What a composition.. Drums, chorous and IR voice..spellbounding
http://www.youtube.com/watch?v=si26A0IndEY
Printable View
What a composition.. Drums, chorous and IR voice..spellbounding
http://www.youtube.com/watch?v=si26A0IndEY
இப்படி விதவிதமான தாளக்கட்டு அமைப்புக்களை முயற்சித்து வெற்றிபெறுவதில் ராஜா முதன்மையானவர். இந்தப் பாடலுக்கே அச்சாணியாய் நான் கருதுவது அதன் ரிதத்தையே. நுட்பமான ஒன்று. So organic. அதுவும் சரணம் முடிந்து பல்லவி திரும்பும் இடம் அற்புதமான தருணம். இரு மலைகளுக்கு இடையே அந்தரத்தில் எழில்மிகு பாலம் ஒன்றை எழுப்புவதற்கு ஒப்பானது.
yeah, stunning album!:musicsmile:
in POONGAVANAM.... JANAKI Solo, rhythm changes too!
http://www.youtube.com/watch?v=eOmyVAFCi2g
படம்: அண்ணே அண்ணே
இயக்கம்: மௌலி
உருகினேன் உருகினேன் கண்ணனே மன்னனே
உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே
உருகினேன் உருகினேன் கண்மணி பொன்மணி
உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே
ஒ...உருகினேன்... உருகினேன்...
காதல் மோகம் கை கூடுமோ
கண்கள் எழுதும் கனவாகுமோ
ஏட்டில் எழுத்தில் இதுபோல் ஏது
உயிரில் உயிராய் இருப்பாள் மாது
உனையே கோடி கோடி ஜென்மம் சேருவேன்
(உருகினேன் உருகினேன்)
பாவை வடிவிலோர் பட்டு பூச்சி பறந்தே நெஞ்சில் விழுந்ததோ (2)
மானோ மீனோ கண் விழி இந்த பெண் விழி
ஏதோ எதுவோ சொல்லுதே என்னை கொல்லுதே
உனக்காக பிறந்தேன் எனை நானே மறந்தேன்
மடி மேல் இருத்தி உனை தாலாட்ட வா?
(உருகினேன் உருகினேன்)
------------------------------------------------
ஜானகியும் பாலசுப்ரமணியமும் அமர்க்கள படுத்திய ஆனால் அதிகம் பேசபடாத ஒரு பிரமாதமான பாடல்.
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம், 0:58 - 1:03 மற்றும் 2:43 - 2:48 நேரத்தில், அதாவது .. சில நொடிகளே வரும் ஆக்ரோஷமான வயலின் பிட் என்னை உலுக்கி எடுக்கும்... இன்னும் சில நொடிகள் இந்த இன்பம் நீடிக்காதா என்று ஏங்க வைக்கும் வெகு சில விஷயங்களில் இதுவும் ஒன்றாகி போனது எனக்கு.
முதலாவது சரணம் அழகிய ரொமாண்டிக் டூயட் என்றால் இரண்டாவது சரணம் ஒரு வகை கிக்கோடு 80 களின் டிஸ்கோ ஆடுவது போல். இடை இசையும் அப்படியே. நிச்சயம் படத்தின் இயக்குனர் மௌலி இப்படி தான் வேண்டும் என்று கேட்டிருக்க மாட்டார். அவரை பொறுத்தவரை ஒரு டூயட் பாடல் வேண்டும், அவ்வளவு தான். ஏன் இந்த பாடலுக்கு இரு வேறு சரணங்களை ராஜா சார் கொடுத்திருக்கிறார் என்று அவருக்கோ, மௌலிகோ இன்றைக்கு ஞாபகம் இருக்க வாய்ப்பில்லை.
http://www.youtube.com/watch?v=uQ-xmRre0q8
This song is not in my top 30 Raja songs, I think, and yet it's a masterpiece. Speaks for the depth of his work over the years:
http://www.youtube.com/watch?v=ByFuQnWgKWQ
Thanks a lot for that post, rajaramsgi. What a brilliant composition! Either I haven't heard it in a long time or not at all...never too late.
