http://i63.tinypic.com/dbnql0.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Printable View
http://i63.tinypic.com/dbnql0.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
ஒரு முறை எம் ஜி ஆர் முதல்வராய் இருக்கும் போது உயர்மட்ட அதிகாரிகளின் கூட்டம் எம் ஜி ஆர் தலைமையில் நடைப்பெற்றது தோட்டத்தில் கூட்டம் முடிந்து உணவு எம் ஜி ஆர் தலைமையில் அமர்ந்து உண்டார்கள் தோட்டத்தில்
பின் சிலமாதங்கள் சென்று அந்த கூட்டத்தில் பங்குகொண்ட என்னை நான் பணியில் இருக்கும் போது ஒருவர்வந்து தோட்டதில் சின்னவர் எம் ஜி ஆர் ஆரை அப்படி அழைப்பார்கள் அழைக்கிறார் வாருங்கள் என்றார் எனக்கு படபடப்பாற்று என்ன தவறு செய்தோம் இது வரை நேர்மை அதிரிகாரி என்று தான் பெயர் எடுத்துள்ளேன் ஏதாவது தவறு நடந்து விட்டதா என எண்ணி கொண்டே சென்றேன் மதியவேளை அது தோட்டத்தில் எம் ஜி ஆர் ஆரும் பலரும் எனக்காக காத்திருந்தார்கள்
எம் ஜி ஆர் வாருங்கள் சாப்பிடலாம் என்றார் நான் படபடப்பாக சார் என் விசயம் சொல்லுங்கள் என்றேன்
அதற்க்கு எம் ஜி ஆர் அன்று ஒருநாள் நீங்கள் சாப்பிடும் போது ஒரு கறியின் பெயரை சொல்லி அதை நீங்கள் விரும்பி சாப்பிடுவதை கவனித்தேன்
அதன்பிறகு இன்று தான் அந்த கறி சமைக்கபட்டது உடன் உங்கள் நினைவு வந்தது வாருங்கள் சாப்பிடலாம் என சதாரணமாக சொன்னார்
எனக்கு கண்களில் கண்ணீர் நிரம்பியது ஒருதாயின் கருணை
தன்னலமற்ற அன்பை அவர் முகத்தில் கண்டேன் அன்று
ஓய்வு பெற்ற அந்த அதிகாரி கூறியது
ஒரு நூலில் படித்தது
மக்கள் திலகம் இவரை பிடித்ததுக்கு முதல் காரணம் சினிமாவின் சண்டைக் காட்சிதான் என்று ஒவ்வொரு ரசிகரும் கூறியது
சண்டை காட்சி எடுப்பதற்கு முன்னால் அங்கு முதலுதவி பெட்டி கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பார் அதுவே இன்றும் எம்ஜிஆர் பார்முலா என்ற பெயரில்் திரை உலகத்தில் உள்ளது என்றால் ஆச்சரியம் தான்
பின்பு ஆட்சி கட்டிலில் அமர்ந்த பின்பும் அரசு எந்திரங்கள் செயல் படும் கட்டிடங்கள் அரசு பள்ளிகள் அரசு பேருந்துகளிலும் கட்டாயப் படுத்தினார் முதலுதவி பெட்டியுடன் திருக்குறலும் எழுத வேண்டும் என்றார்
இதற்கு பெயர்தான் உண்மையான
மக்கள் திலகத்தின் மக்கள் நலம்
சைலேஷ் சார் திரும்பவும் நீங்கள் திரிக்கு திரும்ப வேண்டும் தலைவரின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இந்த வேளையில் எல்லோரும் ஒன்று சேர்ந்து தலைவரின் புகழ் பாட வேண்டும்
இனிய நண்பர் கலிய பெருமாள் சார்
புதுவை நகரில் கொண்டாடப்பட்ட மக்கள் திலகத்தின் 99வது பிறந்த நாள் நிழற்படங்கள் , போஸ்டர்கள் பதிவுகள்
அனைத்தும் மிகவும் அருமை .
மறைந்தும் மறையாத மாமனிதர்!
தமிழக சரித்திரத்தில் அழிக்க முடியாத ஒரு சக்தியாக எம்.ஜி.ஆர். இருந்து
வருகிறார் என்பதை யாரும் மறுக்க இயலாது. அவர் மறைந்து 28
ஆண்டுகளுக்குப் பின்னும், தமிழகத்திலுள்ள குக்கிராமம் முதல் மாநகரம் வரை
எல்லாப் பகுதிகளிலும் தனக்கென ஒரு வாக்கு வங்கியை அவர் தக்க வைத்துக்
கொண்டிருப்பது என்பது மிகப்பெரிய ஆச்சரியம். வேறு எந்த நடிகருக்கும்
இல்லாத அளவுக்கு, இன்னும் அவரது திரைப்படங்கள், பல நூறு தடவைகள்
திரையிடப்பட்ட பின்னும், ரசிகர்களின் ஆதரவைப் பெறுகின்றன என்றால் அதற்கு
என்ன காரணம் என்பது விளக்கவே முடியாத புதிராகத்தான் இருக்கிறது.
நடிகனாக, அரசியல்வாதியாக எம்.ஜி.ஆர். தன்னை அடையாளம் காட்டிக் கொண்டதைவிட
ஒரு சமுதாய சிந்தனாவாதியாக, மனிதாபிமானமுள்ள மனிதனாக, தனிமனித
நாகரிகத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் என்பதுதான் அவரது
தனிச்சிறப்பு. "கலைவாணர்' என்.எஸ். கிருஷ்ணனின் அடிச்சுவட்டில், சமுதாய
சிந்தனையுடன் தனது கலைப்பயணத்தையும், மனித நேயத்துடன் தனது தனிமனித
வாழ்க்கையையும் அமைத்துக் கொண்டவர் என்பதுதான் எம்.ஜி.ஆரின் தனித்துவம்!
எம்.ஜி.ஆரின் இன்னொரு பெருமைக்குரிய, சமுதாயத்துக்கு வழிகாட்டும்
அற்புதப் பண்பு எது என்று கேட்டால், தெய்வத்தைக் காண முடியாத மனிதப்
பிறவிகளுக்கு வாழும் தெய்வமாகப் பெற்ற தாயையே சுட்டிக்காட்டி, ஏற்று
வணங்கி, அதன்மூலம் மற்றவர்களையும் தாயை வணங்கிப் போற்ற வைத்தது எனலாம்.
அவரது கடந்தகால நிகழ்வுகளில் உண்மையான தொண்டனாகப் பங்கேற்றது ஒரு சில
நிகழ்ச்சிகளில் மட்டுமே என்றாலும் அந்த நிகழ்வுகள் இன்றுவரை எனது
நெஞ்சில் நீங்காத தாக்கமாகத் தொடர்கிறது.
1972-ம் ஆண்டு. எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்ட
காலகட்டம். இதனை ஜீரணிக்க முடியாத ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நாள்தோறும்
அவரைச் சந்திக்க சென்னை நோக்கி வந்தனர். அனைவரையும் அவர் அடையாறு சத்யா
ஸ்டுடியோவில் சந்தித்துப் பேசினார்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவருக்கு ஆறுதல் சொல்ல வந்த தொண்டர்களை
நூறு நூறு பேர்கள் கொண்ட குழுவாக அழைத்து சந்தித்து அவர்களுக்கு ஆறுதல்
சொல்லி அனுப்புகின்ற விசித்திர நிகழ்வை தமிழக அரசியல் அப்போதுதான்
பார்த்தது. இப்படி ஒரு தனிமனிதருக்காக அதற்கு முன்னும் சரி, பின்னாலும்
சரி மக்கள் கொதித்தெழுந்து தங்களுக்கு ஒரு தீங்கு நேர்ந்ததுபோல மனம்
நொந்த சம்பவம் நிகழ்ந்ததில்லை.
அவ்வாறு சந்திக்க வாய்ப்பளிக்கப்பட்ட குழுவில் ஒருவனாக நானும் இருந்தேன்.
எங்களிடம் எம்.ஜி.ஆர். பேசும்போது அன்றைய மதுரை மேயரும், திமுகவின்
முன்னோடித் தலைவர்களில் ஒருவருமான மதுரை முத்துவைப் பற்றிய பேச்சு
வந்தது. மதுரை முத்து அப்போது திரையிடப்படவிருந்த "உலகம் சுற்றும்
வாலிபன்' படத்தை மதுரை மாநகரில் திரையிட விடமாட்டேன் என்று ஆவேசத்துடன்
கூறி வந்த நேரம் அது.
