https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...6d&oe=5DE74ED2
Printable View
தங்கள் வாழ்த்திற்கும் பாராட்டிற்கும் உளமார்ந்த நன்றி சிவா.
10000 முத்தான பதிவுகள் கண்ட எங்கள் ஆசான் திரு ராகவேந்திரன் சார் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். தலைவர் ஆசியுடன் நீடு வாழ்க. வணங்குகிறேன்.
’’ நடிகர், தயாரிப்பாளர் உறவுக்கு சிவாஜியும் முக்தா சீனிவாசனும் ஒரு உதாரணம்’’ - ‘நிறைகுடம்’ அனுபவங்கள்... முக்தா ரவி பேட்டி
https://static.hindutamil.in/hindu/u...rge/510606.jpg வி.ராம்ஜி
‘’சம்பளத்தில் எப்போதுமே கறாராக இருக்கமாட்டார் சிவாஜி. அதேசமயம், படம் வெளியாகி நன்றாக ஓடியதும் அவருக்கு கூடுதல் தொகை கொடுக்க சென்றார் அப்பா முக்தா சீனிவாசன். ‘நிறைகுடம்’ படத்துக்காக நடஃத இந்தச் சம்பவத்தை மறக்கவே முடியாது’’ என்று முக்தா சீனிவாசனின் மகன் முக்தா ரவி தெரிவித்தார்.
முக்தா பிலிம்ஸ் தயாரிப்பில், முக்தா சீனிவாசன் இயக்கத்தில் இயக்குநர் மகேந்திரனின் கதை எழுத, நடிகர் சோ திரைக்கதை, வசனம் எழுத, சிவாஜியும் வாணிஸ்ரீயும் நடித்து வெளியானது ‘நிறைகுடம்’ திரைப்படம். 8.8.1969ம் ஆண்டு ரிலீசான இந்தப்படம்... இன்றுடன் 50 ஆண்டுகளாகிறது. இந்தப் படத்துக்கு வி.குமார் இசையமைத்திருந்தார்.
முக்தா சீனிவாசனின் மகன் முக்தா ரவி ‘நிறைகுடம்’ குறித்து தனக்குத் தெரிந்த தகவல்களை, ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்துக்கு, பிரத்யேகமாக பகிர்ந்துகொண்டார்.
அவரின் பிரத்யேகப் பேட்டி இதோ...
‘’அப்போதெல்லாம் சிவாஜி படம் என்றாலே, ‘சிவாஜிக்கு தனிப்பாடல் (ஸோலோ பாடல்) இருக்கிறதா?’ என்று விநியோகஸ்தர்கள் கேட்பார்கள். ‘நிறைகுடம்’ படத்தின் போதும் கேட்டார்கள். அதற்காகவே, ‘விளக்கே நீ கொண்ட ஒளியாலே...’ பாடல் உருவானது. ‘அருணோதயம்’ உள்ளிட்ட பல பாடல்களும் அப்படித்தான் உருவானது.
‘நிறைகுடம்’ படத்துக்கு சிவாஜி சாருக்கு குறைவான சம்பளமே தரப்பட்டது. முக்தா பிலிம்ஸ் கம்பெனியில் சிவாஜி சார் நடிக்கும் முதல் படம் இது. ‘நீ கொடுக்கறதைக் கொடு சீனு. படம் நல்லா வரணும். நல்லா சம்பாதிக்கணும்’ என்று சிவாஜி சார் ஒப்புக்கொண்டார். அப்பாவை (முக்தா சீனிவாசன்) சிவாஜி சாருக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.
