https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...c6&oe=5ECB79D2
Printable View
அரங்கத்தை நிர்மாணிக்க ஒரு பெருந்தொகையை நன்கொடையாக அளித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வைத்து அரங்கத்தை திறந்தவர்களுக்கு நன்றி நன்றி....
ஆனால் அதற்கு பின்பு வந்தவர்கள் இந்த கல்வெட்டை பராமரிக்கலாமே எழுத்துக்கள் கூட சரியாக தெரியவில்லையே?.......
எழுத்துக்களின் மீது வெள்ளை பெயிண்ட் தடவினால் கூட போதுமே..........
#அதே போல்
விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் என்ற ஊரிலே கால்நடைகளுக்கு மருத்துவமனை கட்டுவதற்காக சொந்தமாக இடம் வாங்கி அதிலே தன் அன்னையார் பெயரிலே கட்டிடமும் கட்டிக்
கொடுத்தார்....,.
சரியான பராமரிப்பு இல்லாமல் கட்டிடம் சிதிலமடைய எத்தனையோ போராட்டங்களுக்கு பிறகு அதே இடத்தில் அரசு சார்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது........
அதில் நடிகர் திலகத்தின் பெயரும் அன்னையார் ராஜாமணியம்மாள் பெயரும் முழுவதுமாக மறைக்கப்பட்டு விட்டது.......
நடிகர் திலகத்தின் வள்ளல் தன்மையை கைகளால் மறைக்கப் பார்க்கும் ஆட்சியாளர்களை எண்ணி பரிதாபப் படுகிறேன்............
கீழடி போல்....... நாளைய வரலாற்று ஆய்வாளர்களுக்கு ஆய்வு செய்வதற்கு ஒரு நல்ல விஷயங்கள் இருக்கிறது........
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...2a&oe=5ECA37A4
நன்றி Luxmanan Luxmanan
.................................................. .............
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...ee&oe=5EC99B02
அதில் நடிகர் திலகத்தின் பெயரும் அன்னையார் ராஜாமணியம்மாள் பெயரும் முழுவதுமாக மறைக்கப்பட்டு விட்டது.......
நடிகர் திலகத்தின் கொடை விபரங்களை மறைப்பதன்மூலம்தான் மா கோ ராவை வள்ளலாக முன்நிறுத்த முயுல்கிறார்கள்
அண்ணன் ஒரு கோவில் தென் ஆப்பிரிக்கா வில் முதல் முறையாக திரையிடப் பட்ட தமிழ் திரைப் படமாகும
நன்றி : The First time record is 1977 released Sivaji Productions, Annan oru kovil. https://t.co/uFWjMzhzuv
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...aa&oe=5ECC32C2
Thanks Raja Lakshmi
நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் நடிகர் திலகம்
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...80&oe=5ECA3CA8
Thanks Lakshman R
தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களில் பல வகைகளில் ஏராளமான உதவிகளை செய்திருக்கிறார் நடிகர் திலகம்
இது போன்ற செய்திகள் முகநூல் வாட்ஸ் ஆப் மூலம் தான் பெருமளவில் தெரிய வந்தபடி இருக்கிறது
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...2f&oe=5ECB419F
Thanks Sekar
மனிதநேயமிக்க மனிதர் சிவாஜி -- குகநாதன்
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...8d&oe=5EC9D316
'கொண்டுவந்தால் தந்தை'....கொண்டு வந்தாலும்,வராவிட்டாலும் தாய்'....'சீர் கொண்டு வந்தால் சகோதரி'..... 'கொலையும் செய்வாள் பத்தினி''...உயிர் காப்பான் தோழன்'
இந்த வாக்கியங்கள் கதாநாயகனின் வாழ்க்கையில் எப்படி உண்மையாகியது என்பதை சொல்லும் கதை. ¶
நாளை 27/04/2020 காலை 10.00 a.m. மணிக்கு ராஜ் டிஜிட்டல் பிளஸ் டி.வி.யில் நடிகர்திலகம் நடித்த " தூக்குதூக்கி " . ¶
படத்தை காண தவறாதீர்கள். ¶
சிவாஜி, பத்மினி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
'பாலினும் வெண்மை பனியினும் மென்மை..பச்சை இளங்கிளி மொழி நீ சொல்வது உண்மை...பாவிகள் நெஞ்சம் உரைத்திடும் வஞ்சம்...உண்மை என்று சொல்வதற்கு தெய்வமும் அஞ்சும்...தேன் என்ற சொல் என்றும் தேனாகுமோ
தீ என்று சொன்னாலும் தீயாகுமோ ...'
