எல்லோருக்கும் நன்றி... உங்க அன்பெல்லாம் இருக்கும்போது எனக்கென்ன குறை..?
ஒருவழியாக உஷா, தொல்ஸின் டைரியை மூடிவைத்துவிட்டு, உற்ங்கிக்கொண்டிருக்கும் தொல்ஸைப்பார்த்து, 'இவருக்குள் இவ்வளவு மனக்காயமா' என்ற சிந்தனையுடன் அவ்விடத்திலிருந்து செல்கிறாள்.
கதை நடப்புலகுக்கு வந்து விட்டது.... (இன்னொரு ஃப்ளாஷ்பேக் வரும்வரை)
ஒண்ணுக்கும் உதவாத தன் அப்பாவை அம்மா ஏன் வீட்டுக்கு அழைத்துவரவேண்டுமென்று பிடிவாதம் செய்கிறாள் என்று அலுத்துக்கொள்ளும் ஆதியிடம், கிரி இதைவிட முக்கியமான வேலைகள் இருப்பதாகவும் முத்லில் அசோஸியேஷன் தலைவர் தேர்தலில் வெற்றிபெற வேன்டுமென்றும் சொல்ல, அதற்கு ஆதி 'நிச்சயம் நான்தான் ஜெயிப்பேன். அந்த அபிக்கு கிழவன் வரதராஜன் போன்ற ஒருசிலருடைய ஆதரவு இருக்கலாம், ஆனால் பெரும்பாலோர் என் பக்கம்தான். நான் ஜெயிச்சதும் அவங்களையெல்லாம் என்ன பண்றேன்னு பார்' என்று சொல்கிறான். அப்போது போன், மேனகாவிடமிருந்துதான். அந்த இரவிலும் உடனடியாக வீட்டுக்கு வரும்படி சொல்கிறாள்.
மேனகாவின் வீட்டில் அவளை கிரியுடன் போய் சந்திக்க, அவளும் தலைவர் தேர்தல் பற்றியே பேசுகிறாள். ஆனால் அவள் சொல்லும் வழி வேறு. அபியை எதிர்த்து நின்று ஜெயிப்பதைவிட, அவளை தேர்தலிலேயே நிற்காமல் செய்ய வேண்டும். ஆதியை எதிர்த்து நிற்கணும்னு எதிர்காலத்தில் யாருக்குமே ஒரு எண்ணம் வரக்கூடாது. அந்த அளவுக்கு அவளுக்கு ஒரு பாடம் புகட்ட வேன்டுமென்று சொல்ல, ஆதியும் அதே எண்ணத்துடன் புறப்படுகிறான்.
(மீனவர் குப்பத்து செல்லம்மாவாகவும், கோடீஸ்வரி மேனகாவாகவும் இருவேறுபட்ட பாத்திரங்களில் எவ்வளவு வித்தியாசமான நடிப்பு...!!!!)