https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...e0&oe=5DA4A669
Printable View
இது ஒப்பீடு இல்லை
செய்தியை தெரிந்து கொள்ள மட்டுமே,
திரையுலக வரலாற்றில் கட் அவுட் வைக்கும் வழக்கம் 1957 ல் வெளியான நடிகர் திலகத்தின் வணங்காமுடி திரைப்படத்திலிருந்துதான் என்பது நமக்கு தெரியும்,
அதற்கு முன் அத்தனை தீவிரமான ரசிகர்களை எந்த நடிகர்களும் பெறவில்லை என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்,
... பிற்காலத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு 80 அடிக்கும் உயரமான கட் அவுட் வைக்க உத்தேசித்தார்களாம், ஆனால் ரஜினி உடனடியாக அதில் தலையிட்டு ஏற்கனவே நடிகர் திலகத்திற்கு வைக்கப்பட்ட கட் அவுட் தான் இது நாள் வரையிலும் சாதனை என்பதனால் வணங்காமுடி கட் அவுட்டின் உயரத்தை விட தனக்கு உயரமான கட் அவுட் வைக்கக் கூடாது என திட்டவட்டமாக சொல்லிவிட்டதால் கட் அவுட் ரசிக குழுவினரும் என்பது அடி உயரத்தில் மட்டுமே வைத்து மகிழ்ந்தார்களாம்,
நோ நெகடிவ் கமெண்ட்ஸ் ப்ளீஸ்,
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...ae&oe=5DA2965F
Thanks Sekar
என்னால் சிவாஜி போல் நடிக்க முடியாது" - இவரா இப்படிச் சொன்னார்!?
By Vikatan Correspondent
October 01, 2016 at 5:56 PM
இன்று நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பிறந்த நாள். சிவாஜி என்றால் நடிப்பு, நடிப்பு என்றால் சிவாஜி. சிவாஜியின் மிகப் பெரிய பலமே, அவர் ஏற்று நடித்த பாத்திரங்களுக்கு முன்மாதிரியும் கிடையாது பின் மாதிரியும் கிடையாது. சிவாஜியைப் பற்றி திரையுலகப் பிரபலங்கள் பல்வேறு காலகட்டங்களில் சொன்னவைகளின் தொகுப்பு இதோ உங்களுக்காக...
ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ
'என்னைப் போல் சிவாஜி நடிப்பார்- ஆனால், என்னால்தான் சிவாஜியைப்போல் நடிக்க முடியாது!
எம்.கே.தியாகராஜ பாகவதர்
'அம்மா' என்கிற ஒற்றை வார்த்தையை உச்சரித்ததில் திரைஅரங்கையே கை தட்டவைத்தவர் சிவாஜி ஒருவர்தான்.
நடிகர் சிவகுமார்
சிவாஜியின் மிகப்பெரிய சொத்து, அவரது ஒளிமிக்க, உயிர்ப்புள்ள கண்கள்தான். அந்தக் கண்களை வைத்துத்தான் பரிவை, பாசத்தை, பயத்தை, கோபத்தை, அழுகையை, ஆச்சர்யத்தை, அப்பாவித்தனத்தை, ஏக்கத்தை, ஏமாற்றத்தை, வீரத்தை, விவேகத்தை - அவர் அதிகமாக வெளிப்படுத்தினார்.
நடிகர் வி.கே. ராமசாமி
சிவாஜிக்கும் எனக்குமான நட்பு 1945-ல் யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளையின் மதுரை பாலகான சபாவிலிருந்த போதே நாடகங்களில் நடிக்கும் போதே சிவாஜி ஏற்காத பாத்திரமில்லை. பெண் வேடமிட்டு கதாநாயகியாக ஒரு நாடகம் முழுவதும் அசத்துவார். மறுநாள் ராஜாவாக கம்பீரமாக நடை போடுவார். இந்த காலகட்டத்தில் 'இழந்த காதல்' என்ற நாடகத்தில், ஜெகதீஷ் என்ற வில்லன் பாத்திரமும், 'கள்வர் தலைவன்' நாடகத்தில் விஷ வைத்தியனாக நடித்ததும் அவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தன.
நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள், 'பராசக்தி'யை படமாக எடுக்கும் போது குணசேகரன் பாத்திரத்தில் சிவாஜிதான் நடிக்க வேண்டுமென பெரிதும் முயற்சி செய்து , திண்டுக்கல்லில் நாடகமொன்றில் நடித்துக்கொண்டிருந்தவரை அழைத்து வந்து ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் முன் நிறுத்தினார்.
பராசக்தியின் படப்பிடிப்பு ஏ.வி.எம்மில் நடக்க ஆரம்பித்தபோதே சினிமா உலகில் அவரது நடிப்பைப்பற்றி ஒரே பேச்சாக இருந்தது. மற்ற ஃப்ளோர்களில் நடித்துக்கொண்டிருந்தவர்களெல்லாம் பெருந்திரளாக வேடிக்கைப் பார்க்கக்கூடி விடுவார்கள்.
ஏ.வி.எம் ஸ்டுடியோவில் அப்போதைய சவுண்ட் என்ஜினீயராக இருந்த ஜீவா நானும் எத்தனையோ நடிகர்களின் குரல்களையெல்லாம் பதிவு செய்திருக்கிறேன், இவரது நடிப்பும் குரலும் சிம்ம கர்ஜனையாக இருக்கிறது என்று மனந்திறந்து பாராட்டினார். 1952 தீபாவளியன்று வெளியான பராசக்தியின் வசனகள் கிளப்பிய வேட்டுச்சத்தம் திரை உலகில் என்றைக்கும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
நடிகர் நம்பியார்
உலகின் தலைசிறந்த நடிகர்களில் எல்லாம் அவர் தலை சிறந்தவர். எந்த வேடமாக இருந்தாலும் மற்றவர்களைவிட திறமையாக செய்யக்கூடியவர். உத்தமபுத்திரன் படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். வில்லன் சிவாஜிக்கு துணை நின்று ஆலோசனை கூறும் பாத்திரத்தில் நான் நடித்திருப்பேன். அந்தப் படத்துக்குப் பிறகும் சிவாஜி வில்லனாக நடித்திருந்தால், எனக்கெல்லாம் வேலை இல்லாமல் போயிருக்கும்.
யயாதி மகாராஜா, இந்திரலோகத்திலிருக்கும் தேவர்கள் போல் இளமையாகவே வாழ விரும்பினார். அதற்கு அவரது பிள்ளைகளில் எவராவது தனது இளமையைத் தந்தால் அவர் இளைமையுடன் வாழலாமென ரிஷி ஒருவர் வரம் தந்தார். ஆனால் எந்தப் பிள்ளையும் தங்களது இளமியைத்தர முன் வர வில்லை. அவர் பெற்ற பிள்ளைகளில் அரூபியாக இருந்த ஒரு பிள்ளையை மட்டும் அவர் வெறுத்து ஒதுக்கினார். (கிட்டத்தட்ட தெய்வ மகன் கதை போல் இருக்கிறதே)அந்தப்பிள்ளை தனது இளைமையை தன் தந்தைக்கு தந்ததாக புராணக் கதையொன்று உண்டு. யயாதியின் நிலையில் சிவாஜி இருந்திருந்தால், நான் என் இளமையைத் தந்திருப்பேன்.
நடிகை மனோரமா
சிவாஜியிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நடிப்பு மட்டுமல்ல நேரம் தவறாமையும்தான். அத்தனை பெரிய நடிகர் ஷூட்டிங்கில் எவரையும் காக்க வைத்ததில்லை. எந்த இயக்குனரின் படமாக இருந்தாலும், ஒரு புதுமுக நடிகரைப் போல் முழு ஒத்துழைப்பையும் தருவார். வாத்தியாரைப்போல் சொல்லித் தரவேண்டியவர் மாணவனைப்போல் கற்றுக்கொள்வார். அவருடன் பல படங்களில் நடித்திருந்தாலும், 'தில்லானா மோகனாம்பாள்' படத்தில் நடித்த அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது. அவர் அள்ள அள்ளக் குறையாத அட்சயப்பாத்திரம்.
நடிகை சௌகார்ஜானகி
சிவாஜி ஒரு பிறவிக் கலைஞர். அவருடன் பணிபுரிந்த அந்தக்கால நாட்களை நினைத்தால் மனதுக்குள் எப்போதும் சிலிர்ப்பான அனுபவம்தான். அவரது தொழில்பக்தியையும் காலந்தவறாமையையும் வேறு எவரிடமும் நம்மால் பார்க்க முடியாது. திரையுலகின் தந்தை தாதாசாஹேப் ஆயுள் முழுவதும் சினிமா நன்றாக வளரவேண்டும் என்று ஆசைப்பட்டார். அவரை பிரிட்டிஷ் அரசாங்கம் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அதேப் போல் நமது அரசாங்கமும் சிவாஜியைப் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. காலதாமதமாகவே தாதா சாஹேப் விருதை வழங்கியது.
கவிஞர் கண்ணதாசன்
எதை எழுதுவது, எதை விடுவது ? இமய மலையின் எந்த மூலையைப் புகழ்ந்தால் நியாயமாக இருக்கும் ? கடலிலே எந்தப் பகுதி அழகான பகுதி ? சிவாஜி ஒரு மலை, சிவாஜி ஒரு கடல்.
கண்களின் கூர்மையைச் சொல்வேனா ? அல்லது கம்பீரத் தோற்றத்தைச் சொல்வேனா ? ஒன்பது பாவத்தைத் தொண்ணூறு வகையாகக் காட்டும்உன்னத நடிப்பைச் சொல்வேனா ? அவரைப்போல் இதுவரை ஒருவர் பிறந்த தில்லை; இனி பிறப்பார் என்பதற்கும் உறுதி இல்லை ! இது உண்மை. உலகறிந்ததே !
