http://i68.tinypic.com/e0shp5.jpg
Printable View
Dear MS.Shardha Madam ,
welcome back and Glad for your recovery thru our favourite Pair of SS. Wish you were there while I was active here. Always we missed you you,Karthik which left a huge void. Though we tried to do something within our capacity,we are no match for pioneers like you and Karthik.
Thanks for your comeback and more awaited,
My Warmest Regards
Gopal
Muthaiyan,
We are happy with your comeback with Bang.
சாரதா மேடம் அவர்களே,
வருக...... தாங்கள் பூரண உடல்நலம்பெற வாழ்த்துக்கள்.......
திரு.முத்தையன் சார்,
தாங்கள் உடல்நலம் பெற்று திரும்பி அளித்துள்ள திரிசூலம் புகைப்படப் பதிவுகளுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
அன்புள்ள கோபால் சார்,
தங்கள் வரவேற்புக்கு கரிசனத்துக்கும் மிக்க நன்றி. நமக்குள் அதிகம் எழுத்து பரிச்சயம் இல்லாதிருந்த போதிலும், தங்கள் பதிவுகள் எல்லாவற்றிலும் மறவாமல் என்னைக் குறிப்பிடும் தங்கள் பண்பு கண்டு நெகிழ்ந்திருக்கிறேன்.
தங்களின் உலகளாவிய திரைப்பட ஆய்வு என்னை வியக்க வைத்துள்ளது. தங்கள் தொடர்ந்த பங்களிப்புக்கு வாழ்த்துக்கள்.
அன்புள்ள சந்திரசேகர் சார்,
தங்கள் வரவேற்புக்கும், என் உடல்நலம் பெற வாழ்த்துக்களுக்கும் நன்றி நான் தற்போது நன்றாக உள்ளேன்.
தங்கள் தலைமையில் நடிகர்திலகம் சமூக நல பேரவையின் சீரிய செயல்பாடுகளுக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சமூகநல பேரவையின் பங்களிப்பு உண்டா?. பலமான கூட்டனியில் சேர்ந்து நாகர்கோயில் போன்ற நடிகர்திலகத்தின் கோட்டைகளில் நமது வேட்பாளர்களை நிறுத்தும் எண்ணம் உள்ளதா?.
படம்: அந்தமான் காதலி
பாடல் ;"பணம் என்னடா பணம்"
https://www.youtube.com/watch?v=QBVKYfEyMeo
அந்தமானில் எடுத்து விட்டு, .சென்னை வந்த பிறகு . படத்திற்கு
இந்த பாடல்அவசியம் என்பதால் மதுரை அருகே அதே(அந்தமான் ) போல் காட்சி தரும் இடத்தில எடுக்க பட்டது
மதுரை விமானத்தில் இருந்து இறங்கும் பொழுது கால்
தடுக்கி விழுந்ததில் கால் Fracture. அருகே மதுரை hospitalil
காலில் கட்டு போட்டார்கள்.
நாங்கள் சென்னை திரும்பிவிடலாம் என்று முடிவு செய்த வுடன் .. சிவாஜி .. இல்லை. ஷூட்டிங் நிற்க கூடாது என்று பிடிவாதமாக அவர் எங்களுக்கு முன்னாடி தேக்கடி பக்கம் காரில் சென்றார் ,
மறுநாள் காலை ஷூட்டிங் ... மேக் அப் போட்டு ரெடி யாகி விட்டார்
இதில் அவருக்கு ஜுரம் வேறு .
ஒரே நாளில் ஷூட்டிங் .
அவர் சொன்னது "விரக்தியில் பாடர பாட்டு Moodum வலியும் sync ஆகும் . மலையின் மேடு பள்ளத்திலும் நடந்தார்.
