Important scenes in 100/100
https://www.youtube.com/watch?v=b5-T9xtc-08
Printable View
Important scenes in 100/100
https://www.youtube.com/watch?v=b5-T9xtc-08
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
http://2.bp.blogspot.com/-HRNJSnA1-8...Y/s320/spb.jpg
(நெடுந்தொடர்)
16
'மங்கையரில் மகராணி'
ஜெமினிக்கான பாலாவின் மாணிக்க மகுடப் பாடல்.
http://i.ytimg.com/vi/5huvLv-R-Lg/maxresdefault.jpg
ஒன்று சொல்வார்கள்.
'நீ இறப்பதற்கு முன் இந்த 100 தமிழ்த் திரைப்பாடல்களைக் கேட்டுவிட்டு கண்மூடு. (100 tamil films songs to hear before you die) அப்போதுதான் உன் பிறப்பின் பயன் முழுமையாகச் சேரும்'
உண்மைதான். இசைக்கு அவ்வளவு மகத்துவம் உண்டு. அதுவும் தமிழிசைக்குத் தனி மகத்துவம். பொற்காலப் பாடல்கள் சொல்லொணா விசேஷங்கள் உடையது.
அப்படி தமிழ்த் திரைப்பாடல்களில் நம் வாழ்நாள் முழுதும் கேட்டுக் கொண்டே மகிழ சில பாடல்களை இசைச் சக்கரவர்த்திகளும், பாடகர்களும் நமக்கு அளித்திருக்கிறார்கள். அவை நம் வாழ்வோடு கலந்தவை
http://mrpopat.in/admin/upload/video...1780205176.jpg
அந்த மாதிரிப் பாடல்களில் கட்டாயம் இடம் பெற்ற பாடல்தான் இது. இந்தப் பாடல் இல்லாமல் தமிழ்த் திரைப்படப் பாடல்களே இல்லை. தமிழ்த் திரைப் பாடல்களின் சரித்திரம் பின்னால் எழுதப்படும்போது இந்தப் பாடல் முன்னிலை வரிசையில் நிற்கும் என்பது அனைவரும் ஒத்துக் கொண்ட ஒன்றுதான்.
பிடிக்கும்... பிடிக்காது என்ற இருவேறு கருத்துக்களுக்கு கொஞ்சமும் இடம் அளிக்காத பாடல் இது. நூற்றுக்கு நூறு அனைவரையும் கட்டிப் போட்ட பாடல்.
இப்பாடலை யார் எங்கு கேட்டாலும் அதே இடத்தில் மெய் மறந்து அந்த சில நிமிடங்கள் உறைந்து விடுவார்கள். அப்படி வசியம் செய்யும் சக்தி மிகுந்த பாடல் இது.
புது மணம் புரிந்த இளம் தம்பதியினர் ஒருவரை ஒருவர் புகழ்ந்து, வாழ்த்தி அன்புப் பரிமாற்றம் செய்து கொள்ளும் பாடல். கணவன் மனைவி உறவுக்கே இலக்கணமாய் அமைந்த பாடல். இலக்கியத் தரம் வாய்ந்த பாடல்.
தன் எண்ணம் போல் தனக்கு வாய்த்த மனைவியை கணவன் எப்படி பெருமைப் படுத்துகிறான்!
'மங்கையரில் அவள் மகராணியாம்'
இந்த ஒற்றை வரியிலேயே அவள் பெருமை முழுதும் அனைவருக்கும் புரிய வைத்து விட்டான் கணவன்.
மேல்கொண்டு என்ன சொல்கிறான் என்பதைக் கீழ்க்காணும் பாடல் வரிகளில் தெரிந்து கொள்ளுங்கள்.
'மகராணி' விடுவாளா?
'ஆடவரின் தலைவன் நீ' என்று அம்சமாக எசப்பாட்டு பாடி விட்டாளே! இதைவிடவும் அந்தக் கணவனுக்கு என்ன பெருமை இருக்க முடியும்?
இதிலிருந்தே இவர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்ட ஆதர்ஷ தம்பதிகள் என்று புரியவில்லையா?
