இந்த பேனர் வைக்கப்பட்டுள்ள திரை அரங்கம் மேகலா.
சித்ரா அல்ல.-நண்பர் திரு. வினோத் அவர்களுக்குரிய தகவல்
Printable View
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "உலகம் சுற்றும் வாலிபன் " டிஜிடல் -புகைப்படங்கள் உதவி: திரு. நாகராஜன் (திரைப்பட
வினியோகஸ்தர் ).
http://i61.tinypic.com/nqzh3n.jpg
இனிய நண்பர் திரு கலைவேந்தன் சார்
இனிய நண்பர் திரு கோபாலுக்கு தாங்கள் அளித்த பதிலில் நகைச்சுவை உணர்வையும் , நினைவாற்றலையும் , தகுந்த நேரத்தில் தகுந்த பதிலும் வழங்கிய உங்களின் தெளிவான வார்த்தைகள் மிகவும் அருமை . இதை படித்த பிறகாவது அவருக்கு மன மாற்றம் ஏற்பட்டால் சரி .இந்த நேரத்தில் சந்திரோதயம் படத்தில் ஒரு காட்சியில் எம் ஆர் . ராதா கூறும் வசனம் நினைவிற்கு வந்தது .
FORMER TAMIL NADU CHIEF MINISTER M. BHAKTHAVACHALAM BIRTH DAY - TO DAY
http://i62.tinypic.com/kevuc6.jpg
http://i125.photobucket.com/albums/p...psdaf02e6f.jpg
Vendhar TV takes pride in presenting the stories of men and women who have achieved the pinnacle of success, their raise from ordinary to the extraordinary.
And our update in srimgr.com
http://mgrroop.blogspot.in/2014/10/vendhar-tv.html
கலைச்செல்வி' கார்த்திகை 1965: எம்.ஜி.ஆரின் இலங்கை விஜயம்!
'மரகதத்தீவில் மக்கள் திலகம்'
- சி-.சு.-
இலங்கையில் எம்.ஜி.ஆர் மற்றும் சரோஜாதேவி...[நூலகத் தளத்தில் ஈழத்துப் படைப்புகள், சஞ்சிகைகளையெல்லாம் சேகரித்து ஆவணப்படுத்தி வருகின்றார்கள். குறிப்பாக ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு பற்றிய ஆய்வுகளுக்கு இம்முயற்சி பெரிதும் பயன்படும். ஈழத்திலிருந்து வெளிவந்த இலக்கிய இதழ்களில் முக்கியமானதொன்று சுன்னாகத்திலிருந்து வெளிவந்த 'கலைச்செல்வி' இதழ். இவ்விதழின் கார்த்திகை 1965 இதழில் அச்சமயம் ஈழத்துக்கு நடிகை சரோஜாதேவியுடன் வருகை தந்திருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பற்றி 'மரகத்தீவில் மக்கள் திலகம்'என்னுமொரு கட்டுரை சி.சு. என்பவரால் எழுதப்பட்டுள்ளது. அதிலிருந்து சில பகுதிகள் இங்கே மீள்பிரசுரிக்கப்பட்டுள்ளன.]
http://i62.tinypic.com/2mzy1lf.jpg
கண் பார்த்த இடமெல்லாம் கணக்கற்ற சனக்கூட்டம்; வீதியோரங்களிலே, வெளியான இடங்களிலே, மாடிவீடுகளிலே, மதிற்சுவர்களிலே, சந்துபொந்துகளிலே, சன்னல் விளிம்புகளிலே, வாசற்படிகளிலே, வாகனக்களின் மேலே எங்கெல்லாம் ஒற்றக்காலிலாவது நிற்கலாமோ அங்கெல்லாம் அப்படியே நிற்கிறார்கள். ஆடவரும், அரிவையரும் அணியணியாய் நிற்கிறார்கள். சிறுவரும், சிறுமியரும் சீராக நிற்கிறார்கள். சிங்களரும், தமிழரும், சோனகரும் நின்றார்கள். தொழிலாளியும் முதலாளியும் தோளோடு தோள் நின்றார்கள். கொதி கொதிக்கும் வெயிலிலும் கொடகொடக்கும் குளிரிலும் கூட்டமாய் நின்றார்கள்.
வைத்த விழி வாங்காது, நின்ற இடம் நகராது யாருக்காக நின்றார்கள்? எதற்க்காக நின்றார்கள்?
http://i57.tinypic.com/4ptk06.jpg
நாடாளும் மன்னனுக்காக நிற்கவில்லை; நாட்டின் பிரதமருக்காக நிற்கவில்லை; அரசியல் தலைவருக்காக நிற்கவில்லை; சமயத்தின் காவலருக்காக நிற்கவில்லை. சர்வாதிகாரிக்காகவும் நிற்கவில்லை.
'கலைச்செல்வி' இதழ்; கார்த்திகை 1965.பின், யாருக்காக நின்றார்கள்? ஒரு மனிதனின் வரவை எதிர்பார்த்து நின்றார்கள்; எம்.ஜி.ராமச்சந்திரனை எதிர்பார்த்து நின்றார்கள், ஆம்! எம்.ஜி.ஆர். ஒரு மனிதன். மனித உருவில் மிருகங்கள் உலாவும் இவ்வுலகில் - மனிதரைப் போன்ற கயவர்கள் மலிந்துள்ள இவ்வுலகில் - ;மனிதம்' என்ற உணர்ச்சி நிறைந்த , உயர்ந்த பண்புகளும் சிறந்த குண்நலன்களும் நிறைந்து விளங்கும் மனிதன் என்ற நிறைகுடம் எம்.ஜி.ஆர். அந்த மனிதனை எதிர்பார்த்துத்தான் ஆயிரம் ஆயிரமாகக் கூடி நின்றார்கள் மக்கள். கண்டவுடன் களிபேருவகை கொண்டார்கள்; கடவுளைத் தொழுவதைப்போல் கை கூப்பி வணங்குகின்றார்கள்.
கொழும்பிலும், கண்டியிலும், மட்டுநகரிலும், மாத்தளையிலும், யாழ்ப்பாணத்திலும், நுவரெலியாவிலும் இதே காட்சி; இதே நிகழ்ச்சி! சரித்திரம் கண்டறியாத சனத்திரள் ஒவ்வொரு நகரத்திலும் கூடியது.... மேலும் வாசிக்க
மேலும் சில காட்சிகள்....
http://i61.tinypic.com/3127dqu.jpg http://i57.tinypic.com/2vjepvb.jpg
கொழும்பில் மக்கள் திலகம் மற்றும் அபிநய சரஸ்வதி.மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் 'சொல்லின் செல்வர்' செ.ராஜதுரையுடன்...
நன்றி: நூலகம் http://noolaham.net/
endrum engal kuladeivam MGR
மக்கள் திலகம் நடிப்பில், 09-10-1970 ல் வெளியான "எங்கள் தங்கம் " காவியத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் முன் அட்டை தோற்றம் :
http://i59.tinypic.com/67o9cj.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. ;செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
மக்கள் திலகம் நடிப்பில், 09-10-1970 ல் வெளியான "எங்கள் தங்கம் " காவியத்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் பின் அட்டை தோற்றம் :
http://i57.tinypic.com/15fiw7s.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. ;செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.