Originally Posted by pammalar
3. கள்வனின் காதலி - 13.11.1955 - 83 நாட்கள்
5. புதையல் - 10.5.1957 - 84 நாட்கள்
6. சம்பூர்ண ராமாயணம் - 14.4.1958 - 165 நாட்கள்
14. திருவிளையாடல் - 31.7.1965 - 167 நாட்கள்
21. வியட்நாம் வீடு - 11.4.1970 - 90 நாட்கள்
26. பாபு - 18.10.1971 - 89 நாட்கள்
32. நான் வாழவைப்பேன் - 10.8.1979 - 84 நாட்கள்
[color=green][b]
பல படங்கள் வெள்ளிவிழாவையும், 100 நாட்களையும் மயிரிழையில் தவற விட்டிருப்பது தெரிகிறது.
திருவிளையாடலை இன்னும் ஒரு 8 நாட்கள் ஓட்ட முடியாத அந்த விநியோகஸ்தர் யாரென்று தெரியவில்லை. ஓடியிருந்தால் நான்கு அரங்குகளில் 'வெள்ளி விழா' ஆகியிருக்கும். அதுபோல சம்பூர்ண ராமாயணம் 10 நாட்கள் ஓடியிருந்தால் அதுவும் வெள்ளி விழா.
வியட்நாம் வீடு படம், மதுரையில் பவர்ஃபுல் விநியோகஸ்தர்களான சேது பிலிம்ஸாரால் மாணவன் படத்துக்காக 90 நாட்களில் எடுக்கப்பட்டதாக முன்பு முரளியண்ணா சொல்லியிருந்தார்.
இதுபோன்ற இடங்களில்தான், திரு ஆர்.எம்.வீரப்பனையும், திரு வி.சி.சண்முகத்தையும் ஒப்பிட வேண்டியிருக்கிறது.
அதுபோல 70-களில் 'கல்கண்டு' இதழில் வந்திருந்த ஒரு கேள்வி பதில் தேவையில்லாமல் இப்போது நினைவு வருகிறது.
கேள்வி: "முசிறி புத்தன், சின்ன அண்ணாமலை - ஒப்பிடுக".
தமிழ்வாணன் பதில்: "முசிறிபுத்தன் எம்.ஜி.ஆருக்கு கிடைத்த பலம். சின்ன அண்ணாமலை சிவாஜிக்கு கிடைத்த பலவீனம்".