இளையராஜா இசையில் முத்துலிங்கத்தின் பாடலில் இடம் பெற்ற முதல் வசந்தம் படம் .
இளையரஜா குரலில் ..
ஆறும் அது ஆழமில்லே , அதில் சேரும் கடலும் ஆழமில்லே பாடல் மனதை கவர்ந்த பாடல் .
http://youtu.be/7oEyzJmlE9k
Printable View
இளையராஜா இசையில் முத்துலிங்கத்தின் பாடலில் இடம் பெற்ற முதல் வசந்தம் படம் .
இளையரஜா குரலில் ..
ஆறும் அது ஆழமில்லே , அதில் சேரும் கடலும் ஆழமில்லே பாடல் மனதை கவர்ந்த பாடல் .
http://youtu.be/7oEyzJmlE9k
நன்றி சின்னக் கண்ணன் சார்.
'வேலை வந்து ஒருவன் இங்கே மேலே வந்துட்டா அவன் ஆடும் ஆட்டம் தாங்க முடியல' அப்படின்னு சத்யராஜ் நடிகன் படத்துல ஒரு பாட்டுப் பாடுவாரு . ஞாபகம் இருக்கா கண்ணா!
'வேலை' பாட்டுக்கள் கொடுங்க. என்ஜாய் பண்றோம்.
நன்றி ராகவேந்திரன் சார்.
ஆனந்தம் விளையாடும் வீடு
பல அன்றில்கள் ஒன்றான கூடு
அல்லவோ நமது திரி. அத்தனை பேரின் வியர்வையில் வளர்ந்த திரி.
தங்களின் 'இசைக் கலைஞர்கள் இறைவனின் தூதர்கள்' தொடருக்கான முன்னுரை அருமை. அதை விட அருமை எனதருமை டி.ஆர் .பாப்பா புகழ் பாடி இந்தப் பகுதி தொடங்குவது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. 'டீச்சரம்மா' என்ற ஒரு படம் போதும் இவர் பெயரை காலம் முழுதும் சொல்ல. தொடருங்கள் சார். படிக்க மகிழ்வுடன் காத்திருக்கிறேன்.
ராஜேஷ்ஜி!
தேனிசை தென்றலின் முத்துக்கள் தொடரில் 'நந்தினி' நல்ல பாட்டு.
நல்ல வேளையாய் வாலி சின்னக் கதவுகளை மட்டும் திறக்கச் சொன்னாரே.
கேப்டன் என்ற படத்தில் பாலுவும் ஸ்வர்ணலதாவும் பாடிய 'கன்னில் ஆடும் ரோஜா'வும் நல்ல சாங்.
கேப்டன் ஒரு தெலுங்கு மொழி மாற்றுப் படம். சரத்குமாருக்கும், ரஞ்சிதாவுக்கும் அப்போது நல்ல மார்கெட் இருந்ததால் அதை அப்படியே நேரடி தமிழ்த் திரைப்படம் போல பாவ்லா காட்டி வெளியிட்டார்கள். நாம் என்ன அவ்வளவு விவரம் அறியாதவர்களா? ஆனால் சாமர்த்தியமாக பாடல்களை மட்டும் நேரிடையாக தமிழில் ஷூட் பான்னிவிட்டது போல் தெரிகிறது. அப்படித்தானே ராஜேஷ்ஜி?
//ஏ.எம்.ராஜாவின் புதல்வர் திரு சந்திரசேகரை இளையராஜா இந்த பாடலில் பயன்படுத்திக்கொண்டார். இதில் ஒலிக்கும் பெண் குரல் லேகா.//
இதுவரை எனக்குத் தெரியாத தகவல். நன்றி ஜி.
//வாசு ஜி, உங்கள் ராஜா தொடருக்குள் நான் இதை பதிவு செய்துவிட்டேன்//
அதனால் என்ன ஜி? நல்ல பாடல்தானே! நம்மில் யார் போட்டால் என்ன? நமக்குள் வேறுபாடு என்பதே கிடையாது.
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 8)
http://www.upperstall.com/files/imag...a-stills-1.jpg
நேற்று விட்டிருந்த 'அவர் எனக்கே சொந்தம்' படத்தின் பாடல்கள் தொடர்கின்றன.
