http://i1039.photobucket.com/albums/...pssnpzeujg.jpg
http://i1039.photobucket.com/albums/...psewtgasau.jpg
Printable View
http://i1039.photobucket.com/albums/...pscqyxn1ru.jpg
http://i1039.photobucket.com/albums/...pslkrko0zi.jpg
http://i1039.photobucket.com/albums/...psbzclrkvi.jpg
http://i1039.photobucket.com/albums/...ps4rhfld9c.jpg
http://i1039.photobucket.com/albums/...psl0lksp6y.jpg
http://i1039.photobucket.com/albums/...psoy60y0bu.jpg
http://i1039.photobucket.com/albums/...psfu7wikfc.jpg
http://i1039.photobucket.com/albums/...psmpsovq7v.jpg
வணக்கம்
Dear Senthilvel Sivaraj Sir
Fine job meticulously exemplified for NT. Gratitude! Happy!
Senthilvel Sivanantham
Sent from my SM-G530H using Tapatalk
Daadhaa Saahib Palke remembered on his birthday on behalf of Palke Award winner NT's elite thread!
A Parallel Posting from the elite thread of GG with delight!
Start....Action....Spark....Reaction!
What a Scene : Mini Series as we reach the watershed end of NT 17 soon!!
NT shines in action and GG sizzles in reactions!!
Quote:
For every action there is an equal and opposite reaction...the funda of physics! Though GG never had any drama stage training like the ordeals underwent by NT, he had a determination to carve a niche for his own school of acting...the subtle and real to reel approach...NT's cordial reception to GG in his films to co-star, fetched them laurels and an indelible position in the hearts of millions...as can be rejoiced even today when such NT-GG combo films are telecast!
What a scene ! Part 1 : Pasamalar with NT! Volcanic NT and Thunder-bolting GG!!
There are two scenes worth mentioning in the all time cult classic and the bench mark movie for brother-sister bondage!
Quote:
High voltage depictions of exploding human emotions stemming from sentiments and the 'blood is thicker than water' beliefs!! When NT excels in the scene when he is scolded by his sister even as he falls on the floor exchanging fist blows with GG, the viewers are made to be at the edge of their seats in tension, as the tensile GG further sparkles the situation by his delivery of cannon ball dialogue reactions!! Really a superb scene...from which the viewers too learn a few lessons of real life bondage turmoils from own blood relations!!
https://www.youtube.com/watch?v=SfVcsfcCxOk
The iconic scene establishing the synergy between NT and GG in bringing out the perfect output of their understanding in sharing the screen space without ego...but with an eye on implanting the effects of the scene in viewers' minds!!
https://www.youtube.com/watch?v=wnFPEPEGCvc
திருச்சியில்
இன்று (17.02.2016)
சிறப்புடன் நடந்த சிவாஜி பக்தர்
திரு.ராஜேந்திரன் அவர்களின்
இல்லத் திருமண விழாவில்,
இனிய வாழ்க்கை துவக்கியுள்ள
மணமக்களை வாழ்த்தி,
நடிகர் திலகத்தை நேசிக்கும்
நெஞ்சங்கள் வைத்த
வாழ்த்துப் பலகைகள்.
நடிகர் திலகத்தின்
நல்லாசிகளோடு
நலம் வாழ்க.. மணமக்கள்!
http://i1028.photobucket.com/albums/...psizbw9cd7.jpg
http://i1028.photobucket.com/albums/...psnelv2hnr.jpg
http://i1028.photobucket.com/albums/...psu7ggbunr.jpg
http://i1028.photobucket.com/albums/...ps1imw6snw.jpg
http://i1028.photobucket.com/albums/...psl3waevjn.jpg
http://i1028.photobucket.com/albums/...ps40biakcl.jpg
http://i1028.photobucket.com/albums/...psnydwzm1i.jpg
நன்றி:
திரு.அண்ணாதுரை.
அகில இந்திய சிவாஜி மன்ற
சிறப்பு அழைப்பாளர்.
YOUR ALBUM OF NADIGARTHILAGAM picture releases with theatres very very excellent exxpecting many more so that we can go back to olden days and REFRESH for sometime.
thanks again
blessings senthilvel sir.
சிவகாமியின் செல்வன்.- 1974.
ஆராதனா பார்த்து சின்ன ஆனந்து கொட்டகையை நிரப்பிய தமிழ் மக்களுக்கு, குமுதம் விமரிசன படி, பொட்டு வைத்து விட்டது போல தேவி பாரடைஸ் ,அகஸ்தியா, உமாவில் 1974 ஜனவரி 26 ரிலீஸ் நமது சிவகாமியின் செல்வன்.என்ன ஒரு காதல் காவியம். திராவிட மன்மதனும்,அவருக்கென்றே பிறந்து வந்த ரதி தேவியும் (படத்தில் ஏ.வீ.எம் ராஜனே சொல்வார்,பிரம்மா உனக்காகவே ஸ்பெசல் ஆக படைச்சிருக்காண்டா என்று.) அப்படி ஒரு செமிஸ்ட்ரி யுடன் இழைவார்கள் படத்தில். இரண்டு டூயட்,ஒரு ஸ்பெஷல் பின்னணி பாடலில் சூடேற்றி தகிக்க வைக்கும் இந்த ஜோடி. இந்த படம் பல முறை பார்த்து பார்த்து ரசித்து மகிழ்ந்த படம் என்னுடைய 15 வயதில்.
சிவாஜி 45 நிமிடம் நடுவில் வராமல்,நமது அழகு அண்ணியை வெள்ளை உடையில் பார்ப்பது கொஞ்சம் கஷ்டமே. பின்னால் துள்ளல் மகன் சிவாஜி வந்து லதாவை புகுந்து விளையாடி படுத்தி எடுப்பது எல்லாவற்றையும் மறக்க செய்து விடும்.