நாளை 27/04/2020 மதியம் 2.30 p.m. மணிக்கு மெகா 24 டி.வி.யில் நடிகர் திலகம் நடித்த படம் " கை கொடுத்த தெய்வம்"
சிறந்த வெற்றி குடும்ப படத்தை காண தவறாதீர்கள். ¶
சிவாஜி சார், சாவித்திரி, S.S.R. மற்றும் பலரும் நடித்துள்ளனர்
'வளர்த்த கடா முட்ட வந்தால்...வைச்ச செடி முள்ளானால்...போன ஜென்ம பாவமடி... அம்மாளுதொட்டினிலே பாம்பிருந்தால் தோளிலே புலி கிடந்தால்...பெத்தவங்க தலையெழுத்து அம்மாளு...'
நாளை 27/04/2020 - இரவு 07.30 மணிக்கு வசந்த் டி.வி. யில் நடிகர் திலகம் நடித்த " கல் தூண் " .
வெற்றி படத்தை காண தவறாதீர்கள். ¶
இந்த படத்தில் நடிகர் திலகம், கே.ஆர். விஜயா, திலக் மற்றும் பலரும் நடித்து உள்ளனர்.
சிவாஜி கணேசனை ஏமாற்றிய பொண்மனம்
( வி கே ராமசாமியின் சுயசரிதை)
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...31&oe=5ECD4F26
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...01&oe=5EC9E207
பொண்மனத்தாரின் நிஜமுகம் (1)
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...3e&oe=5ECAA9CE
பொண்மனத்தாரின் நிஜமுகம் (2)
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...bb&oe=5EC9EEAD
நடிகர் திலகம் பிறந்த நாள் விழா
பேரணி
வீடியோவிலிருந்து கிளிப்
15 மைல் தூர அளவிற்கு பேரணி நீண்டது என செய்தி
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...bf&oe=5ECC5959
Thanks Sekar
இந்த செய்தி பேப்பர் பக்கத்தில் ஏராளமான செய்திகள் அடங்கி இருக்கிறது,
1) செவாலியே விருது பெறும் நடிகர் திலகம் சிவாஜிக்கு நினைவுப் பரிசாக விழாக் குழுவினர் 30 கிலோ எடையுள்ள வெள்ளி மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட வீர சிவாஜி சிலையை வழங்குகின்றனர்,
சிலை உருவாக்கப்பட்ட மொத்த செலவையும் இசைஞானி இளையராஜா ஏற்றுக் கொண்டார்,
2) நன்றி உரை நிகழ்த்திய நடிகர் திலகம் ரூபாய் 2 லட்சம் நன்கொடையை அளித்தார்,
3) சிறந்த சினிமா கலைஞர்களுக்கு "சிவாஜி விருது" முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
4) சென்னை போக் ரோட்டுக்கு " செவாலியே சிவாஜி கணேசன் சாலை" முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
5) திரைப்பட நகர் தொடக்க விழாவில் சிவாஜியை ஜெயலலிதா மதிக்கவில்லை
ரஜினி ஆவேசம்
6)செவாலியே விருது பெறும் சிவாஜியிடம் ஆசி பெறுகிறார் நடிகர் சரத்குமார்
7) விழாவிற்கு தலைமை ஏற்ற முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு சால்வை அணிவித்தார் லதா ரஜினிகாந்த்
8) முன்னணி நடிகர் நடிகைகள் ஏராளமானவர்கள் விழா மேடையில் அமர்ந்திருக்கும் காட்சி,
மொத்தத்தில் இதுவரை இந்த விழாவை விட பிரமாண்டமான விழா நடைபெறவில்லை,
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...5e&oe=5ECE1724
Thanks ..Sekar
'உத்தமன்' பற்றிய உறங்கா நினைவுகள்.