பட வேலைகள் ஆரம்பித்தன. ஜாலியாக ஆரம்பித்து, சீரியஸாகப் போகிற கதை. சிவாஜி சார், மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட். ‘ஆப்தமாலஜிஸ்ட்’ மாணவன். கண் மருத்துவப் படிப்பு. இடைவேளைக்குப் பிறகு, ஒரு காட்சியில், கண் நோய் பற்றியும் அதில் உள்ள பாகங்கள் பற்றியும் டயலாக். சோ எழுதி, அதை டாக்டர் ஜகதீசன் என்பவரிடம் கேட்டு, விளக்கமாக எழுதி வாங்கி, சிவாஜி சாரிடம் கொடுக்கப்பட்டது. முழுக்க இங்கிலீஷில் பேசுகிற வசனம். ‘அந்த ஜகதீசனை வரச் சொல்லுங்கப்பா’ என்றார் சிவாஜி சார். அவரும் வந்தார். ‘நான் பேசிக்காட்றேன். சரியா இருக்கானு சொல்லுங்க’ன்னு இங்கிலீஷ் டயலாக்கைப் பேசிக் காட்டினார் சிவாஜி சார். அந்த டாக்டர் மிரண்டுபோயிட்டார். ‘என்னை விட பிரமாதமா இங்கிலீஷ் பேசுறீங்க சார்’ என்று பாராட்டினார். அதன் பிறகுதான், நடிக்கவே ஒப்புக்கொண்டார். ‘தப்பாயிடக்கூடாது பாரு, அதான்’ என்றார் சிவாஜி சார். அதுதான் சிவாஜி சார்.
படம் வெளியானது. எல்லோருக்கும் பிடித்த படமாக அமைந்தது. பத்திரிகைகளும் பாராட்டின. ஐந்தாறு வாரங்கள் கழித்து, அப்பா முக்தா சீனிவாசன், சிவாஜி சார் வீட்டுக்குச் சென்று ஒரு கவரைக் கொடுத்தார். அந்தக் கவரில் ஒரு பேப்பர் இருந்தது. அதில், படத்துக்கான பட்ஜெட், செய்த செலவுகள், விற்ற தொகை, கிடைத்த லாபம் என முழுவிவரங்களும் அப்பா எழுதியிருந்தார். ‘பரவாயில்லியே சீனு. நல்ல லாபம்தான் கிடைச்சிருக்கு. எனக்கு சந்தோஷம்டா’ன்னு மனதாரப் பாராட்டினார் சிவாஜி சார்.
உடனே அப்பா, இன்னொரு கவரை எடுத்து நீட்டினார். ‘இது என்னது?’ என்றார் சிவாஜி சார். வாங்கிப் பார்த்தார். அதில் பணம். கட்டுக்கட்டாக பணம். ‘இன்னிய தேதிக்கு உங்க சம்பளம் இதானே. ஆனா நான் அது தரலியே. படம் நல்லாப் போகுது. அதனால மீதத் தொகையை தரேன்’ன்னு அப்பா சொன்னார். ஒருநிமிடம் அப்பாவையே பார்த்துக்கொண்டிருந்தார் சிவாஜி சார். அவரின் தோளைத் தட்டிக் கொடுத்தார். ‘உன் நல்ல குணத்துக்குத்தான் இந்தப் படம் பண்ணினேன். இன்னமும் பண்ணுவேன். இதையும் லாபமா வைச்சுக்கோ சீனு’ என்று பணத்தை திருப்பிக் கொடுத்தார்.
ஆனால் அப்பா, பணத்தை வாங்கியே தீரவேண்டும் என்று சிவாஜி சாரிடம் உறுதியாக வலியுறுத்தினார். ’என்னடா சீனு. இப்படிப் பண்றே. சரி... வாங்கிக்கிறேன். கொடு. ஆனா ஒண்ணு. அடுத்தாப்ல நாம பண்ணப் போற படத்துக்கு, இதை அட்வான்ஸா வைச்சிக்கிறேண்டா’ என்று சொன்னார் சிவாஜி சார். அப்பா நெகிழ்ந்து போனார். சிவாஜி சாரின் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டார்.
அந்தக் காலத்தில் ஒரு நடிகருக்கும் தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்குமான உறவு எப்படி இருந்திருக்கிறது என்பதற்கு இதைவிட வேறென்ன உதாரணத்தைச் சொல்லமுடியும்?’’
இவ்வாறு முக்தா சீனிவாசன் மகன் முக்தா ரவி தெரிவித்தார்.