'அவளுக்கென்று ஓர் மனம்' என்ற ஸ்ரீதரின் அற்புதமான படத்தின் அள்ளிக் கொள்ள வேண்டிய பாடல். படமாக்கலிலும், பாடல் காட்சிகளிலும், காமெராக் கோணங்களிலும் ஸ்ரீதர் மன்னர். அவருக்குப் பிடித்த ஜெமினியும், அவரின் ஆஸ்தான நாயகியான காஞ்சனாவும் ஜோடியாகச் சேர்ந்து விட்டால்?!
மனிதர் பின்னி எடுத்து விட்டார் 'மெல்லிசை மன்ன'ரையும், 'கவிஞ'ரையும் துணை சேர்த்துக் கொண்டு.
கவிஞரின் எண்ணங்களை 'மன்னன்' மனதை வருடும் மெல்லிசையாய் வடிவமைத்துக் கொடுக்க, அதை வண்ணக் குழைவு செய்து ஸ்ரீதர் நம் எல்லோருடைய நெஞ்சங்களிலும் ஆழப் புதைத்து விட்டார்.
நாம் மண்ணில் புதைந்தாலும் நம் மனதில் புதைந்த இப்பாடல் அழியாது.
http://www.kyazoonga.com/Merchandise...e/VTAF0603.jpg
மிக அழகான அன்றைய சாத்தனூர் டேம். பொங்கி வழியும் நீரூற்றுகள், வண்ணப் பூக்களைத் தாங்கிய பூங்கொடிகள், செடிகள், காகிதப்பூ மரங்கள், 'ஜூஸ்பர்ரி' பிஸ்கட் என்று சொல்வார்கள் (பிறைச்சந்திரன் போன்ற வடிவு) அதைப் போல வடிவமைக்கப்பட்ட பெரிய பிறை நிலா, அழகான பூங்காக்கள், சின்ன சின்னதாய் செதுக்கிய சிற்ப சிலைகள், தண்ணீர் வழிந்தோடும் அணைக்கட்டு, விசிறி வாழைகள், பாக்கு மரங்கள், சிறிய அழகான் நடைப் பாலங்கள், கைகளில் எதையோ பிடித்து நிற்கும் அந்த கட்டழகு பெண் சிலை, வண்ணக்குடை கோபுரங்கள், அசோகா மரங்கள், புல் பாதைகள், நீர் வழிந்தோடும் படிக்கட்டுகள், பிரவுன் நிற குரோட்டன்ஸ் செடிகள், பஞ்சு மிட்டாய் கவிழ்த்து வைத்தது போன்ற புஷ்க்கள் என்று சாத்தனூரை இவ்வளவு அழகாக காட்டியது இளமை இயக்குனர் ஒருவராகத்தான் இருக்க முடியும். அணையின் மீது கற்களால் படுக்கைவாக்கில் பொறிக்கப்பட்டிருக்கும் 'சாத்தனூர் டேம்' என்னும் ஆங்கில எழுத்துக்கள் பிரம்மாண்டமாகத் தெரிவதை பாடலில் தெளிவாகப் பார்க்கலாம்.
மிக சிம்பிளான ஒயிட் பேன்ட், ஷர்ட்டில் (ஆரஞ் அண்ட் எல்லோ கலர் மிக்ஸிங் ஸ்மால் செக்டு) 'மாப்பிளை' ஜெமினி, கல்யாணமான மங்களகரமான மனைவி கோலத்தில் மூக்குத்தியும், காதருகே செருகிய பூவும், வாணிஸ்ரீ கொண்டை 'விக்'கும், கைநிறைய வளையல்கள், கழுத்தில் வெண்முத்து மாலையுமாக 'கலையழகி' காஞ்சனா. 'காதல் மன்ன'னுக்கு செம ஜோடிப் பொருத்தம். ராசியான ராசி. 'இயற்கையென்னும் இளைய கன்னி' முடித்து 'மங்கையரில் மகராணி'யில் மீண்டும் இணைந்து மனதில் பிணைந்தது.
