https://youtu.be/3kyZLF7HIfY...... Thanks...
Printable View
https://youtu.be/3kyZLF7HIfY...... Thanks...
காலங்களில் மாறினாலும் தலைவா என்றிட நீ இருக்கிறாய் எனது இதயக்கனியாய்..
புரட்சிமிகு கருத்துகளால் என் இதயம் கவர்ந்தவனே,
உன்னை எதிர்த்தவரும் இதயத்தால் வாழ்த்தி,
உன் பிரிவால் கலங்கிட உனக்குக்கிணையாய் எத்தலைவனும் தமிழக வரலாற்றில் நான் கண்டதில்லை.
அண்ணலின் வழிவந்த அன்பு சிகரமே,
உன்னை நேரில் காணாவிட்டாலும் எம் உள்ளங்களில் வாழ்கிறாய்..
மக்கள் திலகமாய் திகழ்ந்த உன் பெயரில் கயவர்களும் நீயாக முயற்சிக்கிறார்கள்.
காலம் தரும் அவர்களுக்கு பெரும்தோல்வி என்னும் பரிசு..
கட்சியும் வேண்டாம்.
பதவியும் வேண்டாம்.
உன் கருத்துகள் போதும்.. .
தமிழ் பற்று போதும்.......... Thanks.........
"எங்க வீட்டு பிள்ளை" காவியத்தில் மக்கள் திலகம் சாப்பிடும் இந்த காட்சியில் கரகோஷம் தியேட்டரை தாண்டி வெளியே அடுத்த காட்சிக்கு நின்றிருக்கும் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும்
பரவசத்தையும் கொடுத்தது என்றே சொல்லவேண்டும். நம்பியார் உள்ளே நுழையும் போது எம்ஜிஆர் சாப்பிட்டு கொண்டிருப்பார். நம்பியார் அதை பார்த்து அருவருப்பாக முகத்தை சுழித்து கொண்டிருப்பார்.
மக்கள் திலகமோ அவர் முகத்தை பார்த்தவுடன் மேலும் அவருக்கு எரிச்சலூட்டும் விதமாக முகத்தை அஷ்டகோணலாக எகத்தாளத்துடன் சாப்பிடும் அழகு இருக்கிறதே வசனத்தை உரக்க கத்தி பேசாமல் முகம் துடிக்காமல் இயல்பாக நடித்து தான் ஒரு நடிகப் பேரரசர் என்பதை வெளிப்படுத்தும் அற்புதமான காட்சி. நம்பியாருக்கும் எம்ஜிஆருக்கும் வரப்போகும் மோதலை எண்ணி சாப்பிடும் காட்சியில் எம்ஜிஆர் காட்டும் சேஷ்டையை மக்கள் வெகுவாக
அபரிமிதமாக ரசித்தார்கள்.......... Thanks.........
https://youtu.be/1pVXvQwrNBU..... Thanks...
https://youtu.be/a6WJ8n0e-NA....... Thanks...
https://youtu.be/x0nEIdpUAGE...... Thanks...
https://youtu.be/86CnPom_kgQ.......... Thanks...
https://youtu.be/Z6xhMKIA9vg...... Thanks...
https://youtu.be/YArGYA-4dc4........ Thanks...
https://youtu.be/rtpO9JvXbmA......... Thanks.........
தங்கத்தில் நிறமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கையென்று
வந்திருக்கும் மலரோ
மீனவ நண்பன் பட பாடல்
உருவான விதம்
உங்கள் பார்வைக்கு
சில பாடல்கள் உருவான விதம் பாடல்களைக் காட்டிலும் சுவாரஸ்யமாக இருக்கும்.அது மீனவ நண்பன் படப்பிடிப்புத் தளம்.ஷாட்டின் இடைவேளையில் ஓய்வில் இருக்கிறார் மக்கள் திலகம்.பாடலாசிரியர் முத்துலிங்கம் அவரைக் காண வருகிறார்.
வணக்கம் தலைவரே.அவர் அப்படித் தான் அழைப்பார்.வாப்பா பேமெண்ட் எல்லாம் வந்துச்சா?.என்ன பேமெண்ட் தலைவரே.?.இந்தப் படத்திற்கு பாட்டெல்லாம் நான் எழுதலையே.?.
பாட்டில்லையா?. உனக்கு ஒரு பாட்டு குடுக்கச் சொன்னேனே? .யாரு தயாரிப்பு நிர்வாகி? .கூப்பிடு அவரை.நிர்வாகி வருகிறார்.ஐயா நான் சொல்லீட்டேங்க.படம் ஆல்மோஸ்ட் முடிஞ்சிடுச்சிங்க.பாட்டுக்கு சிச்சுவேஷன் இல்லைன்னுட்டாங்கையா.
யார் சொன்னது?. ஸ்ரீதரைக் கூப்பிடுங்க. சானா இருக்காரா பாருங்க.ரெண்டு பேருமே இருக்காங்க.கூப்பிட்டேண்ணு சொல்லுங்க.
இருவரும் வருகிறார்கள்.ஏங்க முத்துலிங்கத்துக்கு ஒரு பாட்டு குடுக்கச் சொன்னேனே ஏன் குடுக்கல.?.
அது வந்துங்க படம் ஏறக்குறைய முடிஞ்சு போங்சுங்க.ரெக்கார்டிங் மட்டும் பாக்கி.ஏம்பா ஸ்ரீதர் பாட்டுக்கு ஏதாவது சிச்சுவேஷன் இருக்கா என்ன?.ஸ்ரீதர் இல்லை என்கிறார்.
ஏன் இருக்காது?.முத்துலிங்கத்துக்கு ஒரு ட்ரீம் சாங் கொடுங்க? .அதுக்கும் இடமில்லைங்களே.சிச்சுவேஷன் எங்கேயும் இல்லைங்களே.
ஏங்க எனக்கே சொல்லித் தர்ரீங்களா?.அதுவே ட்ரீம் சாங்.அதுக்கு எதுக்கு சிங்சுவேஷன்.அன்பே வாவில ராஜாவின் பார்வை பாட்டுக்கு எங்கே சிச்சுவேஷன் இருந்தது.ரெண்டு பேரும் பார்த்தாலே ட்ரீம் சாங் தானே.
சானா என்ற சடையப்ப செட்டியார் நெளிந்தார்.இவர் நம்மை சடையப்ப வள்ளலாக்க முடிவு செய்துவிட்டார்.இன்னொரு செலவு வைக்கப்போறார் என்ற முடிவோடு ஸ்ரீதரைப் பார்க்க ஸ்ரீதரோ போட்டுறலாங்க என்கிறார்.சரிங்க முத்துலிங்கத்துக்கு ஒரு பாட்டு கொடுத்துரலாங்க என இருவரும் அங்கிருந்து நகர போப்பா போய் பாட்டெழுதி பேமெண்ட் வாங்கிக்க என முத்துலிங்கத்தை அனுப்பி வைக்கிறார்.
மக்கள் திலகத்தின் தனிப் பண்பே அது தான்.தம்மை நம்பியிருக்கும் கலைஞர்களை அவர் கைவிட்டதே இல்லை.சிறு பங்காவது அவர்களுக்குக் கொடுத்து அவர்கள் வீட்டில் அடுப்பெரிக்க வைப்பார்.முத்துலிங்கத்திற்கு இனிமேல் தான் தலைவலியே.
இயக்குநர் சொல்லி எம்.எஸ்.வி. பாட்டுக்கு அழைக்கிறார்.வாத்தியாரைய்யா பல்லவி குடுங்க என்கிறார்.முத்துலிங்கத்தை அப்படித் தான் அழைப்பார்.முத்துலிங்கம் பல்லவி போடுகிறார்.
அழகுகளே உன்னிடத்தில் அடைக்கலம்
அங்கங்களோ மன்மதனின் படைக்கலம்.
ஸ்ரீதருக்கு இந்தப் பல்லவி பிடிக்கவில்லை.அடைக்கலம் நல்லாயிருக்கு இந்த படைக்கலத்தை கொஞ்சம் மாத்திக்குடுங்களேன் என்கிறார்.படைக்கலம்னா போர்க்களம்தானே.இதெப்படி இங்கு வரும்.
சார் படைக்களம் அப்படீன்னா தான் போர்க்களம்.இது படைக்கலம்.பண்டங்கள் அப்படீண்ணு அர்த்தம்.அங்கங்களை மன்மதனின் பண்டங்களாக....
என்ன சார்.ஈசியா போட்டுக்குடுங்க சார் என்கிறார் ஸ்ரீதர்.மெல்லிசை மன்னரோ படைக்கலம் கூட பரவாயில்லைங்க.இந்த அடைக்கலத்தை மாத்தியே ஆகணும்.முத்துலிங்கத்திற்கு தலையே சுற்றியது.இவர் படைக்கலத்தை தூக்கச் சொல்கிறார்.அவர் அடைக்கலத்தை தூக்கச் சொல்கிறார்.மன்னர் அதற்கு சொன்ன காரணம் தான் முத்துலிங்கத்திற்கு சிரிப்பை வரவழைத்தது.
முத்துலிங்கம் நொந்தேபோனார்.இப்படியெல்லாமா சிந்திப்பார்கள்.ரெண்டு கலமும் வேண்டாம் புதுசாவே போட்டுத் தாரேன் என்று எழுதிய பாடல் தான்
தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கையென்று வந்திருக்கும் மலரோ
நீ மாலை நேரப் பொன் மஞ்சள் நிலவோ
மக்கள் திலகம் பரபரப்பான அரசியல் களத்தில் ஈடுபட்டு மாநில முதல்வராகப் போகும் 77ல் வெளியான மீனவ நண்பன் ஒரு வெற்றிப்படம்.மீனவர்களின் துயர் துடைக்கும் குமரனாக பணக்கார லதாவின் காதலனாக நாயகி காணும் கனவில் வந்து போகும் பாடலிது.கடைசி நேரத்தில் இணைத்த பாடலில் ஜேஸூதாஸ் வாணி ஜெயராம் குரலில் மெல்லிசை மன்னர் போட்ட அருமையான பாடலிது.இலக்கியத்தரமான வரிகளைப் போட்டு பாடலை அழகாக்கியிருப்பார் முத்துலிங்கம்.
காமன் போல வந்திருக்கும் வடிவோ
அந்த தேவலோக மன்னவனும் நீயோ?.
முழுக்க முழுக்க மக்கள் திலகத்தின் புகழ் பாடும் பாடல்.நாயகியின் கனவு நாயகனை மயக்கும் வரிகள்.
வண்ண ரதம் போலவே தென்றல் நடை காட்டவா
புள்ளி மான் போலவே துள்ளி நான் ஓடவா
வண்ண ரதமாகினால் அதில் சிலை நானன்றோ
புள்ளி மான் தேடும் களைமானும் நானல்லவோ
அசைந்து தவழ்ந்து அருகில் நெருங்கி அமிழ்தாகவோ
அட்டகாசமான மெட்டில் அசத்தும் இரு குரல்கள்.சரண முடிவில் அருமையான வாணியம்மாவின் ஆலாபனை.
முல்லை மலர்ச் செண்டுகள் கொண்டு கொடியாடுது
செண்டு சதிராடினால் அந்த இடை தாங்குமா? .
இந்த இடை தாங்கவே அந்தக் கைகள் இருக்கின்றது
கொஞ்சி உறவாட மலர் மஞ்சம் அழைக்கின்றது.
எளிமையான அதே நேரம் இலக்கியத்தரமான பாடலைத் தருகிறார் முத்துலிங்கம்.
மலர்ந்து கனிந்து சிரித்துக் குலுங்கி கனியாகவோ.?.
அடுத்த சரணமும் இதே இலக்கியமாக ஜொலித்த பாடல்.சடையப்ப செட்டியார் தான் பாவம்.டீரீம் சாங் ஏகப்பட்ட பேர்களின் வீட்டிற்கு அடுப்பெரிய உதவியது அவருக்கு எங்கே தெரியப்போகிறது.இந்த மகத்தான சேவைக்குப் பின்னால் மக்கள் திலகமென்னும் மனிதாபிமானி இருப்பது நமக்கல்லவா தெரியும்........... Thanks.........
எம்ஜிஆர் மற்றவர்களுக்கும் மதிப்பளித்தவர்.
M.G.R. என்னதான் மக்கள் செல்வாக்கு பெற்றவராக இருந்தபோதும் மற்றவர்களுக்கு மதிப்பளிக்க தவறியதில்லை. முதல்வராக இருந்தபோது அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு உரிய மரியாதை அளித்தார். நிர்வாக விஷயங்களில் கட்சியினர் தலையீட்டையும் ஒருபோதும் அவர் அனுமதித்தது இல்லை.
முதல்வர்கள் முன்னிலையில் அமைச்சர்கள் பணிவும் பவ்யமும் காட்டுவது நாம் பார்த்து பழகிப்போன ஒன்று. திருச்சி சவுந்தர ராஜன் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். அவரோடு பல படங்களில் நடித்தவர். எம்.ஜி.ஆர். மன்றத்தின் பொருளாளராகவும் பணியாற்றிவர். அவரை தனது அமைச்சரவையில் எம்.ஜி.ஆர். சேர்த்துக் கொண்டார். தனது ரசிகர் மன்றத்தில் இருந்தவர் தானே என்று நினைக்காமல், அமைச்சருக்கு உரிய மரியாதையை அவருக்கு அளித்தார்.
1978-ல் அமைச்சராக நியமிக்கப்பட்ட திருச்சி சவுந்தரராஜன், ஆளுநர் மாளிகையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டபின், பொறுப்பேற்க கோட்டைக்கு வந்தார். முதல்வர் எம்.ஜி.ஆரும் உடன் வந்து, புதிய அமைச்சரின் அறைக்கு அழைத்துச் சென்று மாலை அணிவித்து வாழ்த்தி அமைச்சருக்கான இருக்கையில் அமரச் செய்தார். அதோடு மட்டுமல்ல; வழக்கமாக முதல்வர்கள் அமர்ந்திருக்க அவர் பின்னால் மற்றவர்கள் நிற் பதை பார்த்திருப்போம். ஆனால், அமைச்சர் நாற் காலியில் திருச்சி சவுந்தரராஜன் அமர்ந்திருக்க, அவர் அருகே தானும் மற்ற அமைச்சர்களோடு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார் எம்.ஜி.ஆர்.!
இதேபோன்று, அவரோடு பதவியேற்ற கே.ஏ.கிருஷ்ணசாமி உள்ளிட்ட அமைச்சர்களை யும் வாழ்த்தி அவர்களுக்கு அருகே நின்று எம்.ஜி.ஆர். படம் எடுத்துக் கொண்டார். அமைச்சருக் குரிய நாற்காலியில் சம்பந்தப்பட்ட அமைச்சர் கள் அமர்ந்திருக்க, பக்கத்தில் நின்று கொண்டிருந்த முதல்வர் அநேகமாக எம்.ஜி.ஆராகத்தான் இருக்கும். 1983-ம் ஆண்டு எஸ்.ஆர்.ராதா அமைச்சராக பதவியேற்றபோதும் இதே மரபை எம்.ஜி.ஆர். கடைபிடித்தார். முதல்வர் அமைச்சர் என்பதைத் தாண்டி, தம்பி கள் பொறுப்புக்கு வருவதைப் பார்த்து மகிழ்ச்சியடையும் ஒரு மூத்த சகோ தரனின் பாசமும் அதில் தெரிந்தது.
எம்.ஜி.ஆர். எப்போதுமே நாட்டு நடப் பிலும் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதிலும் விழிப்புடன் இருப்பார். அதுவும் முதல்வர் பொறுப்பில் இருந்தபோது மிகவும் கூர்மையாக இருந்தார். இப்போது போல அப்போதெல்லாம் தனியார் தொலைக்காட்சி கள், ஃபிளாஷ் நியூஸ், வாட்ஸ் அப் இத்யாதிகள் கிடையாது. இருந்தாலும் தமிழகத்தின் மூலை முடுக்கிலும்கூட என்ன நடந்தாலும் உடனடியாக அறிந்துகொள்வதற்காக, முதல்வர் என்ற முறையில் சில ஏற்பாடுகளை எம்.ஜி.ஆர். செய்து வைத்திருந்தார்.
ஒருமுறை, முதல்வர் எம்.ஜி.ஆரைப் பார்ப்பதற்காக சென்னையைச் சேர்ந்த அதிமுக வினர் கூட்டமாக ராமாவரம் தோட்டத்துக்குச் சென்றனர். அவர்களிடம் எம்.ஜி.ஆர். ‘‘என்ன விஷயம்?’’ என்று விசாரித்தார்.
