை - பதில் போடவும் .
Printable View
டியர் சுப்பு
உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம் . முதலில் உங்களை தரமின்றி தாக்கிய பதிவிற்கு
ஆம் / இல்லை - பதில் போடவும் .
வாங்க ஆதிராம்
எங்கள் திரியின் அன்பு ''ஒற்றன் ''
பிழைகளை கண்டு பிடிப்பதில் வல்லவர் .
தின இதழில் தவறான தகவல்கள் இடம் பெற்றதை அறிவோம் . அந்த பத்திரிகை ஆசிரியருக்கு
பல முறை அலை பேசி மூலமும் , இ மெயில் மூலமும் அவர்களின் தவறுகளை சொல்லிவிட்டோம் .
ஆதிராம்
எங்களுக்குநீண்ட நாட்களாக ஒரு சந்தேகம் . நீங்கள் தான் நிவர்த்தி செய்ய வேண்டும் .
சாரதா
கார்த்திக்
கல்நாயக்
வனஜா
பரணி
ஸ்டெல்லா
இவர்கள் எல்லாம் ஒரே நபர் என்றும அதுவும் நீங்கள்தான் என்றும் கூறப்படுகிறதே .
உண்மையா ?
எல்லோருடய குழப்பத்தை நீங்கள்தான் தீர்க்க வேண்டும் .செய்வீர்களா ஆதிராம் ?
நண்பர் வரதகுமார் சுந்தர்ராமன் அவர்களுக்கு
முதலில் நன்றி, பத்திரிகையில் வந்த தவறான தகவலைக் களைய முயற்சி எடுத்து வருவதற்கு.
நீங்கள் கேட்ட இரண்டாவது விஷயம்,
என்னுடைய பதிவுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாதபோது மற்றவர்கள் கையாளும் உபாயம்தான் 'பலபெயர்களில் பதிவிடுபவன்' என்ற குற்றச்சாட்டு. இது பலமுறை பலரால் சொல்லப்பட்டு இருக்கிறது. இதற்கு கல்நாயக் போன்ற சிலர் விளக்கம் அளித்திருக்கிறார்கள். பலர் மௌனம் காத்திருக்கிறார்கள். நான் மட்டும் தவறாமல் பதில் சொல்லி வருகிறேன்.
ஏன் இந்த சந்தேகம் வருகிறது என்று தெரியவில்லை. இந்த குற்றச்சாட்டு வந்த துவக்கத்திலேயே மாடரேட்டர்கள் தீர ஆராய்ந்து, புகாரில் உண்மையில்லை என்று கண்டறிந்து என்னை தொடர அனுமதித்துள்ளனர்.
முன்பு முத்துராமன் என்ற பெயரில் ஒருவர் இந்த சந்தேகத்தை கொளுத்திப்போட்டார். அதை உண்மையென்று நம்பி பலர் அதையே பிடித்துக் கொண்டனர். (தவறான தகவல்களால் என்ன விளையும் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு).
வேறு பெயர்களில் பதிவிட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. சொல்லப்போனால் என் உண்மைப்பெயர் கூட ஆதிராம் இல்லை. அனந்தராமன். ரிஜிஸ்ட்டர் செய்தபோது ஹப்பில் ஏகப்பட்ட அனந்தராமன்கள் இருந்ததால் பதிவு கிடைக்கவில்லை. ஆகவே ஆதிராம் என்று ரிஜிஸ்ட்டர் செய்துள்ளேன்.
இனிமேலாவது பதிவில் உள்ள விஷயங்களுக்கு மட்டும் எல்லோரும் பதிலளித்தால் தேவலை. இந்த ஆராய்ச்சி இன்றோடு முடியட்டுமே.
சார்
நீங்கள் தின இதழ் பத்திரிகைக்கு தவறை சுட்டிக்காட்டி அவர்களை கண்டித்ததற்கு மிக்க நன்றி..
எனது பதிவிற்கு வேலை இல்லை. நீக்கிவிட்டேன் நீங்கள் ஆதிராம் அவர்களுக்கு பதில் அளித்தவுடன்.