http://i.ytimg.com/vi/xdOm3lQCA2Q/hqdefault.jpg
சாத்தனூர் அணைக்கட்டையே இருவரும் ஒரு ரவுண்டு வந்து விடுவார்கள். ஜெமினி பின்னாட்களில் விடாமல் எல்லா பாடல்களிலும் ஒரு ஸ்டைலைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தார். இடுப்பில் கை வைத்துக் கொண்டு ஒரு காலைத் தூக்கி, சற்றே உடம்பை ஆட்டியபடி நிற்பார். இல்லையென்றால் கால் முட்டியில் கைகளைக் குவித்து வைத்துக் கொள்வார்.:)
காதல் காட்சிகளில் ஜெமினி மிக நெருக்கம் காட்டுவார் காஞ்சனாவிடம். 'எல்லையில்லாக் கலைவாணி'யிடம் சில சமயம் எல்லை மீற முயல்கிறாரோ 'காதல் மன்னன்' என்று கூட நினைக்கத் தோன்றும். ('கையோடு இங்கே கதை சொல்ல வேண்டும்' உதடுகள் பட்டே விடும்.):)
'வெள்ளிச் சங்குகள் துள்ளி எழுந்தன
நெஞ்சில் விளையாட'
வரிகளில் ஜெமினி பின்னி எடுத்து விடுவார். இயற்கையான ஸ்டைல் செய்து ஜமாய்த்து விடுவார் மனிதர், கைகளை உயர்த்தி காஞ்சனாவை நோக்கி ஸ்டைலாக, மெதுவாக நடந்து வருவது ஜோர். கைகளை ஒன்றாக இணைத்து காஞ்சனாவின் கழுத்தில் மாலையாய்க் கோர்ப்பதும் அழகு.
காஞ்சனாவும் நல்ல ஈடு கொடுத்திருப்பார்.
தோழிக்காக தன் வாழ்வை முத்துராமனிடம் முழுமையாக, அடிமையாக அர்ப்பணிக்கும் பாரதி 'ஆ...ஆ' என்று பாடலின் நடுவே சுசீலா குரலில் விசும்புவார். இவரும் முத்துராமனும் விட்டேர்த்தியாக 'தேமே' என்று சுரத்தில்லாமல் நிற்பார்கள். ஆனால் கதையின் சூழ்நிலை, பாடலின் இடை சூழ்நிலை அப்படித்தான். அதனால் பொருத்தமாகவே இருக்கும்.
சுசீலா ஆனந்த அராஜகம் பண்ணுவார். மகிழ்ச்சி, இடையே சோகம் என்று காஞ்சனாவிற்கும், பாரதிக்கும் இரட்டை நாயன வாசிப்பு. பிரமாதப்படுத்துவார்.
பாலா தொட்டிலிட்டு அமர்ந்து கொள்வார் நம் மனங்களில். குரல் வித்தைகள் விதவிதமாய் இன்பத் தாக்குதல்கள் கொடுக்கும்.
'மையோடு கொஞ்சம் பொய் பேசும் கண்கள்
கையோடு இங்கே கதை சொல்ல வேண்டும்'
இந்த வார்த்தைகளில் 'மையோடு கொஞ்சம்' என்று கொஞ்சுவாரே! அது ஒன்றே போதும். குரல் இன்னும் மேம்பட்டு மெருகேறி சர்க்கரை, தேன், பாகு இவையெல்லாம் மீறிய சுகத்தைக் கொடுக்கும். பாலாவுக்கு புகழை வண்டிவண்டியாக அள்ளித் தந்த பாடல். மேடைகளில் ஒலிக்காமல் இதுவரை இருந்ததில்லை.
கண்ணதாசனுக்கு கரும்பு சாப்பிடுவது போல இது போன்ற பாடல் வரிகள்.
'மெல்லிசை மன்னர்' தான் இப்பாடலின் நிஜ ஹீரோ. அப்புறம்தான் மற்றவர்கள் பாலா உட்பட. என்ன ஒரு இசை ஆளுமை! இசைக் கருவிகள் ஒவ்வொன்றின் ஆதிக்கமும் சொல்லி மாளாதவை. வயலின், ஆர்கன், வீணை, கிடார், தபலா, பாங்கோ என்று அள்ளித் தெளித்து ஆட்சி செய்வார்.