‘‘தலைவரே, எங்க ஏரியாவுக்கு புது போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்திருக்காரு. அவருக்கு நம்ப கட்சிக்காரங்களைக் கண்டாலே வெறுப்பு. அதிமுக வினர் என்று தெரிந்தாலே அடிக்கிறாரு. வேண்டு மென்றே எங்கள் மீது பொய் வழக்குகள் போடறாரு’’ என்று கோரஸாக குற்றப்பட்டியல் வாசித்தனர்.
‘‘ஏன்? நீங்க என்ன பண்ணிணீங்க?’’ என்று அவர்களை ஆழம் பார்த்தார் எம்.ஜி.ஆர்.!
‘‘நாங்க ஒண்ணுமே பண்ணலை தலைவரே’’... பம்மியது கூட்டம்.
‘‘அப்படியா? ’’ என்று கேட்டு சில விநாடிகள் நிறுத்திய எம்.ஜி.ஆர்., ‘‘ ஆமா, உங்க ஏரியா ஸ்டே ஷன்லே ஹெட் கான்ஸ்டபிளை அடிச்சது யாரு? ’’ என்று கூட்டத்தினரை கூர்மையாக பார்த்தவாறே கேட்டார்.
கூட்டத்தில் இருந்த ஒருவருக்கும் பேச்சு மட்டுமல்ல; சில விநாடிகள் மூச்சும் வரவில்லை. பதில் சொல்ல முடியாத மவுனமே அவர்களின் தவறை வெளிக்காட்டியதை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆரின் முகத்தில் கோபக் கனல் வீசியது.
‘‘நான் ஒரு முதல் அமைச்சர். எனக்கு எல்லா தகவல்களும் செய்திகளும் உட னுக்குடன் வந்துவிடும். நீங்க தப்பு பண் ணிட்டு போலீஸ் மீது பழியைப் போடறீங்க. போலீஸ்காரங்களும் மனுஷங்கதானே? போலீஸைக் கடமையை செய்ய விடாம நீங்க போய் தொந்தரவு கொடுக்கிறீங்க. அப்புறம் போலீஸ்காரங்க நம்ம கட்சியினரை பழிவாங் கறாங்கன்னு எங்கிட்டயே வந்து சொல்றீங்க.
நாம ஆளும் கட்சியா இருக்கலாம். நிர்வாகம் எல்லோருக்கும் பொதுவானது. அரசு அதிகாரி களை அவங்க எந்த துறையை சேர்ந்தவங்களா இருந்தாலும் மதிக்கணும். அவங்க பணிகளில் நாம குறுக்கிடக் கூடாது. தப்பு பண்ணிட்டு யாரா வது எங்கிட்ட சிபாரிசுக்கு வந்தீங்கண்ணா, நான் பாத்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டேன். ஜாக் கிரதையா இருங்க’’ என்று வந்திருந்தவர்களை வார்த்தைகளால் புரட்டி எடுத்தார்.
அரண்டுபோன கட்சியினர், எம்.ஜி.ஆரைப் பார்த்து பெரிய கும்பிடாகப் போட்டுவிட்டு நான்கு அடிகள் பின்வாங்கி பதிலேதும் பேசாமல் திரும்பி நடந்தனர்.
‘‘நில்லுங்க’’… எம்.ஜி.ஆரிடம் இருந்து அதட்ட லாய் உத்தரவு பிறந்தது. எதற்கு என்று புரியாமல் மந்திரத்துக்கு கட்டுப்பட்டதுபோல கூட்டத்தினர் நின்றனர்.
தந்தை பெரியாரின் கண்டிப்பும் பேரறிஞர் அண்ணாவின் கனிவும் கலந்து ஒலித்தது எம்.ஜி.ஆரின் குரல் …
‘‘எல்லோரும் சாப்பிட்டுட்டு போங்க!’’.......... Thanks...
' படம் போட்டாச்சா...டைட்டில் போட்டாச்சா?' என்ற படபடப்புடன் காட்சி நேரம் 5 நிமிடம் கடந்த பின் டிக்கெட் எடுத்துக் கொண்டு ஓடியபடியே செல்லும் ரசிகர்கள் இன்றளவும் இருக்கிறார்கள். ' அய்யோ எம்ஜிஆர் பெயர் போட்டிருப்பாங்க' அடுத்தக் காட்சி பார்க்கலாம்' என கூறி டிக்கெட் கவுண்டரிலிருந்து வெளியே வந்த அனுபவமும் உண்டு.இன்றைய நடிகர் ஒருவரின் படத்தின் ஆரம்பத்தில் எம்ஜிஆருக்கு ஆர்எம் வீரப்பன் மாலை அணிவிப்பார். தியேட்டரில் விசில் சத்தம் காதை பிளக்கிறது. டிக்கெட் கவுண்டருக்குள் விட்டிருந்த கையை வெளியே எடுத்து நகருகிறேன். ' ஏம்பா படம் பார்க்கலையா?' கேட்டவர் திக்கென ஆச்சரியப்படும் அளவில் எனது பதில்...' புரட்சித்தலைவர் வரும் சீன் கடந்துவிட்டது,அவர் முகத்தை இன்றைய இளைய ரசிகர்களின் ஆரவாரத்தோடு கண்டுகளிக்க நினைத்தேன், முடியாமப் போச்சு' என்றேன். இத்தனைக்கும் அது ரிலீசான முதல் நாள்.அந்தப் படம் பாட்சா. இப்படி மக்கள் திலகம் டைட்டிலைப் பார்த்தால்தான் தலைவர் படம் பார்த்த திருப்தி ஏற்படும். தலைவர் மீனவ நண்பன் படத்தில் அறிமுகமாகும் காட்சியில் வில்லன் கண்ணனின் கையை கர்ச்சிப் கட்டிய இரும்புக்கரம் தடுக்கும். பின் பெல்ஸ்பாட்டம் பேண்ட் அணிந்த தலைவர் காலிலிருந்து காமிரா மேலே செல்லும். படம் பார்த்துவிட்டு ஊரில் வந்து சிறுவர்களிடம் சொல்லிச் சொல்லி மாளாது. 'இ.போ.எ.வாழ்க படம் பார்த்திருக்கிறாயா? தலைவர் பெயர் டைட்டிலில் எத்தனை தடவை வரும்?' எனக் கேட்டு என்னை மடக்கியவர்கள் உண்டு. ' ச்சே... தலைவர் படத்தை எத்தனை தடவை பார்த்திருக்கேன். 3 தடவை டைட்டிலில் தலைவர் பெயர் வருவதை பார்த்தும் மறந்துவிட்டோமே' என வருந்துவேன். நினைத்ததை முடிப்பவன் படத்தில் தலைவர் இந்த கலர் பேண்ட் சர்ட்டுக்கு இந்த கலரில் சாக்ஸ் மற்றும் ஷூ அணிந்து வருவார் என கூறுபவர்களையும் பார்த்திருக்கிறேன். தலைவர் படப் பட்டியலை அகர வரிசையிலும் எந்த தேதியில் என்ன படம் ரிலீஸ் என தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் சொல்லும் விஜய் டிவி மன்னாதி மன்னன் பொங்கல் நிகழ்ச்சி புகழ் அய்யா ஆழ்வை ராஜப்பா சாமி வரை இன்றளவும் எண்ணற்ற மக்கள் திலகம் பக்தர்களுடன் தலைவர் காவியங்களை சென்னை, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை, கோவை போன்ற ஊர்களில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. படம் சீன் பை சீன் நான் அறிந்திருந்தாலும் சில நண்பர்கள் நம் அருகில் இருந்து கொண்டு அடுத்தடுத்து காட்சியில் என்னென்ன நிகழ்வு வரும் என சொல்லிக் கொண்டே இருப்பார்கள். மனதுக்குள் எரிச்சல் வந்தாலும் காட்டிக் கொள்வதில்லை. அன்று 1985 களில் தலைவர் படம் மறுரிலீஸ் என்றாலும் ரசிகர்கள் நோட்டீஸ் அடித்து விநியோகித்துள்ளனர் என்பதை 1995 களில் அறிந்தேன். அப்போ ரிலீஸ் சமயத்தில் தலைவர் ரசிகர்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எப்படி இருந்தது என மூத்தவர்களிடம் கேட்பேன்.' தம்பி 1965 ல எங்கவீட்டுப் பிள்ளை படம் ரிலீஸ் எப்படி ஆரவாரமா இருந்ததோ அதைவிட ஆரவாரம் இன்றுவரை எப்போதெல்லாம் மறுவெளியீடு செய்கிறார்களோ தலைவர் படத்திற்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்துவருவதைப் பார்த்து வருகிறேன்' என்கிறார்கள். இந்த சாதனையை இன்றைய நடிகர்களோ, அவரது ரசிகர்களோ வாழ்நாளில் சந்திக்க வாய்ப்பே இல்லை. தலைவர் படம் பிரமாண்டம் என உணர்த்த போஸ்டரில் பிரமீடு அமைப்பில் படத்தின் பெயர் இருக்கும். திரையில் அந்த பெயர் சாதாரணமாக இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுவோம். ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண் போன்ற போஸ்டர்கள் 1985 களில் இப்படிப் பார்த்திருக்கிறேன். (இவை தற்போது டிஜிட்டலில் மறுவெளியீடு செய்யும்போது திரையிலும் டைட்டில் பிரமாண்டமாக மாற்றம் செய்திருந்தனர்.) ஆனால் அரசகட்டளை டைட்டில் போஸ்டரிலும் திரையிலும் ஒரே மாதிரியாக இருக்கும். குடியிருந்த கோயில் முதன்முதலாக பார்க்கும்போது என்னை படத்திற்கு அழைத்துச் சென்ற என் மாமாவிடம் ' எம்ஜிஆர் பெயர் டைட்டிலில் எப்ப வரும் எப்ப வரும் ?' என நச்சரித்துக் கொண்டே இருந்தேன். புலி, பசுவும் கன்றுடன் தலைவர் பெயர் திரையில் வரும்போது எழுந்த ரசிகர்கள் தலைவர் வங்கி கூரையில் ஓடுகளைப் பிரித்து இறங்கி சண்டை போடுவதுவரை துள்ளிக் குதித்தபடியே இருந்தனர். நானும் மீனவ ரசிகர்கள் கூட்டத்தினுள் சிக்கி அவ்வப்போது தலைவர் முகத்தை பார்க்க படாதுபாடு பட்டேன். முகநூல், வாட்சப் தளங்களில் எண்ணற்ற தலைவர் புகைப்படங்களை பதிவிட்டுவிட்டேன். நண்பர்கள் பதிவிட்ட புகைப்படங்களையும் சேர்த்து பல்லாயிரக்கணக்கான புகைப்படங்களும் வீடியோ clipகளும் சேமித்தாச்சு. மற்றவர்களிடமிருந்து எனது பதிவு மாறுபட்டிருக்க வேண்டும் என யோசித்தேன். தலைவரைப் பற்றி செய்தி சொல்லும் போது ஓவியத்துடன் சொன்னேன். தலைவர் பற்றி சித்திரக்கதை பதிவிட்டேன். ம்கூம் தலைவர் புகைப்படத்தை ஒரிஜினலாவே பதிவிட்டால் ஒழிய எனது ஓவியம் சார்ந்த தலைவர் பற்றிய பதிவுகளுக்கு வரவேற்பு இருப்பதில்லை. என்றாலும்....'சரி இப்ப என்ன சொல்ல வருகிறீர்?' எனத்தானே கேட்கிறீர்கள். தலைவர் பெயர் டைட்டிலில் அறிமுகமாகும் தொகுப்பு பதிவிட நினைத்து தயார் செய்தபோது ....முன்னுரை வேண்டாமா? அதான் இத்தனை ஆதங்கம்.......... Thanks.........
MGR அவர்களுக்கு ஆரம்ப காலத்தில் நடிப்பும் சொல்லிக்கொடுத்து அவர் வறுமையில் வாடிய போது தன் வீட்டில் பல நேரம் சாப்பாடு போட்டவர் காளி.என்.ரத்தினம்.(சபாபதி படத்தில் காமடியனாக கலக்கியவர்) தலைவரை பெரிய ஆளாக வருவாய் என சாமான்யராக இருந்தபோதே கணித்தவர்.. MGR முதன் முதலாக ராஜகுமாரி படத்தில்1947ல் கதாநாயகனாக நடித்துக்கொண்டிருந்த போது அவரை சந்தித்து ஆசி பெற்றார். படம் வெற்றி பெற்றது.திரும்ப அவர் வீட்டுக்கு சென்றபோது அண்ணே நீங்க சொன்னமாதிரியே நா பெரிய ஆளாயிட்டேன். அதற்கு காளி.என்.ரத்தினம் சொல்கிறார். "நான் சொன்ன பெரிய ஆள் என்ற இலக்கு வேறு. இதெல்லாம் அதில் 10சதவீதம் கூட வராது. நா சொன்ன மாதிரி பெரிய ஆளா நீ இருக்கும் போது நா இருக்கமாட்டேன். "
1950ல் காளி ரத்தினம் மறைந்தார். அவர் மனைவி ராஜகாந்தத்துக்கு எம்ஜிஆர் மகன் போலவே இருந்தார். பல சூழல்கள் மாறின... எம் ஜி ஆர் முதல்வரானார். அப்போது அவர் சொன்ன வார்த்தை. "என்னை இந்த இடத்தில் கொண்டு வந்தது கலைத்துறை. அதுதான் வேர். அந்த வேருக்கு தண்ணீர் ஊற்றி பாதுகாத்தது காளியண்ணன்."
அவர் வீட்டுக்கு சென்றார் எம்ஜிஆர். அவருடைய படத்துக்கு மாலை போட்டார். ராஜகாந்தம் அம்மாவிடம் ஆசி வாங்கி விடைபெற்ற போது ராஜகாந்தம்"சாப்பிட்டு விட்டு போ ராமச்சந்திரா"என்றார். அதற்கு தலைவர் பதில். "நீங்க போட்ட சாப்பாடு இன்னமும் என் வயித்துல அப்படியே இருக்கு அம்மா!! நா சாகுற வரைக்கும் அது கரையாது"
இறந்து 33 ஆண்டுகளாகியும் அவர் புகழ் மங்காமல் கூடிக்கொண்டே இருக்க காரணம். "வந்தவழி மறவாத ஒருவரை எந்தவழியும் மறக்காது.."....... Thanks.........
#தெய்வமாக #வலம்வந்த #தலைவன்
தியாகராயநகர் ஆற்காடு தெருவில் உள்ள அலுவலகத்தில் இருந்து இரவு இரண்டு மணிக்குப் புறப்பட்டு வீட்டுக்குப் போகிறார் புரட்சித்தலைவர்... கார் கிண்டி வழியாகச் சென்று கொண்டு இருக்கும் போது, ஒரு குழந்தையைத் தோளில் போட்டுக் கொண்டு ஒருவன் வேகமாக ஓடிக்கொண்டு இருந்தான்.
மக்கள்திலகம் அதைப் பார்த்து விட்டார். அவன் குழந்தையைக் கடத்திக் கொண்டு ஓடுகிறான் என்று நினைத்துக் காரை நிறுத்தச் சொன்னார். அவனுக்கு முன்பாகக் காரை நிறுத்தி இறங்கி ஓடுபவனைத் தடுத்து நிறுத்தினார். காவலர்கள் இதை எதிர்பார்க்கவில்லை.
‘யார் நீ? இந்தக் குழந்தை யாருடையது? எதுக்காக இந்த நேரத்துல தூக்கிட்டுப் போற?’ என்று கேட்டார்.
‘ஐயா இது என் குழந்தைதாங்க. காய்ச்சல் நெருப்பாக் கொதிக்குதுங்க. விடியற வரைக்கும் தாங்குமான்னு தெரியல. அதான் டாக்டர் கிட்டக் காட்டலாம்னு போய்க் கிட்டு இருக்கேன்’ என்றான்.
குழந்தையைத் தொட்டுப் பார்த்தார் வாத்தியார்... அவன் சொன்னது உண்மைதான். ‘என் வண்டியில ஏறு. டாக்டர்கிட்ட நானே அழைச்சிட்டுப் போறேன்’ என்றார்.
‘#தலைவா...!' என்று அவன் காலில் விழப்போனான். காவலர்கள் தடுத்து நிறுத்தினார்கள். அத்துடன், ஐயா முதல் அமைச்சர் என்கிற முறையில் உங்களைப் பத்திரமாக வீடு கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது எங்க பொறுப்பு என்றார் அதிகாரி.
