நன்றி ஆனா,
நான் SHORT-HAND படிக்கவில்லை. ஆனால் இருக்கின்ற HANDS-ஐ வைத்து எதையும் SHORT ஆக முடிக்க TRY பண்ணுவேன். (நன்றி: விவேக்).
மற்றபடி, எல்லாம் நினைவுகளில் இருந்து வருவதுதான்.
Printable View
நன்றி ஆனா,
நான் SHORT-HAND படிக்கவில்லை. ஆனால் இருக்கின்ற HANDS-ஐ வைத்து எதையும் SHORT ஆக முடிக்க TRY பண்ணுவேன். (நன்றி: விவேக்).
மற்றபடி, எல்லாம் நினைவுகளில் இருந்து வருவதுதான்.
Good sense of humour :rotfl:Quote:
Originally Posted by saradhaa_sn
:rotfl:
உஷாவை டைவர்ஸ் செய்வது சம்மந்தமாக லாயரைப்போய்ப் பார்க்கும் ஆதி அவரிடம் எவ்வளவு சீக்கிரம் விவாகரத்துப் பெறமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் பெற வேன்டுமென்று வற்புறுத்த, அவரோ ஆதியின் ஆதியின் அவசரத்துக்கெல்லாம் சட்டம் இடம் கொடுக்காது என்றும், எப்படியும் ஆறு மாதங்களாவது ஆகும் என்றும் சொல்வதுடன், அதற்கு முன்னர் முடித்துக்கொள்வதானால் ஒரு வழியிருப்பதாகவும் சொல்லி, உஷாவும் ஆதியும் சுமுகமான முறையில் பேசி இருவரின் பரிபூரண சம்மதத்துடன் பிரிவதாக இருந்தால் உடனடியாக விவாகரத்து கிடைக்க வழியுண்டு என்று சொல்கிறார்.
ஆதிக்கு இதில் உடன்பாடு இல்லாததுடன், உஷாவும் இதற்கு சம்மதிக்க மாட்டாள் என்றும் சொல்லி மறுக்கிறான். ஆனால் இந்த இடத்தில் ஒரு பெரியகுண்டைத்தூக்க்கிப்போடுகிறார். நாளை இவர்களின் விவாகரத்து வழக்கு மீடியாக்களில் வந்தால், அதனால் ஆதியின் பெயர் அவனுடைய சொஸைட்டியில் கெட வாய்ப்புள்ளது என்று கூற, தன் இமேஜைப்பெரிதாக நினைக்கும் ஆதி சற்று யோசிக்கிறான். இந்த சந்தர்ப்பத்தில், தான் உஷாவிடமும் அவளுடைய அப்பா அம்மாவிடமும் பேசிப்பார்ப்பதாக கிரி சொல்ல, ஆதி அரை மனதுடன் சம்மதிக்கிறான்.
ஆர்த்தியும் ராஜேஷும் தாங்கள் திட்டமிட்டபடி டாங்கர் லாரி ஒன்றை வாங்கி அதற்கு பூஜையும் போட்டு பிஸினஸைத்துவக்குகின்றனர். 'கட்டுச்சோற்றுக்குள் பெருச்சாளி'யாக சிவசுவும் கூடவே இருக்கிறான்.
'ஆர்த்தி, நாம விரும்பியபடியே டாங்கர் லாரி வாங்கிட்டோம். இதுக்கெல்லாம் உன்னுடைய முயற்சிதான் காரணம்'.
'நம்முடைய முயற்சியைவிட ஆதியண்ணாவின் பெரிய உதவிதாங்க காரணம்'.
'அது உண்மைதான் ஆர்த்தி. சிவசு, முதல்ல டேங்கர் எங்கே போகுது?'
'டீஸல் ஏத்திக்கிட்டு திருச்சிக்கு போகுதுங்க'.
'சரி டிரைவர் பத்திரமா பார்த்து போங்க'.
டிரைவருடன் சிவசுவும் வண்டியில் ஏறிகொள்ள, அவன் சொல்லும் பாதையிலேயே ஓட்டச்சொல்கிறான். 'ஏங்க இந்த வழியா போனா டீஸல் லோடு பண்ற இடம் வராதுங்க'.
