Quote:
Originally Posted by aanaa
:rotfl2: aanaa u r correct, it is 'Ketti Melam' :D
Printable View
Quote:
Originally Posted by aanaa
:rotfl2: aanaa u r correct, it is 'Ketti Melam' :D
:exactly:
GTA
Do you have all these songs in mp3 format?
send all , thanks in advance
I do make posting soon
கோகிலத்தில் சீதை --கலைஞர் தொலைக்காட்சி -தலைப்புப் பாடல் உங்களுக்காக இங்கு வலை ஏற்றப்பட்டுள்ளது
பாடல் : வைரமுத்து/ லலிதானந்த்Quote:
பாடியவர்: சாதனா சர்கம்
இசை: ராம்கிரண்தினா
இயக்கம் CJ பாஸ்கர்
Quote:
Sangavi was one of Vijay’s favorite actress who stormed theaters in 90’s is foraying into television. Gokulathil Seethai is now telecasting in Kalaignar TV. Sangavi is foraying into television serial with this
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் `கோகுலத்தில் சீதை' தொடர், பல திருப்பங்களோடு அடுத்த கட்டத்தை நோக்கி தனது பயணத்தை தொடர்கிறது.
தனது கணவனால் பல விதமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சீதா, கணவன் கொடுத்த குற்றச்சாட்டின் காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறாள். சிறைவாசம் முடிந்து வந்தபோது, எதிர்பாராதவிதமாக கோடீஸ்வரி ஆகிறாள்.
இதற்கிடையில், மறுமணம் செய்து கொள்ள இருந்த தனது கணவனின் முயற்சியை முறியடிக்க எடுக்கும் காட்சிகளை அடுத்து வரும் எபிசோடுகளில் காணலாம்.
நடிகை சங்கவி முதன் முதலாக சீதா என்ற புரட்சிப்பெண் பாத்திரத்தில் நடிக்கிறார். தொடரை இயக்குபவர்: சி.ஜே.பாஸ்கர்.
ரோஜாக் கூட்டம் -விஜய் டிவி -தலைப்புப் பாடல் உங்களுக்காக இங்கு வலை ஏற்றப்பட்டுள்ளது
பாடல் : யுகபாரதிQuote:
பாடியவர்: அனுபமா
இசை: ரமேஷ் விநாயகம்
இயக்கம்: சார்ல்ஸ்
ஒரு முறை கேட்டுத்தான் பாருங்களேன்Quote:
ர*சிக*ர்களை ஆ*ட்கொ*ள்ளு*ம் வகை*யி*ல் *விஜ*ய் டி*வி*யி*ல் ரோஜா*க் கூ*ட்ட*ம் எ*ன்ற பு*திய தொட*ர் ஆர*ம்பமா*கிறது.
ஐந்து பெண்கள். அவர்களுக்கென்று தனித்தனி வாழ்க்கை. ஒவ்வொரு பெண்ணின் வாழ்வுக்குள்ளும் ஏதேனுமொரு ரகசியம் இருட்டு மூலையொன்றில் ஒளிந்துக் கொண்டுதான் இருக்கிறது. ஒரேயடியாய் அதை கொன்றுவிட முடியாமலும்அதன் ஆதிக்கத்திலிருந்து விடுபட முடியாமலும் திணறும் இந்தப் பெண்களின் போராட்டத்தை சொல்லிச் செல்கிறது ரோஜா கூட்டம்.
இது நிச்சயமாக சராசரி தொடர்களில் இருந்து மாறுபட்டது. நமது கதா நாயகிகள்; ஜனனி, ராதிகா, மானஸா, சாருலதா, லீனா அனைவரும் படித்த, புத்திசாலியான பெண்கள்.
அற்புதமான இந்த ஐந்து கதாநாயகிகள் ஒரு அபார்ட்மெண்டில் வாழ்கிறார்கள். ஒருவருக்கொருவர் ஆதரவாகவும், பிரச்சினைகளுக்கு தோள் கொடுப்பவர்களாகவும் இருக்கும் இந்த ஐந்து பெண்களுக்கும் இடையே பிணக்குகளும் பிளவுகளும் ஏற்படுகின்றன. இவர்கள் வாழ்க்கையில் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்கிறார்கள்.
ரோஜா கூட்டம் இ*ன்றைய பெ*ண்களு*க்கான கதை. இது ஒரு வித்யாசமான தொடர்!
விஜய் டிவியில் ரோஜா கூட்டம் திங்கள் முதல் வியாழன் வரை மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இது பெண்களின் கதை! கிட்டதட்ட உங்களின் கதை!