************************************************** ******************
'உத்தமன்' (26.06.1976) வெளியீட்டு தினத்தன்று ரசிகர் ஷோ செல்ல முடியாத ஒரு சூழ்நிலை. அன்று குடும்பத்துடன் ஈவ்னிங் ஷோதான் செல்ல முடிந்தது. கடலூர் ரமேஷ் திரையரங்கில் ரிலீஸ். அம்மா, சித்தி, அதிசயமாக அப்பா என்று உறவுகளோடு உத்தமனைப் பார்க்க பயணம். ரசிகர் ஷோ செல்ல முடியவில்லையே என்ற குறை மனதை அரித்துக் கொண்டே இருந்தது. மாலை மணி 5.30 க்கெல்லாம் அரங்கிற்கு சென்று விட்டோம். தலைவர் பனிக்கட்டிகளை மஞ்சுளா மீது வீசும் போஸ்டர்கள் என்னை மிகவும் கவர்ந்தன. தியேட்டர்களில் அவ்வளவாக பெரிய அலங்காரங்கள் இல்லை. சில கொடிகளும், மன்ற பேனர்களுமே மட்டும் தென்பட்டன. தலைவரின் கட்-அவுட்டுக்கு ஒரு பஞ்சு மாலை கட்சி சாயம் எதுவும் இல்லாமல் அணிவிக்கப் பட்டிருந்தது. சத்யத்தின் தோல்வி, அதற்கு முந்தய படங்களின் சுமாரான வெற்றிகள், பெருந்தலைவரின் மறைவு, அரசியல் சூழ்நிலைகள் என்று உத்தமன் சிக்கலான சமயத்தில் வெளிவந்ததால் ரசிகர்களின் கரை புரண்டோடும் உற்சாகம் கொஞ்சம் மட்டுப் பட்டிருந்தது. நாங்கள் வெளியூரில் இருந்ததால் படத்தின் ரிசல்ட்டும் சரியாகத் தெரியவில்லை.
ஈவ்னிங் ஷோவிற்கு பிரமாதமான கூட்டம் என்று இல்லை. ஓரளவிற்கு நல்ல கூட்டம். ஆனால் கிளாஸ் வகுப்புக்கள் உடனே நிரம்பியது. இரண்டாம் வகுப்பு டிக்கெட் அப்போது இரண்டு ரூபாய் எழுபத்தைந்து காசுகள் என்று நினைவு எடுத்து சென்று அமர்ந்தோம். come september 1961 இன் அருமையான மியூசிக் காதுகளில் தேனாகப் பாய, திரைச் சீலைகள் மேலே எழும்ப, சும்மா விசிலும் கைத்தட்டலும் பின்னி எடுக்க அதுவரை சற்று டல்லடித்திருந்த நான் நிமிர்ந்து உட்கார்ந்து பூஸ்ட் குடித்த சச்சின் போல் ஆனேன். நல்வருகை ஸ்லைட், புகை பிடிக்காதீர்கள், முன் சீட்டின் மீது கால் வைக்காதீர்கள், தினசரி 3 காட்சிகள் என்ற நான்கே சிலைட்கள். பின் தலைவர் ஸ்டில்களோடு 'இப்படத்தைக் காண வந்த ரசிகப் பெருமக்களுக்கு நன்றி' என்ற இருபதுக்கும் மேற்பட்ட சிலைடுகள் போடப்பட்டன. ஒவ்வொரு சிலைடுகளுக்கும் ஆராவாரம்... ஆர்ப்பரிப்பு... பூமாரி.
