[emoji262] கவரிமான் [emoji262]
https://uploads.tapatalk-cdn.com/201...bffff1041e.jpg
Printable View
[emoji262] கவரிமான் [emoji262]
https://uploads.tapatalk-cdn.com/201...bffff1041e.jpg
[emoji537] மாடி வீட்டு ஏழை[emoji125]
https://uploads.tapatalk-cdn.com/201...3bd1952942.jpg
[emoji91] தியாகி[emoji91]
https://uploads.tapatalk-cdn.com/201...f9024e2fce.jpg
https://uploads.tapatalk-cdn.com/201...33769634e7.jpg
[emoji617] ஜெனரல் சக்கரவர்த்தி[emoji575]
https://uploads.tapatalk-cdn.com/201...1f94f0b32e.jpg
ஒரே வாரத்தில் 150 ஹவுஸ்புல் காட்சிகள். அண்டை மாநிலத்திலும் சாதனை புரிந்துள்ளார் தமிழின் சாதனை மன்னன்.
https://uploads.tapatalk-cdn.com/201...374fab097d.jpg
கருடா [emoji94]
[emoji216] [emoji216] [emoji216] சௌக்கியமா?
https://uploads.tapatalk-cdn.com/201...acb2053ef5.jpg
[emoji303] [emoji303] [emoji303]இமயம் [emoji303] [emoji303] [emoji303]
https://uploads.tapatalk-cdn.com/201...8295148f3e.jpg
எங்களின் செல்லப்பிள்ளை இளவல் செந்தில்வேல்!
ஜமாய்த்து விட்டாய் ராஜா. அமர்க்களமான அமர்க்களம். இருநூறுகளுக்குப் பின் நடிகர் திலகத்தின் வெளியே தெரியா சாதனைகளை புறம் சொல்லி தூற்றியவர்கள் முகத்தில் அற்புதமான பேப்பர் கட்டிங்குகளை வைத்து அவர்கள் முகத்தில் கரி பூசி விட்டாய். இந்த ஆதாரங்கள் ஒன்று போதும். காலாகாலத்துக்கும் பேசும். தியாகி, பரீட்சைக்கு நேரமாச்சு, மாடி வீட்டு ஏழை, ஜெனரல் சக்கரவர்த்தி, எமனுக்கு எமன், பேயாட்டம் ஆடிய திரிசூலம் என்று தலைவரின் சாதனைகள் வியக்க வைக்கின்றன. சந்தைக்கு உங்கள் மூலம் வெளிவந்தவுடன் மணம் பரப்பும் நடிகர் திலகத்தின் புது பூக்கள்.
யம்ம்மாடி! என்ன மாதிரி விளம்பரங்கள்! அனைத்தும் நான் பார்த்து ரசித்தது. வெளிவராத படங்களின் எண்ணிக்கை தலைவர் என்றுமே திரையுலகில் எவரும் நெருங்கமுடியாத ராஜா என்றும் பறை சாற்றுகின்றன. 'புண்ணிய பூமி' படத்தில் தலைவர் முரட்டுத்தனமாக கோடரி பிடித்திருக்கும் அந்த விளம்பரம் தினத்தந்தியில் முழுப்பக்கம் வந்து அன்றைய என் தூக்கத்தைக் கெடுத்தது. அந்த பேப்பரை எட்டாக மடித்து கடலூர் நூல்நிலையத்தில் இருந்து சுட்டதும் நினைவுக்கு வருகிறது.
எப்படி இருநூறுக்கு முன் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறதோ அதே போல இருநூறுக்குப் பின் ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. குறிப்பாக 'திரிசூலம்' படம் வந்த போது இளைஞர்களாயும், மாணவர்களாயும் இருந்தவர்கள்.
என்னிடம் கோல்ட் ஸ்டார், நீங்கள், நம் அன்புக்குரிய திருச்சி பாஸ்கர், மற்றும் பல நண்பர்கள் போனில் உரையாடும் போது இருநூறுக்குப் பிறகு வந்த தலைவரின் பல படங்கள் எங்களுக்குப் பிடித்தமானவை...அவைகளை பற்றி எழுதுங்கள் என்று கேட்பார்கள். இப்போது அவற்றில் சிறந்தவற்றை எடுத்து எழுத ஆசை. குறிப்பாக சிம்ம சொப்பனம்.