'டிரைவர், நாம் இப்போ டீஸல் லோடு பண்ணபோகலை. மனிதனுக்கு தேவையான டீஸல் ஏத்தப்போறோம்'
'என்னது சாராயமா?. இது தப்பில்லீங்களா? எனக்கு இது சரியா படலைங்க'.
அப்போது சிவசு, டிரைவரிடம் கத்தையாக பணத்தைக்கொடுத்து அவன் வாயை அடைக்க முயல, அப்படியும் டிரைவருக்கு மனம் சமாதானம் ஆகவில்லை. இருந்தாலும் சிவசுவின் சொல்படி வண்டி சாராய ஃபேக்டரிக்குப் போகிறது.
உஷாவின் பெற்றோருடன் பேசுவதாகச்சொன்ன கிரி, உஷா இல்லாத நேரம் அவர்கள் வீட்டுக்குப்போக, அங்கு அவனுக்கு வரவேற்பே சரியில்லை. இருந்தாலும் உஷாவின் அம்மா 'அவர் சொல்ல வந்ததையும் கேட்போமே' என்று சொல்ல.... உஷா தன் பாஸுடன் சமாதன்மாக பிரிந்துபோனால் இருவருக்கும் நல்லது, இருவரின் பெயரும் வெளியில் மீடியாக்களில் அடிபட்டு அசிங்கமாகாது என்று எடுத்துச்சொல்லிக் கொண்டிருக்கும் நேரம் வெளியிலிருந்து வரும் உஷா, 'கிரி உங்க பாஸ்தானே எனக்கு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பினார்?. நான் அனுப்பலையே. அப்போ இதை சட்டப்படி கோர்ட்டிலேயே பார்த்துக்கொள்கிறேன், நீ போகலாம்' என்று சொல்ல, கிரி மீண்டும் ஏதோ சொல்ல வாயெடுக்க அவள் கேட்க மறுத்து விரட்டுகிறாள்.
கிரி வெளியே போகும் நேரம் தொல்காப்பியன் அங்கு வர, 'ஓ... இவரும் வந்துட்டாரா?. பாஸுக்கும் உங்களுக்கும் பிரிவு வரக்காரணமே இவர்தானே' என்று சொல்லும் கிரியிடம், 'அவர் இப்போ வந்தது மட்டுமல்ல. இங்கே எங்க வீட்லதான் தங்கியிருக்கார். இதையும் உங்க பாஸ் கிட்டே சொல்லு' என்று சொல்லி விரட்டுகிறாள். எல்லோரும் போன பின்னரும், கிரி சொன்ன அந்த வார்த்தை தொல்காப்பியன் மனதை உறுத்துகிறது.
இரவு நேரத்தில் ஆதியை சந்திக்க வரும் கிரியிடம்...
'அங்கே போனியே என்ன ஆச்சு? திட்டி அனுப்பினாளா? இல்லே அடிச்சு அனுப்பினாளா?'
'நீங்க சொன்னது சரிதான் பாஸ், உஷா மேடம் எந்த சமாதானத்துக்கும் வர விரும்பவில்லை, கோர்ட்டிலேயே பார்த்துறேன்னு சொல்லிட்டாங்க'
'அதான் சொன்னேனே கிரி. அவளைப்பத்தி எனக்கு தெரியும். நீயும் லாயரும்தான் சமாதானமா போகனும்னீங்க'.
'இன்னொரு விஷயம் பாஸ். அந்த தொல்காப்பியனும் அவங்க கூடவே இருக்கன்'.
'அதான் தெரியுமே, அவன்கூடத்தானே அட்டை மாதிரி ஒட்டிக்கிட்டு சுத்துறா'.
'அதில்லை பாஸ், இப்போ தொல்காப்பியன் உஷா மேடம் வீட்டிலேயே தங்கியிருக்கான். இதை மேடமே என் கிட்டே சொன்னாங்க'.
ஆதிக்கு சற்று அதிர்ச்சி....
