http://oi63.tinypic.com/aze2w1.jpg
Printable View
வசந்த மாளிகை 1988 ஆம் ஆண்டு மறுவெளியீட்டு பத்திரிகை விளம்பரம்.
http://oi66.tinypic.com/314q7t1.jpg
பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் பணத்திற்காகவும், முகஸ்துதிக்காகவும் யாரையும் தனிப்பட்ட முறையில் புகழ மாட்டார் என்பது தமிழக மக்கள் அனைவருக்குமே நன்கு தெரிந்த விஷயம்...தான்...
அப்பேற்பட்ட கவிவேந்தன் பாரதிதாசன் அவர்கள் 29.04.1959 ல் அவர் நடத்தி வந்த ''குயில்'' என்ற மாத இதழில் நமது கலியுக கர்ணனின் கொடைத் தன்மையை பாராட்டி கவிதை புனைந்திருக்கிறாரெனில்...
இதை விடவா, நமது உத்தம தலைவரின் கொடைத்தன்மையை நாம் நன்கு அறிந்து கொள்வதற்கும்...
எதைப்பற்றியும் ஒன்றுமே தெரிந்து கொள்ளாமல் கிணற்றுத் தவளைகளை போல புறம் பேசும் மடையர்களுக்கு சரியான சவுக்கடி கொடுக்கவும் ஓர் உண்மையான சாட்சி வேண்டும்...
புரட்சிகரமான கவிஞரின் பேனாவிலிருந்து வெளிவந்த இதயத்தை வருடும் இன்பக்கவிதை இதோ தங்களின் இரு விழிகளுக்கு சமர்ப்பணம் :
பள்ளியில் மாணவர்கள்
பகலுண வுண்ணும் வண்ணம்...
அன்று ஓர் இலக்கம் ஈந்த
அண்ணல் கணேசர் இந்நாள்...
புள்ளினம் பாடும் சோலை
மதுரையின் போடி தன்னில்...
உள்ளதோர் தொழிற் பயிற்சி
பள்ளிக்கும் ஈந்து வந்தார்...
இன்றீந்த வெண் பொற்காசுகளோ
இரண்டரை இலக்கமாகும்...
நன்றிந்த உலகு மெச்சும்
நடிப்பின் நற்றிறத்தால் பெற்ற...
குன்றொத்த பெரும் செல்வத்தை
குவித்தீந்த கணேசனார் போல்...
எந்தெந்த நடிகர் செய்தார்..?
இப்புகழ் யாவர் பெற்றார்..?
இக்கவிதையில் மகாத்மா காந்தியடிகளுக்கு மட்டுமே நாம் அனைவரும் பயன்படுத்தக்கூடிய ''அண்ணல்'' என்ற பெருமைமிகு கௌரவ பட்டத்தை...
கொஞ்சமும் தயங்காமல் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் நமது நடிகர் திலகத்தின் புகழ் பாடும் கவிதையில் பயன்படுத்தியுள்ளார் என்றால் இதைவிட ஒரு மாபெரும் பெருமை வேறு என்ன இருக்க முடியும்...
மேலும், இதே கவிதையின் இறுதியில் அவர் கேட்கின்றார்...
இதுபோல், எந்தெந்த நடிகர் செய்தார்..?
அதாவது, அரசு பள்ளிகளில் மதிய உணவு திட்டம் பெருந்தலைவர் காமராஜரால் தொடங்கப்பட்டபோது முதல் நபராக ஒரு லட்சம் கொடுத்த நமது அண்ணல் கணேசனார் அவர்கள்...
இன்று மதுரையின் போடியில் உள்ள தொழிற்பயிற்சி பள்ளிக்கு (ஐடிஐ) வந்தபோது அதே மதிய உணவு திட்டத்திற்காக இன்று அவர் கொடுத்த தொகையோ இரண்டரை லட்சமாகும்...
உலகமே போற்றிப் புகழக்கூடிய நடிப்பாற்றல் பெற்ற கணேசனாரை போல வேறு எந்த நடிகரும் இவ்வாறு தான் உழைத்து சம்பாதித்த பணத்தை பள்ளி குழந்தைகளின் மதிய உணவு திட்டத்திற்காக...
இந்த அளவிற்கு உதவியதில்லை என்பதையே புரட்சிக்கவிஞர் இவ்வாறு கேள்வி நடையில் கேட்டதோடு நின்று விடாமல்...
புவியில் இப்புகழ் யாவர் பெற்றார்..?
அதாவது, இந்த பூமியில் வேறு யாராவது இவ்வாறு மாபெரும் புகழ் பெற்றார்களா என்று தனது நெஞ்சத்து கவிதையை ஆச்சரியமாகவே நிறைவு செய்கிறார் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள்...
