முரளி சார்
ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ் வி.பி.ராஜேந்திர பிரசாத் அவர்களின் மகன் தானே இப்போதைய பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு?
தந்தையும் தனயனும்
http://www.myfirstshow.com/newsimages/vbp.jpg
Printable View
முரளி சார்
ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ் வி.பி.ராஜேந்திர பிரசாத் அவர்களின் மகன் தானே இப்போதைய பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு?
தந்தையும் தனயனும்
http://www.myfirstshow.com/newsimages/vbp.jpg
தெலுங்கு பாடும் 'உத்தமன்' (பிரேமலோன அந்தம் உந்தி)
http://www.youtube.com/watch?v=Su9Rv...yer_detailpage
அதிரே பில்ல சரி (ஹரி ஓம் ரங்கா ஹரி)
http://www.youtube.com/watch?v=zaRZXq-yjZc&feature=player_detailpage
துந்தரி பாபு (கேளாய் மகனே)
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=mr0hl7Uevk0
கோ,
திட்டித் தீர்க்காதே
உத்தமனைப் பற்றிய என் பதிவை பாராட்டிய அனைத்து நல் இதயங்களுக்கும் நன்றி.
கோபால், ராகவேந்தர் சார், வாசு ஆகியோரின் உத்தமன் பட அனுபவங்களுக்கும் நன்றி.
வரப் போகும் கார்த்திக் அவர்களின் கிரௌன் தியேட்டர் அனுபவங்களுக்கு அட்வான்ஸ் நன்றி.
எங்கள் அருமை சுவாமியின் ரிலீஸ் ஆவணப் பதிவிற்கு நன்றி. ராகவேந்தர் சாரின் உத்தமன் இலங்கை வெள்ளி விழா ஆவணத்திற்கு கோடானு கோடி நன்றி.
வாசு சார்,
நீங்கள் குறிப்பிடும் நிகழ்வு காங்கிரஸ் இணைப்பு விழா அல்ல.அது 1976-ம் ஆண்டு பிப்ரவரி 15 ஞாயிறன்று சென்னை கடற்கரையில் அன்றைய பாரதப் பிரதமர் இந்திரா அம்மையார் அவர்கள் முன்னிலையில் ஏற்கனவே நடந்து முடிந்திருந்தது. அதாவது நமது உனக்காக நான் வெளியான பிப்ரவரி 12-ந் தேதிக்கு நான்கு நாட்களுக்கு பிறகு நடந்தது.
நான் என்னுடைய நேற்றைய பதவில் குறிப்பிட்டிருப்பது போல உத்தமன் வெளியான நேரத்தில் இந்திரா அம்மையார் அவர்களின் 20 அம்ச திட்டத்தை தமிழகமெங்கும் மக்களுக்கு எடுத்து சொல்ல ஒரு யாத்திரை மேற்கொண்டிருந்தார் நடிகர் திலகம். அந்த நிகழ்சிக்காக கடலூருக்கோ பாண்டிசேரிக்கோ அவர் வந்திருக்கலாம். அந்த விழாவில் கலந்து கொள்ள நமது ரசிகர்கள் வான் மற்றும் பஸ்களில் சென்றதை நீங்கள் பார்த்திருக்க கூடும். நீங்கள் சொல்லும் காலயளவு, அந்த நேரத்தில் நடிகர் திலகம் மேற்கொண்ட இந்த சுற்றுப் பயணம் ஆகியவற்றை வைத்து இதுவாகத்தான் இருக்கும் என்ற முடிவிற்கு வர தோன்றுகிறது. எனக்கு தெரிந்து பெரிய அரசியல் மாநாடு அல்லது விழா நடைபெற்ற நினைவு இல்லை.
அன்புடன்
ஆம் வாசு சார். வி.பி.ராஜேந்திர பிரசாத் அவர்களின் மகன்தான் இன்றைய தெலுகு படஉலகின் ஹீரோ-களில் ஒருவரான ஜகபதி பாபு.
ஒரு காலண்டர் ஆண்டில் இரண்டு பேர்களுக்கு ஒரே எண்ணிக்கையில் படங்கள் வெளியாகின்றன. 8 படங்கள். அவற்றில் ஒருவருக்கு ஒரு சில படங்கள் ஓடுகின்றன. ஒரு சில படங்கள் ஓடவில்லை [4 முதல் 6 வாரங்கள்]. அது சாதனை என்று சொன்னால் வெளியான 8 படங்களும் 9 வாரத்திற்கு மேல் ஓடியதை என்ன பெயரிட்டு அழைப்பது?
