அரங்கின் உள்ளே - முகராசி திரைக்காவியம்
http://youtu.be/nn9dYaoITFk
Printable View
அரங்கின் உள்ளே - முகராசி திரைக்காவியம்
http://youtu.be/nn9dYaoITFk
It gives me very great pleasure to note that -
1. The film 'MUHA RAASI' a Black & White Movie, even after short gap of release, set NEW RECORD in Kovai by making HOUSE-FULL SHOWS and continuing 2nd week.
2. The movie 'URIMAIKKURAL" also created another RECORD in Kovai, running with House-full Shows and huge crowd for every show.
Such sort of Achievements can be made only by our beloved God M.G.R. and nobody else in the World.
We are all happy and proud to say M.G.R. Fans / Devotees.
Thank you all My Dear Brothers -
Mr. Ravichandran, for the excellent PHOTOS of our BELOVED GOD MGR and information on "Muharaasi"
Mr. Kaliyaperumal - posting the IMAGES OF OUR BELOVED GOD M.G.R. exhibited in front of Kovai Royal Theatre and narrating the information on URIMAIKKURAL
Mr. Velur Ramamoorthy - For taking the Photographs, at every angle, pertaining to the film 'URIMAIKKURAL"
Mr. VINOTH .... for your continuous posting of Kannada News Paper cuttings relating to our beloved GOD's Movies.
Ever Yours
S. Selvakumar
Endrum M.G.R.
ENGAL IRAIVAN
AT MAHALAXMI THEATRE, CHENNAI
http://i39.tinypic.com/vi1y85.jpg
AT MAHALAXMI THEATRE, CHENNAI
http://i44.tinypic.com/28816pf.jpg
TVL. C.S.KUMAR, BANGALORE VINOD, DON & LOGANATHAN, CHENNAI
http://i44.tinypic.com/2mfdsme.jpg
now in sunlife tv
makkal thilagathin
chandrothayam
msg. From mr.loganathan, chennai
சென்னை மகாலட்சுமி அரங்கில் மக்கள் திலகத்தின் ''இன்று போல் என்றும் வாழ்க '' பட போஸ்டர்கள் பதிவுகள் மற்றும்
கோவை நகர மக்கள் திலகத்தின் முகராசி - உரிமைக்குரல்
படங்களின் அரங்க நிழற் படங்கள் , வீடியோ என்று அருமையான பதிவுகளை வழங்கிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .
மக்கள் திலகத்தின் ''மலர் மாலை ''- 1
இனிய நண்பர் திரு பம்மலாரின் அரிய் முயற்சியில் வெளிவந்த முதல் வரலாற்று புகழ் மக்கள் திலகத்தின் புகைப்பட ஆல்பம் .நூல் அறிமுக விழாவில் புதிய சாதனை படைத்த மலர் .
உலகமெங்கும் உள்ள மக்கள் திலகத்தின் ரசிகர்கள் கையில் இந்த மலர் கிடைத்திருப்பது நமக்கு கிடைத்த பெருமையாகும் .விரைவில் இந்த சாதனை ஒரு பெரிய ளவில் பேசப்படும் என்று தெரிகிறது .
மலர் மாலை தொடர்ந்து மக்கள் திலகத்தின் மலர் மாலை -2 ''தகவல் களஞ்சியம் '' பிரமாண்ட மலராக உருவாகி வருகிறது .மக்கள் திலகத்தின் ரசிகர்கள் சென்னை - மதுரை - கோவை -திருச்சி
வேலூர் -சேலம் - புதுவை -திருப்பூர் - பெங்களுர்-மன்னார்குடி - திண்டுக்கல் -நெல்லை -தேனி
ஷிமோகா - ஆரணி போன்ற நகரங்களில் இருந்து தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவதற்கு நன்றி .
விரைவில் மக்கள் திலகத்தின் புகழுக்கு தொடர்ந்து பல மலர் மாலைகள் சூடப்படும் என்பதை
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு தெரிவிக்கபடுகிறது .
உலகமெங்கும் உள்ள மக்கள் திலகத்தின் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்பார்கள் என்று
எதிர் பார்க்கிறோம் .