‘#ஒரு #குழந்தை #காய்ச்சலால் #உயிருக்குப் #போராடிக்கொண்டு #இருக்கும்போது #நான் #வீட்டுக்குப் #போறதுதான் #முக்கியமா? நீங்க யாரும் என்கூட வர வேண்டாம். நான் பார்த்துக்கறேன்’ என்று சொல்லிவிட்டு, அவனைக் காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்.
‘எந்த டாக்டர் ?’ என்று கேட்டு அங்கே போனார். டாக்டரை எழுப்பி வைத்தியம் செய்தார். அதன்பிறகு குழந்தையின் தந்தை கையில் 10000 ஐக் கொடுத்து, போலீசார் வண்டியில் ஏற்றி வீட்டுக்குக் கொண்டு போய் விட்டு விட்டு வாருங்கள் என்று அனுப்பி வைத்தார்.
#மகராசன் #வாழ்க என்று நன்றியோடு விடை பெற்றார் அந்தத் தந்தை...
தலைவர் நினைத்திருந்தால் தனது உதவியாளர்களை அனுப்பி அக்குழந்தைக்கு வைத்தியம் பார்த்திருக்கலாம்....
அப்படிச் செய்யவில்லை...
ஏனெனில் #அக்குழந்தையைத் #தன் #குழந்தையாகவே #பாவித்ததன் விளைவு தான்...இது...
இதைப்போல...பல கற்பனைக்கும் கூட எட்ட முடியாத செயல்களைப் புரிந்தவர் தான் நம் பொன்மனச்செம்மல்...
தலைவர்கள் தெய்வமாவதுண்டு...
ஆனால்...!!!
#தெய்வமே #தலைவராக #வந்து #மக்களை #வழிநடத்தியது
என்றால் அது நம் #இதயதெய்வம் #பொன்மனச்செம்மலைத் தவிர வேறுயாராக இருக்கமுடியும் ???....... Thanks...
திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் முதன்முதலாக அதிமுக போட்டியிட்டது. கட்சி தோன்றி 7 மாதங்களுக்குள் நடைபெற்ற முதல் தேர்தல். இந்தியா முழுவதும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அதிமுகவின் எதிர்காலம் அந்த தேர்தல் முடிவை பொருத்துதான் அமையும் என்பதால் எம்ஜிஆர் ரசிகர்கள் பரபரப்புடனும் பதைபதைப்புடனும் காணப்பட்டார்கள். முதலில் தலைவர் உலகம் சுற்றும் வாலிபன் வெளியிடுவதில் பிசியாக இருந்தார் படம் மே 11 ல் வெளியான பின்பு தேர்தல் களத்தில் இறங்கினார். படம் வெளியாகி 10 நாட்களில் இடைத்தேர்தல். கருணாநிதியோ தேர்தலுக்கு பல மாதங்கள் முன்னாடியே தேர்தல் வேலையை தொடங்கி விட்டார். அவரின் மந்திரிகள் அத்தனை பேரும் திண்டுக்கல்லில் டேரா போட்டிருந்தனர். எதற்கு! தர்மதேவனை தோற்கடிப்பதற்கு. பல தேர்தலை கண்டவர் கருணாநிதி. சகல யுக்திகளையும் அறிந்தவர். மாநில ஆட்சி அதிகாரம் அத்தனையும் கையில் வைத்திருக்கிறார். இன்னொரு பக்கம் மத்தியில் ஆட்சி அதிகாரத்துடன் இ.காங்கிரஸ் மூணாவது அணியாக காமராஜ் தலைமையில் இயங்கும் ஸ்தாபன காங்கிரஸ் என்று மூன்று அணியாக
தேர்தல் களத்தில் மோதியது.அதிமுக வேட்பாளராக மாயத்தேவரை எம்ஜிஆர் அறிமுகப் படுத்தினார் திமுக சார்பில் பொன்முத்துராமலிங்கமும் இ.காங்கிரஸ் சார்பில் N S V சித்தனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்கள்.
புரட்சி தலைவரின் அதிமுகவுக்கு முதல் தேர்தல். ரசிகர்களுக்கு அரசியல் அனுபவம் எதுவும் கிடையாது. திமுகவின் பொன்முத்துராமலிங்கம் பழுத்த அரசியல்வாதி.
தேர்தல் பிரசாரத்தின் போதே திண்டுக்கல் அருகே ஒரு பாலத்தை கடக்கும் போது எம்ஜிஆர் பிரசார வாகனத்தை எதிர்பார்த்து குண்டு வைத்து விட்டனர். எம்ஜிஆர் சமயோசிதமாக வேறு வாகனத்தில் வந்ததால் உயிர் தப்பினார். உடனேஅவர் கலந்து கொண்ட தேர்தல் பிரசார மேடையில் மைக்கை கையில் வைத்துக் கொண்டு அங்குமிங்கும் நடந்த படியே சிங்கத்தின் சீற்றத்துடன் இந்த காரியத்தை செய்தவர்கள் தைரியமிருந்தால் மேடைக்கு வாருங்கள் நேருக்கு நேராக மோதலாம், கோழைத்தனமாக மறைந்து கொண்டு தாக்குவதை விட்டு விட்டு நேரடியாக வாருங்கள் இங்கேயே வைத்துக் கொள்ளலாம் நான் தயார் என்று அறைகூவல் விடுத்தார். கூட்டம் ஆவேசத்துடன் கொந்தளித்தது. காமராஜர் ஒரு பக்கம் திமுக,அதிமுக இரண்டுமே
ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று தாக்கி பேசினார்.
தேர்தலில் திமுக ஜெயிப்பது கடினம்
என்று தெரிந்தவுடன் பெண்கள் ஓட்டை செல்லாத ஓட்டாக மாற்றும் நோக்கத்தில் இரட்டை இலையில் இரண்டு இலைகளிலும் முத்திரை குத்துங்கள் என்று தவறான பிரசாரம் செய்தார்கள். ஆனால் பெண்களோ மிகத்தெளிவாக ஓட்டு போடும் நாளான 20-5-1973 அன்று காலையிலேயே
வாசலிலே இரட்டை இலை கோலம் போட்டது மட்டுமின்றி அவர்கள் இரட்டை இலை சின்னத்தையும் தலையிலே சூடி கூட்டம் கூட்டமாக
வாக்களித்து விட்டு வந்தனர்.மறுநாள் காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
வாக்குகள் எண்ணும் நாளன்று ஆங்காங்கே வதந்திகள் தலைவிரித்தாடின. ரேடியோவை சுற்றி கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
முதல் அறிவிப்பில் அதிமுக முன்னணி நிலவரம் வெளியான உடன் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் புரட்சி தலைவர் வாழ்க கோஷம் ஆங்காங்கே காணப்பட்டது. வெடிச்சத்தம் தொடர்ந்து ஒலித்து கொண்டே. இருந்தது. அன்று நாங்கள் கொண்ட மகழ்ச்சி விவரிக்க முடியாதது. வெற்றி வித்தியாசம் கிட்டத்தட்ட 142000 வாக்குகள். தேர்தலில் இரண்டாவதாக வந்தது காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ்.
அதுவும் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது.கள்ள ஓட்டுகளை மட்டும் கட்டுப்படுத்தியிருந்தால் பிரதான கட்சி தனது டெப்பாசிட்டை இழந்திருக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அதுவரை திமுக பெற்ற வெற்றிக்கு புரட்சி தலைவர் தான் காரணம் என்பதை ஆணித்தரமாக நிரூபித்தார்.
செல்லாத வாக்குகள் அளவுக்கு அதிகமாக சுமார் 8000க்கும் அதிகமாக காணப்பட்டது அவர்கள் முயற்சி ஓரளவு பயனளித்தது என்றே சொல்லலாம்.ராஜதந்திரி என்று அழைத்துக் கொண்டவர்களின் ராஜதந்திரம் தர்மத்தின் முன்னே வெட்கித் தலை குனிந்ததை மக்கள் மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தார்கள். எங்கள் காதுகளில் நம்நாடு படப்பாடல் பொய்யும்,புரட்டும் துணையாய் கொண்டு பிழைத்தவரெல்லாம் போனாங்க மூலைக்கு மூலை தூக்கி எறிந்தோம் தலைகுனிவாக ஆனாங்க பாடலும் நீதிக்கு இது ஒரு போராட்டம் நிச்சயம் உலகம் பாராட்டும் என்ற உலகம் சுற்றும் வாலிபனின் டைட்டில் பாடலும் ஒலித்து கொண்டிருந்தது. நம்மை ஏய்ப்பவர் கைகளில் இருந்து
அதிகாரம் நழுவும் காட்சி நம் மனக்கண்ணுக்குள் தெரிய ஆரம்பித்தது. ஆண்டவன் மீது எங்களுக்கு இருந்த நம்பிக்கை மென்மேலும் வளர ஆரம்பித்தது. இருண்டிருந்த தமிழகத்தின் வானில் ஒரு விடிவெள்ளி தோன்றி விடியலை நோக்கி சென்று கொண்டிருந்தது.......... Thanks.........
அன்புத் தம்பி
;;;;;;;;;;;;;/;;;;;;;;;;;;;;;
எம்.ஜி.சக்கரபாணி
"என் தம்பி ராமச்சந்திரன் பிப்ரவரி நாலாம் தேதி அமெரிக்காவிலிருந்து திரும்பற செய்தி வந்தவுடனே எனக்குள் ஒரே சந்தோஷம். வயசு குறைஞ்சிட்டமாதிரி ஒரு நினைப்பு. தம்பி வரப்போற நாளை எதிர்பார்த்துகிட்டே இருக்கிறேன்.
இந்தச் செய்தி வந்ததிலிருந்து படுக்கையில் படுத்தபடியே பழைய நினைவுகளை கொஞ்ச கொஞ்சமா அசை போட்டுகிட்டேயிருக்கேன். ராமச்சந்திரன் குழந்தையா இருந்தப்பவே நாங்க கும்பகோணத்தில் இருந்தோம். குடும்பத்தில் நிறைய வறுமை. அங்க திக்குவாயன்கடைன்னு உண்டு. காலணாவுக்கும் அரையணாவுக்கும் கடைக்குப் போய் சாமான் வாங்கி வருவேன். எங்க போனாலும் தம்பியை தோளில் தூக்கிக்கிட்டே போவேன்.
சின்ன வயசில இருந்தே எதுக்கும் கலங்க மாட்டான். என்ன வந்தாலும் ஒரு கை பாத்துக்குவோம் என்ற எண்ணம் உண்டு. என்ன கஷ்டம் வந்தாலும் 'எல்லாம் நல்லதுக்குத்தான் 'னு எடுத்துக்கிற மனப்பக்குவம் உண்டு. அந்த திட மனசு அவனுக்கு பல வெற்றிகளைத் தேடிக் கொடுத்திருக்கு.
ராமச்சந்திரனுடைய மனதைரியத்துக்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். அவனுடைய முதல் மனைவி தங்கமணிக்கு உடல்நிலை ரொம்ப சீரியஸ்னு ஊர்லஇருந்து செய்தி வந்தது. ராமச்சந்திரன் கிளம்பிப் போனபிறகு அவள் செத்துப்போய்ட்டான்னு தந்தி வந்தது. தம்பிக்கு சின்ன வயசு. மனசு கலங்கிடப் போறான்னு நான் ஆறுதல் சொல்ல ஊருக்குப் புறப்பட்டேன். அங்க போன பிறகு நான் வருத்தப்படக்கூடாதேன்னு அவன் தான் எனக்கு தைரியம் கூறிக்கொண்டிருந்தான்.
முதன் முதலா ராமச்சந்திரன் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு வந்த படம் "சாயா". நாராயணன் கம்பெனி தான் தயாரிப்பாளர்கள். அப்ப அகில இந்திய புகழ் பெற்ற நந்தாலால் யஷ்வந்த்லால்தான் டைரக்டர். அப்பல்லாம் ஒன்றரை லட்சம் ரூபாயிருந்தால் ஒரு படத்தையே முடிச்சுடலாம். 52,000 ரூபாய் வரை செலவழிச்சு படம் எடுத்த பிறகு ஏதோ காரணத்தினால் படம் நின்னு போச்சு. இந்தப் படம் வெளிவந்தா நல்ல எதிர்காலம் இருக்கும்ன்னு தம்பி நினைச்சுகிட்டிருந்தப்போ அந்த ஆசையில் மண் விழுந்தது. இது என்ன சோதனைன்னு நான் ரொம்ப மனம் கலங்கிப் போய் வேதனைப்பட்டேன். தம்பி என்னைக் கூப்பிட்டு ஆறுதல் சொன்னான். என்னை 'ஏட்டா';ன்னு தான் கூப்பிடுவான். கவலைப்படாதீங்க ஏட்டா ஏதோ நல்லது நடக்கப் போறதுக்கான அறிகுறி இதுன்னு சொன்னான். அதுக்கப்புறமும் விடாமுயற்சி செய்ததினால ராஜகுமாரி படத்தில் மறுபடியும் ஹீரோ சான்ஸ் கிடைத்தது. எடுத்த காரியத்தை தைரியமா செய்யனும் அதுல என்ன இடைஞ்சல் வந்தாலும் கவலைப்படக்கூடாதுன்னு நினைப்பான். முடியாதுன்னு சொன்னால அவனுக்குக் கோபம் வந்துடும். 1956ல் நாடோடிமன்னன் படம் எடுக்க ஆரேம்பிச்சோம். நிறைய பணம் செலவழிச்சோம். படம் எடுத்து முடிக்கிறதுக்குள்ள ஏராளமான இடைஞ்சல்கள். ஸீன் நல்லா வரணும்னா அதுக்காக தம்பி என்ன வேணும்னாலும் செய்வான்.
ஷூட்டிங் நடந்தபோது திடீர்னு மூணு லாரி கயிறு வேணும்னான். கையில பணமில்லை. தம்பிகிட்ட இதச் சொல்ல முடியாது. எப்படியோ சமாளிச்சு பணத்துக்கு ஏற்பாடு பண்ணி கொண்டு போனோம். படத்தில் ஒரு கயிறு பாலம் வரும். அந்த ஸீன் ரொம்ப நல்லாவும் வந்தது. இவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்து முடிச்சப்ப இந்தப் படம் சக்ஸஸ் ஆனா எம்.ஜி.ஆர் மன்னன் இல்லையானா நாடோடி என்று பத்திரிக்கையிலேயெல்லாம் எழுதினாங்க. படம் பிரமாதமா ஓடிச்சு. எல்லா படங்களுக்கும் நூறாவது நாள் , இருநூறாவது நாள்ன்னு தான் விழா எடுப்பாங்க. நாங்க நாடோடிமன்னன் பட வெற்றி விழான்னு தான் அறிவிப்பு செஞ்சி விழா நடத்தினோம்.
சீர்காழியில் நாடகத்தில் நடிச்சுகிட்டிருந்த போது ஒரு சண்டைக் காட்சியில் குண்டுமணி தம்பி கால் மேல விழுந்து எலும்பு முறிஞ்சு போச்சு . இனி இவன் கால் சரியா போயி பீல்டில் எங்க நிக்கப் போறர்ன்னு பேசினாங்க. கால் சரியாகி திரும்பி பீல்டுக்கு வந்த போது ஏகப்பட்ட படங்கள் குவிஞ்சது.
அதுக்கப்புறம் தான் எம். ஆர். ராதா சுட்ட சம்பவம். இனி எம்.ஜி.ஆர் எழுந்து வரவே முடியாது அப்படி வந்தாலும் பேசவே முடியாதுன்னு சொன்னாங்க. அந்த சம்பவத்திற்குப் பிறகு தமிழக மக்கள் மனசில நிலையான இடம் தம்பிக்குக் கிடைச்சது. குண்டு காயத்தோட ஓட்டுக் கேக்கிற மாதிரி போஸ்டர் போட்டாங்க. தமிழ்நாடு பூராவும் அவனுக்காக பிரார்த்தனை செய்தாங்க . அதுக்கப்புறம் புகழ் இன்னும் அதிகம் ஆயிருச்சு.