சாதனை புரிந்த படம், அதிக நாட்கள் ஓடிய படம் என்று சொல்லப்படும் படம் அதை விட குறைவான நாட்கள் ஓடிய படம் பெற்ற வசூலை விட பல்லாயிரங்கள் பின் தங்கியதே, அப்போது எது சாதனை?
இரண்டு வேடங்கள் இல்லாமல் இரண்டு நாயகியர் இல்லாமல், 8 சூப்பர் ஹிட் பாடல்கள் இல்லாமல் 5,6 சண்டைக் காட்சிகள் இல்லாமல் இப்படி எந்த மசாலா சேர்க்கையும் இல்லாமல் அப்படிபட்ட மசாலா சேர்க்கை உடைய படத்தின் வசூலை அதை விட ஒரு நாள் குறைவாக ஓடி கிட்டத்தட்ட equal செய்ததே எங்கள் காவியம். யோசித்து பாருங்கள், நாயகனுக்கு பாடல் காட்சி கிடையாது, சண்டைக் காட்சி கிடையாது, ஏன் மீசையே கூட கிடையாது. இருந்தும் தமிழ் சினிமாவின் அற்புத காவியம் நடிகர் திலகத்தின் புகழோவியம் தில்லானா புரிந்த சாதனைக்கு ஈடாகுமா?
மதுரை சிந்தாமணியில் ஓடிய நாட்கள் - 132
மொத்த வசூல் - Rs 3,47,167.13 p.
[மற்ற படங்களின் வசூல் விவரங்களும் எங்களிடம் உள்ளன ஆகவே யாரும் மீண்டும் இதை விட வசூல் என்று அள்ளி விட வரவேண்டாம்].
மதுரை மாநகரில் 1968-ம் ஆண்டில் சிவாஜியின் சாதனை
1968
1. திருமால் பெருமை - ஸ்ரீதேவி - 71 நாட்கள்
2. கலாட்டா கல்யாணம் - ஸ்ரீமீனாட்சி - 70 நாட்கள்
3. ஹரிச்சந்திரா - கல்பனா - 63 நாட்கள்
4. என் தம்பி - சென்ட்ரல் - 84 நாட்கள்
5. தில்லானா மோகனாம்பாள் - சிந்தாமணி - 132 நாட்கள்
6. எங்க ஊர் ராஜா - நியூ சினிமா - 72 நாட்கள்
7. லட்சுமி கல்யாணம் - ஸ்ரீதேவி - 60 நாட்கள்
8. உயர்ந்த மனிதன் - சென்ட்ரல் - 70 நாட்கள்
ஏராளமான முறை சொன்னாலும் கூட சலிக்காது நாங்கள் சொல்லக்கூடிய ஒரு உண்மை - மதுரை என்றென்றும் நடிகர் திலகத்தின் கோட்டை.
அன்புடன்
அன்புள்ள வினோத் சார்,
மிகுந்த தயக்கத்துடனும், மிகுந்த மன வருத்ததுடனும் இந்த open letter -ஐ உங்களுக்கு எழுதுகிறேன். நியாயமாக இந்த பதிவை எம்.ஜி.ஆர். அவர்களின் திரியில்தான் பதிவிட்டிருக்க வேண்டும். ஆனால் அங்கே முன் காலங்களில் சிலர் வெளிப்படுத்திய கோவம், வெறுப்பு ஆகியவற்றை நினைவில் கொண்டு இந்த பதிவை இங்கே இடுகிறேன்.
நீங்கள் இந்த ஹப்பிற்கு வந்து ஒரு வருடத்திற்கும் மேலாகிறது. உங்களிடம் அலைபேசியில் ஒரு முறை பின்னர் திரிகளில் இரண்டு மூன்று முறை interact செய்திருக்கிறேன் எனபதை தவிர உங்களிடம் அதிக பரிச்சயமில்லை எனக்கு. ஆனால் உங்களைப் பற்றி சுவாமி அவர்களும், ராகவேந்தர் சார் அவர்களும், வாசு அவர்களும், சுப்பு அவர்களும் நிறைய சொல்லியிருக்கிறார்கள்.ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் ஒரு perfect gentleman என்று. அதை உண்மை என்று உணர்கிறேன். ஆனாலும் ஒரு பெரிய வருத்தம்.