திரு பம்மலாரின் இந்த ஆக்கபூர்வமான , பணிக்கு நம்முடைய நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம் .
http://i39.tinypic.com/zv7mo6.jpg
Image recd from Mr.Haridass, Coimbatore
மக்கள் திலகம் அவர்களின் ''மீனவ நண்பன் '' இன்று 36வது ஆண்டு நிறைவு நாள் .
http://i44.tinypic.com/1el66w.jpg
மீனவ நண்பன் சிறப்பு தகவல்கள் .
மக்கள் திலகம் நடித்த கடைசி சமூக படம் .
மக்கள் திலகம் தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின்னர் வந்த முதல் படம் .
இயக்குனர் ஸ்ரீதரின் இரண்டாவது மக்கள் திலகம் படம் .
மக்கள் திலகம் அதிக சம்பளம் வாங்கிய படம் [22லட்சம் ]
14.8.1977 அன்று வெளியாகி வெற்றிகரமாக 100 நாட்கள் ஓடிய படம் .
கடற்கரை மணலில் மக்கள் திலகம் - நம்பியார் மோதும் கத்தி சண்டை அருமை .
மக்கள் திலகத்துடன் நம்பியார் - வீரப்பா -வி.கே . ராமசாமி - வெண்ணிற ஆடை நிர்மலா - தேங்காய் ஸ்ரீனிவாசன் - நாகேஷ் - சச்சு ஆகியோர் நடித்த படம் .
நேருக்கு நேராய் வரட்டும் பாடலில் மக்கள் திலகத்தின் நடிப்பு பிரமாதம் .
பட்டத்து ராஜாவும் -- பட்டாள சிப்பாயும் .. பாடலில் மக்கள் திலகத்தின் நடனம் வெகு சிறப்பாக இருந்தது ,
பொங்கும் கடலோசை பாடலில் வாணிஜெயராமின் குரல் தேனமுது .
கண்ணழகு சிங்காரிக்கு - காதல் பாடலில் மக்கள் திலகம் - லதா ஜோடி சூப்பர் .
தங்கத்தில் முகமெடுத்து ... சந்தனத்தில் .. கனவு பாடல் விழிகளுக்கு விருந்து .
நேரம் பௌர்ணமி ..நேரம் - மனதை கொள்ளை அடித்த பாடல் .
மெல்லிசை மன்னரின் இசை - மிகவும் அருமை .
ஒரு நல்ல பொழுது போக்கு படம் . மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பு - சண்டை காட்சிகள்
ரசிகர்களுக்கு விருந்து .
இன்று படம் பார்த்தாலும் புத்தும் புது படம் போல் மனதிற்கு நிறைவு தரும் படம் - மீனவ நண்பன் .
மக்கள் திலகம் தன்னுடைய 60 வயதில் இளமை சுறுசுறுப்புடன் , எழிலான தோற்றத்தில் படம் முழுவதும் ரசிகர்களின் உள்ளத்தில் இடம் பிடித்த படம் .
நல்ல கருத்துக்களுடன் - வசனத்துடன் - இயக்குனர் ஸ்ரீதரின் கை வண்ணத்தில் வந்த வெற்றி காவியம் '' மீனவ நண்பன் '' - மக்கள் திலகத்தின் வைர கிரீடம் . ரசிகர்களுக்கு அமுத சுரபி .
எம்ஜிஆர் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்
எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது அவரது மூத்த அமைச்சரின் வாரிசு திருமணம். வடபழனியில் உள்ள பிரபல மண்டபத்தில் காலையில் நிகழ்ச்சி. காலையில் கோட்டைக்கு சென்றிருந்த எம்ஜிஆர் கையசைக்க உடனே அவரின் கார் வடபழனி நோக்கி பறக்கிறது. மண்டபத்தில் இருந்தவர் மத்தியில், எம்ஜிஆர் வருகிறார் என்று ஒரே பரபரப்பு/
ஆனால் கோடம்பாக்கம் மேம்பாலம் கிட்டே வந்தவுடன் பாலத்தின் மேல் செல்லாமல் முன்னே செல்லும் கான்வாய் கார்களுக்கும் தெரியாமல் திடீரென உஸ்மான் ரோடு திரும்பி தி.நகர் வழியாக முதலமைச்சரின் கார் பயணிக்கிறது. நேராக சைதாப்பேட்டை பாலத்தில் சென்று வலதுபுறம் திரும்பி சலவைத்தொழிலாளார்கள் குடியிருப்புக்கு செல்கிறார் எம்ஜிஆர்.