மொத்தத்தில் என்றென்றும் இளமை மாறாத காயகல்பப் பாடல்.
http://i.ytimg.com/vi/sV1RWJQYD6U/maxresdefault.jpg
மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லாக் கலைவாணி
என்னுயிரே யுவராணி
மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லாக் கலைவாணி
என்னுயிரே யுவராணி
கோடையிலே மழை போல் நீ
கோவிலிலே சிலை போல் நீ
ஆடவரில் தலைவன் நீ
அடிமை நான் உன் ராணி
கோடையிலே மழை போல் நீ
கோவிலிலே சிலை போல் நீ
ஆடவரில் தலைவன் நீ
அடிமை நான் உன் ராணி
மங்கையரில் மகராணி
ஆ..............ஆ
மையோடு கொஞ்சம் பொய் பேசும் கண்கள்
கையோடு இங்கே கதை சொல்ல வேண்டும்
மையோடு கொஞ்சம் பொய் பேசும் கண்கள்
கையோடு இங்கே கதை சொல்ல வேண்டும்
தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு
தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு
நான் பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு
நான் பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு
வெள்ளிச் சங்குகள் துள்ளி எழுந்தன
நெஞ்சில் விளையாட
அங்கங்கள் எங்கெங்கோ
நானும் மெல்ல தடை போட
மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லாக் கலைவாணி
என்னுயிரே யுவராணி
மங்கையரில் மகராணி
ஆ..............ஆ
மாணிக்கத் தேரின் காணிக்கையாக
முத்தங்கள் நூறு தித்திக்க வேண்டும்
தீராத ஆசை கோடானு கோடி
தேனாக ஓடும் தானாகத் தீரும்
தங்கத் தாமரை மொட்டு விரிந்தது
மஞ்சள் நீராட
சொல்லுங்கள் அங்கங்கே
நானும் கொஞ்சம் கவி பாட
மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லாக் கலைவாணி
என்னுயிரே யுவராணி
மங்கையரில் மகராணி
https://youtu.be/sV1RWJQYD6U
நன்றிகள் நவில நா எழவில்லையே நாவலர் வாசு சார் !
எப்படி உங்களுக்கு சமயம் கிட்டுகிறது இப்படியெல்லாம் கிண்டிக் கிழங்கெடுக்க ?!
வழக்கம் போல உங்கள் Hands up commandக்கு இசை ஔரங்கசீப்பாகிய நான் surrender!!
நான் நிறைய பயிற்சிகள் மேற்கொள்ள வைக்கிறீர்கள்.
எந்தத் திரியிலும் உங்கள் பதிவு காரிருள் நீக்கும் சூரிய சந்திரக் கிரணங்களே!!
மனம் நிறைந்த மகிழ்வுடன்
செந்தில்
நாம் பிறந்த மண் (1977) நடிகர்திலகத்துடன் காதல்மன்னர் இணைந்து நடித்த கடைசிப் படம் வின்சென்ட் இயக்கத்தில் தேச பக்தியை மையப்படுத்தி எடுக்கப் பட்டது.
மிக அபூர்வமாக சிவாஜி ஜெமினி சண்டைக் காட்சி அமைந்த படம் (Watch from 00 : 20:00) கமல் நடிகர்திலகத்தின் மகனாக நடித்திருப்பார்!
கண்பார்வை இழந்த நிலையில் உலுக்கியெடுக்கும் ஜெமினியின் உன்னதமான உணர்ச்சி மிக்க தேர்ந்த நடிப்பு கண்களைக் குளமாக்கும்.
Quote:
Watch climax from 2:00:00 to perceive the tear jerking acting calibre of GG on par and in tandem with NT!
ஜெமினி சிவாஜி இணைவில் என்றென்றும் மறக்க இயலாத நெகிழ்ச்சி தரும் நடிப்பின் முத்திரையை இருவருமே பதித்திட்ட காட்சி !
https://www.youtube.com/watch?v=zjjEq4Iy7sU
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
http://2.bp.blogspot.com/-HRNJSnA1-8...Y/s320/spb.jpg
(நெடுந்தொடர்)
17
'ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு '
http://tamildada.com/wp-content/uplo..._Oru_Manam.jpg
http://i.ytimg.com/vi/_ukBdTZTQgM/hqdefault.jpg
உற்சாகம்...உற்சாகம்... உற்சாகம்
அப்படி ஒரு உற்சாகம்... கரை கடந்த உற்சாகம்
அணை உடைத்த வெள்ளமாய் பொங்கி வரும் உற்சாகம்.