இந்தப் படத்தில் பாப்புலரான ஈழப் பாடலான 'சுராங்கனி' பாடலை அவ்வளவு எளிதாக யாரும் மறந்திருக்க முடியாது. பட்டி தொட்டிகள் எல்லாம் பட்டை கிளப்பிய பாடல். இது ஒரு ஸ்டேஜ் புரோகிராம் பாடல்.
வெகு ஈசியான வரிகள் என்பதால் அனைவர் மனதிலும் சுளுவாக நுழைந்து வாய் வழியே ஜோராக வெளிவந்தது. எங்கே பார்த்தாலும் அப்போது 'சுராங்கனி'தான்.
மலேஷியா வாசுதேவன், ரேணுகா குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் ஒருவித கிறக்கமான பாடல்தான். என்ன ஒரு குறை. இவ்வளவு ஜாலியான ஒரு பாடலை நன்கு அறிமுகமான நடிக நடிகையருக்கு நடிக்கக் கொடுத்திருந்தால் இன்னும் எங்கோ போய் இருக்கும். பாடலுக்கு ஆடும் நடன நடிகை தேவலை. ஆனால் பாடலுக்கு நடிக்கும் நடிகர் கவரவே இல்லை.
https://www.youtube.com/watch?featur...&v=R7munaAYmro
சுராங்கனி பாட்டு நிறைய நினைவலைகள் வாசு சார்
அந்த அந்த ஊருக்கு தகுந்த மாதிரி பாடல் வரிகள் மாறும்.
நான் படித்த தூய சவேரியார் கல்லூரி (St .xaiver 's college ) நெல்லை பாளையம்கோட்டை அருகில் உள்ள ஒன்று .அதற்கு பஸ் நம்பர் 11 JRT highground போர்டு போட்டு வரும் அந்நாட்களில் . அதே சமயம் சராஹ் டக்கர் காலேஜ் (காலேஜ் பெயர் தான் டக்கர் பெண்கள் எல்லாம் மக்கர் :)) என்று ஒரே ஒரு பெண்கள் கல்லூரி பாளையம்கோட்டை பெருமாள் புறம் அருகில் இருக்கும். அந்த கல்லூரிக்கு செல்லும் பஸ் நம்பர் 5. இரண்டு பேருந்துகளும் ஒன்றை ஒன்றை போட்டி போட்டு கொண்டு நெல்லை சந்திப்பு (ஜங்ஷன்) பஸ் நிலையத்தில் இருந்து கிளம்பும் . அப்போது நெல்லையில் ஒரு பஸ் நிலையம் தான்.இப்போது தான் இரண்டு பஸ் நிலையங்கள். நெல்லையில் இருந்து பாளை பஸ் ஸ்டாண்ட் வரை இரண்டு பேருந்துகளும் சேர்ந்து தான் வரும் பிறகு திசை மாறி செல்லும் . அப்போது நாங்கள் பாடும் சுராங்கனி பாட்டு இப்படி இருக்கும்
'5 ம் நம்பர் பஸ் இல் போறா stc (sarah tucker college சுருக்கம்) குட்டி
அவளை விட நல்லா இருப்ப எங்க எதிர்த்த வீட்டு பாட்டி
ஆசை பட்ட எல்லாத்தயும் கேட்க முடியலை
கேட்டு புட்ட கிடுக்குமே வெற்றிலை புகையிலை (அரை அணா)'
சுராங்கனி சுராங்கனிக்க மாலு கண்ணா வா மாலு மாலு சுரங்கனிக்க மாலு சுராங்கனிக்க மாலு கண்ணா வா'
சமீபத்தில் இப்படி ஒரு பாட்டு கேட்டேன் அனிருத் இசை என்று நினைக்கிறன் . இந்த மாதிரி பாடல் வரிகள் எங்கிருந்து கிடைகின்றன என்று தெரியவில்லை
ஓ.... ரிங்கா ரிங்கா ஜம் மழைக்கால கேங்கா..
ஓ....பிங்கா பிங்கா ஹிட் பாப்புலர் சாங்கா...
