Originally Posted by 
puratchi nadigar mgr
				 
			அன்பு நண்பர்கள்  திரு.மஸ்தான் சாஹிப் மற்றும் மகாலிங்கம் மூப்பனார் ஆகியோருக்கு வணக்கம். 
மாற்று முகாமில் பதிவிடும் செய்திகளுக்கு நாம் பதிலளிக்க வேண்டியதில்லை என்பது ஒரு பக்கம் . மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.புகழ், பெருமை ,சிறப்புகள் ஆகியன சிகரம் போல மேன்மேலும்  உயர்ந்து கொண்டே விண்ணை முட்டும் வகையில் தினசரிகளில் , ஊடகங்களில், மீடியாக்களில் செய்திகள் வெளியாகும் வண்ணம் உள்ளன .ஒரு சிலர் பொறாமை பட்டு, பொறுக்க முடியாமல் சிறுபிள்ளை தனமாக மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். புகழை சிறுமை படுத்த முடியாமல் புதுப்புது வழிகளை கண்டுபிடிக்க முயன்று தோல்வியே காண்கின்றனர் என்பதையும் நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம் . ஆகவே, அவர்களின் செய்திகள் பொய்யானவை யாக  இருப்பினும் தொடர்ந்து பொய்களை உரக்க கூறினால் உண்மையாகிவிடும் என்கிற அசட்டு நம்பிக்கையில் செயல்படுகின்றனர் .எனவே நாம் தகுந்த பதிலளிக்க தயங்க கூடாது என்கிற வகையில் தாங்கள் பதிவிடும் செய்திகளை நான் ஆமோதிக்கிறேன் . கடந்த சில  வாரம் முன்பு  வெளியான அவர்களின் அபிமான நடிகரின் திரைப்பட பேனரில் பொய் செய்திகளை வெளியிடுபவர்களுக்கு பாவ மன்னிப்பு அளிக்க வருகிறார் என்று செய்தி போட்டிருந்ததாக நண்பர்கள் தகவல் தெரிவித்திருந்தனர் .அந்த மன்னிப்பு அந்த ரசிகர்களுக்கு தான் போலும் .
ஏனென்றால், அன்னையின் ஆணை, சாரங்கதாரா, காத்தவராயன், பொம்மை கல்யாணம் ஆகிய படங்கள் 100 நாள் ஓடிய படங்களல்ல .உத்தம புத்திரன் ஒரு அரங்கிலும் , பதிபக்தி 4 அரங்கிலும், சபாஷ் மீனா ஒரு அரங்கிலும் ஆக மொத்தம் 
3 படங்கள் 8 அரங்குகளில் ஓடியுள்ளதாக தகவல்கள் உள்ளன. அதே 1958ல் வெளியான நாடோடி மன்னன் ஒரு படம் மட்டுமே  13 அரங்கிலும் , ஒரு அரங்கில் மறுவெளியீட்டிலும் மொத்தம் 14 அரங்கில் 100 நாட்கள் ஓடியுள்ளது.ஆதாரமும் உள்ளது .
நடுநிலை நாளேடு எனப்படும் தமிழ் இந்து தினசரி ,தீர விசாரிக்காமல் இந்த பொய் செய்திகளை பதிவிடுவது என்பது  மிகவும் வருந்த தக்கது . அதற்கு நமது நண்பர்கள்  இ மெயில் மூலம் கேள்வி எழுப்பி உள்ளார்கள் .என்று தெரிகிறது .
தங்களின் கேள்விகள் நியாயமானதே. ஆனால் வார்த்தைகள் ,செய்திகள் பதிவிடும் சமயம் கடுஞ்சொல்லை பயன்படுத்தாமல், நாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தினால் பதிவுகள் நீக்கத்தை தவிர்க்கலாம் என்பது எனது அன்பான 
வேண்டுகோள் .தொடர்ந்து ஆக்க பூர்வமாக செயல்பட்டு தக்க பதிலடி அளித்து வருவீர்கள் என்று நம்புகிறேன். 
ஆர். லோகநாதன் .