-
60 ஆண்டுகளாக தமிழக அரசியலில் தொடர்ந்து எம்ஜிஆர் என்ற தனி மனிதரின் பெயரும் , அவருடைய அரசியல் பிரச்சாரங்களும் , இடம் பெறுவது அரசியல் வரலாற்றில் குறிப்பாக தேர்தல் களத்தில் முக்கியமாக கருதப்படுகிறது .
எம்ஜிஆர் உருவாக்கிய ஒட்டு வங்கி உதய சூரியன் மற்றும் இரட்டை இலை சின்னங்கள் மூலம் இன்று வரை தொடர்ந்து ஆட்சியினை பிடித்து வருகின்றது . 1957,1962, 1967,1971ல் நடந்த 4 பொது தேர்தல்களில் திமுகவிற்காக எம்ஜிஆர் உழைத்த உழைப்பு மறக்க முடியாதது .அண்ணாவையும் , கருணாநிதியையும் தமிழக முதல்வராக அமர்த்தி வெற்றி கண்டார்
எம்ஜிஆர் நிலை நிறுத்திய ஒட்டு வங்கியும் , அவருடைய பிம்பமும் தமிழக மக்கள் மனதில் நிலைத்து விட்டதால் தலைமுறைகள் மாறினாலும் எம்ஜிஆர் என்ற சக்தி இன்னமும் ஆட்சி செய்து வருவதுதான் உண்மை .எம்ஜிஆர் என்ற பலமான அஸ்திவாரம் கொண்ட கட்டிடத்தை ஜெயலலிதா கைப்பற்றி ஆட்சியில் இருக்கிறார் .
எம்ஜிஆரின் தீவிர ரசிகர்களும் , தொண்டர்களும் எம்ஜிஆர் என்ற மாமனிதரின் இயக்கம் சிதைவதை விரும்ப மாட்டார்கள் . ஜெயலலிதாவின் அணுகுமுறை , முற்றிலும் மாறுபட்டது . இருந்தாலும் எம்ஜிஆர் என்ற மந்திர சொல்லுக்கு கட்டுப்பட்டு ஜெயலலிதாவின் வெற்றிக்கு உழைப்பார்கள் .
எம்ஜிஆரின் செல்வாக்கு , அரசியல் சாதுரியம் , மனிதநேயம் முன் ஜெயலலிதா எந்த விதத்திலும் ஈடாக மாட்டார் .
எம்ஜிஆர் என்ற அதிர்ஷ்ட காற்று உள்ளவரை ஜெயலிதாவிற்கு லாபமே. ஜெயலலிதாவின் பிம்பம் செல்வாக்கு
எல்லாம் ஒரு கால கட்டத்தில் மக்களால் மறக்கப்படுவார் .இது உண்மை. ஆனால் எம்ஜிஆர் என்ற பெயரும் அவருடைய புகழும் காலம் கடந்து தலைமுறைகள் கடந்து வாழும் .இது சத்தியம் .
courtesy - vinmeengal
-
-
-
மக்கள் திலகத்தின் அரசியல் பயணத்தில் இருந்து ....மலரும் நினைவுகள் .
http://i65.tinypic.com/11smov7.jpg
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
காலம் உணர்த்தும் பாடம் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் தன்னுடைய அரசியல் மேடைகளில் ,சட்ட சபை விவாதங்களில்,நிருபர்கள் பே ட்டிகளில் அறிக்கைகளில் ஒரு போதும் அநாகரீகமாக யாரையும் தாக்கியோ , தரக்குறைவாகவோ பேசியதில்லை.
மிகவும் நிதானத்துடன் , மரியாதையாக தன்னுடைய கருத்தை கூறுவார் .
மக்கள் திலகம் எம்ஜிஆரை தனிப்பட்ட முறையில் குறிப்பாக 1972- 1987 வரை தாக்கிய கணைகள் ஒன்றா ? இரண்டா ?
ஒரு கட்டத்தில் அப்படி தரக்குறைவாக பேசியவர்களில் பலர் மக்கள் திலகம் எம்ஜிஆரிடம் அடைக்கலம் புகுந்தது வரலாறு .அது மக்கள் திலகத்தின் பெருந்தன்மையை காட்டுகிறது .