நீங்கள் அளித்த ஒவ்வொரு பேப்பர் கட்டிங் பதிவுகளும் என்னுள்ளே பல நினைவுகளை கிளர்ந்து எழ செய்கின்றன. நாங்கள் இளைஞர்கள் கடலூரில் ஒன்று சேர்ந்து ஒவ்வொரு படத்திற்கும் செய்த அமர்க்களங்கள் கொஞ்சமா நஞ்சமா? 'கீழ்வானம் சிவக்கும்' படத்திற்கு கடலூர் வேல்முருகன் திரையரங்கில் முதல் நான்கு வாரங்களுக்கு பெண்களுக்கு மட்டும் டிக்கெட் தந்த சாதனைகள் நினைவில் இனிமையாக நிழலாடுகின்றன.
'தியாகி' ஒரு மாதங்கள் ஓடி வசூலில் பின்னியது.
'நல்லதொரு குடும்பம்' 45 நாட்களுக்கு மேல் கடலூர் ரமேஷ் திரை அரங்கில் ஓடி களேபரம் பண்ணியது.
'எமனுக்கு எமன்' படம் கடலூர் கமலத்தில் எப்போதுமே கூட்ட நெரிசலுடன் ஓடி வாகை சூடியது. அதே தியேட்டரில் 'வாழ்க்கை' சொல்ல முடியாத சாதனைகளை நிகழ்த்தி 50 ஆவது நாள் ஷீல்டுடன் அலங்காரமாய் மின்னியது.
'சத்திய சுந்தரம்' படத்திற்கும் பெண்களுக்கு மட்டுமே முதல் இரண்டு வாரங்களுக்கு தரப்பட்டது. யாருமே எதிர்பாரான வகையில் 'அதிசயத் தம்பதிகள்' என்ற இந்த 'சத்திய சுந்தரம்' கடலூரில் 'திரிசூலம்' படத்தின் வசூலை எட்டியது. மகாமகத் திருவிழா போன்று அப்படி ஒரு கூட்டம் இப்படத்திற்கு. நம் அருமை நண்பர் கல்நாயக் இதை அறிந்திருப்பார் என்று நம்புகிறேன்.
இதில் ஏமாற்றிய படங்கள் 'வசந்தத்தில் ஒரு நாள்' மற்றும் 'பரிட்சைக்கு நேரமாச்சு'. இரண்டும் வேல்முருகன் திரையரங்களில் சுமாராகத்தான் ஓடின. 'லாரி டிரைவர்' அருமையாக கல்லா கட்டினார். வேல்முருகன் திரை அரங்கில் தலைவரின் முதல் படம். இருபத்து எட்டு நாட்கள் வசூல் சாதனை நிகழ்த்தியது. அதே போல பாடலியில் 'கவரிமானு'ம் அருமையாக ஓடியது. 'திரிசூல'த்தின் பிரம்மாண்டத்தில் இந்த சாதனை வெளியே தெரியாமல் போய் விட்டது.
'வெள்ளை ரோஜா' பற்றி சொல்லவே தேவையில்லை. உடன் வெளியான அத்தனை படங்களையும் முறியடித்து வசூலில் பிரம்மாண்ட சாதனையை கடலூர் நியூசினிமாவில் நிகழ்த்திக் காட்டியது.
'திருப்பம்' கடலூர் கமலத்தில் அபார வெற்றி பெற்று கலக்கியது. இந்தப் படத்தின் ரசிகர் ஷோவுக்கு நடந்த அமர்க்களம் போல வேறு இந்தப் படத்திற்கும் நடந்திருக்காது. தியேட்டரில் அள்ளிய லாட்டரி டிக்கெட் கவுண்டர் பைல்கள் மலை போல குவிந்து கிடந்தன. தலைவர் சவப்பெட்டி இழுத்து வரும் அறிமுகக் காட்சியில் இடி விழுந்தது போனற ஆரவாரம்.
அதே போல 'சாதனை' அமர்க்களமாக ஓடி சாதனை செய்தது. இத்தனைக்கும் இரண்டாவது ரிலீஸ்.
நெஞ்சங்கள், இமைகள், இரு மேதைகள், எழுதாத சட்டங்கள், சிரஞ்சீவி, நேர்மை, குடும்பம் ஒரு கோவில் இவையெல்லாம் நம்மை ஏமாற்றிய படங்கள்.
'மாடி வீட்டு ஏழை' ஒரு மாதம் கமலத்தில் நன்றாகக் போனது.
'விஸ்வரூபம்' பெயரைப் போலவே விஸ்வரூப வெற்றி ஈட்டியது. இது பாடலியில்.