மூலத்தில் ,ராஜேஷ் கண்ணா-ஷர்மிளா ஜோடி. ராஜேஷ் வழக்கம் போல தலையாட்டி,கண் சுருக்கி ஒரே மாதிரி பண்ணி படுத்துவார். ஷர்மிலாவிடம் பயந்து பயந்து நெருங்குவார்.(சீனியர் ஆச்சே).ரூப்பு தேரா வில் அந்த காம புயல் வீசாது.
சிவகாமியின் செல்வன், தேர்ந்த விமானியின் தன்னம்பிக்கை,சுறுசுறுப்பு காட்டி சிவாஜி விளையாடுவதற்கு தோதாய் வாணிஸ்ரீ பின்னி எடுப்பார். இருவரும் ஒருவர் பண்ண போவதை மற்றவர் யூகித்து தோதாய் ரியாக்ட் மட்டும் இன்றி pre empt விஷயத்திலும் பின்னுவார்.
வாணிஸ்ரீ யின் முழு அழகு படத்தில் ஜொலிக்கும். எத்தனை அழகு கொட்டி கிடந்தது எங்கள் சிறந்த அண்ணியிடம்.(கார்த்திக் அண்ணி அடுத்த இடமே)
எத்தனை அழகு பாடலை அலசி விட்டேனே. கதை களத்தில் தோதாய் வீச வேண்டிய காம சூறாவளி வீசி நம் மனங்களை மரங்கள் போல ஊசலாட்டும்.
நம் ரசிகர்கள் மட்டுமல்ல,அனைவரும் கண்டு களிக்க வேண்டிய சுகம்.
வழக்கம் போல எம்.எஸ்.வீ மூலத்தின் எஸ்.டீ .பர்மன்-ஆர்.டீ .பர்மன் ஜோடிகளுக்கு இணையாக கொடுக்க முடியாமல் திணறி சுமாரான பாடல்களையே கொடுத்தார்.அது படத்திற்கு சிறிதே சரிவு கொடுத்தது மூலத்துடன் ஒப்பிட பட்டு.
படத்தில் எஸ்.பீ. பாலுவை உபயோக படுத்தி பொட்டு வைத்த முகமோ அளவு இளமை துள்ளியிருந்தால் ரதி-மன்மத இணைவை இன்னும் தூக்கி இருக்கும்.
ஊரில் இல்லாமல் போனது, நெஞ்சத்தை குமுற வைக்கிறது.
http://i1028.photobucket.com/albums/...psojodka0t.jpg
ஆசைப்பட்டு ஆர்டர் செய்த
பலகாரத்தை, உணவு விடுதிச்
சிப்பந்தி கொண்டு வருவதற்கு
கால்மணி நேரம் தாமதமானாலே பொறுக்காத
மனங்கள்... நம்முடையவை.
ஆளும்,பேருமாய்,
கூட்டமும், கும்மாளமுமாய்,
ரசிப்பும்,மகிழ்வுமாய்...
மறுபடியும் பார்ப்பதற்கு
நமக்குப் பிரியமான
கலைஞனின் பழைய
திரைப்படம், புதுப் பொலிவோடு
வருகிறதென்றால்...
வரும் நிமிஷம் வரை பொறுமை காப்போமா?
உள்ளே இறுக்கித் திணித்த
பொறுமைக் கந்தகம், இப்போது
பூரிப்பு வெடிகளாய் அதிர்கிற
அதிசயம் பார்க்கிறோம்.
இதயங்களில் தேக்கியிருந்த
எதிர்பார்ப்பை, இன்பத்தை..
இணையம் வழியே கொட்டித்
தீர்க்கும் ரசிக உள்ளங்களின்
ஆர்வம் பார்க்கிறோம்.
நாற்பத்திரண்டு ஆண்டுகள்
கழித்து நம்மை நோக்கி ராஜநடை நடந்து வருகிறான்
"சிவகாமியின் செல்வன்."
அவனது வருகை.. வணங்கப்படுகிறது.
------------------------------
தனது திறமையின் வட்டத்துக்குள் கதாநாயகனைக்
கொண்டு வந்து, படம் இயக்கி
வென்ற இயக்குநர்கள் உண்டு.
கதாநாயகனுக்கேற்றாற் போல்
படம் இயக்கி வென்ற இயக்குநர்களும் உண்டு.
தான் இயக்குகிற நாயகனுக்கு
தானே மிகப் பெரும் ரசிகனாயிருப்பதோடு
அல்லாமல், அந்த நாயகனை
எவ்வாறு இயக்கினால் அந்த
நாயகனின் ரசிகர் கூட்டம்
விரும்பும் என்பதறிந்து படம்
இயக்கி வென்ற இயக்குநர்கள்
வெகு சிலரே.
நாம் போற்றும் நடிகர் திலகம்
எனும் நாயகனுக்கு வாய்த்த
அம்மாதிரியான இயக்குநர்
திரு. C.V.ராஜேந்திரன் அவர்கள்.
திரு.C.V.ராஜேந்திரன் அமைத்த
வெற்றிப் பாதையிலே விரைந்து வந்து கொண்டிருக்கிறான்...
"சிவகாமியின் செல்வன்".
அவனது வருகை... வணங்கப்படுகிறது.
------------------------------
இந்தப் படத்தில் ஒரு காட்சி.
கோயிலுக்கு வந்திருப்பதால்,
விமானப்படை வீரருக்கான
சீருடையில்லாமல், சாதாரண
வேட்டி, சட்டையில் இருப்பார்..
நம் நடிகர் திலகம்.
தரிசனம் முடித்துத் திரும்பும்
போது, தனது ஜீப்பிற்குச் சென்று சீருடையைக் கையில்
எடுத்துக் கொண்டு, உடைகளை
மாற்றிக் கொள்வதற்காக
ஜீப்பின் பின்புறம் செல்வார்.