நிதானம் தவறி , ஆத்திரமாக , எரிச்சலாக , இரட்டை அர்த்தத்துடன் பிறரை கேலி செய்தவர்கள் இன்று அதற்குரிய பலனை அனுபவிக்கிறார்கள். இதுதான் காலம் உணர்த்தும் பாடம்
மனதளவில் இன்னமும் எம்ஜிஆர் மீது தனிப்பட்ட முறையில் வன்மம் கொண்டுள்ள நண்பர்கள் அவசியம் இந்த பாடலை கேட்டால் நிச்சயம் தங்களை மாற்றி கொள்வார்கள் .. .மனசாந்தி அடைவார்கள் .
https://youtu.be/0BjXwxj6CVY
-
-
எம்ஜிஆர் 100 | 38 - நினைத்ததை முடிப்பவர்!
http://i68.tinypic.com/9hkn6w.jpg
M.G.R. படங்களில் பாடல்களும் சரி, பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும் சரி. ரசிகர்களுக்கு விருந்துதான். ஆனால், ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர். படங்களின் பாடல் வரிகள் சென்சாரின் பிடியில் இருந்து தப்பி வருவதற்குள் போதும், போதும் என்றாகிவிடும். சென்சார் அதிகாரிகளின் கட்டுப்பாடுகள் காரணமாக பல பாடல்களில் வரிகள் மாற்றப்பட்டன.
‘பெற்றால்தான் பிள்ளையா?’ படத் தில் ‘நல்ல நல்ல பிள்ளை களை நம்பி…’ பாடலில் கடைசி யில் ‘மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்’ என்றுதான் காட்சி படமாக்கப்பட்டது. அண்ணா பெயர் இடம் பெறுவதற்கு சென்சார் அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால், அந்த வரி ‘மேடையில் முழங்கு திரு.வி.க.போல்’ என்று மாற்றப்பட்டு ஒலி மட்டும் படத்தில் சேர்க்கப்பட்டது.
ஆனால், எம்.ஜி.ஆரின் வாயசைப்பு ‘அறிஞர் அண்ணா போல்’ என்றுதான் படத்தில் இருக்கும். இசைத்தட்டிலும் அப்படியேதான் இருக்கும். ‘அண்ணா போல்’ என்ற வார்த்தை மாறி ஒலித்தா லும் படம் வெளியானபோது திரையரங்கு களில் கைதட்டலும் விசிலும் காதைப் பிளந்தது. ‘திரு.வி.க. போல்’ என்ற வார்த்தைகள் ‘திமுக போல்’ என்று ஒலித்ததுதான் காரணம்.
http://i67.tinypic.com/1zlao0z.jpg
‘அன்பே வா’ படத்தில் எம்.ஜி.ஆர். பாடி நடிக்கும் ‘புதிய வானம் புதிய பூமி…’ பாடலின் ஒரு வரியில் முதலில் ‘உதய சூரியனின் பார்வையிலே’ என்று தான் வாலி எழுதியிருந்தார். படத் தயாரிப்பாளரான ஏவி.எம். செட்டியார் அதை சென்சார் அதிகாரிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் வார்த் தையை மாற்றும்படியும் வாலியிடம் கூறினார். வாலி அதைக் கேட்கவில்லை. கடைசியில் செட்டியார் சொன்னது போலவே நடந்தது. பின்னர், ‘உதய சூரியனின்‘ என்பதற்கு பதிலாக ‘புதிய சூரியனின்’ என்று ஓரளவு ஒலி ஒற்றுமை யோடு மாற்றி எழுதினார் வாலி. இன் னும்கூட பாடலைக் கேட்பவர்கள் பலர் அதை ‘உதய சூரியனின் பார்வையிலே’ என்றுதான் நினைப்பார்கள்.