சிலைடுகள் முடிந்ததும் படம் போட்டு விட்டார்கள். கார்டூன்கள் டைட்டிலில் கலக்க எனக்கோ 'உத்தமன்' ஒரு நகைச்சுவை நிறைந்த படமோ என்று கூட சந்தேகம் வந்து விட்டது. காட்சி ஆரம்பமானதும் காஷ்மீரின் மலைச்சாரல் பகுதி சாலையில் தலைவரும், நாகேஷும் நடந்து வருவதை காட்டியவுடன் எனக்கோ கடுப்பானது. என்ன திடுமென்று தலைவரை ஒரு சுவாரஸ்யமில்லாமல் அறிமுகப்படுத்துகிறார்களே என்று கோபமாய் வந்தது. ஆனால் ஆர்ப்பாட்டத்துக்குக் குறைவில்லை. பின் தலைவரின் ஸ்டைலிலும், நடிப்பிலும் முற்றிலுமாக மனம் லயிக்க ஆரம்பித்தது. மஞ்சுளாவை வேறு ரொம்பப் பிடிக்குமாதலால் நகத்தைக் கடித்தபடியே அமர்ந்திருந்தேன். "மேரா மூஞ்சு கத்தரிக்கா மூஞ்சி... துமாரா மூஞ்சு முட்டகோஸ் மூஞ்சு" என்று காரில் தோழிகளுடன் வரும் மஞ்சுளாவை தலைவர் வாரும் போதே படம் சூடு பிடிக்கத் தொடங்கியது. தொடர்ந்து வரும் தலைவர், மஞ்சுளா சந்திப்பு 'கலகல' காட்சிகள் நன்றாகவே இருந்தன. "படகு படகு" பாடல் காட்சிகளில் சும்மா அதம் பறந்தது. அப்போது பின்னால் இருக்கும் குண்டுப்பையன் 'இளைய திலகம்' என்றெல்லாம் கவனிக்க நேரமேது? இப்போது அந்தப் பாட்டைப் பார்த்தால் பிரபுவையே கவனிப்பேன். அருமையாக ஸ்கேட்டிங் செய்வார். பாடலில் வரும் 'மரகத டோலி உடலோடு என் மனமென்னும் டோலி உன்னோடு' என்ற சுசீலாவின் குரல் முடிந்தவுடன் டாப் ஆங்கிளில் இருந்து ராட்சஸ மின்விசிறிகளின் காற்றில் மஜ்னுவின் உடைகள் மற்றும் தலைமுடி பறக்க, பரந்த மணற்பரப்பில் மண்டியிட்டு அமர்ந்து 'லைலா' என்று கதறும் போது அரங்கு கைத்தட்டலில் அலுங்கிக் குலுங்கியது. அதே போல சிகப்பு வண்ண ஆடையில் அணிகலன்கள் ஜொலிக்க சலீம் வரும் போது சப்தம் விண்ணைப் பிளந்தது. மெடிக்கல் காலேஜில் ஐஸ் கட்டியின் மீது படுத்துக் கொண்டு மஞ்சுளா கோஷ்டியிடம் தலைவர் பண்ணும் அட்டகாசங்கள், 'ஹரி ஓம் ரங்கஹரி' ஜாலி, மஞ்சுளா குளிரில் உயிருக்குப் போராடுகையில் தலைவர் உடலோடு உடல் சேர்த்து சூடு கொடுக்கும் காட்சி (இந்தக் காட்சியில் மட்டும்தாம்ப்பா சப்தமே இல்லை. ஒரே நிசப்தம். மாமா வேறு சப்தம் கொடுத்து எல்லோரையும் சப்தமில்லாமல் வேறு ஆக்கி விட்டார். அப்போது பார்க்கையில் ஒரு மாதிரி நெளியத்தான் வேண்டி இருந்தது), தொடர்ந்து வரும் "நாளை நாளை என்றிருந்தேன்", (விதவிதமான உடைகளில் நெற்றியில் புரளும் கற்றை முடி அழகனை அள்ளி அள்ளிப் பருகிய ரசிகர்கள். 'உத்தமன்' என்றாலே நினைவுக்கு வருவது அந்த புகழ் பெற்ற 'விக்'அல்லவா!) 'இரவுக்கும் பகலுக்கும்' பாடலை நினைவு படுத்தும் ஜோடி, வேக நடை, கழுத்தில் நீள் மஃப்ளர், பரந்த புல்வெளி என்று அமர்க்களமான அமர்க்களம்.