தவறுகளை தின இதழுக்கும் பத்திரிகை மூலம் காழ்புணர்ச்சியில் பொய்யுரைத்த அனீஸ் அவர்களுக்கும் நீங்கள் தொடர்புகொண்டு உண்மையை வெளிபடுத்தியதருக்கு, சுட்டிகாட்டியதற்கு நன்றி !
Rks
நாதஸ்வரத்தில் உள்ள சீவாளி - சீவாளி வாசிக்க வாசிக்க அதன் பிசிர் தனியாக உதிரும் தன்மை கொண்டது...கச்சேரியில் ஏற்ற இறக்க ஸ்ருதிகள் தொடர்ந்து அமையும்போது அல்லது தொடர்ச்சியாக வாசிக்கும் கச்சேரிகளில் இப்படிப்பட்ட ஸ்ருதி வாசிக்கும்போது, சீவாளியின் பிசிர் தனித்து பிரியும்..
கச்சேரிகளில் நாம் பார்த்தால் அல்லது கல்யாணங்களில் வாசிப்பவர்களை பார்த்தால் அது நன்கு விளங்கும். சீவாளியை இரு விரல்களால் முதலில் ஒதுக்கி அதன் முகவை அழுத்தி வைத்து வாசிப்பது வழக்கம்.
வாசிக்கும்போது சிலசமயம் பிசிர் வாயில் தடைபட அதிக நீளத்தை கடித்து துப்பும் வழக்கம் நிலவில் உள்ளதே....அதற்காக செல்லுமிடமெல்லாம் கத்திரிகோல் எடுத்துகொண்டு செல்ல இயலுமா ?
சிக்கலார் வாசிக்கும்போது சீவாளி பிசிர் சிக்கினால் கடித்து துப்பாமல் விழுங்க முடியுமா என்ன ? சிக்கலான சீவாளி சிக்கலாரிடம் சிக்கினால் சிக்கல் சீவாளிக்குதானே தவிர சிக்கலாருக்கு அல்ல !
சிக்கலான விஷயம் தான் சார் !
Rks
திரு. ஆர்.கே.எஸ். திரு. ஆதிராம்,
எங்கள் திரிக்கு வருகை புரிந்து விளக்கம் அளித்ததற்கு நன்றி. நீங்கள் இருவரும் கூறியபடி, அந்த பத்திரிகை வெளியிட்ட செய்தியில், நிறைய பிழைகள் உள்ளன. உங்கள் மனம் புண்பட்டதற்கு வருந்துகிறோம்.
அதே நேரம், அந்த பத்திரிகையில் இந்த தொடர் வெளியான நாள் முதல் (அந்த பத்திரிகை என்று இல்லை. எந்த பத்திரிகையில் மக்கள் திலகம் பற்றிய செய்திகள் வந்தாலும் திரு.லோகநாதன் பதிவிடுவார்) அந்த தொடரை திரு.லோகநாதன் பதிவிட்டு வருகிறார் என்பதையும், எனவே, அவர் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே நாளிதழ் பதிவை வெளியிடவில்லை என்பதையும் அறிவீர்கள் என்று நம்புகிறோம். தங்கள் மனம் புண்பட்டதற்கு மீண்டும் வருந்துகிறோம். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திரு.கோபால்,
ஏதோ, ‘திரு.சிவாஜி கணேசன் அவர்களின் புகழை குறைக்கும் முயற்சி வந்தால் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்று நண்பர்கள் கூறியதால் அடக்கி வாசிக்கிறேன்’ என்று கூறி நல்ல பிள்ளை போல நடிக்க வேண்டாம்.
பேராசிரியர் செல்வகுமார் அவர்களை கிண்டலும் கேலியும் செய்வதையும் நாங்கள் அனுமதிக்க முடியாது. உங்களுக்கே ஆங்கிலம் தெரியும்போது உங்களைவிட அதிகம் படித்தவர் பேராசிரியர் திரு.செல்வகுமார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
மக்கள் திலகத்தின் புகழுக்கு மாசு ஏற்படுத்துவதும் கிண்டல் செய்வதும் புகழைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுவதும் நீங்கள்தான் என்பதையும் அதன் மூலமே பிரச்னைகள் உருவாகின்றன என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். ‘நவரத்தினம் படத்தில் வீணை தடவிக் கொடுக்கப்படும்’ என்று வீணாக வம்புக்கிழுக்கும் வகையில் நேற்று பதிவிட்டது நீங்கள்தான்.
