Quote:
--------------------------------------------------------------------------------------------------------
எந்த விதமான தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாகாமல்,
தனக்கென்று ஒரு கொள்கையும், கோட்பாடும் வகுத்துக்கொண்ட புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள், மற்றவர்கள் பழக்க வழக்கங்களில் தலையிடுவதும் குறுக்கிடுவதும் அநாகரீகம் என்பதை முழுமையாக அறிந்தவர்.
அறிவுரை தான் கூற முடியும். அதற்காக மது விலக்கு சட்டத்தை திணித்து தனது கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.
கணவன் - மனைவி ஆடிப்பாடி மகிழ்வது கூட தீய பழக்கம் என்றால் உங்களுடன் வாதிட விரும்ப வில்லை. புகை பிடிக்கும் காட்சியை நியாயப்படுத்துவதற்கு மேல் நாட்டு படக்காட்சிகள் பதிவிட வேண்டிய அவசியமும் இல்லை.
இந்த பதிவு திரு. ரவி கிரண் சூரியா இனி திரியினில் வந்து குழப்பங்கள் செய்யக்கூடாது என்பதற்காகத்தான். தகுந்த அறிவுரையை முதலில் அவருக்கு கூறுங்கள். எங்களிடம் விவாதம் வேண்டாம்.
எங்கள் மூலம் உங்கள் திரியின் பக்கங்கள் அதிகரிப்பதை நாங்களும் விரும்ப வில்லை.
கலைவேந்தன்
சத்த்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும் !