பின் வி கே ஆரின் சூழ்ச்சிகளால் தலைவருக்கும் மஞ்சுளாவுக்கும் ஏற்படும் பிரிவு, "நான் விரும்புறத உங்களால கொடுக்க முடியாது... நீங்க கொடுக்கறத என்னால வாங்கிக்க முடியாது"... என்று ராமசாமியிடம் சொல்லி விட்டு வேகமெடுக்கும் அந்த 'எங்கள் தங்க ராஜா' "வசந்தி என்னை மறந்திடு" பாணியின் சற்று வேறுபட்ட நடை நடந்து வரும்போதும், (கைத்தட்டல்களில் காது ஜவ்வுகள் கிழிந்தன) பின் குழந்தையை வி,கே.ஆரிடமிருந்து பெற்றுக் கொண்டு 'கேளாய் மகனே' என்று வளர்க்கும் போதும்,('மாஸ்டர் டிட்டோ 'வுடன் அருமையாக, மூக்கின் மேல் விரல் வைக்கும்படி நிஜ, ஸ்கேட்டிங் செய்தபடி வருவார்), மகனுக்கு 'போலியோ அட்டாக்' என்று டாக்டர் சொன்னதும் கதறித் துடிக்கும் போதும், 'தேவன் வந்தான்டி'பாடலின் அமர்க்களமான ஆடைகளுக்கும் ஸ்டைலுக்கும் ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ். அதே போல அருமையான சஃபாரிகளுடன் வித வித ஆங்கிள்களில் கலர் பு ஃல்லாக சோக வடிவமெடுத்து நன்கு சோபிக்கும் போஸ்களில் ஆரவாரக் கைத்தட்டல்களை காலமெல்லாம் அள்ளிக் கொண்டு போன, போகும் "கனவுகளே கனவுகளே"பாடல். ஹைகிளாஸ் ஆடியன்ஸின் அமோக ஆதரவு. பாடலின் வரிகள் சற்று புலப்பாடா விட்டாலும் தலைவரின் தோற்றத்திலேயே மட்டுமே மயங்கிச் சொக்கிய லோ-கிளாஸ் ரசிகர்கள் என்று ரசனையோடு அனைவரும் நன்கு ரசிப்பது புரிந்தது. படம் நன்றாகவே இருக்கிறது... ஓட்டத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்ற தைரியமும் பிறந்தது.
பாலாஜியின் அதிரடி பாத்திரமும் அருமையாகவே கையாளப்பட்டிருந்தது. இருந்தாலும் படம் கிளாஸாக இருக்கிறதே... 'C' சென்டர்களில் எடுபடுமா என்ற பயமும் இருந்தது. அந்தக் கவலையும் ஓரளவிற்கு தணிந்தது கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி மூலம். திணிக்கப் பட்டிருந்தாலும் விறுவிறுப்பான சண்டைகாட்சி, ஸ்கேட்டிங் துரத்தல்களும், தீப்பிழம்புகளுக்கு நடுவே பைக் துரத்தல்களும்,பேரல்கள் உருட்டலும், பார் விளையாட்டுக்களுமாய் நல்ல ரிச்சாகவே அமைந்து கடைநிலை ரசிகர்களின் பசிக்கு தீனி போட்டது அந்த சண்டைக் காட்சி. பின் தீயில் தலைவர் மாட்டிக் கொண்டு மயக்கமாகும் போது போலியோ கால்களை வைத்துக் கொண்டு மகன் அவரைக் காப்பாற்ற முயலும் போது பரபரப்போடு கூடிய மயான அமைதி. (மாஸ்டர் டிட்டோ தலைவரை வைத்து முடியாமல் இழுக்கும் போது கால்கள் வராமல் ஒத்துழைக்க மறுக்க தலைவர் ஸ்டைலிலேயே தன் கால்களைக் கைகளால் குத்திக் கொள்வது அருமை) பின் மகனுக்குக் கால் வந்து டாக்டர் பாலாஜியின் தயவால் தானும் நலமாகி மகனே தன் தந்தை தாய் இருவரின் திருமணத்தை இனிதே நடத்தி வைக்க முடிவு சுபம். அனைவரும் திருப்தியுடன் படம் முடிந்து வெளியே வந்ததைப் பார்க்க முடிந்தது.