'அப்படியா? அந்த உஷாவை என்ன கதியாக்குறேன்னு பார் கிரி'...
:ty:Quote:
Originally Posted by saradhaa_sn
:rotfl:
Thanks for the updates, I really appreciate it.
நன்றி ஆனா & கீதா...
தன்னைப்பார்க்க "ஆதியண்ணா" வீடு தேடி வந்திருப்பதைபார்த்து ஆர்த்திக்கு வாயெல்லாம் பல். (ஆதி, தனக்கு ஆதாயமில்லாமல் துரும்பைக்கூட அசைக்க மாட்டான் என்பது இன்னும் இவர்களுக்கெல்லாம் தெரியவில்லை). வீட்டுக்குள் அழைத்தும் வராமல் வெளியில் நின்றே பேசுகிறான்.
"இதோ பார் ஆர்த்தி, உங்க அக்கா அபியை நான் என் எதிரியாக நினக்கலை. ஆனால் அவள்தான் என்னுடைய ஒவ்வொரு விஷயத்திலும் குறுக்கே வந்து எனக்கு சங்கடம் கொடுக்கிறாள். இப்போ அசோஸியேஷன் பிரஸிடெண்ட் எலெக்ஷனில் அபி நிற்கப்போவது உனக்கு தெரியுமா?"
தெரியும் என்பதாக ஆர்த்தி தலையாட்டுகிறாள்.
"உங்க அக்காவுக்கு இது தேவையா?. இப்போ அவள் பிஸினஸில் கவனம் செலுத்தி முன்னேற வேண்டிய நேரம். இப்போ எதுக்கு அவளுக்கு தலைவர் பதவியெல்லாம்?. அதனால் பிஸினஸ் எவ்வளவு பாதிக்கும் தெரியுமா?. அதுவும் கூட, நான் நிற்பது தெரிஞ்சும் எதிர்த்து நிற்கிறாள்னா என்ன அர்த்தம்?. எல்லா விஷ்யத்திலும் எனக்கு பிரச்சினை பண்ணனும்னுதானே. சஷ்டியப்த பூர்த்தி விழாவுல எங்களுக்குத்தான் உரிமையிருக்குன்னு சொன்னோம். அப்பாவும் அதைப்புரிஞ்சிகிட்டு அந்த நேரத்தில் எங்க வீட்டுக்கு வந்துட்டார்.(???) அதுக்காக கோபப்பட்டு அபி இதில இறங்கினாளா?. எனக்கு தெரியும், அவளாக இறங்கவில்லை, சில பேர் அவளை தூண்டி விட்டு இந்த எலக்ஷன்ல நிறுத்துறாங்க. அவங்களுக்கு என்னை எதிர்க்க உங்க அக்காவை விட்டால் ஆள் கிடைக்கலை. இதெல்லாம் அவளுக்கு தேவையா?"
"நீங்க சொல்றதெல்லாம் எனக்கு புரியுது அண்ணா. ஆனால் அக்கா கிட்டே இதையெல்லாம் யார் சொல்றது?"
"நீதான் சொல்லணும் ஆர்த்தி. ஏன்னா இப்போ அபி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்ல நீயும் ஒரு பார்ட்னர். அதனால தைரியமா சொல்லு. உன்னுடைய ட்ராவல்ஸுக்கு பிஸினஸ் பிடிக்க உதவி செஞ்சதுக்காகவும் , டேங்கர் லாரி வாங்க லோன் ஏற்பாடு செய்ததற்காகவும் இதைக் கேட்கவில்லை. என்னடா செஞ்ச உதவிகளை சொல்லிக்காட்டறானேன்னு நினைக்காதே".
"அய்யோ அப்படியில்லை அண்ணா, அதுக்கு ஒரு கைமாறு செய்ய வாய்ப்புக் கிடைக்குமான்னுதான் எதிர்பார்த்திருக்கேன்".