கவிஞர் வைரமுத்து
‘பராசக்தி‘ வெளிவந்து ஓராண்டுக்குப் பிறகுதான் நான் பிறக்கிறேன். நீங்கள் விருட்சமாய் வளர வளர நான் விதையாய் முளைத்திருக்கிறேன். உங்கள் படங்களைப் பார்க்கப் போனபோது மட்டுந்தான் கால் சட்டைப் பைகளில் நிரப்பிக் கொண்டு போன கடலைகளைத் தின்னாமல் திருப்பிக் கொண்டு வந்திருக்கிறேன். ‘மனோகரா‘ பார்த்துவிட்டு அந்த உணர்ச்சியில் சிறிதும் சிந்தாமல் அப்படியே வீட்டுக்கு வந்து சங்கிலிக்குப் பதிலாக தாம்புக் கயிற்றால் என்னைப் பிணைத்து இருவரை இழுத்துப் பிடித்துக் கொள்ளச் செய்துவிட்டு புளிய மரத்தைப் புருஷோத்தமனாக்கி என்னை வசனம் பேச வைத்தவர் நீங்களல்லவா…? கட்டபொம்மன்‘ பார்த்துவிட்டு சோளத்தட்டையில் வாள் செய்து என்னைச் சுழற்ற வைத்தவர் நீங்களல்லவா…? உலக சினிமா வரலாற்றில் இந்திய சினிமாவிற்கு முக்கிய பங்கிருக்கிறது. இந்தியா சினிமா வரலாற்றில் தமிழ் சினிமாவிற்கு முக்கிய பங்கிருக்கிறது. தமிழ் சினிமாவில் நடிகர் திலகத்திற்கு அதிமுக்கிய பங்கிருக்கிறது. நீங்கள் நடித்ததால் பல தமிழ்ப் படங்கள் உலகத் தரம் பெற்றன !
எழுத்தாளர் சுஜாதா
ராஜராஜ சோழன், சிவாஜி கணேசனாக நடித்த,''ராஜராஜ சோழன்" படம் பார்த்தேன்! (தமிழ்நாடு பாட நூல் நிறுவன 3 -ம் வகுப்புப் பாடப் புத்தகத்தில் ராஜராஜ சோழன் பாடத்தில் சிவாஜிசாரின் படமே இடம் பெற்றிருந்தது).
வியாட்நாம் வீடு சுந்தரம்
இந்திய சிறந்த நடிகர்களுக்கான விருது, இந்தியாவின் சிறந்த நடிகருக்கு வழங்கப்படவே இல்லை. இப்படி பல தரப்பட்ட பாராட்டுக்கள் இருந்தாலும், சிவாஜி நடிப்பை 'ஓவர் ஆக்ஸன்' என்று சொல்லும் சில விமர்சனச் சேவல்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சிவாஜி ஷப்ட்டிலாக நடித்த (அண்டர் ஆக்ட்) அநேகப் படங்களை இந்த வகையினர்,ரொம்ப சௌகரியமாகக் கண்டு கொள்ளமாட்டார்கள். தங்கள் வாதத்துக்குத் துணையாக எம்.ஆர். ராதா, ரங்கராவ், நாகேஷ், சந்திரபாபு, டி.எஸ். பாலையா, எஸ்.வி.சுப்பையா ஆகியோர் நடிப்பைத் துணைக்கழைத்துக் கொள்வார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ரங்கராவ்தானுண்டு, ஒரு சந்திரபாபுதானுண்டு. ஆனால், சிவாஜிக்குள் இவர்கள் எல்லோருமே உண்டு.
கதிரேசன்
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...f3&oe=5DE37524
thanks Nadigarthilagaththin nanthavana pookkal
#சிவாஜி -ஓர் #பெருந்தன்மையாளன்
இமயம் கண்டேன்….
பொன் தொட்டில் கட்டும் நேபாளத்தின்
பட்டுப்பூவை தொட்டுப் பார்த்தேன்… சுகங்கள்
... இப்பாடலை எஸ்.பி.பி., சுசீலா பாடியிருந்தனர். பனி போர்த்திய இமயமலைச் சிகரங்களை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட அற்புதமான டூயட் பாடல். இப்படம் வெளியானபோது இந்தப்பாடலும் ரொம்பவே பாப்புலர்.
தான் உச்ச நடிகராக இருந்த காலத்திலேயே இது போல எத்தனை அருமையான டூயட் பாடல்களைத் தன்னுடைய படத்தில், அடுத்த நாயகர்களுக்கும் துணை நடிகர்களுக்கும் விட்டுக் கொடுத்திருக்கிறார்!....நடிகர் திலகம் !
1.இன்பம் பொங்கும் வெண்ணிலா – கட்டபொம்மன்
2.காற்று வெளியிடை கண்ணம்மா – கப்பலோட்டிய தமிழன்
3.காலங்களில் அவள் வசந்தம் – பாவமன்னிப்பு
4.யார் யார் யார் அவள் யாரோ – பாசமலர்
5.அன்று ஊமைப் பெண்ணல்லோ – பார்த்தால் பசி தீரும்
6.இதழ் மொட்டு விரிந்திட – பந்தபாசம்
7.பண்ணோடு பிறந்தது ராகம் – விடிவெள்ளி
8.வாராதிருப்பானோ – பச்சை விளக்கு
9.கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா – பச்சை விளக்கு
10.கட்ட வட்ட பாறையிலே – பழனி
11.உள்ளத்துக்குள்ளே ஓளிந்திருப்பது – பழனி
12.கண்ணிரண்டும் மின்ன மின்ன – ஆண்டவன் கட்டளை
13.இரவு முடிந்துவிடும் – அன்புக்கரங்கள்
14.காத்திருந்த கண்களே – மோட்டார் சுந்தரம் பிள்ளை
15.செந்தூர் முருகன் கோயிலிலே – சாந்தி
16.மதுரா நகரில் தமிழ்ச்சங்கம் – பார் மகளே பார்
17.ராஜ ராஜ ஸ்ரீ ராஜன் – ஊட்டி வரை உறவு
18.என் கேள்விக்கென்ன பதில் – உயர்ந்த மனிதன்
19.எங்க வீட்டு தங்க தேரில் – அருணோதயம்
20.சொர்க்கத்தில் மயங்கும் மயக்கம் – குலமா குணமா
21.முள்ளில்லா ரோஜா – மூன்று தெய்வங்கள்
22.என்ன சொல்ல என்ன சொல்ல – பாபு
23.யாருக்கு இங்கு கல்யாண ஊர்வலமோ – வாணி ராணி
24.முல்லைப்பூ பல்லக்கு போவதெங்கே – வாணி ராணி
25.பூவிழி வாசலில் யாரடி வந்தது – தீபம்
26.அடி லீலா கிருஷ்ணா ராதா ரமணி -அந்தமான் காதலி
27.அழகி ஒருத்தி இளநி விக்கிறா – பைலட் பிரேம்நாத்
28.செவ்வானமே பொன்மேகமே – நல்லதொரு குடும்பம்
29.தேவதை ஒரு தேவதை – பட்டாக்கத்தி பைரவன்
30.ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா – மக்களை பெற்ற மகராசி
31.குழலும் யாழும் உன்னிசைதானோ – கோடிஸ்வரன்
32.ஆதி மனிதன் காதலுக்கு பின் அடுத்த காதல் இதுதான் – பலே பாண்டியா
33.கண்ணான கண்ணனுக்கு அவசரமா – ஆலய மணி
இதை குறிப்பிடக்காரணம், இவர் காலத்தில் இருந்த “மற்ற சில” நாயகர்கள், தங்கள் படத்தில் எத்தனை டூயட் பாடல் இருந்தாலும் அனைத்தையும் தானே பாடித் தீர்த்தார்களே தவிர மற்றவர்களுக்கு கொடுப்பதில்லை.
பழம்பெரும் இயக்குனர் ப.நீ. தன்னுடைய கடைசிக் காலத்தில் ஒரு உண்மையைப் போட்டு உடைத்துவிட்டுப் போனார். எழுபதுகளில், தான் இயக்கிய ஒரு குதிரை வண்டிக்காரர் பற்றிய வண்ணப் படத்தில் இரண்டாம் நிலை நாயகனாக நடித்த ஒரு நவரசமான திலகத்துக்கு ஒரு டூயட் பாடல் கொடுத்து விட்டதற்காக, அதில் நடித்த பெரிய நடிகர் இவருடன் சண்டை போட்டாராம். ‘விடுங்கண்ணே நீங்க எவ்வளவோ டூயட் பாடியிருக்கீங்க. அப்படியிருக்க ‘கண்ணுக்கு தெரியாத’ ஒரே ஒரு பாடலால் என்ன வந்துவிடப்போகிறது’ என்று அவரை சமாதானம் செய்தார்களாம்).
ஆர்வி: இயக்குனர் ப. நீலகண்டன், திரைப்படம் என் அண்ணன்,, இரண்டாம் கதாநாயகன் முத்துராமன், முத்துராமனின் ஜோடி விஜயநிர்மலா,
கண்ணுக்குத் தெரியாத அந்த சுகம்
நெஞ்சுக்கு தெரிகின்ற இந்த சுகம்
ஒரு முறையா இரு முறையா
என்னைக் கேட்கச் சொல்லும்..
நன்றி: சாரதா அவர்கள்
நடிகர் திலகத்தின் தன் நடிப்புத் திறமை மீது நம்பிக்கையும சக கலைஞர்களின் வளர்ச்சியை கருதும் பெருந்தன்மையையும
என்னவென்று சொல்வது..
சிவாஜி #உயர்ந்த #மனிதன் #தானே !
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...33&oe=5DA73997
thanks Nadigarthilagaththin nanthavana pookkal
......................................
Vasu Devan
https://static.xx.fbcdn.net/rsrc.php..._x=ZwmYAPKTPYk தலைவர் டோன்ட் கேர் கேஸ் ஆறு. தன்னந்தனிக் காட்டு ராஜா.. எதைப் பத்தியும் சிங்கம் கவலையே படாது. நீ பாட்டு குடுத்தா என்ன... குடுக்காட்டி என்ன... வேற யாருக்கும் குடுக்கிறியா... குடுத்துக்கோ.. ஐ டோன்ட் மைன்ட்... பாட்டே படத்தில இல்லியா... ஓகே... அந்த நாள் முதற்கொண்டு இந்த நாள் வரைக்கும் எதுக்கும் அசராத நடிப்பு சக்ரவர்த்தி எதை நம்பியும் இல்ல... எதுக்கு பயப்படணும். எதுக்கு பொறாமப் படணும். வளர்ந்தவங்க எல்லாமே இவர் படத்தாலதானே வளர்ந்தாங்க. மோட்டார் ல பாட்டே இவருக்கு இல்ல. அந்த நாள்ல பாட்டே இல்ல.
அன்பளிப்புல 'மாதுளம்... பழத்துக்குப் பெயர் மாதுளம்' அப்படின்னு ஜெய்சங்கருக்கும் அலேக் நிர்மலாவுக்கும் பாட்டு ஒண்ணு இருக்கும். போய் வழி மறிச்சாரா...
'மெல்ல மெல்ல என்னைத் தொட்டு' ட்டியே செல்லம்.