1972-ல் தி.மு.கவிலிருந்து தம்பியை நீக்கினாங்க. சத்யா ஸ்டுடியோவில் பலர் ‘நீங்க மன்னிப்பு கேட்டுடுங்க’ன்னு சொன்னாங்க. தம்பி மனம் கலங்கிடக்கூடாதேன்னு தைரியம் சொல்லப் போனேன். என்னை பார்த்தவுடனேயே நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க ஏட்டா நான் இப்பத்தான் பால் பாயாசம் குடிச்சேன். ஒரு கை பார்த்திடுவோம்ன்னு சொன்னான். என்னப்பா செய்யப் போறேன்னு கேட்டேன். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்ன்னு புதுசா ஒரு கட்சி ஆரம்பிக்கப் போறேன்னு சொன்னான். அந்த தைரியத்தைப் பார்த்து நானே அசந்து போனேன்.
1972-ல் வந்த கஷ்டம் என்ன செஞ்சுது? தம்பிய முதலமைச்சராவே ஆக்கிடுச்சு. 1984-அக்டோபர் 13 அன்னிக்குத்தான் தம்பியை பார்க்க அப்போலோ ஆஸ்பத்திரியில் என்னை அனுமதிச்சாங்க
நான் உள்ளே போனவுடனேயே ஏட்டா உடம்பு எப்படியிருக்கு? நல்லா ரெஸ்ட் எடுக்குறீங்களா ன்னு கேக்க ஆரம்பிச்சிட்டான். அவன் உடல் நிலையைப் பற்றி விசாரிக்க நான் போனா என்னை விசாரிக்க ஆரம்பிச்சுட்டான். என்னைப் பத்தி ஒண்ணும் கவலைப்படாதீங்க. நான் இன்னும் ஒரு வாரத்திலே வந்துடுவேன்னு சொன்னான். எந்த சமயத்திலேயும் அவன் தைரியத்தை விட்டதே கிடையாது. நான் அங்கேயிருந்து கிளம்பும் போது டாக்டர்.பி.ஆர்.எஸ்ஸைக்கூப்பிட்டு அண்ணனை நல்லா கவனிச்சுக்கோங்கன்னு சொன்னான். இப்படி சோதனைகள் வந்தா அதைத் தாங்கிக்கிட்டு அதை சாதனையாக்கிக் காட்டற சாமர்த்தியம் தம்பிக்கு நிறைய உண்டு. தம்பியுடைய வெற்றியைப் படிப்படியா கவனிச்சு ,ரசிச்சு பிரமிச்சவன் நான்.
பல பேர் தம்பியை வரவேற்கத் தயாராயிருக்காங்க. பொன்மனச்செம்மலே வருக புரட்சித்தலைவரே வருக, இதய தெய்வமே வருக ன்னு எல்லோரும் வரவேற்பாங்க. ஆனா எல்லா வரவேற்பையும் விட நான் என் தம்பியை ‘ராமச்சந்திரா நீ புதுப்பொலிவோடு வா’ ன்னு சொல்றதுலே இருக்குற அர்த்தமே வேற .
1984 பிப்ரவரி 2ஆம் தேதி ஜுனியர் விகடனுக்கு எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி அளித்த பேட்டி.......... Thanks...
"வாத்யார்"
தமிழகத்தை பொருத்தவரை "எம்.ஜி.ஆர்" என்பது வெறும் நடிகரின் பெயரோ, வெறும் அரசியல்வாதியின் பெயரோ, ஏன், வெறும் பெயர்கூட இல்லை. அது ஒரு குறியீடு.
இந்த மனிதர் எதை சாதித்து இப்படியொரு உயரத்தை தொட்டார் என்று, எல்லோருக்கும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவசியம் தோன்றும். பள்ளிகளில் சத்துணவு கொடுத்ததாலா..? காமராஜ் செய்ததுதானே? பொக்கை வாய் கிழவிகளைக் கட்டி பிடித்து அன்பை தெரிவித்ததாலா..? அதுவும் அரசியலில் புதிதல்லயே?
எம்.ஜி.ஆர் என்ன செய்ததால் தமிழக மக்களின் நெஞ்சில் இன்று வரை நீடித்தது வாழ்கிறார்.
சினிமாவில் இருந்தவரை அவரை முந்த இன்னொருவர் கிடையாது. முதல்வரான பிறகு உயிருடன் இருந்தவரை, அவரை எந்த தேர்தலிலும் தோற்க்கடிக்க முடியவில்லை. நேருவின் மகளானாலும் சரி, வேலுப்பிள்ளை மகனாக இருந்தாலும் சரி, அவரது பக்கபலம் இருந்தால் அனைத்திலும் வெற்றி என்று தீர்மானமாக நம்பினார்கள். அப்படித்தான் சரித்திரம் சொல்கிறது.
பொது வாழ்வில் அவரது பிரமாண்ட வெற்றி ஒரு இரவில் வந்ததல்ல. கடும் உழைப்பும் சலியாத உத்வேகமும் எளிதில் கண்டுபிடிக்க முடியாத சூட்சுமக் கணக்குகளும் நிறைந்த அவரது வாழ்க்கை சந்தேகமில்லாமல் ஒரு பெரிய பாடம்.
வெற்று தரையில் இருந்து புறப்பட்டு விண்ணளவு சாதித்த ஒரு தன்னம்பிக்கைவாதி எம்.ஜி.ஆர் வாழ்ந்த வாழ்க்கையை போல வாழ்ந்து, அவரைப்போல் உழைப்பாளியாக, வள்ளலாக, ஒழுக்கமுள்ளவராக திகழ்ந்தால், எந்த நடிகரும் மக்களின் இதயத்தில் இடம்பிடிக்கலாம்.
by : M.G.Nagarajan
Updated : 18 April 2020 - 3:54 AM....... Thanks...
மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும், தமிழக மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பெற்றுள்ள தலைவர் எம்.ஜி.ஆர். தமிழ் மக்கள் எம்.ஜி.ஆரை நடிகராக மட்டும் பார்க்கவில்லை, இதயத்தில் வைத்துக் கொண்டாடினார்கள். திரையில் நல்ல பல விஷயங்களைச் சொன்னதாலேயே இன்றளவும், நாளையும், ‘வாத்தியார்’ என்று மக்களால் போற்றப்படுபவர் அவர். 1965ஆம் ஆண்டு வெளிவந்த அவரது திரைப்படம் "ஆயிரத்தில் ஒருவன்". தமிழ்நாட்டின் இரு பெரும் தலைவர்களான எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா இருவரும் முதன் முதலாக இணைந்து நடித்த படம்.
எம்.ஜி.ஆர் தனது நெய்தல் நாட்டில் மருத்துவராக இருப்பார். அந்நாட்டு மன்னன் சர்வாதிகார எண்ணம் கொண்டவன். சர்வாதிகாரத்துக்கு அடிபணியாத மக்கள் மன்னருக்கு எதிராகப் புரட்சி செய்வார்கள். புரட்சியாளன் ஒருவனுக்கு உதவி செய்கையில், மன்னரின் படையிடம் சிக்கிக் கொள்வார் எம்.ஜி.ஆர். கோபமடைந்த மன்னன் எம்.ஜி.ஆரைப் புரட்சிக் கூட்டத்துக்குத் தலைவர் என்று தீர்மானித்து எம்.ஜி.ஆர் அண்ட் டீமைக் கன்னித்தீவில் அடிமைகளாக விற்று விடுவான். தன் குழுவோடு, அத்தீவை மேம்படுத்தக் கடுமையாக உழைப்பார் எம்.ஜி.ஆர். ஆயினும் சரியான அங்கீகாரமோ விடுதலைக்கான வாய்ப்போ கிடைக்காது. கோபப்படும் குழுவினரை சமாதானப்படுத்தப் பல வழிகளைக் கையாளுவார். நல்ல அறிவுரைகளைப் பாடலாகப் பாடிப் புரிய வைப்பார். “ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை! நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை” எனத் தொடங்கும் பாடல் வரிகள் அதிகார ஆணவத்தில் ஆடும் பலருக்குச் சவுக்கடி தருவது போல இருக்கும்.
இப்பாடலில் வரும் “ஓர் ஆயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே! நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே! வரும் காலங்களில் நம் பரம்பரைகள் நாம் அடிமையில்லை என்று முழங்கட்டுமே” என்ற வரிகளைக் கேட்கும்பொழுது, இன விடுதலைக்காகப் பல்வேறு நாடுகளில் போராடும் மக்கள் நம் மனக்கண் முன் வந்து செல்வதைத் தவிர்க்க முடியாது. நாம் அனுபவிக்கும் இந்த சுதந்திரம் ஒரு நாளில், சில மாதங்களில் எட்டுவதற்குரிய விஷயம் அல்ல. தொடர் போராட்டம்! நம் முன்னோர்கள் சிந்திய ரத்தத்துளிகளின் விளைவாகக் கிடைத்தது சுதந்திரம் என்பதை நமக்கு நன்கு புரிய வைக்கும் இந்தப் பாடல்.
படத்தில் நாகேஷின் உடல்மொழி பல காட்சிகளில் மிகப் பிரமாதமாக இருக்கும். குறிப்பாக, கூட யாருமே இல்லாமல் வெறும் மண்டையோட்டைக் கையில் வைத்துக்கொண்டு அவர் செய்யும் காமெடி அவருடைய மாஸ்டர் பீஸ்களில் ஒன்று!
நம்பியார் கடற்கொள்ளைக் கூட்டத்தலைவனாக மிரட்டி இருப்பார்! கிளைமேக்ஸ் காட்சிகளில் எம்.ஜி.ஆரும், நம்பியாரும் போடும் கத்திச் சண்டை ஹாலிவுட், சீனப் படங்களுக்கு இணையாக இருக்கும்!
இந்திய சினிமாவில் கடற்கொள்ளையைப் பற்றி எடுக்கப்பட்ட ஒரே படம் ஆயிரத்தில் ஒருவன். இந்திய அளவில் மட்டுமில்லை, உலக அளவில் கடற்கொள்ளையைப் பற்றி எடுக்கப்பட்ட விரல் விட்டு எண்ணக்கூடிய திரைப்படங்களில் ஆயிரத்தில் ஒருவனும் ஒன்று!
அப்போதைய தொழில்நுட்ப வசதிகளுடன் ஈஸ்ட்மென் கலரில், அழகிய கேமரா கோணங்கள் மற்றும் நேர்த்தியான கேமரா நகர்வுகளோடு பிரம்மாண்டத்தின் மகுடமாக இந்தப் படம் திகழ்ந்தது என்பதைத் திரையில் கண்டவர் அறிவர். டிஜிட்டல் ரீஸ்டோரேஷன் செய்து 2014-இல் மீண்டும் வெளியிடப்பட்ட இப்படம், 175 நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக ஓடியது! புதிதாக வெளியாகும் பல படங்கள் ஓரிரு நாட்களில், வாரத்தில் தியேட்டரை விட்டு ஓடும் சூழலில் ஆண்டுகள் ஐம்பது ஆனாலும் இந்தப் படம் வெள்ளி விழா வெற்றியைக் கொண்டாடுவதிலிருந்தே எம்.ஜி.ஆருக்கு இன்றும் மக்கள் மீதுள்ள செல்வாக்கைப் புரிந்து கொள்ளலாம்.
“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்! இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” என்ற பாடல் வரிக்கு இணங்கக் காலம் உள்ள வரை தமிழ் சமூகம் எம்.ஜி.ஆரின் பெயரை உச்சரித்துக் கொண்டேதான் இருக்கும்.
*எம்.ஜி.ஆர்* *ஆயிரத்தில்* *ஒருவரில்லை* , லட்சத்தில் ஒருவரில்லை, *கோடியில் ஒருவர்!* ✍............. Thanks.........
அகவை திருநாள்
வாழ்த்துக்கள்💐💐💐
******************************
மலேசியா நாட்டின் மேடைப் பாடகர் டி.எம்.எஸ். குரல்வழி பாடகர் பாசமிகு சகோதரர் திரு. டி.எம்.எஸ். சித்திரன் அவர்களுடைய பிறந்தநாள் இன்று.
புரட்சித்தலைவரின் பற்றுமிகு பக்தரான திரு. சித்திரன் அவர்கள் ஏராளமான மேடை நிகழ்வுகளில் அதாவது , மலேசியா , சிங்கப்பூர் , இந்தியா உட்பட பல மேடை நிகழ்ச்சிகளில்... சரித்திர நாயகர் , பொன்மனத் தங்கம் , ஏழைகளின் இதயத் தலைவன் , மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் நடித்த பல திரைப்படத்தின் பாடல்களை , மேடையில் பாடி இதயத்தில் பதிந்தவர்.
மலேசியா நட்டில் 2019 ம் ஆண்டு மாத கடைசியில் நடந்த இதயதெய்வம் எம்ஜிஆர் அவர்களின் புகழ்பாடும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள , நானும் ஆண்டவன் mgr குடும்பத் தளத்தின் அட்மீன் சகோ.ஆர்.ஜி.சுதர்சன் அவர்களும் கலந்து கொள்ள சென்றபோது ...
நாங்கள் தங்கியிருந்த ரெஷ்ட்ராண்ட்டுக்கு நேரில் வந்து சந்தித்து ,
மரியாதை , கௌரவத்துடன் அருமையான விருந்தும் கொடுத்து எங்ஙளை மகிழ்வித்த திரு.டி.எம்.எஸ். சித்திரன் சகோதரர் அவர்களுடைய பிறந்த நாளுக்கு....
"அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை" "உழைக்கும் குரல்" மாத இதழ் மற்றும் ஆண்டவன் mgr குடும்பத்தளத்தின் சார்பாகவும்...
பல்லாண்டு காலம் சந்தோஷம் பொங்க வாழ , மனிதக்கடவுள் இறைவன் எம்ஜிஆர் அவர்களை வேண்டுகிறோம்.
வாழ்க..வாழ்க ,
நோய்நொடியின்றி என்றும் சீறோடும்...சிறப்போடும்🎂💐
வாழ்த்துக்களுடன்....
எம்ஜிஆரின் காலடி நிழல்
க.பழனி (அட்மீன்)
&
ஆர்.ஜி.சுதர்சன்
(அட்மீன்)
ஆண்டவன் mgr குடும்பத் தளம்
🙏........... Thanks...
மர்மப் புன்னகை!!
-----------------------------------
என்றைக்கோ நாம் இட்டிருக்க வேண்டிய பதிவு இது!
ஒரு தகவலின் ஆதாரத்துக்காகக் காத்திருந்ததால் இவ்வளவு தாமதம்!!
காஞ்சி மகா முனி!
அன்பையே ஆயுதமாக்கிய பெரிய-வாள்--
காஞ்சிப் பெரியவாள்!
கண்டபடி அலையும் மனதைத் தாம்
கண்ட-படி அங்கேயே நிற்கச் செய்பவர்!!
அவல் மட்டுமே உண்ட அவாள்?
ஏவல் படை ஏதுமில்லா அந்த ஞானப் பழம்-
தூவல் தம் புன்னகையையே-
காவல் என நமக்கு அனுப்புபவர்!!
அது --
நாகை தர்மன்--பத்திரிகையாளருக்கும்
ஈகை தர்மன் எம்.ஜி.ஆருக்குமான ஒரு சம்பாஷணை!!
ஆத்திரத்தை எவ்வளவு நம் மனம் கொண்டாலும்-
பாத்திரத்தை அருளால் நிரப்பிய அவரது விழியெனும்
நேத்திரத்தைக் கண்டுவிட்டால் போதும்!
சாத்திரத்தை மீறிய சாந்தி நம் மனதுக்குக் கிடைத்துவிடும் என்று தம் காஞ்சி முனி பற்றிய கருத்தை எம்.ஜி.ஆரிடம் விளக்கியவர் கேட்கிறார்-
அண்ணே நீங்க அவரை முதன் முதலில் தரிசனம் செய்தபோது அவரிடம் எதுவுமே கேட்காமல் அவரையேப் பார்த்துக் கொண்டிருந்தீர்களாமே?
எம்.ஜி.ஆர்,,ஏனோ ஆழமாக சில நிமிடங்கள் மௌனம் காத்து,,பிறகு சொல்கிறார்-
அவரை நான் பார்க்கும்போது எதையுமேக் கேட்கவில்லை என்று சொல்வது தவறு?
நல்லதையே செஞ்சுக்கிட்டு எல்லோர்க்கும் நல்லவனாகவே சாகணும்ன்னு வேண்டிகிட்டேன்.
|நாகை தர்மன் முகம் சற்றுக் கலங்குவதை கவனித்த எம்.ஜி.ஆர் தொடர்கிறார்--
சாவு ஒண்ணும் கெட்ட விஷயம் இல்லே. எல்லோருக்கும் நிரந்தர ஓய்வுன்னு அதை எடுத்துக்கணும். அதற்குள் நம்மால முடிஞ்சதைப் பிறருக்கு செஞ்சுடணும்!