இதிலிருந்து ஒரு விஷயம் மட்டும் நன்றாக தெரிகிறது...
தமிழகத்தையும், தமிழக மக்களையும் மனதார நேசித்த நமது உத்தம தலைவர் வாரி வழங்கிய பலவகையான நன்கொடைகளை...
அன்றிலிருந்து இன்று வரை அரசியல் வியாதிகளின் கைக்கூலியாக விளங்குகின்ற நமது ஊடகங்கள் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்து வருகின்றனர் என்பது மட்டும் தெள்ளத் தெளிவாக நிரூபணமாகிறது...
எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பாராமல் நடிகர் திலகத்தின் புகழை இந்த பாரதத்தாய் திருநாட்டில் உயர்த்தி பிடித்து கொண்டாடி வரும் உண்மையான அவருடைய உயிருக்குயிரான ரசிக பிள்ளைகள் இருக்கும் வரை...
நடிகர் திலகமும் உத்தம தலைவர் என்ற உயர்ந்த பெயரோடு இப்பூவுலகில் நிரந்தரமாக என்றென்றும் வாழ்ந்து கொண்டேதான் இருப்பார்...
நன்றியுரை : இத்தகவலை நான் அறிய காரணமான எனதருமை உடன் பிறவா
அன்பு சகோதரர் மதுரையைச் சேர்ந்த
திரு. G.லட்சுமணன் அண்ணனுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகின்றேன்...
வாழ்க தலைவர் சிவாஜி...
வளர்க அவருடைய பெரும் புகழ்...
http://oi65.tinypic.com/2uohroy.jpg
நன்றி M V Ram Kumar
உலகில் எத்தனையோ பேர் கர்ணன் என்று தம்மை தாமே கூறி கொள்வார்கள்.....ஆனால் உண்மையான கர்ணன் நம் தெய்வம் நடிகர்திலகம் அவர்கள்....இவர் செய்த கல்வி பணிகள் ஏராளம்.....அ...துதான் அவர் மனதின் தாராளம்.......எத்தனையோ பேர் கொடை வள்ளல் என்று போட்டோவுக்கும்......மீடியாவுக்கும் போஸ் கொடுக்குறாங்க.......உண்மையான வள்ளல் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
"1....1958 ஆம் ஆண்டு முதல் 1961 வரை வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் நடித்து.(112 முறை) அதன் மூலம் வசூலான தொகையில் நாடகச்செலவு,உறுப்பினர்கள் சம்பளம் போக ரூபாய் 32 இலட்சத்தை பல கல்லூிகளுக்கும்,நூலகங்களுக்கும் கொடுத்தார்.
2....1968 ஆம் ஆண்டு மயிலாப்பூரிலுள்ள விவேகானந்தா கல்லூரியின் கட்டிட நிதிக்காக ரூ.40,000 அளித்தார்.
3....திருச்சியில் உள்ள ஜமால் முகம்மது கல்லூரி கட்டிட நிதிக்காக ரூ.1,30,000 வியட்நாம் வீடு நாடகம் நடத்தி,1968 ஆம் ஆண்டு கொடுத்தார்.
4....1972 ஆம் ஆண்டு காஷ்மீர் மாநில முதலமைச்சர் மீர்-காசிம் அவர்களிடம் அம்மாநில மாணவர்கள் கல்வி நிதிக்காக ரூ.25,000 கொடுத்தார்.
5....மதுரையில் சரஸ்வதி பள்ளி இடிந்த போது நேரில் சென்று ஆறுதல் அளித்தவுடன் ரூ.1,00,000நன்கொடையும் அளித்தார்.
...........பழக்கடை ராஜா.........