நன்றி இந்து தமிழ்
நன்றி Vasudevan srirangarajan
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...38&oe=5DD1388C
Thanks H O S (V C G Thiruppathy)
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...32&oe=5DDEA5F3
Thanks Rajaram Msr
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...c6&oe=5DA022C4
Thanks Sekar .P
அப்போதெல்லாம் நடிகர் திலகம் திரைப்படங்கள் மூன்றிலிருந்து நான்கு படங்கள் வரை ரிலீஸாகி ஓடிக்கொண்டிருக்கும் போது எம்ஜிஆர் இன் ஒரு படம் ரிலீஸாகி ஓடியிருக்கும்,
நடிகர் திலகத்தின் நான்கு படங்களில் மூன்று படங்கள் நூறு நாட்கள் கொண்டாடியிருக்கும் அதே வேளையில் எம்ஜிஆர் இன் ஒரு படமும் நூறு நாட்கள் கொண்டாடி இருக்கும்,
அந்த ஒன்றை வைத்தே. மூன்று படங்களுக்கு இணையாக விளம்பரம் செய்து மக்களிடையே எங்களது வெற்றித்தான் மிகப்பெரிய வெற்றி என விதைத்து விடுவார்கள்,
இப்போது இந்த டிஜிட்டல் க...ாலத்தில் அந்த நடைமுறை தலைகீழாக மாறி இருக்கிறது,
வசந்த மாளிகை டிஜிட்டலில் ரிலீஸாகி ஓடிக்கொண்டிருக்கும் போது 30 க்கும் மேற்பட்ட புதிய படங்கள் ரிலீஸாகி வந்து போனது போலவே எம்ஜிஆர் இன் 8 திரைப்படங்கள் பல்வேறு தியேட்டர்களில் ஓட்டி முடித்து இருக்கிறார்கள், உச்சக்கட்டமாக சென்னை அகஸ்தியாவில் மட்டுமே நான்கு எம்ஜிஆர் திரைப்படங்கள் போடுவதும் எடுப்பதுமாக நடந்தேறி இருக்கிறது,
போட்டோ இமேஜை பதிவிட்டால் பல நண்பர்கள் கோபப்படுவார்கள் என்பதால் தவிர்த்து விட்டேன்
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...d1&oe=5DE366A0
Thanks Sekar (facebook)
சமீபத்தில்
எங்கிருந்தோ வந்தாள் திரைப்படம் தொலைக்காட்சியில் பார்த்தேன்...
எந்த ஒரு கதாநாயகனும் ஏற்றுக்கொள்ள
தயங்கும் வேடம்... படத்தின் வேடம் சரி, நடிகர்திலகத்தின் நடிப்பிற்கு சரியான தீனி...
... ஆனால்,
இறுதிக் காட்சியில், ஜெயலலிதா நடிப்பில் பின்னிக் கொண்டிருப்பார், நடிகர்திலகமோ அதைப் பாரத்துக் கொண்டிருப்பார், பிறகு, முத்துராமன் அவருக்கும் கிளைமாக்ஸில் நடிக்கும் வாய்ப்பு,,,
இதை எந்த கதாநாயக நடிகராவது ஒத்துக் கொள்வார்களா?.. மாட்டவே மாட்டார்கள்...
அனைத்திற்கும் சம்மதித்து படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார்....
படத்தின் இறுதிக்காட்சியில் ஜெயலலிதா, பாலாஜி, முத்துராமன், நாகேஷ் என அனைத்து கதாபாத்திரங்களும் வசனம் பேசிக் கொண்டிருக்க,
நடிகர்திலகம் அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கும் ஸ்டைல் இருக்கிறதே...
அப்பப்பா
அனைவரது நடிப்பும் துாள் துாளாகிவிடும்....
அதுதான் சிவாஜி.
இதோ அந்த ஸ்டைலான ஸ்டில் உங்களுக்காக....
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...bd&oe=5DE41DEE
Thanks Sundar Rajan
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...c1&oe=5DA0CAA6
Thanks H O S ( V C G Thiruppathy -Face book)
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...0d&oe=5DCCAFF6
Thanks Soma Sundaram (Facebook)
நகரெங்கும் பளிச்சிடும்
நடிகர்திலகத்தின் வெற்றிப் பதிவேடுகள்...