ஏற்கனவே பலத்த மழை பெய்ததில் அந்த பகுதியே வெள்ளத்தில் மிதக்கிறது. ஆனால் எம்ஜிஆர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் காரை நிறுத்தச்சொல்லிவிட்டு வேட்டியை மடித்துக்கொண்டு சரசரவென ஒரு சந்தில் கால்நடையாக செல்கிறார்.. பாதுகாப்பு அதிகாரிகளும் புரியாமல் அவர் பின்னே ஓடுகிறார்கள்.
கடைசியில் அங்கே ஒரு வீட்டில் கல்யாணம் நடந்துகொண்டிருக்கிறது. எம்ஜிஆர் வருவதை பார்த்ததும் அவசரமாக நாற்காலியை தேடுகிறார்கள். ஒரு காலுடைந்துபோன நாற்காலிக்கு நான்கைந்து செங்கற்களை முட்டுக்கொடுத்து அதிலே எம்ஜிஆரை உட்கார வைக்கிறார்கள்.
எம்ஜிஆரும் மணமக்களை வாழ்த்திவிட்டு, வழக்கம்போல் யாருமே எதிர்பார்க்காத பெரும் தொகையை அன்பளிப்பாக கொடுக்கிறார். அதனபிறகு அவர் கோட்டைக்கு மீண்டும் பறந்துவிடுகிறார்.
முதலமைச்சர் எம்ஜிஆர் போன கல்யாணம் வேறு யாருயுடையதுமல்ல, அவருக்கு வழக்கமாக துணிகளை சலவைசெய்துகொடுப்பவரின் குடும்பத்துடையது.
அப்படியே, சின்ன பிளாஷ்பேக்.
அந்த சலவைத்தொழிலாளி தன் குடும்பத்து திருமண பத்திரிகையை ஜானகி அம்மையாரிடம் கொடுக்கிறார். ஜானகியும் அதை வாங்கிக்கொண்டு அப்போதே ஒரு தொகையை கல்யாண சீதனமாக கொடுக்கிறார். முடிந்தால் மட்டுமே தலைவர் கல்யாணத்துக்கு வருவார் என்று சொல்லிஅனுப்புகிறார்.
அப்போது சல்வைத்தொழிலாளி, தலைவர் கல்யாணத்துக்கு வராவிட்டாலும் பரவாயில்லை. பத்திரிகையையாவது பார்க்கும்படி செய்துவிட்டால் அதுவே போதும் என்கிறார். ஜானகியும் உடனே வாக்குறுதி அளித்துவிட்டு எம்ஜிஆர் தினமும் எழுதும் டைரியில் தேதிக்கேற்ற இடத்தில் அந்த பத்திரிகையை வைத்துவிடுகிறார். அதைப்பார்த்துதான் முதலமைச்சர் எம்ஜிஆர் கல்யாணத்திற்கு போயிருக்கிறார்.
From Jayaveeran quoted by Kumar Rajendran.
தற்போது வசந்த் டிவியில் நம் தங்கரத்தினத்தின் 'நவரத்தினம்' திரைக்காவியம் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. - தகவல்: வேலூர் திரு. ராமமூர்த்தி
http://i43.tinypic.com/24ytv7b.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://youtu.be/MPs95OebFTU
courtesy: Velore Thiru. Ramamoorthy
http://youtu.be/V9S5L8XBkRY
courtesy: Velore Thiru. Ramamoorthy
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
நாணயத்தில் நமது தலைவர்.
http://i125.photobucket.com/albums/p...psd8621c2b.jpg
முதல் முயற்சி
http://i39.tinypic.com/1z2kqx4.jpg
உயர்ந்த உள்ளம்
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
1972 ஆண்டில் வந்து சாதனை படைத்த மக்கள் திலகத்தின் காவியங்கள் .