ஒரு கலைஞனின் புகழை குறைக்க நாங்கள் ஏன் முயற்சிக்கப் போகிறோம்? அதற்கென்று நிறைய பேர் உள்ளனர். உதாரணமாக, கடந்த ஏப்ரல் மாதம் 3ம் தேதி மதியம் 2.26 மணிக்கு போடப்பட்ட இந்தப் பதிவு பின்னர் தூக்கப்பட்டது. அந்த பதிவில் உள்ள வார்த்தைகள்....
//தோல்வியே கண்ட அரசியல்வாதியை எவன் கொண்டாடுவான்? அவர் பெரிய நிர்வாகியே அல்ல. அத்துடன், அரசியல் என்பது மேடு பள்ளங்கள்,சூட்சுமம் நிறைந்தது.
ஒரு தோல்வியோடு, பொருட்காட்சி சாலை கடை போல ,கடையை சுருட்டி ஓடியவரை பெரிய ஆபிரகான் லின்கன் ரேஞ்சிலா வைத்து பேசுவது.அவருக்கு அரசியல் லாயக்கு படவில்லை. அம்புடுதேன்//
திரு.சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றி மேலே கூறியுள்ளவற்றை யார் கூறியது என்று சொல்ல முடியுமா கோபால்? முடியாவிட்டால் பரவாயில்லை. சரி போகட்டும். நீங்கள் கூறியபடி இனியாவது அடக்கி வாசியுங்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
.
யார் சார் அந்த வதந்தியை கொளுத்திபோட்டது ?
குணசித்திர வேடத்தில் சிறப்பாக நடித்தவரின் பெயர் கொண்டவரா கொளுத்திப்போட்டது ?
முத்துராமன் என்ற பெயரில் ஒருவரா ?
விந்தையாகவும் விநோதமாகவும் மர்மமாகவும் இருக்கிறதே..!
அந்த முத்துராமன் என்ற நண்பர் இப்போது திரியில் எழுதுகிறாரா ?
rks
இனிய நண்பர் திரு குமார் சார்
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் பதவி ஏற்பு நிழற்படங்கள் அத்தனையும் அருமை . விழாவை நேரில் [ 30.6.1977]
பார்த்து அனுபவித்த எங்களை போன்ற நண்பர்களுக்கு உங்கள் பதிவுகள் மீண்டும் அந்த நாட்களை நினைவு படுத்தியது மக்கள் திலகத்தின் ரசிகர்களின் கனவு நினைவாகிய நாள் . எடுத்த சபதம் நிறைவேறிய பொன்னான நாள் .
திரு. ஆர்.கே.எஸ்.,
என்டி 360 டிகிரி, லட்சுமி சரஸ்வதி, புலவர்கள் போன்று முன்பு வந்து கொண்டிருந்த பல நண்பர்களை இப்போது பார்க்க முடிவதில்லையே? அவர்கள் எங்கே என்று கண்டுபிடித்து விட்டால், முத்துராமனையும் திரியில் இருக்கிறாரா? என்று தெரிந்து கொண்டு விடலாம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
ஆமாம் சார் ...நான் கூட கேள்விபட்டிருக்கிறேன் . அனால் இன்னொரு விஷயமும் பார்த்திருக்கிறேன்...நீங்கள் பார்த்திருக்கிறீர்களோ இல்லையோ என்பது தெரியாது ....அந்தந்த பெயர்களில் அவர்கள் முதல் சில பதிவுகளில் முன்பு இந்த பெயரில் எழுதியிருந்தேன் என்றும் குறிப்பிட்டுளார்களே..அதை நீங்கள் கவனிக்கவில்லை போல் இருக்கிறது...
அந்த statistics கவனித்து பார்த்தால் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறன் ...ஒரு பெயர் ban செய்த பிறகுதான் மற்றொரு பெயர் வந்துள்ளது...உதாரணமாக nt360degree தடை செய்யப்பட்ட பிறகு மற்றொரு பெயர். ஆனால் நீங்கள் கூறுவதுபோல இரேண்டோ மூன்றோ பெயர்கள் ஒன்றாக நிலவில் இருந்து பதிவு செய்ததாக தெரியவில்லையே பழயதை கிளறி பார்க்கையில் !