-----------------------
-------------------------
ஊவென்ன ஊவென்ன ஒன்னானா
கூட்டமும் ஆட்டமும் இனிதானா
அடி ராங்கனி ராங்கனி ராங்கனி
எனை ரம்மு பீரு போடு
இனி காமினி காமினி காமினி
செம்மாங்கனி மாங்கனி மாங்கனி..
dear rajraj sir
thanks for your wishes
sent one private message
rgds
Gk
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 9)
http://www.upperstall.com/files/imag...a-stills-1.jpg
இனி 'அவர் எனக்கே சொந்தம்' படத்தின் அதியற்புதமான சுசீலா அம்மாவின் ஒரு பாடல். இந்தப் பாடலைப் பற்றி என்ன சொல்ல?! எப்படி எழுத? 1
http://www.tamilmp3.us/Music3/A-Z%20...%20Sontham.jpg
இசையரசியின் மிகச் சிறந்த இருபது பாடல்களைத் தேர்ந்தெடுத்தால் அதில் நிச்சயம் இந்தப் பாடல் உச்சத்தில் இடம் பிடிக்கும். ஜானகியை வளர்த்துக் கொண்டிருந்த ராஜா சுசீலாவை மறக்கவில்லை. மறக்கவும் முடியாது. இயலாது. இந்த மாதிரிப் பாடல்களுக்கு இவரை விட்டால் ஆளே கிடையாது.
சுசீலா அப்படியே உண்மையிலேயே தேனைக் குழைத்துத்தான் இப்பாடலைத் தந்திருப்பார். அதுவும் பாடலை 'லலலலலலலலலலலலா...லலலலலலலலலலலலா' என்று ஆரம்பிக்கும் அழகு. அப்பப்பா! திகட்டாத இனிமை. எத்தனை வருடங்களானாலும் மெருகு கலையாத அதே குரல்வளம். இன்னும் கேட்டால் முன்னைவிடவும் பிரமாதமாக.
'கரும்பென்று நீ சொல்லும் மழலை
அது அரும்பாக தரச் செய்த மாலை'
என்று முடித்துவிட்டு 'லலல்லலா' என்று வெகு அற்புதமாக உச்சரிப்பாரே! அடடா! கொடுத்த காசெல்லாம் அதற்கே சரியாய்ப் போய்விடுமே!
(அதற்கு முந்தைய சரணத்தில் வரும்
'இதழ் சிந்தும் முத்தங்கள் நூறு
அது என் வாழ்வில் நான் பெற்ற பேறு'
முடித்துவிட்டு 'லாலா' என்று மட்டும் குழைவார்)
பாடலின் இசையும், டியூனும் அமர்க்களம். பாடலின் இடையில் வரும் புல்லாங்குழல் இசையும், வயலின் இசையும் பிரமாதம். இந்தப் பாடல் அப்படியே நம்மை மெய் மறக்கச் செய்யும் வலிமை படைத்தது.
http://2.bp.blogspot.com/_BbJAArGDIE...0/Y+VIJAYA.jpg
அப்சரஸ் மாதிரி ஒய்.விஜயா வெள்ளைப் புடவையில் விதவையாக. குழந்தையைக் கொஞ்சியபடி கொஞ்சும் வாயசைப்பு அவ்வளவு பொருத்தம். வெண்தாமரை போல அழகும் கூட. எப்படிப்பட்ட அழகும், திறமையும் வாய்ந்த நடிகை! எப்படியோ வீணாய்ப் போனாரே! எல்லாம் 'ராங் நம்பரா'ல் வந்த வினை. எல்லாமே ராங்காகப் போய் விட்டது இவருக்கு. இவரைப் போன்ற அழகான வித்தியாசமான முகம் கொண்ட நடிகை கிடைப்பது அரிது.
பாடலின் முழு வரிகளைத் தந்து விடுகிறேன். (இணையத்தில் இந்தப் பாடலின் வரிகளை பிழையாகத் தந்திருக்கிறார்கள் என்பது வேதனைக்குரியது). இந்த இன்ப கானத்தில் மூழ்கி கவலைகளை தூரத் தள்ளுங்கள். ராஜாவின் அற்புத ராஜாங்கத்தை அனுபவியுங்கள். கண்களை மூடிக் கொண்டு ஒருமுறை சுசீலா அம்மவின் குரலையும், அதற்கு தோதாக இழையும் ராஜாவின் இசையையும் கேட்டு இன்புறுங்கள். வேறு சொர்க்கம் என்று ஒன்று நமக்குத் தேவையே இல்லை.
