-
தர்மத்தின்சாவி!
“பலப்பலப் பலபல ரகமா இருக்குது பூட்டு – அது
பலவிதமா மனிதர்களைப் பூட்டுது போட்டு
கலகலவென பகுத்தறிவு சாவியைப் போட்டு – நான்
கச்சிதமாய்த் திறந்து வைப்பேன் இதயத்தைக் காட்டு….”
கேட்டீர்களா …. பாட்டு?
பகுத்தறிவு எனும் சாவியால்… இதயங்ளைத் திறந்து வைக்க வருகிறார் எம்.ஜி.ஆர்!
இனி அவர் என்ன சொல்கிறார்?
“அடக்கமில்லாம சபையில் ஏறி
அளந்துகொட்டும் ஆண்களுக்கு வாயிலே பூட்டு!
அடுத்தவர் பையில் இருப்பதைக் கையில்
அள்ளிக் கொள்ளும் திருடருக்கு கையிலே
பூட்டு!”
சரிதானே!
வாய்ப்பேச்சு வீரர்களுக்கு வாயிலும், திருடர்களுக்குக் கையிலும் போட வேண்டியது தானே பூட்டு….
இன்னும் யார் யாருக்குப் பூட்டுப் போடவேண்டும் என்றே எம்.ஜி.ஆர். பட்டியலிடுகிறார். பாடலின் தொடர்ச்சியைக் கண்டு, தெளிவீராக.
அடுத்து அவர் தரும் சாவியைக் காண்போம்!
“அறிவிருந்தாலும் வழி தடுமாறி
அவதிப்படும் மக்களுக்கும் இருக்குது சாவி
வறுமையினாலே வாழ்க்கை யில்லாமே
வாடிப்போன வீட்டினையும் திறக்குது சாவி!
தங்க மக்கள் உள்ளத்திலே
அன்பு மிக்க எண்ணத்திலே
தடை இருந்தா உடைத்துப் போடும்
தர்மத்தின் சாவி!”
என்னே அதிசயம்!
அறிவிருந்தும், அவதிப்படுவோர்க்கும் சாவி உண்டு!
வறுமையில் வாடிப்போனவர் வீட்டையும் வளம்பெறத் திறக்கவும் சாவி! உண்டு
தங்கமான மக்கள் உள்ளங்கள்! – அவற்றுள்
அன்புமிக்க எண்ணங்கள்!
இவைகளுக்குள் தடையா?
உடைத்துவிடும்! – எது?
அதுதான்…தர்மத்தின் சாவி!….”
இங்கே எம்.ஜி.ஆர் எடுத்துச் சொன்ன பகுத்தறிச் சாவி, தம்மத்தின் சாவி இரண்டைனையும் பார்த்தோம்.
யார் சொன்னால் மக்கள் கேட்பார்கள் என்பதை அறிந்தே, கண்ணதாசன், எம்.ஜி.ஆர். படங்களில் இப்பாடல்களைத் தந்து சொல்ல வைத்தார்.
யார் இந்தப் படத்திற்குப் பாடல்கள் தந்தால் நன்றாக இருக்கும் என்பதைத் தெரிந்தே, எம்.ஜி.ஆர். தகுந்த படங்களில் கண்ணதாசனைப் பாடல்கள் எழுத வைத்தார்.
இருவர் பார்வையிலும், இருவரும் எபுபோதுமே இலக்கிய இரசனையில் வேறுபட்டு நின்றவரல்லர்.
Courtesy - net
-
15.08.2013 அன்று கோவை ராயல் திரையரங்கில் திரையிடப்பட்டபோது ஒட்டப்பட்ட சுவரொட்டி விளம்பரம்
http://i61.tinypic.com/2vlw57r.jpg
-
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். என்றுமே "நினைத்ததை முடிப்பவன் "
------------------------------------------------------------------------------------------------------------------
திரைப்படம் வெளியான தேதி. 09/05/1975. 40 வது ஆண்டு தொடக்கம்.
முதல் நாள் மேட்னி காட்சி , தேவி பாரடைசில் நண்பர்களுடன் பார்த்து
ரசித்த படம்.
பின்பு அகஸ்தியாவில் பல முறையும், உமாவில் சில முறையும் பார்த்து
மகிழ்ந்தேன்.
டைட்டில் காட்சியில் அ. தி. மு. க.கட்சியின் சின்னம் இரட்டை இலை
வடிவத்துடன் பெயர்கள் காட்டும்போது அரங்கத்தில் எழுந்த ஆரவாரம்
மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
இரட்டை வேடங்களில் புரட்சி தலைவர் நடிப்பதை ஒரு கலையாக கையாண்டார் என்பது இப்படத்தில் நிரூபணம்.
தேன் சொட்டும் பாடல்கள்.
விறுவிறுப்பான திருப்பங்கள்.
தேங்காய் ஸ்ரீநிவாசன் நகைச்சுவையோடு சொல்லும் , (ஆட்சிக்கு ) நீ
வரத்தான் போறே , தரத்தான் போறே வசனங்கள் நடைமுறையானது(ஆட்சிக்கு வந்த பின் )
மஞ்சுளா, லதா இரு கதாநாயகிகள் இளமை தோற்றத்துடன், புரட்சி
தலைவரோடு காதல் காட்சிகளில் நெருங்கி நடித்து இருந்தனர்.
நம்பியாருக்கு மென்மையான போலீஸ் அதிகாரி வேடம். வழக்கமான
வில்லத்தனம் இல்லாத நல்லவர் என்கிற பாத்திரம்.
தேவி பாரடைசில் 101 காட்சிகளும், அகஸ்தியாவில் 83 காட்சிகளும்
தொடர்ந்து அரங்கு நிறைந்தன.
மதுரை மீனாட்சியில் 112 நாட்கள் ஓடியது.படம் வெளிவந்த முதல் நாளே மதுரை மீனாட்சியில் 100 நாட்களுக்கு எந்தவித இலவச பாஸ் அனுமதியும் கிடையாது என்கிற விளம்பரம் செய்தி தாளில் வந்தது.
சென்னையில் 10 வது வார முடிவில் எல்.ஐ .சி. கட்டிடத்தில் தீவிபத்து
ஏற்பட்டு, அதன் விளைவாக , அண்ணா சாலையில் போக்குவரத்து ஒருவழி பாதையாக ஆனபின் , மக்கள் நடமாட்டம் குறைந்ததால்,
12வது வாரத்தோடு தேவி பாரடைசில் எடுக்கப்பட்டது. அகஸ்தியாவிலும் 84 நாட்கள் ஓடியது.
சென்னையில் 100 நாட்கள் நிறைவு செய்யாவிட்டாலும் , பலமுறை
அரங்குகளில் மறுவெளியீடு செய்யும்போது, மக்கள் திலகத்தின் மெகாஹிட் படங்களுக்கு இணையான வசூலை பெற தவறுவதில்லை.
ஆர். லோகநாதன்.
-
வட சென்னை எம்.ஜி.ஆர். பக்தர்கள்/ ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.
---------------------------------------------------------------------------------------------------------------------------
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " டிஜிடல் வடிவில்
முதன் முறையாக சென்னை பாரத் திரை அரங்கில் நாளை முதல்
09/05/2014 தினசரி 2 காட்சிகள் (மேட்னி, மாலை ) திரையிடப்படுகிறது.
விநியோகஸ்தர் திரு. சொக்கலிங்கம் அவர்கள் அளித்த தகவல்.
ஆர். லோகநாதன்.
-
-
-
-
-
-