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...02&oe=5DCCD2E8
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...e3&oe=5DD86AB6
Thanks nilaa
நீங்கள் எப்படி வேண்டமானலும் கொண்டாடிவிட்டு போங்கள். அதைப் பத்தி எங்களுக்கு கவலை இல்லை. உங்கள் சந்தோசத்தை கெடுக்க மாட்டோம். ஆனால் மக்கள் திலகத்தைப் பத்தி தப்பாக உங்கள் திரியில் பொய் செய்திகள் போடுவதால் உங்கள் பொய் செய்தியை தோல் உரிக்க வேண்டி இருக்கின்றது.
நேத்து கூட வசந்த மாளிகை சென்ன பேபி ஆல்பர்ட் தியேட்டரில் ஹவுஸ்புல் என்று போட்டிருக்கின்றீர்கள்.
ஆனால், ஆல்பர்ட் தியேட்டரிலும் சரி. பேபி ஆல்பர்ட் தியேட்டர்லயும் சரி. ஜூன் மாதம் 21-ம் தேிதி படம் வந்ததில் இருந்து இதுவரைக்கும் ஒரு காட்சி கூட புல் ஆக வில்லை.
இன்றுக்கும் மத்தியானம் 1.45 மணி நிலவரப்படி வசந்த மாளிகை 6.30 மணி காட்சி (ஓடுவது ஒரு காட்சிதான்) புல் ஆகவில்லை. பெரும்பாலான சீட் காலி
அதற்கான ஸ்கீரின் சாட்
http://i65.tinypic.com/osqtco.jpg
யாருக்காக... இது யாருக்காக... இப்பிடி பணம் கொடுத்து ஓட்டுகிறீர்கள்.
http://i65.tinypic.com/osqtco.jpg
இன்று மாலை காட்சி பேபி ஆல்பட் தியட்டர் வசந்தமாளிகை டிக்கெட் புக்கிங் 9-8-2019 (வெள்ளிகிளமை_)
ஸ்கீரீன் சாட்
http://i65.tinypic.com/osqtco.jpg
திரைக்கலைஞர்களுக்கு ஒரு பல்கலைக்கழகம்
- நடிகை வாணிஸ்ரீ
நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் நான் முதன் முதலில் உயர்ந்த மனிதன் படத்தில் நடித்தேன். அப்போது எனக்கு 14 வயது. சிவாஜி சாரைப்பற்றி நிறைய கேள்விப்பட்டு இருந்தேன். நேரில் பார்த்தது இல்லை. படப்பிடிப்பின்போது ‘நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா’ என்ற பாடல் காட்சியில் நடித்துக் கொண்டு இருந்தேன். அப்போது சிவாஜி சாரை பார்த்து விடலாம் என்று நினைத்தேன். கடைசி வரை அவர் வரவில்லை.
பின்னர் கொடைக்கானல் படகு இல்லத்தில் ‘வெள்ளிக்கிண்ணம் தான் தங்க கைகளில்’ என்ற பாடல் படப்பிடிப்பின்போது சந்தித்தேன். அப்போது மேக மூட்டமாக இருந்தது. வெயில் வரவில்லை. திடீரென்று டைரக்டர் பஞ்சு சார் ‘ரெடி’, ‘ரெடி’ என்று கூறினார். நான் ரெடியாக தாமதம் ஆகி விட்டது. உடனே பஞ்சு சார், வாணிஸ்ரீ உனக்கு அறிவு இருக்கா? இப்படி இருந்தால் எப்படி முன்னுக்கு வருவ? என்று கூறி திட்டினார். பின்னர் சுதாரித்துக் கொண்டு நடித்தேன். டைரக்டர் திட்டியதால் அழுது கொண்டே இருந்தேன். அப்போது சிவாஜி சார் என்னிடம் வந்து நீ வாணிஸ்ரீதானே! இப்போ அழுதே இல்ல... இன்னும் கொஞ்ச காலத்தில் பெரிய ‘ஸ்டார்’ ஆயிடுவே. இதே டைரக்டர் பஞ்சு உன்னிடம் வந்து கால்ஷீட் கேட்பார் என்று கூறினார். அப்போது நான் 2 படங்களில் மட்டும் நடித்து இருந்தேன். அவர் எப்படி அப்படி சொன்னார் என்று எனக்குத் தெரியாது. அவர் இமயம் மாதிரி. சிலர் சொன்னால் அது நடக்கும் என்பார்கள். இந்த சம்பவம் நடந்து 7 ஆண்டுகள் முடிந்த பின்னர் கர்நாடகா மாநிலத்தில் இளைய தலைமுறை படப்பிடிப்பு நடந்தது. அப்போது தெலுங்குபடங்களில் நான் பிரபலமாகி ஐதராபாத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டு இருந்தேன். அங்கிருந்து விமானத்தில் பெங்களூரு சென்று காரில் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்குச் சென்று சிவாஜி சாரைப் பார்த்தேன். அப்போது டைரக்டர் பஞ்சு சார் என்னிடம் வந்து என்னம்மா வாணி எப்படி இருக்கே? கஷ்டப்பட்டு வந்து இருக்கே? டேக் எடுக்கலாமா? என்று கேட்டார். படப்பிடிப்பு முடிந்ததும் சிவாஜி சார் என்னிடம் வந்தார்.