நேற்று நியூஸ் 7 சேனலில் ஒளி பரப்பான மறைந்த நகைச்சுவை நடிகர் கே.பி.சந்திரபாபு அவர்களை பற்றிய செய்தி தொகுப்பில் பல நடந்த உண்மைகளை நேரிடையாக எடுத்துச் சொன்னார்கள்,
எம்ஜிஆர் ஐ வைத்து "மாடி வீட்டு ஏழை" திரைப்படம் தயாரித்தப் போது 3000 அடிகள் வரை வளர்ந்த பின் எம்ஜிஆர் பணப்பிரட்சனை செய்ததால் தனது கிரீன்வேஸ் சாலை பங்களாவை அடமானம் வைத்து பணம் கொடுத்தும் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற எம்ஜிஆர் ஒத்துழைப்பு கிடைக்காததால் கோபமடைந்த சந்திரபாபு. அதுவரை முடித்து வைத்து இருந்த பிளிம் ரோ...லையும் தீயிட்டு கொளுத்தி மீள முடியாத கடன் சுமையால் சிக்கி போதைக்கு அடிமையாகி விட்டார் என குறிப்பிட்டதோடு,..
கடைசி காலங்களில் நடிகர் திலகம் சிவாஜி உதவியதையும் ராஜா,நீதி என பட வாய்ப்புகள் கொடுத்தார் எனவும்
கே.பி.சந்திரபாபு அவர்கள் இறந்த போது நடிகர் திலகம் வெளி ஊரில் ஒரு கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு இருந்ததாகவும் உடனடியாக அந்த விழாவை ரத்து செய்து விட்டு சென்னை வந்து சந்திரபாபு அவர்களது உடலை நடிகர் சங்கம் கட்டிடத்தில் வைத்து பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்கு வழி வகுத்து பெருமை படுத்தி தி.நகரிலிருந்து ஜெமினி பாலம் வழியாக சாந்தோம் சர்ச் வரையிலான இறுதி யாத்திரையை உடனிருந்தே நடத்தினார் என்ற முக்கிய நிகழ்வுகளை குறிப்பிட்டார்கள்,
இனி வரும் காலங்களில் ஊடகங்கள் உண்மை செய்திகளை கொடுப்பார்கள் என நம்பலாம்,
இதற்கு முன் நடிகர் திரு ராஜேஷ் அவர்கள் நடிகர் திலகம் தேர்தலில் தோற்றதற்கு பின்னால் இருந்த உண்மைகளை டிவி நிகழ்ச்சியில் எடுத்துச் சொல்லி இருந்தார் அதாவது "நடிகர் திலகம் அமெரிக்க மருத்துவமனையில் எம்ஜிஆர் க்கு கொடுத்து இருந்த வாக்குறுதியால் அதைக் காப்பற்ற வேண்டி தெரிந்தே தேர்தலில் நின்று தோல்வியை சந்தித்தார்" என புரியும் படி எடுத்துச் சொல்லி இருந்தார்,
பின்னர் சில நாட்கள் கழித்து சென்னையில் ரஷ்யன் கல்ச்சுரல் அகாடமியில் அதை நினைவு படுத்தும் போது " இது போன்ற எத்தனையோ நிகழ்வுகள் இருக்கிறது முன்னரெல்லாம் " நாம் அதை குறிப்பிட்டு பேசும்போது எல்லாம் அரசியல்வாதிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு வந்து விடும் அதனால் எதையும் எடுத்துச் சொல்லுவதை பல வருடங்களுக்கு மேலாக விட்டு விட்டேன்,
ஆனால் தற்போது எந்த எதிர்ப்பும் வரவில்லை
உண்மையை ஏற்றுக்கொள்ள தயாராகி விட்டார்கள் என நினைக்கிறேன் இனி நாம் தொடரலாம்,
இவ்வாறு கூறி இருந்தார்,
புகைப்பட இணைப்பு :- மதுரையில் நடைபெற்ற வசந்த மாளிகையின் 50 வது நாள் வெற்றி விழா ஊர்வலத்தில்,
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...f2&oe=5DDC4085
Thanks Sekar
..........................
சந்திர பாபுவின் இறுதிச்சடங்கு செலவை நம் ஐயாவே ஏற்றுக் கொண்டார் ..
................
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...05&oe=5DEDD1ED
Manokara 100 Days
என்ன வசந்தமாளிகை டிஜிட்டலில் வருகிறது...
அதுவும் அதிக கட்டணம் கொண்ட பெரிய தியேட்டர்களில் வெளிவருகிறது...
புதுப்படங்களே... மூன்று நாட்களை தாண்ட தள்ளாட்டம் பே...ாடுகிறது,
அதிகபட்சம் ஒருவாரம் ஒடினாலே பெரிய வெற்றி என எதிரிகள் மட்டுமல்ல ஒட்டு மொத்த திரையுலகமே நினைத்துக் கொண்டிருந்தது,
ஆனால்,
யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்,
23 புது படங்கள் ரிலீஸ்,
அதிலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட
பெரிய படங்கள் 10,
ஆடிக்காத்துல அம்மியும் பறக்குது என்பது போல்,
விஜய் சேதுபதியின் சிந்துபாத்
விக்ரமின் கடாரம் கொண்டான் முதல்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கூர்கா, தர்மபிரபு போன்ற சிறிய படங்களும் வரை....
இதில் ஜோதிகாவின் ராட்சசி படத்திற்கு 50% டிக்கெட் சலுகை வேறு...
அனைத்து படங்களும், அழகாபுரி ஜமீனுக்கு முன்னால் துாள்... துாள்....
மதுரையில் வசந்தமாளிகையில் இணைந்த 50வது நாள் விழா, வண்டியூர் கல்லானையில்
மதுரை புறநகர் மாவட்ட சிவாஜி மன்றத்தின் சார்பில் கொண்டாடப்படுகிறது.
மதுரை புறநகர் மாவட்ட சிவாஜி மன்ற நிர்வாகிகள் அனைவருக்கும் சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...b6&oe=5DA82569
Thanks Sundar Rajan
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை,
வேலம்மாள் மருத்துமனை இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
... கிராமப் பகுதிகளை தேர்ந்தெடுத்து, கிட்டத்தட்ட ஒருமாத காலமாக இதற்கென நாட்களை செலவழித்தோம்.
அதன் பலனாக, 3 மணி நேரத்தில் 214 மக்கள், முகாம் மூலம் பயனடைந்தனர், இதில் 75க்கம் மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்தனர் என்பது பெருமைக்குரிய செய்தி.
இதுபோல, மருத்து முகாம்களில் 150 பேருக்கு மேல் வருவது சிரமம் தான் என்றார், வேலம்மாள் மருத்துவமனை முகாம் மேலாளர்,
ஆனால், உங்களைது உழைப்பு மற்றும் விளம்பரங்களினால் 214 போ் வந்துள்ளனர், என பெருமையாக கூறினார்.
முகாமுக்கு வந்த 60 வயதுக்கும் மேற்பட்ட பெரியவர்கள், தங்கள் இளமை காலத்தில் நடந்த நிகழ்ச்சிகள் மற்றும் நடிகர்திலகத்தின் பெருமைகளை கூறி சந்தோசப்பட்டனர்.
முகாம் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு......
முகாமிற்கு வந்து சிறப்பித்தவர்களின் புகைப்படங்கள் அடுத்தப் பதிவில்.....
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...34&oe=5DEEB816
Thanks Sundar Rajan
1964- கர்ணன் 6 திரையரங்குகளில் 100 நாளுக்கும் மேலாக ஓடி வெற்றி கண்ட காவியம்,
1969- சிவந்த மண் 10 திரையரங்குகளில் 100 நாட்களுக்கும் மேலாக ஓடி சாதனை படைத்தது,
1980- பட்டாக்கத்தி பைரவன் தமிழகத்தில் வசூலைக் குவித்ததோடு கடல் கடந்து இலங்கையிலும் கூட இரண்டு அரங்குகளில் 150 நாட்கள் வரை ஓடி வெற்றி கண்டது,
... இப்படியான வரலாற்றுச் சுவடுகள் இருக்க மீண்டும் மீண்டும் கர்ணன் நஷ்டம், சிவந்த மண் தோல்வி என ஒரு உண்மையையும் கருத்தில் கொள்ளாமல் பொய் செய்திகளை மட்டுமே தொடர்ந்து சொல்லி வருகிறது ஒரு கும்பல்,
போகிற போக்கில் சிவாஜி படம் ஓடவில்லை, அந்த படத்தால் தயாரிப்பாளர் நஷ்டமடைந்தார், என எழுதி புத்தகம் வெளியிடும் புத்தக எழுத்தாளர் மற்றும் பதிப்பகத்தாருக்கு அப்படி என்ன தான் வஞ்சனை இருக்கிறதோ தெரியவில்லை, ஒரு வேளை ஆட்சியாளர்கள் ஏதாவது வெகுமதி கொடுப்பார்கள் என்ற எண்ணம் கூட இருக்கலாம், அதில் உண்மையும் இருக்கிறது,
இப்படித்தான் எதேச்சையாக "தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்" என்ற புத்தகத்தை வாங்கிப் புரட்டி தொலைத்து விட்டேன், புரட்ட புரட்ட ஒரே பொய் செய்திகள், எந்த மகராசன் எழுதியது என பிறகு தான் பார்த்தேன்,கே.என் சிவராமன் என்ற ஒரு எழுத்தாளர், அப்புறம் தான் விளங்கியது இது தினத்தந்தியில் தொடராக வெளிவந்தது, அந்தத் தொடரை ஓரிரு வாரங்கள் படித்தேன் பிறகு நிறுத்திக் கொண்டேன், இப்படியான எழுத்தாளர்கள் எப்படித்தான் குறைத்து எழுதினாலும் நடிகர் திலகம் சிவாஜி ஆதரவாளர்கள் எந்த கண்டனத்தையும் தெரிவிப்பது இல்லை, சாதாரணமாக கடந்து செல்வது பழகிப் போய்விட்டதும் கூட,
1982 ஆம் ஆண்டு சென்னை விமான நிலையத்தில் நடிகர் திலகத்தை வரவேற்க கூடிய ரசிகர்கள் கொஞ்சமும் எதிர்பாராத வண்ணம் லட்சக்கணக்கில் குவிந்து விட்டனர், அன்றைய எம்ஜிஆர் அரசு செய்வதறியாது திகைத்து கூட்டத்தை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தியது, வரலாற்றில் ஒரு அரசு ரசிகர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் இது தான், கொதித்தெழுந்த நடிகர் திலகம் ரசிகர்கள் எதிர் வினை ஆற்றத் துவங்கிய போது அரசுக்கு அமைதியை நிலைநாட்டுவதில் பெரும் பின்னடைவு ஏற்படுவதை உணர்ந்து நடிகர் திலகத்தை அறிக்கை விட கேட்டுக் கொண்டது, அதன் பின்னரே அன்று அமைதி நிலவியது, அப்பேற்ப்பட்ட போர்க்குணம் கொண்டவர்கள் தான் சிவாஜி ரசிகர்கள், ஆனால் எல்லாமும் தலை கீழானது போல உள்ளது அதையடுத்த நிகழ்வுகள் யாவும்,