லலலலலலலலலலலலா
லலலலலலலலலலலலா
தேனில் ஆடும் ரோஜா
பூந்தென்றல் ஆடக் கண்டேன்
என் நெஞ்சம் பொன்னூஞ்சல்
ஆடக் கண்டேன்
இரு கண்ணில் எனையாளும் மணிவண்ணா!
பல்லாண்டு பாடக் கண்டேன்
சொர்க்கத்தை உன்னாலே நேரில் கண்டேன்
தேனில் ஆடும் ரோஜா
பூந்தென்றல் ஆடக் கண்டேன்
என் நெஞ்சம் பொன்னூஞ்சல்
ஆடக் கண்டேன்
இதழ் சிந்தும் முத்தங்கள் நூறு
அது என் வாழ்வில் நான் பெற்ற பேறு
இதழ் சிந்தும் முத்தங்கள் நூறு
அது என் வாழ்வில் நான் பெற்ற பேரு லாலா
கனவோடும்....
கனவோடும் நினைவோடும்
கவிதைகள் நீ பாடு
உன்னால் காவியம் உருவாகும்
தேனில் ஆடும் ரோஜா
பூந்தென்றல் ஆடக் கண்டேன்
என் நெஞ்சம் பொன்னூஞ்சல்
ஆடக் கண்டேன்
கரும்பென்று நீ சொல்லும் மழலை
அது அரும்பாக தரச் செய்த மாலை
கரும்பென்று நீ சொல்லும் மழலை
அது அரும்பாக தரச் செய்த மாலை
கனித் தோட்டம்
கனித் தோட்டம் விளையாடும் கன்னங்கள் பூஞ்சோலை
கண்ணே என்னுயிர் பூமாலை
தேனில் ஆடும் ரோஜா
பூந்தென்றல் ஆடக் கண்டேன்
என் நெஞ்சம் பொன்னூஞ்சல்
ஆடக் கண்டேன்
இரு கண்ணில் எனையாளும் மணிவண்ணா!
பல்லாண்டு பாடக் கண்டேன்
சொர்க்கத்தை உன்னாலே நேரில் கண்டேன்
தேனில் ஆடும் ரோஜா
பூந்தென்றல் ஆடக் கண்டேன்
என் நெஞ்சம் பொன்னூஞ்சல்
ஆடக் கண்டேன்
http://www.youtube.com/watch?v=qvBq8AsnNaI&feature=player_detailpage
அவர் எனக்கே சொந்தம் படத்துல ஒய்.விஜயாவுக்குப் பாட்டு உண்டு . விஜயகுமாருக்குப் பாட்டு உண்டு. ஜெய்சங்கருக்குப் பாட்டு உண்டு. வி.கே.ராமசாமிக்குப் பாட்டு உண்டு. ஆனா கதாநாயகி ஸ்ரீவித்யாவுக்குப் படத்துல பாட்டே கிடையாது.
மிகவும் அருமையான உணவு ஊட்டும் பாடல் ஆனால் தாலாட்டு போல் ரீங்காரமிடும் சுசீலா அம்மா அவர்களின் மிருதுவான தேன் (குழல்) குரல் .
இளையராஜா ஆரம்ப காலத்தில் ஜானகிக்கு தான் நிறைய வாய்ப்புகள் கொடுத்தார் அப்படின்னு எல்லோரும் சொல்வாங்க . ஆனால் நல்ல பல பாடல்கள் இசை அரசி அவர்களுக்கும் கொடுத்து இருக்கிறார்
முதல் படம் அன்னக்கிளி -சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை
பாலூட்டி வளர்த்த கிளி - வாடியம்மா பொன் மகளே வந்த இடம் நல்ல இடம்
பத்ரகாளி - வாங்கோண்ண மற்றும் கண்ணன் ஒரு கை குழந்தை
பெண்ஜென்மம் - செல்ல பிள்ளை சரவணன்
16 வயதினிலே - செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்க
ஆளுக்கொரு ஆசை -இதய மழையில் நனைந்த கிளிகள்
அவர் எனக்கே சொந்தம் - தேனில் ஆடும் ரோஜா
ஓடி விளையாடு தாத்தா - ஓல்ட் எல்லாம் கோல்ட் உன் மண்டை பால்ட்
இப்படி நிறைய இருக்கு சொல்லிக்கிட்டே போகலாம்