வாணி, அன்று கொடைக்கானல் படகு இல்லத்தில் நான் என்ன சொன்னேன் என்று நினைவு இருக்கிறதா? அதே மாதிரி நடந்ததா? இல்லையா? அன்று உன்னைப் பார்த்தும் அப்படி சொல்லனும்ன்னு தோணிச்சு என்றார். நீ வருடத்தில் என்னுடன் 2தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்று கூறினார்.
ஒரு மனிதனாக இவ்வளவு சாதித்து விட்டோம் என்னைப் போல ஒரு நடிகர் கிடையாது என்ற கர்வம் சிவாஜி சாரிடம் கிடையாது. குழந்தை மாதிரி பேசுவார். வெளிப்புறப்படப்பிடிப்பில்அவரது மனைவி கமலாவிடம், கமலா வாணிக்கு மீன் குழம்பு கொடு. பலகாரம் கொடு என்று சொல்லுவார்.
அவருக்கு தான் ஒரு பெரிய நடிகர் என்ற அகந்தை கிடையாது. அவருக்கு தெரிந்த உலகம் சினிமா. தெரிந்தது நடிப்பு. பராசக்தியில் இருந்து பல்வேறு படங்கள் பற்றி தான் அதிகமாக பேசுவார். வசந்தமாளிகை படத்தை முதலில் தெலுங்கில் பிரேம நகர் என்ற பெயரில் எடுத்தார்கள். தெலுங்கு, தமிழ் மொழியில் நான் நடித்தேன்.படம் வெளியானபிறகு நான் நகைக்கடை, டெக்ஸ்டைல்ஸ், ஷாப்பிங் காம்பளக்ஸ் என்று எங்கு சென்றாலும் வசந்தமாளிகை பற்றி தான் பேசுவார்கள்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற மகான்களுடன் நடித்ததால்தான் மக்கள் இவ்வளவு நாள் என்னை நினைவு வைத்துள்ளனர். அப்போதே அவர்கள் பெரிய தூண்கள். வசந்தமாளிகையில் நடித்த போது எனக்கு 19 வயதுதான். பெரியவர்களை பார்த்துதான் நடிக்க கற்றுக் கொண்டேன். அவர்கள் கூட இருப்பதே நமக்கு பெரிய பலமாக இருக்கும். வசந்தமாளிகை படப்பிடிப்பின் போது ஊட்டியில் அதிகாலை 3 மணிக்கு எழுந்து மேக்-அப் போட்டு 5 மணிக்கு ஷூட்டிங் சென்று விடுவோம். இலங்கையில் வசந்த மாளிகை 52 வாரங்கள் ஓடியது. இலங்கை மக்கள் நானும், சிவாஜியும் இலங்கை வரவேண்டும் என்று விருப்பப்பட்டனர். இலங்கை பிரதமர் பண்டார நாயகா நாங்கள் இலங்கை வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.