அருமையான பாடல்
:clap:
:clap:
அக்னி பிரவேசம் -ஜெயா தொலைக்காட்சி -தலைப்புப் பாடல் உங்களுக்காக இங்கு வலை ஏற்றப்பட்டுள்ளது
பாடல் : பிறைசூடன்Quote:
பாடியவர்: பாலசுப்பிரமணியம்
இசை: ரமணி பரத்வாஜ்
இயக்கம்: ரேவதி கிருஷ்ணா
Quote:
(Jaya TV, weekdays, 20.00)
The juicy soap from Revathi Krishna tackles the subject of gender prejudice.
Its stance is that a woman is no different from her male counterpart and therefore the discrimination unwarranted.
The drama unfolds as the protagonist Chandra takes offence to the fact that her parents, Somanathan and Janaki, are disgraced for giving birth to four daughters. She takes on the onus to stand herself and her family in good stead. How this obsession propels her forward makes for the rest of the narrative.
Sundaresan, the proud father of four strapping boys, thinks unfortunate are those who are saddled with daughters.
This contempt is what irks Chandra to want to prove the chauvinist wrong.
Years later, the equation still seems to be in Sundaresan's favour, while the determined Chandra is set on completing her CA.
Coming as an antithesis to her is sibling Sumitra, who thinks that challenges are unnecessary for girls hailing from a middle class family. Pavithra, the third sister's complicated love life keeps her pretty much preoccupied.
Rudra, the youngest, is the one who is more like Chandra, only she is more aggressive than the latter. She believes that evil can only be combated by evil.
As the sisters fight Sundaresan's male dominant society, Chandra climbs new heights professionally. At this juncture comes the revelation that Chandra is not the real daughter of Somanathan. Slowly but steadily the plot thickens...
Vinu Chakkaravarthy, Yuvarani Raveendran, Deepa Venkat, Ram Rajasekar, S. Kavitha, Bharat Kalyan, Viswa, Devi Priya and Sarath Srinivasan star in the venture produced by Usha Venkatramani and Ranjani Balaraman.
The credits: story, screenplay - Geetha Padmanabhan, dialogue - E. Ramdoss, music - Chandrabose, lyrics - Piraisudan, playback singer - S. P. Balasubramaniam, associate director - R. Ravichandran and executive producer - Kannan Vikraman.
வைர நெஞ்சம் --கலைஞர் தொலைக்காட்சி -தலைப்புப் பாடல் உங்களுக்காக இங்கு வலை ஏற்றப்பட்டுள்ளது
பாடல் : வைரமுத்து,Quote:
பாடியவர்: பாலசுப்பிரமணியம்
இசை: தேவா
இயக்கம்: ஆர்.கே
Quote:
கலைஞர் டிவியில் திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஏவி.எம்.மின் வைர நெஞ்சம் தொடர் பெண்களின் அதிகபட்ச விருப்பத் தொடராகியிருக்கிறது.
மகேஸ்வரியின் தந்தை சந்திரபோஸ் கிட்னி பாதிப்பில் தவிக்கிறார். கருவுற்றிருக்கும் அவர் மகள் மகேஸ்வரி தந்தைக்காக தன் கிட்னியை கொடுக்க முன் வருகிறாள்.
ஆனால் கருவை கலைத்தால் தான் கிட்னி கொடுக்க முடியும். அதற்கு அவள் கணவன் ரவியின் (விஜய் ஆனந்த்) சம்மதம் வேண்டும் என்று மருத்துவர் கூறுகிறார். அதற்காக தன் கணவனிடமும் தன் மாமியார் அலமேலுவிடமும் (சாந்தி வில்லியம்ஸ்) மன்றாடிக் கேட்கிறாள். அவர்கள் ஒத்துக் கொள்வதாக இல்லை.
இந்த நிலையில் அலமேலுவுக்கு தன் வாழ்க்கையில் நடந்துமுடிந்த சில சம்பவங்கள் நினைவுக்குவர, மகேஸ்வரியின் கருவை கலைத்து அவள் தந்தைக்கு ஒரு கிட்னியைக் கொடுக்கலாம் என்று தன் மகன் ரவியிடம் கூறுகிறாள்.
அவன் முதலில் சம்மதிக்கவில்லை. இந்தக் கருவை கலைப்பதினால் குழந்தையே பிறக்காது என நினைக்க வேண்டாம் இறைவனின் அருளால் திரும்பவும் கர்ப்பம் தரிக்கும். குழந்தை பிறக்கும் என அலமேலு தன் மகனை கட்டாயப்படுத்தி மகேஸ்வரியை மருத்துவமனைக்கு கூட்டிக் கொண்டு போகச் சொல்கிறாள், அலமேலு. மகேஸ்வரி தனது மாமியார் காலில் விழுந்து நன்றியை தெரிவிக்கிறாள். இந்த உணர்ச்சிகரமான காட்சி ஏவிஎம்மின் வைரநெஞ்சம் தொடரில் இடம் பெற்றது.
