Thotta Idam yellam song video clipping.
https://www.facebook.com/video.php?v...75640933380173
Printable View
Thotta Idam yellam song video clipping.
https://www.facebook.com/video.php?v...75640933380173
மக்கள் திலகம் எம்ஜிஆர் தன்னுடைய படங்களில் பாடல்கள் மூலம் சொன்னார் ...சொன்னதை செய்தார் இவரல்லவோ ஒரு சகாப்தம்
.
நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
இது ஊர் அறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை
பேரறிஞர் காட்டும் பாதை -புதிய பூமி -1968
நானே போடப்போறேன் சட்டம்
பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
நன்மை புரிந்திடும் திட்டம் - நாடோடி மன்னன் - 1958
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், உலகம் சுற்றும் வாலிபன் -1973
நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்- ஆயிரத்தில் ஒருவன் -1965
நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
புரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே உழைக்கும் கரங்கள் -1976
நான் ஆணையிட்டால்...
அது நடந்து விட்டால்...
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை எங்க வீட்டுபிள்ளை -1965
நினைத்ததை நடத்தியே --
முடிப்பவன் நான் ! நான் ! நான் !
துணிச்சலை மனத்திலே
வளர்த்தவன் நான் ! நான் ! நம்நாடு -1969
நான் சபை ஏறும் நாள் வந்தது
நாம் சந்திக்கும் நிலை வந்தது
என் சங்கீதம் தாய் தந்தது !!
தேன் சந்தங்கள் தமிழ் தந்தது
அன்பு மலர்களே நம்பி இருங்களேன்.
நாளை நமதே.. இந்த நாளும் நமதே
தருமம் உலகிலே இருக்கும் வரையிலே
நாளை நமதே.. இந்த நாளும் நமதே நாளை நமதே -1975
பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் - நினைத்ததை முடிப்பவன் -1975
ஒரு சம்பவம் என்பது நேற்று -
நேற்று அது சரித்திரம் என்பது இன்று -
இன்று அது சாதனை ஆவது நாளை -
நாளை வரும் சோதனைதான் இடை வேளை நேற்று இன்று நாளை -1974
மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
மக்களாட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே
எங்கள் ஆட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே பணக்கார குடும்பம் -1964
தோட்டம் காக்கப் போட்ட வேலி பயிரைத் தின்பதோ
அதைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ ..
நான் ஒரு கை பார்க்கிறேன்
நேரம் வரும் கேட்கிறேன்
பூனை அல்ல புலி தான் என்று
போகப் போகக் காட்டுகிறேன் ரிக்ஷாக்காரன் -1971
The Good News is that Mr. Tenali Rajan received called from Vijay TV and perhaps the programme will be recorded on coming Sunday.
வாழ்த்துக்கள் திரு.தெனாலி ராஜன் சார். அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. புரட்சித் தலைவரின் புகழை விஜய் டி.வி.யில் முழங்குங்கள். ஆனால், திரு.கோபிநாத் டாமினேஷன் அதிகம் என்று கேள்வி. கிடைத்தவரை வாய்ப்பை விடாமல் பயன்படுத்துங்கள். வாழ்த்துக்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
அரிசிப் பஞ்சம் காரணமாக மக்கள் உணவின்றி தவித்த நேரத்தில் ஆணவத்தின் உச்சியில் அமர்ந்தபடி ‘எலிக்கறியில் புரதம் நிறைந்துள்ளது. மக்கள் எலிக்கறி சாப்பிடலாம்’ என்று ஏகடியம் பேசிய ஆணவக்காரர்களை, மிட்டா, மிராசுகளை வீழ்த்தி ஆட்சியமைத்த சாமானியனின் சகாப்தமான பேரறிஞர் அண்ணாவின் ‘இதயக்கனி’க்கு இந்தப் படத்தில் வயது 58 கடந்து 59 என்றால் நம்ப முடிகிறதா? நன்றி திரு.ரூப் குமார் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
.புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர். நினைவுநாள் நிகழ்ச்சி பற்றிய புகைப்படங்கள் தொடர்ச்சி....
திரு. எஸ். ராஜ்குமார் வெளியிட்ட காலண்டர்கள்
http://i59.tinypic.com/2a5wvg2.jpg