அதுலேயும் அவரின் நகைச்சுவை உணர்வு :
"பணம் என்னடா பணம் பணம் .. காலை பார்த்து "குணம்
( கால் வலி ) தானடா நிரந்தரம்... அம்மா ( என்று சிரித்தார் ) "
இன்றும் பாட்டைஇப்ப முரசு டிவி யில் பார்க்கும் பொழுது .. அவர்
அவர் கஷ்ட்ட பட்ட நினைவுகள் .... மனதை நெருடும்...
thanks: Muktha Ravi Facebook...
படம் : தவப்புதல்வன்
பாடல் " இசை கேட்டால் புவி அசைதாண்டும் "
https://www.youtube.com/watch?v=V1gSMmHm1aQ
இந்த பாட்டு 5 நிமிடம் .. தான்சேன் பற்றிய கதை
தான்சேன் என்பவர் அகபர் காலத்தில் அரசவை
கவிஞர்- இசையால் நோய் குண படுத்தகூடிய
ஆற்றல் இருந்தது
அப்பா இந்த பாட்டை நடிகர் தில்கமிடம் போட்டு
காண்பித்தார் 2 முறை கேட்டார். இது Expression
based song .என்பதால்
விஷயத்துக்கு வரேன் :
அப்பா இந்தட்சனம் saigal தான்சேன் படம்
பார்க்க சொல்லி calcutta விலிருந்து print
வரவைக்க ஏற்பாடு பண்றேன் ன்னார்
நடிகர் திலகம் " ஆன் ஹான்- போ போ- மாட்டவே மாட்டேன் 'ன்னு ட்டார்
என் மனதில் நான் உருவக படுத்தின தான்சேன்
பிரகாரம் தான் நடிப்பேன் ..
படம் ரிலீஸ் பாட்டு hit .. பாட்டில் பல இடங்களஇல் claps
2 வருடம் கழித்து டெல்லியில் தான்சேன் வறை படம்
பார்த்தால் அப்படியே தாடியோட நடிகர் திலகம்
ஆச்சர்யம் இன்னும் அகலலை
நான் panvel il பொழுது போகாம தான்சேன் படம்
பார்த்தேன் saigal மட்டும் follow பண்ணி இருந்தால் அதுவும்
curve மீசை பாட்டு காமெடியா போயிருக்கும் ..
thanks: Muktha Ravi Facebook..
https://fbcdn-sphotos-d-a.akamaihd.n...c8bdb7283680aa
என்ன ஒரு தீர்க்கமான சிந்தனை... நடிகர் திலகம் என்றல் சும்மா வா ?
இப்படி கலைமகள் அருள் பெற்ற ஒரே நடிகன் இவர் அல்லவா ?
வியப்பின் உச்சியில் ....நான்....
நடிகர் திலகத்தை வைத்து" Nick of time"( English Movie) தழுவி அவருக்கு ஏற்றார் போல் கதையை brother சுந்தர் சொன்னான்.
Vidya Movies Banner Producers : muktha ravi. muktha govind
நடிகர் திலகத்துக்கு கதை ரொம்ப பிடித்து போய்விட்டது.
அது மட்டுமல்ல சதா அதே சிந்தனையில் தான் இருந்தார்
திரைக்கதை வசனம் " கோகுல் கிரிஷ்ணா'( பூவே பூசுடவா ,காதலுக்கு மரியாதை ஃப்ரெஂட்ஸ்) எழுத சொன்னோம்
சிவாஜியின் குடும்ப நண்பர்.. ஒரு மருத்துவர் கூட
" அந்த படம் பார்த்தேன். Stress And Emotion ஜாஸ்தி. அவரும் அந்த கதா பாத்திரமாக மாறிவிடுவார். அவர் உடல் நிலை தாங்கும்
சக்தி இல்லை. வேண்டாம் என்றார்" உடனே வேதனையுடன் Drop செய்தோம்.
ஆனால் நடிகர் திலகத்துக்கு கோபம் ... எனக்கு கண்கள் கலங்கியது..
thanks: Muktha Ravi Facebook..