காஞ்சிப் பெரியவரைப் பார்க்கும்போது நான் நினைச்சதெல்லாம்--
|இத்தனை காலமும் இவரைப் பார்க்காம இருந்துட்டோமேன்னு தான் இருந்தது!
நாம எதுவுமேக் கேக்கத் தேவையில்லே--அவரைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே நம்மக் கேள்விக்கெல்லாம் உரிய பதில்கள் கிடைச்சுடுது. சொல்லப் போனால்,,ஒரு துறவிங்கறவர் எப்படி இருக்கணும்ன்னு நான் மனசுல நினைச்சிருந்தேனோ,,அப்படியே அவர் இருந்தார்!!
எம்.ஜி.ஆரின் இந்த விளக்கம் மட்டுமே அன்று நாகை தர்மனின் வியப்புக்குக் காரணமில்லை??
இதே கேள்வி,,அங்கே மடத்தில் சீடர்களால் கேட்கப் படுகிறது-
அவர் உங்களையேப் பார்த்துண்டிருந்தார். நீங்களும் அவரையே புன் சிரிப்போடு பார்த்துண்டிருந்தேளே??
காஞ்சி முனி புன்னகையோடு கூறுகிறார்--
அவன் எல்லாருக்கும் ஒத்தாசை பண்ணிண்டே இருக்கணும்ன்னு ஆசைப் படறான்?
அவனோட அந்த மனசுக்கு மட்டும் நான் சந்தோஷப்பட்டு சிரிக்கலே--
இந்த ராஜியத்தையே ஒரு நாள் ஆளப் போறவன் நம்மளாண்ட இப்படிக் கேக்கறானேன்னு நினைச்சேன். சிரிச்சேன்??
வார்த்தைகளை விரயம் செய்யாமலேயே--
அவர்கள் இருவரும் தான் எத்தனை ஆழமாக-
வாதம் செய்திருக்கிறார்கள்??
காஞ்சியில் அன்று அந்தப் பழத்தின்--
மெய் சிரிக்க--
நடக்கப் போவதும் அது தான் என்று-
மெய்யும் சிரிக்க--
நமக்கோ இங்கே-
மெய் சிலிர்க்கிறது!!!......... Thanks to mr.VT
ஒரு சாமான்யனின் புகழாரம்
மதிநுட்பம் நிறைந்த மந்திரிகள், சட்ட வல்லுனர்கள், பொருளாதார நிபுணர்கள் ஆகியோரின் ஆலோசனையின் பேரிலேயே திட்டங்களும், சட்டங்களும் நிறைவேற்றப்பட்ட இலக்கணத்தை உடைத்தெறிந்து ஒரு அடிமட்டத்தொண்டனின் விருப்பத்தையும் கூட சட்டமாக்கியவர் தான் நம் பொன்மனச்செம்மல்...
ஒன்பது வயது பாலகனின் குமுறலுக்கு அரசாணை பிறப்பித்த அதிசயம் தான் இது. இதோ அந்த மழலையின் குரல்...
என் பிரச்சனையை யாரிடம் சொல்வது...
எங்கள் கிராமத்தில் உள்ள தண்ணீர் பிரச்சனைக்காக என் தாய் தினசரி கஷ்டப்பட்டு 2கிமீ நடந்து சென்று தண்ணீர் பிடித்து வரும் கொடுமையை யாரிடம் கூறுவது...?
மிக முக்கியமாக நாங்கள் வசிக்கும் பெரம்பலூரில் உள்ள கூட்டுறவு வங்கியில் வேலைபார்த்து வந்த எனது தந்தையாருக்கு வெகு தொலைவில் "டிரான்ஸ்பர்" ஆகியதால், அவரை வாரத்தில் ஒரு நாள் தான் பார்க்கமுடியும் என்ற எங்களின் மனக்குமுறலை யாரிடம் சொல்வது ?
எங்களின் கண்ணீர் கதையைக்கேட்க யாருக்கு நேரம் இருக்கப் போகிறது ???
எம்ஜிஆர் அப்போதைய முதல்வர். என் பிரச்சனையை அவர் செவிசாய்ப்பாரா? சினிமாவில் எல்லோருக்கும் உதவும் எம்ஜிஆர் நமக்கு உதவமாட்டாரா ???
ஒரு பேனாவை எடுத்து மேற்கண்ட அனைத்து துன்பங்களையும் எழுதிவிட்டேன். அது உடைந்த பேனாவாகையால் லெட்டர் முழுவதும் 'மை பொட்டுக்கள்...'
எம்ஜிஆர் சார்...
நான் சௌக்கியம் நீங்க சௌக்கியமா? உங்க கிட்ட ஒரு உதவி கேட்கணும்...இப்படி ஆரம்பித்தது லெட்டர்...
இப்படிக்கு...
தங்களுக்கு கீழ்ப்படிந்துள்ள மாணவன்
சு.செந்தில்குமரன்
பெறுநர் விலாசத்தில் "எம்ஜிஆர். , கோட்டை - சென்னை"
ஒரு வாரமிருக்கும். இரவு தூங்கிக்கொண்டிருந்த என்னை எழுப்பிய என் அப்பா "இந்தா பிடி" என மறுபடியும் எங்கள் சொந்த ஊரான அரும்பாவூர் கிளைக்கே டிரான்ஸ்பர் ஆன அரசாணை...
"உங்கள் மகன் சு.செந்தில் குமரன், தமிழக முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனுக்கு எழுதிய கடிதம் காரணமாக "பணிமாறுதல் உத்தரவு"
அம்மாவும் நானும் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அப்பா கண்ணீரில் திணறிக்கொண்டிருந்தார்.
அதுமட்டுமல்ல...எங்கள் ஊரிலுள்ள எல்லாக்கிணறுகளும் தூர் வாரப்பட்டு தண்ணீர் பஞ்சமும் குறைந்தது.
எப்பேர்ப்பட்ட ஒரு மாமனிதர் எம்ஜிஆர் ...!!!
அந்த இறைவன் கூட எங்களின் துன்பத்திற்கு இத்தனை விரைவாக செவிசாய்ப்பாரா? ன்னு கூட தெரியவில்லை.
சகிக்கமுடியாத மைக்கறைகளைக் கொண்ட அக்கடிதத்தையும் படித்து அதை சரியாக புரிந்துகொண்ட புண்ணிய ஆத்மா எம்ஜிஆர்..
எங்கோ ஒரு கிராமத்திலிருந்து வந்த ஒரு ஒழுங்கில்லாத, பாலகனின் கடிதத்தைக் கூடப் படித்துப் பார்த்து நடவடிக்கை எடுத்த அந்த தாய்மனம் கொண்ட தலைவனை, முதல்வரை உலகம் பார்த்ததுண்டா ???........ Thanks...
வணக்கங்கள்...! சினிமா, திரைப்படம், ஊடகம், மகிழ்ச்சி, சந்தோஷம் இப்படி ஓடிக்கொண்டிருக்கிறோம். கலைத்துறை யானை சினிமாவில் பெரிய பெரிய சாதனையாளர் ஒருவர் எப்படி எல்லாம் வெற்றிய கொடுத்தாங்க, மக்களோட மக்களாக கலந்துக்கிட்டாங்க, மக்களை மகிழ்விக்க மக்களோட வாழ்ந்தாக அப்படிங்கிறது பல நிகழ்வுகளில் பல வடிவத்தில் வாழ்ந்த ஒருவர்தான். வாத்தியார், மக்கள் திலகம், புரட்சித் தலைவர், பொன்மனச்செம்மல் போன்ற பல பெயர்களை பெற்ற ஒருவர் யார் யாரென்றால் .
நெருப்பை அள்ளி தெளித்தாலும்...!!
மங்காத தங்கம் எங்கள் தங்கம்
புரட்சித் தலைவர் ஒருவரே... !!!
அப்போதும் சரி...!
இப்போதும் சரி...!
இனி எப்போதும் சரி...!
மங்காத தங்கம் எங்கள் தங்கம்.......... Thanks...
தலைவரை தவிர வேறு யாருக்கு வரும் இந்த தாராள குணம் ? ஜெமினிகனேசனையும்
பெருமை படுத்திய தவைர் !
. இவ*ர் ந*மது புன்னகை மன்ன*னுட*ன் ந*டித்த ஒரே ப*ட*ம் முக*ராசி.
இந்த* ப*ட*ம் வெளியானபோது மவுண்ட்ரோட்டில் க*ட் அவுட் மற்றும் பேனர்க*ள் திரை அர*ங்கில் வைக்க*ப்பட்ட*து. அதில் எம்ஜிஆர் க*ட் அவுட் பெரிய*தாக*வும், ஜெமினியின் க*ட் அவுட் ஒற்றைக்காலுட*ன் சிறிய*தாக*வும் இருந்தது. ஜெமினி இதை பெரிதுப*டுத்த*வில்லை. ஆனால், இதை அறிந்த த*லைவ*ர் வினியோக*ஸ்த*ருக்கு போன் செய்து த*ன் கட் அவுட் உய*ரத்திற்கே ஜெமினியின் க*ட் அவுட் வைக்கவேண்டும். அதுவும் அவ*ர் ப*டத்தில் இருகால்க*ளுட*ன் வ*ரும் காட்சியின் உருவ*மே இட*ம்பெற வேண்டும். அதை தான் மறுநாள் வ*ந்து பார்ப்பேன் என்றும் க*ண்டிப்பாக கூறிவிட்டார். பின் அவ்வாறே மாற்ற*ப்ப*ட்ட*து. இத*னை ஜெமினியே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்......... Thanks...
#இனி #உங்களை #பார்க்கமாட்டோம்
அப்போது 1968 ஆம் ஆண்டு. எம்ஜிஆர் தனது டிஎம்சி 2347 அம்பாசிடர் காரில், ஆற்காடு சாலை அலுவலகத்திலிருந்து கிளம்பி வருகிறார்...
கார் போக் ரோட்டிலுள்ள கார்ப்பரேஷன் பள்ளி வழியாகச் சென்றுகொண்டிருந்த போது, பள்ளிக்கு வெளியே உள்ள பள்ளத்தில் இருக்கும் குழாயில் தட்டைக் கழுவிக்கொண்டிருந்த மாணவர்கள், எம்ஜிஆரின் காரை அடையாளம் தெரிந்துகொண்டு, ஓடிவந்து ஒன்றாகக் கைகோர்த்தவண்ணம் காரை மறிக்கின்றனர்.
ஏம்பா காரை நிறுத்தினீங்க? என்ன பிரச்சனை??? இது எம்ஜிஆர்...
"ஒண்ணுமில்ல சார். உங்க பக்கத்துல நிக்கணும்னு எங்க எல்லோருக்கும் ஆசை அதான்...மன்னிச்சுடுங்க..." இது மாணவர்கள்.
இது நித்தமும் தொடர...
ஒரு நாள் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன், மாணவர்களைக் கூப்பிட்டு, "உங்க எல்லார் மேலயும் கம்ப்ளெயிண்ட் வந்திருக்கு...எம்ஜிஆர் காரில் வரும் போது வழிமறிக்கிறீர்களாமே ...? என்று கூறி, அவர்களின் பதிலைக் கூட எதிர்பாராமல், பிரம்பால் "நன்கு" கவனிக்கிறார்.
மறுநாள் அதேபோல் கார் வருகிறது. மாணவர்களைக் காணவில்லை. பொன்மனம் பதைக்கிறது. "என்ன ஆச்சு இவங்களுக்கு" ன்னு கண்கள் தேட ஆரம்பிக்குது....
ஆஆஹ்...! கண்டுபிடிச்சாச்சு... காரில் இறங்கி விறுவிறுவென நடந்து, பள்ளிக்கருகே உள்ள பள்ளத்தில் அமைக்கப்பட்டுள்ள குழாயில் சாப்பாடு தட்டுகளை அலம்பி அதில் தண்ணீரைப் பிடித்து குடித்துக்கொண்டிருந்த. மாணவர்களைப் பார்க்கிறார்... எம்ஜிஆருக்கு கண்ணீர் வந்துடுச்சு...
அருகே சென்று...
"ஏன் என்னை பார்க்க வரல...?" --- குழந்தை போலக் கேட்கிறார் எம்ஜிஆர்
நீங்க தான் எங்களைப் பற்றி எங்க தலைமை ஆசிரியரிடம் கம்ப்ளெயிண்ட் பண்ணிட்டீங்களே? உங்கள நாங்க எவ்வளவு நல்லவர்னு நெனச்சோம் ? எங்களுக்கு பிரம்படி விழுந்தது தான் மிச்சம்...நாங்க வரமாட்டோம் இனிமே --- மாணவர்கள்.
"ஐயோ! நா ஒண்ணுமே சொல்லலையே? யார் புகார் கொடுத்தாங்கன்னு கூட எனத்தெரியாதே ...?! என அப்பாவியாய் பதற... அருகிலிருந்த கார்டிரைவர்..."அண்ணே ! நா தான் இந்த வார்டு கவன்சிலர் சடகோபனிடம் சொல்லி பள்ளியில் புகார் கொடுக்கச்சொன்னேன்.. என்ன மன்னிச்சிடுங்கண்ணே ...! என்று கூற எம்ஜிஆர் அவரைக் கடிந்துகொள்கிறார்...மாணவர்களிடம் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்கிறார்...
பின்னர் மாணவர்களிடம்..."பசங்களா! இனிமே வகுப்பு நடக்கும் சமயத்தில் என்னைப் பார்க்க வந்து உங்க படிப்பைக் கெடுத்துக்கொள்ளக்கூடாது. படிப்பு ரொம்ப முக்கியம். மற்ற நேரங்களில் நா வரும் போது என்னைப் பார்க்கலாம்...சரியா??? எனக்கேட்க மாணவர்களும் மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டனர்.
அடுத்த நாள் பள்ளிக்கு அந்த ஏரியா கவுன்சிலர் சடகோபன் வருகிறார்...வண்டியில் ஒரு பெரிய குழாய் வைத்த எவர்சில்வர் ட்ரம், 10 டம்ளர், சாப்பாட்டு தட்டுக்கள்...ஆகியவை இறக்கபடுகின்றன...
"இனிமேல் தட்டுல தண்ணீர் குடிக்கக்கூடாது...இவைகளைத்தான் உபயோகப்படுத்தணும்னு எம்ஜிஆர் கண்டிப்பாக சொல்லிட்டார்" ன்னு சொல்ல அனைவருக்கும் ஆனந்த அதிர்ச்சி....
இதே போக் ரோட்டில் எத்தனை நடிக நடிகைகள், தொழிலதிபர்கள், எத்தனை நாட்களாகப் பள்ளத்தில் இறங்கி, இந்த மாணவர்கள் தட்டில் தண்ணீர் குடிப்பதைப் பார்த்திருக்கிறார்கள்...! ஆனால்..இவர்களில் யாருக்குமே மனம் இளகவில்லையே ! ஆனால், இந்த மாமனிதரின் மனம் மட்டும் இளகி, 24 மணி நேரத்திற்குள் அந்த இளம் பிஞ்சுகளின் மனங்களைக் குளிர்வித்துவிட்டாரே !
...பள்ளியில் இதான் பேச்சு...
வேண்டினால் கொடுப்பவர் இறைவன்...
வேண்டாமலே கொடுப்பவர் நம் பொன்மனச்செம்மல்......... Thanks...
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (All India Anna Dravida Munnetra Kazhagam, அஇஅதிமுக அல்லது அனைத்திந்திய அண்ணா திமுக) என்பது தென்னிந்தியாவின் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் செயல்படும் ஒரு முக்கிய அரசியல் கட்சியாகும்...
இது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முக்கிய அரசியல் கட்சியாகவும் இந்தியப் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் விளங்குகிறது.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் அக்டோபர் 17,1972இல் தொடங்கப்பட்ட அ.தி.மு.க தனது முதல் தேர்தலை 1973-இல் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலின்போது சந்தித்தது. இத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்...
அதைத் தொடர்ந்து 1977-இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிளும் மாபெரும் வெற்றி பெற்றது...
தலைவர் 1984-இல் மருத்துவமனையில் இருந்த போது பிரசாரத்திற்கே செல்லாமல் தேர்தலில் வெற்றி பெற்றார்.
கொடியின் வரலாறு...
அதிமுகவின் துவக்க கால கொடியாக தாமரையும் அதன் பின்னால் கருப்பு சிவப்பு இருந்தது...