மதுரை முத்துவை குறிப்பிட்டு எம்.ஜி.ஆர். பேசும்போது முத்தண்ணன் என்று
குறிப்பிட்டுப் பேசினார். ஆவேசத்துடன் இடைமறித்த நான் "அந்த துரோகியை
அண்ணன் என்று சொல்லாதீர்கள்' என்று பலம்கொண்ட மட்டும் கத்தினேன்.
எம்.ஜி.ஆர். தன் பேச்சை நிறுத்திவிட்டு என்னை நோக்கி, "நீ நம்
கட்சிக்காரனா? அல்லது வேற்றுக் கட்சிக்காரனா?' என்று கோபமாகக் கேட்டார்.
"நான் எந்தக் கட்சியும் கிடையாது. ஆனால் எம்.ஜி.ஆர். ரசிகன். இதோ
பாருங்கள் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்ற அடையாள அட்டை' என்று
எடுத்துக்காட்டினேன். கோபம் தணிந்த அவர் என்னை அருகில் அழைத்துத் தட்டிக்
கொடுத்தார்.
""தம்பி இன்று முத்தண்ணன் என்னை தாக்கி பேசுகிறார் என்பதற்காக திராவிட
இயக்க வளர்ச்சிக்காக அவர் ஏற்றுக்கொண்ட தியாகத் தழும்புகளை மறந்துவிட
முடியுமா? ஏன் அவரே நாளை நம் பக்கத்தில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து
நம்மோடு வந்து சேரமுடியாது?'' என்று கேட்டார். நானும் என்னைப் போன்று
ஆவேசமடைந்த ரசிகர்களும் அமைதியானோம். அவரது கூற்றின்படியே முத்தண்ணன்
பின்னாளில் எம்.ஜி.ஆரிடம் வந்து இணைந்த நிகழ்ச்சி எம்.ஜி.ஆரின் பண்பட்ட
அரசியல் முதிர்ச்சியையும், தீர்க்க தரிசனத்தையும் எங்களுக்கு
உணர்த்தியது.
செஞ்சி நகரச் செயலாளராக இருந்த என் நண்பர் கு. கண்ணனின் திருமண விழா.
செஞ்சி சந்தை மேடு மைதானத்தில் திருமணப் பந்தல் போடப்பட்டிருந்தது. அன்று
திங்கள்கிழமை. மேடையில் மணமகன் கண்ணனுடன், செஞ்சித் தொகுதி அமைப்பாளர்
கோ. கிருஷ்ணசாமி, மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான
அமரர் சி. வேணுகோபால் (முன்னாள் அமைச்சர் சி.வே. சண்முகத்தின் தந்தை)
ஆகியோர் இருந்தனர்.
முகூர்த்த வேளை முடியும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. சரியாக 7.20
மணிக்கு எம்.ஜி.ஆர். மேடைக்கு வந்தார். நான் ஒலிபெருக்கியில் இந்தத்
திருமணத்தை தலைவர் எம்.ஜி.ஆர். தலைமையேற்று நடத்தித்தர வேண்டுமென
முன்மொழிகிறேன் என்று சொன்னேன்.
எம்.ஜி.ஆர். என்னை இடைமறித்து, ""பேச்செல்லாம் இப்போது வேண்டாம். எங்கே
மணமாலை எடுங்கள்''! என்று மாலையை வாங்கிக்கொண்டு உடனடியாக மாலையை
மாற்றித் தாலியைக் கட்டச் சொல்லி திருமணத்தை நடத்தி வைத்தார்.
""இன்று திங்கள்கிழமை, காலை 7.30 மணிக்கு ராகு காலம் தொடங்குகிறது.
அதற்குமுன் திருமணத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில்தான்
ஓடோடி வந்தேன்.
எனக்கு இந்த ராகுகாலத்தின்மீது நம்பிக்கை கிடையாது. நாடோடி மன்னன்
படத்திற்கு ராகுகாலத்தில்தான் பூஜை போட்டேன். என் சொத்தையெல்லாம் அடமானம்
வைத்துப் படத்தை எடுத்தேன். இதோடு இந்த இராமச்சந்திரன் தொலைந்தான் என்று
திரையுலகைச் சேர்ந்த அனைவருமே என் காதுபடவே பேசினார்கள். ஆனால், நானோ என்
உழைப்பின் மீதும் தமிழக மக்களின் மீதும் நம்பிக்கை வைத்து, ""படம் வெற்றி
பெற்றால் நான் மன்னன் - தோற்றால் நாடோடி, அவ்வளவுதானே!'' என்று சொன்னேன்.