அப்படி பார்த்தால் அந்த பெயர்களில் வந்தவர் ஒரு சிறந்த நேர்மையாளராக தான் எனக்கு தெரிகிறார்...காரணம் வேறு பெயரில் எழுதும்போது முன்பு இருந்த பெயர் என்ன என்பதையும் தெரிவித்திருக்கிறாரே ? இந்தளவிற்கு நேர்மை பாராட்டப்படவேண்டிய ஒன்றாகும் என்பது எனது கருத்து...!
இது அவருக்கு நான் வக்காலத்து வாங்குகிறேன் என்று நீங்கள் நினைக்கவேண்டாம்...வக்காலத்து நிச்சயம் இல்லை....
அவரது நேர்மை, நாணயம்..... எதிரியாக இருந்தாலும் பாராட்டப்படவேண்டிய நற்குணங்கள் !
நேர்மை நாணயம் எங்கிருந்தாலும் அதனை என்னைபோல நீங்களும் ஆமோதிப்பீர்கள், பாராட்டுவீர்கள் என்று நம்புகிறேன் !! :)
rks
மையம் திரியில் 800 பதிவுகள் வழங்கிய இனிய நண்பர் திரு கலைவேந்தனுக்கு வாழ்த்துக்கள் .
இனிய நண்பர் திரு சி . எஸ்.குமார் அவர்களின் 700 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் .
இன்று காலை சன் லைப் தொலைகாட்சியில் மக்கள் திலகத்தின் '' பிரகலதா '' படம் ஒளி பரப்பினார்கள் .
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைகாட்சியில் மக்கள் திலகத்தின் ''நீதிக்கு பின் பாசம் ''
WoW.......
Kalaivendhan Sir .......Congratulations on your 800th Post.
Just noticed it from Esvee sir's wish to you. Thanks Esvee sir !
You 800th Post in response to my post is something special. My date of birth is 8 too !
What a coincidence ! 800 & 8 !! Am delighted and honored !
Thanks !!
RKS
திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் வெற்றியின் எண்ணிக்கை 110ஐக் கடக்கிறபோது பிரபல நாளேட்டின் அதிபர் அண்ணாவால் தாங்க முடியாத ஆளுயர மாலையை அணிவிக்கச் செய்து அவர் காலில் விழுந்தார். அவரும் திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். அண்ணாவோ அந்த இடத்தைவிட்டுச் சில அடிகள் உடனடியாக ஓடி நகர்ந்துகொண்டார். இப்படிப்பட்ட 'ஆபத்துகளிலிருந்து' இனி மீள முடியாது என அவர் உணர்ந்துகொண்டார்.
அமைச்சரவை அமைக்கிற கட்டம் வந்தது. அண்ணா அமைச்சரவையை அவர் வீட்டிலிருந்து அமைக்காமல் நண்பர் ஒருவர் வீட்டில் அமர்ந்து பட்டியலைத் தயார் செய்தார். ஒரு தலைவர் 'முக்கிய' இலாகாவை விரும்பினார். அதற்காக இரு தலைவர்கள் அண்ணாவைச் சந்தித்தனர். அவர்க்கு 'அந்த' இலாகா தர வேண்டும் எனத் தந்திகள் குவிந்தன. தந்திகள் ஒரு மூட்டை அளவுக்கு இருந்தது. மூட்டையை அண்ணாவிடம் காண்பித்தனர். 30, 40 தந்திகளை எடுத்துப் பார்த்தார் அண்ணா. அவை ஒரே மாதிரியான வாசகங்களைக்கொண்டிருந்தன. அதைப் பார்த்துப் புன்னகைத்தார். இன்னொரு தலைவருடைய மனைவி தன் கணவர் அமைச்சராக்கப்படவில்லை என்பதற்காக அண்ணாவைச் சபித்தார். இப்படி எத்தனையோ காட்சிகள் நிகழ்ந்தன. அமைச்சர் பட்டியல் இறுதியாக்கப்பட்டதற்குப் பிறகு இரா. செழியனிடம் அதனைக் கொடுத்து அனுப்பி எம். ஆர். இராதா சுடப்பட்டதால் மருத்துவமனையில் இருந்த புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரிடம் காண்பிக்கச் செய்தார். 9 பேர் கொண்ட கச்சிதமான அமைச்சரவை 1967 மார்ச் 6ஆம் தேதி அண்ணாவின் தலைமையில் பொறுப்பேற்றுக்கொண்டது. 1937இல் நீதிக்கட்சி காங்கிரசால் வீழ்த்தப்பட்டு இராஜாஜி சென்னை மாகாணத்தின் பிரதமர் ஆனார். 1967இல் திமுக, அதே இராஜாஜியை தனது கூட்டணியில் சேர்த்துக்கொண்டு காங்கிரசை வீழ்த்திக் காட்டியது. ஆம்; அறிஞர் அண்ணா கணக்கை நேர்செய்தார். அது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
Courtesy - doctor parimalam
கலைவேந்தன் சார்,
அப்படியா ?