RAJA SANGEETHAM from my college days!:musicsmile:
Rag suddhasaveri alaap in sensuous Janu's vocal followed by Violin counterpoint with flute prelude for folkish ilayaraja melody maanada... mudhal vasantham!
Bewitching interludes with strings, flute, bass guitar & humming with tabala jadhi!
http://www.youtube.com/watch?v=KqzyJicMV-s
Priyanka's voice is so pristine. I never seen so far an attempt reaching closer to the standard S Janaki set in light music. Priyanka.
http://www.youtube.com/watch?v=Q3p57B5K8I4
May God bless this girl in reaching to those heights!
:clap:
One of the ever green and epic compositions from Raja.
Thank you for this HD quality song which was my college fav too. Raja shows a new facet of SuddhaSaveri in "mAnAda kodi" . Janaki's vocals is haunting as well. Though the movie was a mid 80's one, when I listen to the interludes, they seem like early Raja ludes during days of "Kavikuyil" or "16 vayadhinilE" or "kizhakkE pOgum rayil" That adds to the allure.
yeah.. bewitching composition!
ADHU ORU KANAAKAALAM, I was listening while driving this lunch hr.
எங்கிருந்தா ள் இது வரை
எனை தவிக்க விட்டு
எதற்கு வந்தாய் ,
தவித்திடும் துயர் தொடைக்க வந்தாயோ
நடப்பதெல்லாம் எழுதிய படி நடக்கிறதோ
இருவருக்கும் பொறி ந் திடும் படி எழுதியதாரோ
கேட்க்குதே கேட்க்குதே
கோயில் பொன் மணி ஓசைகள்
ஓஹோ...கேட்க்குதே கேட்க்குதே
கோயில் பொன் மணி ஓசைகள்
நம்மை வாழ்த்தவே...
OUT OF THE WORLD EXPERIENCE second interlude & charanam!
bells, drums and symphonic strings 'எங்கிருந்தா ள் இது வரை ....' charanam with கேட்க்குதே கேட்க்குதே ...... gradual crescendo with flute music sprinkle fill-in!:musicsmile:
TERRIFIC!
http://www.youtube.com/watch?v=d41o-bwAAi4
I happen to hear this song after long time. soothing melody. Miss you swarnalatha. Raja's treatment of suddha dhanyasi is amazing.
http://www.youtube.com/watch?v=8IvHstCnfg8
Thanks for reminding Baroque. I m listening to this one after long time.. doesn't it sound similar to "manjal pookum" song from the movie friends?
தவில், பறை, உறுமிகளின் உச்சம். ஒவ்வொரு இசைக் குறிப்பிலும் தீமிதிக்கும் இடத்துக்கே உரிய அனல் தெறிப்பதை உணரலாம்.
இறுதியில் தீமிதிக்கும் நேரம் பார்த்து வயலின்களின் கொந்தளிப்பு தாளக்கருவிகளோடு சேர்ந்துகொள்வது சிறப்பு. அந்த கலவரத்திலும் முதல் இடையிசையில் வரும் புல்லாங்குழல் நம்மிடம் சில நொடிகள் நிதானம் வர வைக்கும் அதிசயம். எல்லாமே சரியா அமைந்துவிடும் சில நேரங்களில். அதுபோலத்தான் இப்பாடலுக்கு மலேஷியா வாசுதேவன். என்ன ஒரு குரல்! வேண்டுதலில் தன்னையே ஒப்படைக்கும் குரலை அப்படியே நிகழ்த்திக் காட்டியிருப்பார். ராஜா எப்படி தமிழிசைக்கு ஒரு பொக்கிஷமோ அதுபோல இந்தப் பாடலும் இதுவரை திரையில் வந்த எல்லா வகையான பாடல்களுக்கு மத்தியில் ஒரு விலைமதிக்க முடியாத ஆக்கம்.
http://www.youtube.com/watch?v=8LIGOQMbhKE
NEETHANE EN PONVASANTHAM glorifyingly reviewed by Allaboutjazz.com !
http://www.allaboutjazz.com/php/arti...9#.Umb1p1MuegR
IR's output is considered and compared with those of Pat Metheny's work with pianist Lyle Mays, the classic Gil Evans, Oliver Nelson instrumentation, and the tempo of Tom Petty !!
