https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...6e&oe=5ECE4522
Printable View
எங்கள் தங்க ராஜா- 1973.
நடிகர்திலகம் படங்களில் வெளி வந்ததிலேயே ,பொழுது போக்கு படங்களில் எனது பிடித்தங்களில் ஒன்று "எங்கள் தங்க ராஜா".அப்போதிருந்த அரசியல் சூழல்கள்,பாமர மக்களை அரவணைக்க படங்களில் நேரடி போதனைகள்,நாயகன் தன்னை அவர்களின் காவலனாக முன்னிறுத்துவது,love teasing ,செண்டிமெண்ட் ,விறுவிறுப்பு, சரியான விகிதத்தில் காதல்,சண்டை காட்சிகள்,நடிகர்திலகத்தின் மறக்க முடியாத வில்லன் பாத்திரங்களில் ஒன்றான பைரவனின் துடிப்பான ஸ்டைல் நடிப்பு ,என்று எல்லா அம்சங்களிலும் எல்லா தரப்பு ரசிகர்களையும் அரவணைத்து A ,B ,C அனைத்து சென்டர்களிலும் பிய்த்து கொண்டு ஓடிய மெகா வெற்றி படம்.
இப்போதைய சூழ்நிலையில் வெளியாகி இருந்தால், ராஜாவின் பைரவன் வேஷத்தை split personality என்று நிறுவி ,இந்த படத்திற்கு புதிய பரிமாணம் சேர்த்திருக்கலாம்.(அந்நியன் போல).புரிதல் இல்லாத அந்த காலத்தில் ,இருவரும் ஒருவரே என்பதோடு நிறுத்தி கொள்ள வேண்டி வந்தது.
ஒரு formula கதைதான். ஆனால் ஒரு புதுமையான வில்லன் பாத்திரம் ,படத்திற்கு ஒரு புத்தொளி பாய்ச்சியது.சீதா என்ற உழைத்து வாழும் ஏழை பெண் ,தன் நோயாளி விதவை தாய் ,மற்றும் ராஜா,ராமு என்ற தம்பிகளுடன் கஷ்ட ஜீவனம். ராஜா அமைதி.ராமு புயல் .வேதாசலம் என்பவன் சீதாவை கடத்தி,கெடுத்து ,கனகா விடுதி என்ற விபசார விடுதியில் சேர்த்து விடுகிறான்.அம்மா மரணமடைய,வேதாசலத்தை தொடரும் ராமு என்ன ஆனான் என்பது தெரியாமல் குடும்பம் சிதைய,ராஜா, தாதா என்ற இஸ்லாமிய குடும்ப நண்பரின் அரவணைப்பில் ,காமராஜ் நகர் என்ற வறிய குடியிருப்பில் இருந்து மருத்துவம் படிக்கிறான்.அந்த குடியிருப்பு மக்களின் அன்புக்கு பாத்திரம் ஆனவனாக திகழ்கிறான்.இந்த நிலையில்,பணக்கார பெண்ணான வசந்தி ,ராஜாவை கவர வம்பு செய்து,தன் காதலை வெளியிட ,ராஜா ஏற்க மறுக்கிறான்.படிப்பு முடிக்கும் ராஜா,தனக்கு வந்த அமெரிக்க வாய்ப்பை மறுத்து, காமராஜ் குடியிருப்பில் மருத்துவ மனை தொடங்கி ஏழைகளுக்கு பணி புரிகிறான்.இவனோடு கோபி என்ற நண்பன்,வசந்தி இணைகின்றனர்.ஒரு கட்டத்தில் வசந்தி,வேதாசலத்தின் பெண் என்றறிந்து,பழி நோக்கோடு ராஜா வசந்தியை காதலிக்க தொடங்குகிறான்.கோபி ஒரு நாள் ,பத்திரிகை பார்த்து விட்டு,பட்டாகத்தி பைரவன் என்ற ரௌடி,விடுதலை ஆனதுடன்,தன் போலிஸ் தந்தையால் கைது செய்ய பட்டதால் ,தன்னை பழி வாங்க வருவான் என்று நடுங்குகிறான்.இப்போது பைரவன் அறிமுகம். கோபியை மிரட்டி தன்னோடு இரவு பொழுதுகளை கழிக்க சொல்கிறான்.ஒரு பொழுது போக்கு விடுதியில் நடக்கும் சண்டையில்,பைரவனால் கவர பட்ட வேதாசலம்,பைரவனை தனக்கு வேலை பார்க்க சொல்கிறான்.அவனை வைத்து ,மோகன் லால் சேட் என்பவனை கொலை செய்ய,பைரவன் அதற்கு பிரதியாக கனகா விடுதியை கேட்டு வாங்கி,விடுதியிலுள்ளோரை விடுவித்து, பணம் கொடுத்து ஊருக்கோ அல்லது அங்கேயே வேலையோ கொடுக்கிறான்.சீதா ,கோபியின் தயவால் டாக்டர் ராஜாவிடம் உதவிக்கு சேருகிறாள்.வசந்தி தன் அப்பாவிடம் கோபித்து ,ராஜாவிடமே வந்து விட,கோபம் கொண்ட வேதாசலம் ராஜாவை கொலை செய்ய பைரவனை அனுப்புகிறான்.ராஜா இறந்து விட்டதாக அனைவரும் துக்க படுகிறார்கள்.பைரவன் ,ராஜாவை கொன்றதற்கு பிரதியாக ,வேதாசலம் மகளை கேட்க ,மறுக்கும் வேதாசலத்தின் முன் மகளை பலவந்தம் செய்ய முற்பட,சீதா வந்து தடுக்கிறாள்.போலிஸ் வந்து விட, மோகன் லால் சேட் உயிரோடு இருப்பதை நிருபித்து,தானே பைரவனாக நடித்த ராஜா என்ற உண்மையை வெளியிட,வேதாசலம் சிறைக்கு செல்லுமுன் ராமு தன்னால் இறந்த உண்மையை வெளியிடுகிறான். ராஜா-வசந்தி திருமணம்.சுபம்.
இந்த படத்தில் மிக மிக highlight என்று சொல்லத்தக்க அம்சங்கள்.(பைரவனை தவிர. அவரை பின்னால் கவனிப்போம்)
ஹீராலால் மாஸ்டர் நடன காட்சிகள் choreography .உத்தம புத்திரன் விக்கிரத்திற்கு யாரடி போல,பைரவனுக்கு முத்தங்கள் நூறு.அதே ஹீராலால்.
ஏ.டீ .வெங்கடேசன் ,நிறைய பிடிகள், டைவ் நிறைந்த சுறுசுறுப்பான சண்டை காட்சிகள்.பெரும்பாலும் டூப் இன்றி நடிகர்திலகமே ரிஸ்க் எடுத்து பண்ணியிருப்பார்.
உடையமைப்பு(கொஞ்சம் பெல் பாட்டம் கீழிறக்கி இருக்கலாம்), மேக் அப் ,சிகையலங்காரம் எல்லாமே தூள் கிளப்பும்..
வீடு செட், ஒரு விலையுயர்ந்த கார் ,மாடியில் படுக்கையறை வரை நுழையும்.
அழகான,ஒல்லியான,இளமையான மஞ்சுளா, திராவிட மன்மதனுக்கு ஏற்ற இணை.
வீ.பீ.ராஜேந்திர பிரசாத் -பால முருகன் இணைவு படத்தை நன்கு நிறுத்தும்.
கே.வீ .மகாதேவன்,தன்னால் action படத்துக்கும் வித்யாசமான இசை தர முடியும் என்று நிரூபித்தார்.நிறைய மௌனம்,விசில் ஒலி ,குறைந்த வாத்தியங்களுடன் அற்புதமான மூட் கொடுக்கும் பின்னணி இசை.நல்ல பாடல்கள்.
கண்ணதாசனின் திறமைக்கு ,scope கொடுத்த கற்பாம்,மானமாம்.
சுசீலாவையே ,சாமியிலும், முத்தங்கள் நூறு பாடல்களை பாட வைத்து, அவரிடம் இருந்த ராட்ஷச திறமைகளையும் வெளி கொண்டு வந்தனர்.
முதல் முறையாக (பராசக்தி நாட்களுக்கு பிறகு), அரசியல்,சமூகம் என்று நேரடியாக இறங்கிய சிவாஜி படம்.
சரியான அளவில் கதை,செண்டிமெண்ட்,love tease ,love ,விறுவிறுப்பு என்று அழகான mixing .படம் போவது தெரியாது.
எடிட்டிங் ,காமெரா ,திரைக்கதை எல்லாமே அருமை. இந்த மாதிரி Genre படத்துக்கு ஏற்ற வகையில்.
இனி நடிகர்திலகம்.
அமைதியான ராஜாவாக , அரைக்கை சட்டை(பெரும் பாலும் வெள்ளை,நீலம் என்ற sober நிறங்கள்.ஒரே ஒரு காட்சி பிரவுன் செக் சட்டை)இன் பண்ணாமல்(Some scenes in-shirted) ,படிய வாரிய தலையுடன் , சிறிதே பெண்மை கலந்த அமைதி நடை.எனக்கு ஆச்சரியம் தந்தது கல்யாண ஆசை வந்த,இரவுக்கும் பகலுக்கும் பாடல்களில் பாத்திரத்தை ஒட்டிய mannerism மற்றும் நடன அசைவுகள்.சிவாஜியும் ஒவ்வொரு காதல் காட்சிகளும் வித்தியாச பட்டு தெரிய இந்த பாத்திரத்தை ஒட்டிய ரசவாத நடிப்பே காரணம்.கல்யாண ஆசை வந்த பாடலில் ஸ்கார்ப் வைத்து கொடுக்கும் ஆரம்ப போஸ் (மஞ்சுளாவுடன்)அழகான ஸ்டில்.( கல்யாண ஆசை வந்த பாட்டின் இறுதியில் மஞ்சுளாவை தொப்பென போட்டு விடுவார். உன்னை நடிப்புக்காக,பழிக்காகவே காதலிக்கிறேன் ரீதியில்.)ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ,புடவை வழியே தெரியும் side shot அவ்வளவு அழகு. மஞ்சுளாவும் குட்டை கை fluffy blouse ,அழகிய புடவைகளில் ஜொலிப்பார்.(என்ன கலர்ஸ்!!!).தான் வாழ்ந்த காலத்திலேயே சிலையாகும் பாக்கியம் வேறு.(கோடியில் ஒருவன் பிறந்து வந்தான்)
பைரவன் பாத்திரம் , உத்தம புத்திரன் விக்ரம்,நவராத்திரி D.S .P கலந்த ஒன்று. அவ்வளவு அழகு.துருதுரு. இளமை.ஸ்டைல்.rogue looks .தலைவர் நடிப்பில் மட்டுமல்ல. உருவத்திலும் உயரமாக தெரிவார் பைரவன் பாத்திரத்தில்.
வித விதமான jacket ,suit ,கூலிங் கிளாஸ் ,tanned make up ,அலட்சிய ஹேர் ஸ்டைல் என்று குதூகலிக்க வைப்பார்.
படத்தை high voltage energy , வேகம், ஸ்டைல், பேச்சு முறை,unpredictable acting என்று அதகளம்.
சூயிங் கம் மென்று கொண்டு, கூலிங் கிளாஸ்,fawn கலர் jacket உடன் அவர் பைக்கில் வரும் ஆரம்ப காட்சியே களை கட்டி விடும்.(அப்படியே உலுக்கி போடும் ரசிகர்களை).
தொடர்ந்த விடுதி காட்சி(Black&Orange Combination). வலது கையால் சிகரெட்டை அலட்சியத்துடன் ஒதுக்கி ,ஒரு நக்கல் சவால் சிரிப்பு. வம்புடன் ஒரு நல்ல சண்டை காட்சி(என்ன ஒரு சுறுசுறுப்பு ,swiftness &Style ).ராணி என்ற சகுந்தலாவை ஒரு பின் தட்டு. முத்தங்கள் நூறு பாடலில் ,இவரின் ஸ்டைல்,action ,நடன முறை பார்ப்பவர்கள் ,ரஜினி தான் நடித்த அத்தனை படங்களிலும் எதை பின் பற்றியுள்ளார் என்பது விளங்கும்.(ஆனால் சிவாஜி இந்த ஸ்டைல் ஒரு படத்துடன் விட்டு விட்டார்)
முக்கியமாக ஆளை அளந்து ,அவர் ஆட்டம் அளந்து வரிகளில் ,ஒரு தாவு தாவி படுக்கையில் விழுவது, கையை வேகமாக இயக்கி நடக்கும் சுறு சுறு நடை. stiff ஆன நடன அசைவுகள். (முக்கியமாக ரஜினி ரசிகர்கள் பார்த்தே ஆக வேண்டும் இந்த பாடலை).
மஞ்சுளாவை ,மனோகர் எதிரிலேயே பண்ணும் அத களம்.படுக்கையில் விழுந்து வேதாசலம் ,இதெல்லாம் உனக்கு தெரியாதுடா, இதெல்லாம் ஜாலி என்று சொல்லும் coolness .
கற்பாம் ,மானமாம் பாட்டில் ஒரு rugged ,cynical ,expressive ,explicit Actions .
போலிஸ் (ஆரஞ்ச் சட்டை,சிறிதே dark pant ) உடன் அடாவடி அடிக்கும் காட்சி அவ்வளவு ஜாலி. நடிகர்திலகம் காட்சியை தன்னை சுற்றி வளைத்து ,தன் மேலே கவனம் குவித்து ,ஆச்சர்யம் தரும் surprise கொடுப்பது ,இந்த சராசரி காட்சிக்கு கிடைக்கும் வரவேற்பே ஆதாரம்.
Grey colour striped with black collar வைத்த அந்த சூட்(மோகன் லால் சேட் கொலை காட்சி,இறுதி வேதாசலம் சம்பந்த பட்ட மீன் தொட்டி காட்சி) ,திராவிட மன்மதனுக்கு ,அப்படி ஒரு rugged manly energetic electrifying looks உடன் கூடிய மிளிரும் அழகை தரும்.(இந்த ஆண்மை நிறை அழகின் பக்கம் யாரும் நெருங்கவே முடியாது). உன் பொண்ணு வேணும் என்று கூலாக கேட்டு ,கல்யாணம் பண்ணிக்க இல்லை, ரெண்டு மூணு நாளைக்கு சும்மா ஜாலியாய், என்று மனோகரின் B .P எகிற வைத்து,நீயா கொடுக்கலை ,பிறகு என்று கழுத்தில் கோடு போட்டு,கைகளை கிராஸ் பண்ணி அவர் துள்ளல் நடை ரசிகர்களை குதிக்க வைக்கும். இறுதி காட்சியில் வரம்பு மீறாத கற்பழிப்பு முயற்சி ,இவரின் நடிப்பு நாகரிகத்தின் உதாரணம்.
எங்கள் தங்க ராஜா மாதிரி படங்களே, பாமர மக்களிடம் சிவாஜிக்கு நடிகர் என்ற முறையில் அளவில்லா செல்வாக்கை ஏற்படுத்தியது.பைரவன் மாதிரி பாத்திரங்களே ,சிவாஜியால் மட்டுமே முடிந்த வகை நடிப்பு திறமை,versatality முதலிவற்றுக்கு கட்டியம் கூறி, அறிவு தேர்ச்சி கொண்டவர்கள்,நடுதரப்பினர்,பாமரர் அனைவருடனும் ,மன இணைப்பை ஏற்படுத்தியது.
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...8e&oe=5ECAB22B
Thanks ..Gopalakrishnan Sundararaman
அறக்கட்டளை--'-----
நான் சரிவர படிக்காதவன்.உயர் நிலை பள்ளி வாசலை மிதித்ததில்லை.படிப்பின் அருமையை பலமுறை உணர்ந்து இருக்கிறேன்.இருந்தும் என்ன பயன் ?வெளி இடங்களில் சக மனிதர்களோ டு சகஜமாக பழக விருப்பபடுவேன்.ஆனால் முடியாது எங்களுக்குள் மொழி உடைக்க முடியாத படி சுவர் எழுப்பி இருக்கும்.இதை அதிகம் அனுபவித்தது வெளி நாடுகளுக்கு நான் சென்ற போது தான் 'ஸ்கீரீன்'ஆங்கில ஏடு எடுத்த விழாவில் சிவாஜி பேசியது
தான் படிப்பில்லாமல்தவித்ததை போல் பிறரும் குறிப்பாக திரை உலகை நம்பி ஜீவனம் நடத்தும் நலிந்த கலைஞர்களின் பிள்ளைகள் தவிக்க கூடாது என்பதற்காக செவாலியே சிவாஜி கணேசன் அறக்கட்டளை தொடங்கப்பட்டது.செவாலியே விருது கிடைத்ததை ஒட்டி எடுத்த விழாவுக்காக வசூலான தொகையில் ரூ பாய் 10லட்சம் மீந்ததை வைத்து இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டு உதவி செய்யப்பட்டுகிறது.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...2c&oe=5ECDBE45
Thanks ..Vijaya Raj Kumar
'வாழ நினைத்தால் வாழலாம் - வழியா இல்லை பூமியில் -ஆழக் கடலும் சோலை யாக ஆசை இருந்தால் நீந்தி வா'
நாளை 28/04/2020 இரவு 09.30 p.m. மணிக்கு சன் தொலைக் காட்சியில் - மிக குறுகிய காலத்தில், நடிகர்திலகம் மூன்று வேடங்களில் நடித்த. !!!
"பலே பாண்டியா" வெற்றி/சிறப்பு படத்தை கண்டு களியுங்கள். !!!
இதில் சிவாஜி கணேசன், தேவிகா, எம்.ஆர்.ராதா, பாலாஜி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...2d&oe=5ECC6E2C
நாளை 28/04/2020 - காலை 10.00 மணிக்கு ராஜ் டிஜிட்டல் பிளஸ் இல்
நடிகர்திலகம் நடித்த - முரடன் முத்து - படத்தைகாண தவறாதீர்கள். ¶
நடிகர்திலகம், தேவிகா, நாகேஷ், மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...14&oe=5ECE4980
பொண்மனத்தாரின் நிஜமுகம் (3)
MGR கால்ல விழச் சொன்னாங்க. நான் விழாததால.." Actor Mohan Sharma Emotional | MGR | Sivaji
https://youtu.be/LDvzJcQgR70
பொண்மனத்தாரின் நிஜமுகம் (4)
எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட மோதல் Chai With Chithra | S.A.Chandrasekhar | Part 1 | Exclusive Interview
எம்.ஜி.ஆர் ஆரம்பித்த அடிமை கலாச்சாரம் தான் இன்று வரை தொடர்கிறது
https://youtu.be/hmgt0M_I3xE
24.20ல் இருந்து கவனித்துப் பாருங்கள் மறுநாள் கார் வரவில்லை என்பதுடன் அவர் சொன்னஅது விடயத்தின் தொடர்ச்சி கட்பண்ணப்பட்டு
வேறு விடயம் தொடர்கிறது,
இக்காணொளி முதலில் வெளியிடப்பட்டடிருந்தபொழுது திரு சந்திரசேகரன் அவர்கள் சொன்ன மிகுதிவிடயமான கார் வரவில்லை படப்பிடிப்பிற்கு செல்லவேண்டும் என்னை வந்து படப்பிடிப்பிற்கு ஏற்றி செல்லும் கார் வராத காரணத்தால் ரெலிபோனில் தொடர்பு கொண்டபொழுது விடயம் தெரியவந்தது.முதல்நாள் எம் ஜி ஆரிடம் ஒன்ஸ்மோர் கேட்டதன் பலாபலன் .உதவி டைரக்*ஷன் பொறுப்பிலிருந்து நிறுத்தப்பட்டேன்.
இக்காணொளி முதலில் வெளியிடப்பட்டடிருந்தபொழுது திரு சந்திரசேகரன் அவர்கள் சொன்ன மிகுதிவிடயங்கள் பொண்மனத்தாரின் கைகூலிகளின் கைங்கரியத்தால் இனிதே வெட்டப்பட்டது,
இதுதான் எம் ஜி ஆரின் பொண்மனம் , தெரிந்தது கையளவ தெரியாதது கடலளவு,
'சிந்தனை செய் மனமே...செய்தால் தீவினை அகன்றிடுமே...சிவகாமி மகனை ஷண்முகனை...சிந்தனை செய் மனமே...செய்தால் தீவினை அகன்றிடுமே.'
நாளை 28/04/2020 'ZEE திரை' டிவி.யில் காலை 09.00 a.m. மணிக்கு நடிகர் திலகம் நடித்த காதல் காவிய படம் 'அம்பிகாபதி' காண தவறாதீர்கள்.¶
இந்த படத்தில் சிவாஜி, பானுமதி, நம்பியார் மற்றும் பலரும் நடித்துள்ளனர்
ஆமாம் தன் அனுமதி இன்றி யாரும் செயல்படக்கூடாது என்ற பொண்மனம்.Quote:
ஷியாம் சுந்தர், சிவாஜி நடித்த
'சிவந்த மண், தியாகம் படங்களிலும்
பணி புரிந்திருக்கிறார் எம்.ஜி.ஆரின்
அனுமதி பெற்றே.
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா..கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா..ஏற்றிய தீபத்திலே கிருஷ்ணா கிருஷ்ணா...
ஏழைகள் மனதை வைத்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா....
நாளை 28/04/2020 - காலை 11.00 மணிக்கு சன் லைப் டி.வி. யில்
நடிகர்திலகம் மூன்று வேடங்களில் நடித்த - "தெய்வ மகன்" - மெகா படத்தை காண தவறாதீர்கள். ¶
நடிகர்திலகம், ஜெய லலிதா, மேஜர் சுந்தராஜன், மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
தேங்காய் ஸ்ரீனிவாசனின் நாடகத்தை நடிகர் திலகம் சிவாஜி பார்த்தார் அதில் ஸ்ரீநிவாசன் அற்புதமாக நடித்திருப்பதாக பாராட்டினார் அந்த நாடகத்தை சினிமாவாக தயாரிக்கும் போது அதில் ஸ்ரீநிவாசன் வேடத்தில் சிவாஜி நடிக்க வேண்டுமென்று கோரிக்கை வந்த போது ஸ்ரீநிவாசன் அருமையாக நடிக்கிறார் அவரையே சினிமாவிலும் நடிக்கட்டும் என்று பெருந்தன்மையாக மறுத்து விட்டார் அதுதான் எங்கள் சிவாஜி . நாடகத்தின் பெயர் கிருஷ்ணன் வந்தான்
Thanks .. Srimanth Govindan
தேங்காய் அழுகும் போது,அவர் தூற்றியதையும் மறந்து மன்னித்து 11 படங்களில் உடன் நடிக்க வாய்ப்பு தந்த வள்ளல் சிவாஜி. இன்னா செய்தாரை மன்னித்து நன்னயம் செய்த நல்லவர் சிவாஜி.இ.இராமலிங்கம், திண்டுக்கல்.
கிருஷ்ணன் வந்தானில் மகான் சிவாஜிகணேசன் அவர்கள் சம்பளம் இல்லாமல் தேங்காய் சீனிவாசன் அவர்களுக்காக செய்து கொடுத்தார்
நன்றி : முகம்மது தமீம்
இந்தி நடிகர் மெஹ்மூத் கூறினார்: "நான் ரஷ்யா சுற்றுப்பயணம் சென்ற போது அங்குள்ள திரைப் பட படக் கல்லூரிக்கு சென்றேன் !!!
அங்குள்ள பிரதான ஆட...ிட்டோரியத்தில் இரண்டு நடிகர்களின் பெரிய படங்கள் மாட்டப்பட்டிருந்தன. அதன் கீழே 'முகத்தில் 14 பாவங்களையும் காட்டக் கூடிய உலகின் இரு நடிகர்கள்' என்று ரஷ்ய மொழியிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது !!!
ஒருவர் ரஷ்ய நடிகர். இன்னொருவர் யார் என்று பார்த்த போது சந்தோஷ அதிர்ச்சியில் உறைந்து போனேன். அது நம் தென்னிந்திய நடிகர் திரு சிவாஜி கணேசன் !!!
அதைப் பார்த்தது முதல் அங்கிருந்தவர்களிடம் "நான் இவருடைய நாட்டிலிருந்துதான் வந்திருக்கிறேன்" என்று பெருமையுடன் கூறிக்கொண்டேன்".
தமிழுலகமே பெருமை கொள்ளும் விஷயம் !!!
நன்றி Jeyavelu Kandaswami ( nadigarthilagam sivaji visirikal)
Kalthoon 75 th day
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...d3&oe=5ECB3B9F
சிவாஜிக்கு பத்மஸ்ரீ விருது மத்திய அரசு வழங்கியபபோது கல்கன்டுஆசிரியர் தமிழ்வாணன் எழுதிய சிறப்பு கட்டுரையில் சிவாஜி தன்னுடைய நாடகங்களின் மூலம் கிடைக்கும் வருவாயை தான் எடுத்துக் கொள்ளாமல் தன்னுடன் பணிபுரிந்த 50பேர்களின் குடும்பங்களுக்கு வாழ்வளிக்கஉதவுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்
மற்ற நடிகர்களின் நாடகங்களை விட சிவாஜி நாடகங்களுக்கு மக்களிடம் தனிச் சிறப்பு கிடைத்தது பராசக்தி 'வீரபாண்டிய கட்டபொம்மன் 'வியட்நாம் வீடு 'தங்கப்பதக்கம் போன்றவை நாடகமாக்கப்பட்டு மாபெரும் வெற்றி அடைந்து பின்னர் சிவாஜி நடிப்பில் திரைப்படமாக்கப்பட்டு அவையும் சூப்பர் ஹிட்டானது.அதன் பிறகும் நாடகமாக நடத்தப்பட்டு நிதி வசூலித்து கொடுத்தன
இத்தகைய சிறப்பு இந்தியாவிலேயே சிவாஜிக்கு மாத்திரமே உண்டு
உயர்ந்த மனிதன்- 1968 தெய்வத்தின் 125 ஆவது சித்திரம்.
சிலருக்கு மட்டும் வாழ்க்கை வச படுவதில்லை. ஆணாக(பணக்கார??) பிறந்தாலும் ,பலன் பூரணமாய் அனுபவிக்க படுவதில்லை.சூழ்நிலை கைதி -அதுவும் ராஜலிங்கம் போல் எல்லோருக்கும் நல்லவனாக வாழ விரும்பும் உயர்ந்த மனிதனுக்கு....
எல்லோருக்கும் எதிர்காலம் குறித்து குழப்பம் உண்டு.நிகழ் காலம் குறித்து அதிருப்தி உண்டு. ஆனால் ராஜுவுக்கோ எதிர்காலம் சூன்யம்.நிகழ்காலம் தண்டனை.கடந்த காலமோ குழப்பம். அவன் அறிவு,விருப்பம் எதுவும் பயன் படாமல் அவன் நாட்கள்.... பாரம்பரியம்,கெளரவம்,மனசாட்சி எல்லாவற்றையும் கேள்வி குறியாக்கி கேலி செய்கிறது.அவன் சுதந்திரம் பெற்ற மனிதனாக வாழவே இல்லை.
பார் மகளே பார் படத்தில் NT கதாபாத்திரம்தான் உயர்ந்த மனிதனில் NT தந்தை பாத்திரம் -சங்கரலிங்கம்.தன் அந்தஸ்துக்கு குறைந்த எதுவுமே துச்சம்.அடுத்தவர் சுதந்திரத்தை பிடுங்கி (மகன் ஆனாலும்) அடிமை படுத்தும் சுயநல மூர்க்கன்.எல்லாவற்றையும் வாய் மூடி மௌனியாய் சகித்து வாழும் ராஜு தான் விரும்பிய ஏழை பெண்ணை மணந்து சில காலம் வாழ்கிறான். ஆனால் கண்ணெதிரே தந்தையால் அவள் எரிக்க பட்டு, ஒரே மாதத்துக்குள் மருமணம் புரிய நிர்பந்திக்க பட்டு, ஒட்டாமல் அமைதி வாழ்க்கை வாழும் அவன் வாழ்க்கையில், சத்யா என்ற அநாதை ஒருவன் வேலையாளாய் நுழைந்து ,அன்பிற்கு பாத்திரமாகி,சோதனை கடந்து ,இறுதியில் சத்யா தன் மகனே என்ற உண்மை தெரிந்து சுபம்.
உருவம்,உள்ளடக்கம் எதிலும் சோதனை முயற்சி செய்யாமல் , சில பாத்திர வார்ப்புகள்,சில பாத்திர திரிபுகள், நேர்மையான ஆற்றோட்டமாய் திரைகதை. அற்புதமான வசனங்கள். மிக மிக நேர்த்தியான நடிப்பு, இவற்றை வைத்து அற்புதமான படத்தை கொடுத்தனர் கிருஷ்ணன்-பஞ்சு,மற்றும் ஏ.வீ.எம்.(உபயம்-உதர் புருஷ்-பெங்காலி)
காட்டாற்று வெள்ளமாய் ஓடிய சிவாஜியின் 68 ஆம் வருடத்திய நடிப்பில் அணை போட்டு வரம்பில் நிறுத்திய இரு படங்கள் தில்லானாவும்,உயர்ந்த மனிதனும்தான். இதில் அவர் பங்கு தில்லானாவை விட காம்ப்ளெக்ஸ் ஆனது. அவர் விரும்பாத பாத்திரம்.(விரும்பியது டாக்டர் பாத்திரம்).வேறு எந்த படத்திலாவது அவர் பாத்திரம் படத்திலேயே இந்த அளவு சுய விமரிசனத்திற்கும் ,பிறர்(முக்கியமாய் நெருங்கிய நண்பன்) விமர்சனத்திற்கும் ஆளாகி இருக்குமா என்பது சந்தேகம்.
கோழை,சில உயர்ந்த மனிதர்கள்,சூன்யமாய் பொய் வாழ்க்கை, சுமைதாங்கி,தியாகி,தனது சுய துக்கம் சுகம் நினையாத பொதிமாடு,என்று சுயமாகவும்,
கோழை,சுயநலக்காரன்,அப்பனை சமாளிக்க முடியாதவன்,தன்னை நம்பியவர்களை காப்பாற்ற முடியாதவன்,என்று டாக்டரும்,
ஜென்டில்மன்,பொய்யன்,காட்டுமிராண்டி என்று மனைவியும்,
உதட்டில் ஒன்று உள்ளத்தில் ஒன்று என்று சுந்தரம் மகள் கவுரியாலும்
விமரிசிக்க படும் இந்த ராஜு யார்?
சுருக்கமாக சொன்னால் ,தன சுயத்தை இழந்து வாழ்பவன். அதனால்,பிறரால்,அவரவர் சௌகரியத்திற்கு விமரிசிக்க படுபவன். இப்போது புரிந்திற்குமே சிங்கத்திற்கு சற்றே தீனி கிடைத்திருக்கும் என்று?
உ.ம வை வித்தியாசமான படமாக்குவது டாக்டர் பாத்திரம். நண்பன் என்றாலே,பின்னால் விரோதியாக போகும் இந்நாள் alter -ego என்ற சம்பிரதாயத்தை முறியடித்து, ஒரு தாட்சண்யம் இல்லாத மனசாட்சி,இங்கிதமற்ற இரக்கமற்ற உறுத்தி கொண்டே இருக்கும் அனுகூல சத்ரு, சங்கீதத்தில் கவுன்ட்டர்-பாயிண்ட் என்று சொல்லும் படியான அபஸ்வர இசைவு . தனக்கு சொந்தமில்லாத பொருளை ,விட்டு கொடுத்து விட்ட பாவனையில்,தானும் அந்த அசம்பாவித சம்பவத்தில் கூட இருந்தும் தன்னாலும் தான் ஆசை பட்டவளை காப்பாற்ற முடியாத உண்மையை வசதியாக மறந்து,கல்யாணமும் செய்து கொள்ளாமல் எல்லா சந்தர்பங்களிலும் ராஜுவை இடித்து கொண்டே இருக்கும் ஒரு பாத்திரம்.ஆனால் மக்களின் மனதில் ராஜுவை விட அதிக இடம் பிடிக்கும் வாய்ப்பு. ராஜு அபார சுய இரக்கம்,சுய வெறுப்புக்கு ஆளாகி ஒருவித துறவு நிலை குற்ற உணர்வுடன் இந்த சித்ரவதை நண்பனை விரும்பி ஏற்கும் மேசொகிஸ்ட்(Masochist) ஆன மனநிலையை வெளிபடுத்துவான் நட்பின் உயர்வை காட்ட ஒரு காட்சியும் வலிந்து இருக்காது.
இதன் protoganist ஆக வந்த நடிப்பு கடவுளின் படம் நெடுக மிளிரும் நடிப்பை விவரிக்க இந்த பகுதி சமர்ப்பணம்.
இந்த படத்தின் அழகே,அவர் வசனம் பேசும் காட்சிகளை விட reaction காட்டும் காட்சிகள் அதிகம். சிவாஜியின் மேதைமை ஜொலிக்கும்.
முதல் காட்சியிலேயே அந்தந்த பத்திர வார்ப்புகள் சித்திரிக்க படும்.நாடகத்தனம் கொஞ்சம் இருந்தாலும் சிவாஜியின் magic அதனை சமன் செய்யும்.
ரொம்ப uneasy restraint என்று சொல்லப்படும் பாணியில் தந்தை எதிரே நடப்பதில் ஒட்டாமல், நடப்பதை மனதளவில் அங்கீகரிக்காமல் ஆனால் எந்த வெளிப்படையான எதிர்ப்பும் காட்டாமல் கடந்து செல்வார். தனது சம நண்பன் கோபாலுடன் சமமில்லாத பால்ய நண்பன் சுந்தரத்திற்கு நேர்ந்த ஒரு அநீதியை கூட ஒட்டாமல் துறவு நிலையாய் விளக்குவார். பிறகு சிறிது குற்ற உணர்வு உறுத்த நான் உன்னை சம நிலையில் அங்கீகரிக்கிறேன் என்ற தேற்றலோடு, சிகரெட் கொடுத்து சமாளிப்பார். அனால் ராஜு ,கோபால்,சுந்தரம் உடன் பழகும் விதம் சமூக நிர்பந்த நியதிற்குட்பட்டே (சமம், சமமின்மை )இருக்கும்.பின்னால் ராஜுவின் எந்த act of commission ,omission எல்லாவற்றுக்கும் இந்த ஒரு காட்சியே நம் மனநிலையை தயார் செய்து விடும்.
கதையின் நாயகி,பார்வதியிடம் பழகும் போது inhibition துறந்து உரக்க பேசுவார்,நையாண்டி செய்வார்,இயல்பை மீறி நடப்பார்.பார்வதி அந்தஸ்தில் குறைந்திருப்பதும்,சுந்தரத்திற்கு கொடுக்க இயலாத முக்கியத்துவத்தை இந்த உறவிற்கு கொடுக்க முடிவதும், ஒரு அசட்டு தைரியத்தையும் அவருக்கு அளிக்கும்.(தந்தையை மீறியும் ,சமாளிக்கலாம் என்று) ஒரு liberated மனநிலையில் இருப்பார். இந்த மனநிலை பின்னால் ஒரே ஒரு காட்சியில் வெளிப்படும்.அதை பிறகு பார்க்கலாம்.
ஆனால் மனைவி எரிபடும் காட்சியில், ஒரு ஊமை புலம்பலோடு,ஒரு குழந்தையின் இயலாமை கதறலோடு முடிப்பார். பிறகு தந்தை தன்னை மறுமணத்திற்கு ,துப்பாக்கியை வைத்து தற்கொலை மிரட்டலோடு ,மன்றாடும் போது, கோபம்,அதிர்ச்சி,இயலாமை,சுய-வெறுப்பு,விரக்தி அத்தனையையும் ஒரு பத்து நொடி close -up ஷாட்டில் காட்டி விடுவார்.(சிவாஜிக்கு இது புதிதல்ல).அரை மனதோடு சம்மதிக்கும் காட்சியில் அடுத்த பத்தொன்பது வருட வாழ்கை சித்திரம் நமக்கு கோடி காட்ட பட்டு விடும்.
வயதான பிறகு,வரும் காட்சிகளின் அழகு மனைவி விமலாவுடன் பாந்தமான ,இதமான ஆனால் ஒட்டாத ஒரு உறவு.(விமலாவின் இயல்பே அதற்கு ஒரு காரணம் என்றாலும்). நண்பன் கோபாலுடன் வரும் அனைத்து காட்சிகளிலும்,இதமோ,இங்கிதமோ இல்லாத கோபாலின் பேச்சுகளுக்கு, ஒரு தந்தை,ஒரு ரெண்டுங்கெட்டான் நண்பன்,குத்தும் தன மனசாட்சி மூன்று நிலையிலும் கோபாலை வரித்து ,மிக அழகாக கையாள்வார்.அவருக்கு ஒருவேளை உறுத்தல் குறைய ,ஈகோவை கோட் ஸ்டாண்டில் மாட்ட,தந்தையின் இழப்பை சரி செய்ய , இந்த நண்பன் அவசிய தேவை போலும்!
கோபாலுடன் நண்பன் என்ற உரிமையில் பேசும் கணங்கள்,கோபாலின் உடல்நிலை சம்பந்தமான இடங்கள்.கோபால் நிதானம் தவறும் இடங்கள்.குழந்தையை போல் நடத்துவார். இந்த இடங்களை கையாள இனி ஒரு நடிகன் பிறப்பது இயலாது.(பாத்திரத்தை அதன் குணாதிசயம்,கதையியல்பு,மனோதத்துவ பின்னணியில் புரிந்து,அதை நேர்த்தியுடன் செயல் படுத்தும் நடிப்பு வெளிப்பாடு.)
சோர்ந்து இருக்கும் போது ,உடல் கோளாறு என்று டாக்டரை கூப்பிடும் இடத்தில், விமலா,கோபால் இருவருக்குமான இடம் ,ராஜுவின் உடல் மொழியில்,பொய் அனுசரணையுடன் பிசைதலுக்கு இசையும் காட்சியில் ஒரு revelation போல பரவச படுத்தும்.
NT யின் நடிப்பு பரிமாணங்களை அலசும் போது ,இந்த படத்தில் மறக்க முடியாத இன்னொரு புது பரிமாணம், சத்யாவுடன் அவருக்கு develop ஆகும் உறவு. பல படங்களில் இந்த மாதிரி உறவுகள் வரும் போது pre -Emptive & Prevailing mood பாணியிலோ அல்லது விரோத அடிப்படையிலோ தான் பிளாட் development premise ஆக இருக்கும். இந்த படத்திலோ முற்றும் புது பரிமாணம். அதை சிவாஜி ஆண்டிருக்கும் விதம் ஒரு தனி சுவை. ஒரு வெகுளி தனமான ,rawness கொண்ட படிப்பறிவில்லா ஒரு பையன் மேல் ஒரு soft -corner என்பதற்கு மேல் செல்ல மாட்டார். முதல் முறை பார்க்கும் போது சாதா அறிமுகம், டாக்டர் சிபாரிசில் வேலை என்பதுடன் , மற்ற படி எந்த ஒரு கவனிப்பும் காட்ட மாட்டார். சத்யன் ஆங்கிலம் தெரியாமல் ,விமலாவுடன் மாட்டி கொண்டு முழிக்கும் காட்சியில் ஆகட்டும், பிறகு சம்பளத்தை கொடுத்து ஆசிர்வாதம் வழங்கும் காட்சியில் ஆகட்டும்(முதலில் அம்மாவிடம் என்பார்) ,ஒரு செல்லமான தோரணையில் ஒரு நல்ல ரெண்டுங்கெட்டான் வேலைகார பையன் என்ற அளவிலேயே நிற்கும். அம்மா படத்திற்கு நேர்ந்த அவமானத்தை சகிக்காமல்,சத்யம் விலக விரும்பும் காட்சியில் கூட டாக்டரிடம் ,முதல்லே அவனுக்கு புத்தி சொல்லு என்று பொறுப்பை டாக்டரிடம் கொடுப்பார். டாக்டர் குடித்து விட்டு நிதானம் இழக்கும் காட்சியிலும் ,வேலையாளாகவே நடத்தி வெளியேற சொல்வார். ஆனால் டாக்டரின் மரணத்திற்கு பிறகான வெற்றிடத்தில்,சத்யனின் பிரத்யேக அக்கறை தன்மையிலும்,retire ஆன மாணிக்கம் என்ற முதிய வேலையாளின் வேண்டுகோள் படியும் துளி அக்கறையும் , நெருக்கமும் கூடும் வெகு இயல்பாக. அந்த சாப்பிடும் காட்சி ஒரு கவிதை. பிறகு கூட மனைவியின் தலையீட்டில் சத்யன் பாதிக்க படும் போது ஓவர்-ரியாக்ட் செய்யாமலே அன்பை விளக்குவார்.
விமலாவுடன் வரும் வெடிக்கும் காட்சியில்(வசனப்படியே கட்டுபடுத்தி வைத்திருந்த எரிமலை) கொஞ்சம் ஏமாற்றம்.வழக்கமான NT பாணி முத்திரைகளுடன் கூடிய சாதாரண சீற்றமாய் வெளிப்படும். அந்த காட்சியில் நான் எதிர்பார்த்த நடிப்பு, நெருப்பில் தன மனைவியை காப்பாற்ற தவறி ,பொய் வாழ்கை வாழும் ஒருவனின் ,inhibition துறந்த சீற்றம்.Incoherent ஆய் துவங்கி,கோபமாய் வெடித்து,நிலை உணர்ந்து படி படியாய் அடங்க வேண்டிய காட்சி. ஆனால் follow thru காட்சியில் நடிப்பு தெய்வம் நிலைமையை சீர் செய்யும். கோபம் சிறிதே அடங்கி,சோபாவில் கால் போட்டிருக்கும் போது ,சமாதானமாய் shoe அவிழ்க்க வரும் வரும் மனைவியிடம் பிணக்கமுற்ற சமாதான கோடி காட்டும் அந்த சிறிய கால் மாற்றும் gesture கோடானு கோடி கதை பேசி விடும்.
விமலாவிடம் வெடித்த பின் ,planter 's conference செல்ல ,புறப்படும் போது, விமலா சத்யனை கூப்பிட்டு போக சொல்லும் போது ,ஒரு அன்னியோன்யமான ,ஆச்சர்யத்தை வார்த்தையின்றி வெளிப்படுத்துவார். அந்த வெடிப்புக்கு பின், விமலாவும் இல்லாமல் இருக்கும் சூழ்நிலையில்,டிரைவர் சுந்தரத்தை பழைய சிறு வயது நண்பராக்கி, பார்வதியுடன் இருந்த போது அடைந்த சுதந்திரத்தை உணர்வார்.
அந்த நாள் ஞாபகம் பாடல்,தமிழ் பட சரித்திரத்தில் மைல் கல். Dancing இல் ஒரு பகுதி usage of property for effective rendering . என்று ஒன்று உண்டு. இந்த பாடலில், வாக்கிங் ஸ்டிக்கை ஒரு துணை பாத்திரம் ஆகவே உபயோக படுத்தி இருப்பார். அவர் சிறு வயது சந்தோஷங்களை விவரிக்கும் போது ,ஒரு விளையாட்டு பொருளாய் கையில் சுழலும். உயர்ந்தவன்,தாழ்ந்தவன் என்ற வரிகளில் அவர் உயர்ந்திருக்கும்.வாக்கிங் ஸ்டிக்கை, கீழே விடும் அழகே தனி.(வீரபாண்டிய கட்டபொம்மனின் வாள் உரையில் போடும் அழகை ஒத்தது ) டென்ஷன் ஆன வரிகளில் வாக்கிங் stick கழுத்திலும், மிக மிக மன அழுத்தத்திற்கு ஆட்படும் வரிகளில் ,நடக்கவே ஒரு சப்போர்ட் போலவும் பயன்படுத்துவார்.நண்பனுடன் சம நிலையில் பழ குவதாய் பாவனை செய்தாலும்,அலட்சியமாய் கழுத்தில் மாட்டி இழுப்பார். ராஜுவின் குணாதிசயம் வன்மைக்கு பணிதல்(தந்தை,விமலா, கோபால்),கீழோரிடம் empathy இருந்தாலும், ஒரு அந்தஸ்து தோரணை ஒட்டி பிறந்த குணம் போலும்!!
அடுத்த காட்சியில் அவர் வாக்கிங்கிற்கு சுந்தரத்தை அழைக்கும் போது தொப்பியை கழற்ற சொல்லும் gesture . கவுரி-சத்யா காதலை உணர்ந்து அவர் அதை அணுகும் பிரச்சனைக்குரிய காட்சி, NT யின் மேதைமைக்கு ஒரு சான்று. conference போய் வந்த தோரணையில் பிரச்சனையை அணுகுவார். தள்ளி நிற்பார், மிரட்டுவார், ஆழம் பார்ப்பார், ஒரு உயர்ந்த ,வறண்ட,flat வாய்ஸ் இல் பேசுவார்.இறுதியாய் உறுதியை உணர்ந்து சிறிதே உணர்ச்சி வச பட்டு ஒபபுவார். எனக்கு தெரிந்து இவ்வளவு காம்ப்ளெக்ஸ் ஆக ஒரு காட்சியை யாரும் அணுகியதில்லை.
கடைசி காட்சி (நாகேஷ் அவர்களை ஒரு விமான பயணத்தில் சந்தித்த போது இக்காட்சியை சிலாகித்தார்).Acting is not about discipline ,Technic , Perfection ,control and execution alone .Some times you loose your control and self to surprise yourself to surprise the audience .இதற்கு நல்ல உதாரணம் அவர் திருட்டு பழி விழுந்து தன நம்பிக்கையை குலைத்த சத்யாவை manhandle செய்யும் விதம்.(தில்லானா காட்சியில் அடிக்காமல் பாய்வார்) தன்னிடம் பேசும் கவுரி
விமலாவிடம் பேசாதே என்ற விஷயத்தை பேச முயலும் போது ,விமலா இருக்கும் போது இந்த விஷயத்தை என் பேசுகிறாய் என்பது போல் உடல் மொழி ,முகபாவத்தில் சொல்லும் அழகில்....
இந்த படத்தின் தனி சிறப்பு ஆற்றோட்டமான திரைகதை. Flashback அது இது என்று போட்டு (நிறைய சந்தர்பங்கள் இருந்தும் ) கதையின் மெல்லிய ஓட்டத்தை சிதைக்காமல், நேரடியாக கொண்டு சென்றிருப்பார்கள். ஜாவர் சீதாராமனின் வசனங்கள் (அந்த நாள்,ஆண்டவன் கட்டளை) தமிழ் பட நியதிகளை மீறாமல் , பாத்திர இயல்புகளை முன்னிறுத்தி ,மிக polish ஆக இருக்கும். கோபால்-ராஜூ உரையாடல்கள்,விமலா-ராஜூ, தொழிலாளி-முதலாளி உறவு சார்ந்தவை,கோபால் மரண காட்சி, கொடைக்கானல் காட்சிகள் குறிப்பிட வேண்டியவை.(ஒருவேளை உதர் புருஷ் வசனங்களை மொழி மாற்று செய்திருப்பார்களோ என்ற அளவு வித்யாசமாக இருக்கும்.) Hats off ஜாவர்.மற்ற படி ரொம்ப Technical விஷயங்கள் தேவை படாத கதை.
கிருஷ்ணன்-பஞ்சு சிவாஜியுடன் பிணங்கி (குங்குமம்)இந்த படத்தில் இணைந்தார். அமைதியான துருத்தாத இயக்கம்.
அடுத்த படி சரியான பாத்திர தேர்வு. சுந்தர் ராஜன் ,டாக்டர் வேஷத்திற்கு தேர்வு செய்ய பட்டிறிந்தாலும் ,அவரால் நேர் அல்லது எதிர் நிலைகளில் இயங்கியிருக்க முடியுமே தவிர நேர்-எதிர்,எதிர்-நேர் என்ற கோபாலின் புதிர் நிலை மனபான்மைகளுக்கு அசோகனின் கோமாளி தனம் கலந்த mystic ஆன நடிப்பு ஒரு புதிர் தன்மையை நிலை நிறுத்துகிறது.(Dark knight Heath Ledger போல்) .அசோகன் நல்ல தேர்வு.
வாணிஸ்ரீ ஒரு அற்புதம்.அறிமுகமாகி இரண்டாம் வருடத்தில் ஒரு rawness , Passion ridden poor teenager , பாத்திரத்துக்கு பொருத்தம். சௌகார், sophisticated ,obsessive -compulsive குணங்கள் நிறைத்த இந்த பாத்திரத்திற்கு இரண்டாவது nomination கூட இருக்க முடியாது. சிவகுமார் இதே குணாதிசயம் கொண்ட மனிதர்.கேட்கவா வேண்டும்?
நாகையா,சுந்தர ராஜன்,ராமதாஸ் அத்தனை பெரும் நல்ல பங்களிப்பை செய்திருப்பார்கள்.
இசை புரட்சி நிகழ்த்தியிருப்பார் விஸ்வநாதன்.(ராமமூர்த்தியை பிரிந்த பின் தனியாய் போட்ட படங்களிலேயே மிக சிறந்த படம்) பால் போலவே,வெள்ளிக்கிண்ணம்தான்,என்-கேள்விக்கென்ன பதில்,அந்த நாள் என்ற பாடல்கள் வாலி கூட்டணியில்.உறுத்தாத பின்னணி இசை.
ஏ.வீ.எம்.செட்டியார் சிவாஜியை உலகத்திலேயே சிறந்த நடிகர் என்று பாராட்டி (இந்த படத்தை re-make செய்ய முடியாது என்று சொன்னார்)
கிருஷ்ணன்-பஞ்சு சிவாஜியை best perfectionist என்று பாராட்டினார்கள்.
ரசிகர்களின் பார்வையில் இன்றளவும் மறக்க முடியாத படம்.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...9b&oe=5ECEE6D9
Thanks Gopalakrihnan Sundararaman
'பறவையை கண்டான் விமானம் படைத்தான்..பாயும் மீன்களில் படகினை கண்டான்..எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்..எதனை கண்டான் பணம்தனை படைத்தான்'
என அன்றே முழங்கிய நடிகர் திலகத்தின் " பாவ மன்னிப்பு " படத்தை நாளை 29/04/2020 ராஜ் டிஜிட்டல் பிளஸ் டிவி.யில் காலை 10.00 a.m. மணிக்கு காண தவறாதீர்கள். ¶
சிவாஜி கணேசன், தேவிகா, சாவித்திரி, ஜெமினி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
முத்துச் சரங்களைப் போல்..முத்துச் சரங்களைப் போல்.. மோஹனப் புன்னகை மின்னுதடி...முத்துச் சரங்களைப் போல் மோஹனப் புன்னகை மின்னுதடி..சித்திரம் பேசுதடி - என்தன் சிந்தை மயங்குதடி சித்திரம் பேசுதடி...'
நாளை 29/04/2020 காலை 11.00 மணிக்கு முரசு டி.வி.யில் நடிகர் திலகம் நடித்த நகைச் சுவை படம் "சபாஷ் மீனா"
மெகா படத்தை காண தவறாதீர்கள். ¶
சிவாஜி, பத்மினி, சந்திரபாபு மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
கொரோனா தொற்றால் வீடுகளில் முடங்கிய ஏழைகளுக்கு உதவிய நடிகர் திலகம் சிவாஜி ஆதரவாளர்கள்,
எப்போதுமே பிரதிபலனாக எதையும் எதிர்பார்க்காமல் செயல்படுபவர்கள் தான் நடிகர் திலகம் சிவாஜி வழி வந்தவர்கள்,
என்றென்றும் சிவாஜியின் புகழ் போற்றப்பட வேண்டும் அது மட்டுமே,
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...6b&oe=5ECEB416
Thanks Sekar .P
திரு. V.K. ராமசாமி அவர்கள்
நினைத்துப் பார்த்தால் சிவாஜியுடன் எனது நட்பு இறைவனின் அருள் தான் என்று தோன்றுகிறது.
அவரது முதல் படமான "பராசக்தி"யில் நானும் நடித்தேன். அப்போதிலிருந்தே எங்களுக்குள் பழக்கம் உண்டு.
வாழ்க்கையில் அவர் மாதிரி ஒரு கலை வெறியரை நான் பார்த்ததில்லை. தினம், தினம் இரண்டு படங்கள் அவருக்கு புக் ஆகிக் கொண்டே இருக்கும். இடைவிடாமல் நடித்துக் கொண்டே இருப்பார்.
சாதாரணமாக நடிகர்கள் படத்தை ஒப்புக் கொள்வதற்கு முன் பண விஷயத்தைத் தான் முதலில் பேசிக் கொள்வார்கள். ஆனால் பணத்தைப் பற்றி கவலையே கொள்ளாமல், நடிப்பில் மட்டுமே சிந்தனையை செலுத்தியவர் அவர் மட்டும் தான்.
என் ஆசை... ஒரு நாள் கூட நடிக்காமல் சும்மா இருக்கக் கூடாது என்பார். அது அவரது தனிப்பட்ட விஷயம் என்றாலும், அதனால் பயனடைந்தவர்கள் எத்தனைப் பேர் என்பதை எண்ணிப் பார்க்கின்றேன்.
இடைவிடாமல் அவர் நடித்துக் கொண்டே இருந்ததால் தொடர்ந்து பலருக்கு வேலை கிடைத்துக் கொண்டே இருந்தது.
மூன்றாம் மனிதர் அறியாமல் எத்தனையோ பேருக்கு அவர் வாரி வழங்கியிருக்கின்றார் என்பதை நான் அறிவேன்.காமராஜரை தலைவராக ஏற்றுக் கொண்ட கணம் முதல் காங்கிரஸ் கட்சிக்கும் அவர் நிறைய உதவியிருக்கிறார்.
வீடுகளில் எப்போதாவது யாருக்காவது விருந்து வைப்போம். ஆனால், தினசரி விருந்து நடக்கிற வீடு சிவாஜியுடையது தான்.! குறைந்தது ஐம்பது பேராவது தினம் அவர் வீட்டில் சாப்பிடாமல் இருக்க மாட்டார்கள்!.
நான் எனது வீட்டில் சாப்பிட்டதை விட சிவாஜியுடன், அவர் வீட்டில் சாப்பிட்டது தான் அதிகம்!.
நல்ல கலைஞர்களுடன் நெருங்கி இருப்பதை அவர் மிக விரும்புவார். உலக சினிமாவின் சாதனைகளை உடனுக்குடன் தெரிந்து கொண்டு விட வேண்டும் என்பதில் அவருக்குள்ள ஆர்வம் கொஞ்சநஞ்சமல்ல.
தனது தனித்துவம் வாய்ந்த நடிப்புத் திறனுக்காக அவர் எத்தனை தூரம் தன்னை வருத்தி்க் கொண்டு உழைப்பவர் என்பதை நான் அறிவேன்.ஆனால் ஒரு கட்டத்தில் எல்லோரையும் விட உயர்ந்த நடிப்புத்திறனை வெளிக்காட்டி தன்னிகரில்லாதவராக அவரால் ஒளிவீசிக் கொண்டு நிலைத்திருக்க முடிந்ததென்றால் அதற்கு காரணம் ஒன்று தான்
அவரது "தொழில் பக்தி".....
திரு. V.K.ராமசாமி அவர்கள், பத்திரிகை பேட்டியில்....
Thanks Vijaya Raj Kumar
அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே, நடுநிலையாளர்களே, ஊடக நண்பர்களே,
ஏதாவது ஒரு படத்திற்கு அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்தால், சினிமாவில் வீர வசனம் பேசும் நடிகர்கள், அந்த...ர் பல்டி அடித்து,
உடனே... முதலமைச்சரையோ அல்லது அமைச்சரையோ சந்தித்து, சமாதானமாகி விடுகிறார்கள்.
எனக்கு தெரிந்து நடிகர்திலகம் நடித்த
தியாகி திரைப்படம் வெளியாவதில் அன்றைய அரசு பயங்கர எதிர்ப்பு தெரிவித்தது.
படம் வெளியாவதில் தாமதமும் ஏற்பட்டது.
அதில் வரும் பாடல் வரிகள்
வேட்டைக்காரன் கோட்டையிலே
வச்சது தான் சட்டமடி...
வேடிக்கையா வாடிக்கையா
போட்டது தான் திட்டமடி..
ஆனாலும், நடிகர்திலகம் அவர்கள் எவரையும் சந்திக்கவில்லை, யாரையும் தாஜா செய்யவில்லை.
சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும், தன்மானத்தோடு வாழ்ந்த ஒரே தலைவன் மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் மட்டுமே.
(courtesy net)
தொகுப்பு : வான்நிலா விஜயகுமாரன் நன்றி : பம்மலார்.
கலைத்தெய்வம் இதழிலிருந்து)
பாவேந்தர் பாரதிதாசனின் குயில் பத்திரிகையிலிருந்து....
கேள்வி :
சிவாஜி கணேசனுக்கு திருச்சி நகரசபை வரவேற்பளித்தது பற்றி உங்கள் எண்ணம் என்ன?...
பதில் :
இலக்கம் இலக்கமாகக் கல்வி முதலியவற்றிற்கு வாரிக் கொடுத்த, கொடுத்துவரும் கணேசனுக்கு வரவேற்பளிக்காவிடில் திருச்சி நகரசபை இருந்தென்ன! தொலைந்தென்ன!