Scale நீங்க யோசிக்கிற கோணமும் சரியென்றே படுகிறது. இதே அலைவரிசையில் சில வருடங்களுக்கு முன்பு நாயகன் படத்தை பார்த்த போது தோன்றியது. Plum சொல்வது போல, ஹிந்தி தெரிந்தாலும் தெரியாதது போல காட்டிக்கணும் என்ற கோணத்திலும் அடைக்கமுடியாது. உலகத்துல தன் தாய்மொழியத் தவிர இன்னொரு மொழியை ஒருவர் பேசுவாரானால், அது பெரிய/உயரிந்த விஷயம் தான். சிறுவயதில் இருந்து இருந்து ஒருவர் ஹிந்தி /மராட்டி பேசும் மாநிலத்தில் இருந்தும், ஹிந்தி /மராட்டி தெரியாமல் கடைசிவரை இன்னொருவரை மொழி பெயர்ப்பாளராக கூடவே வைத்துக்கொள்வதில் நம்பகத்தன்மை குறைந்தே காணப்படுகிறது. பொழப்புக்காக ஒருவன் இன்னொரு மொழி பேசும் இடத்தில் புலம் பெயர்ந்து, அவர்களின் துணையோடு தொழில் செய்து, ஆனால் அவர்கள் மொழி தெரியவில்லை என்றால், இரு காரணங்களே இருக்க முடியும். 1) தன் தாய்மொழி மீது இருக்கும் அளவு கடந்த வெறி 2) இயலாமை. வேலு நாயக்கரின் பாத்திரத்தை உருவகப் படுத்தியதை வைத்துப் பார்க்கும் போது இரண்டாம் காரணம் தான் சரியோ என நினைக்கத் தோன்றுகிறது. மொழி வெறியை பறை சாற்றும் படி ஒரே ஒரு காட்சி கூட படத்தில் கிடையாது என நினைக்கிறேன். ஒருவேளை இந்தக் காலக் கட்டத்தில் மணி நாயகனை எடுப்பாரேயானால், வேலு நாயக்கர் தமிழ் தவிர ஹிந்தி/மராட்டியை பேசும்படியான காட்சிகளை வைத்து கீழே சப்-டைட்டில் போட முனைவார் எனத் தோன்றுகிறது.