மதுரையில் ஜான்சி ராணி பூங்காவில் மகோரா அவர்களால் 1972 ஆம் ஆண்டு ஏற்றப்பட்டது...
எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிக்கப் போவதாக செய்தியை அறிந்த எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் தாமரை படமிட்ட கொடியை கட்சி கொடியாக தங்கள் வீடுகளிலும், குடிசைகளிலும் ஏற்றினார்கள்...
அதன் பிறகு தலைவர், அண்ணாவின் புகைப்படங்களை ஆய்வு செய்து அதில் சிறப்பாக இருந்த அண்ணாவின் படமொன்றினை தேர்வு செய்தார்...
அதில் அண்ணா ஆணையிடுவதைப் போல தோற்றமளிப்பார். இந்தப் படத்தினை அண்ணா தோற்றுவித்த தி.மு.கவின் சிகப்பு கருப்பு கொடியோடு இணைத்து அண்ணா தி.மு.கவின் தற்போதைய கொடியமைப்பினை தலைவர் உருவாக்கினார்...
பெயர் மாற்றம்...
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று தலைவர் மாற்றினார்.......... Thanks...
நேற்றய பதிவில் நம் தலைவர் ரசிகர்கள் பலர் கண்கள் குளம் ஆனதால் இன்று ஒரு நகைச்சுவை தலைவர் பதிவு.
பணமா பாசமா போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் திரு கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நவாப் நாடக கம்பெனியில் இருந்து விலகி சக்தி நாடக சபா ஒன்றை உருவாக்கி நடத்தி வந்தார்.
மதுரையில் எழுத்தாளன் என்ற நாடகத்தை நடத்தி முடித்து 100 பேர் கொண்ட அவர் குழு பாண்டிச்சேரிக்கு வந்து அந்த நாடகத்தை போட ஆரம்பிக்க.
நாடகத்துக்கு கூட்டம் வரவில்லை. 100 பேருக்கு சாப்பிட சம்பளம் கொடுக்க வழி இல்லை...உடனே சென்னைக்கு கிளம்பி யாராவது நடிகர்கள் தலைமை தாங்கி நாடகம் நடந்தால் அன்று வரும் கூட்டத்தை வைத்து அந்த வாரம் முழுவதும் ஓட்டி விடலாம் என்று அவர் நடிகர் எம்.என். நம்பியாரை பார்க்க அவர் வீட்டுக்கு வர அங்கே நடிகர் எஸ்.வி.சுப்பையா அவர்களும் இருக்க.
அவர்களிடம் குழுவின் நிலை குறித்து கே.எஸ்.ஜி...வருந்தி சொல்லி கொண்டு இருக்க முதலில் சாப்பிடுவோம் என்று எம்.என்.அவர்கள் சொல்ல.
சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது புரட்சி நடிகர் நம்பியார் வீட்டுக்கு தற்செயல் ஆக வர அவரிடம் கே.எஸ்.ஜி...அவர்களை நம்பியார் அறிமுக படுத்த.
உங்கள் போஸ்ட்மேன் எழுத்தாளன் நாடகங்கள் பற்றி நான் கேள்வி பட்டு இருக்கிறேன் என்றவுடன் நம்பியார் கண் அசைக்க உடனே கே.எஸ்.ஜி...வந்த விவரம் சொல்ல.
ஏற்கனவே நாடக குழு அனுபவம் இருந்ததால் ஒண்ணு செய்வோம் சனிக்கிழமை நம்பியார் நாடகத்துக்கு தலைமை மறுநாள் ஞாயிரு அன்று நான் வருகிறேன் என்னால் ஒரு 100 பேருக்கு உதவி ஆக இருக்கும் என்று அவரே சொல்ல.
என்ன இது நாம் அவரை கேட்கவே இல்லை அவராக வருகிறேன் என்று ஒப்பு கொண்டு விட்டாரே இனி நம் குழு பிழைத்து கொள்ளும் என்ற நம்பிக்கையுடன் எம்.என்.அவர்கள் வீட்டை விட்டு வெளியே வருகிறார் கே.எஸ்.ஜி.
அந்த நாளும் வர மதியம் கிளம்பி சுமார் 5 மணி அளவில் பாண்டிச்சேரிக்கு நம் தலைவர் போய் சேர்ந்து அந்த குழு இருக்கும் இடத்தை அடைய.
புரட்சிநடிகர் வருகிறார் நாடகத்துக்கு என்ற வுடன் காலை முதலே அரங்கம் வாசலில் கூட்டம் சேர துவங்குகிறது. ஓடி வந்து வரவேற்ற கே.எஸ் ஜி.அவர்களிடம் நேற்று நம்பியார், உடன் எஸ்.வி சுப்பையா வர எப்படி வசூல் என்று தலைவர் கேட்க பாதி கிணறு தாண்டி விட்டோம் நீங்கள் இன்று வந்து இருப்பதால் இனி இந்த மாதம் முழுவதும் எங்கள் குழு பிழைத்து கொள்ளும் என்று அவர் சொல்ல.
சற்று நேரத்தில் அங்கு வந்த நாடக குழு மேனேஜர் அரங்க வாசலில் மக்கள் வெள்ளம் போல் நின்று எம்ஜியார் எம்ஜியார் என்று மொய்க்கிறார்கள் என்ற தகவல் சொல்ல
வாசல் வழியா கண்டிப்பாக நாம் உள்ளே போக முடியாது என்றவுடன் தலைவர் நான் தலையில் முண்டாசு கட்டி கொண்டு அடையாளம் தெரியாமல் உள்ளே போய் விடலாமா என்று கேட்க.
உங்களை வெளியே மக்கள் பார்த்து விட்டால் உள்ளே எவரும் வர மாட்டார்கள் அது வீணாக போய்விடும்.
கூட்டம் தெரிந்து நான் ஒரு மாற்று யோசனை வைத்து இருக்கிறேன்.அரங்கின் பின்னால் ஒரு குறுக்கு சந்து இருக்கு அதன் வழியாக ஒரு 15 அடி உள்ளே போனால் அந்த அரங்கின் பின் வாசல் வழியாக நாம் உள்ளே போய் விடலாம் என்று கே.எஸ். ஜி...சொல்ல பாவம் போல இருந்த அவர் முகம் கண்டு நம் மன்னர் ஒத்துக்கொள்ள.
இரவு 9 மணிக்கு நாடகம் ஆரம்பம்..ஒரு 7.30 மணி அளவில் அந்த குறுக்கு சந்து அருகில் கார் வந்து நிற்க இருவரும் இறங்கி முதலில் வழி காட்டி கொண்டு கே.எஸ்.ஜி போக பின்னால் நம் தலைவர் முழு ஒப்பனையுடன் தொடர.
ஒரு பத்தடி தூரம் போனதும் எதிரே இருந்து ஒரு பெண் ஆஜானுபாகுவான உடல் கொண்டு வர.
வடிவேல் பட காமெடியில் ஒரு பெண்ணை பிடிக்க போக அந்த பெண் வடிவேல் போலீஸ் உடையை பறித்து கொண்டு போட்டு கொண்டு ஓடுபவர் போல உடல் கட்டு அந்த பெண்ணுக்கு இருக்க ஒரு உதாரணம் கொண்டு.
எதிரே வந்த அந்த பெண்...கே.எஸ்.ஜி யை தாண்டி பின்னால் வந்த நம் தலைவரை உற்று பார்த்து அவர் எம்ஜியார் போல இருக்கே என்பதை உறுதி செய்து கொண்ட பின்.
ராசா நீ எங்கே இங்கே இந்த சந்தில வந்தே என்று தலைவரை கட்டி சேர்த்து பிடித்து கொள்ள.... தலைவர் அட... விடும்மா...விடும்மா என்று குரல் கொடுக்க
கே.எஸ்.ஜி அந்த பெண்ணின் தோற்றம் கண்டு பயந்து நிற்க உடனே சுதாகரித்து கொண்ட எம்ஜியார் விடும்மா நான் ஒரு நிகழ்ச்சிக்கு போறேன் என்ற உடன் அந்த பெண் சந்தில என்ன ராசா நிகழ்ச்சி என்று கேட்க... தலைவர் தன் பலம் பொருந்திய கைகளால் அந்த கட்டி பிடித்து இருந்த அந்த பெண்ணின் கைகளை பிடித்து விலக்கி கொண்டு ஒரே துள்ளலில் அருகில் இருந்த அந்த ஒரு ஆள் நுழையும் அந்த கேட் வாசல் வழியா அரங்கின் பின் புறம் நுழைந்து விட.
அதிர்ச்சியில் உறைந்து போன கே.எஸ்.ஜி...திகைத்து நிற்க..... அங்கே அரங்கின் உள்ளே இருந்து பறந்த விசில்கள் சத்தம் எம்ஜியார் மேடைக்கு சென்று விட்டார் என்பதை உறுதி படுத்த.
நாடகம் இரவு 1 மணி அளவில் முடிய மேடையில் தலைவர் அருகில் கூட வர பயந்து ஓரம் ஆக நின்ற கே.எஸ்.ஜி....குழு தங்கி இருக்கும் இடத்துக்கு வந்த பொன்மனம் இரவில் நேரம் ஆகி விட்டதால் அங்கேயே தங்க.
மறுநாள் விடிந்த உடன் சற்று நேரம் கழித்து எங்கே கே.எஸ்.ஜி.என்று தலைவர் கேட்க..
அவர் இரவு சாக்கு போக்கு சொல்லி தப்பித்து விட்டேன் இப்ப நேரில் பார்த்து என்ன நடக்குமோ என்று பயத்துடன் செல்ல.
அவரை பார்த்த தலைவர் முதலில் கடுமை காட்டும் முகம் கொண்டு அடுத்த நொடியில் முகம் மாறி என்ன பயமா சொல்லுங்க என்று சிரித்து கொண்டே வரவேற்க மறுபடியும் இந்த உலகில் பிறந்தது போல உணர்ந்தார் கே.எஸ்.ஜி..
நடந்ததை விடுங்க அது முடிந்து விட்டது...வசூல் போதுமா என்று கேட்க 2 மாதம் குழு முழு பலத்துடன் இனி செயல் படும் என்று கண்ணீருடன் கே.எஸ்.ஜி...கை கூப்ப.
அவர் கண்ணீரை துடைத்து கிட்டு நான் புறப்படுகிறேன் என்று தலைவர் கிளம்ப.
பின் ஒரு காலத்தில் கற்பகம் என்ற படத்தின் கதையை முதலில் தலைவருடன் கதை சொல்ல கே.எஸ்.ஜி போன போது என்ன அந்த.....சந்து கதை நினைவுக்கு வருதா என்று தலைவர் கேட்க வாய் விட்டு சிரிக்கிறார் கே.எஸ்.ஜி...அவர்கள்.
தலைவர் கதை கேட்டு அவர் பின் சிவாஜி நடிப்பதாக இருந்த அந்த படம் பின்னால் ஜெமினி நடித்து வெற்றிகரமாக ஓடியது பின்னால் நடந்தவை.
வாழ்க எம்ஜியார் புகழ்.
நன்றி.... தொடரும் நாளை..உங்களில் ஒருவன் நெல்லை மணி......... Thanks...
# “வேட்டைக்காரன் வருவான் ...ஏமாந்து விடாதீர்கள்”
காமராஜர் , கடுமையான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த சமயம்...,
தி.மு.க.விற்கு எதிராக ஒரு கூட்டத்தில் பேசி விட்டு முடிவில் கூட்டத்தினரை இப்படி எச்சரித்தாராம்..!
அதன் காரணம்.. அவருக்கு அடுத்து அந்த ஊருக்கு எம்.ஜி.ஆர். பிரசாரத்திற்காக வருகிறார் என்று தகவல் வந்ததாம்..!
ஆனால் காமராஜர் எவ்வளவு எச்சரித்தும் மக்கள் வேட்டைக்காரனைத்தான் வெற்றி பெற வைத்து கொண்டாடினார்கள்..
கடைசியில் கோட்டைக்கும் அனுப்பி வைத்தார்கள் ..!
# சரி..அந்த வேட்டைக்காரன் எம்.ஜி.ஆர்.,
தி.மு.க.வில் இருக்கும்போது , காமராஜரைப் பற்றி சொன்ன ஒரு வார்த்தை , மிகப் பெரும் கலகத்தை , கழகத்தில் உண்டாக்கி விட்டது...!
அப்படி என்னதான் சொன்னார் எம்.ஜி.ஆர்...?
“காமராஜர் என் தலைவர்..அண்ணா என் வழிகாட்டி..”
எம்.ஜி.ஆர். இப்படிச் சொன்னதும் எரிமலையாய்க் கொந்தளித்துப் போன ஒரு கூட்டம் , நேராக அண்ணாவிடம் போய்.. “எம்.ஜி.ஆர். மீது நடவடிக்கை எடுங்கள்..” என்று சொல்ல , அண்ணா அமைதியாகச் சொன்னாராம்.. “ ராமச்சந்திரனைப் பற்றி எனக்குத் தெரியும்..அமைதியாக இருங்கள்..”
அப்புறம்தான் அமைதியானர்களாம் அந்தத் தொண்டர்கள்..!
# அதன் பின்.....
1969 ல் நடைபெற்ற நாகர்கோவில் எம்.பி. இடைதேர்தலில் , காமராஜர் போட்டியிட்டபோது ..அவரை எதிர்க்கக் கூடாது என்ற காரணத்திற்காக , அந்த தேர்தல் பிரச்சாரத்திற்கே.போகவில்லையாம் எம்.ஜி.ஆர்...!
அது மட்டுமா..?
1972 ல் அ.தி.மு.க.வை ஆரம்பித்த எம்.ஜி.ஆர். , தன் கட்சிக்காரர்களுக்கு கண்டிப்புடன் இட்ட கட்டளை :
“காமராஜரை எந்த மேடையிலும் , எவரும் தாக்கிப் பேசக் கூடாது..!”
# நாமும் அமைதியாக இருந்து , ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால்...
இன்றைய காங்கிரஸ்காரர்களை விட ,
காமராஜரை அதிகமாக மதித்தவர் ,
அன்றைய எம்.ஜி.ஆர்.தான் என்றே தோன்றுகிறது ..!........ Thanks.........
வாய்ப்புகளை வாரி வழங்கிய வள்ளல்...
மயிலை வடக்கு மாடவீதியில் ஒரு திருமண மண்டபம்...
டப்பிங் கலைஞர் ஒருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மெல்லிசைக் கச்சேரி... இனிமையாகப் பாடிக் கொண்டிருந்தார் அந்த இளம் பெண் ...
'ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்...' போன்ற பாடல்கள்... வித்தியாசமான குரலில் பாடிக் கொண்டிருந்தார்... ஒரே எம்.ஜி.ஆர். பாட்டு மயம்...
முன் வரிசையில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தவர் வேறு யாருமல்ல, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் !
அப்போது அவர் முதலமைச்சராக இல்லை. அ.தி.மு.க தலைவர். திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அந்த இளம் பாடகியின் தாயார் அழைத்ததின் பேரில் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் மக்கள் திலகம். காரணம்...
அந்த தாய் ஒரு காலத்தில் பாய்ஸ் நாடகக் குழுவில் நடிகை! பாலமுருகன் பாய்ஸ் கம்பெனி, ஜோதி நாடக சபா என்று நடித்துக் கொண்டிருந்தவர். திருமணமான பின் நாடகத்தை விட்டு விட்டு சினிமாவில் நடித்தார். கண்ணன் என் காதலன், கணவன், என் அண்ணன், இதயக்கனி, நீரும் நெருப்பும் என்று பல எம்.ஜி.ஆர் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். பின்பு 'டப்பிங்' கலைஞராக விளங்கினார். நாடக நடிகையாக இருந்த காலத்திலிருந்தே எம்.ஜி.ஆருக்கு அவரை நன்றாகத் தெரியும். அதனால், பழைய, புதிய
சக நாடகக் கலைஞர்கள் யார் அழைத்தாலும் அவர்களுக்கு மதிப்பளித்து, அவர்கள் அழைப்பை ஏற்று, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை கொள்கையாகவேக் கொண்டிருந்த மக்கள் திலகம், அந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருந்தார்.
படப்பிடிப்பின்போது அந்தப் பெண் தனது தாயாருடன் வருவதை எம்.ஜி.ஆர் பலமுறை பார்த்திருக்கிறார்.
ஆனால், அவர் இந்த அளவுக்குப் பாடுவார் என்று எதிர்பார்க்கவில்லை.