இரண்டு ஆண்டுகளுக்கு முன் எழுத்தாளர் நாஞ்சில் இன்பா அவர்கள் எழுதி வந்த செல்லுலாய்ட் சோழன் தொடரில் பராசக்தி வெற்றியைப் பற்றியும் அதே ஆண்டு எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்த என் தங்கை படத்தின் உண்மையான தோல்வியையும் குறிப்பிட்டு இருந்தார், விட்டார்களா எம்ஜிஆர் ஆதரவாளர்கள் இருபது பேர்கள் வரை திரட்டிக் கொண்டு பத்திரிகை அலுவலகத்தை முற்றுகை இட்டனர், எதிர்ப்பு குரல் கொடுத்தனர்,
ஆனால் பாருங்கள் உண்மைக்கு மாறாக சிவாஜி படங்களை பற்றிய செய்திகளை வெளியிடும் எழுத்தாளர்களையோ பத்திரிகை, ஊடக அலுவலகங்களையோ நாம் சின்னதாக கூட ஒரு எதிர்ப்பையும் தெரிவிப்பது இல்லை,
அப்படியே ஒரு சிலர் அமைப்பு ரீதியாக எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் அவர்கள் அரசியல் செய்கிறார்கள் என மட்டம் தட்டுவ்து சிறப்பாகவே நடைபெறுகிறது,
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...fe&oe=5DD65C92https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...46&oe=5DECA5A9https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...65&oe=5DECB067
Thanks Sekar
மேற்கண்ட கட்டுரைக்கான் பின்னூட்டங்கள் சில
1952 லிருந்து 1999வரை இடைவிடாது 47 ஆண்டுகள் நடித்துவந்த288 படங்களும் கௌரவ நடிகராக 19 படங்களும்
இதைத் தவிர ஆயிர கணக்கான நாடகங்களும் மராட்டிய தூர்தர்ஷனுக்கு சத்திரபதி சிவாஜியாக நடித்து அரும்பெரும் சாதனைகளை அவர் அளவுக்கு நடத்தியவர் குறைவுதான். அவர் பெற்ற விருதுகளைப்போல் யாரும் பெறவில்லை. உலகத்து தேசங்கள் எகிப்து, அமெரிக்கா, மலேஷியா, சிங்கப்பூர், மொரிஷஸ், பிரான்ஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் அவருக்கு தந்த மரியாதையை உலகம் அறியும். 47 ஆண்டுகள் ஓய்வரியா உழைத்த மகன் அடுத்த இரண்டாண்டுகள் இருந்தார் 2001ல் மறைந்தார். மறைந்து18 ஆண்டுகள் ஆனாலும் அவர் புகழ் பாடும் கூட்டம் இன்னும் இருக்கிறது. கர்ணன், ராஜபாட் ரங்கதுரை, வசந்த மாளிகை இவைகள் இந்த கால வெளியீட்டிற்கு பின்னும் மாபெரும் வெற்றியை ஈட்டித்தருவது தமிழனுக்கு பெருமை இல்லையா? தமிழன் பெயரை தமிழன் குலைப்பானா? ஆம் சிலையெடுத்து அவமானத்தை வாங்கிக் கொண்டது போதாது. சிவாஜி ரசிகர்களுக்கு எந்தக் கட்சியின் பின் புலம் இல்லை. ஆனாலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அத்தனை ரசிகர்கள் மடிந்து போனாலும் "அவன் ஒரு சரித்திரம்"
கலை உள்ளவரை கணேசனார் புகழை மறைக்க எந்த சக்தியாலும் முடியாது. இது சத்தியம்! வாழ்க அய்யன் சிவாஜி!
நன்றி
நாம் பதிவிடும் செய்திகள் அண்ணனின் சாதனைகளாக மட்டும் இருக்கட்டும்.
இன்று நேற்றல்ல .. பல காலமாக அண்ணனை குறைத்தே மதிப்பிட்டு எழுதும் வழக்கம் பல பத்திரிக்கைகள் செய்து வரும் தொழில்.
நமது வெற்றிகளும் சாதனைகளும் அவர்கள் கண்களுக்குத் தெரிவதில்லை...
நாம் கவலைப் படவும் தேவையில்லை..
ஏனெனில் சூரியனை மேகங்கள் மறைக்க இயலாது .
நன்றி முகநூல்
அன்றைய காலத்தில் செய்ததில் அரசியல் காரணமாக இருக்கலாம் சார்,
இப்போது இப்படி குறைத்து எழுதுவதெண்பதை நாம்.அனுமதிக்கக் கூடாது சார்
இப்போ விரோதிகளின் பழைய தகிடுதத்தம் முடியாது நண்பரே. சிவாஜி ரசிகர்களின் எண்ணிக்கை இப்போது மூன்று மடங்கு கூடியுள்ளனர்
...........................
இப்போ விரோதிகளின் பழைய தகிடுதத்தம் முடியாது நண்பரே. சிவாஜி ரசிகர்களின் எண்ணிக்கை இப்போது மூன்று மடங்கு கூடியுள்ளனர்
கூடியிருக்கும் போது நாம் வலுவான எதிர்ப்பை தெரியப்படுத்த வேண்டும் சார்
........
எதிர்ப்பு கட்டாயம் தெரிவிக்க வேண்டும் நமக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவாளர்களும் உண்டு. அது நன்றாக தெரிந்துதான் புல்லுருவிகள் நம்மிடையே ஊடுருவி உள்ளனர்
ஊடகங்களும் சேர்ந்து
கொண்டு திட்டமிட்ட சதி அரசியல் வாதிகளால் தயாரிக்கப்பட்டு பிரச்சாரம் நடந்ததை ரசிகர்கள் சகிக்க முடியாமல் பொருமும் போதும் குமுறும் போதும் வேற்று மாநிலத்தோர் மிகவும் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார்கள் நடிகர் திலகத்தின் மீது. வெளி நாட்டினர் கூட மரியாதை வைத்திருந்தனர். அரசியல் பலமும் பண பலமும் இல்லாத சிவாஜி ரசிகர்கள் அராஜகத்தின் முன் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் அவருடைய புகழை யாராலும் பொய்களாலும் புரட்டுகளாலும் குறைய செய்ய முடியவில்லை
உண்மை தான் சார்
நடிகர் திலகம் அவர்களுக்கு எதிராக எத்தனை எத்தனை பொய்கள், புரட்டுகள்.
காலம் நிர்தாட்சன்யம் இல்லாதது சார்.
உண்மை யை வெகு காலம் மறைக்க முடியாது சார்.
உங்கள் பதிவுகளை பார்க்கும் போது உங்கள் மனம் அடையும் வேதனை புரிகிறது சார்.
நல்ல பதிவிற்கு நன்றி சார் நன்றி
.........................
எண்ணங்களை புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி சார்
அதே புத்தகத்தில் தேடிப்பாருங்கள் *எதாவது ஒரு ஓரத்தில் *நவரத்தினம், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், நீரும் நெருப்பும் போன்ற படங்கள் *வெள்ளி விழா ஓடி வசூல் புரட்சி செய்த படங்கள் என்று எழுதியிருப்பான்.
.................
எழுதி இருக்கிறான் சார்,
ஏற்கனவே தந்தியில் தொடராக வந்த போது நமது நண்பர்கள் சுட்டிக் காட்டி கண்டித்து இருந்தார்கள்
ஆனால் எழுத்தாளர் பற்றி குறிப்பிடாமல் தந்தியை
நம் திலகம் #காம்போதிராகம் போன்றவர் யாராலும் வெல்லவோ அழிக்கவோ முடியாது. நயவஞ்சக நாய்கள் சொன்னால் நம் திலகத்தின் புகழை அழிக்க முடியாது சேகர் சார்.
காசுக்கு பிணம் தின்னிகள்!
சிவாஜி மகா பெரிய ஆல விருக்ஷம்!
அதில் பினந்தின்னிகளும்
தங்கி பறந்திருக்கின்றன!
விடுக கவலையை!.......................
குறுட்டு நாய்கள் நம்ம தலைவரின் வரலாறு தெரியாமல் கண்டபடி எழுதி தொலைக்கிறானங்க செருப்பாலே அடிக்கனும் சார்
தினத்தந்தி காசுக்காக எதையும் செய்யும் சமூகத்துரோகிகள் பத்திரிகை.அதை வாங்குவதை நிறுத்துங்கள்.தமிழில் வரும் எல்லா பத்திரிகைகளும்அப்படித்தான்.
................
அது மட்டுமில்லை.தன் ஊழியர்களுக்கே ஒழுங்காக சம்பளம் கொடுக்காத ஆதித்தன் நாகர்கோவில் பாராளுமன்ற தேர்தலில் பெருந்தலைவரை தோற்கடிக்க பெட்டி பெட்டியாய் பணத்தை அள்ளி வீசினான்.மக்கள் இந்த பிறவிகளை விரட்டி அடித்தனர்.
எம்ஜிஆர் ரசிகர்கள் இப்போது அரசியல் வாதிகள். ஆனால் சிவாஜியின் ரசிகர்கள் இன்றும் ரசிகர்களே. அதனால் தான் கர்ணன், வசந்த மாளிகை மிகப்பெரிய வெற்றி பெற்று கொண்டு இருக்கிறது.
................
நிதர்சனமான கருத்து சார்
நடிகர்திலகத்தை பற்றி ....
பிரிட்டிஷ்காரர்களுக்கு இந்தியர்களின் வீரம் பற்றி பாடம் புகட்டிய வீரன் கட்டபொம்மனாக அவர் நடித்ததை புரிந்துகொள்ள தமிழ் தெரிந்திருக்க வேண...்டும் என்ற அவசியமில்லை. கூர்மையான வசனம் கத்தியை விட ஆழமாகப் பாயும் என்பதை உணர்த்திய அற்புதமான நடிகர் சிவாஜி.
சொன்னவர் வாஜ்பாயி..
சிவாஜி நாடக மேடையில் வளர்ந்தவர். முதல் வரிசையில் இரருந்து கடைசி வரிசையில் உட்கார்ந்து இருப்பவர் வரையில் மேடையில் நடிப்பதை பார்க்க, கேட்க, குரலும், முகபாவங்களும் கூடுதலாக இருந்தால் தான் சரியாக இருக்கும். சிவாஜியின் நாடகங்களைப் பார்க்கிறபோது கடைசி வரிசையில் உட்கார்ந்து இருப்பவனையும் ஈர்த்து பரவசம் கொள்ளவைக்கும்.