அப்படியா நடந்துள்ளது ?
தெரியவில்லையே ஒரு சில பதிவுகளை படித்தபோது.
ஒரு நேர்மையாளராக கண்ணியவானாக தெரியும் ஒரு நபர் கடுமையாக எழுதுகிறாரா ?
ஏன் அப்படி தடை செய்யும் அளவிற்கு எழுதியுள்ளார் கடுமையாக ?
அப்படி நீங்கள் கூறுவது போல அவர் கடுமையாக எழுத தூண்டுதலாக எது இருந்தது அல்லது யார் இருந்தார்கள் ?
எனக்கு அவர் எதனால் கடுமையாக எழுதியுள்ளார் என்று தெரிந்துகொள்ளும் ஆவல் பிறக்கிறது கலைவேந்தன் சார் !
உங்களுக்கும் அந்த ஆவல் என்னைபோலவே பிறக்கும் என்று நம்புகிறேன்.
முழுவதையும் படிக்க முயற்சித்து பிறகு தங்களுக்கு பதில் உரைக்கிறேன்.
காரணம், எதையும் தெரிந்து உணர்ந்த பிறகுதானே நம் முடிவை சொல்லவேண்டும்.
அரைகுறையாக அவர் கூறுகிறாரே...இவர் கூறுகிறாரே என்று ஒரு அவசர முடிவு தெரிவிக்கலாகாது அல்லவா? அதனால் தான் !
Rks
எம்.ஜி.ஆருக்குப் பல்வேறு பரிமாணங்கள் உண்டு. ரசிகர்களுக்குத் தலைவன். ஏழைகளுக்கு ரட்சகர். எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனம். படத்தயாரிப்பாளர்களுக்கு லாபதேவன். வறியவர்களுக்கு வள்ளல். . இன்னும் இன்னும் நிறைய பரிமாணங்கள் எம்.ஜி.ஆர் என்ற மனிதருக்குள் புதைந்து கிடக்கின்றன. ஆச்சரியங்களாலும் சுவாரஸ்யங்களாலும் பிரமிப்புகளாலும் நிரம்பிய மனிதர் எம்.ஜி.ஆர்.
Net-vathiyar
சரி ஆர்.கே.எஸ்., முழுவதையும் படித்துவிட்டு சொல்லுங்கள். காத்திருக்கிறேன்.
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. இன்று 17ம் தேதி. அதன் கூட்டுத் தொகையும் நீங்கள் பிறந்த தேதியான 8 ஆக இருப்பது மகிழ்ச்சி. வாழ்த்துக்களுக்கு மீண்டும் நன்றி.
எஸ்.வி.சார். தங்களுக்கும் நன்றி. யாருக்கு எத்தனாவது பதிவு என்று பார்த்துக் கொண்டே இருப்பீர்களா? நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
[QUOTE=esvee;1232211]Thanks vasudevan sir
நன்றி திரு.வாசு சார். என்ன ஒரு நேர்த்தியான, திறமையான விமர்சனம். அதற்காக எடுத்துக் கொண்ட கூர்மையான கவனமும் அயராத உழைப்பும் உங்களுக்கே உரித்தானது. மக்கள் திலகத்தை நீங்கள் பார்க்கும் கோணமும் வித்தியாசமானது.
