-
-
அன்புள்ள வாசுதேவன் சார்,
சுதந்திர தினத்தையொட்டி தாங்கள் அளித்திருந்த அனைத்து ஆவணங்களும் சூப்பரோ சூப்பர். 'ஜெமினி சினிமா'வில் வெளிவந்த இளையதிலகம் பிரபுவின் கட்டுரை கனஜோர். தன் தந்தையாரைப்பற்றியும், தந்தையின் தந்தையாரைப்பற்றியும் சிறப்பாக நினைவுகூர்ந்துள்ளார்.
கப்பலோட்டிய தமிழன் விளம்பரமும் அசத்தலாக, டைம்லி பிரசண்டேஷனாக இருந்தது. பெருந்தலைவரும் அண்ணனும் இணைந்திருக்கும் நிழற்படமும் அருமை.
நடிகர்திலகத்தின் திரைநாயகியர் வரிசையில், சுதந்திர திருநாளையொட்டி 'திருமதி வ.உ.சி.'யாக ருக்மணி தோன்றிய ஸ்டில்களைப்ப்தித்ததும் டைம்லி ஆக்ஷன். நீங்கள் குறிப்பிட்ட படங்களோடு, சமீபத்தில் தமிழகத்தையே கலக்கிய 'கர்ணன்' திரைக்காவியத்தில் கர்ணனின் வளர்ப்புத்தாயாகவும் நடித்திருக்கிறார் ருக்மணி. (நாயகனாக பிரபுவின் அப்பா, தாயாக லட்சுமியின் அம்மா, மாமியாராக ஜெயலலிதாவின் அம்மா, ஜோடியாக கனகாவின் அம்மா, எதிரியாக கார்த்திக்கின் அப்பா... ஒரே கலக்கல்தான்).
இதயம் பேசுகிறது பத்திரிகைக்காக அதன் ஆசிரியர் மணியனே நேரடியாக நடிகர்திலகத்தை பேட்டிகண்ட அரிய ஆவணத்தை அளித்தமைக்கு மிக்க நன்றி.
1967-ல் தன்னுடைய முதல் வெளிநாட்டுப்பயணத்துக்கு நடிகர்திலக்ம் மாலையிட்டு ஆசி வழங்கியதை நினைவுகூர்ந்துள்ளார் மணியன் (இந்நேரத்தில் 67-ல் அழகிய சுருள்முடியுடன் கூடிய ஸ்லிம்மான நடிகர்திலகத்தை நாம் மனக்கண்ணில் நிறுத்த வேண்டும்). ஆனால் அப்படிப்பட்ட மணியன் இடையில் ஏன் தடம்புரண்டதோடு இடையூறுகளிலும் ஈடுபட்டார் என்பது தெரியவில்லை.
1968 இறுதியில், ஐரோப்பிய நாடுகளில் சிவந்த மண் படப்பிடிப்பை முடித்து விட்டு வந்த கையோடு, அந்த அனுபவங்கள் குறித்து, படம் வெளிவருவதற்கு முன்பாகவே, தான் துணையாசிரியராக இருந்த ஆனந்த விகடன் பத்திரிகையில் எழுதுவது தொடர்பாகவும் நடிகர்திலகத்தை சந்தித்தார் மணியன். நடிகர்திலகம் எழுதிய அந்த தொடர்கட்டுரையின் தலைப்பு 'அந்நிய மண்ணில் சிவந்த மண்'. நடிகர்திலகத்தின் கட்டுரை துவங்கிய அதே இதழில் மணியன் 'உண்மை சொல்ல வேண்டும்' என்ற தன் புதிய தொடர்கதையையும் துவங்கினார். (அதற்கு முன்பு 'உன்னை ஒன்று கேட்பேன் என்ற தொடர்கதையையும், பின்னர் 74-வாக்கில் 'என்னைப்பாடச்சொன்னால்' தொடர்கதையையும் எழுதினார்).
அப்போது நடிகர்திலகத்தும் மணியனுக்குமிடையே நடந்த உரையாடலும் ஆனந்தவிகடனில் பேட்டியாக வெளியாகியிருந்தது. அதன்பின்னர் மணியன் நடிகர்திலகத்தை விட்டு விலகிப்போனார்.
அப்புறம் நடந்தவற்றை நடிகர்திலக்ம் திரியின் 9-ம் பாகத்தில் நமது வரலாற்று விற்பன்னர் முரளி சீனிவாஸ் அவர்கள் எழுதிய மெகா கட்டுரையில் பார்த்திருக்கலாம்.
-
அன்புள்ள 'நட்புத்திலகம்' வினோத் சார்,
கிடைத்தற்கரிய பொக்கிஷங்களான 'எங்கிருந்தோ வந்தாள்' 100-வது விழாவில் நடிகர்திலகம் ஷீல்டு பெறும் நிழற்படத்தையும், 'திரிசூலம்' வெள்ளி விழாவில் ஷீல்டு வழங்கும் நிழற்படத்தையும் பதிவிட்டு அசத்தி விட்டீர்கள்.
திரிசூலம் வெளிவந்த காலத்தில் நடிகர்திலகம், முன்பு பல காலமாக அணிந்து வந்த சந்தன கலர் குர்தாவிலிருந்து மாறி, மெரூன் கலரில் வேஷ்டியும் அதே கலரில் ஜிப்பாவும் அணிவதை வழக்கமாக வைத்திருந்தார். (நட்சத்திரம் படத்தில் இறந்துபோன ஸ்ரீபிரியாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரும்போது அதே உடை அணிந்திருப்பார்). திரிசூலம் விழாவில் அணிந்திருப்பதும் அதே உடைதான்.
அசத்தல் ஆவணங்களுக்கு நன்றி
-
-
-
-
-
-
-
டியர் வினோத் சார்,
நீங்கள் அளித்திருக்கும் புகைப்படங்கள் அத்தனையும் அற்புதங்கள். குறிப்பாக நதியும், b.r. பந்துலுவும் எடுத்துக்கொண்ட படம், எகிப்தின் பிரமீடுகள் அருகே (உடனிருக்கும் மற்றொருவர் யாரென தெரியவில்லை) எடுத்துக்கொண்டவைகள், வீரபாண்டிய கட்டபொம்மன் படப்பிடிப்பில் எடுத்துக்கொண்டவைகள் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் ஆசியா-ஆப்பிரிக்க திரைப்பட விழாவில் பெற்ற விருதுகளை பறை சாற்றுகின்றன. , மதியும் நதியும் இணைந்திருக்கும் படம் மதி நதியை சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப் பட்டதற்காக வாழ்த்தும் தருணத்தில் எடுக்கப்பட்டது என்று நினைக்கிறேன். வாழ்த்துகள்.