நான் இங்கே இயங்குவது எந்த அடிப்படையில் எனபதை சொல்லி விடுகிறேன். நான் ஒரு சிவாஜி ரசிகன், சிவாஜியை மிகவும் ரசிப்பவன், அவர்தம் பட சாதனைகளை குறிப்பாக எங்கள் மதுரையில் நிகழ்தியவற்றை இங்கே பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருப்பவன். அது போன்றே நீங்கள் எம்.ஜி.ஆர். அவர்களின் ரசிகர். எம்.ஜி.ஆர். அவர்களை மிகவும் ரசிப்பவர். அவர்தம் சாதனைகளை பதிவிடுவீர்கள். எனக்கு பிடித்ததை நான் செய்கிறேன், உங்களுக்கு பிடித்ததை நீங்கள் செய்கிறீர்கள். இந்த அடிப்படை புரிதல் இருப்பதனால்தான் உங்கள் பதிவுகளை நான் ஒரு புன் சிரிப்போடு படித்து விட்டு போய்க் கொண்டிருப்பேன். நான் மதுரையில் சிவாஜியின் சாதனைகளைப் பற்றி எதாவது சின்னதாக எழுதினால் கூட மறுநாள் உங்கள் பதிவு வரும், மதுரையில் எம்.ஜி.ஆர். சாதனை என்று எதையாவது பதிவிடுவீர்கள்.[ஒரு முறை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்களைப் போட்டு எம்.ஜி.ஆர். மாநகரம் என்றெல்லாம் எழுதியிருந்தீர்கள்]. அதை நீங்களாகவே செய்கிறீர்களா இல்லை மதுரை வாழ் உங்கள் தரப்பு ரசிகர்கள் உங்களை நிர்பந்திதித்து இது போல் எழுத வைக்கிறார்களா என்று எனக்கு தெரியவில்லை. இருப்பினும் மேலே சொன்னது போல் நான் இதுவரை உங்கள தகவல்களை அவை தவறாக இருந்த போதும் அதைப் பற்றி comment செய்ததில்லை. இப்போது செய்யாமல் இருக்க முடியவில்லை.
ஒவ்வொரு ரசிகரும் தங்கள் அபிமான நடிகரின் படங்களை சற்று boost செய்வது வழக்கம்தான். ஆனால் ஒன்றை பத்தாக சொல்வது எல்லாம் too much.இன்றைய இணையம் எனபது நேற்றைய இன்றைய வரலாறுகளின் பெட்டகமாகவும், ஆவணமாகவும் எதிர்கால சந்ததியினருக்கு விளங்கப் போகிறது எனும் போது அவற்றில் தவறான தகவல்களை தெரிந்துக் கொண்டே ஆவணப்படுத்துவது எனபது வரலாற்று பிழை.
திரும்ப திரும்ப வரும் உங்கள் தவறான தகவல்களை மட்டும் அதிலும் ஒரு சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். மதுரையில் 133 நாட்கள் மட்டும் ஓடிய நம் நாடு படத்தை 147 நாட்கள் ஓடியது என்ற தவறான தகவலை இதுவரை 6 முறை பதிவு செய்திருக்கிறீர்கள். இதனால் நீங்கள் அடையும் லாபம் என்ன? [இத்தனை நாட்கள் ஓடியும் அதை விட குறைந்த நாட்கள் ஓடிய [117 நாட்கள்] சிவந்த மண் பெற்ற வசூலை விட நம் நாடு பல்லாயிரங்கள் பின் தங்கியது என்ற வரலாற்று உண்மையை இங்கே பதிவு செய்ய வேண்டும்].
மதுரை தங்கத்தில் நாடோடி மன்னன் மட்டுமே எம்.ஜி.ஆர்.படங்களில் 100 நாட்கள் ஓடியது எனபது உலகறிந்த உண்மை. அப்படியிருக்க தங்கத்தில் வெளியான மலைக்கள்ளன் படத்தை 100 நாட்கள் பட்டியலில் சேர்கிறீர்கள் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? தியேட்டர் பெயரை சேர்த்துக் கொடுத்தால் கண்டு பிடித்து விடுவார்கள் என்பதால் தியேட்டர் பெயரே போடாமல் பதிவிடுகிறீர்கள். அது போலவே உங்கள் 100 நாட்கள் பட்டியலில் இடம் பெற்ற மகாதேவி, பெரிய இடத்துப் பெண், ஆயிரத்தில் ஒருவன் [இன்னும் 10 படங்களுக்கு மேல் இருக்கின்றன] போன்ற எந்த படமும் மதுரையில் 100 நாட்கள் ஓடவில்லை எனபது உங்களுக்கே தெரியும். இருந்தும் மீண்டும் மீண்டும் அதே தவறான தகவலை பதிவிடுகிறீர்கள். இதையே நீங்கள் 2012 செப்டம்பர் மாதம் வரை பதிந்திருந்தால் நான் உங்களை கேள்வியே கேட்டிருக்க மாட்டேன். ஆனால் 2012 அக்டோபர் மாதத்திற்கு பின்னும் நீங்கள் இதை எழுதுவது மிகுந்த வருத்தத்தை தருகிறது. நான் சொல்வது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். இன்று இந்த பதிவை இடுவதற்கு கூட காரணம் நீங்கள் "மதுரை சாதனைகள்" தொடரும் என்று குறிப்பிட்டிருப்பதனால்தான்.