ஒரு நொடிப் பொழுது அவரது
திருவுருவம் நம் கண்களிலிருந்து மறைக்கப்படும்.
அடுத்த நொடி, அந்த ஜீப்பின்
பின்புறமிருந்து ஆற்றலும்,
கம்பீரமுமான ஒரு விமானப்
படை வீரன் புறப்படுவான்.
வியப்பிலும், ஆனந்தப் பெருக்கிலும் பொங்கும்
நம் கண்ணீர், திரை காட்டும்
திருமகனை நன்றிகளோடு
நனைக்கிறது.
நெஞ்சம், அந்த மகாகலைஞனையே நினைக்கிறது.
ஒரு சாதாரணனை, வீரனாக்க
ஒரு நொடி போதுமென்றான்..
எங்கள் நடிப்பறிஞன்.
அந்த அற்புதனை நினைத்து
வாழ்ந்திருக்க ஒரு யுகமும்
போதாதென்கிறோம்..நாம்.
மறத்தல் இயலாத
மகாகலைஞன்,
"சிவகாமியின் செல்வன்"
நானெனச் சிரித்து வருகிறான்.
அவனது வருகை...
வணங்கப்படுகிறது.
நீள வண்ண ஆகாயமும்
பசுமையாய் பரந்து விரிந்த மலைப்பிரதேசங்களும் கொண்ட பிரதேசம்.
கரு நீல வண்ணகோட்டும் வெள்ளை பேன்ட்டும் அணிந்து
மன்மதனாய் நம் நடிகர்திலகம்.
சரிந்த அந்த மலைச்சரிவில் மெல்ல இறங்கி ஆகா ஓஓ ஓஓ என்று ஹம்மிங் செய்தபடி வருவது அழகு.அந்த இயற்கையும் நடிகர்திலகம் வாணிஸ்ரீயின் உடையலங்காரமும் கண்களுக்கு விருந்து.வாணிஸ்ரீயும ஹ்ம்மிங
செயதபடி ஸைடைலாக திரும்புவதை காமிராபின்னோக்கி நகர்ந்துஇயற்கையை அள்ளிக்கொண்டு வரும்.
இனியவளே என்று பாடியபடி வருவார் பாருங்கள்.அடேங்கப்பா என்ன ஒரு ஸ்டைலிஷ்மேன்.தோள்களை மெல்ல அசைத்து தலையை ஆட்டியபடி வரும் அழகுக்கு நிகரேது.நடிகர்திலகம் பாடி முடித்ததும் வாணி ஸ்ரீ இனியவனே என்றுதொடங்கும் போது ஒலிக்கும் ட்ரம்ஸ் அடி கலக்கலோ கலக்கல்.
இதழால் உடல் அளந்தாள் என்ற வரிக ளின் போது வரும் இசையும் நடிகர்திலகத்தின் ஆட்டமும் வெகு ஜோர்.ரம்மியமான இயற்கை காட்சிகளின் ஊடே அருமையான ஒரு காதல் பாடலை படம்பிடித்த விதம் அருமை.இயற்கையும் இசையும் நம்மை மெய் மறக்கச் செய்யும்.
ஓ.*ஓ... ஏ... ஆ...
ஆஹா ஆ... ஹா...*
எஹேஹேஹே அஹஹாஹா ( இசை )
ஓஹோ... ஓஹொஹோ ஹோ
ஏஹே ஏஹே ஏஹே ஏஹே*
இனியவளே என்று பாடி வந்தேன்
ம்... ம்... ஆஹா ஹா ஹா ஹா...
இனியவளே என்று பாடி வந்தேன்
இனி அவள் தான் என்று ஆகி விட்டேன்
இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்
இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்
ஆஹா ஹா ஹா ஹா...
இனியவனே என்று பாடி வந்தேன்
இனி அவன் தான் என்று ஆகி விட்டேன்
ஏழிசையில் மோகனமாம் இனிமை தந்தவன் ஆ...
ஏழிசையில் மோகனமாம் இனிமை தந்தவன்*
ஓராயிரம் காலம் இந்த உள்ளம் ஒன்றாக
ஒன்றானவர் வாழ்வில் இன்ப வெள்ளம் என்றாக
துணை தேடி வரும் போது*
கண்ணில் என்ன நாணமோ
குணம் நாட்டில் உருவான*
பெண்மை என்ன தோணுமோ
திரு நாள் வரும் அதோ பார்
தருவார் சுகம் இதோ பார்
திரு நாள் வரும் அதோ பார்
தருவார் சுகம் இதோ பார்
பொன் மாலையில்
பூ மாலையாய்
நெஞ்சில் சூடவோ
சூடவோ
சூடவோ
இனியவனே என்று பாடி வந்தேன்
இனி அவன் தான் என்று ஆகி விட்டேன்
தாலாட்டிடும் நெஞ்சம் தன்னை தங்கம் என்றாளோ
பாராட்டிடும் இன்பம் தன்னை மங்கை கொண்டாளோ
நினைத்தாலும் சுகம் தானே இந்த நெஞ்சின் காவியம்
கொடுத்தாலும் நலம் தானே எனை கொஞ்சும் ஓவியம்
இதழால் உடல் அளந்தால்
இவளோ தன்னை மறந்தாள்
இதழால் உடல் அளந்தால்
இவளோ தன்னை மறந்தாள்
ஏன் என்பதை
நான் சொல்வது
இன்னும் மௌனமேன்
மௌனமேன்
மௌனமேன்
இனியவளே என்று பாடி வந்தேன்
இனி அவள் தான் என்று ஆகி விட்டேன்
இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்
ஆ... லாலலலா ஓஹொஹொஹோ
ஒஹொஹோ ஓஹொஹோ...
ஒஹொஹோ ஓஹொஹோ...
பேச்சலர் பிரம்மசாரி பேச்சிலா சம்சாரி ஆன கதை!