இந்தப் பாடலைப் பற்றி சொல்லும் போது ஒரு சம்பவம். பாடல் காட்சி சிம்லாவில் படமாக்கப்பட்டது. பத்திரிகை யாளர் சாவி அப்போது சிம்லாவில் இருந் தார். ‘எந்த நாடு என்ற கேள்வி இல்லை...’ என்று வரும் வரிகளின்போது எம்.ஜி.ஆர். அருகே நிற்பவர்களோடு சாவியும் சில விநாடிகள் நின்றுவிட்டுச் செல்வார். படம் வெளியாகி வெற்றிகரமாக 100 நாட்களைக் கடந்து ஓடியது. பின்னர், எம்.ஜி.ஆரை சந்தித்த சாவி, ‘‘நான் நடித்ததால்தான் ‘அன்பே வா’ படம் 100 நாள் ஓடியது’’ என்று சொல்லி எம்.ஜி.ஆரை வெடிச் சிரிப்பு சிரிக்கச் செய்திருக்கிறார். அநேகமாக, சாவி நடித்த ஒரே படம் இதுவாகத்தான் இருக்கும்.
பாரதியார் பாடலான ‘சின்னஞ்சிறு கிளியே...’ பாடல் ஏற்கெனவே ‘மணமகள்’ படத்தில் இடம் பெற்றுள்ளது. அதில் வரும் ‘கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் கள் வெறி கொள்ளுதடி…’ என்ற வரிகளை சென்சார் அனுமதித்தது. ‘தெய்வத்தாய்’ படத்தில் ‘வண்ணக்கிளி சொன்ன மொழி…’ பாடலில் ஒரு இடத்தில் ‘அத்திப்பழ கன்னத்திலே முத்தமிடவா?’ என்று இருந்தது. சென்சார் கெடுபிடி காரணமாக ‘முத்தமிடவா?’ என்ற வார்த்தை ‘கிள்ளிவிடவா?’ என்று மாற்றப்பட்டது.
‘நாடோடி மன்னன்’ படம் தயாரிக் கப்படும்போதே சென்சாருக்கு ஏராள மான புகார்கள். அப்போதிருந்த தணிக் கைக் குழு அதிகாரி ஜி.டி.சாஸ்திரி கண் டிப்பானவர். படத்தை அவருக்கு போட் டுக் காட்டி அவரும் ‘நோ கட்ஸ்’ என்று கூறிவிட்டார். அதன் பிறகு அவர் கேட்ட கேள்வி, ‘‘ஆமாம். எங்கே அந்த ‘காளை மாட்டை பால் கறக்க பாக்கறாங்க’ பாடல் காட்சியைக் காணோம்?’’
படத்தில் அப்படிப்பட்ட வரிகளோடு கண்ணதாசன் ஒரு பாடலை எழுதி யிருந்தார். சென்சாரில் அது எப்படியும் தப்பாது என்று அந்தப் பாடலை படத்தில் பயன்படுத்தவே இல்லை. ‘காங்கிரஸைத் தாக்கி படத்தில் பாடல் காட்சி ஒன்று இருக்கிறது’ என்று முன்பே யாரோ புகார் செய்திருக்கின்றனர். அதனால்தான் சாஸ்திரி அதைக் கேட்டிருக்கிறார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னம் காளை மாடு.
சென்சார் கெடுபிடிகளில் இருந்து தப்பிக்க படங்களில் புதிய உத்திகளை எம்.ஜி.ஆர். பயன்படுத்துவார். நெற்றியில் திமுகவின் சின்னமான உதய சூரியன் திலகம் வைத்துக் கொள்வார். ‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில் காவிரிப் பூம்பட்டினத்தின் இளவரசராக வரும் எம்.ஜி.ஆரின் பெயர் ‘உதய சூரியன்’. ‘தாய்க்குப் பின் தாரம்’ படத்தில் எம்.ஜி.ஆர். காளை மாட்டை அடக்குவார். 1957-ம் ஆண்டு தேர்தலில் காளை மாட்டை எம்.ஜி.ஆர். அடக்குவது போன்ற சுவரொட்டிகள் தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தின.
சென்சார் கெடுபிடி ஒருபுறம் இருக்கட் டும், எம்.ஜி.ஆரே தன் படங்களின் பாடல் வரிகளில் அக்கறை செலுத்துவார். தவறான அர்த்தம் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார். ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில், ‘கண்ணை நம்பாதே…’ என்ற கருத்தாழம் மிக்க சூப்பர் ஹிட் பாடல் உண்டு. பாடலை எழுதியவர் கவிஞர் மருதகாசி. ஒரு இடத்தில் ‘பொன் பொருளைக் கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டுத் தன் வழியே போகிறவர் போகட்டுமே’ என்று மருதகாசி எழுதியிருந்தார்.