நன்றி Sekar
சென்ற ஜூன் மாதம் 21 அன்று வசந்த மாளிகை டிஜிட்டலில் ரிலீஸானது,
Opening collection Record என்ற புதிய படங்களுக்கு இனையான சாதனையை நிகழ்த்தி எக்காலத்திலும் நடிகர் திலகம் திரைப்படங்கள் மட்டுமே வசூல் சாதனை நிகழ்த்தக் கூடியவை என நிரூபணம் செய்தது,
இந்த சாதனையை ஜீரணிக்க முடியாத ஒரு கும்பல் ஒரு பல்லவியை முகநூல் குழுக்களில் பாடிப் பார்த்தது, அதாவது புதிய படங்கள் ஏதும் ரிலீஸ் ஆகாததால் வசந்த மாளிகை வசூலை குவித்தது என்று,
அனைவருக்கும் புரிய வைக்கும் கடமை நமக்கு இருக்கிறது,
... வசந்த மாளிகை ரிலீஸான நாளிலிருந்தும் அந்த வாரத்தில் ஓடிக்கொண்டிருந்த தமிழ் திரைப்படங்களையும் கணக்கில் கொண்டால் இன்று வரை 23 திரைப்படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கிறது,
ஜூன் 21 அன்றும் ரிலீஸானவையும் முன்னரே ஓடிக்கொண்டிருந்தவையும்,
1) தும்பா 2) பக்கிரி 3) மோசடி
4) சுட்டுப் பிடிக்க உத்தரவு 5) கேம் ஓவர் 6) நெஞ்சமுண்டு நேர்மையுண்டு
இரண்டாவது வாரம் ஜூன் 27/2019,
7) சிந்துபாத் 8) ஜூவி 9) தர்ம பிரபு 10) ஹவுஸ் ஓனர்
மூன்றாவது வாரம் ஜூலை 05/07/19 ,
11) ராட்சஸி 12) களவாளி 2 13) காதல் முன்னேற்ற கழகம்
நான்காவது வாரம் 12 ஜூலை/19
14) போதை ஏறி புத்தி மாறி 15) வெண்ணிலா கபடி குழு 16) கூர்கா 17) கொரில்லா 18) ஆடை
ஐந்தாவது வாரம் ஜூலை 19/2019,
19) கடாரம் கொண்டான்
ஆறாவது வாரம் 26 ஜூலை 2019,
20) A1 21) சென்னை பழனி மார்ஸ் 22) டியர் காமரேட் 23) கொளஞ்சி .
மொத்தத்தில் இன்று வரை 23 புதிய படங்கள் வந்து போனபடி இருக்கிறது
வசந்த மாளிகை இன்று 42 வது நாளில் இருக்கிறது, வேறு எந்தப் புதிய படமும் 15 நாட்கள் கூட ஓடவில்லை,
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...e7&oe=5DE5E595
நன்றி Sekar
.................................................. .......................
அவர்களை அறியாமலே அவர்கள் வாயிலிருந்து வசந்த மாளிகை வசூலை குவிக்கின்றது என்ற உண்மை வெளிவந்துவிட்டது.Quote:
இந்த சாதனையை ஜீரணிக்க முடியாத ஒரு கும்பல் ஒரு பல்லவியை முகநூல் குழுக்களில் பாடிப் பார்த்தது, அதாவது புதிய படங்கள் ஏதும் ரிலீஸ் ஆகாததால் வசந்த மாளிகை வசூலை குவித்தது என்று,
சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை மற்றும் வேலம்மாள் மருத்துவமனை
இணைந்து நடத்தும்
இலவச பொது மருத்துவ முகாமிற்காக...
... 5 கிராமங்களில் வைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான விளம்பர பேனர்....
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...fa&oe=5DECAED7
நன்றி Sundar Rajan
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...cc&oe=5DEBFC43
Thanks Nadigarthilagam Sivaji Fans
NT movies released in the month of August
1) குங்குமம் 02 1963
2) மன்னவன் வந்தானடி 02 1975
3) மர்ம வீரன் 03 1956
4) நிறைகுடம் 08 1969
5) நான் வாழவைப்பேன் 10 1979
6) ஜீவன தீராலு 12 1977
7) சுமங்கலி 12 1983
8) மூன்று தெய்வங்கள் 14 1971
9) முதல் குரல் 14 1992
10) சாரங்கதாரா 15 1958
11) ராமன் எத்தனை ராமனடி 15 1970
12) எழுதாத சட்டங்கள் 15 1984
13) முதல் மரியாதை 15 1985
14) மகா கவி காளிதாஸ் 19 1966
15) மரகதம் 21 1959
16) என் மகன் 21 1974
17) மாடி வீட்டு ஏழை 22 1984
18) மருதநாட்டு வீரன் 24 1961
19) சாணக்ய சந்திரகுப்தா 25, 1977
20) கூண்டுக்கிளி 26 1954
21) தூக்குத் தூக்கி 26 1954
22) மங்கையர் திலகம் 26 1955
23) தவப்புதல்வன் 26 1972
24) தாயே உனக்காக (கெளரவ தோற்றம்) 26 1966
25) ஜல்லிக்கட்டு 28 1987
26) கிருஷ்ணன் வந்தான் 28 1987
27) என் ஆசை ராசாவே 28 1998
28) ஸ்கூல் மாஸ்டர் ஹிந்தி 1959
29) மக்கள ராஜ்ஜிய (கன்னடம்) 1960
சிவாஜி நாட்டுக்கும் மக்களுக்கும் செய்த நற்காரியங்களில் சில உதாரணங்கள்.