கட்டவிழ்ந்த காட்டாறாய் கரை புரண்ட உற்சாகம்
அதுதான் பாலாவின் இந்தப் பாடல். உற்சாகம் அன்றி வேறு எதுவுமே இல்லை.
http://i.ytimg.com/vi/FX1BdEvGwW0/hqdefault.jpg
மழைக்கு மரத்தோரம் ஒதுங்கும் ஜெமினி. அதே மழையில் நனைந்து அதே மரத்தோரம் காஞ்சனா ஒதுங்க, ஜெமினி தன் வேலையைத் தொடங்க, கரெக்டாக அந்தக் கால தப்பாத சினிமா பார்முலாவின்படி ஒரு பெரிய இடி இடித்து வைக்க, நாயகி மிரண்டு நாயகனை பயத்தில் கட்டிப் பிடித்து அவன் மார்பில் சாய்ந்து கொள்ள, நாயகன் இன்ப சுகம் அனுபவிக்க, சட்டென்று நாயகி சுதாரித்து விலகி வெட்கத்தில் ஓடிவிட, நாயகன் மனதில் 'ஆயிரம் நினைவும் ஆயிரம் கனவும்' வருவது நிஜம்தானே!
மனம் மகிழ்ச்சி எல்லை மீறி துள்ளிக் குதித்து பாட ஆரம்பிக்கிறான் காதலன் கொட்டும் மழையிலே. அந்த பூங்காவைச் சுற்றி ஓடி ஆடி தன்னுள் பொங்கும் ஆனந்தத்தையெல்லாம் அள்ளித் தெளிக்கிறான் அங்கு பெய்யும் மழையை விடவும் வேகமாக .
காதலனாக ஜெமினி. முழுக்க முழுக்க மழையிலே (செயற்கை) எடுக்கப்பட்ட பாடல். ஜெமினி துள்ளாட்டம் போட்டிருப்பார். ஜெமினிக்கு இந்தப் பாடலில் 'இது தேவையா?' என்று பாதியும், "ஏன் நன்றாகத்தானே இருக்கிறது? அதுக்கென்ன?" என்று மீதியுமாக விமர்சனங்கள் அப்போது எழும்ப நான் அதில் இரண்டாவது கட்சி.
மனதை வருடும் மென்மையான பாடல்களிலேயே நாம் பார்த்துப் போன ஜெமினி இதில் எம்.ஜி.ஆர் ரேஞ்சுக்கு அங்குமிங்கும் ஓடி ஆடி, கை கால்களைத் தூக்கி ஆடிப் பாடுவதும் ரசிக்கத் தகுந்ததே.
மழைக் காட்சிகளை மெனக்கெட்டுப் படமாக்கியிருப்பார் ஸ்ரீதர். ஆனாலும் சில இடங்களில் கன்டின்யூட்டியில் கோட்டை விட்டுவிட்டதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.
'பூவை அள்ளித் தந்தாள் அந்தப் பூந்தென்றல் அன்னம்
போதை கொண்டு ஆடும் எந்தன் மனமென்னும் கிண்ணம்'
சரண வரிகளை முதல் முறை ஜெமினி பாடும்போது முழுக்க தொப்பரையாக நனைந்திருப்பார். பேன்ட் ஷர்ட் முழுக்க நனைந்திருக்கும். அதே வரிகள் திரும்ப வரும்போது பார்க்கில் உள்ள நீர்த்தேக்கக் கட்டையில் அமர்வார். அப்போது பேன்ட் காய்ந்து இருக்கும். பிறகு மழை நீர் பட்டு மீண்டும் நனைய ஆரம்பிக்கும். எப்படி?:)
அதே போல நல்ல வெயில் அடித்துக் கொண்டிருக்கும். வரிசையாக நடப்பட்டிருக்கும் அசோகா மரங்களின் இடைவெளிகளில் நிழலும், வெயிலும் மாறி மாறி நன்றாகவே தெரியும். ஆனால் ஜெமினி முழுக்க பூவாளி பக்கெட்டுகளின் மழைச் சாரலில் நனைந்து கொண்டிருப்பார்.
சரி! வெயில் அடிக்கும்போது அதே சமயம் மழை பெய்யக் கூடாதா? அது என்ன அதிசயமா? என்று ஜெமினி ரசிகர்கள் சண்டைக்கு வந்து விட வேண்டாம். காக்கைக்கும் நரிக்கும் கல்யாணம் என்றே நினைத்துக் கொள்கிறேன். போதுமா?:)
ஜெமினிக்கு முன்னால் மட்டுமல்ல... அவருக்குப் பின்னாலேயும் நீண்ட தூரம் மழை பெய்ய வைத்து காட்சியின் மழை சூழ்நிலைக்கு மெனக்கெட்டிருப்பார்கள். அதைப் பாராட்டியே தீர வேண்டும். ஸ்ரீதர் ஸ்ரீதர்தான்.
பாடலின் நடுவில் காட்சி தரும் வானவில் அழகுக் கோர்வை. ஆனால் வானவில் வானத்தில் இல்லாமல் பூஞ்செடிகளின் மேல், பூங்காவின் தரையில் எல்லாம் ஊடுருவிப் பாயும். இதையும் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.
http://i.ytimg.com/vi/ZcRkwPfJPBM/hqdefault.jpg
ஜெமினியின் சில போஸ்கள் ரசிக்கத்தகுந்தவை. பாடலின் முதல் சரணம் முடிந்து இடையிசை துவங்கும் போது ஜெமினி வைக்கும் ஸ்டெப்ஸ் அப்படியே 'காலங்களில் அவள் வசந்தம்' பாடலைக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும். (ஒரு டர்ன் திரும்பி ரவுண்ட் அடிப்பார்) பின் இருபக்கமும் அசோகா மரங்களுக்கு இடையில் உள்ள பாதையில் காமெராவின் டாப் ஆங்கிளில் இருந்து பின்பக்கமாக நடந்து செல்வது செம டக்கராக இருக்கும்.
பொல்லாத கவிஞன் எழுதிய,
'கை கொள்ளாத வண்ணம் அவள் சுகம் கொடுத்தாளோ'
வரிகளை நல்லவேளை ஜெமினி தன்னை அணைத்துக் கொள்வது போல பாவம் காட்டி நம் வயிற்றில் பால் வார்த்தாரோ!:) நாம் தப்பினோமோ!
கொஞ்சம் ஏமாந்தால் போதும்டா சாமி! கண்ணதாசன் நம்மை மண்ணைக் கவ்வ வச்சுடுவார். புரிஞ்சவங்க மத்தியில் சங்கடத்திலும் நெளிய வச்சுடுவார்.
இப்பாடலின் இசை பற்றி என்ன சொல்ல! எப்படி எழுத!?
ஒவ்வொரு வாத்தியமும் வசியம் செய்கிறது. முதல் சரணம் தொடங்குமுன் வரும் அந்த ஷெனாயின் அற்புதத்தை வார்த்தைகளில் விவரித்து விட இயலுமா என்ன? அதற்கப்புறம் பொங்கிப் பிரவாகமெடுக்கும் அந்த இசை. யம்மாடி! இசை மழை என்பார்களே! இசை வெள்ளம் என்பார்களே! அது இந்தப் பாடலுக்குத்தான் பொருந்தும். மழைப் பாடலுக்குத் தக்கபடி மகத்தான இசை. சின்ன சின்ன புல்லாங்குழல் கலக்கல்களை மறக்கவே முடியாது.
'என் கண்ணோடு பெண்மை ஒரு கதை படித்தாளோ' என்று பாலா முடித்தவுடன் அப்படியே அந்த டியூனையே மன்னர் இசையாகக் கொடுக்கும் அழகு கோடி பெறும். அதே போலத்தான் 'கை கொள்ளாத வண்ணம் அவள் சுகம் கொடுத்தாளோ' வரிகள் முடிந்ததும்.
'மெல்லிசை மன்னர்' விஸ்வரூப இசை அமைத்து நமக்களித்த பாடல் இது. படத்தின் டைட்டில் இசை மறக்கவே முடியாத ஒன்று. (டைட்டில் இசையில் 'கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா' பாடலின் கிடார் இசை டியூனை மிக அழகாக கொஞ்சமாக தெரியாத வண்ணம் கலந்து கொடுத்திருப்பார் 'மெல்லிசை மன்னர்')
பாலா பாடல் காட்சியை நன்கு மனதில் உள்வாங்கி குதூகலித்திருப்பார்.
நம்மையும் குதூகலிக்க வைப்பார்.