பின் படம் நன்றாக இருப்பதாக செய்திகள் பரவத் தொடங்கியவுடன் நன்றாக பிக்-அப் ஆனது. ஆனாலும் ஹை கிளாஸ் ஆடியன்ஸ் அதிகம் குவிந்தனர். கிட்டத்தட்ட ஒரு மாதங்கள் ஒரே நிலையாக ஓடி நல்ல வெற்றியை கடலூரில் பெற்றார் நம் உத்தமன்.
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...f8&oe=5ECE4FDF
Thanks Vasu Devan
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...99&oe=5ECB8BBD
Thanks ..nilaa
மாமன்னன் இராஜ ராஜசோழனின்,திருநாட்டிலே அன்னை ராஜாமணிஅம்மையாரின் ஞானப்பிள்ளையாகப்பிறந்த உலக மகா கலையின் சிகரம் சிவாஜி கணேசன் அவர்கள் ஒரு மாபெரும் கொடைவள்ளல் என்பது சிலருக்கு தெரியாதவிஷயமாக இருக்கலாம்.வலதுகையால் கொடுப்பது இடதுக்கையிக்குத் தெரியக்கூடாது.அதுதான் தர்மம் என்தாகும்.சில நாதாரி ஊடகங்கள் இவர் செய்த உதவிகளை பத்திரிகை வாயிலாக தெரியப்படுத்தவில்லை.சில ஊதாரி ஊடகங்கள் நூறு ரூபாயை கொடுத்தவனுக்கெல்லாம் (தினத்தந்தி)போன்ற பத்திரிக்கைகள் ஒருலட்சமாக அச்சடித்து அவர்களது வயிற்றுப்பொழப்பை ஓட்டினார்கள்.அதற்கு துனைநின்ற அரசியல் வாதிகளும் இருந்தனர். நினைவிற்காக சொல்வது,ஆருயிர் அண்ணன் அவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தைநடித்து முடித்தவுடன் கட்டபொம்மனை தூக்கிலிட்ட கயத்தாரில் ஓர் இடத்தை வாங்கி அன்றைய ஆளுனர் சஞ்சீவி ரெட்டியின் தலைமையில் கர்மவீரர் காமராஜர் அவர்களின் திருக்கையால் சிலையைத்திறக்கவைத்து பெருமைப்படுத்தியவர் நம் ஆருயிர் அண்ணன் அவர்கள். சில காலங்கள் தானே பராமரித்து பிறகு முறையாக தமிழக அரசிடம் ஒப்படைத்த மாமேதையவர். ஆனால் யாருக்கு சிலைவைத்தால் மக்கள் போற்றுவர், யாருக்கு சிலைவைத்தால் மக்கள் தூற்றவர் என்பது நாடறிந்த உண்மை. இதுபோன்ற கொடவள்ளலாக ஒருவனும் இனி பிறக்கபோவதில்லை.சுயவிளம்பரத்திற்காக செய்பவர்களை எங்கள் ரசிகபெருமக்கள் மதிக்கபோவதுமில்லை. ஜெய்ஹிந்த். வாழ்க அண்ணின்புகழ்.
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...b3&oe=5ECCF502
Thanks G , Selvaraj
வீரபாண்டிய கட்டப்பொம்மன்♦♥வெளியான காலகட்டத்தில்♥♦தெருக்கூத்து நடத்தியும் ♦♥நாடகங்கள் அரங்கேற்றியும் ♦♥வசூலான தொகையான(♥ஏறத்தாழ36லட்ச ரூபாய்♥)யுத்த நிவாரண நிதியாக வழங்க முடிந்த சிவாஜியினால்♦♥ஊடகங்களுக்கு ஒரு முன்னூறு ரூபாய் பிச்சைப்போட விருப்பமில்லை ♦♥@@ அதனால் அவரது பெயர் கருமி(♥மனிதன் எதையோ பேசட்டுமே ♦மனசப் பார்த்துக்க நல்லபடி♥♦)
Thanks Thoppumani