I agree Venkkiram. I watched this movie recently and thoroughly enjoyed it. Malaysia vasudevan is terrific in this song.
http://www.youtube.com/watch?v=C75IZXXe0Sk
இரண்டாவது சரணம் முடிந்து வரும் "தா நந்தன கும்மிக்கொட்டி"க்கு ஜானகி இம்ப்ரொவைஸ் செய்யும் அழகுக்கு சொத்தையே எழுதி வைக்கலாம். சும்மா ஊதி தள்ளிட்டாங்க! அதுவரை குரலால் மலேஷியா எழுப்பிய மாளிகையையே ஒரு நொடியில் தகர்த்து விடும் சங்கதி அது. ராஜாவின் தெம்மாங்கு பாடலின் சிறப்பே - எல்லாருமே எளிதா பாடக் கூடியது போல இருக்கும், ஆனால் பாட முயற்சித்தால் மட்டுமே அதில் பொதிந்திருக்கும் சங்கதிகளின் விஸ்வரூபமே புலப்படும்.
https://soundcloud.com/shanmuganagar...ream-dogs-duet
Selvi, Ilamanathu Pala kanavu.
https://soundcloud.com/shanmuganagar...thantha-oviyam
Paaru Paaru Pattanam Paaru, Yaar Toorigai tantha. SPB Solo, Rare one.
http://www.youtube.com/watch?v=ZpKvVrwPGmc
சரணம் எவ்வளவு அழகு! ஆஷாவின் குரலோடு தபேலா அப்படியே கொஞ்சி குலாவுது. எத்தனை எத்தனை முத்துக்கள் இதுபோல! இதெல்லாம் சூப்பர் சிங்கரில் பாட மாட்டார்களா? ராஜா பாடல்கள் என்றாலே இவைகள் தான் என இவர்களே ஒரு டெம்ப்ளேட் வைத்து இருக்கிறார்கள். அதைவிட்டு ஒரு இன்ச் கூட வெளியெ வர மாட்டார்கள். அப்படியே பாடினாலும், நடுவர் குழு எதோ ஒரு வேற்றுகிரக ஜந்து போல பார்ப்பார்கள். எத்தனை வருடங்களுக்குத் தான் இது போன்ற பாரபட்சம் தொடர்கிறது எனப் பார்ப்போம்.
Venkkiram,
Thanks for this post. I am hearing this for the first time. No wonder why Super singer stars sing only the popular compositions. There are various other songs similar to this category from Raja sir. unfortunately those songs are not popular because the movie did not perform well in box office.
Bass Guitar, Organ, Violin, Drum
கொண்டாட்டங்களின் உச்சமான இந்த ஆக்கம்.. 31 ஆண்டுகளாக இன்னும் நம்மை தொடர்ந்து வந்து குதூகலபடுத்துகிறது..
http://www.youtube.com/watch?v=HTH3nHgDmws
தொண்ணூறுகளின் இறுதியில் வந்த செந்தூரம் படத்தில் இடம்பெற்ற "ஆலமரும் மேலமரும்" பாடல் அடிக்கடி கேட்டு மகிழ்வதுண்டு. பல வருடங்களுக்குப் பிறகு இப்போது கேட்கிறேன். தெம்மாங்கு பாடல் போல ஆரம்பத்தில் தெரிந்தாலும் சாஸ்திரிய சங்கீதத்தையும் அதில் பிசைந்து ரொம்ப அழகாக நெய்திருப்பார். வழக்கம் போல பலவகையான நடைகளை உள்ளடக்கியது. உன்னி கிருஷ்ணனின் குரல் ஒரு தளத்தில் நின்றால் பவதாரிணியின் குரல் இன்னொரு தளத்தில் நின்று இருவிதமான உணர்வுகளைத் தரும் அழகு. ஒவ்வொரு சரணத்தின் ஆரம்பத்திலும் உன்னியின் ஆலாபனையோடு கோரஸ் குரலையும் இணைத்திருக்கும் உத்தியெல்லாம் ராஜாவிற்கே உண்டான முயற்சி. கேட்டவுடனையே பிடித்துப் போகும் ஒரு ஆக்கம். கடைசியில் வரும் பல்லவிக்கான தாளவாத்தியத்தை மாற்றி வழக்கம்போல விருந்து படைத்திருப்பார் ராஜா.