அவரை எம்.ஜி.ஆர். அழைத்து, ‘‘தன் வழியே என்று சொல்லியிருக்கிறீர்கள். அது ஏன் நல்ல வழியாக இருக்கக் கூடாது? நல்ல வழியாக இருந்தால் ஒருவர் ஏன் தன் வழியே போகக் கூடாது?’’ என்று கேட் டார். மருதகாசி அசந்துபோய் விட்டார். பின்னர், எம்.ஜி.ஆரின் விருப்பத்துக் கேற்ப, ‘தன் வழியே போகிறவர் போகட்டுமே’ என்பதற்கு பதிலாக ‘கண்மூடிப் போகிறவர் போகட்டுமே’ என்று மருதகாசி மாற்றி எழுதினார்.
அந்தப் பாடலில்,
‘நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்’
என்ற வரிகளை படத்தில் எம்.ஜி.ஆர். பாடுவார்.
எம்.ஜி.ஆரின் மூலதனத்துக்கு என்றுமே குறைவில்லை.
-
http://i63.tinypic.com/20jjki8.jpg
It is the duty of each and every MGR Devotee / Fan to volunteer himself for participation in the FASTING AGITATION. A time has come to show our strength.
-
-
-
கோவை தர்சனா திரையரங்கில் நாளை முதல் மக்கள்திலகம் நடித்த மாட்டுக்கார வேலன் க்யூப் சிஸ்டத்தில் திரையிடப்படுகிறது
http://s16.postimg.org/4b3eyp6j9/IMG...407_WA0076.jpg
-
நான் ஆணையிட்டால்..."
பொதுவாக, டைரக்ஷன், எடிட்டிங்கில் இருந்து லைட்டிங் வரை சினிமாவின் அனைத்துத் தொழில் நுணுக்கங்களிலும் எம்.ஜி.ஆர். கைத்தேர்ந்தவர் என்று சொல்வார்கள். பாடல் வரிகளாகட்டும், டயலாக் டெலிவரியாகட்டும் எப்போதெப்போது குளோசப் வைப்பது; காட்சிப் பின்னணியில் என்னென்ன இருக்க வேண்டுமென்பது கூட அவர் தீர்மானித்து வைப்பாராம்.
தனது இலக்கு அதாவது Target Audience: கடுமையாக உழைத்து விட்டு ' போதும் போதாமலும்' சம்பளம் வாங்கி லோல்படும் தொழிலாளர்களும், குமாஸ்தாக்களும்; விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், கைவண்டி, ரிக்ஷா தொழிலாளர்களும் தான் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி புரிந்து வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆழ்மன ஏக்கங்களை, நிறைவேறவே வாய்ப்பில்லாத ஆசைகளை பூர்த்தி செய்யும் பிரதிநிதியாக திரையில் தோன்றினார். அவர்களின் ரசனை, விருப்பத்தன்மைக்கேற்ற கதை, காட்சியமைப்புகளையும், நடை உடை பாவனைகளையும் கொண்டே படங்களில் நடித்தார். கட்சி பிரச்சாரத்தையும் அதே பாணியில் மேற்கொண்டார்.
இதற்காக எழுந்த கிண்டல், கேலி விமர்சனங்களை அவர் உதாசீனம் செய்தார். ஏற்கனவே குறிப்பிட்டபடி, தான் வகுத்து வைத்திருந்த உத்திகளின்படியே திமுகவின் உருவமாக, குரலாக திரையில் வலம் வந்தார்.
கறுப்பு சிவப்பு என இரு வர்ணம் கொண்ட பர்ஸை வைத்துக் கொண்டு அடிக்கடி வெளியே எடுத்துக் காண்பிப்பார். அதே போல் அதே இரு வர்ண பெல்ட். கறுப்பு பேன்ட், சிவப்பு சட்டை (இது இடம் மாறியும் வருவதுண்டு). காதலியுடன் டூயட் பாடும் காட்சிப் பின்னணியில் கூட 'உதயசூரியன் ' சிம்பள். அவரை உதயசூரியனாக காதலியின் வர்ணிப்பு.
courtesy - thinnai
-
' பரிசு ' (1963) படத்தில் படத்தில் ஒரு பாடல். " கூந்தல் கறுப்பு; குங்குமம் சிவப்பு...'' எனத் தொடங்கும். இது 'அரிய' கண்டுபிடிப்பு என அவருக்கு தெரியாமலிருக்குமா! கேலியை பற்றி கவலைப்படவில்லை. பாடலை முணுமுணுக்கும் பாமரன் மனதில் கட்சிக் கொடியின் இரு வர்ணத்தை ஆழமாக இறக்க வேண்டுமென்பதே புரட்சி நடிகரின் ஒரே நோக்கமாக இருந்திருக்க வேண்டும்.