இந்த காட்சியை பார்த்த ரசிகர்கள், பெண்கள் மாமியார் அலமேலுவை கடிதங்கள் மற்றும் போன் மூலமாக பாராட்டினார்கள். `இவரல்லவா மாமியார்! எங்கள் மாமியாரும் இப்படிப்பட்ட நல்ல குணம் உள்ளவராக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்' என்று தெரிவித்திருந்தார்கள்.
மீனாகுமாரி, விஷ்வா, பீரித்தி சீனிவாசன், பரத் கல்யாண், சாந்தி வில்லியம்ஸ், தீபக், விஜய் ஆனந்த், புஷ்பலதா, சந்திரபோஸ் தொடரின் நட்சத்திரங்கள்..
ஒளிப்பதிவு: ஜி.அனுமந்தராவ், இசை: தேவா. பாடல் : வைரமுத்து, எடிட்டிங்: எஸ்.ஆர்.ஜி.விஜயகண்ணன், கதை, வசனம்: சேக்கிழார், இயக்கம்: ஆர்.கே. இணைத்தயாரிப்பு: அருணா குகன், அபர்ணா குகன், தயாரிப்பு: எம். சரவணன், எம்.எஸ்.குகன்.
அலைபாயுதே' --ஜெயா தொலைக்காட்சி -தலைப்புப் பாடல் உங்களுக்காக இங்கு வலை ஏற்றப்பட்டுள்ளது
பாடல் : Dr. கிருதியாQuote:
பாடியவர்கள்; ராகுல் நம்பியார் / ஸ்வேதா
இசை: சத்யா
இயக்கம்: ராஜா
Quote:
ஜெயா டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை, தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `அலைபாயுதே' தொடர் 100-வது எபிசோடை தொடுகிறது.
மூன்று சகோதரிகளின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட இந்த தொடரில், அவர்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைப் போராட்டமே கதையின் ஆணிவேராகும்.
மூத்தவளான பைரவி தனது குடும்ப வறுமையை போக்கும் பொருட்டு, கணவனை குறுக்கு வழிக்கு செல்லத் தூண்டுகிறாள். கணவனான பால்பாண்டியும் தீயவர்களின் சகவாசத்தில் குறுக்கு வழியில் சென்று கோடி கோடியாய் சம்பாதிக்கிறான். குறுக்கு வழியில் சென்ற பால்பாண்டியை கூடிய சீக்கிரம் கெட்ட பழக்கங்களும் தொற்றிக்கொள்ள, பைரவி கவலை அடைகிறாள். பணம் இல்லையென்றாலும் பரவாயில்லை, தனது கணவன் திருந்த வேண்டும் என்பதற்காக பைரவி போராடிக் கொண்டிருக்கிறாள்.
இரண்டாவது சகோதரி கண்ணம்மாவின் வாழ்க்கை போராட்டம் வேறுவிதமானது. கலெக்டரான ராஜேந்திரனை மணந்து மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் கண்ணம்மாவின் வாழ்க்கையில், வர்ஷா என்ற பெண் மூலம் சோதனை ஆரம்பிக்கிறது.
வர்ஷா ராஜேந்திரனின் ஆசைநாயகியாக கண்ணம்மாவின் வீட்டுக்குள் நுழைய, கண்ணம்மாவிடம் டைவர்ஸ் கேட்டு, ராஜேந்திரன் அவளை விதம் விதமாய் கொடுமைப்படுத்துகிறான். அத்தனையையும் தாங்கிக்கொண்டு, தனது மனைவி என்ற ஸ்தானத்தை பறிகொடுக்க மறுத்தவள், தனக்கு துரோகம் செய்த கணவனுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டி, டைவர்ஸ் கொடுக்காமல் தனது ஐந்து வயது மகனோடு போராடிக்கொண்டிருக்கிறாள்.
மூன்றாவது சகோதரி பாரதியின் வாழ்க்கை மிகவும் பரிதாபத்துக்குரியது. பாண்டிச்சேரியில் இருந்து, மலேஷிய மாப்பிள்ளையான ஸ்ரீகாந்தை மணந்து மலேஷியா செல்கிறாள். அவளின் புகுந்த வீடு அவளது கற்பையே அடமானம் வைக்கும் அளவுக்கு தரக்குறைவாக நடந்து கொள்ள, பாரதி அந்த குடும்பத்திடம் இருந்து தப்பி இந்தியா வந்து அக்கா பைரவி வீட்டில் அடைக்கலமாகிறாள், அங்கும் தனது கணவனின் தொல்லைகள் தொடர, தனது பழைய காதலன் கணேஷின் வீட்டில் தஞ்சம் புகுந்து, தனது நிம்மதியான எதிர்காலத்துக்காக போராடிக்கொண்டிருக்கிறாள்.