சொன்னவர் எழுத்தாளர் அசோகமித்திரன்.
எண்பதுகளில் குளோசப் கதை சொல்லும் உத்தி போன்றவை மாறிய பிறகு, அவருடைய நடிப்பு உத்திகள் தான் பின்னால் வந்தவர் களுக்கு கையேடாக இருந்தது. சிவாஜி மெதட் ஆக்டிங் என்ற ஒரு தனி அத்தியாத்தை உருவாக்கிய மேதை அவர்.
சொன்னவர் மம்முட்டி.
அவன் நாவின்
ஸ்பரிசம் பட்டபின்தான்
தமிழ்ச்சொற்கள்
பூப்படைந்தன
நாவினால் மட்டுமல்ல
மற்ற அங்கங்களிலும்
பேச முடியும் என்பதைக்
காட்டிய அதிசயம் அவன்.
திருமாலுக்கு கூட
பத்து அவதாரம் தான்
ஆனால் அவனோ நமக்காக
எத்தனை அவதாரம் எடுத்தான்
அதுவும் ஒரே பிறவியில் .
சொன்னவர் கவிக்கோ அப்துல் ரகுமான்.
ஒரு குறிப்பிட்ட காட்சியில் வசனம் பேசி முடித்து விட்டு சிவாஜியின் கண்களை நேருக்கு நேர் பார்க்க வேண்டும் என்பதாக காட்சி. ஆனால் ஒன்றல்ல இரண்டல்ல மூன்றாம் டேக்கில்தான் அந்த காட்சி ஓகே ஆனது. காரணம் என்ன?
சிவாஜியின் கண்ணில் இருந்த பார்வையின் ஆழத்தை என்னால் நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை இதனால் காட்சியில் நான் பேச வேண்டிய வசனங்களை சரியாக பேசி விட்டாலும் அதன் பின் சிவாஜியை நேருக்கு நேர் பார்த்து காட்சியை என்னால் முடிக்க முடியவில்லை. எனக்கு ஏதோ பிரச்சினை என்று புரிந்து கொண்ட சிவாஜி என்னிடம் என்ன விஷயம்? என்று கேட்டார். நான் பிரச்சனையைச் சொன்னேன் அப்புறம் சிவாஜி தன் பார்வையில் சற்று மாற்றத்தைக் கொண்டுவர நான் அவரை நேருக்கு நேர் பார்க்க காட்சி ஓகே ஆனது, என்கிறார் நடிகர் நாசர் .(தேவர் மகன் )
ஒரு நாளைக்கு மூன்று படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டு இறக்கை கட்டிக் கொண்டு பறந்து கொண்டிருந்த நேரம்.
தூக்கம் கிடையாது .ஓய்வொழிச்சல் இல்லை. இரவு முழுக்க நீதி படத்தின் சூட்டிங்கில் இருந்தவர் ,அதிகாலை வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு புறப்பட்டபோது இருமல் ,வாந்தி ,இரத்தம் வந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது .பரிசோதித்த டாக்டர் உடனடியாக சூட்டிங்கை கேன்சல் செய்து விட்டு வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுங்கள் என்றார். சூட்டிங்கை கேன்சல் பண்ண முடியாது வேண்டுமானால் ஊசி போட்டு விட்டு விடுங்கள். மருத்து மாத்திரைகள் சாப்பிட்டு விட்டு தொடர்ந்து நடிக்கிறேன் ,என்று அவர் நடிக்க சென்றுவிட்டார்.
சொன்னவர் டாக்டர் ராதாகிருஷ்ணன்.
முதியவர்களும் கதாநாயகர்களாக இருக்கமுடியும். இளைஞர்களாக ஒப்பனை செய்து கொண்டு ஓடிப்பிடித்து டூயட் பாடித்தான் படத்தை ஓட்ட முடியும் என்பதல்ல .ஒரு முதியவரே- கதை முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டு பிரேமுக்கு பிரேம் அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் முக பாவத்தின் முலமே உணர்வுகளை வெளிப்படுத்தி ரசிகர்களின் உள்ளங்களை உருக்க முடியும் நிகழ்த்த முடியும் -கொள்ளை கொள்ள முடியும் என்று நிரூபித்து ,நடிப்பின் இன்னொரு தளத்தை எட்டி புதிய பரிணாமம் ஒன்றனையும் படைத்து காட்டியவர் சிவாஜி.
சொன்னவர் சின்னக்குத்தூசி
உடம்பு சரியில்லாத சிவாஜியைப் பார்க்க சென்றிருந்தேன். அப்போது அருகில் இருந்த மகள் சாந்தியிடம் நான் முதன் முதலாக பேசியதே இவர் பெயரைதான் என்றார் அது இப்போதும் என் நினைவில் உள்ளது .மக்களைப்பெற்ற மகராசி படத்துக்காக கால்ஷீட் வாங்குவதற்காக அவருடைய வீட்டுக்கு சென்றிருந்தேன். அப்போது மாடியில் நின்று கொண்டிருந்த சிவாஜி மகள் சாந்திக்கு இரண்டு அல்லது மூன்று வயதிருக்கும். அவள் வீ.கே.ஆர் ,
ஏபி என் எங்களின் இனிசியலை சொல்லி அழைத்தாள். அதுவரை பேசாமல் இருந்த சிறுமி சாந்தி முதன்முதலாக சொன்ன வார்த்தைகள்தான் இவை .
சிவாஜிக்கு எவரையும் கவர்ந்திழுக்கும் முக வசீகரம் உண்டு எந்த மொழியில் பேசினாலும் பட்டெனப் புரிந்து கொள்ளும் ஆற்றல் உண்டு.அதே போல் தர்ம சிந்தனை மிகுந்தவர்.
சொன்னவர் விகே ராமசாமி.
சிவாஜியின் பஞ்சாயத்து ...
ஓய்வாக வீட்டில் இருக்கும் சமயங்களில் சுற்றம் மற்றும் நண்பர்கள் குடும்ப பிரச்சனைகளுக்கு அவர் பஞ்சாயத்து பண்ணி வைக்கிற விதமே அலாதிதான்.
கணவன் மனைவிக்குள் தகராறு என்று வந்தால் முதலில் கணவனை அழைத்து தனியாக அழைப்பாராம். டேய்! பொண்டாட்டி ஏதாவது கேட்டால் எடுத்த எடுப்பிலே முடியாது என்று சொல்லாதே! சரி, செய்கிறேன் என்று சொல்லு! அப்புறம் முடிந்ததை செய் என்பாராம்.
பிறகு மனைவியை அழைத்து அம்மா ஊர்ல ஆயிரம் அயோக்கியனுக இருக்கிறான். உன் புருஷன் தங்கக்கட்டி! தெரிஞ்சோ தெரியாமலோ அவன் தப்பு பண்ணியிருந்தாலும் அவனை போட்டு பாடா படுத்தாதே."பேசாம வீட்டை விட்டு ஓடிப் போயிறலாமானு இருக்கு "அப்படின்னு உன் புருஷன் புலம்புகிறான் . அவன் போயிட்டா அப்புறம் சண்டை போட உனக்கு யாரு இருக்கா என்பாராம்.
பிறகு இருவரையும் ஒன்றாக வைத்து சமாதானம் செய்து தம்பதி சிரிக்கச் சிரிக்க கிளம்பி போவதை ரசிப்பாராம்.
வணக்கம்!
Thanks Sekar (N T Pages only)
https://backwindowministries.com/wp-...ying-hands.jpg
நண்பர்களே, இந்த பத்தாயிரம் என்கிற முத்திரை எண், மனதில் பேருவகை அளிக்கிறது. நடிகர் திலகம் என்கிற மாமேதைக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்
மய்யம் இணைய தளத்தில் நமது நடிகர் திலகம் ரசிக நண்பர்களில் இந்த முத்திரை எண்ணை அடையும் முதல் ரசிகனாக அமைந்ததில் மனம் நிறைந்த உணர்வு ஏற்படுகிறது. இந்த நேரத்தில் என் பதிவுகளைப் பார்வையிட்டு, பதிலளித்து, ஊக்கப்படுத்தி ஆதரவளித்த அனைத்து நண்பர்களுக்கும் மற்றும் மய்யம் நிர்வாகிகளுக்கும் மாடரேட்டர்களுக்கும் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பத்தாயிரமாவது பதிப்பாக Definition of Style தொடரின் அடுத்த பகுதியாக இரு மலர்கள் படப்பாடலைப் பற்றிய கருத்துரை இடம் பெறுகிறது. படித்துப் பார்த்து தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.
அனைவருக்கும் உளமார்ந்த நன்றி.
Definition of Style 59
பாடல் – மன்னிக்க வேண்டுகிறேன்
படம் – இருமலர்கள் (1967)
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
வரிகள் – கவிஞர் வாலி
குரல்கள் – பாடகர் திலகம் டி.எம்.எஸ்., இசையரசி பி.சுசீலா
மேலே இந்த விவரத்தைப் பார்த்தவுடனேயே உங்கள் உள்ளம் துள்ள ஆரம்பித்திருக்கும். குதூகலத்தில் ஈடுபட்டிருக்கும் என்பது திண்ணம். அந்த அளவிற்கு ஒவ்வொரு ரசிகரின் நெஞ்சிலும் ஒவ்வொரு ஃப்ரேமும் பசுமரத்தாணி போல் பதிந்திருக்கும். நடிகர் திலகம் நாட்டியப் பேரொளி இணையின் ஒவ்வொரு நுணுக்கமான காதல் பரிபாஷையும் ரசித்து ரசித்து ஊறிப்போயிருக்கும். இதற்கான காரணங்களில் ஒன்று இந்தப் படத்தின் கருவிசை. சுந்தர் உமா பாத்திரங்கள் தொடர்பான காட்சிகளிலெல்லாம் இந்த இசை இடம் பெறும். மெல்லிசை மன்னர் என்கிற மாமேதை நடிகர் திலகம் படங்களில் பணியாற்றும் போது அவரும் ஒரு சிவாஜி ரசிகராகி விடுகிறார் போலும். அவருடைய ஒவ்வொரு படத்திலும் ஒரு அம்சத்தை Focus செய்து அதையே கதைக்கு Theme Music எனப்படும் கருவிசையாக உருவகம் செய்கிறார்.