கறுப்பு சிவப்புக்கு இன்னொரு உதாரணம் :
" கறுப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய் ;
கருதாமல் எல்லாலோரும் ஒற்றுமையாய்... " (படம் : விவசாயி)
-
-
1961ல் தான் கதாநாயகனாக நடித்து அண்ணா கதை வசனத்தில் உருவான ' நல்லவன் வாழ்வான் ' படத்தில் வரும் "சிரிக்கின்றாள் அவள் சிரிக்கின்றாள்.." என்ற காதல் பாடலிலேயே,
" உதயசூரியன் உதிக்கும் போது
உள்ளத் தாமரை மலராதோ;
எதையும் தாங்கும் இதயமிருந்தால்
இருண்ட பொழுதும் புலராதோ "
- என்று கட்சி சின்னமான உதயசூரியனையும் , கட்சித் தலைவர் அண்ணாவின் பிரபலமான ' எதையும் தாங்கும் இதயம் ' வாசகத்தையும் குறிப்பிட வைத்தார்
-
மக்கள் மத்தியில் அதுவும் தனது இலக்கான வர்க்கத்தினர் மத்தியில் கடவுள் நம்பிக்கை அசைக்க முடியாதபடிக்கு இருப்பதை எம்.ஜி.ஆர். நன்குப் புரிந்தே வைத்திருந்தார். மற்ற தி.இ. நடிகர்கள் போல் உணர்வுப்பூர்வமான அந்த விஷயத்தில் கட்சிக்காக ' கை வைத்து ' மக்களின் அதிருப்தியை சம்பாதித்துக் கொள்ள எம்.ஜி.ஆர். தயாராக இல்லை.
" ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்"
- என பளிச்சென போட்டுடைத்தார்.
" இறைவன் இருக்கின்றான்
கண்ணுக்கு தெரிகின்றதா
காற்றில் தவழுகிறான் -அதுவும்
கண்ணுக்கு தெரிகின்றதா ? " (ஆனந்தஜோதி- 1963)
" உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை " (படகோட்டி - 1964)
" ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நானொரு தொழிலாளி " ( தொழிலாளி- 1964)
" ஒருவருக்கென்றே உள்ளதையெல்லாம்
இறைவனும் தந்ததில்லை.
மனமென்னும் கோவில் திறக்கின்ற நேரம்
அழைக்காமல் அங்கே
தெய்வம் வந்து சேரும் " (சந்திரோதயம்-1966)
" கடவுளெனும் முதலாளி
கண்டெடுத்தத் தொழிலாளி
விவசாயி...." (விவசாயி - 1967)
" இறைவன் ஒருவன் இருக்கின்றான் - இந்த
ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான் " (அடிமைப்பெண் - 1969)
" நீதியும் நியாயமும் எங்கெல்லாம் இருக்கோ அங்கெல்லாம் கடவுள் இருப்பார். முன்னெல்லாம் நீதியும் நேர்மையும் இருந்த ஜனங்க மனசிலே கடவுள் இருந்தார். இப்போ நீதியும் நியாயமும் இல்லாததால ஜனங்க, மனசிலே இருந்து கடவுளை வெளியே எடுத்து சிலையா வெச்சிட்டாங்க போல.."
-இது நம்நாடு படத்தில் எம்ஜிஆர் பேசும் வசனம். அதே படத்தில் அவர் தங்கியிருக்கும் குடிசையில் காந்தி, நேரு, அண்ணா படங்களுடன் முருக பெருமான் படமும் சுவாமி விவேகானந்தர் படமும் கூட தொங்கும்.