Quote:
ஒருவர் அனுமன் பக்தர் என்றாலே அவர் பிரம்மசரியத்தை கடைப்பிடிப்பவரே! இருந்தாலும் பாவையரின் கடைக்கண் பார்வை பிரம்மசரியத்தை தவிடு பொடியாக்கி அவரை சம்சாரியாக்கி விடும் மன்மதனின் வில்லங்கமான வில்லம்பே!!
https://www.youtube.com/watch?v=z_u2JYtFaeU
https://www.youtube.com/watch?v=UZtITycERbo
From today's Trichy edition of The New Indian Express epaper.
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...b7&oe=57575C6C
"சிவகாமியின் செல்வன்"
'சிவகாமியின் செல்வன்' நம் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றுள்ள மிகவும் ரம்மியமான படங்களில் இதுவும் ஒன்று. ஆகா... என்ன அருமையான படம். துவங்கியது தெரியாமல், முடிந்ததும் தெரியாமல் அவ்வளவு அழகு, ரம்மியம், உற்சாகம் அனைத்தும் நிறைந்த படம். நடிகர்திலகம் பின்னியிருப்பார். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம். 'என்ன இந்தப்படத்தை அருமையான படம்னு சொல்கிறாளே' என்று நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கே புருவம் உயரலாம். என்னுடைய பதிவுகள் பலவற்றைப்படித்த நண்பர்களுக்கு தெரிந்திருக்கலாம், நான் என்ன விதமான சிவாஜி ரசிகை என்று
என்னுடைய HERO முதலில் அழகாக இருக்க வேண்டும். இளமையாக இருக்க வேண்டும், ஒல்லியாக அல்லது சற்று பூசினாற்போன்ற உடலமைப்புடன் இருக்க வேண்டும்.
நான் எப்போதும் விரும்பும் ஒல்லியான நடிகர்திலகம். அதன்காரணமாக சிக்கென்று பொருந்தும் அனைத்து உடைகளும். கொள்ளை அழகு. முழுக்க முழுக்க பாடல்களினாலேயே பிரபலமான ஆராதனாவின் ரீமேக் என்றபோதிலும், ஒரிஜினல் மெட்டில் ஒரு பாடலைக்கூட தொடாமல், அதே சமயம் அத்தனை பாடல்களையும் அட்டகாசமாக சாதித்துக்காட்டிய மெல்லிசையின் இமயம் எம்.எஸ்.வி.யின் அற்புதப்பாடல்கள்...
'உள்ளம் ரெண்டும் ஒன்றையொன்று மிஞ்சும் வண்னம் ஓடும் வேகம்'
'இனியவளே என்று பாடி வந்தேன்... இனி(ய்)அவள்தான் என்று ஆகிவிட்டேன்'
'மேளதாளம் கேட்கும் காலம் விரைவில் வருக வருகவென்று'
'எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது.. எப்படி மனதை தட்டிப்பறிக்குது'
'எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே'
'என் ராஜாவின் ரோஜா முகம் திங்கள் போல் சிரிக்கும்'
'ஆடிக்குப்பின்னே ஆவணி மாதம் வருவது உண்டு'
நடிகர்திலகம் இரட்டை வேடங்களில் கலக்கியிருப்பார். அதிலும் மகன் ஆனந்த், தன் தாய் சிவகாமி(வாணி)யை அடையாளம் கண்டுகொண்டபின் அவரிடம் காட்டும் அந்த பரிவு.
இணைந்து நடித்தது ஒரே படமென்றாலும் நடிகர்திலகத்துடன் லதாவின் கெமிஸ்ட்ரி, பயாலஜி, பிஸிக்ஸ், மேத்ஸ், நேச்சுரல் சைன்ஸ் எல்லாமே அட்டகாசம்.
நான் எப்போதுமே நடிகர்திலகத்தின் 'பதினைந்து பட வட்ட'த்துக்குள் சிக்காதவள் ஆதலால் ரொம்பவே ரசித்தேன். நடிகர்திலகத்தை அழகாகக் காண்பித்து என்னைப்போன்றவர்களின் ஆவலைப்பூர்த்திசெய்யவே அவதாரம் எடுத்த சி.வி.ராஜேந்திரன் இயக்கம்.
'ஆராதனா' ஓடியதற்கான காரணங்கள் அவற்றில் இடம்பெற்ற அருமையான பாடல்களும். அப்படத்தில் ராஜேஷ் கன்னா புதுமுகம் என்பதுமே. ராஜேஷ் ஷர்மிலா தாகூர் இணை ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது.
கதை சிறிய கதை மட்டுமல்ல, எந்தவிதமான பெரிய திருப்பங்களும் இல்லாத கதையும் கூட. கிட்டத்தட்ட சென்னை மற்றும் பெரு நகரங்களில் மட்டுமல்ல இடைப்பட்ட சிறு நகரங்களில் கூட ஆராதனா நன்றாக ஓடியிருந்த வேளையில், படத்தின் கதை என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இருந்தாலும் பாடல்களே அப்படத்தை தூக்கி நிறுத்தியிருந்ததால், தமிழில் மெல்லிசை மன்னர் எப்படி செய்திருக்கிறார் என்பதையும், இளமைத்துடிப்புள்ள (குறிப்பாக பையன் ரோல்) நடிகர்திலகம் எப்படி செய்துள்ளார் என்பதைத் தெரிந்துகொள்ளவும் ரசிகர்கள் ரொம்பவே ஆவலாக இருந்தனர்.