U A A நாடகங்கள் என்றால்.. நடிகர் திலகம் விரும்பி பார்ப்பார். ஏனென்றால் கதையும் Screen Play பிரமாதமாக இருக்கும்.
1)பெற்றால் தான் பிள்ளையா.. அது தான் "பார் மகளே பார்" (கதைக்காக.. ஹீரொ வேடத்தில்இருந்து மாறுபட்ட தந்தை வேடம்)
2) கண்ணா நலமா? கௌரவம் ( Barrister Rajini Kanth)
பரிட்சைக்கு நேரமாச்சு (Nadathur Narasimmachary)
ஒரு நாடகம். "பத்ம வியூகம்" அல்லது " குரு க்ஷேத்ரம்" என்று பெயர்.
எப்படி நேர்மையான ஆசிரியரை சமுதாயம் Criminal ஆக்கியது என்று கதையின் போக்கு.
. அருமையான் திரைக்கதை... ARS Ygee Mahendra Chandra Mouli Balakrishna..( .. இன்னிக்கும் Mouli anna's " Alexander went to the war'.. alex alekh alekh.. Super குத்தாடடம் மறக்க முடியாது)
நடிகர் திலகத்துக்கு நாடகம் பிடித்து போய்.. அப்ப இருந்த அவரின் இயக்குநர்கள் எல்லோரும் போய் பார்த்த நாடகம் அது
.. .அவருக்கு Suit ஆகாது( Negative Role) என்று சொன்னாலும், அவருக்கு Character மேல் ஆசையினால் படமாக பண்ணனும் ரொம்ப முயற்சி செய்தார்.
அவருக்கு அந்த Character பண்ண முடியவில்லை ஒரு வருத்தம் உண்டு
thanks: Muktha Ravi Facebook..
நடிகர் திலகம் Observation அதிசய தக்கது .. பிரமிக்க வைக்கும்
180 டிகிரி... (3D) Observation
(உ ம்) படம்: அந்தமான் காதலி செட்டில்:
ரசிகர் மன்ற /காங்/ உறுப்பினர்களிடம் சூடான விவாதம் ஒருபக்கம்
.
திரிகோணமிடம் பெரியப்பா வுக்கு(தண்ணி கேட்டு 10 நிமிடம் ஆனதால் ) தண்ணி கொடுக்க சொல்லி Production Boys இடம்" எண்டா ராஜா குடிக்க தண்ணி கேட்டா இப்படி தான் லேட் கொடுப்பீங்களா ? (சிறு கண்டிப்பு டன்)
Shot il. ல அப்பாவிடம்.. சுஜாதாவின் ( Last Shot) Q Dialogue. சொல்லி.. "நான் இப்ப்டி நடந்து வந்து என் Dialogue. சொல்றேன்.. உனக்கு ஓகே வா?...
3 நிகழ்வுகள் ஒரே சமயம் At a Time response..
Avar Mind.. நாலு பக்கமும் சுற்றி நடக்கும் விஷயங்களை Observe .. செய்யும் ( powerful)
thanks: Muktha Ravi Facebook..
அண்ணன் சிவாஜி அவர்கள் தசாவதானி ! பத்து விஷயங்களை இராவணன் போல ஒரே நேரத்தில் நினைவு கூறும் ஆற்றல் மிக்கவர் !
Welcome back saradha madam,i pray in god for your good health,please continue enthralling us
அன்புச் சகோதரி சாரதா,
தாங்கள் நலமுடன் திரும்பியது மகிழ்ச்சி. தொடர்ந்து உடல் நலனில் கவனம் கொள்ளவும்.