நீண்ட நாட்களுக்குப் பின் கடலூர் முத்தையா புதுப்பிக்கப்பட்டு 'சந்திப்பு' பேயாட்டம் ஆடியது. 50 நாட்களும் மாசி மகாமகத் திருவிழா போல அப்படி ஒரு கூட்டம். தியேட்டர் சிப்பந்திகள் பலர் பிளாக்கில் டிக்கெட் விற்றே ஒவ்வொருவரும் 5 பவுனுக்கு மேல் மோதிரம் போட்டுக் கொண்டதை அவர்களே சொல்லி கேட்டிருக்கிறோம்.
'இமயம்' பாடலியில் நான்கு வாரங்கள் போனது.
'சரித்திர நாயகன்' அதே முத்தையாவில். ஆனால் சரியாகப் போகவில்லை.
'வெற்றிக்கு ஒருவன்' பாடலியில் சுமாராக போனது.
'தீர்ப்பு', 'நீதிபதி' இரண்டும் வேல்முருகன் திரையரங்கில் அமர்க்களமாக 50 நாட்கள் தாண்டி ஓடி வசூலில் புது சாதனை நிகழ்த்தின.
'பந்தம்' நியூசினிமாவில் பக்கா வசூலுடன் ஒரு மாதம் ஓடியது.
சில படங்கள் ஓடாமல் இருக்கலாம். அது படத்தின் தரத்தைப் பொறுத்தது. புற்றீசல் போல வந்த படங்களுக்கிடையில் நல்ல படங்கள் சில அடி வாங்கியது. ஆனால் அவரது படங்களே பலமாகப் போட்டியிட கருடா சௌக்கியமா, துணை இரண்டும் கடலூரில் பெரிய வெற்றியைப் பெற்றன. அது மட்டுமல்ல...தொடர்ச்சியாக இரண்டு மெயின் தியேட்டர்களில் கடலூர் கமர் மற்றும் ரமேஷ் இந்த இரண்டு படங்களும் ஓடி நல்ல வசூல் பெற்றன. வா கண்ணா வா கடலூர் கமரில் அபார வெற்றி. ஆனால் கமலத்தில் 'ஊருக்கு ஒரு பிள்ளை' சுமாராகத்தான் போனது.
எல்லா கால கட்டங்களிலும் சில படங்கள் ஓடும்...சில படங்கள் ஓடாது... இது அனைத்து நடிகர்களுக்கும் பொருந்தும். நடிகர் திலகத்திற்கும் அப்படித்தான். ஆனால் 'திரிசூலம்' படத்திற்கு பிறகும் அவரது சாதனைகள் தொடர்ந்ததை தங்களின் விளம்பரப் பதிவுகள் அருமையாக உணர்த்துகின்றன. இந்த உண்மையை மறைக்க எவராலும் இனி இயலாது. உங்கள் ஆதாரப் பதிவுகள் ஒன்றே போதும்.
இதில் இன்னொரு ஆச்சர்யம் என்ன தெரியுமா? நமக்கே பிடிக்காத 'தர்மராஜா' படம் கடலூரில் இருபத்தைந்து நாட்கள் ரமேஷ் திரையரங்கில் பலமாக ஓடியது. எங்களாலேயே நம்ப முடியவில்லை.
அன்றும் இன்றும் என்றும் வருடம் பதினைந்து படங்கள் தந்தாலும் வசூல் மன்னர் நம் தலைவரே என்று அருமையான ஆதாரங்கள் மூலம் நிரூபித்துக் காட்டிய உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்
செந்தில்.
என்றுமே வசூலில் அவர் நிரந்தர தனிக்காட்டு 'ராஜா'தான்.
அதே போல 'திரிசூல'த்திற்கு பிறகு வந்த படங்களைப் பற்றிய நினைவலைகளை மீண்டும் நினைத்துப் பார்க்க வைத்ததற்கு கூடுதல் நன்றி செந்தில்.
திரிசூல தினம்.
http://i1028.photobucket.com/albums/...psir0zldja.jpg
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...04&oe=5949C5B5
1979 ஆண்டு வாக்கில் தமிழகத்தின் மக்கள் தொகை 4 கோடியே 40 லட்சம், அதே ஆண்டில் வெளியான நடிகர்திலகத்தின் 200 வது படமான "திரிசூலம் " படத்தினை கண்டு மகிழ்ந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 55 லட்சமாகும்
( details from Thirisulam Wikipedia at Google search)
(முகநூலில் இருந்து)
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...44&oe=591C5DF4
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...44&oe=591C5DF4
நன்றி : தினகரன் நாளிதழ். வெள்ளி மலர்
வாசு சார்Quote:
எங்களின் செல்லப்பிள்ளை இளவல் செந்தில்வேல்!