ஆனால் மெல்லிசை மன்னர் யார்?. அசகாய சூரராச்சே. 'உன்னுடைய ஒரிஜினல் ட்யூன்களை நீயே வைத்துக்கொள். கதைக்கும் காட்சிக்கும் ஏற்றவாறு நான் போடுகிறேன் பார் ட்யூன்' என்று, ஒவ்வொரு பாடலுக்கும் நிகராக மெட்டு போட்டிருந்தார் பாருங்கள். ரசிகர்கள் அதிசயித்துப்போயினர். என்னடா இது, இப்படத்தில் மெல்லிசை மன்னர் இன்னொரு 'வேதா'வாக மாறுவார் என்று பார்த்தால், நான் நான்தான் என்று காட்டிவிட்டாரே என்று ஆச்சரியத்தில் மூழ்கினர்.
'Mere sapnom ki rani' பாடலுக்கும் 'உள்ளம் ரெண்டும் ஒன்றையொன்று' பாடலுக்கும் எதாவது சம்மந்தம் இருக்கிறததா...
'Kora kagaz ka ye man mera' பாடலுக்கும் 'இனியவளே என்று பாடி வந்தேன்' ட்யூனுக்கும் எந்த வகையிலாவது சம்மந்தப்படுத்த முடியுமா. இதே போல
'Gungugna rahe' பாடலின் இடத்தில் 'மேள தாளம் கேட்கும் காலம்' பாடலையும்,
'Chanda he thum' பாடலின் இடத்தில் 'என் ராஜாவின் ரோஜா முகம்' பாடலையும்
எல்லோரும் எதிர்பார்த்த
'Roppu thera masthana' படல் காட்சியில் 'எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது பாடலையும் ஒரிஜினல் இந்தி சாயல் கொஞ்சமும் இல்லாமல் தன் வழியில் ('என் வழி தனி வழி என்று ') மெட்டமைத்து அசத்தியிருந்தார்.
அதுபோலவே, எஸ்.டி.பர்மன் பாடியிருந்த சிச்சுவேஷன் பாடலைவிட, தன் குரலில் “எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே” பாடலை ஒருபடி மேலே தூக்கி நிறுத்தியிருந்தார் மெல்லிசை மன்னர். சுசீலாவின் தனிப்பாடலான 'என் ராஜாவின்' பாடலும், இந்திப்பாடலைவிட அருமை.
நடிகர்திலகத்தைப் பொறுத்தவரை, இளமை இயக்குனரோடு சேர்ந்து அட்டகாசம் பண்ணியிருப்பார். இரண்டு ரோல்களுக்கும் நல்ல வித்தியாசம் காட்டி நடித்திருப்பார். (ஆரதனாவில் மீசை மட்டுமே வித்தியாசம்).
சென்னை லிட்டில் ஆனந்த் திரையிடப்பட்ட ‘ஆராதனா’, அங்கே 50 வாரங்களைக்கடந்த பின்னர், நகரின் பல்வேறு தியேட்டர்களில் தொடர்ச்சியாக மாறி மாறி திரையிடப்பட்டு 99 வாரங்கள் கழிந்த பின்னர் மீண்டும் 100-வது வாரமாக அதே லிட்டில் ஆனந்தில் திரையிடப்பட்டபோது மீண்டும் கூட்டம் அலை மோதியது. (தியேட்டர் அமைந்திருந்த அண்ணாசாலைப்பகுதி கல்லூரி வளம் செறிந்த இடம்). இதே காலகட்டத்தில் இதன் அருகேயிருந்த எமரால்ட் தியேட்டரில் 'அந்தாஸ்' இந்திப்படம் 30 வாரங்கள் சக்கை போடுபோட்டது.
அன்றைய காலகட்டத்தில் தமிழ்ப்படங்கள் தமிழ்நாட்டில் ஓடி சில மாதங்கள் கழித்துத்தான் இலங்கையில் திரையிடப்படும். 'சிவகாமியின் செல்வன்' தமிழ்நாட்டில் ஓடி முடிந்து எடுக்கப்பட்ட பின்னர்தான் இலங்கையில் திரையிடப்பட்டது. எந்த ஒரு படத்தையும் அற்புதமாக அறிமுகம் செய்வதில் இலங்கை வானொலிக்கு நிகர் எதுவும் கிடையாது. அந்த வகையில் இலங்கை வானொலியில் கே.எஸ்.ராஜா இப்படம் பற்றிய சிறப்பம்சங்களைத் தொகுத்து வழங்கிய அழகைக்கேட்ட தமிழ்நாட்டினர், சிவகாமியின் செல்வனைப்பார்க்காமல் விட்டதற்காக வருந்தி, பார்க்கத்தேடியபோது it was too late. ஏனென்றால் அப்போதெல்லாம் படங்களை தியேட்டரில் பார்ப்பதல்லாமல் no other choice.
உங்களுக்கே தெரியும். நான் 1967 - 77 படங்களைப்பற்றிப் பேசுவதென்றால் என்னையே மறந்து விடுவேன். அந்த வகையில் சிவகாமியின் செல்வனைப்பற்றி இன்னும் நிறையப்பேச வேண்டும். பேசுவோம்.....
சிவாஜி ரசிகர்களுக்குள் சிவகாமியின் செல்வன் ஏற்படுத்திய பாதிப்பு...
இதைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதலாம்... என்றாலும் ஒரே ஒரு சான்று போதும்...
சகோதரி சாரதா வர வைத்து விட்டாரே தலைவர்...
வருக வருக சகோதரி...
தங்களுடைய பதிவுகள் இல்லாமல் இத்திரியில் குறை யிருந்து கொண்டே இருந்தது. இன்று அக்குறை நீங்கி விட்டது.
இனி தொடர்ந்து தாங்கள் பங்களிக்க வேண்டும்..