( வெளிச்சத்திற்கு வராத மறந்து விட்ட , மறைக்கப்பட்ட உண்மைகள். இதை உலகமும் இன்றைய தலைமுறைய...ினரும் அறியவே இப்பதிவு )
காமராஜரின் மதிய உணவு திட்டத்திற்கு ரூபாய் ஒரு லட்சத்தை அன்றைய பிரதமர் நேருவிடம் வழங்கினார்.மதுரை போடி தொழிற்பயிற்சி பள்ளிக்கு ரூபாய் இரண்டரை லட்சமும் சிவாஜி நன்கொடையாக வழங்கினார். அத்தொகையின் தற்போதைய பணமதிப்பு நகர்புற நில மனை மதிப்புப்படி ரூபாய் 25 கோடிக்கும் மேலாகும்.
சிவாஜியின் கொடைத்திறமையை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 1959 ஏப்ரல் 29ஆம் தேதி வெளியான "குயில்" ஏட்டில் புகழ்ந்து பாடிய கவிதை இதோ....
"பள்ளியில் மாணவர்கள்
பகலுண வுண்ணும் வண்ணம்
அன்று ஓர் இலக்கம் ஈந்த
அண்ணல் கணேசர் இந்நாள்
புள்ளினம் பாடும் சோலை
மதுரையின் போடி தன்னில்
உள்ளதோர் தொழிற்பயிற்சி
பள்ளிக்கும் ஈந்து வந்தார்
இன்றீந்த வெண்பொற் காசுகளோ
இரண்டரை இலக்கமாகும்
நன்றிந்த உலகு மெச்சும்
நடிப்பின் நற்றிறத்தால் பெற்ற
குன்றொத்த பெருஞ் செல்வத்தை
குவித்தீந்த கணேசனார் போல்
எந்தெந்த நடிகர் செய்தார் ?
இப்புகழ் யாவர் பெற்றார்?"
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
தவிர அவரது மனைவி கமலா அம்மாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம் பாகிஸ்தான் யுத்த நிதியாக 400 சவரன் தங்க நகைகளையும் வழங்கினார். சிவாஜி 100 சவரன் தங்க பேனாவை நன்கொடையாக வழங்கினார். ஆதாரம்: இந்து தமிழ் திசை நாளிதழ் வெளியிட்ட https://youtu.be/zojOvJiL7EU பதிவில் 7.10 முதல் 9 நிமிடம் 30 நொடி வரை காண்க.
வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை 112 முறை நடத்தி பல லட்ச ரூபாய்களை வசூலித்து தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளார. வயலூர் மருகன் கோயிலுக்கு திருமுருக கிருபானந்த வாரியாரிடம் நிதி வழங்கியது, தாம்பரம் மருத்துவ மனைக்கு நிதி உதவியது என பட்டியல் நீளும் மகாராஷ்டிரா பூகம்ப நிதியாக ரூபாய் ஒரு லட்சத்தை Y B சவான் அவர்களிடம் (இன்றைய பணமதிப்பு ரூ 7கோடி) வழங்கினார். பூனாவில் வீரசிவாஜிக்கு சிலையும், உலகத்தமிழ் மாநாடு சென்னையில் நடந்தபோது மெரீனா கடற்கரையில் திருவள்ளுவருக்கு சிலையும் நிறுவினார். தவிர கயத்தாரில் வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிட்ட இடத்தை விலைக்கு வாங்கி அங்கே கட்டபொம்மன் சிலையை சிவாஜி நிறுவினார். அச்சிலையை 16-07-1970 அன்று திரு. நீலம் சஞ்சீவரெட்டி எம்.பி தலைமையில் காங்கிரஸ் தலைவர் காமராஜர் எம்.பி திறந்து வைத்தார். ( https://youtu.be/-LaiDo51R3o பதிவில் 1.06 முதல் 1.27 வரை காண்க )சிவாஜி இந்நினைவிடத்தை சில வருடங்கள் பராமரித்து பின்னர் தமிழக அரசிடம் ஒப்படைத்தார். (இந்நினைவிடத்திலேயே தமிழக அரசும் மணிமண்டபம் கட்டியது. அதை 18-05- 2015அன்று முதல்வர் திறந்து வைத்தார்) இந்நினைவிடத்தின் மதிப்பு தற்போது பல கோடிகள் பெறும். சிவாஜி என்ன செய்தார் என்போருக்கு மேற்கண்ட சிலைகளின் பீடங்களில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களே பதில் கூறும். இதை மறுக்கவோ , மறைக்கவோ முடியாது. தமிழகத்தில் புயல்,மழை வெள்ளம் வந்த போது உணவு பொட்டலங்கள் வழங்கியதுடன் நாடகம் நடத்தி நிவாரண நிதி வழங்கியுள்ளார். இது தவிர நிறைய நிதி உதவிகளை விளம்பரம் இன்றி செய்துள்ளார். மேலும் முழு விவரமறிய http://anonymouse.org/…//www.mayyam.com/talk/showthread.php… பதிவு காண்க.