"ஆர்த்தி, நீ சொல்றது உண்மையா இருந்தால் இந்த விஷயத்துல தலையிட்டு அவளைத்தடுத்து நிறுத்து. உங்க அம்மா சொன்னால் அபி கேட்க மாட்டாளா?. அவங்க கிட்டே இதுல உள்ள பிரச்சினைகளை எடுத்துச்சொல்லு. ஒண்ணு தெரிஞ்சுக்கோ ஆர்த்தி, மத்த விஷயம் மாதிரி இல்லே இது, என்னுடைய கௌரவ பிரச்சினை. இதுல இடைஞ்சல் வந்தா நான் எந்த வகையிலும் விட்டுக்கொடுக்க மாட்டேன்".
அபியின் வீடு. அபி வீட்டில் இல்லாத நேரம் ஆர்த்தி வருகிறாள்...
"அம்மா, அக்கா இன்னும் வீட்டுக்கு வரலையா?"
"அவள் இப்போ எங்கே வரப்போறா. ஏதோ அசோஸியேஷன் வேலை அது இதுன்னு லேட்டாத்தான் வர்ரா".
"அது விஷயமா பேசத்தான் வந்தேம்மா. அந்த ஆதியை எதிர்த்துக்கிட்டு அக்காவுக்கு ஏம்மா இந்த வீண் வேலை?. இதுல நமக்கு என்ன பிரயோஜனம்? கம்பெனிக்கு பெரிய ப்ராஜக்ட் கிடைத்து, அதில் கவனமாக இருக்கிற நேரத்தில் எதுக்கு இந்த வேண்டாத வேலை?. இதனால அந்த ஆதியின் கோபம் அதிகமாகி அக்காவுக்கு எதிராக இன்னும் ஏதாவது இடைஞ்சல் கொடுப்பான்".
"ஆர்த்தி, இதைப்பத்தி எனக்கென்ன தெரியும்?. தவிர அபி நல்லா யோசிக்காமலா இதுல இறங்கியிருப்பாள்?".
"அக்காவும் மனுஷிதானம்மா. அவங்களும் தப்பு செய்ய வாய்ப்பிருக்கில்ல?"
இந்த உரையாடலைக்கேட்டுக்கொண்டே வரும் ஆனந்தி, அபியின் முடிவுக்கு சப்போர்ட்டாக பேசுகிறாள்.
"நான் அதுக்கு சொல்லலைக்கா. இந்த தலைவர் பதவியால நம்முடைய பிஸினஸுக்கு இடைஞ்சல்கள் வருமே தவிர எந்த பிரயோஜனமும் கிடையாது. அக்காவின் கவனமும் பிஸினஸைவிட்டு மாறிப்போகும்ணுதான் சொல்றேன்"
(சும்மா சொல்லக்கூடாது. 'ஆதியண்ணா' நல்லாவே பிரைன்வாஷ் அனுப்பியிருக்கார்).
ஆர்த்தி வந்து அம்மாவிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது, டாக்டர் மகேஷ் வீட்டுக்குள் வருகிறார். அவரைப்பார்த்ததும் எல்லோருக்கும் மகிழ்ச்சி.
"வாங்க தம்பி வாங்க?. எப்படி இருக்கீங்க, எப்போ வந்தீங்க?"
"நான் வந்து ரென்டு நாளாச்சுங்க. இனிமேல் சென்னையில்தான் நிரந்தரமாக இருக்கப்போகிறேன்".
"அப்படியா ரொம்ப சந்தோஷம்"
"சரி அபி எப்படி இருக்காங்க?"
"அபியிடம் எந்த மாற்றமும் இல்லை, அப்படியேதான் இருக்கா".
"நானும் அப்படியேதான் இருக்கேன்.... யெஸ் ஸ்டில் வெயிட்டிங். அப்போ நான் வர்ரேங்க".
மகேஷ் போனதும், சாரதா கற்பகத்திடம் "அக்கா. அந்த தம்பி சொன்னதைக்கேட்டீங்களா? இன்னும் அபிக்காக காத்துக்கிட்டு இருக்காராம். நாமதான் அபிக்கு எடுத்துச்சொல்லி சம்மதிக்க வைக்கணும்"
கற்பகத்திடமிருந்து (வழக்கம்போல) பெருமூச்சு...
கோர்ட்......