https://soundcloud.com/indrajith-parameswaran/aalamaram
"அடி வான்மதி " - பாடலை இன்றைய கார் பிராயணத்தில் கேட்டுக்கொண்டே... எவ்வளவு அழகான மெலடி. பல்லவியின் வரிகளை பாலு ஆரம்பித்து வைக்கும்போது ஒவ்வொரு வாக்கியம் முடியும்போதும் ராஜாவின் வயலின் அருவி நம்மையெல்லாம் சொட்ட சொட்ட நனைத்துவிடுகிறது. இதுபோன்ற யுத்தி எல்லாம் எப்படி இந்த ராட்சசருக்கு கைவந்த கலையாகிறது! வேறொரு இசையமைப்பாளருக்கு பல்லவியை பாலு பாடியிருந்தால் இந்த வயலின் அருவி கொட்டியிருக்குமா? நாயகன் தனது காதலியை தேடி அலையும்போது பாடுவதான ஒரு சூழலுக்கு நல்லதொரு தளத்தை அமைத்துக் கொடுக்கிறார். இந்த இரு குறிப்பிட்ட வயலின் இசைத் துண்டுகளில் படத்தின் ஒளிப்பதிவாளரும் நேர்த்தியாக காட்சியை கையாள்கிறார். ஒருவகையில் ராஜாவின் இசை கோனார் நோட்ஸ் போல. சுற்றுலா செல்லும் பயணிகளின் கைடு போல.
பாலு-சித்ரா இணைந்த பாடல்களில் என் நெஞ்சில் இதற்கு தனி இடம் உண்டு. இருவர் மட்டுமே எனச் சொல்லமுடியாது. மூன்றாவதாக ஒரு பாடகர்(!) அதாங்க ராஜாவின் பாஸ் கிடாரும் இருகுரல்களோடும் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்கும்.
இப்பாடலுக்கான நேர்த்தியாக தரம் யூடுபில் இல்லை என்பதால் ஒரு ரீமிக்ஸ் கானொளியைக் கொடுக்கிறேன்.
http://www.youtube.com/watch?v=hPjYZ0aSmY8
http://www.youtube.com/watch?v=Exa5VBdD-DM
இந்த இசை ராட்சசனுக்கு ஒரு ராக அமைப்பிற்கு எழுதிய பாடல் வரிகளை வைத்து மேலும் பல இசை ஓவியங்களை வரைந்து பார்க்கும் சோதனை முயற்சிகளுக்கு கணக்கே இல்லை. பாலு குரலில் "தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே" பாடலின் சோகத்தில் நாம் கரைந்து போனது கணக்கில் அடங்கா. ஆனால் அதே வரிகளுக்கு ராஜாவின் இன்னொரு ஆக்கம் அந்த சோக ரசத்தை அப்படியே நொடிப்பொழுதில் மாறுபடுத்திக் காட்டுகிறது. முதல் முறை கேட்கும்போதே சாஸ்டாங்கமாய் விழுந்துவிடலாம் எனத் தோன்றுகிறது. ராகதேவன் என சும்மாவா அழைத்தார்கள்?
தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே - 1
http://www.youtube.com/watch?v=tN6WL44QGpg
தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே - 2
https://soundcloud.com/murugesansara...anele-raja-sir
பாடல் வரிகளை ஒரு இம்மியளவும் மாற்றாமல் விட்டது ராஜாவுக்கே உரிய துணிச்சல்! ராஜாங்கம்.
சிவராத்திரியை ஒட்டி.. திருவாசகம் பிடித்த பத்து : இந்த நூற்றாண்டின் இணையற்ற ஆக்கங்களில் ஒன்றான ராஜாவின் "உம்பர்கட் கரசே"
- "இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே."
http://www.youtube.com/watch?v=z95XZ4Q94JA
பால்நினைந் தூட்டுந் தாயினும் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறத் திரிந்த
செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.