இந்த செய்திகளையெல்லாம் நான் அறிந்துகொள்ள உதவியாக இருந்த அந்த பாடகியின் பேட்டியிலிருந்து ஓரு பகுதி...
" மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மாதிரி ஒரு இசை ரசிகரைப் பார்க்க முடியாது. அந்தக் கல்யாணத்தில் என் கச்சேரியை நீண்ட நேரம் அமர்ந்து ரசித்தவர், ‘‘உனக்கு இப்படி பாடக்கூடிய பொண்ணு இருக்குன்னு சொல்லவே இல்லையே’’ என்றார் அம்மாவிடம். அப்படியே கத்தையாகப் பணத்தை அள்ளிக் கொடுத்து வாழ்த்தினார். அப்போ எனக்கு 15 வயசுதான் இருக்கும்.
அவருடைய பாராட்டையே விருதாக நினைத்த எனக்கு, வரம் போல இன்னொரு வாய்ப்பையும் கொடுத்தார். ‘பல்லாண்டு வாழ்க’ படத்தில் ஒரு பாடலைப் பாட திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவனிடம் சிபாரிசு செய்தார் எம்.ஜி.ஆர். கே.வி.மகாதேவன் இசையில் ஜேசுதாஸுடன் சேர்ந்து பாடிய,
கவிஞர் நா.காமராசன் இயற்றிய அந்தப் பாடல்தான், ‘போய்வா நதி அலையே...’....
இப்போது தெரிந்திருக்குமே அந்தப் பாடகி யாரென்று ! அவர்தான் பாடகி டி.கே.கலா. அகத்தியர் திரைப்படத்தில் 'தாயிற்சிறந்த கோவிலும் இல்லை...' என்ற பாடலை குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் பாடி, முதல் பாட்டிலேயே பலரது கவனத்தையும் கவர்ந்தவர். அவரது தாயார்
நாடக மற்றும் திரைப்பட நடிகையாக, டப்பிங் கலைஞராக விளங்கிய
காலஞ்சென்ற சண்முகசுந்தரி.
ரெக்கார்டிங் முடிந்ததும் கே.வி.மகாதேவன், ‘‘இதுவரை இப்படி ஒரு குரலை நான் கேட்டதில்லை. உனக்கு தனித்துவமான வாய்ஸ்’’ என்று டி.கே.கலாவை வாழ்த்தினாராம்.
அந்த பேட்டியில் மேலும் தொடர்கிறார் டி.கே.கலா...
"ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில், ‘புதுசா ஒரு சின்னப் பொண்ணு பாடின பாட்டு இது. அருமையா பாடி இருக்கு... கேளுங்க’ என்று எல்லோருக்கும் இந்தப் பாடலை போட்டுக் காட்டி சில படங்களுக்கு சிபாரிசு செய்தார் எம்.ஜி.ஆர். அதன் பிறகு, ‘உழைக்கும் கரங்கள்’ படத்தில் டி.எம்.சௌந்தர்ராஜனுடன் சேர்ந்து ‘வாரேன் வழி பார்த்திருப்பேன்...’ என்ற பாடலை மெல்லிசை மன்னர் இசையில் பாடினேன். எம்.ஜி.ஆர் படங்களில் நிறைய பாடவில்லை என்றாலும், என் பாடலை அவர் டேப் ரெக்கார்டரில் வைத்துக்கொண்டு எல்லோருக்கும் போட்டு காட்டியது யாருக்கும் கிடைக்காத ஒரு கொடுப்பினைதானே!’’
இப்படி பரவசத்தோடு பழைய நினைவுகளில் மூழ்கிப் போகிறார் பாடகி டி.கே.கலா அவர்கள்.
தன்னோடு பழகிய சக கலைஞர்களுக்கு மட்டுமல்ல, அவர்களின் வாரிசுகளுக்குக் கூட நல்ல வாய்ப்புகளை அளிக்கத் தவறியதில்லை மக்கள் திலகம்! வெறுமனே வாய்ப்பளிப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் அவர்களின் திறமையை மற்றவருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டி சிபாரிசு செய்யவும் தயங்கியதில்லை!...... Thanks.........
தலைவர் அதிசயம்,அவரைப்பற்றி ஆய்வுக்கு ஓய்வு கிடையாது,எந்த விஷயத்தில் அவரை ஆராய்ச்சி செய்தாலும் தனிப்பிறவியாகத்தான் திகழ்வார்.
உலகத்திரைப்பட வரலாற்றில் கதாநாயகர்களுடன் இணையாக நடிக்கும் காமெடி நடிகர்களால் படத்தில் வாடா,போடா என்று அழைக்கப்படாத ஒரே ஒரு கதாநாயகன் நம் புரட்சி தலைவர் மட்டும்தான்........👌👍💐
தலைவா மறைந்து 33 ஆண்டுகள் ஆன பின்பும் இன்றும் உங்களுடைய பழைய திரைப்படங்கள் ஓடிக்கொண்டே தான் இருக்கிறது இன்றும் உங்களை பற்றி நிறைய புத்தகங்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது தினசரி நாளிதழ்களிலும் வார புத்தகங்களிலும் உங்களை பற்றிய செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கிறது இன்றும் நீங்கள் ஆரம்பித்த கட்சிதான் ஆட்சி நடத்துகிறது இவ்வளவு சிறப்புகள் பெற்ற உங்ளுடைய புகழை பெற ஒரு நடிகர் அல்ல ஓராயிரம் நடிகர்கள் வந்தாலும் உங்கள் நிழலை கூட தொட முடியாது....... Thanks...
புர*ட்சித்த*லைவ*ர் த*ன*து ஆட்சிகால*மான 1977 ஜூன் 30 முத*ல் 1987 டிச*ம்ப*ர் 24 வ*ரை த*மிழ*க*த்தின் முத*ல்வ*ராக இருந்த*வ*ரை பிர*புதாஸ் ப*ட்வாரி, மு.மு.இஸ்மாயில் (த*ற்காலிக*ம்), சாதிக் அலி, எஸ்.எல்.குரானா ஆகிய நான்கு ஆளுந*ர்க*ள் க*வ*ர்ன*ராக* இருந்த*ன*ர்.
அவ்வாறே மொர்ராஜி தேசாய், ச*ர*ண்சிங், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகிய நான்கு பிர*த*ம*ர்க*ள் ப*த*வி வ*கித்த*ன*ர்.
மேலும் முத*ல்முறை 962 நாட்க*ளும், இர*ண்டாம் முறை 1620 நாட்க*ளும், மூன்றாம் முறை 1042 நாட்க*ளும் முத*ல்வ*ராக ப*த*வி வ*கித்துள்ளார் புர*ட்சித்த*லைவ*ர். மொத்த*ம் 3624 நாட்க*ள் ப*த*வி வ*கித்தார்.
குறிப்பிட*த்த*க்க சாத*னைக*ளில் சில..
* ச*த்துண*வு திட்ட*ம்
* பொது விநியோக* ரேஷ*ன் க*டைக*ளை அதிக*ப்ப*டுத்தி பொருட்க*ள் த*டையின்றி கிடைக்க*ச் செய்தார்.
* தெலுங்கு க*ங்கை திட்ட*த்தின் மூலம் கிருஷ்ணா நீரை சென்னைக்கு கொண்டுவ*ர* ஒப்ப*ந்த*ம் போட்டு இரு த*வ*ணைக*ள் ப*ணமும் அளித்தார்.
*மகளிர் காவ*ல் நிலைய*ம் முத*லில் அமைத்தார்.
* இல*வ*ச* ஆம்புல*ன்ஸ் சேவையை அறிமுக*ப்ப*டுத்தினார்.
*மாண*வ*ர்க*ள் இடை நிற்ற*லை குறைக்கும் பொருட்டு பி.யூ.சி.யை ர*த்து செய்து 10+2 முறையை கொண்டுவ*ந்தார்.
* அர*சு ஊழிய*ர், ஆசிரிய*ர்க*ள் ச*ம்ப*ள*த்தை க*ணிச*மாக* உய*ர்த்தினார்.
*மதுவில*க்கை மூன்ற*ரை ஆண்டுக*ள் அம*ல்ப*டுத்தினார். பின்ன*ர் க*ள்ளச்சாராய*, விஷ*ச்சாராய சாவுக*ளை த*டுக்க வேறுவ*ழியின்றி மதுக்க*டைக*ளுக்கு குறைந்த* அள*வில் அனும*தி அளித்தார்.
*முல்லைப்பெரியார் அணையை ப*ல*ப்ப*டுத்தி சீரமைத்தார்.
*கிராம*ங்க*ளில் ப*ர*ம்ப*ரை க*ர்ண*ம் முறையை ஒழித்து கிராம* நிர்வாக* அலுவ*ல*ர் ப*த*வியை இந்தியாவிலேயே முத*ன்முத*லில் த*மிழ*க*த்தில் உருவாக்கினார்..
*அன்னை தெர*சா மக*ளிர் ப*ல்க*லைக்க*ழ*க*த்தை உருவாக்கினார்.
* இன்றைக்கு இருக்கின்ற* 133 அடி உய*ர* வ*ள்ளுவ*ர் சிலை, கோய*ம்பேடு புர*ட்சித்தலைவ*ர் பேருந்து நிலைய*த்திற்கு அடிக்க*ல் நாட்டினார்.
*த*னியார் பாலிடெக்னிக், பொறியிய*ற் க*ல்லூரிக*ளை மாவ*ட்ட*ந்தோறும் திற*க்க*ச் செய்தார். அத*னால் க*ல்விப்புர*ட்சியை உருவாக்கினார்.
* மினி பேருந்து முறையை அறிமுக*ப்ப*டுத்தினார்.
*விலைவாசியை க*ட்டுக்குள் வைத்தார். குறிப்பாக* அரிசி விலை க*ட்டுக்குள் இருந்த*து
*த*மிழ்நாடு காகித* ஆலையை புக*ழூரில் ஏற்ப*டுத்தினார்.
*வித*வைக*ளுக்கும், ஏழைத்தாய்மார்க*ளுக்கும், ப*டித்து வேலையில்லாத* இளைஞ*ர்க*ளுக்கு உத*வித்தொகை அளித்தார்.
*த*ஞ்சையில் த*மிழ்ப*ல்க*லைக் கழ*க*ம் உருவாக்கினார்.
* த*மிழ் ஆசிரிய*ர்க*ளும் த*லைமை ஆசிரிய*ர் ஆக*லாம் என உத்த*ர*விட்டார்.
* அர*சு ம*ருத்துவ* ம*னைக*ளில் சிறுநீர*க* மாற்று அருவை சிகிச்சை, இலவ*ச* ட*யாலிசீஸ் வ*ச*தியை ஏற்ப*டுத்தினார்.
* புதிய மாவட்ட*ங்க*ளை உருவாக்கினார்.
*காவ*ல*ர்க*ளுக்கு அரைக்கால் ச*ட்டை முறையை மாற்றினார். கூம்பு போன்ற* தொப்பியையும் மாற்றி ந*வீன*ப்ப*டுத்தினார்.
*ம*த*க்க*ல*வ*ர*ம், வ*குப்பு க*ல*வ*ர*ம் இல்லாமை, ர*வுடியிச*ம் ஒழிப்பு
*ப*ராம*ரிப்பு இல்லாம*ல் இருந்த* அனைத்து கோயில்க*ளிலும் ஒரு நேர* பூஜையை அமல்படுத்தினார்.
* விவ*சாயிக*ளுக்கு இல*வ*ச* மின்சார*ம், மின்சார*ம் இல்லாத* வீடுக*ளுக்கு ஒரு விள*க்கு இலவ*ச* மின்சார* திட்ட*த்தை அமல்ப*டுத்தினார்.
*இல*ங்கை அக*திக*ளுக்கு புக*லிட*ம், விடுத*லைப்புலிக*ளுக்கு நிதியுத*வி அளித்தார்.
இன்ன*மும் சொல்லிக்கொண்டே போக*லாம்...
இனிய மதிய வ*ணக்கத்துட*ன்........ Thanks...
#இதுவன்றோ #பக்தி !!!
எங்க அப்பாவுக்கு ஹார்ட்ல ஓட்டை...எவ்வளவோ மருத்துவமனைகளுக்குச் சென்று பார்த்தும் பயனில்லை...கடைசி முயற்சியாக சி.எம்.சி.மருத்துவமனை போகச்சொல்லி எங்க சர்ச் பாதிரியார் ஒரு லெட்டர் கொடுத்தனுப்பினாரு. அங்கே போனா, ஒரு லட்சம் ஃபீஸ் கட்டணும் ...இந்த சிகிச்சைக்கு இலவச மருத்துவம் இல்லைன்னு உறுதியாச் சொல்லிட்டாங்க...
எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல... அப்ப எங்க நண்பர் ஒருவர், 'நீ புரட்சித்தலைவரிடம் உதவிகேட்டு சி.எம். செல்லுக்கு கடிதம் போடு...கண்டிப்பாக உதவி புரிவார்'னு சொல்ல, நானும் எங்க மாவட்ட செயலாளர் மூலம் கடிதம் அனுப்பினேன்...
வெறும் மூன்றே நாளில் ரூ.150000/- அப்ரூவ் ஆகி புரட்சித்தலைவரிடமிருந்து ஆணை வந்தது. அதாவது ஒரு லட்ச ரூபாய் மருத்துவமனைக்கும் ரூபாய் ஐம்பதாயிரம் எங்களின் குடும்பத்திற்கும் வழங்கச்சொல்லி அந்த உத்தரவில் இருந்தது...
வாரி வழங்கி என் தந்தையார் உயிரைக் காப்பாற்றி எங்களின் குடும்பத்தையே வாழவைத்த தெய்வம் புரட்சித்தலைவர்....
சில ஆண்டுகள் கழிந்தன...டிசம்பர் ஆண்டு...கிறிஸ்துமஸ் கொண்டாட எங்கள் வீட்டில் எல்லோரும் ஆயத்தமாக...
ஒரு செய்தி 'இடி போல' எங்களனைவரின் இதயங்களில் இறங்கியது...
அது, 'புரட்சித்தலைவர் மறைந்துவிட்டார்' என்ற செய்தி...
இதைக் கேள்விப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் எனது தந்தையார் இறந்துவிட்டார்...
எப்பேர்ப்பட்ட பக்தி...!
புரட்சித்தலைவர் இல்லாத உலகில் எனது தந்தையாருக்கு வாழ விருப்பமில்லை...அவருடனேயே சென்றுவிட்டார்...
எங்களைப் போல எத்தனையோ பல்லாயிரக்கணக்கான குடும்பங்களை வாழவைத்த தெய்வம் அவர்...! அதெல்லாம் வெளிய தெரியாது...!!!
#நகைச்சுவை #நடிகர் #பெஞ்சமின் அவர்களின்
கண்ணீர் மல்கிய பேட்டி....... Thanks...
புரட்சித் தலைவரின் நடிப்பிற்கும் மற்ற நடிகர்களின் நடிப்பிற்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு ...காரணம் மற்ற நடிகர்களுக்கு உடல் மட்டும் தான் நடித்தது ஆனால் புரட்சித் தலைவர் ஒருவருக்கு மட்டும் தான் உடலோடு சேர்த்து உள்ளமும் நடித்தது ...தன் படத்தை கான வரும் ரசிகர்கள் எக்காரணத்தை கொண்டும் தீய வழியில் செல்ல கூடாது என்ற காரணத்தால் தான் தன் படங்களில் தாய்மையையும் நீதி நேர்மை தர்ம சிந்தனை குடி பழக்கம் போதை சிகரெட் என தன் படங்களில் காட்சி தொகுப்போடு அனைத்தும் ஒருங்கினைந்து கொள்கை பிடிப்புடன் செயல் பட்ட காரணத்தால் தான் முதன் முதலில் முதலமைச்சர் என்ற தங்க , வைர, நவரத்தினங்கள் அடங்கிய கீரிடத்தை தமிழக மக்கள் புரட்சித் தலைவருக்கு வழங்கினார்கள் வாழ்க தமிழ் வளர்க MGR புகழ் அன்பே சிவம்...... Thanks...
வணக்கம் நண்பர்களே .....
நேற்று சென்னையில் நடந்த ஒரு
கலை நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன் ....
புரட்சித்தலைவரை தவிர்த்து
அனைத்து நடிகர்களை ஆகா ஓகோ
என்று புகழ்ந்து தள்ளியதை கண்டேன்...