1. சங்கே முழங்கு
2. நல்ல நேரம்
3. ராமன் தேடிய சீதை
4. நான் ஏன் பிறந்தேன்
5. அன்னமிட்ட கை
6. இதய வீணை
சங்கே முழங்கு -
மக்கள் திலகம் முருகன் -கிருபால் சிங் என்ற பாத்திரத்தில் அருமையாக நடித்தார் .
பொம்பள சிரிச்சா போச்சு என்ற கிண்டல் பாடலில் மக்கள் திலகம் லக்ஷ்மியை கிண்டல் செய்யும்
பாடல் அட்டகாசம் .பிரமாதமாக நடனமாடி நடித்திருப்பார் . சிலர் குடிப்பது போல் நடிப்பார் என்ற பாடலில் ஹெலனுடன் நடனமாடி அசத்தியிருப்பார் . நாலு பேருக்கு நன்றி என்ற பாடலில் மௌனத்தாலே நடித்திருப்பார் . தமிழில் அது ஒரு ..... மற்றும் இரண்டு கண்கள் ... பாடலில் வித்தியாசமான உடையில் தோன்றி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் ..கிளைமாக்ஸ் காட்சியில்
கோர்ட் காட்சிகளில் குறுக்கு விசாரணையில் அசத்தியிருப்பார் . மொத்தத்தில் சங்கே முழங்கு
முழங்கியதின் மூலம் 1972 தொடர் வெற்றிக்கு வித்திட்ட காவியம் .
நல்ல நேரம் .
தேவரின் இமாலய வெற்றி . படம் . மக்கள் திலகம் அறிமுக காட்சியில் யானைகளுடன் கால் பந்து விளையாடும் காட்சி -இளமை - இனிமை - புதுமை .
இனிய பாடல்கள் - ஜனரஞ்சகமான படம் .
ஓடி ஓடி உழைக்கணும் பாடல் - இளமை துள்ளும் எம்ஜியாரின் வெற்றி பாடல் .
ராமன் தேடிய சீதை .
மக்கள் திலகம் நடித்த இந்த படத்தில் மொத்தம் 45 வித விதமான உடைகளில் தோன்றிய ஒரே படம் .
திருவளர்செல்வியோ
என் உள்ளம் உந்தன் ஆராதனை
நல்லது கண்ணே
முத்தான மூன்று காதல் கீதங்கள் . என்றென்றும் நம் நினைவில் சுழலும் பாடல்கள் .
ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பெற்ற படம் .
நான் ஏன் பிறந்தேன்
மக்கள் திலகம் நடித்த குடும்ப சித்திரம் . எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் . குறிப்பாக
நான் பாடும் பாடல் .. நலமாக வேண்டும்
உனது விழியில் எனது பார்வை ..
இரண்டு பாடகள் போதும் படத்தின் வெற்றிக்கு . மக்கள் திலகத்தின் இனிய நடிப்பில் வந்த
குடும்ப காவியம் .
அன்னமிட்ட கை
மக்கள் திலகத்தின் கடைசி கருப்பு வெள்ளை படம் .
எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்
மயங்கி விட்டேன் .. உன்னை கண்டு
பதினாறு வயதினிலே
அன்னமிட்ட கை . நம்மை ஆகி விட்ட கை
41 ஆண்டுகளாக ஒலித்து கொண்டிருக்கும் பாடல் .
மக்கள் திலகத்தின் கோல் சண்டை - விறுவிறுப்பாக இருந்தது .
தேர்தல் நேரத்தில் ஒலித்த பாடல் . 2014 தேர்தலில் ஒலிக்கபோகும் பாடல் .
இதயவீணை
மணியனின் நாவல் . இயற்கை எழில் பொங்கும் காஷ்மீரில் படமாக்கப்பட்ட படம் .
மக்கள் திலகின் மாறுபட்ட சிகை அலங்காரம் இந்த படத்திற்கு ஸ்பெஷல் .