-
தெய்வத்தாய் ' (1964) படத்தில் " மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்..." என பாடி 'தி.மு.க.' வை பூடகமாக குறிப்பிட்டு கழக கண்மணிகளின் கைத்தட்டலை பெற்றார்.
" வாழைமலர் போல -பூமி முகம் பார்க்கும்
கோழை குணம் மாற்றுத் தோழா..!
நாளை உயிர் போகும் - இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்றுத் தோழா..! "
- என தொண்டகளை தயார்படுத்தினார்.
திமுகவினர் கொண்டாடி வந்த பாரதிதாசனின் "சங்கே முழங்கு.." என்ற பாடலை கலங்கரை விளக்கத்தில் (1965) முழங்க வைத்தார். நான் ஆணையிட்டால் (1966)படத்தில் " தாய் மேல் ஆணை; தமிழ் மேல் ஆணை..." செய்தார்.
" இருட்டினில் வாழும் இதயங்களே- கொஞ்சம்
வெளிச்சத்துக்கு வாருங்கள்
நல்லவர் உலகம் எப்படியிருக்கும்
என்பதைப் பாருங்கள் "
- என அழைப்பும் விடுத்தார்.
அதே படத்தில்,
" உதயசூரியன் உன் வரவு -
உலகம் யாவையும் உன் உறவு.
ஆலமரம் போல நீ வாழ - அதில்
ஆயிரம் பறவைகள் இளைப்பாற
காலமகள் உன்னை தாலாட்ட - அந்த
கருணையை நாங்கள் பாராட்ட.. "
- என்று தன்னையும் முன்னிறுத்திக் கொண்டார்.
அன்பேவா (1966) படத்தில் " உதயசூரியனின் பார்வையிலே; உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே...." என்பார். ( ஆனால் சென்சார் காரணமாக அது 'புதிய சூரியன்' என்றே பாட்டு ரிக்கார்டில் வரும்) கூடவே, " இவர் வரவேண்டும்; புகழ் பெற வேண்டும் என்று ஆசைத் துடிக்கிறது.." என்ற வரிகளும் - எம்.ஜி.ஆரின். குளோசப் ஷாட்டுடன் வரும்.
நம்நாடு படத்தில் குளோப்ஷாட்டில் ஒரு டயலாக்:
" எனது முதலே மக்களின் அன்பும், எனது நாணயமும் தான். அதுக்கு என்னைக்குமே மோசம் வராது. "
-
' திமுக என்கிற பதாகையை உயர்த்திப் பிடித்துக் கொண்டு அதன் மூலம் தான் முடிசூட்டிக் கொள்ளும் ரகசியத் திட்டம் வைத்திருக்கிறார்' ; ' வெகுஜனங்களிடம் திமுகவுக்குள்ள செல்வாக்கை அட்டை போல் உறிஞ்சியெடுத்து அதில் தன்னை வளர்த்துக் கொள்ள பார்க்கிறார்' என்றெல்லாம் எம்.ஜிஆருக்கு எதிராக திமுகவுக்கு உள்ளேயும் வெளியேயும் ஒரு சாரார் மத்தியில் நீண்டகாலமாகவே விமர்சனம் தொடர்ந்து வந்தது. இந்நிலையில் , அவர்களின் வாயில் கொஞ்சம் அவலை அள்ளி போடும் வகையில் வந்தான் ' எங்க வீட்டுப் பிள்ளை ' 1965ல்.
அப்படத்தில், " கண்களும் காவடி சிந்தாகட்டும்.." எனத் தொடங்கும் பாடலில்,
" என்ன செய்வோமென்ற நிலை மாறட்டும்- உன்னாலே
மக்கள் எண்ணம் நிறைவேறட்டும்"
-என்ற வரிகள் வரும்போது எம்.ஜி.ஆர் ' டைட் குளோசப்'பில் தெரிவார். அதோடு நின்றதா! கூடவே " நாடெல்லாம் உன்னைக் கண்டு புகழ் பாடட்டும்" என்ற வரிகள் வேறு.
இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல், " நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்.." என அவரே உரக்கச் சொல்வார். அவரே தொடர்வார்:
" ஒரு தவறு செய்தால் - அதை தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்
எதிர்காலம் வரும் ; என் கடமை வரும்
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்
இங்கு ஊமைகள் ஏங்கவும் ; உண்மைகள் தூங்கவும்
நானா பார்த்திருப்பேன்...."