அடுத்து ஏற்படும் திருப்பங்கள் ரசிகர்களை விறுவிறுப்பின் உச்சிக்கு கொண்டு போகும் என்கிறார், தொடரின் இயக்குனர்
"லட்சியம்.'' -
-கலைஞர் தொலைக்காட்சி -தலைப்புப் பாடல் உங்களுக்காக இங்கு வலை
ஏற்றப்பட்டுள்ளது
பாடல் : கவிஞர் தாமரைQuote:
பாடியவர்: ஸ்வேதாமோகன்
இசை: ரேஹான்
இயக்கம்: கணேஷ் R
Quote:
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம்
2 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் "லட்சியம்.''
ஊருக்கு நல்லவனாக வேடம் போட்டு, சொகுசு காரில் வலம் வருபவர்
தொழில் அதிபர் பரசுராமன். ஊரில் நல்லது கெட்டது என்றால், முதல் ஆளாக ஓடோடி வந்து காரியங்கள் செய்பவர் என்று மனித தெய்வமாக
போற்றப்படுபவர். ஆனால் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் யாராவது
அழகான பெண்களைக் கண்டுவிட்டால், அந்த பெண்ணை அடையாமல்
விடமாட்டார்.
தொழில் அதிபரான பரசுராமனின் நிறுவனங்களின் பொது மேலாளர் ஆடிட்டர் கிருஷ்ணமூர்த்தி. நிறுவன விஷயமாக, ஆடிட்டர் வீட்டிற்கு செல்லும் பரசுராமனின் கண்களில் சிக்குகிறார் ஆடிட்டரின் செல்ல மகள் திவ்யா.
அவளைத் திருமணம் செய்ய ஆவலாக உள்ளதை ஆடிட்டரிடம்
தெரிவிக்கிறார். பெரும் பணக்காரரான பரசுராமன் தன்னை விரும்புகிறார்
என்பதை அறிந்து மகிழ்கிறாள் திவ்யா. திருமண ஏற்பாடுகளை முடுக்கி விடுகிறார் தொழில் அதிபர்.
திடுக்கென்று அவருடைய வாழ்க்கையில் பிரவேசிக்கிறாள், கவிதா.
தன்னுடைய சகோதரியை திருமணம் செய்வதாக கூறி, குடும்பம்
நடத்திவிட்டு, கொலை செய்து விட்ட பரசுராமனை பழி வாங்க தேடி
வருபவள் அவள். பரசுராமனை அடையாளம் கண்டு கொண்ட கவிதா,
பழிவாங்கினாளா, பரசுராமனின் திருமணம் நடந்ததா என்பதே கதையின் கரு.
திரைப்படங்களில் வில்லனாக நடித்து வரும் நடிகர் தேவன், பரசுராமனாக தோன்றுகிறார். ஆடிட்டர் கிருஷ்ணமூர்த்தியாக ஆடிட்டர் ஸ்ரீதரன், குடும்ப பெண் கதாபாத்திரத்தில் தீபா வெங்கட், பழிவாங்க அலையும் கதாபாத்திரத்தில் நடிகை மஞ்சரி நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நடிகர் ராஜ்காந்த்,
சாய்பிரசாத், யுவஸ்ரீ, பிருந்தாதாஸ் ஆகியோரும் உண்டு.
வெற்றிவிஷன் சார்பில் தொடரை தயாரிப்பவர் வி.எஸ்.குமரன்.
does anyone has this song
Quote:
ஜி டிவியில் ஒளிபரப்பாகி வரும் கே.பாலச்சந்தரின் `சொல்லத்தான் நினைக்கிறேன்' தொடரின் டைட்டில் பாட்டுக்கு கிடைத்த புது மவுசு சின்னத்திரை வட்டாரத்தை கலக்கியிருக்கிறது.
இந்தப் பாடலைக் கேட்ட ஜி தொலைக்காட்சியினர் புதிய சினிமாப் பாடல்கள் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் இந்தப்பாடலையும் ஒளிபரப்பினர். இது எந்த சீரியல் பாட்டுக்கும் இதுவரை கிடைத்திராத கவுரவம். கார்த்திக் பாடிய இந்தப் பாடலுக்கு இசையமைத்திருப்பவர் ராஜேஷ் வைத்யா. பாடலை எழுதியவர் டாக்டர் கிருதயா.