ஜமாய்த்து விட்டாய் ராஜா. அமர்க்களமான அமர்க்களம். இருநூறுகளுக்குப் பின் நடிகர் திலகத்தின் வெளியே தெரியா சாதனைகளை புறம் சொல்லி தூற்றியவர்கள் முகத்தில் அற்புதமான பேப்பர் கட்டிங்குகளை வைத்து அவர்கள் முகத்தில் கரி பூசி விட்டாய். இந்த ஆதாரங்கள் ஒன்று போதும். காலாகாலத்துக்கும் பேசும். தியாகி, பரீட்சைக்கு நேரமாச்சு, மாடி வீட்டு ஏழை, ஜெனரல் சக்கரவர்த்தி, எமனுக்கு எமன், பேயாட்டம் ஆடிய திரிசூலம் என்று தலைவரின் சாதனைகள் வியக்க வைக்கின்றன. சந்தைக்கு உங்கள் மூலம் வெளிவந்தவுடன் மணம் பரப்பும் நடிகர் திலகத்தின் புது பூக்கள்.
ஒரு விடயம் என்னஎவன்றால்
நடிகர் திலகம் செய்த உதவிகள், பல நல்லகாரியங்கள்,
கொடுத்த கொடைகள்,மற்றும் அவரது படங்கள்
செய்த சாதனைகள்,ஓடிய நாட்கள், பெற்ற வசூல்கள்
இவை அனைத்தும் வெளியே தெரியவராமல்
இருந்த காரணத்தால், எதிரிகள் நடிகர் திலகம் பற்றி
இட்டுக்கட்டி கதை பரப்பவும் , பொய் செய்திகளை
உலவவிடவும் காரணமாகிவிட்டது.
அவரது சாதனைகள் , அவர் செய்த உதவிகள்,
கொடுத்த கொடைகள் செய்திகளாக வெளியே
தெரியவரவில்லை என்பதனால் அவை அனைத்தும்
இல்லையென்று ஆகிவிடாதல்லவா?
ஆனால் நடிகர் திலகத்தின் எதிரிகள் அப்படித்தான் நம்பிக்கொண்டிருக்கறார்கள்.காரணம்
அப்படி வளர்க்கப்பட்டுவிட்டார்கள் .
பாவம் அவர்கள்.
வாசு சார்.அருமை..சூப்பர்.. எப்படிப் பாராட்டுவதென்பதே தெரியவில்லை. என் மனதில் ஓடும் எண்ணங்களை அப்படியே copy செய்து இங்கே paste பண்ணி விட்டீர்கள். இது மெமரியில் நிரந்தரமாக குடிகொண்டு விடும். செந்தில்தங்கள் பணிக்கு நாங்கள் எத்தனை முறை பாராட்டும் நன்றியும் தெரிவித்தாலும் போதாது. இருந்தாலும் உளமார்ந்த நன்றி.நடிகர் திலகத்தின் ஆசிகள் உங்களுக்கு பரிபூரணமாக உண்டு.வாழ்க
செந்தில்,
மீண்டும் நேற்று சொன்ன வரிகளையே பதிவிடுகிறேன்.
உங்களது இடைவிடாத ஆவண தேடல்களுக்கும் அபார உழைப்பிற்கும் சிரந்தாழ்ந்த நன்றி.
வாசு,
உங்களது உணர்வுபூர்வமான பதிவிற்கு ஒரு சல்யூட்!
அன்புடன்
முரளி சார்,
நாம் மையத்தில் சந்தித்து நீண்ட நாட்கள் ஆகி விட்டது. நான்தான் தங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். நீண்ட நாட்களுக்குப் பின்னும் மறவாமல் சிபிஐ ராஜனை, அவர் பெருமைகளை வாசித்து இங்கே பகிர்ந்து கொண்டதற்கு தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி.
தாங்கள் குறிப்பிட்டது போல சென்னை மகாலஷ்மியில் 'ராஜா' சமீபத்தில் திரையிடப்பட்டபோது என் மனது இங்கேயே இல்லை. எவ்வளவோ வர முயற்சி செய்தும் ஆபிசில் வேலைப்பளுவினால் இயலாமல் போயிற்று. நாம் ஒன்றிணைந்து பார்த்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! அணுஅணுவாக ரசித்து இருக்கலாமே!