கோவை
நம் மன்றத்தைச் சேர்ந்த செல்வகுமார் இல்லத்திருமண விழாவிற்கு ரசிகர்கள் வைத்துள்ள ப்ளக்ஸ் பேனர்கள்.
http://i1039.photobucket.com/albums/...psbf5qmcn7.jpg
http://i1039.photobucket.com/albums/...psb3nxznle.jpg
http://i1039.photobucket.com/albums/...psghkaskrp.jpg
http://i1039.photobucket.com/albums/...ps4jt9nsbe.jpg
http://i1039.photobucket.com/albums/...psdi6zr9ah.jpg
http://i1039.photobucket.com/albums/...psn6qzpyyr.jpg
விழாவில் நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும் விதமாக அவரின் திரைப்பாடல்கள் இன்னிசைக்கச்சேரி நடைபெற்றது.இன்னிசைக்
கச்சேரியில்ஒவ்வொரு பாடலுக்கு முன்பும் நடிகர்திலகத்தின்
புகழுரைகள் வாசிக்கப்பட்டு பாடல்கள் இசைக்கப்பட்டன.எத்தனையோ இன்னிசைக்கச்சேரிகள் நடைபெற்றாலும் நடிகர்திலகத்தின் பாடல்கள் பாடும்போது தான் பாடகர்களின் முகத்தில் ரசனையான பாவனைகளையும் அவர்கள் காட்டும் பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் நன்றாக தெளிவாக உணர முடிகின்றது.இவையெல்லாம் நடிகர்திலகத்தையே சாரும்.
சாரதா அவர்களின் வரவு இனியதாக அமைந்துள்ளது.அது தொடர வேண்டும்
Welcome Back Madam,
Awaiting for more info on SS.
http://www.tamiloviam.com/unicode/pr...6&week=jul2706
பாடல்களால் ஒரு பாலம் : இரயிலில் ஓர் ஒயில்
- அபுல் கலாம் ஆசாத்
தமிழில்,
திரைப்படம்: சிவகாமியின் செல்வன்
பாடலாசிரியர்: புலமைப்பித்தன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்
திரையில்: சிவாஜி கணேசன், ஏ.வி.எம்.ராஜன், வாணிஸ்ரீ.
இந்தியில்,
திரைப்படம்: ஆராதனா
பாடலாசிரியர்: ஆனந்த் பக்ஷி
இசை: எஸ்.டி.பர்மன்
பாடியவர்: கிஷோர் குமார்
திரையில்: ராஜேஷ் கன்னா, சுஜித் குமார், ஷர்மிளா டாகூர்
'சலசல சலசல இரட்டைக்கிளவி
தகதக தகதக இரட்டைக்கிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ' என இரட்டைக்கிளவியை எல்லாருக்கும் அறிமுகம் செய்துவைத்தவர் வைரமுத்து.
பல்லவியின் இரண்டு அடிகளின் கடைசியிலும் இரட்டைக்கிளவிகள். தொடர்ந்த இரண்டு சரணங்களின் கடைசி அடிகளிலும் இரட்டைக்கிளவிகள். அவற்றின் முன்னே கச்சிதமாகப் பொருந்துகின்ற முதலடிகள். இப்படி நகாசு வேலையை திரைப்பாடலில் செய்துவைத்தவர் புலமைப்பித்தன்.
ஜிகுஜிகு, ஜிலுஜிலு, குளுகுளு, கிளுகிளு இவையே அந்த இரட்டைக்கிளவிகள்.
அது ஒரு குளிர்ப்பிரதேசம். கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் பசுமை படர்ந்திருக்க, அதனிடையே கோடு கிழித்தாற்போல இருப்புப்பாதை. இருப்புப் பாதையையொட்டி அதனுடன் இணையாகச் செல்லும் சாலை. அங்கே செல்லும் இரயிலின் வேகம் ஒன்றும் காற்றைக் கிழித்துப் பறப்பதாக இல்லை. சாலையில் செல்லும் எந்த வாகனமும் இரயிலின் வேகத்தோடு கூடவே செல்வதற்குத் தோதுவான வேகம்.
இரயிலின் சன்னலின் ஓரத்தில் ஓர் ஒயில் அமர்ந்திருக்கிறாள். தடிமனான புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு புரட்டிக்கொண்டே வருகிறாள். புத்தகத்தை ஒயில் படித்தாளோ இல்லை படிப்பதாகப் பாவனை செய்தாளோ எவரும் அறியார். ஆனால், இரயிலுடன் கூடவே சாலையில் வாகனத்தில் வந்த இளஞன் ஒருவன் ஒயிலைப் படித்துக்கொண்டே வந்தான். அவள் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டும்போது ஓரக்கண்ணால் அவனைப் பார்த்து அவனது மனதையும் புரட்டிப் போட்டாள். அவள் புரட்டிப் போட்டதில் அவனது மனதில் காதல் விழித்துக்கொண்டது. காதல் வந்தால் கவிதையும் கூடவே வரவேண்டுமல்லவா, வந்தது.
உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று
மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம் ஹே
ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு ஹே!
பெண்மை என்னும் தென்றல் ஒன்று
என்னைத் தொட்டுக் கொஞ்சும் இன்பம் ஹே
ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஹே!
காத்திருந்தாள் ஒரு ராஜாத்தி - இரு
கண்களில் மையெழுதி!
கண்டுகொண்டாள் என்னை நெஞ்சில் நிறுத்தி - அவள்
கோடியில் ஓரழகி!
தொட்டுத் தொட்டு கட்டுக் கதை
இட்டுச் சொல்லும் பட்டுக் கண்கள்! ஹோ!
குளுகுளு குளுகுளு குளுகுளு ஹே!
நேற்றிரவு நல்ல பால்நிலவு - எந்தன்
நெஞ்சினில் ஓர் கனவு!
வந்தவள் யார் இந்தத் தேவதையோ - இவள்
வார்த்தைகள் தேன்மழையோ!
செல்லக் கன்னம் வெல்லம் என
மெல்லமெல்ல கிள்ளக்கிள்ள! ஹோ!
கிளுகிளு கிளுகிளு கிளுகிளு ஹே!
