Pudhiya bhoomi -1968
http://i1273.photobucket.com/albums/...svee6/84-1.jpg
Printable View
Pudhiya bhoomi -1968
http://i1273.photobucket.com/albums/...svee6/84-1.jpg
AASAI MUGAM -1965
http://i1273.photobucket.com/albums/...6640_686-1.jpg
AASAIMUGAM -1965
http://i1273.photobucket.com/albums/...645_5811-1.jpg
CHENNAI - MAHALAKSMI THETARE- THANKS PROF SELVA KUMAR SIR
http://i50.tinypic.com/105p2xs.jpg
வினோத் சார், பல எம்.ஜி.ஆர் ரசிகர்களின் மனதில் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்திவிட்டீர்கள். மீடியாக்கள் தொடர்ந்து பரப்பிவரும் வினோதமான வதந்தி எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நடிக்கத் தெரியாது என்பது. மனத்தைக் கொள்ளைகொள்ளும் இயற்கையான அந்த நடிப்பினில் கட்டுண்டவர்கள் கூட அதை மறுத்து வேறு பல காரணங்களால் எம்.ஜி.ஆரைப் பிடிக்கும் என்று வெளியில் கூறும் வகையில் ஒரு மாயை ஏற்படுத்தப்பட்டுவிட்டது. ஆனால் உண்மையில் மக்கள் திலகத்தின் நடிப்பில் மயங்காதவர்கள் இல்லை. ஆரம்பத்தில் தி.மு.க.வை முன்னிலைப்படுத்தியதால் காங்கிரஸ் கட்சியினர் எம்.ஜி,ஆரை விமர்சித்தனர். பின்னாளில் தி.மு.க.வை விட்டி வெளியேற்றப்பட்டு தனிக்கட்சி தொடங்கியதால் தி.மு.க.வினரும் விமர்சித்தனர். இதில் வேடிக்கை என்னவென்றில் எல்லா விமர்சனங்களையும் மீறி எம்.ஜி.ஆர் படங்களை எல்லோருமே பார்த்தனர். ரசித்தனர். எம்.ஜி.ஆருக்கு அழத்தெரியாது என்பது அப்படிப்பட்ட பொய்யான விமர்சனங்களில் ஒன்று. இதற்கு மறுப்பாக ஆயிரம் உதாரணங்களைச் சொல்லலாம். எம்.ஜி.ஆரின் நடிப்பாற்றலை விரிவாக எனது அடுத்த பதில்களில் கூறுகிறேன்.
உண்மை.
இதுபோலவே, மக்கள் திலகத்தின் 'நாடோடி மன்னன்' தமிழில் வந்த மிகச் சிறந்த இயல்பான சரித்திரப் படம்.
மதுரை வீரனும் நேர்த்தியான சரித்திரப் படம்..
MGRரை பிடிக்காதவர்கள் ஒப்புக் கொள்ள மறுத்தாலும் அவர் மிக
இயல்பான நடிப்புக்குரியவர்
குண்டடிபட்ட பின்னர்
குரல் கெட்டு ..நா தழுதழுத்தது ஊர் பார்த்த உண்மை
அதை உணராமல் போனோரையும் போவோரையும்
அவரவர் போக்கில் விட்டு விடுங்கள்
அவர்களது தூற்றல்களும் வார்த்தைகளும் கூட
அவரவர்களைப் போல காற்றோடு போகும் !
இதைப் பாருங்கள்
மக்கள் திலகத்தோடு தனக்கு நேர்ந்த அனுபவங்களை
சொல்லி பெருமைப்படும் திரு கங்கை அமரன்
http://www.dailymotion.com/video/xva...ilms?start=842
Thanks
Regards
இனிய நண்பர் ஜெய் சார்
மக்கள் திலகத்தின் நடிப்பினை பற்றி வெவ்வேறு கால கட்டங்களில் விமர்சனங்கள் வெளிவந்தன .
தனிப்பட்ட முறையில் அவரது நடிப்பினை மிகவும் தரம் தாழ்ந்து தாக்குதல் நடத்தியவர்கள் பத்திரிகை விமர்சகர்கள் .
நடிப்பு என்பது பல்வேறு இலக்கணங்கள் கொண்ட பன்முக படைப்பு. ஒருவரை போல் ஒருவர் நடிக்க இயலாது .ஒப்பீடும் செய்ய முடியாது .http://i45.tinypic.com/jshsgy.png
1930-1940- 1950 கால தமிழ் சினிமா வளர்ச்சி வசீக குரலும் ,பாடலும் , தெய்வீக படங்களும் .சமஸ்கிருதம் கலந்த தமிழ் வசனங்களும் ஆக்கிரமித்து கொண்டது .
தூய தமிழ் . அருமையான தமிழ் உச்சரிப்பு , மென்மையான நடிப்பு என்ற மாபெரும் மாறுதல் உருவான கால கட்டம்தான்
மந்திரிகுமாரி - மருதநாட்டு இளவரசி -சர்வதிகாரி - மர்மயோகி
அந்தமான் கைதி -என்தங்கை போன்ற படங்களில் மக்கள் திலகம் அவர்கள் தனது இயற்கையான நடிப்பு ,வீர வசனங்கள் , வாள் வீச்சு ,சிலம்பம் .கம்பு சண்டை .குத்து சண்டை ,வெண்கல குரலில் வசனம் , மென்மையான காதல் காட்சிகள் , கொள்கையுடன் கூடிய கதா பாத்திரம் என்று தன்னை உருவாக்கிய நடிகர்தான் புரட்சி நடிகர் .
மக்களும் உண்மையான ரசிகர்களும் அவரை ஏற்று கொண்ட பின்னர் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அவரை இன்றும் மக்கள் திலகமாக , புரட்சி தலைவராக , இதய தெய்வமாக போற்றி அவரது புகழினை உலகமெங்கும் பரப்பிக்கொண்டு வரும் இந்த நாளிலும்
எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும் .
மக்கள் திலகம் கலை துறை விட்டு 35 ஆண்டுகள் பின்னரும் மறைந்து 25 ஆண்டுகள் பின்னரும் அவரது சினிமா தொடர்ந்து தமிழ் நாட்டில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது .
ஊடகங்களின் நிலயான முதலவராக மக்கள் திலகத்தின் திரை படங்களும் , படபாடல்களும் 24x 7x 365 என்ற விகிதத்தில் உள்ளது உலக சாதனையாகும் .
தொடரும்
esvee