பாடல் துவங்கும் போது பாடலின் வரிகளை விட்டு விட்டு, பின்னணியில் ஒலிக்கும் பாடலின் லயத்தை (Rhythm) கவனித்தால் அப்படியே படத்தின் கருவிசை தொடர்ந்து ஒலிப்பது போல் ஒரு பிரமை உண்டாகும். Yes, this tune is based on this theme music only. அந்த கருவிசையை ஆதாரமாக வைத்தே இந்தப் பாடலின் ட்யூனை உருவாக்கியிருக்கிறார் மெல்லிசை மன்னர்.
பாடலின் வரிகளில் கவிஞர் வாலி, எந்த அளவிற்கு இந்தப் படத்தில் Involve ஆகியிருக்கிறார் என்பது புலப்படும். மலர்கள் ஒன்று சேரும், மாலையாக மாறும் நெஞ்சினிக்க நினைவினிக்க கண்கள் நூறு கதை கூறும் என்ற வரி ஒரு உதாரணம். பாடல் முழுக்க அந்த காதலர்களின் ஆசையும் எதிர்பார்ப்பும் புலப்படுகின்றனவே அன்றி, அவர்கள் இணைந்து வாழக்கூடிய சாத்தியத்தை இசையும் கூறவில்லை, வரியும் கூறவில்லை. காரணம் கதைப்படி அவர்களின் காதல் தோல்வியில் முடிகிறது.
இப்போது இந்த அடிப்படையில் பாடலைக் கேளுங்கள். பாடல் முழுதுமே ஒரு விதமான சோகம் Undercurrent ஆக ஓடிக்கொண்டே இருக்கும். அந்த சோகம் தான் இந்தப் பாடலின் பெரும் வெற்றிக்குக் காரணம். இதில் இந்த சோகத்தைக் கொண்டு வந்ததன் மூலம் பின்னால் இந்தக் காதல் என்னவாகும் என்பதைக் கோடிட்டுக்காட்டியிருக்கிறார்கள்.
இவர்கள் இருவரும் இவ்வளவு மெனக்கெட்டு அதை பாடுபவர் கோட்டை விட்டால் என்னாகும். சொல்ல வந்த கருத்து சரியான முறையில் சொல்லப்படாமல் போய் விடும். இங்கு தான் பாடகர் திலகமும் இசையரசியும் தங்களுடைய தனித்துவத்தை நிரூபிக்கிறார்கள். இசை, வரிகள், பாடகர்கள் மூவரும் ஒருங்கிணைந்து பாடலை அளித்து விட்டார்கள். இனி அந்த காதலர்களை திரையில் காண வேண்டுமே.
ஒவ்வொரு ஃப்ரேமிலும் இந்த பாடலில் நடிகர் திலகமும் நாட்டியப் பேரொளியும் தங்களுடைய மேதைமையை நிரூபித்திருக்கிறார்கள். பாடல் வரிகளும் இசையும் குரல்களும் பின்னால் வருவதை முன்கூட்டியே சொன்னாலும் காதலர்களுக்கு அது தெரியாது. தங்களுடைய காதல் தோல்வியுறப்போகிறது என்பதை அறியமாட்டார்கள். ஆழமான காதல், ஆசை நிறைந்த எதிர்பார்ப்பு, உற்சாகமான மனநிலை, இதையெல்லாம் அந்தப் பாத்திரங்கள் வெளிப்படுத்த வேண்டும்.
முதலில் இயக்குநர் ஏ.சி.திருலோக்சந்தர் அவர்களுக்கும் ஒளிப்பதிவாளர் தம்பு அவர்களுக்கும் நன்றி கூறி விட்டு காட்சிக்கு வருவோம்.
பாடல் துவக்கத்தில் ட்ரம்பெட் ஓசை கேட்கும் போது அங்கேயே ஆரம்பிக்கிறது இவர்களின் கைங்கரியம். சரியாக அந்த ட்ரம்பெட் ஒலிக்கும் போது அட்டகாசமான நடையுடன் வசீகரமான புன்னகையுடன் நடிகர் திலகத்தின் மிட் க்ளோஸப்.. சிரித்துக்கொண்டே பத்மினியை வா என கையால் சைகை காட்டும் போதே ரசிகர்கள் Flat. இப்போது மன்னரின் கைவண்ணத்தில் க்ரூப் வயலின்கள் ஒலிக்க இருவரும் ஓடியாடும் அட்டகாசம். பொதுவாக பரபரப்பான சூழ்நிலையிலோ, அல்லது வேகமாக ஓடும் போதோ அல்லது வேறு பதட்டமான சூழ்நிலியலோ இந்த Group violin பயன்படுத்துவார் எம்.எஸ்.வி. அந்த இயக்குநர்களிடம் காட்சியமைப்பு, லொகேஷன் போன்றவற்றை முழுதும் கேட்டு அதற்கேற்ப இவர் இசையமைப்பார், அவர்களும் அதன் தன்மையைப் புரிந்து கொண்டு படமெடுப்பார்கள். அதில் இந்தப் பாடலும் அடங்கும். சற்றே முதிர்ச்சியான தோற்றம் எட்டிப்பார்த்தாலும் தன் உடல் மொழியாலும் சுறுசுறுப்பாலும் அதை மறக்கடித்து நடிகர் திலகத்தின் இளமைத்துடிப்பான நடிப்பிற்கு நன்கு ஒத்துழைப்பு தருவார் பத்மினி.
மன்னிக்க வேண்டுகிறேன் பல்லவியை பத்மினி பாடும் போது சிரித்துக்கொண்டே திரும்புவது, முன்னே அழகாக நடந்து வருவது, விரலை உதட்டில் கடித்தவாறே புன்னகைப்பது, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறே நடப்பது, குனிந்து மரியாதை செய்வது, பின் இருவரும் அருகருகே நின்று ஒருவரை ஒருவர் பார்த்தவாறும் பாடியும் காதலைப் பரிமாறுவது, மன்னிக்க வேண்டுகிறேன் என்று கைகூப்புவதும், உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன் வரியின் போது விரலை கழுத்தில் வைப்பதும் அந்த காதலனின் மன ஓட்டத்தைத் தத்ரூபமாக பிரதிபலிக்கிறா3ர் நடிகர் திலகம்.
ஒவ்வொரு ஃப்ரேமும் நெஞ்சையள்ளும் இப்பாடலை என்னாளும் மறக்க முடியாது. உமா சுந்தர் என்கிற இரு காதலர்களை காவிய நாயகர்கள் ரேஞ்சுக்கு கொண்டு சென்ற பெருமை நடிகர் திலகம் நாட்டியப் பேரொளி பத்மினி இணைக்கே சாரும்.
நடிகர் திலகம் மற்ரும் மெல்லிசை மன்னர் என்ற மாமேதைகளின் பங்களிப்பில் இரு மலர்களும் இன்றும் அமோகமாக மணம் வீசுகின்றன. இசை பற்றி தனியாக முனைவர் ஆய்வேடே எழுதும் அளவிற்கு ஏராளமான நுணுக்கங்களைத் தெளித்திருக்கிறார் மன்னர்.
இந்தப் படத்தின் தீம் மியூஸிக் நம் நெஞ்சுக்குள் ஊடுருவி மனதைப் பிசையும். அதற்காகவே பல முறை இப்படத்தைப் பார்க்கலாம். சில சமயம் கண்களை மூடிக்கொண்டு தியேட்டரில் இந்த இசையை மட்டும் கேட்டதும் உண்டு. அப்போதெல்லாம் டி.வி. கிடையாது. இரவுக்காட்சிகளில் இது போன்ற இசையை தியேட்டரின் வெளியே நின்று காற்றாட கேட்டு ரசிப்பது மறக்க முடியாத அனுபவம்.
அதே போல எப்போதெல்லாம் மனம் சஞ்சலப்படுகிறதோ அப்போது இரு மலர்கள் படத்தின் Theme Music கேட்டால் உடனே அத்தனை கவலைகளும் மறந்து விடுவதோடு மனம் அந்த இசையோடு சஞ்சாரிக்க ஆரம்பித்து விடும். The use of chorus as harmony at the apt place enlivens the composition and inherits a feel to the soul.
Another important aspect about this title music. பொதுவாக மெல்லிசை மன்னரின் டைட்டில் இசையில் படத்திற்கு தீம் மியூஸிக் உருவாக்கியிருந்தாரானால் அதை கோடிட்டுக் காட்டி, முக்கியமான பாடலின் ஓரிரு வரிகளையோ அல்லது பின்னணி இசையையோ கூட இணைத்து ஒரு கலவையாக கொடுப்பார். ஆனால் இந்த படத்தின் டைட்டில் இசை முழுக்க முழுக்க தீம் மியூஸிக்கை மட்டுமே கொண்டிருக்கிறது. இது மிகவும் அபூர்வமானதாகும்.
இரு மலர்கள் படத்தின் Theme Music. முதலில் இது இசைக்கப்படும் இடம், மலையுச்சியில் சுந்தர் விழப் போக உமா அவரைக் காப்பாற்றும் போது. இப்போதாவது எனக்கு அந்த மலரைத் தருவாயா என சுந்தர் கேட்கும் போது, மலர் என்ன, என்னையே நான் தருகிறேன் என்கிற கட்டத்தில் தான் முதன் முதலாக இந்த இசை ஆரம்பிக்கிறது. சுந்தர் உமா என்று அழைக்கும் போது மிகச்சரியாக மன்னர் இந்த் இசையை ஆரம்பிக்கிறார். இதைத் தொடர்ந்து சுந்தர் விடுதியிக்குள் நுழைந்து தன் அறையில் இருக்கும் போது எதிரில் உமா அவரைப் பார்க்க, இருவரும் கீழே இறங்கி வந்து நேருக்கு நேர் பார்த்து நிற்கும் வரை Continuous ஆக இந்த இசை ஒலிக்கும். இதுவே பிரதானமானதாகும். இதற்குப்பிறகு மன்னிக்க வேண்டுகிறேன் பாடலின் ஆரம்பத்தில் இந்த இசையின் லயம் பயன்படுத்தப்பட்டிருக்கும். மெட்டிலும் அது எதிரொலிக்கும். அதற்குப் பிரகு சுந்தர் உமா சந்திக்கும் இடங்களில் அந்தந்த சூழ்நிலைக்கேற்ப இந்த இசையை வாசித்திருப்பார்கள்.