அப்போது, சிவாஜி சார் ஒரு கையால் என் கையை பற்றிக் கொண்டும் ஒரு கையில் சூட்கேஸ் வைத்துக் கொண்டு நடப்பதைப் போலவும் பண்டார நாயகா இரு கைகளையும் விரித்து காட்டி இலங்கைக்கு வரக்கூடாது என்றுஎங்களை தடுப்பது போலவும் தினத்தந்தியில் முதல் பக்கம் கார்ட்டூன் வெளியானது. இலங்கை சென்ற போது மக்கள் எங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று, ‘என்ன படங்க அது, காதலை இவ்வளவு புனிதமாக சொல்லி இருக்கீங்க... என்று கூறி பரவசப்பட்டனர். புதுமையான கதை அர்ப்பணிப்புடன் கூடிய நடிப்பு அதை படமாக்கிய விதம் தான் வசந்தமாளிகை வெற்றிக்கு காரணம்.
எல்லாவற்றுக்கும் ஒரு அகராதி உள்ளது. என்ஜினீயரிங் படிக்க விரும்பினால் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. டாக்டர் படிப்பு படிக்க மருத்துவ கல்லூரி உள்ளது. சினிமான்னு வரும்போது எந்த கல்லூரியோ, புத்தகமோ இல்லை. நமக்கு முன் நடித்தவர்களைதான் நாம் பின்பற்றி நடிக்கிறோம். எனக்கு தெரிந்த வரை சிவாஜி படத்தை பார்த்தால் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி எந்த கதையில் எப்படி நடிக்க வேண்டும் என்று கற்றுக் கொள்வார்கள். அதற்குதான் கடவுள் சிவாஜியை படைத்தார் என்று நினைக்கிறேன். அவர் படங்களை 10 நாள் பார்த்தால் பெரிய நடிகர் ஆகி விடுவார். திரைக்கலைஞர்களின் பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர் சிவாஜி கணேசன்.
வசந்தமாளிகை படம் வெளி வந்து பல இடங்களில் 25 வாரம் வெள்ளி விழா கொண்டாடியது. சிவாஜி சாருடன் நானும் நிறைய ஊர்களுக்கு சென்றேன். பொள்ளாச்சியில் உள்ள அவரது நண்பர்கள் வருவார்கள். அவர்கள் வந்தால் அவர்கள் என்னை பார்க்க வருவார்கள். அப்போது சிவாஜி, ஏய் வாணி உனக்கு ஒரு கூட்டமே வருது பார் என்பார். பரவாயில்லை அனுப்புங்க என்பேன். வசந்தமாளிகைக்கு பின்னர் வாணிஸ்ரீயை பார்க்கனும் என்கிறார்கள். என்னைப் பற்றிய யாரும் கேட்க மாட்டேங்கறாங்க.. அந்தப் பெண்ணைத்தான் பாக்கனும் என்கிறார்கள். என்ன இது? என்று கிண்டலாக கூறி சிரிப்பார்.
சில கதாபாத்திரங்களில் சிவாஜி சார் மாதிரி யாரும் நடிக்க முயாது. தத்ரூபமாக நடித்து கதாபாத்திரமாகவே மாறி விடுவார். வசந்தமாளிகை படத்தை பார்க்கும்போதே இதயத்தை வருடுவதை போல் இருக்கும். அந்த படத்தை பார்த்தால் அழுது விடுவேன். யாருக்காக பாடல்காட்சியில் ‘எழுதுங்கள் என் கல்லறையில் அவள் இரக்கம் இல்லாதவள் என்று,’ பாடுங்கள் என் கல்லறையில் அவன் பைத்தியக்காரன் என்று’ வரிகள் வரும்போதே அழுகையும் சேர்ந்து வந்து விடும். எப்போது டி.வி.யில் அந்த படத்தை பார்த்தாலும் முதலில் கண் கலங்கும். அவர் நடிப்பு பற்றி அவரிடம் பாராட்ட முடியாது. இமயமலை கிட்டபோய் நீ இமயமலை, நீ உயரமா இருக்கே, நீ ரொம்ப குளிரா இருக்கே என்று கூற முடியுமா? அவர் நடிப்பு திறமை பற்றி அவரிடம் பாராட்ட முடியாது நல்லாயிருக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்றுதான் கூற முடியும்.