இதற்கு முன் எந்த ஒரு திராவிட இயக்க நடிகரும் நினைத்துக் கூடப் பார்க்காத துணிச்சலான பிரகடனம் இது.
-
" சூரியன் உதிச்சதுங்க..."
1967 பிப்ரவரியில் தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தல் என்று அறிவிக்கப்பட்டதும் அரசியல் களம் பரபரப்பானது. அப்போது ஆட்சிப் பீடத்தில் இருந்த பக்தவச்சலம் தலைமையிலான காங்கிரஸ் அரசை வீட்டுக்கு அனுப்ப திமுக வரிந்துக் கட்டியது.
வெகுஜனங்களின் உயிர்நாடிப் பிரச்னையாக அப்போது நிலவிய அரிசி பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வை திமுக கிளறி விட்டது. 'ஒருரூபாய்க்கு மூன்று படியரிசி' என்று அண்ணா வாக்குறுதி வேறு அள்ளி வீசினார். மேலும், உணர்வுப் பிரச்னையாக 1965ல் இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் பலபேர் பலியான விவகாரத்தையும் திமுக கையில் எடுத்துக் கொண்டது.
' காமராஜர் அண்ணாச்சி; கடலைப் பருப்பு விலை என்னாச்சி ' - ' பக்தவச்சலம் அண்ணாச்சி ; அரிசி விலை என்னாச்சி ?' - ' கூலி உயர்வு கேட்டான் அத்தான் ; குண்டடிப்பட்டு செத்தான் ' என்றெல்லாம் ஜனரஞ்சகமாக கோஷங்கள் வேறு.
காங்கிரசுக்கு ஆதரவாகவும் தங்களுக்கு எதிராகவும் பெரியாரே களம் இறங்கிய போதும் திமுக கவலைப்படவில்லை.
முக்கியமான இந்நிலையில், தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன், அதாவது ஜனவரி 12ம் தேதி கட்சியின் முக்கியப் பிரச்சார பீரங்கியான எம்.ஜி.ஆர்., தனது சென்னை ராமாவரம் வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் திமுகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
(எம்.ஜி.ஆரை சுட்டதாக நடிகர் எம்.ஆர்.ராதா கைது செய்யப்பட்டு சிறை தண்டனையும் பெற்றார். இந்த சம்பவத்துக்கு சினிமாத் தொழில் தகராறு என்று ஒரு பக்கமும்; இல்லையில்லை உண்மையில் அரசியல் பின்னணி இதில் மறைந்திருக்கிறதென்று இன்னொரு பக்கமும் காரசார வதந்திகள், ஊகங்கள் கிளம்பி ஒரு கட்டத்தில் அடங்கியது என்பது வேறு விஷயம்)
ஆனாலும், துப்பாக்கி குண்டுகளை தொண்டையில் தாங்கி எம்.ஜி.ஆர். உயிர் பிழைத்தார். ஏழைகளுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்த தர்மம், எம்ஜிஆரின் உயிரைக் காப்பாற்றி
விட்டதென்ற இமேஜ் வலுப்பெற்று, 'மக்கள் திலகமாக' அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை மேலும் அதிகப்படுத்தியது. குண்டு காயம்பட்ட கழுத்தில் , பெரிய பேண்டேஜ் கட்டுடன் கைகூப்பி வணங்கியபடி எம்.ஜி.ஆர் ஆஸ்பத்திரியில் இருக்கும்
·போட்டோவை போஸ்டர்களாக அச்சிட்டு தமிழகம் முழுவதும் ஒட்டி பிரச்சாரம் செய்தது திமுக. (இத் தேர்தலில் திமுக அமோகமாக வென்று ஆட்சியை பிடித்ததற்கு எம்.ஜி.ஆரின் இந்த போஸ்டரும் ஒரு முக்கிய காரணம் என்பார்கள்).
அப்போதைய, பரங்கிமலைத் தொகுதியில் (பல்லாவரம்) போட்டியிட்ட எம்.ஜி.ஆர், ஆஸ்பத்திரியில் இருந்தபடி தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு போகாமலேயே சுமார்
25 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்று, முதன்முறையாக எம்.எல்.ஏ., ஆனார்.