சாதாரணமாக ஒரு படத்தில், கதையின் போக்கில், காதலை நன்கு ஆழமாக சித்தரித்து மக்களிடம் அது தாக்கத்தை ஏற்படுத்தும் கட்டத்தில் அந்த காதல் தோல்வியுற்றதும்,. கிட்டத்தட்ட படம் முடிந்து விடும் உணர்வை ஏற்படுத்தி சுவாரஸ்யம் போகும் அளவிற்கெல்லாம் நிகழ்வதுண்டு. ஆனால் இரு மலர்கள் is not such a run of the mill movie. It deserves to be placed in the Top Ten of NT movies. காதல் தோல்விக்குப் பிறகும் அந்தப் படம் இறுதி வரைக்கும் உணர்வுகளோடு கலந்துரையாடுகிறதென்றால், கதையில் உள்ள வலுவே காரணம். உரையாடல்களும் ஆழமாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கும். அந்தக் காதல் தோல்வியில் எதார்த்தமிருக்கும். கோபங்களில் பரஸ்பரம் நியாயம் இருக்கும். காட்சிகளில் செயற்கையாக திணிக்கப்படும் அம்சங்கள் கிடையாது. Reality at its core. கதைக்களம் ஒரே இடத்தில் நிலைபெற்றிருப்பதால், காதலர்கள் மீண்டும் சந்திப்பதில் திடுக்கிடும் திருப்பமோ, திணிப்போ இருக்காது. அதுவும் Natural ஆக இருக்கும். இன்னும் எவ்வளவோ சிறப்பம்சங்கள். இரு மலர்கள் belongs to a genre of those movies which are complete in all aspects and respects
நெஞ்சை நெகிழ வைக்கும் இசையைத் தந்த மெல்லிசை மன்னரை நினைத்தாலே கண்கள் குளமாகின்றன. நெஞ்சம் கனக்கின்றது. தமிழ் திரையுலகிற்கு கிடைத்த மாபெரும் வரப்பிரசாதம் நடிகர் திலகம் மெல்லிசை மன்னர் கூட்டணி.
https://www.youtube.com/watch?v=dKTlKv3MPoI
திரு ராகவெந்திரா அவர்கள் 10,000 பதிவுகள் எட்டியதையிட்டு மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
மேலும் பல ஆயிரம் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.
தனி ஒருவன்
#சிவாஜி -#தனி #பாணி
இந்தியாவின் ஐம்பது ஆண்டுகளில் தோன்றிய நடிகர்களில் தலை சிறந்தவர்; நடிப்புக் கலையின் பல்கலைக் கழகம்; இன்றைய நடிகர்கள் அனைவரையும் ஏதோ ஒரு வகையில் பாதித்தவர்; அவர் ஏற்று நடிக்காத பாத்திரங்கள் ஏதுமில்லை; தமிழ் மொழியின் ஆகச்சிறந்த உச்சரிப்புக் கலைஞர்;
அவரது திரைப்படங்களைப் பார்க்காத எவரும் சுதந்திரத்திற்குப் பிந்தைய தமிழகத்தைப் புரிந்து கொள்ள இயலாது; தேசியமும் தெய்வீகமும் கண்களென வாழ்ந்த ஒரு சிறந்த குடிமகன்” என்று அனைத்துப் பிரிவினராலும் போற்றப்படுகிறார், ...நடிகர் திலகம் என்றழைக்கப்படும் சிவாஜி கணேசன்.
இவரது பாணி நடிப்பு – வசனமுறை உருவாவதற்கும், சிவாஜி என்ற நட்சத்திரம் உதிப்பதற்கும் அடித்தளமிட்டன. 50 -களில் எழுதப்பட்ட கதைகளில் சிவாஜி நடித்தார் என்ற நிலை மாறி, 60 – களில் சிவாஜிக்கு ஏற்ற கதைகள் எழுதுவது தொடங்கியது. அப்போது அவர் ‘இமேஜ்’ முழுமையடைந்த ஒரு உயர் நட்சத்திரமாகிவிட்டார்.
அவரது ‘இமேஜூ’க்குப் பொருத்தமான, அவரது நடிப்புக்கு தீனி போடும் வகையிலான பாத்திரங்கள் உருவாக்கப்பட்டன. அதைச் சுற்றியே ஏனைய நடிகர்கள், ஒலி, ஒளி, பாடல், இசை, இயக்கம் போன்றவை கட்டுப்படுத்தப்பட்டன. எம்.ஜி.ஆர், ரஜினி, அமிதாப் தொடங்கி ஹாலிவுட்டின் நடிகர்கள் வரை அனைத்து ‘சூப்பர் ஸ்டார்’ களுக்கும் இதுவே இலக்கணம்.
எம்.ஜி.ஆர் – ரஜனியின் நட்சத்திரச் சுமையை சண்டை, சமூக நீதிப் பாட்டு, கவர்ச்சி நாயகிகள், ஆடம்பர அரங்குகள், வில்லன்கள் போன்றோர் சுமந்தனர். கமலஹாசனுககு ஹாலிவுட் கதையும், வித்தியாசமான மேக் – அப்பும், மணிரத்தினம் – ஷங்கர் போன்ற இயக்குநர்களும் வேண்டியிருந்தது. ஆனால் சிவாஜி மட்டும் தன் சுமையை – தனது நடிப்பாற்றலால் – தானே சுமந்தார் என்பதே அவருக்குள்ள திறமையாகும்.
இணையத்தில் இருந்து தொகுத்து உங்கள் இதயத்திற்கு ஆறுமுகம் சிக்ஸ்ஃபேஸ்
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...da&oe=5DDB846A
Thanks ஆறுமுகம் சிக்ஸ்ஃபேஸ் (Facebook)
நடிகர் திலகம் ரசிகன் என்று சொல்லடா... தலைநிமிர்ந்து நில்லடா
************************************************** *************************************************
உண்மையை உரைக்கும் ஒரு உண்மை ரசிகனின் மனநிலை.
************************************************** *****************************************
எப்படி உலகத்தின் தலைசிறந்த ஒப்பற்ற நடிகர் என்ற பெருமை நம் நடிகர் திலகத்திற்கு இருக்கிறதோ அந்த அளவிற்குப் பெருமை அவரது ரசிகர்களுக்கும் இருக்கிறது.
உலகப் புகழ் பெற்ற நூற்றுக்கணக்கான நடிகர்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் தன்னுடைய மனம் கவர்ந்த கலைஞன் மேல் தன்னுடைய உயிரையே வைத்திருக்கும் ரசிகர்கள் நடிகர் திலகத்தின் ரசிகர்களே என்றால் அதற்கு மாற்றுக் கருத்து என்று ஒன்று உண்டோ!
தன்னுடைய நடிகர்களை கொண்டாடும் ரசிகர்களுக்கு மத்தியில் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் முற்றிலும் வித்தியாசமானவர்கள். அவர்கள் தங்கள் கலைஞனை நடிகனாகவே பார்ப்பதில்லை. தெய்வாமாகத்தானே கொண்டாடுகிறார்கள! அவர் உயிருடன் இருக்கும்போது 'எங்கள் அண்ணன்' என்று மார்தட்டியவர்கள் அவர் இறந்தபிறகு 'எங்கள் தெய்வம்' என்றல்லவோ அவரை தினம் தினம் வழிபடுகிறார்கள்!
மற்ற நடிகர்களுக்கு இந்த பெருமை இருக்கலாம். அது சில தீவிர ரசிகர்களுக்கே பொருந்தும். ஆனால் இங்கு அப்படியா?... இங்கு ஒவ்வொரு சிவாஜி ரசிகனும் அவரது திருஉருவப் படத்தை பூஜை அறையில் வைத்துதானே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வழிபடுகிறான்! இந்தப் பெருமை நம் ரசிகர்களுக்கு மட்டும்தானே!
அதுவும் சில ஆண்டுகளாக முகநூலில் மற்ற இணையதளங்களில் 'யூடியூப்' கமெண்ட்களில் பார்த்தீர்களானால் நம் தலைவரை 'தெய்வம்' என்றே நமது அத்தனை ரசிகர்களும் குறிப்பிடுகிறார்கள். அவரது பெயரைக் கேட்டாலே இறைஉணர்ச்சிக்கு உள்ளாகிறார்கள். உணர்வுமயமாகி இதயத்தின் இறைவனாக கொண்டாடுகிறார்கள். இந்த பாக்கியம் எத்தனை நடிகர்களுக்கு கிடைக்கும்?
தியேட்டர்களில் இப்போதும் அவர் படங்கள் வெளிவரும்போது 'தெய்வம் சிவாஜி' என்ற கோஷங்கள்தான் முதலில் விண்ணைப் பிளக்கின்றன? எத்தனை பேர் தங்களுடைய மனம் கவர்ந்த நாயகர்களை தெய்வம் ...தெய்வம் ... தெய்வம் ... என்று கொண்டாடுகிறார்கள் சொல்லுங்கள்?
தங்களுடைய ஹீரோ அறிமுகப்படலத்தின்போது, பாழாய்ப்போன 'பஞ்ச்' விடும்போது, வில்லன்களை பறந்து தாக்கும்போது மட்டும்தானே அவர்களுக்கு கைதட்டல்?
ஆனால் நடிகர் திலகத்திற்கு அப்படியா?
1952 'பராசக்தி' முதலே அவர் நின்றால், நடந்தால், அசைந்தால், சிரித்தால், அழுதால், தும்மினால், இருமினால், கண்ணசைத்தால் வசனம் பேசினால், வசனம் பேசாமல் இருந்தாலும் படங்கள் முழுக்க கைத்தட்டல்களும் ஆரவாரங்களும்தானே! இல்லையென்று எவரும் மறுக்க முடியுமா? உலகில் இப்படி ஒவ்வொரு அசைவிற்கும் இப்படி கைதட்டல்களை பாராட்டுக்களையும் அள்ளிக் குவிக்கும் வேறு ஒரே ஒரு நடிகரைக் காட்டி விடுங்கள் பார்க்கலாம்.
எத்தனை நடிகர்களுடைய ரசிகர்கள் ஊர்விட்டு ஊர் போய் தங்களது அபிமான நடிகர்களின் படங்களை பார்ப்பீர்கள்? எத்தனை தடவை பார்த்து இருக்கிறீர்கள்? எத்தனை ரசிகர்கள் தங்கள் பிரிய நடிகர் நடித்த படங்களை மாநிலம் தாண்டி போய் பார்த்திருப்பீர்கள்? எந்த நடிகரின் ரசிகர்கள் கன்னியாகுமரியிலிருந்து வேன் அல்லது பஸ் வைத்து சென்னை வந்து தங்களது அபிமான நடிகரின் படங்களைப் பல தடவை பார்த்துவிட்டு சென்றிருக்கிறீர்கள்? அப்படியே வந்தாலும் உங்களைக் கூட்டிவர ஒரு அரசியல் இயக்கமோ அல்லது பணக்கார கூட்டமோ, அந்த நடிகரின் உதவியோ, வேறு பொருளாதார வசதிகளோ இருக்கிறது. உங்களுக்கு உதவி செய்ய பல்வேறு நபர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் எங்கள் தலைவர் ரசிகர்கள் அப்படியா? ஒரு வாரம் மூட்டை தூக்கி உழைத்து, அந்த உழைப்புக் காசை, நடிகர் திலகத்திற்காக, தங்களின் தெய்வத்திற்காக, அவர் படம் பார்ப்பதற்காக ஆனந்தமாக, உளப்பூர்வமாக ஆத்ம திருப்தியுடன் வரும் எத்தனை தீவிர பக்தர்களை நாம் கண்டிருக்கிறோம்! கொண்டிருக்கிறோம். ஒவ்வொருவரும் தன்னுடைய சொந்தக் காசில் அல்லவோ தங்கள் தெய்வத்தை தரிசிக்க ஊர்விட்டு ஊர் தாண்டி வருகிறார்கள்!
