"தங்க பதுமை"
நடிகர் திலகத்தின் 53வது படம். 10/01/1959 அன்று வெளியான படம். 1959 ஆம் வருடம் வெளியான 6 நடிகர் திலகத்தின் படங்களில் தங்க பதுமையும் ஒன்று. வசூலில் மிக பெரிய வெற்றி அடைந்த படம். மறு வெளியிட்டிலும் வெற்றி அடைந்த படம். நான் பிறப்பதுகு முன்பே வெளி வந்த படம்.
நடிகர் திலகம், நாட்டிய பேரொளி, M . N . ராஜம் , மற்றும் பலர் நடித்த படம். A .S .A சாமி இயக்கத்தில், ஜுபிட்டர் pictures தயாரித்த படம்.
இப்படத்தின் பின்னணயில் சுவாசிரியமான கதை உண்டு. 1942 ஆம் ஆண்டு ஜுபிட்டர் pitcutres "கண்ணகி" என்ற பெயரில் P .கண்ணம்பா, p .U .சின்னப்பா நடிக, படத்தை தயாரித்து வெளியிட்டு மிக பெரிய வெற்றி பெற்றது. கண்ணகி என்ற வேடத்தில் கண்ணம்பா தன் நடிப்பினால் சரித்த்ரம் படைத்தார்.
1950 ஆம் வருட பிற்பகுதில் நடிகர் திலகத்தை "கோவலனாக" நடிக்க வைத்து மீண்டும் "கண்ணகி" யை தயாரிப்பதாக ஜுபிட்டர் சோமு முடிவு செய்திருந்தார். 1942 வெளியான "கண்ணகி" யை தன்னுடைய நெருங்கிய நண்பரான திரு.அண்ணாதுரை அவர்களுக்கு போட்டு காட்டினார். தங்க பதுமை படத்தை இயக்கிய சுவாமி அவர்களும் கூட இருந்தார். இப்படத்தை மீண்டும் தயாரித்தல் வெற்றியடையாது என்று அண்ணா அவர்கள் கூறினார். கண்ணகி படத்தை மீண்டும் தயாரிக்கும் என்னத்தை ஜுபிட்டர் சோமு கை விட்டுவிட்டார்.
ஆனால், இயக்குனர் சுவாமி இதே போல் ஒரு கதையை உருவாக்க எண்ணம் கொண்டார். எண்ணத்தை செயலாகினார். அதுவே "தங்க பதுமை". அரு ராமநாதன் என்பவர் "காதல்" என்ற மாத பத்திரிகைக்கு அசிரியரராக இருந்தார். அவரை இப்படத்திற்கு திரைக்கதை, வசனத்தை எழுத வைத்தார்.
நடிகர் திலகத்தின் தர்ம பத்தினியாக நாட்டிய பேரொளி - -- கண்ணகியின் மறு அவதாரம் போல், பெண்களின் இலக்கணமாக அவரின் பாத்திர படைப்பு அமைந்திருந்தது. ராணி M .N. ராஜம், நடிகர் திலகத்தை காதலிப்பார். அவரை, அவருடைய தர்மபத்தினியுடன் சேர விடாமல் தடுபார். நடிகர் திலகத்தின் கண்களை குருடாக்கும் அளவிற்கு ராணி ராஜம் நடந்து கொள்வார். கடைசியில், தங்க பதுமை போன்ற , கடவுள் சிவனின் பத்தினியிடம் நாட்டிய பேரொளி நடனத்துடன் வேண்டிகொள்வர்.
நடிகர் திலகம் மீண்டும் கண்களை பெற்று, சந்தோஷம் மகா படம் முடியும்.
3 மணிநேரம் படம். படத்தின் அடி 5819 .23
நடிகர் திலகத்தின் நடிப்பு எப்பொழுதும் போல. வித்தியாசமான வேடத்தில் ராஜம் அசத்தியிருபார். (தமிழ் திரை உலகம் இவரை சரியாக பயன்படுத்திகொள்ளவில்லை. அற்புதமான செட். ( தென் இந்தியாவிலே அற்புதமாக செட் போடும் இயக்குனர் T .V .S .Sama -- இப்பொழுது முற்றும் மறந்து விட்டது).
நாட்டிய பேரொளியின் dedication :
இயக்குனர் சுவாமி சொன்னது :
"இப்படத்தின் ஷூட்டிங் சமயத்தில், உணவு இடைவேலையின் பொது சும்மா உக்காராமல், அரட்டை அடிக்காமல், அதே நேரத்தில், தனக்கு கொடுத்த வசனத்தை கையில் வைத்து கொண்டு, படித்து கொண்டே படிகளின் மேலும் கிழும் தனியாக நடந்து கொண்டே விதவிதமாக வசனங்களை உச்சரித்து பழகி கொண்டிருதார்". "தொழிலில் இப்படிபட்ட ஒரு devotion உள்ள நடிகையை நான் கண்டதில்லை"
நடிகர் திலகம், நாட்டிய பேரொளி, ராஜம் நடிப்பும் மற்றும் "கொடுத்தவனே" என்ற பாடலுக்காக பார்க்கவேண்டிய படம்.
இந்த படம் மிக பெரிய வெற்றி அடைந்தது. மறு வெளியிட்டிலும் வெற்றி தான்.(Mr .முரளி / பம்மலார்/ ராகவேந்திரன்/சாரதா மேடம் - விவரங்களை கொடுப்பார்கள் ) தமிழ் திரை உலக சரித்தரத்தில் இது ஒரு தங்க பதுமை.
பின்குறிப்பு : இது விமர்சனம் அல்ல.
நன்றி : பல பேர். எல்லோருக்கும் என் வணக்கங்கள்.