தமிழ்த் திரையில் இரயிலில் ஒயிலாகத் தோன்றியவர் வாணிஸ்ரீ. உடன் செல்லும் வாகனத்தில் சிவாஜியும் ஏ.வி.எம். ராஜனும். புத்தகத்தைப் பார்ப்பதும், சிவாஜியைப் பார்ப்பதும், பின்பு அலட்சியமாக முகத்தைச் சுழித்துவிட்டு மீண்டும் புத்தகத்தைப் படிப்பதுமான பாவனையில் துவங்கி, மெல்லமெல்ல பாடலில் ஒலிக்கும் வர்ணனைகளை ரசிக்கத் துவங்கி, இதழோரத்தில் தோன்றும் புன்னகையுமாக வாணிஸ்ரீ.
Rajesh Kanna, Sharmilaஷர்மிளா டாகூர் புத்தகத்தில் முகம் மறைத்து விளையாட்டுக் காட்டுவதைப் பார்த்தபின் சிவகாமியின் செல்வனைப் பார்க்க நேர்ந்தால், அந்தக் காட்சியின் நேர்த்திக்காக வாணிஸ்ரீ எத்தனை சிரமப்பட்டிருப்பார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
ஷர்மிளா டாகூர் புத்தகத்தில் முகம் மறைத்து விளையாட்டுக் காட்டுவதைப் பார்த்தபின் சிவகாமியின் செல்வனைப் பார்க்க நேர்ந்தால், அந்தக் காட்சியின் நேர்த்திக்காக வாணிஸ்ரீ எத்தனை சிரமப்பட்டிருப்பார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
அலட்சியமாகப் பார்க்கும் பார்வையை ஓரிரு வினாடிகள் வீசுவாரென்றால், அடுத்த வினாடி பொய்யான கோபப் பார்வையை வீசுவார். பிறகு புத்தகத்தில் முகம் புதைத்துக்கொள்ளும் பாவனையில் சில வினாடிகளும், மெதுவாகப் புத்தகத்தை விலக்கி அவனது பாட்டில் இருக்கும் நாயகி தான்தானா என்னும் சந்தேகம் தன்னை ஆட்கொண்டது போன்ற முகபாவனையில் சில வினாடிகளாகளுமாக உட்கார்ந்த இடத்திலிருந்தே பல உணர்வுகளை வெளிப்படுத்துவார்.
இப்படியான முகபாவங்கள் அன்று முதல் இன்று வரையில் தமிழ்த் திரையில் வந்துகொண்டே இருக்கின்றன. துவக்கத்தில் கொஞ்சம் விலகி நிற்கவேண்டுமென நினைப்பதும், பிறகு இணைந்துகொள்வதுமாக பார்க்கின்ற படங்களிலெல்லாம் ஒன்றிரண்டு காட்சிகள் வந்துபோனாலும் அலுப்புத் தட்டாமல் இருப்பதற்குக் காரணம் நமது மனதில் இயல்பாகவே வேர்விட்டிருக்கும் மென்மையான உணர்வுகளும், திரையில் தோன்றுகின்ற நடிக நடிகையர் மேலிருக்கும் அபிமானமுமே. இந்த அபிமானங்கள் வளர்ந்து சார்பு நிலையை உருவாக்காமலிருந்தால் அது நடுநிலை.
காட்சியில், திறந்த ஜீப்பினை ஓட்டிக்கொண்டு ஏ.வி.எம்.ராஜன் சிவாஜியின் நண்பராக அவ்வப்போது சிந்தும் புன்னகையுடன் வர, தனக்கே உரிய அற்புதமான உதட்டசைவில் சிவாஜி, புலமைப்பித்தன் - எம்.எஸ்.விஸ்வநாதன் கூட்டணிக்கு உயிரூட்டிக்கொண்டு வர, மூன்று நிமிடங்களில் பெரிய காதல் நாடகத்தையே திரையில் அரங்கேற்றிக் காட்டிய பாடலிது.
இந்தியில் இதன் மூலவடிவில் ராஜேஷ் கன்னாவும், சுஜித் குமாரும் ஜீப்பில் வர, இரயிலில் ஷர்மிளா டாகூர்.
இந்தித் திரையில் எழுபதுகளில் ராஜேஷ் கன்னாவுக்கு இருந்த அங்கீகாரம் அபாரமானது. கொஞ்சம் தேசபக்தி, கொஞ்சம் அம்மா பாசம், கொஞ்சம் தங்கைப் பிரியம், கொஞ்சம் காதல், மிகமிகக் கொஞ்சம் வீரம் இப்படியான கலவையில் வெற்றிப் படங்களின் நாயகனாகவே அவர் வலம் வந்துகொண்டிருந்தார்.
இந்தப் பாடல் காட்சியில் ராஜேஷ் கன்னாவின் நண்பராக வண்டியை ஓட்டிக்கொண்டு வருகின்ற சுஜித் குமார் வங்காளத்தைச் சேர்ந்தவர். மிதுன் சக்ரபோர்த்தியின் வருகைக்கு முன்பு வரையில் வங்காளத்திலிருந்து வந்து பிரபலமாகக் காலூன்றிய நடிகர் என சுஜித் குமாரைச் சொல்லலாம். பின்னாளில் சுஜித் வில்லனாகிப்போனார்.
ஷர்மிளா டாகூருக்கும் வாணிஸ்ரீக்கும் இயல்பாகவே பொருந்துகின்ற உயரமான சிகை அலங்காரமும், இந்தியில் இருந்ததைப் போலவே தமிழிலும் ஆண்களின் உடையமைப்பில் நேபாளபாணித் தொப்பியும், ஜிகுஜிகுவென பாடலுடன் சேர்ந்து ஒலிக்கும் இரயிலின் சத்தமும், சிலநேரங்களில் இந்தியைப் பார்க்கிறோமா தமிழைப் பார்க்கிறோமா என யோசிக்கச் செய்யும்.