யார் தயவும் இல்லாமல் தங்களால் இயன்ற பொருட்களை திரட்டி நடிகர் திலகம் பெயரால் நற்பணி செய்கிறார்கள்.
இது ரசிப்புக் கூட்டம். வெறித்தனமான கூட்டம். ஆனால் நிதானம் தவறாத கூட்டம் . அவர் காட்டிய வழியில் பயணிக்கும் கூட்டம். தன்னுடைய தலைவனுக்கு ஒன்று என்றால் பதறும் கூட்டம். கதறும் கூட்டம். மற்றவர்கள் போல சிதறும் கூட்டம் அல்ல.
இந்த ரசிகத் தோட்டம் அனைத்தும் அவருக்கே சொந்தம் என்று மார்தட்டும் நெஞ்சை நிமிர்த்திடும் 'சிவாஜி என்ற சுயநலக் கூட்டம்'. ஆனால் சுயநலமில்லாக் கூட்டம்.
உலகில் நடிகர் திலகத்தின் ரசிகனை வேறு எந்த ஒரு நடிகரின் ரசிகனும், எவரும் விஞ்ச முடியாது.
இது படம் பார்த்து விட்டு தங்கள் நடிகனை மறந்துவிடும் கூட்டமல்ல. ஒவ்வொரு வினாடியும் அவரை நினைத்து உருகும் கூட்டம்.
நிற்கும்போதும், நடக்கும்போதும், குளிக்கும்போதும், பிரயாணங்களின் போதும், சாப்பிடும்போதும் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் அந்த தெய்வத்தைப் பற்றியே சதா சர்வகாலமும் சிந்தனை செய்யும் கூட்டம்.
மனைவி, மக்களிடம் குடும்ப உறவுகளிடம் சிவாஜி ரசிகர்கள் பேசிக்கொண்டிருந்தாலும், கடைகளுக்கு சென்று வீட்டிற்குத் தேவையான பொருள்கள் வாங்கும்போதும் கூட நடிகர் திலகத்தின் நினைப்பே அவரது ஒவ்வொரு ரசிகனின் மனதில் நிழலாடிக் கொண்டிருக்கும். உண்மையா இல்லையா? டூ வீலரில் பயணிக்கும்போது கூட அவரது படங்களின் காட்சிகள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும். நிஜமா இல்லையா? அவரது பெயரை உதடுகள் ஜெபம் செய்தவாறே இருக்கும். உண்மையா இல்லையா? அவரது பாடல்களை வாய் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் என்பது சத்தியமா இல்லையா?
எத்தனை டிவி சானல்கள் இருந்தாலும் நடிகர் திலகத்தின் படங்களோ பாடல்களோ மட்டும்தானே அவரது ரசிகர்களால் வீடுகளில் பார்த்துக் கொண்டிருக்கப்படும்.
ஒரு ஆண்டனியோ, ஒரு அருணோ, ஒரு 'பிரஸ்டிஜ்' பத்மநாபனோ, ஒரு பாரிஸ்டரோ, ஒரு சௌத்ரியோ, ஒரு ஆனந்தோ, ஒரு கர்ணனோ, ஒரு கட்டபொம்மனோ, ஒரு கப்பலோட்டிய தமிழனோ, ஒரு குருவோ, ஒரு சங்கரோ, ஒரு கண்ணனோ, ஒரு ராஜசேகரனோ, ஒரு தேவரோ
....இப்படி பல்வகையான கேர்கடர்கள் எந்த நேரமும் சிவாஜி ரசிகர்கள் நெஞ்சில் ஓடியவண்ணமே இருப்பார்கள் . எத்தனை நடிகர்களின் ரசிகர்கள் இப்படி இருபத்திநாலு மணிநேரமும் தங்கள் அபிமான நடிகர்களின் கேரக்டர்களை இப்படி அனுதினமும் எண்ணி எண்ணி ரசிக்கிறார்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்.
இது நடிகர் திலகத்தின் அனைத்து ரசிகர்களுக்கும் ஒட்டுமொத்தமாகப் பொருந்தும். ஒருவர்கூட இதற்கு விதிவிலக்கு கிடையாது. ஏனென்றால் அவர்கள் நடிகர்திலகத்தின் அன்புச் சங்கிலியால் இறுகப் பிணைக்கப்பட்டவர்கள். ஒருவரும் அதிலிருந்து விலகாதவர்கள்.
பிறந்ததிலிருந்து ஒரே ஒரே நடிகன்... ஒரே தலைவன்... ஒரே அண்ணன்... ஒரே தெய்வம் என்று கட்சி மற்றும் காட்சி மாறாத உண்மை விசுவாசிகள். உண்மை உடன்பிறப்புக்கள். உண்மைத் தம்பிகள். உன்னத ரசிகர்கள்.
நடிப்பின் மகான் என்ற ஒரே ஒரு விஷயத்திற்காக மட்டும் அவரது ரசிகர்கள் அவரைக் கொண்டாடுகிறார்களா? அதையும் மீறித்தான் நடிகர்திலகம் எங்கள் எல்லோர் மனதிலும் குடிகொண்டிருக்கிறார்.
நடிப்பு ஒன்றின் மட்டுமாலா அவரை நாங்கள் பூஜிக்கிறோம்?...அல்ல அல்ல...அதையும் தாண்டி....ஒரு மிகச் சிறந்த குடும்பத் தலைவராக அவரை ஒவ்வொரு ரசிகனும் ஏற்றுக் கொண்டிருக்கிறான். ஒரு பாசமான சொந்த அண்ணனாக அவரை வணங்குகிறான். ஒரு மனித நேயம் மிக்க மனிதராக அவரை நேசிக்கிறான். ஏழைகளுக்கு வலது கரம் கொடுப்பதை இடது கரம் அறியாமல் தர்மம் செய்த கர்ணனாக அவரை மனதில் இருத்தி, தூக்கி வைத்துக் கொண்டாடுகிறான்.
தொழில் நேர்மையைக் கடைபிடித்த வழிகாட்டியாக குருவாக அவரை ஏற்றுக் கொள்கிறான். அவருடைய நேரந்தவராமையை முன் உதாரணமாகக் கொண்டு அவர் வழி நடக்க முயற்சி செய்கிறான். ஒரு பாசமிகு தந்தையாக அவரை மனதில் நிறுத்திக் கொள்கிறான். ஒரு நேசமிகு அண்ணனாக அவர் வழியைத் தொடர்கிறான். அவர் பாணியைப் பின்பற்றுகிறான். இப்போது கடவுளின் பக்தனாக பூஜை செய்கிறான்.
யார் மனமும் புண்படாத அவரது கேலியான நையாண்டித்தனத்தை அனைத்து சிவாஜி ரசிகர்களிடமும் நான் காணலாம். படங்களில் அவர் கோலோச்சிய கேரக்டர்களில் ஒவ்வொரு ரசிகனும் தன்னை நுழைத்துக் கொண்டு அவராகவே ஆகிறான்.
வாழ்வியல் உதாரண புருஷராக அவரை ஏற்றுக்கொண்டு அவர்வழி நடக்க முயல்கிறான்.
இப்போது சொல்லுங்கள்...உலகின் வேறு எந்த நடிகருக்கு இப்படிப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்? எந்த நடிகன் இப்படி ஒவ்வொரு ரசிகன் மனதிலும் அவன் உறக்கத்திலும் கூட, கனவிலும் கூட அவனை ஆள்கிறான்?
அது ஒரே ஒரு தெய்வம்.... நம் இதய தெய்வத்தால் மட்டுமே சாத்தியம்
ஒவ்வொரு சிவாஜி ரசிகனின் உயிர் மூச்சும் நடிகர் திலகம் என்ற மாபெரும் சக்திகொண்ட, மாபெரும் உண்மையான ரசிகனை தொண்டனாய்க் கொண்ட, நம் நடிகர் திலகம் ஐயன் அவர்களை மட்டும்தானே இந்தப் பெருமை சாரும்?
அதனால்தான் எவரிடமும் சேராமல் தனித்து ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு சிவாஜி ரசிகனும் 'நான் தலைவரின் ரசிகன்' என்று மார்தட்டி இறுமாப்புக் கொள்கிறான்.
அந்த மாபெரும் பெருமையையும் பாக்கியத்தையும் அளித்த இறைவன் அல்லவோ நமது மகான்!
நன்றி வாசு தேவன் (முகநூல்)
வசந்த மாளிகை
நாளை 08/08/19 சென்னை ஆல்பட் தியேட்டரில் 50 நாளைக் கடக்க இருக்கிறது,
நாளைய காட்சி அரங்கு நிறைந்து விட்டது
Houseful
... அஜீத் நடிப்பில் நேர் கொண்ட பார்வை நாளை ரிலீஸாகிறது
அஜித் படமும் நாளை ஹவுஸ்புல்
வசந்த மாளிகை புதிய படங்களைப் போலவே வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறது,
எதிரிகளுக்கு அடி வயிறு எரிகின்ற நிலை,
புதியதாக ரிலிஸான நேர் கொண்ட பார்வை படத்தின் டிரெய்லரை YouTube ல் ஒரு கோடியே 30 லட்சம் பேர் வரை பார்த்து இருக்கிறார்கள்,
ஆனால் பாருங்கள் 54 ஆண்டுகளுக்கு முன் வந்த திருவிளையாடல் படத்தின் பகுதி காட்சியை மட்டுமே ஒரு கோடியே 30 லட்சம் பேர் பார்த்து மகிழ்ந்து இருக்கிறார்கள்,
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...13&oe=5DD8A29Ehttps://scontent.fyyz1-2.fna.fbcdn.n...59&oe=5DE70AC6https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...38&oe=5DD4189Fhttps://scontent.fyyz1-1.fna.fbcdn.n...40&oe=5DD64F7E
Thanks Sekar (Facebook)