Quote:
Originally Posted by விகடன் / one of the Rajini rasigan
எங்களைப் பார்த்து வளர்ந்த விஜய காந்த் ரசிகர்கள்கூட
அழுது புலம்பும் அந்த ரஜினி ரசிகருக்கு வணக்கம்!!
இந்த ஒரு வரியால் நான் பதில் எழுதும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன் :P
அது எப்படி ஒரு ரசிகனை பார்த்து இன்னொரு ரசிகன் வளர முடியும்? எல்லா ரசிகனின் மனோபாவமும் ஒன்றுதானே.
ரஜினி ரசிகன் மட்டும் அப்படி என்ன ஸ்பெசல்? அவர்களை பார்த்து வளர்வதற்கு :roll:
கட் அவுட் வைத்தீர்கள், பாலபிசேகம் செய்தீர்கள், கும்பாபிசேகம் செய்தீர்கள், உங்கள் தலைவர் திரையில் தோன்றும்போது பேப்பர் பூ தூவிதீர்கள், பலருக்கு தான தர்மம் செய்தீர்கள்....... இதை MGR போன்றவர்களின் ரசிகர்கள் அன்றே செய்தது தானே ... அப்படி என்றால் MGR ரசிகர் என்ன சொல்வார்
ஒரு வேளை ரஜினியை பார்த்து விஜயகாந்த் நடிக்க வந்தார் என்று நீங்கள் சொன்னால் அதில் ஒரு அர்த்தம் இருக்கிறது.. அதுவும் கூட Inspiration என்றுதான் சொல்ல முடியும் .. வெறுமனே கண்மூடித்தனமான Follower கிடையாது
முதலில் இருந்து வருகிறேன்..
Quote:
Originally Posted by விகடன் / one of the Rajini rasigan
எந்தக் கட்சியையும் தொடங்காதபோதே, 'தலைவா' என்று உயிர் உருக உங்களை அழைத்த லட்சக்கணக்கான ரசிகர்களில் ஒரு துளி நான்.
அவர் கட்சியைதான் தொடங்கவில்லையே தவிர கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக அரசியலில் இருப்பதாக நான் கருதுகிறேன் .. அண்ணாமலை படம் வந்த நாட்களில் ஆரம்பித்ததாக படித்துள்ளேன் ...
ஆனால் அதற்கு முன்பே வெளியான "புலன் விசாரணை" படத்தில் "தமிழ்நாட்டுல உங்கள தெரியாதவங்க இருக்கமுடியுமா" என்று அரசியல் சாயம் கொண்ட வசனம் இடம் பெறுவதன் மூலம் விஜயகாந்த் எவ்வளவு அருமையாக காய் நகர்த்தியிருக்கிறார் என்று புரியும்....
Quote:
Originally Posted by விகடன் / one of the Rajini rasigan
எங்களைப் பார்த்து வளர்ந்த விஜய காந்த் ரசிகர்கள்கூட கரை வேட்டி கட்டிக்கொண்டு
ஏற்கனவே கூறியது போல், ரஜினி 20 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறார் .. மற்ற நடிகரை போல் அரசியல் தெரியாது - தேவையற்றது என்று முற்றிலுமாக மறுக்கவில்லை.. தேர்தலுக்கு தேர்தல் அவர் கொடுத்த அறிவிப்புகள் மக்களை கவர்கிறதா என்று சோதனை ஓட்டம் / கள பரிசோதனை நடதிப்பார்ததாகவே நான் கருதுகிறேன் ... மேலும் அண்ணாமலையில் இருந்து அல்லது அதற்கு பிறகு இருந்து அவர் படங்களில் அரசியல் வசனம் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.. அது அரசியல் வசனமாக எடுத்துகொள்ளப்படாது என்று எண்ணும் அளவுக்கு அவர் ஒன்றும் தெரியாதவர் அல்ல... அதனால் நீங்களும் கரை வேட்டி கட்டும் காலம் வெகு விரைவில் வரும்... எப்படி சொல்கிறேன் என்றால் .. சினிமா மற்றும் ஆன்மீக ரீதியில் நண்பராக இருந்த இளையராஜா மற்றும் சில பல திரைத்துறை நண்பர்களுக்கு சௌந்தர்யாவின் திருமண அழைப்பிதழை கூரியரில் அனுப்பி .. அனைத்து மட்ட அரசியல்வாதிகளை நேரடியாக சென்று அழைத்ததை பார்க்கும்போது இனி அவருடைய தேவை சினிமா அல்ல அரசியல்தான் என்று...
150 கோடி படம் நடித்து 300 கோடி பிசினஸ் பண்ணும் ரஜினியின் ரசிகன், படம் ரிலீஸ் செய்ய முடியாமல் இருக்கும் விஜயகாந்தின் ரசிகனை பார்த்து பொறாமைபடுவது மிக வேடிக்கையாக உள்ளது .. இங்கு <கடிதத்தில்> மட்டும் இல்லை .. ஒரு சில வலைபூக்களிலும் பார்த்துள்ளேன் ... இக்கரைக்கு அக்கரை பச்சை கதைதான்.. ரஜினி கூறியதை போல "ஒன்ன விட இன்னொன்னு பெட்டேராதான் இருக்கும்"
அடுத்த தேர்தலில் எந்த கரை வேட்டி .. அல்லது சொந்த கரை வேட்டியா என்று அவர் கூறுவார்..
அதனால்... முத்திரை குத்தும்போது மூக்கை சிந்தலாம் ... இப்போது சிரிச்ச முகத்தோடு எந்திரனை வரவேற்க தயாராகுங்கள் :)
இப்படிக்கு,
நான் :P