//'போய் மறைந்த நிலவும் முகில் கிழிக்க' எனும் போது எம்.ஜி.ஆர் அவர்களின் கைவிரல்கள் ஆட்டோமேடிக்காக இரட்டை இலைச் சின்னத்தை சுட்டிக் காட்டுவது போல இயற்கையாக அமைந்தது விந்தை.//
என்ன ஒரு கூர்மையான கவனிப்பு.
வேலைச் சுமை காரணமாக வர முடியவில்லை. விரைவில் மதுரகானத்துக்கு பாட்டோடு வருகிறேன். மிக்க நன்றி சார்.
திரு.எஸ்.வி. சார், பணிச்சுமையால் நான் மதுரகானம் திரியை பார்க்க முடியவில்லை. வாசு சார் பதிவிட்ட இந்த அருமையான பதிவை நமக்காக நீங்கள் இங்கு மீள்பதிவு செய்ததற்கு மிக்க நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
ஒரு நடிகராக இருந்து மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி வரலாறு படைத்த, இல்லை... இல்லை... வரலாறாகவே ஆகிவிட்ட, தலைவரின் அபூர்வமான பொக்கிஷ பதிவுகளுக்கு நன்றி திரு.குமார் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
சென்னை பட்ரோடு ஜெயந்தியில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும், தேவரின்
"நீதிக்கு பின் பாசம் " தினசரி 3 காட்சிகளில் வெற்றி நடை போடுகிறது
தற்போது சன் லைப் தொலைக்காட்சியில் இரவு 7 மணி முதல் ஒளிபரப்பாகி
வருகிறது.
http://i57.tinypic.com/fypok.jpg
தகவல் உதவி செய்த மடிப்பாக்கம் திரு. சுந்தர் அவர்களுக்கு நன்றி.
நாளை (18/06/2015) காலை 11 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் புரட்சி
தலைவர் எம்.ஜி.ஆரின் " உழைக்கும் கரங்கள் " ஒளிபரப்பாக உள்ளது.
http://i61.tinypic.com/207m1p2.jpg
கடந்த ஞாயிறு அன்று (14/06/2015) கரூர் சென்றிருந்தேன். அங்கு, முத்துமாரியம்மன்
கோவில் அருகில் உள்ள ஸ்ரீனிவாசபுரத்தில் , திரு. அமுதா ஆறுமுகம் , கரூர்
நகர எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் அவர்களை சந்தித்தேன்.
அவரது கடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நமது நண்பர்களின் பார்வைக்கு.
http://i57.tinypic.com/dnc0lh.jpg
சினிமா எக்ஸ்ப்ரஸ் -செய்திகள் -16/06/2015
http://i58.tinypic.com/zv0it.jpg
http://i61.tinypic.com/2ypb0hz.jpg
http://i61.tinypic.com/kdal1e.jpg
http://i57.tinypic.com/2ljjkap.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் " மலைக்கள்ளன் "திரைப்படத்தில் நடிகர் ஸ்ரீராம் துணை வேடத்தில் நடித்துள்ளார்.
http://i61.tinypic.com/2eo9ljr.jpg
ராணி வார இதழ் -21/06/2015
http://i61.tinypic.com/zx5e6r.jpg
இனிய நண்பர் திரு.கலைவேந்தன் அவர்களுக்கு வணக்கம்.
தின இதழ் செய்திகள் குறித்து தகுந்த விளக்கம் அளித்த தங்களுக்கு நன்றி.
ஆர். லோகநாதன்.
700 பதிவுகள் கண்ட திரு. சி.எஸ். குமார் ,
800 பதிவுகள் முடித்த திரு. கலைவேந்தன்
5000 பதிவுகள் மேற்கொண்ட திரு. முத்தையன் அம்மு
ஆகியோருக்கு இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள் .
http://i58.tinypic.com/ibl3f8.jpg
ஆர். லோகநாதன்.
சென்னை மகாலட்சுமியில் - அடுத்த மாத வெளியீடு
மறுவெளி யீட்டில் வெள்ளிவிழா சாதனை புரிந்த
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அகிலமே புகழும் "ஆயிரத்தில் ஒருவன்
http://i60.tinypic.com/1zz6iyu.jpg
உன்னை விட மாட்டேன்
https://www.youtube.com/watch?v=obfQpESoUUI