விருமாண்டி - ஒன்னவிட (from 4.10) : வயலின் கற்றைகள் கூட்டம் கூட்டமா ஏத்த இரக்கத்தோடு ஒன்றையொன்று தொடர்ந்து வருவதை ரொம்ப அழகா டூவீலரை மேடு பள்ளத்தில் ஏற்றி இறக்கிச் செல்லும் காட்சியாக நெய்திருப்பது - கோழியிலிருந்து முட்டையா இல்லை முட்டையிலிருந்து கோழியா மேட்டர். ராஜா-கமல் புரிதல்.
http://www.youtube.com/watch?v=qfx_X8gx62c
venkkiram,
This song is very dear to me .
Very soothing number in otherwise a heavy theme of a movie.
I cannot think of any other composer on earth to deliver a soft melody
https://soundcloud.com/ks-suka/r0uiajum3jv0
பாடகி சித்ரா தான் பாடிய பாடல்களிலேயே பிடித்த பாடலாக இந்தப் பாடலைச் சொல்கிறார். இதன் சரணங்களில் வரும் தாள மாற்றத்தை(Rhythm change) சொல்லிச் சொல்லி சிலாகிக்கிறார், இந்தப் பாடலுக்கு live -ஆக Drums வாசித்த திரு. புருஷோத்தமன். இந்தப் பாடலுக்கு கீ - போர்டு வாசித்தவரின், அப்போதைய பெயர் ஏ.எஸ். திலீப்குமார். இப்போதைய பெயர் ஏ.ஆர்.ரஹ்மான்.
-- Ks Suka
பாடலாக்கத்தில் ராஜா நெய்யும் வெவ்வேறு தாளக்கட்டுகளை நம்மளைப் போலவே சித்ராவும்..
இன்று அதிகாலை நேரம்.. மகனை சாக்கர் டோர்ணமேண்டுக்காக காரில் அழைத்துச் செல்கையில் "சின்ன மணிக்குயிலே" பாடல் பாடலை கேட்க நேர்ந்தோம். அப்போது எனக்கும் மகனுக்கும் இடையே நடந்த உரையாடல்..
அப்பா! who is the composer? Ilaiyaraja??
Yes.. you liked this song?
yeah.. very much.. the way the flute follows the male voice throughout the song is wonderful. Can you play it one more time?
http://www.youtube.com/watch?v=ha-7LXrSmrs
பிறந்த நாள் வாழ்த்துகள்!! வாழ்க பல்லாண்டு!
ஒ வானமுள்ள காலம் மட்டும் வாழும் இந்த காதல்....
புதிய ஸ்வரங்கள் வெளி வராமல் போனதால் ஒரு முத்து அவ்வளவு அதிகம் பேசபடவில்லை.
இதே பாடல் யேசுதாசும் உமாரமணனும் பாடி டுயட்டாக வந்திருந்தாலும், ராஜா சார் பாடியதில் ஒரு வலி இருக்கிறது. இடை இசைக்கு இவர் பயன் படுத்திய கன்னகோல் ஜதிக்கு யாரால் என்ன விலை கொடுக்க முடியும்?
கேளுங்க, கேளுங்க, இன்னும் அதிக முறை இந்த பாடலை கேட்க தோணும் உங்களுக்கு.. அலுக்காது.
http://ramachandrababu.blogspot.co.u...l-films-1.html
http://www.youtube.com/embed/dZPxQJ7o0Uc
கேட்பதற்கு மிகவும் எளிதான இனிமையான பாடல். அதை விட, மிகவும் எளிதாக, சிரம படாமல் ராஜா சார் இந்த பாடலை வடிவமைத்திருக்க கூடும்.
பாடலை எழுதிய வாலியும் வார்த்தைகளை அள்ளி தெளித்து இசைக்கு வார்த்தைகளை ரொப்பி இருக்கலாம். நடித்து கொடுத்த மோகனும் ரேவதியும் எளிதாக வாயசைத்திருப்பார்கள். ஊட்டியும், ராஜராஜன் காமெராவும் - பிரமாதம்
ஜெயந்திரனும் ஜானகியும்... கஷ்டமெல்லாம் அவர்களுக்கு தான். அதனாலோ என்னவோ, இந்த மாதிரியான பாடல்களை சூப்பர் சிங்கரில் காண்பது அரிது.