நாடோடி மன்னன் வெற்றி பெற்றது. உழைப்பும் நம்பிக்கையும் என்னை வாழ
வைத்தது.
என்னைப் போலவே என் தம்பி கண்ணனும் ராகு காலத்தில்
நம்பிக்கையில்லாதவர்தான். ஆனால், அவருக்கு பெண் கொடுக்கும் பெற்றோர்களும்
எங்களைப் போலவே இருக்க வேண்டும் என்று நாங்கள் எப்படி எதிர்பார்க்க
முடியும்? தாம் பெற்றெடுத்து, பாராட்டி, சீராட்டி வளர்த்த தன் பெண்ணையே
என் தம்பிக்கு தாரைவார்த்து கொடுக்கும் அந்த பெற்றோர்களும் அவர்களின்
உறவினர்களும் அணு அளவும் மனம் சஞ்சலமடைய நானோ, என் தம்பி கண்ணனோ காரணமாக
இருக்கலாமா? ஆதலால்தான் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து
இத்திருமணத்தை முகூர்த்தவேளை முடிவதற்கு முன்னமேயே விரைவாக நடத்தினேன்''
என்று விரிவாகப் பேசி மணமக்களை வாழ்த்தினார்.
தன்னுடைய கொள்கையை மற்றவர்கள் மீது திணிப்பது மாபெரும் தவறு என்பதனை
உணர்ந்திருந்த அவரது மனிதநேயம்தான் இன்றுவரை அவரை போற்றி புகழவைத்துக்
கொண்டிருக்கிறது என்றால் அதுதான் மறுக்கமுடியாத உண்மை.
தன்னுடைய இளம் வயதில் தன் தாயார் மற்றவர்கள் வீட்டில் அரிசி புடைக்கும்
கூலி வேலை செய்து, அதற்கு கூலியாக கிடைத்த நொய் அரிசியை கொண்டு தனக்கும்
தன் தமையனாருக்கும் கஞ்சி காய்ச்சி தருவார்கள் என்றும், அந்த
கொடுமையிலும் கொடுமையான இளமையின் வறுமையால்தான் தாமும் தம் தமையனாரும்
கல்வி கற்க இயலாமல் போனது என்பதனையும் பகிரங்கமாக எடுத்துச் சொல்லி இந்த
அவலநிலை வருங்கால சந்ததியினருக்கு வரக்கூடாது என்று எண்ணத்தோடுதான்
காமராஜ் பொதுமக்கள் பங்களிப்பில் செயல்படுத்திய மதிய உணவுத் திட்டத்தை
அரசின் முழு பங்களிப்பாக மாற்றி சத்துணவுத் திட்டமாக அமலுக்குக் கொண்டு
வருவதாக அறிவித்தார் எம்.ஜி.ஆர். அதிலிருந்த மனிதநேயமும், சமுதாய
சிந்தனையும் தான் இன்றும் அவரை தமிழ்ச் சமுதாயம் அன்புடனும் பாசத்துடனும்
புரட்சித்தலைவர் என்று நினைவுகூர்வதன் அடிப்படைக் காரணம்.
"நான் பகுத்தறிவு வாதி, ஆதலால் கோயில்களுக்கு போகமாட்டேன்' என்றெல்லாம்
சொல்லிக்கொண்டு வந்தவர்கள் மத்தியில், "நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன்.
கோயில்களுக்குச் செல்லுவேன்' என்று பகிரங்கமாகக் கூறி உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசாமல் செயல்பட்டவர். அதேநேரத்தில், தான் ஏற்றுக்கொண்ட தலைவர்
பெரியாரின் ஏனைய பல கொள்கைகளை நடைமுறைப்படுத்திய பெருமையும்
எம்.ஜி.ஆரைத்தான் சாரும். எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைக்குக்
கொண்டுவந்த பெருமைக்குரியவர் எம்.ஜி.ஆர். தானே தவிரத் தாங்கள் பெரியாரின்
பாசறையிலிருந்து வந்ததாகக் கூறிக்கொள்பவர்கள் அல்லவே.