அன்புடன்
ராகவேந்திரன்
அந்த நாள் திரைபடம் : நேற்று போட்டு காண்பித்தார்கள் : அப்பா உதவி இயக்குனர். அறுபது வருட ம் ஆகிறது ஆடிடர் ஸ்ரீதர் கூப்பிட்டார் ..
https://upload.wikimedia.org/wikiped...Andha_Naal.jpg
சாயந்திரம் என்னிடம்:
அப்பா: " அந்த நாள்" போனேன் அருமையாக நிகழ்ச்சி நடத்தினார்கள். இருந்தாலும் அந்த பையன் ஒருத்தன் தான் இப்ப உயிரோடு இருக்கான் அவன( அந்த பையன்) கூப்பிடலையே
நான்: எந்த பையன் பா ?
அப்பா : அதாண்டா அந்த ஐயம்பேட்டை பையன்
நான் : எந்த ஐயம்பேட்டை பையன் ?
அப்பா : போ உனக்கு சொன்னா புரியாது .. அதாண்டா
பாட்டு பாடுவானே
நான் : யாரு பா சீர்காழி கோவிந்தராஜன ?
அப்பா : போடா .. உனக்கு எதுவும் புரிஞ்சு தொலையாது
நான் : சரி ஓகே ... நான் பாடி(Padi) போகனும் .. கிளம்பறேன்
அப்பா : M.N Rajam புருஷன்
நான் : A.L Raghavan (கடுப்பாக) என்ன இப்போ?
அப்பா : அவன் சின்ன பையனா அந்த படத்துல நடிச்சான்
அதனால அவன கூப்பிட்டு இருக்கலாம்
நான் : அப்பா A L Ragavan நடிச்சது .M.N. ராஜதுக்கே ... தெரியுமான்னு தெரியல இதுல மத்தவாளுக்கு எப்படிபா தெரியும் ?
அப்பா ; சரி நீ ஆத்துக்கு கிளம்பு
thanks: Muktha Ravi Facebook..
திரு வீயார் சார்.. ... இது நம்ம NTFANs நிகழ்ச்சி பற்றி தானே...
என் மகன்
ஒரே மாதிரி முக தோற்றங்களில் தோன்றும் இரண்டு வேட நடிப்புகளையே பொளந்து கட்டுவார். இதிலோ இரண்டு மாறுபட்ட ஒப்பனைகள்.அவர் விடுவாரா? தியேட்டருக்குள் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பதே மறந்துவிடும் படம் முடிந்த பின்னால்தான் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் தியேட்டர் பெயரே நினைவுக்கு வரும்.அந்தளவுக்கு மெய் மறக்க வைத்து விடுவார்.நடிப்பில் வித்தியாசத்தை மிக அருமையாக கொடுத்திருப்பார்.
இந்தப்படத்தில்போலீஸ் ஏட்டு.,திருடன் என இரு வேடம்.ஆனால் அந்த ஏட்டு வேடத்தையே இரண்டு வித நடிப்புகளில் உருக்கியெடுத்திருப்பார்.போலீஸ் ஏட்டு ராமையா கேரக்டரில் நாணயமும் கண்டிப்பும் அந்த போலீஸ் உடுப்புடன் கலந்து கண்ணியமாய் வெளிப்படும்.வீட்டில்
குடும்பஸ்தரான தோற்றத்தில் அமைதியான தோற்றத்தில் அது வேற ட்ராக் என்பது போல் பயணிக்கும் அந்த நடிப்பு.
அவர் வரும் காட்சிகளில் சில:
ஆரம்பமாகும் முதல் காட்சியிலேயே அந்தக் கேரக்டரின் தனித்துவத்தை புரிய வைத்து விடுவார்.
தன் மகளிடம் தவறாக நடக்க முயன்ற பாலாஜியை அவர் வீட்டிலேயே அவருடைய தந்தையாராக வரும் விஎஸ்.ராகவனின் முன்பு பாலாஜியை எச்சரிக்கும் காட்சி யில் தான் எத்துணை துடிப்பு.