தேசபக்தி, தெய்வபக்தி, தமிழ் நேசம் , குடும்ப பாசம் இவற்றை திரைபடங்கள் மூலகமாக மட்டுமின்றி தானே முன்னுதாரணமாக இருந்து மக்களிடம் , குறிப்பாக இளைஞர்களிடம் சேர்த்துள்ளார்
சிங்கை
நன்றி:- Vijiya Raj Kumar
திருவிளையாடல் முழுக்க முழுக்க
பக்தி காவியம்....
கடவுள் இல்லை என்ற கொள்கை முழக்கம், தமிழகமெங்கும் பரவி கிடந்த நேரம்,
... திருப்பதிக்கு சென்று வந்த காரணத்தால் திமுகவிலிருந்து விலக்கப்பட்ட
சிவாஜி கடவுள் சிவனாக....
படம் வெற்றி பெறுமா என்ற கேள்வி.....
ஆனால்,
சிவாஜியை சிவனாக, கடவுளாக
மக்கள் ஏற்றுக் கொண்டனர்.
பட்டி தொட்டி எங்கும் மாபெரும் வெற்றி....
சரித்திரம் படைத்த வெற்றி...
அது, இன்றுவரை தொடர்கிறது,,,,,
காரணம் சிவாஜி... சிவாஜி.... சிவாஜி.....
இன்னும் தொடரும்....
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...30&oe=5DE9B270
Thanks Sundar Rajan
அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே,
வரும் 4.08.2019 அன்று சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை மற்றும் வேலம்மாள் மருத்துமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் ந...டைபெற உள்ளது.
முகாம் நடைபெறும் கடச்சனேந்தலில் இன்று வியாழக்கிழமை காய்கறி சந்தை என்பதால், சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் மக்கள் கூடுவார்கள், ஆதலால் நாங்கள் ஏற்கனெவே முடிவு செய்தபடி நோட்டீஸ் இன்று மக்களுக்கு கொடுக்கப்பட்டது.
மாலை 4 மணிக்கெல்லாம் ரமேஷ்பாபு, நான், ரமேஷ்பாபு அவர்களின் புதல்வன் காமராஜ் மற்றும் அவனுடைய கல்லுாரி தோழர்கள் என ஐவரும் களத்தில் இறங்கினோம்.
நோட்டீஸ் வாங்கி பார்த்த அனைவரும், மிகவும் அருமையான பணி என பாராட்டுதலையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். இடையில் கிச்சு என்பரும் சேர்ந்து கொண்டார்.
கிட்டத்தட்ட 2000 நோட்டீஸ்கள் கொடுக்கப்பட்டது, கிட்டத்தட்ட 5 மணி நேரம் நோட்டீஸ் கொடுத்தோம். உடல்வலி எடுத்தாலும், பொதுமக்களின் வாழ்த்துக்கள், உடல்வலியையும் போக்கிவிட்டது.
இது, மக்களிடம் ஓட்டு வாங்குவதற்காக செய்யப்படும் நிகழ்ச்சி அல்ல......
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் ஆசைப்படி, எண்ணப்படி மக்கள் சந்தோசமாக இருக்க வேண்டும். என்ற ஒரே நோக்கத்தோடு தான்...
மக்கள் பணி தொடரும்....
சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை.
தலைவர் நா.ரமேஷ்பாபு செயலாளர் கா.சுந்தரராஜன்
http://oi68.tinypic.com/550200.jpg
Thanks Sundar Rajan
மதுரை.கடச்சனேந்தல்
(அழகர்கோவில்ரோடு)
R..C.school.
பஸ்டூட்.44
http://oi66.tinypic.com/dywq2u.jpg
Thanks Sivaji Palanikumar
"என்றும் எதிலும் "கர்ணன்" என புகழாரம் சூட்டி,
நாங்கள் 7 ஆண்டுகளுக்கு முன்பு டிஜிட்டல் செய்ததை, இன்றும் மறக்காமல் "Trend of re release in digital " என வெளியிட்ட Times of India ஆங்கில நாளிதழுக்கு நன்றி.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...fa&oe=5DA2B247
Thanks Divya films Chokkalingam