இருந்தாலும் நானும், கோபால் சாரும் இரண்டு தினங்களுக்கு முன் 'ராஜா' பற்றி அலைபேசியில் மணிக்கணக்கில் பேசி மீண்டும் ஆசையைத் தீர்த்துக் கொண்டோம்.
மதுரையில் 'ராஜா' ரீரிலீஸ் பற்றி தாங்கள் சுருக்கமாக எழுதியிருந்தது மிகவும் சுவையாக இருந்தது. 22 நாட்கள் சிந்தாமணியில் மீண்டும் ராஜா ஓடியது புல்லரிக்க வைக்கிறது.
இதே எங்கள் கடலூரில் 1984-ல் ஒரு தடவை திடீரென்று தீபாவளிக்கு முன் யாருமே எதிர்பாராவண்ணம் பாடலி திரையரங்கில் 4 நாட்கள் மட்டும் கேப்பிற்காக 'ராஜா' திரையிடப்பட்டது. டெக்ரேஷன் பண்ணக் கூட நேரமில்லை. ஆனால் அந்த நான்கு நாட்களும் புதுப்பட ரிலீஸ் போல தியேட்டரில் கூட்டம் அலைமோதியது. அதுவும் செகண்ட் ஷோ எனப்படும் இரவுக்கு காட்சிக்கு பாடலி தியேட்டரின் கவுண்ட்டர்கள் உடைந்தன. ரிலீசில் கடலூர் நியூசினிமாவில் கவுண்டர்கள் உடைந்தன என்று 'ராஜா' ரிலீஸ் பற்றி முன்னம் எழுதியிருக்கிறன். 'ராஜா' என்றாலே கவுண்டர்கள் உடையும் போல. கியூவில் நிற்கும் போது எங்கள் தலை மேலெல்லாம் ஆட்கள். அந்த நான்கு நாட்களும் இரவுக் காட்சிக்கு டிக்கெட் கிடைப்பது குதிரைக் கொம்பாகி விட்டது. தியேட்டர் நிர்வாகம் இப்படி ஒரு கும்பலை எதிர்பார்க்கவே இல்லை. இரவுக்கு காட்சிக்கு வந்த சைக்கிள்கள் என்ட்ரன்ஸ் கேட்டையும் தாண்டி நின்றது. உள்ளே கேட்கணுமா? ரந்தாவுடனான பைட்டிற்கு தியேட்டர் கிழிந்தது.
இது ஒருபுறம் இருக்க 1981- ம் வருடம் பாண்டி ராஜா திரையரங்கில் 'ராஜா'வை மீண்டும் திரையிட்டார்கள். ராஜாவில் ராஜா. கண்மூடித் திறப்பதற்குள் மாலைக் காட்சி ஹவுஸ்புல். எங்களுக்கு முதல் வகுப்பு டிக்கெட் கிடைத்தது. உள்ளே பாண்டி ரசிகர்கள் ஒரே அமர்க்களம். ஆனந்தமாக பார்த்து விட்டு வந்தோம்.
தலைவர் படத்தில் 'ராஜா' ரீ ரிலீஸில் பல சாதனைகளை நிகழ்த்தியதை கண்கூடாகக் கண்டிருக்கிறோம். இதை 'திவ்யா' பிலிம்ஸ் சொக்கலிங்கம் சார் ரீஸ்டோர் செய்து டிஜிட்டலில் எடுத்தால் வெற்றி நிச்சயம்.
முரளி சார்,
உங்களால் நிச்சயம் முடியும். 'ராஜா' மீண்டும் டிஜிட்டலில் வெளிவர ஆவண செய்யுங்கள். எங்களால் முடிந்த அத்தனை ஒத்துழைப்பையும் அளிக்கிறோம். இன்றைய இளம் தலைமுறை நம் தலைவரின் ஸ்டைலைக் கண்டு மிரண்டே போகும். நன்றி முரளி சார்.
சிவா சார்,
நீங்கள் கூறியது போல மல்லிகையின் மணத்தை மறைத்து வைக்க இயலுமா? நடிகர் திலகத்தின் சாதனைகள் வெளிவந்தபடியேதான் இருக்கும். செந்தில், மற்றும் உங்களைப் போன்றவர்களால் அவர் சாதனைகளும் சரித்திரங்களும் மென்மேலும் பரவும்.
ராகவேந்திரன் சார்,
மிக்க நன்றி. 'குட்மார்னிங்'குகள் அட்டகாசம்.