இத்தேர்தலில் திமுக 173 இடங்களில் போட்டியிட்டு 138 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. காங்கிரசுக்கு 49 இடங்கள் தான். 'படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்' என்று சொன்ன பெருந்தலைவர் காமராஜரே தனது சொந்த விருதுநகர் தொகுதியிலேயே
தோற்று போகுமளவுக்கு திமுக அலை வீசியது 1967 தேர்தலில்.
சாமானியர்கள் சிலர் சேர்ந்து 1949ல் துவக்கிய ஒரு சாதாரண பிராந்தியக் கட்சி, சுமார் 18 ஆண்டுகளில் பாரம்பரியம்மிக்க ஒரு தேசிய கட்சியை வீழ்த்தி ஆட்சியை பிடித்தது.அண்ணாதுரை தலைமையில் 6-3-1967ல் திமுக அரசு அமைந்தது.
-
திமுக ஆட்சி அமைந்ததும் எம்.ஜி.ஆரை, அமைச்சர் அந்தஸ்துக்குச் சமமான
சிறுசேமிப்புத் துறை தலைவர் ஆக்கினார் முதலமைச்சர் அண்ணா. எம்.ஜி.ஆரின் பிரச்சார தொனியும் திமுக அரசு அமைந்ததும் மாறியது. தாக்குதல் பாணி போய், திமுக அரசின், முதலமைச்சர் அண்ணாவின் சாதனைகளை அருமைப் பெருமைகளை மக்களிடம் கொண்டு செல்லும் பணியில் (பிரச்சாரத்தில்) ஈடுபட்டார்.
கணவன் என்ற படத்தில் (1968) ஒரு பாடல். "அடியாத்தி. யாருக்கு நீ பேத்தி..." என்று தொடங்கும். அதில்:
" அதிகாரம் செய்தவனோ ஆட்டத்தை முடித்தான்.
அன்பு வழி சென்றவனோ கோட்டையைப் பிடித்தான்.
இது உழைப்பவரின் பொற்காலம், உலக ஏட்டிலே
இதை உணராத பேர்களெல்லாம் குப்பை மேட்டிலே..."
" நான் செல்லுகின்ற பாதை
பேரறிஞர் காட்டும் பாதை "
இளையோர் கூட்டம் தலைமைத் தாங்கும்
பூமியே புதிய பூமி " (புதியபூமி- 1968)
இந்த புதியபூமி படத்தில் கதாநாயகன் எம்.ஜி.ஆர் பெயர் கதிரவன். (உதயசூரியனை நினைவுக்கு கொண்டு வாருங்கள்). வில்லன் நம்பியாரின் பெயர் காங்கேயன்.(காங்கேயம் என்பது காளைமாடுகளுக்கு பெயர் பெற்ற ஊர். காளைமாடு சின்னம் அப்போது காங்கிரஸ்
கட்சியின் தேர்தல் சின்னம்). ஆக கிளைமாக்ஸில் நாயகனிடம் வில்லன் தோற்கும்போது உதயசூரியனிடம் காளைமாடு தோற்பதாக அர்த்தமாகிறது. கூடவே இந்த டயலாக்குகள் :
" கதிரவனுக்கு தான் இப்போதும் எப்போதுமே வெற்றி."
" கதிரவன் போன்றோரால் தான் நாடே புதியபூமியாகும்"
" நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடி தானுங்க
படியரிசி கிடைக்கிற காலத்திலே - நாங்க
படியேறி பிச்சை கேட்கப் போவதில்லே.
குடிசையெல்லாம் வீடாகும் நேரத்திலே - நாங்க
தெருவோரம் குடியேறத் தேவையில்லே.
சர்க்காரு ஏழைப் பக்கமிருக்கையிலே - நாங்க
சட்டத்திட்டம் மீறியிங்கே நடப்பதில்லே.."
- ' ஒளிவிளக்கு ' (1968). அப்போதைய முதலமைச்சர் அறிஞர் அண்ணா கொண்டு வந்த ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி திட்டம் மற்றும் குடிசைகளை கட்டட வீடுகளாக மாற்றும்
திட்டம் ஆகியவற்றிற்கு தான் இப்படி பப்ளிசிட்டி.
-
-
-
-
-
-
-
-
-
-