நான் தேவன்சார் என்று மீசையை முறுக்கி பேசும்போதும்
உங்களுக்கு தர வேண்டிய மரியாதையை மத்தவங்களுக்கு தர வேண்டிய அவசியமில்லை என்று பாலாஜிக்கு எச்சரிக்கை செய்வதும் கம்பால் சோபாவை அடித்து தன் கோபத்தை காட்டும்போதும் ராமையா கேரக்டரில் நடிகர்திலகம் அட்டகாசப்படுத்தியிருப்பார்.போலீஸ் உடுப்பை மாட்டிக்கொண்டாலே பரம்பரை
கர்வம் வந்து ஒட்டிக்கொண்டது போல் விரைப்பாய் நடிக்கும் நடிகர்களுக்கு போலீஸ் காரெக்டரில் எப்படி நடிக்க நடிக்கவேண்டும் என்பதற்கு சட்டதிட்டங்கள் ,வரைமுறைகள், பார்முலா, ரூட் எல்லாம் போட்டுக்கொடுத்தவர் நடிகர்திலகம் என்பதை எதிர்த்துப் பேச எவரும் கிடையாது.
மகளின் திருமணம் பற்றி பேசிக்கொண்டிருக்கையில் லஞ்சம் என்ற வார்த்தையை சம்பந்தி சொல்லியதும் துடித்துப்போவாரே.களங்கமில்லாத நடிப்பு. நல்ல தந்தையின் எதார்த்தமான வாழ்க்கைப்பதிவுகளாக அவை அமைந்திருக்கும்.போலீஸ் தோரணையில் தப்பித்தவறி ஒருமுக பாவனையோ., சின்ன ஷாட்டோ கூட இடம் பெறாமல் இந்தக்காட்சி அமைந்திருக்கும்.
திருட்டு சம்பந்தமாக மேஜரின் வீட்டில் விசாரணை நடக்கும் காட்சி.
முதலில் மகனைப் பார்ப்பார்.டயலாக் கிடையாது. முக பாவனை மட்டும்..அது பத்து பக்க டயலாக் பேசினால் எனன புரிந்து கொள்ள முடியுமோ? அதைச் செய்து காட்டியது போல் இருக்கும். திருட்டு நிருபணம் ஆனபின் தன் நம்பிக்கை வீண் போய்விட்டதே என்று ஆவேசம் கொண்டு மகனை பிரம்பால் விளாசித்தள்ளும் காட்சியில் அவர் அடிக்கும் ஒவ்வோர் அடியும் நம் உடம்பில் விழுவது போல் இருக்கும்.என்னஒரு ஆக்ரோசமான நடிப்பு.
தந்தையும் மகனும் சந்திக்கும்ஜெயில் காட்சி:
நான் ஏண்டா அழணும் என்று சொல்லும் போது வாயால் அந்த வார்த்தைகள் வந்து விழுந்தாலும் கண்களின் மூலமும் முக பாவங்கள் மூலமாகவும் அது உண்மை என்பதை எவ்வளவு அழகாக வெளிப்படுத்தியிருப்பார்.
போலீஸ் உடையில் தந்தைராமையா வாழ்ந்திருப்பார்.
மகனை பெயிலில் கூட்டி வரும் காட்சி:
இன்ஷ்பெக்டரிடம்...
இப்ப நான் அதிகாரியா வரல.இந்த பயலோடஅப்பனா வந்திருக்கேன் என்று சொல்லும்போதும்,
உத்தியோம்தான் அதிகாரி உள்ளம் அப்பனாச்சே
என்று உருகும்போதும் நம்மையும் உருக்கி விடும.தன் கண்ணிர்த்துளி ஏட்டில் விழுந்துவிடுவதும்போது அந்த ஏட்டில் உள்ள எழுத்துக்கள் அழியக்கூடாது என்பதற்காக அந்த ஈரத்தை டஸ்டர் வைத்து உறிஞ்சி எடுப்பதை காட்சிப்படுத்தலில் கூட அவரின்
காரெக்டர் குணம் தெரியும் படி காட்சி அமைந்திருக்கும்.டைரக்ஷன் டச் அது.அந்த சூழ் நிலையிலும்இப்படி ஒரு யோசனை வந்து இப்படி ஒரு ஷாட்டை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது.கதை ஆசிரியரின் கற்பனைக்கு பாராட்டுக்கள்.
சோன்பப்டி பாடல் +சண்டை காட்சிகள்:
சோன் பப்டி பாடலும் சரி அதைத் தொடர்ந்து வரும் சண்டைக்காசியும் சரி.இரு வேட ட்ரிக்ஸ் ஷாட்டுகளுக்கு நிறையவே பட யுனிட்டார் மெனக்கெட்டிருக்க வேண்டும்.பிரமிக்க வைக்கும் ஷாட்டுகள் நிறைய உண்டு.பாடலில் ஒரு சிவாஜி கண்ணாடியில் தெரிய மற்றொரு சிவாஜி ஆடுவது போல் எடுக்கப்பட்ட ஷாட் அருமை.சண்டைக்காட்சிகளிலும் ட்ரிக் ஷாட்டுகள் வியக்க வைக்கும்.
ராமையாத்தேவரின் கடைசி காட்சி:
ஆர் எஸ் மனோகரிடம் பேசும் வசனங்கள் கூர்கத்தியைப் போன்று வெகு ஷார்ப்.
காசை வைத்து என் கண்ணியத்தை விலை பேசுறியா.
என் பொண்ணு சும்மா போனாலும் போவா.இந்தப் பொன்னோட போக மாட்டா.
சப் இன்ஷ்பெக்டர் உடையில் அவர் நிற்பது, பேசுவது, அங்க அசைவுகளின் தோரணை, போலீஸ் கம்பீரம் மிடுக்காக இருக்கும்.
சண்டைக்காட்சியில் அனல் பறக்கும். கம்புச்சண்டையில்
வேகம் அபாரமாக இருக்கும்.
குண்டுகள் உடம்பில் பாய்ந்த பின்,
"எவன்டா கோழைப்பய பின்னாலிருந்து சுட்டான்.நான் தேவன்டா"
என்று சொல்லிக் கொண்டே துடி துடிதுடிக்கும்போது குண்டுகள் பாய்ந்த வேதனையை தத்ரூபமாக வெளிப்படுத்தி யிருப்பார்.நம்மை கட்டுப்படுத்த முடியாது பெரும் உணர்ச்சிகளுக்குஅந்தக்காட்சி அழைத்துச் சென்று விடும்.ராமையாவின் பாத்திர படைப்பு ..கதை ஆசிரியரோ டைரக்டரோ கூட இப்படி வெளிப்படும் என்று நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.
திரையுலக மன்மதன் சிவாஜியின் ராஜா திருச்சி கெய்ட்டியில் இன்று முதல் மக்களின் பேராதரவுடன் இனிதே
வெற்றிநடை போடுகிறது. வழக்கமான இத்திரை அரங்கில் வெளியாகும் படங்களுக்கு ஒட்டப்படும் போஸ்டரை விட பலமடங்கு அதிகவகவே ஊரெங்கும் ராஜாவின் போஸ்டர்கள் நம் பெருமைமிகு விநியோகஸ்தரால் ஒட்டப்பட்டுள்ளது.நாளை ஞாயிறு மாலை காட்சி அரங்கம் சிவாஜி ரசிகர்களின் ஆர்பாட்டத்தில் அலறப்போவது உறுதி
https://fbcdn-photos-a-a.akamaihd.ne...23cafc28ebc90d
https://fbcdn-photos-e-a.akamaihd.ne...653be54a7b5da3
Gap filler / Monotony breakers!
https://www.youtube.com/watch?v=t7enASyoTIs
https://www.youtube.com/watch?v=-bsMr_zG-3o
Gap filler / Monotony breakers!
https://www.youtube.com/watch?v=Gzb53iM_rGI