தமிழுக்குப் பல்கலைக் கழகம் எடுத்த பெருமையும், அண்ணாவுக்குப் பிறகு
உலகத் தமிழ் மாநாடு நடத்திய பெருமையும் எம்.ஜி.ஆரைத்தானே சாரும்!
மக்களை நேசித்தவர் - மனிதநேயத்தைப் போற்றியவர் - மக்களால் மறுபிறவி
கண்டவர் என்ற நிலையில் மக்களின் மனதில் மறையாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்
என்கிற பெருமைக்கு உரியவர் எம்.ஜி.ஆர். என்பதில் யாருக்கும் மாற்றுக்
கருத்து இருக்க வழியில்லை.
எம்.ஜி.ஆருக்கும் அண்ணாவுக்கும் இடையே ஒரு மிகப்பெரிய நெருக்கம்
அமைந்துவிட்டது. "எனது இதயக்கனி' என்று அண்ணாவால் அடையாளம் காட்டப்பட்ட
எம்.ஜி.ஆரின் புகழ் நிலைத்திருப்பது வரை அண்ணா நாமம் வாழும். அண்ணாவின்
நாமம் வாழுமட்டும் எம்.ஜி.ஆரின் புகழ் நிலைத்திருக்கும். அதனால்தான் தாம்
மறைந்தும் கூடப் பிரியக்கூடாது என்று சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்ச்
சமுதாயத்தின் இரண்டு தலைசிறந்த தலைவர்களும் அருகருகே மீளாத் துயிலில்
ஆழ்ந்திருக்கின்றனர் என்று தோன்றுகிறது!
(இன்று எம்.ஜி.ஆர். பிறந்தநாள்)
கா.இர. குப்புதாசு
பொன்விழா ஆண்டு நினைவலைகள்.
14.1.1966 - 18.2.1966.
36 நாட்களில் மூன்று வெற்றி காவியங்களை ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் மக்கள் திலகம் எம்ஜிஆர்
அன்பே வா - 14.1.1966
நான் ஆணையிட்டால் . 4.2.1966
முகராசி - 18.2.1966
ஏ.வி.எம் , சத்யா மூவிஸ் , தேவர் பிலிம்ஸ் -மூன்று பெரிய நிறுவனங்களில் மக்கள் திலகத்தின் படங்கள் வெளிவந்தது .அன்பேவா - பிரமாண்ட வண்ணப்படைப்பாகவும் , நான் ஆணையிட்டால் சமூக சீர்திருத்த படமாகவும் , முகராசி பொழுது போக்கு படமாகவும் வந்து ரசிகர்களை திக்கு முக்காட வைத்து விட்டது .
மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பு , இனிய பாடல் காட்சிகள் , புதுமையான சண்டை காட்சிகள் என்று எம்ஜிஆர் ரசிகர்களுக்கு விருந்து கிடைத்தது .
புதிய வானம் புதிய பூமி ....
தாய் மேல் ஆணை ..
உண்டாக்கி விட்டவர்கள் இரண்டு பேரு
நல்ல வேலை நான் பிழைத்து கொண்டேன்
அன்பே வா ..உள்ளம் என்றொரு .....
ஏய் ,,நாடோடி ..
நான் பார்த்ததிலே ...அவள்
ராஜாவின் பார்வை ராணியின் ..
பாட்டு வரும் உன்னை ...
நான் உயர உயர போகிறேன் ..
உனக்கும் எனக்கும்தான் பொருத்தம்
முகத்தை மூடி கொண்டது ...
12 இனிய பாடல்கள் .....
மூன்று படங்களின் திருவிழா நாட்களை ரசித்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் .
மறக்க முடியாத நாட்கள் .................
இந்த மூன்று படங்களும் இன்று வரை மறுவெளிட்டில் சாதனை படைத்து கொண்டு இருப்பது நம் தலைவருக்கு மட்டுமே சாத்தியம்
எல்லோர்க்கும் பிடித்த அருமையான மக்கள் திலகத்தின் பாடல் .
https://youtu.be/NPaQS0qFyGY
இன்று (20/01/2016) பிற்பகல் 1.30 மணி முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த
பெரிய இடத்துப் பெண் , ராஜ் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது .
http://i64.tinypic.com/2z3yjdk.jpg