அதன் பிறகு நாங்கள் சந்தித்த போது வசந்தமாளிகையை ராஜேஷ் கண்ணாவும், ஹேமமாலினியும் நம்ம மாதிரி பண்ணவில்லை. நம் படம் தமிழ் படம் தான் சூப்பர்! ‘என்னமா பண்ணினோம், நாம் இரண்டு பேரும்’ என்பார். பண்ணியதே அவர்தான். அவர் எளிமையானவர். தன்னை பற்றி பெரிதாக பேச மாட்டார். அவர் இறந்து விட்டார் என்று எல்லோரும் சொல்கிறார்கள். அவர் இறக்கவில்லை எல்லோருடைய இதயங்களிலும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். காலத்தால் அழிக்க முடியாத மாபெரும் நடிகர் அவர் மீது இருக்கும் மரியாதை நினைவுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
தமிழ்நாட்டில் நான் எங்கே ஷாப்பிங் போனாலும் வசந்தமாளிகை கூந்தல் அலங்காரம் பற்றிதான் பேசுகிறார்கள். ஊட்டியில் என் மகளுடன் ஷாப்பிங் சென்ற போது ஊர் மக்களே திரண்டு வந்தனர். கல்யாணமாகி 30 வயதில் குழந்தை இருக்கும்போது மக்கள் வசந்தமாளிகையில் என் நடிப்பை பாராட்டிய போது அவர்கள் மனதில் எப்படி பதிவு ஆகி இருக்கிறதென்று நினைத்து வியந்து போவேன்.. பெரிய மகான்கள்கூட நடித்ததால்தான் என் பெயரும் புகழும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. சிவாஜி சாருடன் உயர்ந்த மனிதன், குலமா குணமா, இளையதலைமுறை, ரோஜாவின் ராஜா, நல்லதோர் குடும்பம் உள்பட பல படங்களில் நடித்துள்ளேன். சிவாஜி சார் எத்தனையோ பேருக்கு நடிக்க வழி காட்டி இருக்கிறார். அவர் குடும்பம் நீடூழி வாழ வேண்டும். சிவாஜியின் புகழை யாராலும் குறைக்க முடியாது. அது கூடுமே தவிர குறையாது.
அவர் உயிருடன் இருக்கும்போதே ஒவ்வொரு வருடமும், எல்லா நடிகர்களும் சேர்ந்து அவரது பிறந்தநாளில் மாலைபோட்டு சால்வை அணிவித்து அவரை பற்றி பேசி இருந்தால் அவர் சந்தோஷப்பட்டு இருப்பார். கடலில் விழுந்த கல் போல எங்கெங்கோ போய்விட்டோம். எந்த ஆழத்துக்கு போனாலும் சூரியன் தெரிந்து கொண்டே இருக்கும். அந்த மாதிரி சினிமா கடலாக இருந்தாலும் மேலே பார்த்தால் சூரியன் தெரியும். அந்த மாதிரி சிவாஜியை மறைக்கிற மேகம் இன்னும் பிறக்கவில்லை கடவுள் தனக்கு கொடுத்த கடமையை சிறப்பாக செய்து இருக்கிறார். சிவாஜி சார் ஒரு சகாப்தம், இன்றைய பெரிய ஹீரோக்கள் யாரும் அவர் பாதிப்பு இல்லாமல் இருக்க முடியாது. அவர் கூட நான் நடித்தேன் என்பதே பெருமையாக இருக்கிறது.
'தினத்தந்தி'
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...52&oe=5DA0A44C
Thanks Natarajen Pachaiappan
NO means NO" அன்றே சொன்ன சிவாஜி...தற்பொழுது திரு.அஜித்குமார் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் #நேர்கொண்டபார்வை திரைப்படத்தின் முக்கிய கருத்தினை 1972 வெளியாகி தற்பொழுதும் டிஜிட்டல் வடிவில் 50 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகளில் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கும் #வசந்தமாளிகை திரைப்படத்தில் நடிகர் திலகம் #சிவாஜிகணேசன் அவர்கள் தனது பாணியில் கூறியிருப்பார்.
Thanks Remix Gold
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...82&oe=5DD99321
Thanks Facebook friends