பகிர்ந்து கொள்ளுங்கள் ..மிக்க ஆவலாயிருக்கிறோம் :DQuote:
Originally Posted by pammalar
Printable View
பகிர்ந்து கொள்ளுங்கள் ..மிக்க ஆவலாயிருக்கிறோம் :DQuote:
Originally Posted by pammalar
இத்தனை நாள் இந்த திரியின் வாசகராக மட்டுமே இருந்த சுவாமிநாதன் இன்று முதல் பங்களிப்பாளராகவும் மாறுவதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.
நடிகர் திலகத்தைப் பற்றிய புத்தங்கங்களின் வரிசையில் மேலும் ஒரு தகவல். பொம்மை மாத இதழ் முன்பு வெளியாகி கொண்டிருந்தது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதில் 1977-ல் தொடங்கி கிட்டத்தட்ட பதினெட்டு மாதங்களுக்கு நடிகர் திலகம் வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அந்த கேள்வி பதில் தொகுப்பை ஒரு புத்தக வடிவில் டால்டன் பப்ளிகேஷன்ஸ் [சந்த மாமா, அம்புலி மாமா மற்றும் பொம்மை வெளியிட்டாளர்கள்] வெளியிடுகிறார்கள். இது தவிர பொம்மை இதழில் கதாநாயகனின் கதை என்று நடிகர் திலகம் ஒரு தொடர் கட்டுரை எழுதினார். அதுவும் புத்தக வடிவம் பெறுகிறது. அனேகமாக அக்டோபர் மாதமே இந்த புத்தகங்கள் வெளியாகலாம்.
அன்புடன்
பேரறிஞர் அண்ணாதுரை அவர்கள் நடிகர்திலகத்தின் அதி தீவிர ரசிகர் என்பது மறுக்க முடியாத உண்மை. பராசக்தி தொடங்கி தமது மறைவுக்கு இரண்டு மாதங்களுக்கு முன் வெளிவந்த உயர்ந்த மனிதன் வரை பல திரைப்படங்களை கண்டு களித்து நடிகர்திலகத்தின் நடிப்பை வெகுவாக ரசித்து மகிழ்ந்தவர். இத்துணையும் அவரது ஒய்வற்ற, அயராத அரசியல் பணிகளுக்கிடையே!
"பராசக்தி திரைப்படத்தை கணேசனைக் கதாநாயகனாகக் கொண்டு தான் தயாரிப்பேன்" என்று உறுதியோடு நின்ற நடிகர் திலகத்தின் இதயதெய்வம் திரு. பெருமாள் அவர்களுக்கு அன்று உறுதுணையாக இருந்து ஊக்கமளித்தவர் அண்ணா. மேலும், தமது உடல்நிலை சரியில்லாத நிலையிலும், நடிகர் திலகத்தின் 125வது திரைப்படமான உயர்ந்த மனிதன் திரைப்பட விழாவிற்கு 15.12.1968 அன்று தமிழக முதல்வராக வருகை புரிந்து நமது நடிகர்திலகத்தை பாசத்தோடு பாராட்டி மகிழ்ந்தவர் அண்ணா. இந்த விழா சென்னை ஏவிஎம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
பேரறிஞர்-நடிகர் திலகம் தகவல்கள் தொடரும்...
அன்புடன்,
பம்மலார்.
லேட்டஸ்ட் (20.9.2009) ராணி வார இதழின் "அல்லி பதில்கள்" பகுதியில் வெளியாகியுள்ள ஒரு கேள்வி-பதில் :
சிவாஜி என்றதும் நம் நினைவுக்கு வருபவர் மராட்டிய மன்னரா? நம் நடிகர் திலகமா? (ஆ.கோ. தேவராசன், சிந்தலப்பட்டடை)
வீரம் என்றால் அந்த சிவாஜி! நவரசம் என்றால் இந்த சிவாஜி!
என்னே அருமையான பதில்! நவரசத்தினுள் வீரமும் அடக்கம் தானே!
இந்தக் கேள்வி-பதிலின் அருகாமையில் சிறிய அளவுகளில் சத்ரபதி சிவாஜி புகைப்படமும், நமது நடிகர் திலகத்தின் பக்த துக்காராம் சிவாஜி கெட்டப் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளன. சத்ரபதி படம் அசல் என்றால், சிவாஜி வேட புகைப்படத்தில் நம் நடிகர் திலகம் அசலை விஞ்சிய அசலாக காட்சியளிக்கிறார்.
விரைவில் வருகிறது சிவாஜி புரொடக்ஷ்ன்ஸ் அஜீத் நடிக்கும் அசல் !!!
அன்புடன்,
பம்மலார்.
:D Good one, Pammalar-sar. Now, you have captured the attention of Ajith fans. :)
திரு பம்மல் சார்,
தங்களின் வருகை எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை தந்துள்ளது.தங்களின் எழுத்து நடையும் ஏறக்க்குறைய இந்த திரியின் நாயகன் திரு.முரளி சாரின் நடையைப்போலவே உள்ளது எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை த்ந்துள்ளது.தொடர்ந்து கலக்குங்கள்.
மேலும் நீங்கள் வசந்தமாளிகை இதழை நடத்திய போது உங்களோடு இருந்தவர்களை(குறிப்பாக நாஞ்சில் இன்பா போன்றவர்களை)இந்த திரிக்கு கொண்டு வரவேன்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
I fully agree with you-the absence of such Sivaji's films will ruin the current generation. It is a pity.Quote:
Originally Posted by abkhlabhi
I haven't seen this photo earlier. ThanksQuote:
Originally Posted by abkhlabhi
சமீபத்தில் 1976-ம் ஆண்டின் 'பொம்மை' மாத இதழொன்றைக் காண வாய்ப்புக்கிடைத்தது. அப்போது அந்தப்பத்திரிகையில் 'மாதம் ஒரு நடிகர் பதில்கள்' என்ற வரிசையில் நான் பார்த்த இதழில், மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் பதிலளித்திருந்தார்...
ஒரு வாசகரின் கேள்வி: "சமீபகாலமாக சிவாஜியின் படங்கள் சரியாக அமையவில்லையே. அவர் திறமை குறைந்துவிட்டதா?"
திரு. ஜெய்சங்கர் பதில்: "தங்கத்தின் விலை ஏறலாம் இறங்கலாம். அது தங்கத்தின் குற்றமல்ல. தரத்தில் தங்கம் என்றைக்கும் தங்கம்தான். அதுபோலத்தான் நம் நடிகர் திலகமும். அவர் திறமை என்றைக்கும் குறையாது. புகழ் என்றைக்கும் சரியாது".
Nice reply from JaiShankar :clap: