The hindu - tamil
திரும்பவும் பார்க்கணும்
வி. கரிஷ்மா, சென்னை
இது என்னோட பிளஸ் டூ பொதுத் தேர்வு நேரம். இன்னும் மூன்று தேர்வு கள் எழுத இருக்கிறேன். படிப்புக்கு இடையே கிடைத்த நேரத்தில் கொஞ்சம் ரிலாக்ஸாக்கிக்கொள்வோம் என்றே அப்பாவோடு ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்கு வந்தேன். தியேட்டரில் என் ஏஜ் குரூப் பிரண்ட்ஸ் ஏகப்பட்ட பேர் இருந்தாங்க. அதுவே படத்தை பார்க்க ஆர்வத்தை ஏற்படுத்தியது.
ஒவ்வொரு காட்சியுமே விரும்பி, ரசித்துப் பார்க்கும்படியாக இருந்தது. சாதாரணமாக இப்போ எல்லாம் என் பிரண்ட்ஸோட படம் பார்க்கப்போகும்போது பாட்டு, சண்டைக் காட்சிகளுக்கு வெளியில் ஓடி வந்துடுவோம். ஆனால், இங்கே ஒருத்தர்கூட வெளியில் போகவே இல்லை. எம்.ஜி.ஆர்., நம்பியார் கத்திச் சண்டை மிரட்டல். வசனங்களையும் பாடல் வரிகளையும் ஒரு தடவை கேட்டாலே மறு தடவை நாமே உச்சரிக்கும்படியாக இருந்தது.
படத்தில் ஜெயலலிதா ஒரு இடத்தில் தன் தோழியிடம், ‘என் உயிர் அதோ அந்தக் கப்பலில் போகிறது’ என்று ஹீரோ எம்.ஜி.ஆரைப் பார்த்து கைகாட்டி தன்னோட காதல் ஃபீலீங்ஸை வெளிப்படுத்துவாங்க. அந்த இடம் ரொம்பவே அழகு. இவ்ளோ அழகழகான வார்த்தைகளைச் சேர்த்து அந்தக் காலத்தில் படம் பிடித்திருக்கிறார்கள். இப்படி யான டயலாக்ஸ் இப்போ உள்ள படங்களுக்கு சாத்தியமில்லை என்றாலும் தொடர்ந்து இப்படி யான படங்கள் வந்தால் ‘ஓல்டு மெரிமரீஸ்’ல உள்ள பொழுதுபோக்கு விஷயங்களைப் பார்த்து ரசிக்க முடியும்.
வீட்டில் டி.வி. முன் உட்கார்ந்து புதுப்புது பாடல்களைப் பார்க்கும்போது, “இதெல்லாம் என்ன? அந்தக் காலத்துப் பாடல்கள் எல்லாம் அப்படி இருக்கும்!” என்று அப்பா சொல்லிக் கிட்டே இருப்பார். அது நிஜமாகவே உண்மை தான். இன்னொரு முறை நண்பர்களுடன் பார்க்கணும்.
இன்றும் மறையாத பிம்பம்