ஆரம்ப பாடல் இதுவரை எந்த படத்திலும் வராத புதுமையான ஜாலி பாடல் . மக்கள் திலகம்
அட்டகாசமாக காஷ்மீர் - காஞ்சிபுரம் பெருமைகளையும் , தன்னுடைய எதிர்கால அரசியல்
பற்றியும் கூறும் பாடல் .பொருத்தமான பாடல் .1972 அரசியல் வெற்றிக்கு பின் வந்த படம் .
1972 ஆண்டடில் மட்டும் ஆறு படங்கள் என்று கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு விருந்த படைத்த நம் மக்கள் திலகத்தின் சாதனைகள் என்ன வென்று சொல்ல ? காவிய படைப்புகள் .
1972 அரசியலிலும் அறிமுக வெற்றி - படங்களும் வியாபார ரீதியாக அமோக வெற்றி .
நினைவுகளை அசை போட வைத்த இனிய நண்பர் திரு கோபால் அவர்களுக்கு நன்றி .
இந்திய அரசியல் தலைவர்கள்
1980
முன்னாள் ஜனாதிபதி வி.வி.கிரி அவர்களின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட தலைவர்கள் .
அன்றைய பாரத ஜனாதிபதி - ஜைல்சிங்-தமிழக ஆளுநர் - மத்திய அமைச்சர்கள்
தமிழக முதல்வர் திரு எம்ஜிஆர் ,. திமுகதலைவர் திரு கருணாநிதி மற்றும் முக்கிய பிரமுகர்கள் .
http://i44.tinypic.com/259zyhk.jpg
அன்புச் சகோதரர் திரு.வினோத் அவர்கள் அறிவது :
1972 ம் ஆண்டில் வெளிவந்த நமது மக்கள் திலகத்தின் படங்களைப் பற்றிய தங்களின் தொகுப்பு அருமை.
நேற்று (13-08-13) இரவு மெகா தொலைக்கட்சியில் ஒளிபரப்பிய "சங்கே முழங்கு" திரைப்படத்தில் இடம் பெற்ற "பொம்பளை சிரிச்சா போச்சு" பாடலில், நமது "எழில் வேந்தன்" வெகு இயல்பாக நடித்து கலக்கியிருப்பதை காண கண் கோடி வேண்டும்.
1972ம் ஆண்டில் மட்டுமல்ல, 82 ஆண்டு கால தமிழ் திரை உலக வரலாற்றில் , நமது பொன்மனச்செம்மல் புரிந்த சாதனைகள், ஏனைய நடிகர்கள் எவராலும் முறியடிக்கப்பட வில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
பலரும் ஒப்புக்கொண்ட ஏற்றுக் கொண்ட உண்மையை, ஒரு சிலர், காலம் கடந்துதான் புரிந்து கொள்வர். அது வரை பொய்மையைத்தான் நம்பிக் கொண்டிருப்பார்கள். அந்தோ பரிதாபம் !
M.G.R. the EVER GREEN HERO சமூகப் படங்களிலும். சரித்திரப்படங்களிலும் நடித்து, ஆன்மீகத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு, புராணப் படங்களையும், பக்திப் படங்களையும் பெருமளவில் வரவேற்ற தமிழக மக்களின் மனம் கவர்ந்த நாயகனாகவும், பின்னாளில் அவர்கள் ஏற்றுக்கொண்ட மகோன்னத தலைவராகவும் திகழ்ந்தார்.
மக்கள் தம் மீது வைத்திருந்த அந்த அன்பின் காரணமாக, நம்பிக்கையின் காரணமாக, 1977-1987 காலத்தில் ஒரு பொற்கால ஆட்சியைத் தந்தார், நம் உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தெய்வமாய் இன்றும் விளங்கி வரும் புரட்சித் தலைவர்.
மறைந்து 25 ஆண்டுகள் ஆகியும் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று அவர்கள் போற்றும் உன்னத தலைவராக விளங்கி வரும் அந்த கலியுக கடவுளுக்கு நாமெல்லாம் பக்தர்கள் என்று
கூறிக் கொள்ளும் போது அளவிட முடியாத ஆனந்தமும், பேருவகையும் ஏற்படுகிறது.
ஓங்குக எமது குல தெய்வம் எம். ஜி.ஆர். புகழ். !
அன்பன் : சௌ.செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்