தமிழில் சரணத்தில் கவிஞர் சொல்கிற கனவில் வந்த தேவதை, இந்தியில் பாடலின் பல்லவியிலேயே வந்துவிடுகிறாள்.
மேரே சப்புனோன்கி ரானி கப் ஆயேகி தூ
ஆயே ருத்து மஸ்தானி கப் ஆயேகி தூ
பீத்து ஜாயே ஸிந்தகானி கப் ஆயேகிதூ
சலே ஆ தூ சலே ஆ!
எந்தன் கனவினில் வந்த தேவதையும் நீயோ
இந்த வசந்தத்தின் மொத்த சுகந்தமும் நீயோ
என்னில் வாழவந்த காவியப்பெண்ணாக நீயோ
வருவாய்! நீ வருவாய்!
(இது வார்த்தைக்கு வார்த்தையான மொழிமாற்றம் அன்று. பொருளை உள்வாங்கிக்கொண்டு பாடலின் வரிகளைத் தமிழில் அதே மெட்டிற்குப் பொருந்தும்படியாக மாற்றி எழுதியது. ஓரளவிற்குதான் வரிகள் பொருந்தும். இனி தொடரப்போகும் எல்லா மொழிமாற்றங்களும் இப்படித்தான் இருக்கும்.)
காதலின் வீதியும் தோட்டத்து மலர்களும்
எங்கும் தோன்றும் வண்ணமயமும்
உன் காதலின் கீதத்தைக் கேட்கத் துடிக்கும்!
(என் கனவில் வந்த தேவதையும் நீயோ)
ப்யார்கி கலியான் பாகோன்கி கலியான்
சப்ரங்கு ரலியான் பூச்ரஹிஹை
கீத் பன்ஹட்டுபே கிச்தின் காயேகி தூ
(மேரே சப்புனோன்கி ரானி கப் ஆயேகி தூ)
இந்தியில் இந்தப் பாடலில் ஒலித்த ஒரு குறும்பு தமிழில் ஒலிக்கவில்லை. அவளை வர்ணித்துக்கொண்டே செல்லும் பாடலின் முடிவில் நாயகன் நாயகியை செல்லமாகச் சீண்டிப்பார்ப்பான். 'என் கனவில் வந்த தேவதையே நீ எப்போது என்னுடன் வருவாயோ, எப்போது காதலின் கீதம் பாடுவாயோ' என்றெல்லாம் கேட்டுக்கொண்டே, கடைசியில், 'எனக்கு நம்பிக்கையில்லை, உன்மேல் உண்டானது போலவே இன்னொருத்தியின் மீதும் காதல் உண்டாகாது என்று உறுதியாகச் சொல்லமுடியாது. அப்படி உண்டாகிவிட்டால் நீ வருத்தப்படுவாய்' என்று சொல்கிறான்.
க்யா ஹை பரோஸா ஆஷிக் தில்கா
அவுர் கிஸிபே யே ஆஜாயே
ஆகயாதோ பஹூத் பச்தாயேகி தூ
(மேரே சப்புனோன்கி ரானி கப் ஆயேகி தூ)
நாளையென் கனவில் இன்னொரு கீதம்
தோன்றும் வேளை பாதை மாறும்
நீ கனலாகி என்னை அன்று சூழக்கூடும்!
(என் கனவில் வந்த தேவதையும் நீயோ)
இப்படிக் காதலில் துடித்த அவர்கள் சிருங்காரத்தில் துடித்த பாடல் ஒன்றும் இதே திரைப்படத்தில் இருக்கின்றது.
Welcome sharadhaa Madam
கடற்கரை… காற்று… காதலி… இவ்வரிசையில் வேறென்ன வேண்டும்? கவிதை!
சொல்லில் ஆயிரம் பொருள்வைத்து சொக்க வைக்க முடியுமென்றால் துள்ளும் வார்த்தைச் சரமெடுத்து தொடுக்கும் கவிஞரின் கைவண்ணம் பாருங்கள்! சிவகாமியின் செல்வன் திரைப்படத்திற்காக கவியரசு கண்ணதாசன் எழுதிய பல்லவி பாருங்கள்..
இனியவளே என்று பாடி வந்தேன்
இனி அவள் தான் என்று ஆகி விட்டேன்
ஆம் இனியவளே.. என்கிற பல்லவியின் முதல் சொல்லை இனி அவளே.. என்று பதம் பிரித்து இனிமை சேர்க்கிற இன்பமிருக்கிறதே.. அது யாருக்கு வரும்? மெல்லிசைமன்னரின் இசையில் விளைந்த கீதம்! டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா குரல்களில் பொழியும் நாதம்! அன்பு மன மாளிகையில் இருவர் நடத்தும் ஆனந்தவிழா இப்படித்தான் இருக்குமோ என்று ஏங்க வைக்கிற வரிகள் செவிகளில் வந்து விழுகின்றன!!
பெண்மையின் நான்கு குணங்களும் ஒன்றெனக் கண்டிடும்போது காதலன் உள்ளத்தில் தோன்றும் இன்ப வெள்ளம் இப்படித்தான் இருக்குமோ? ஆயிரமாயிரம் காலம் இந்த இன்பம் நிலைத்திருக்க இளமை விரும்புவது இயற்கைதானே! மொட்டுவிரிந்திடும் இதழ்களைப்போல் இன்பம் கட்டுக்கடங்காமல் பாய்ந்திடும் வேளை காதலின் லீலை இப்படித்தானிருக்குமோ?
மோகத்தில் சாய்கின்ற வேளை பெண்மை இன்பத்தில் தாளாமல் இதழ்கள் இங்கே என்ன அளவீட்டுக் கருவி செய்யும் வேலையைச் செய்கின்றனவாம்.. கவிஞரின் கற்பனையில் ஒரு காதல் கீதம் இன்பத்தேன் சொட்டுகிறது!!
http://www.vallamai.com/?p=54607