நான் அதிகம் நேசித்த பாடல்கள் வரிசையில், 1986ல் வெளிவந்த ஒரு முத்து. ... 1:14 முதல் 1:26 வரை வரும் இசையை என்ன சொல்ல? மீண்டும் மீண்டும் கேட்டால் என்ன உணர்வு ஏற்படும் என்று எனக்கு சொல்ல தெரியவில்லை.
https://www.youtube.com/watch?v=XYPllqyAF08
அழகாக சிரித்தது அந்த நிலவு - அதுதான் இதுவோ அனலாக கொதித்தது இந்த மனது - இதுதான் வயதோ
மழை காலத்தில் - லல லல லா
நிழல் மேகங்கள் - லல லல லா
மலையோரத்தில் - லல லல லா
சிறு தூறல்கள் - லல லல லா
இளவேனிற்காலம் ஆரம்பம் - லல லல லல
(அழகாக சிரித்தது...)
நதியே நீராட தான் உன்னை அழைத்தேன்
பூவே நான் சூட தான் நாள் பார்த்தேன்
நாணல் நான் ஆகத்தான் காத்து கிடந்தேன்
காற்றே உனை பார்த்ததும் கை சேர்த்தேன்
மானே உன் அழகினில் நானே ஓவியம் வரைந்தேனே
கண் ஜாடை சொல்ல
நானே என் இதயத்தை தானே எடுத்து கொடுத்தேனே
நீ சொந்தம் கொள்ள
பனி தூங்கும் ரோஜாவே
எனை வாங்கும் ராஜாவே
ஒரு நாள் திரு நாள் இதுதான் வரவோ
நாணம் என்ன? அச்சம் என்ன?
(அழகாக சிரித்தது...)
உன்னை நான் அல்லவோ கண்ணில் வரைந்தேன்
நாளும் என் ஓவியம் நீதானே
கண்ணே உன் கண்ணிலே செய்தி படித்தேன்
காதல் போராட்டமே நான் பார்த்தேன்
மோகம் பொங்கி வரும் தேகம் கொண்டதொரு தாகம் நான் பெண்ணல்லவோ
நானும் கொஞ்சிட அது தீரும் கட்டினில் இணை சேரும் என் கண்ணல்லவா
இளமாலை பொழுதாக
இரு நெஞ்சம் இனிதாக
இனிமை வழியும் இளமை இதுவோ இரு விழி சிவந்திட
(அழகாக சிரித்தது..)
^^ எக்காலத்தில் கேட்டாலும் புத்துணர்ச்சியாய் பொலிவாக இருக்கும் பாட்டு அது. கார் பிரயாணங்களில் அடிக்கடி கேட்கும் பாடல். பகிர்ந்ததற்கு நன்றி.
ராஜாவே எழுதி இசை அமைத்து இருக்கும் பாடல். காட்டுல தலை ஆட்டுற சிறு ஆவாரம் பூவே"
மிக அருமையான பாடல். " படித்த படிப்பினால் நல்ல பண்பு வளரனும்" .
இந்த படத்தில் எல்லா பாடல்களையும் அவரே எழுதி இருக்கார்.
The Whole movie is here. To listen to this song "just listen first 4 minutes".
https://www.youtube.com/watch?v=5hMFC0xE96w
ராஜா அவர் இசை அமைக்கும் படங்கள் எல்லாவறிலும் "டைட்டில் கார்டு" போடும் பொழுது அவர் பெயர் வரும் இடங்களில் அப்படியே அந்த இசையின் சுருதி லயம் மாற்றி வேறு ஒரு லெவெலுக்கு கொண்டு போவார். அது மிகவும் நன்றாக இருக்கும்.
An art must go directly to our feelings,deep down into the dark rooms of our souls - Bergman// ராஜாவின் இசையில் அறிந்துணர்ந்த தெய்வீகம் இது!
-xyz
https://www.youtube.com/watch?v=Zv77k8nSo0o