சத்யராஜ் பற்றி பம்மலார் சொன்னதும், சமீபத்தில் நடந்த இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது...
'இசையருவி' விருது வழங்கும் விழாவில், சிறந்த நடிகருக்கான விருதை தசாவதாரம் படத்துக்காக டாக்டர் கமல்ஜிக்கு வழங்க சத்யராஜ் மேடைக்கு அழைக்கப்பட்டார். மேடையேறிய சத்யராஜ் பேசியபோது:
"கமல் அவர்களுக்கு விருது வழங்க நான் வந்திருப்பது எவ்வளவு அபத்தமானது என்பது உங்களுக்கே தெரியும். ஒருவருக்கு விருது வழங்குவதென்றால் அவரை விட தகுதியில் திறமையில் உயர்ந்த ஒருவர்தான் வழங்க முடியும், வழங்கவேண்டும். அந்த வகையில் கமல் அவர்களுக்கு விருது வழங்க தகுதியான ஒரே கலைஞர் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்தான். நான் ராஜ்கமல் நிறுவனத்தின் படங்களில் நடித்ததன் மூலம் அந்நிறுவனத்தில் நானும் ஒரு தொழிலாளி. சிலசமயங்களில், பாலங்களைக்கட்டி திறந்து வைக்கும்போது பெரிய வி.ஐ.பிக்கள் திறப்பதற்கு பதிலாக, அந்த பாலத்தைக்கட்டிய கொத்தனாரைக் கொண்டும் திறப்பது வழக்கம். அந்த வகையில், கமல் நிறுவனத்தின் தொழிலாளிகளில் ஒருவராக அவருக்கு இந்த விருதை வழங்குகிறேன்".
பொருத்தமான நேரத்தில் நடிகர்திலகத்தைப் பொருத்தமாக நினைவுகூர்ந்த சத்யராஜ், நம் நன்றிக்குரியவர்.