சிவாஜி கணேசனை அண்ட புளுகு
ஆகாச புளுகு என்று வாய்க்கு வந்தபடி
தள்ளு தள்ளு என்று தள்ளுவதை
பார்த்தேன் ....
இந்த பதிவு சிவாஜியை மட்டம்
தட்டுவதற்கான பதிவு இல்லை.....
ஆனால் இரண்டு மணிநேரமாக
அப்படி பாடினார் இப்படி ஆடினார்
இரத்த வாந்தி எடுத்தார்...
நொண்டி ஆகி நடந்தார்....
சுடுகாட்டில் அழுதார்....
ஆண்டியாக கோயில் கோயிலாக
அலைந்தார்....... இப்படியே
சென்றது நிகழ்ச்சி....
ஆனால் .....
தலைமை
அரசியல்
கட்சி
தொகுதி
தேர்தல்
சின்னம்
மக்கள்
செல்வாக்கு
வெற்றி
பதவி
அரசாங்கம்
ஆட்சி
தர்மம்
வள்ளல் தன்மை
வாரி கொடுப்பது
மக்களை நேசித்தது
மக்கள் நலம்
நல திட்டம்
மக்கள் பணி
நல்ல எண்ணம்
பாராளுமன்றம்
நாடாளுமன்றம்
சட்டசபை
மேல்சபை
பிரதமர்
ஜனாதிபதி
அமைச்சர்கள்
முப்படை தளபதிகள்
ஐஏஎஸ்
ஐபிஎஸ்
கலெக்டர்கள்
அதிகாரிகள்
சாதனை திரைப்படம்
இன்றும் வசூலை குவிக்கும் படம்
இன்றும் கைத்தட்டல் விழுவது
இன்றும் அழுவது
நினைவிடம் .........
இதில் ஒன்றையாவது இணைத்து
பேசுவார்கள் என்று நினைத்தால்
நான் முட்டாளவதை யாராலும்
தடுக்க முடியாது ......
ஆனால் நான் மேற்கோள்
காட்டிய அனைத்துக்கும்
சொந்தக்காரர் .....உரியவர்
யாரென்று நான் சொல்லித்தான்
தெரிய வேண்டுமா
நண்பர்களே.........( 2018 நடந்த நிகழ்ச்சியில்... இப்போது Share செய்த நண்பர்) ... Thanks to mr.SK
*"அணுவளவும் கவலைப்படல் வேண்டாம் அன்புக்கினிய தம்பி *SK.,"*!!! *"அனைத்துலகமுமே அறிந்துதெளிந்த அரும்பெரும் மாமனிதமேதையாம், **புரட்சிக் கலைஞானி**
மேதகு **எம்.ஜி.ஆர்**அவர்களை, இத்தகைய "அறிவிலிகள்" கண்டுகொண்டாலெ
ன்ன?? கண்டுகொள்ளாவிட்டாலென்ன?? *"எம்.ஜி.இராமச்சந்திரச் *சூரியனை"* இத்தகைய "அற்ப முகில் கும்பலா" மறைத்துவிடும்?!? ஆனால் ஒன்று:- *"உலகமகா நடிப்புக்கலை நாயகன்"*சிவாஜி கணேசன்** எனும் *"நடிகர் திலகமும்"* *"நம் புரட்சிக் கலைஞானி"* **மேதகு மாமனித மேதை"** **எம்.ஜி.ஆர்"** எனும் *"மக்கள் திலகமும்"* தங்களின் *வாழ்வியல்நிறைவுக் காலம்*வரையிலும், எப்பேர்ப்பட்டதொரு **பாசப் பெரும்பிணைப்போடும்** **தோழமை உணர்வுரிமையோடும்** **உண்மைஉறுதிமிகு அண்ணன்+தம்பி உறவுப்பிணைப்
போடும்** வாழ்ந்தனர் என்பதை, "இத்தகையோர்" அறிவாரோ??? அவ்வண்ணமாக அறிந்துதெளிந்திரு
ப்பின், "இவ்வண்ணமாக" *"மேதகு புரட்சிக் கலைஞானி எம்.ஜி.ஆர்"*அவர்களைப் புறந்தள்ளி ஒதுக்கி இருப்பார்களா "அறிவிலிகள்"?!?....... Thanks to mr. Jaya rajasingam, SriLanka...
*"நாடோடி மன்னன்"*!!! இதோ!! இப்போதுதான் பத்தாவதோ, பதினோராவதோ முறையாகப் *பார்த்துச் சுவைத்துக் களிவெறி*கொண்டேன்!!! அடடா!!! அடடா!!! எப்பேர்ப்பட்டதோர் ஈடிணையேஇல்லாத் திரைப்படக்காவிய ஓவியம்இது"*!!! *"வெண்திரையிலே செதுக்கப்படும் சினிமாச் சிற்பம்"*ஆக அல்லவா, *"*நாடோடி மன்னன்*"*ஐ *"புரட்சிக் கலைஞானி"* எம்.ஜி.ஆர் அவர்கள் தன் *"நெறியாளுகை உளி"*யால் அருமையாகச் செதுக்கிவைத்துள்ளார்!!! இவ் *"அரும்பெருந் திரைப்படச் சிற்போவியத்தை"* இன்றைய இளந்தலைமுறையினருக்குத் தெரியப்படுத்தும்வண்ணமாக, *இலவசமாகவே* திரைக்காட்சிப்படுத்தலாமே!!! அப்போது தெரியும், *"எம்.ஜி.ஆர்"* யார்?!? எத்தகைய *"பேராற்றலாளன்"*?!? *"அம் மாபெருங் கலைஞானச் சக்கரவர்த்திக்கு"* ஈடிணை எவருமே இலர்!!! *"எம்.ஜி.ஆருக்கு"* நிகர், *"எம்.ஜி.ஆர்"*மட்டுமே என்பது!!!....... Thanks...
சோவின் ரசிகர்
எம்.ஜி.ஆர். நடித்த “என்
அண்ணன்” படத்தை இயக்கிய ப.நீலகண்டன், சோவிடம் ஒருமுறை பேசிக் கொண்டிருந்தார்.
பேச்சுவாக்கில் “உங்களுடைய துக்ளக் பத்திரிகை எப்படிப் போகிறது..?” என்று கேட்டார் நீலகண்டன்.
அதற்கு சோவும், “நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு...” என்றார்.
நீலகண்டன் தொடர்ந்து கேட்டார், “கலைமகள் பத்திரிகை எப்படிப் போகிறது..?” என்று.
[ கலைமகள் ஒரு தரமான இதழ் ]
சோவும், “அது சுமாராகத்தான் போகிறது” என்று சொல்ல.... நீலகண்டன் நீண்ட பெருமூச்சுடன் கேட்டாராம்...“துக்ளக்கைப் போன்ற பத்திரிகையெல்லாம் நல்லாப் போகுது...! ஆனால் தரமான கலைமகள் போன்ற பத்திரிகையெல்லாம் சுமாராகத்தான் போகுது... இது எப்படி..?” என்று.
பட்டென்று சோ சொன்னபதில்: “ பாருங்க சார்... எத்தனையோ நல்ல படங்கள் வந்து ஓடாமல் போகுது! ஆனா ‘என் அண்ணன்' எப்படி நல்லா ஓடுது பாருங்க! அதைப் போலத்தான்னு வச்சுக்குங்களேன்.”
அதிர்ந்து போனாராம் நீலகண்டன்...ஏனென்றால், சோ இப்படிச் சொல்லும்போது அருகில் இருந்தவர் யார் தெரியுமா..?
எம்.ஜி.ஆர்.!
பக்கத்தில் இருந்த எம்.ஜி.ஆர். என்ன செய்தார்..?
விலா நோக விழுந்து விழுந்து சிரித்தாராம்....
சிரித்துக் கொண்டே நீலகண்டனிடம் எம்.ஜி.ஆர். கேட்டாராம்..
“சோ கிட்ட ஏன் வாயைக் கொடுக்கறீங்க..?”
என்ன ஒரு தைரியம் சோவுக்கு!
அதை எளிதாக ஏற்றுக் கொள்ள என்ன ஒரு தெளிவான பக்குவம் எம்.ஜி.ஆருக்கு!....... Thanks...
எம்.ஜி.ஆர் உண்ணவில்லை??
--------------------------------------------------
எம்.ஜி.ஆரின் மாம்பலம் அலுவலகம் அன்று ஏக பரப்பில்??
மதியம் இரண்டு மணிக்கு மேல் ஆகியும்,,எம்.ஜி.ஆர் மதிய உணவுக்கு வர மறுத்ததால் எழுந்த பதட்டம்??
உதவியாளர் முத்துவுக்கோ,,எம்.ஜி.ஆர் அறைக்குச் சென்று அவரை வற்புறுத்தும் துணிவு இல்லை??
அப்போது அலுவலகம் வருகிறார் திரு சோலை!!
அப்போது வந்து கொண்டிருந்த --அண்ணா--பத்திரிகை பொறுப்பாசிரியர்!!
அவரிடம் விபரம் சொல்கிறார் முத்து!
எம்.ஜி.ஆரின் அறைக்குள்,,சோலை நுழைய--எம்.ஜி.ஆரோ மும்முரமாக தொலைபேசியில் யாருடனோ பேசியபடி??
தயங்கியபடியே எம்.ஜி.ஆரை உணவுக்கு அழைத்த சோலையிடம் இப்படி பதில் சொல்கிறார் எம்.ஜி.ஆர்??
அப்போது எதிர்க்கட்சித் தலைவர் கருணா நிதி--
திருச்செந்தூர் முருகன் கோயிலில் களவு போன வேலுக்காக நீதி கேட்டு பாத யாத்திரை என்ற பம்மாத்து வேலையை தொடங்கியிருந்த நேரம்??-அதாவது
எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற வகையில்-
இத்தை செய்தாலாவது விளம்பரம் கிட்டுமா என்று
சொத்தை விஷயத்தில் விஷமத்தைக் கலந்த தருணம்??
சோலையிடம்,,எம்.ஜி.ஆர் விளக்குகிறார்?
பாத யாத்திரை சென்ற கருணா நிதிக்கு காலில் ரத்தம் வழிகிறதாம்?? மருத்துவர் குழுவை அனுப்பட்டுமா என்று,,அவரைப் பலவிதங்களில் முயற்சி செய்து தொடர்பு கொண்டு கேட்டேன்!! இல்லை,,என்னுடைய மருத்துவர் குழுவே போதும் என்று கூறிவிட்டார். அவரைப் பரிசோதித்துக் கொண்டிருக்கும் மருத்துவர்களிடம் இருந்து பதிலை எதிர் நோக்கிக் காத்திருக்கிறேன்??
மற்றவர்கள்,,பசி தாங்க மாட்டார்கள் என்று நான் தான் அவர்களை உண்ணச் சொல்லி விட்டேனே???
தமக்குக் கெட்ட பெயர் வாங்கித்தர,,தமக்கு எதிராக ஒருவர் செய்யும் போராட்டத்தில் கூட,,அவருக்கு துன்பம் ஏற்பட்டதுடன் துடித்துப் போன முதல்வரை நான் இது வரைக் கேள்வியுற்றதில்லை!! நீங்கள்???
அன்றைய சட்டமன்றக் கூட்டம் முடிந்த நிலையில் லிஃப்ட் மூலம் கருணா இறங்க வேண்டிக் காத்திருக்க--
எம்.ஜி.ஆரோ லிஃப்டில் ஏறி வந்தபடி??
அது சரி!! 1973 இல் இருந்து,,அவருக்கு இறங்கும் வேலையையும்,,எம்.ஜி.ஆருக்கு ஏறும் வேலையையும் தானே மக்கள் கொடுத்த வண்ணம் இருந்தார்கள்??
எம்.ஜி.ஆர்,,ஏறி வந்த லிஃப்ட் மேலே நிற்கவும்,,படிக்கட்டு மூலம் கருணா இறங்க முற்படவும் சரியாக இருக்கிறது??
ஓடிச் சென்ற எம்.ஜி.ஆர்,,கருணாவிடம்,,குடும்ப நலன் பற்றிப் பேசி--குறிப்பாக,,அவரது மகளின் மகப்பேறு பற்றி அறிந்து அவரை லிஃப்டிலேயே இறங்கும்படிச் செய்தாராம்???
எம்.ஜி.ஆரின் இந்த மாண்புக்கும்--
1985இல் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது,,எம்.ஜி.ஆரைப் பற்றி கருணா உதிர்த்த முத்துக்களுக்கும்--இடையில்-நம் நினைவில் வருவது--மலையும்--மடுவும் தான்?? உங்களுக்கு????....... Thanks...
பொன்மன செம்மல் புரட்சி தலைவர் எம்ஜிஆரின் பக்தர்கள் அணைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் .
எனது பெயர் வ.ராஜவேல். திருவண்ணாமலை மாவட்டம். சாணானந்தல் கிராமம்.
நான் ஒரு எம்ஜிஆர் பக்தன்.
எனது பாட்டனார் முதல் எனது தந்தை வரை புரட்சி தலைவர் மீது தீராது அன்பும் பக்தியும் கொண்டவர்கள். அந்த வழியில் வந்த மூன்றாம் தலைமுறையில் பிறந்தவன் நான்.
எனது தந்தைக்கு புரட்சி தலைவரின் துணைவியார் திருமதி ஜானகி அம்மையார் அவர்கள் தலைமையில் எங்கள் தாத்தா ஏற்பாட்டில் ராமவர தோட்டத்தில்தான் திருமணம் நடைபெற்றது.
எனது தாதா அவர்கள் எம்ஜிஆரின் ரசிகனகாக மட்டுமல்லாமல் பக்தியும் இருந்த காரணத்தால் ராமவர தோட்டத்தில் கிடையாய் கிடந்தார்.
எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அதிமுக திருமதி ஜானகி அம்மையாருக்குதான் சொந்தம் என்றுசொந்தம் கொண்டாடிய சமயத்தில் அம்மையார் கோஷ்டியில் இருந்தார்.
பிறகு 1989ஆம் ஆண்டு திருமதி ஜானகி எம்ஜிஆர் அவர்களை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எங்கள் கிராமத்திற்க்கு அழைத்து வந்து எம்ஜிஆர் நினைவாகவும் அவரது புகழை வளர்க்க எம்ஜிஆர் பெயர் பொறித்த பெயர் பலகையை அம்மையார் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
அந்த இடத்தில் கடந்த 30 ஆண்டுகாலமாக எம்ஜிஆர் பிறந்த நாள் விழா இறந்த நாள் அஞ்சலி மற்றும் அம்மையாரின் மறைவுக்கு பிறகு அவர்களின் இறந்த நாள் அஞ்சலி செலுத்தி வந்தோம்.
தற்போது என்ன பிரச்சனை என்றால்.
தற்போது எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் சிலர் அரசியல் ஆதாயத்திற்காக புரட்சி தலைவர் பெயர் பொறித்த பலகையை அகற்றிவிட்டு புதிதாக ஆளும் கட்சியினர் பெயர்களை பொறித்து வரும் 28 ம் தேதி அன்று திறப்பு விழா நடத்த உள்ளனர்.
திருமதி ஜானகி எம்ஜிஆர் அவர்கள் தலைமையில் திறந்து வைக்கப்பட்ட கல்வெட்டை அகற்றிவிட்டு அந்த இடத்தில் மற்றொரு கல்வெட்டை திறந்து வைக்க மாவட்ட அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அவர்களும் கல்வெட்டை திறந்து வைக்க வரவுள்ளனர்.
எனது ஆதங்கம் என்ன வென்றால் அதே இடத்தில் மீண்டும் புரட்சி தலைவர் மற்றும் ஜானகி அம்மையார் அவர்களின் பெயர் மட்டுமல்லாமல் புரட்சி தலைவரின் வெண்கல சிலை அமைக்க வேண்டும் என அந்த பெயர் பலகை நீக்கப்பட்ட நாளில் இருந்து ஒவ்வொரு நொடியும் என் மனம் குமுறி கொண்டு இருக்கிறது.
புரட்சிதலைவர் வெறும் அரசியல்வாதி மட்டும்மல்ல கொடுத்து கொடுத்து சிவந்த கரம் என்று நான்காம் தலைமுறைக்கு உணர்த்த கடைமைப்பட்டுள்ளேன்.
இதனை பற்றி சில கருத்துகள் மற்றும் உதவிகள் தேவைகப்படுகிறது ஐயா.
நன்றி.
எனது தொடர்பு எண். 9884165867
எம்ஜிஆர் புகழ் வாழ்க வளர்க...... Thanks...