ஒரு சிவாஜி ரசிகனாக இல்லாமல் மதுரை மண்ணின் மைந்தனாக நான் உங்களை வேண்டி கேட்டுக் கொள்வதெல்லாம் எங்கள் ஊரைப் பற்றிய திரைப்பட தகவல்களை இணையத்தில் பதிவிடும் போது தயவு செய்து தவறான தகவல்களை தவிருங்கள் என்பதுதான். இதற்கு மேல் இந்த விவாதத்தை தொடரவோ முன்னெடுத்து செல்லவோ நான் விரும்பவில்லை.
எனக்கு மிகவும் பிடித்த எம்.ஜி.ஆர்.அவர்களின் படப் பாடல் வரிகளைத்தான் இறுதியாக குறிப்பிட விரும்புகிறேன்.
தவறு என்பது தவறி செய்வது
தப்பு எனபது தெரிந்து செய்வது
தவறு செய்தவன் திருந்த பார்க்கணும்
தப்பு செய்தவன் வருந்தியாகணும்
சரியான முறையில் இந்த பதிவை எடுத்துக் கொண்டு தோழமை உணர்வுடன் செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கையில்
அன்புடன்
எம்மை வரவேற்றுப் பாராட்டிய கோல்ட்ஸ்டார், பெரியவர் சுப்ரமண்யம் ராமஜெயம் சார், அறிவுஜீவி அடிகளார், ரசிகவேந்தர், சந்திரசேகரன் சார், மெஸ்மெரிஸ மன்னர் mr_karthik, நெய்வேலியார் மற்றும் முரளி சார் ஆகியோருக்கு எனது அன்பான நன்றிகள் !
கார்த்திகேயரின் புண்ணியத்தில் அனைவரது ஒருங்கிணைந்த பங்களிப்புகளால் "உத்தமன்" திருவிழா நமது திரிவிழாவாக களைகட்டிவிட்டது !
அன்புடன்,
பம்மலார்.
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் :29
நடிகர் திலகத்தின் 184வது திரைக்காவியம்
உத்தமன் [வெளியான தேதி : 25.6.1976]
தமிழகத்தில் சூப்பர் ஹிட் ! இலங்கையில் பம்பர் ஹிட் !
38வது ஆண்டு துவக்கம் : பொக்கிஷாதி பொக்கிஷம்
முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 25.6.1976
http://i1110.photobucket.com/albums/...d8eba7fa71.jpg
குறிப்பு:
"உத்தமன்" சென்னையில்:
1. சாந்தி - 70 நாட்கள்
2. கிரௌன் - 70 நாட்கள்
3. புவனேஸ்வரி - 63 நாட்கள்
"உத்தமன்" ஊர்வலம் வருவார்.....
பக்தியுடன்,
பம்மலார்.
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் :30
நடிகர் திலகத்தின் 184வது திரைக்காவியம்
உத்தமன் [வெளியான தேதி : 25.6.1976]
தமிழகத்தில் சூப்பர் ஹிட் ! இலங்கையில் பம்பர் ஹிட் !
38வது ஆண்டு துவக்கம் : பொக்கிஷாதி பொக்கிஷம்
100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 1.10.1976
http://i1110.photobucket.com/albums/...2a4bb5a0e4.jpg
குறிப்பு:
இந்த 100வது நாள் விளம்பரம் நமது நடிகர் திலகத்தின் 49வது அவதாரத் திருநாளன்று [1.10.1976] கொடுக்கப்பட்டது. 1.10.1976 அன்று "உத்தமன்" திரைக்காவியத்தின் 99வது நாள். மேலும், 1.10.1976, சரஸ்வதி-ஆயுத பூஜை தினம், நாளிதழ்-பத்திரிகை அலுவலகங்களுக்கு விடுமுறை நாள். எனவே 2.10.1976 தேதியிட்ட நாளிதழ் வெளிவரமுடியாத காரணத்தினால், 1.10.1976 அன்றே "உத்தமன்" திரைக்காவியத்தின் 100வது நாள் விளம்பரம் அளிக்கப்பட்டது.
"உத்தமன்" ஊர்வலம் வருவார்.....
பக்தியுடன்,
பம்மலார்.
என்ன mr_karthik, சந்தோஷம்தானே...!