அந்த முதல்
'லா...ஹஹஹா ஹோஹஹோ
ஹஹஹா ஹஹஹா ஹா'
ஹம்மிங்கிலேயே கதாநாயகனின் சந்தோஷ மனநிலையை மிக அருமையாக பாலா தன் குரலில் கொண்டு வந்து விடுவார். என்னவோ லாட்டரியில் கோடி ரூபாய் விழுந்த உற்சாக மனநிலை நமக்கு ஏற்பட்டுவிடும்.
இந்தப் பாடல் விரும்பிகள் யாராக இருந்தாலும் மேற்சொன்ன அந்த ஹம்மிங்கை முணுமுணுக்காமல் இருக்கவே மாட்டார்கள். (யாருக்கும் தெரியாமல்)
இந்த உற்சாகம் கொப்புளிக்கும் பாலாவின் பாடலுக்குப் பின்னால்தான் மற்ற பாலாவின் பாடல்கள் எல்லாம்.
'நாள் போகப் போக ஆசை உள்ளம் எங்கே போகுமோ? என்ன ஆகுமோ?
எங்கே போகுமோ?'
என்று எதிர்கால சந்தோஷ நினைவுகளை நினைத்து 'என்ன ஆகுமோ...இது எங்கு போய் முடியுமோ' என்று காதலன் இன்பக் கவலை ஒன்றை மட்டுமே படும்படி வார்த்தைகளில் கண்ணதாசன் விளையாடும் விளையாட்டே விளையாட்டு.
கேட்க, கேட்க, பார்க்க பார்க்க பரவசம் ஒன்றையே பரிசாகத் தரும் பாலாவின் பாடல் ஒன்று உண்டென்றால் அது இதுதான்.
http://i.ytimg.com/vi/irmgxxYkhkw/maxresdefault.jpg
ஓ...ஓ...ஒஹஹஹோ ஹஹஹா
ஒஹஹஹோ ஹஹஹா ஹா
லா...ஹஹஹா ஹோஹஹோ
ஹஹஹா ஹஹஹா ஹா
ஓ...ஓ...ஒஹஹஹோ ஹஹஹா
ஒஹஹஹோ ஹஹஹா ஹா
ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு
காணுது மனது ஹோ ஹோ
பெண்ணைத் தொட்ட உள்ளம்
எங்கும் இன்ப வெள்ளம்
எங்கே அந்த சொர்க்கம் ஹா(ங்)
எங்கே அந்த சொர்க்கம்
லா...ஹஹஹா ஹோஹஹோ
ஹஹஹா ஹஹஹா ஹா
ஓ...ஓ...ஒஹஹஹோ ஹஹஹா
ஒஹஹஹோ ஹஹஹா ஹா
ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு
காணுது மனது ஹோ ஹோ
பெண்ணைத் தொட்ட உள்ளம்
எங்கும் இன்ப வெள்ளம்
எங்கே அந்த சொர்க்கம் ஹா(ங்)
எங்கே அந்த சொர்க்கம்
பூவை அள்ளித் தந்தாள் அந்தப் பூந்தென்றல் அன்னம்
போதை கொண்டு ஆடும் எந்தன் மனமென்னும் கிண்ணம்
பூவை அள்ளித் தந்தாள் அந்தப் பூந்தென்றல் அன்னம்
போதை கொண்டு ஆடும் எந்தன் மனமென்னும் கிண்ணம்
என் கண்ணோடு பெண்மை ஒரு கதை படித்தாளோ
நான் காணாமல் நெஞ்சை அவள் படம் பிடித்தாளோ
நாள் போகப் போக ஆசை உள்ளம் எங்கே போகுமோ என்ன ஆகுமோ
எங்கே போகுமோ
ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு
காணுது மனது ஹோ ஹோ
பெண்ணைத் தொட்ட உள்ளம்
எங்கும் இன்ப வெள்ளம்
எங்கே அந்த சொர்க்கம் ஹா(ங்)
எங்கே அந்த சொர்க்கம்
மூடி வைத்த தட்டில் இன்று மோகச் சின்னங்கள்
ஆடுதொட்டில் போடும் எந்தன் காதல் எண்ணங்கள்
மூடி வைத்த தட்டில் இன்று மோகச் சின்னங்கள்
ஆடுதொட்டில் போடும் எந்தன் காதல் எண்ணங்கள்
கை கொள்ளாத வண்ணம் அவள் சுகம் கொடுத்தாளோ
நான் சொல்லாத சொல்லில் அவள் சுவை வளரத்தாளோ
நாள் போகப் போக ஆசை உள்ளம் எங்கே போகுமோ என்ன ஆகுமோ
எங்கே போகுமோ
ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு
காணுது மனது ஹோ ஹோ
பெண்ணைத் தொட்ட உள்ளம்
எங்கும் இன்ப வெள்ளம் எங்கே அந்த சொர்க்கம் ஹா(ங்)
எங்கே அந்த சொர்க்கம்
லா...ஹஹஹா ஹோஹஹோ
ஹஹஹா ஹஹஹா ஹா
ஓ...ஒஹஹஹோ ஹஹஹா
ஒஹஹஹோ ஹஹஹா ஹா
https://youtu.be/_ukBdTZTQgM
Gap filler
மருமகள் திரைப்படத்தில் ஓர் இனிமையான பாடல் !
https://www.youtube.com/watch?v=KkkbjDfCiJc
Quote:
ஜெமினியின் சில போஸ்கள் ரசிக்கத்தகுந்தவை. பாடலின் முதல் சரணம் முடிந்து இடையிசை துவங்கும் போது ஜெமினி வைக்கும் ஸ்டெப்ஸ் அப்படியே 'காலங்களில் அவள் வசந்தம்' பாடலைக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும். (ஒரு டர்ன் திரும்பி ரவுண்ட் அடிப்பார்) பின் இருபக்கமும் அசோகா மரங்களுக்கு இடையில் உள்ள பாதையில் காமெராவின் டாப் ஆங்கிளில் இருந்து பின்பக்கமாக நடந்து செல்வது செம டக்கராக இருக்கும்.
வாசு சார்
ஆயிரம் வளைவு ஆயிரம் நெளிவுசுளிவுடன் உங்கள் வர்ணனை மழையில் நனைய வைத்தமைக்கு நன்றித் தூறல்கள்!!
Quote:
இப்பாடல் காட்சிக்கு இன்ஸ்பிரேஷன் மழை நனைவுப் பாடல்களின் இலக்கண இலக்கியக் காட்சியமைப்பைக் கொண்ட Singing in the Rain (1952) திரைப்படமே! இப்புவியின் நம்பர் ஒன் நடன நாயகரான ஜீன் கெல்லியின் காலமழை கரைக்க முடியாத குடை டான்ஸ்!!
கதாநாயகியின் தீண்டுதலால் மகிழ்வு தூண்டப்பட்ட நாயகன் மழையில் நனைந்து ஓடி ஆடி பாடி தாண்டி ஆடுவதே தீம் !!
குடைநடனம் காதல்மன்னரின் நடன வரையறைக்கு அப்பாற்பட்டதால் ஸ்ரீதர் அவரது மென்மையான தன்மைக்கு ஏற்ப ஜெமினியை குடை பிடிக்காமல் மழையில் நனைய விட்டு விட்டார் !!
https://www.youtube.com/watch?v=w40ushYAaYA
Coming Up : The negative characterizations of GG!!
https://www.youtube.com/watch?v=NK-9e0YrdE8
மனதிற்கினிய அமரத்துவம் வாய்ந்த மதுர கானங்களை அள்ளித் தந்து நமது இதயங்களைக் கொள்ளை கொண்ட மெல்லிசை மன்னருக்கு காதல் மன்னரின் திரி சார்ந்த அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்
https://www.youtube.com/watch?v=KiYCD6Nldqg
https://www.youtube.com/watch?v=vHVwDiEr64Q
Recap on GG nostalgia
Gap filler from Movie Adhisaya Thirudan (1958) GG starrer, a quite entertaining film!
Watch the popular song முருகா என்றதும் உருகாதா மனம்
தனது காதல் நாயகி சாவித்திரிக்கு மலர் விற்பனையில் உதவிக்கரம் நீட்டிட ஒரு பள்ளிக்குழந்தை மேடை நடனத்தில் காட்டிடும் குதூகலத்துடன் ஏ அம்மாடி இந்த அரக்குப்பச்சை பாடலில் என்னமாய் வளைந்து நெளிந்து டப்பாங்குத்து குத்துகிறார் காதல்மன்னர்!!
https://www.youtube.com/watch?v=r7SQrGGVbw4