காரை விட்டு இறங்கும் ஆதியை நிருபர்கள் சூழ்ந்துகொண்டு கேள்விகள் கேட்க, அவன் எந்த ஒன்றுக்கும் பதில் சொல்லாமல் உள்ளே போகிறான். (அந்த நிருபர்கள், ஏதோ ஒரு நடிகையின் வழக்கு சம்மந்தமாக வம்பளக்க வந்தவர்கள். நடிகை வராததால் ஆதியிடமாவது ஏதாவது தீனி கிடைக்குமா என்று பார்த்தனர்... ஊகும்). அதுபோலவே காரில் வந்திறங்கும் உஷாவிடமும் அவர்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.
நீதிபதி முன் அமர்ந்திருக்கின்றனர். அவர் இருவரையும் சமாதானமாகப் போக முயற்சிக்குமாறு சொல்கிறார். இருவருக்குமே அதில் விருப்பமில்லை. தனியாக மனவிட்டுப் பேசும்படி ஜட்ஜ் சொல்லியும் அதற்கு எந்த வாய்ப்பும் இல்லையென்று மறுக்கின்றனர்...
"சார், இந்த ஆதி ஒரு மேல் ஷாவனிஸ்ட். பெண்கள்னாலே அடிமைன்னு நினைக்கிறவர். அவருக்கு தேவை மனைவிங்கற பேர்ல ஒரு அடிமை. அதுக்கு நான் ஆளில்லை".
"ஏன் சார், மனைவியைப்பார்த்து குடும்ப பொண்ணா நம்ம கலாச்சாரத்து ஏற்றபடி நடந்துக்கோன்னு சொல்றது தப்பா. இதோ பாருங்க பேண்ட்டும் ஷர்ட்டும் போட்டுக்கொண்டு கோமாளி மாதிரி வந்திருக்கா. கழுத்தில் நான் கட்டிய தாலி கூட இல்லை".
"சார், கலாச்சாரமும் பண்பாடும் பெண்களுக்கு மட்டும்தானா?. அப்படீன்னா இவர் வேஷ்டி கட்டிக்கொண்டு வரவேண்டியதுதானே. இவருக்கு வேஷ்டி கட்டவாவது தெரியுமா?"
"இதோ பாருங்க, ரெண்டு பேரும் ஒரு மூணு மாசம் பிரிஞ்சு இருங்க. அதுக்குப்பின்னும் ரெண்டு பேரம் மனம் மாறலைன்னா இந்த வழக்கை கோர்ட்டுக்கு அனுப்பலாம்".
"சார், ஏற்கெனவே பல மாதங்கள் இவரைவிட்டு பிரிஞ்சுதான் இருக்கேன். இந்த மூணு மாசத்துல எந்த மாற்றமும் ஏற்படாது".
"அதையேதான் சார் நானும் சொல்றேன். இனி எக்காரணம் கொண்டும் இவளோடு சேர்ந்து வாழவே முடியாது".
"அப்படீன்னா இந்த வழக்கை கோர்ட்டுக்கு அனுப்புவதைத்தவிர வேறு வழியில்லை. நீங்க ரெண்டு பேரும் போகலாம்".
ஆதியும் உஷாவும் ஒருவரை ஒருவர் முறைத்தபடி வெளியேறுகின்றனர்.
(ஆனால் நிச்சயம் என்னைக்காவது இவங்க ஒண்ணு சேருவாங்கண்ணு உள்மனசு சொல்கிறது. ஏன்னா இந்த தொடரிலேயே ஆர்த்தி - ராஜேஷ், மனோ - அனுராதா, அர்ஜுன் - ரேகா இவர்களையெல்லாம் விட ஆதியும் உஷாவும்தான் ரொம்ப பொருத்தமான ஜோடி).
பெண்களுக்கு, குறிப்பாக சீரியலில் வரும் பெண்களுக்கு, அதிலும் குறிப்பாக இந்த சீரியலில் வரும் பெண்களுக்கு... இவ்வளவு ஏன், கற்பகத்துக்கு வீட்டு விஷயங்களை (என்னதான் பெரிய வீட்டில் இருந்தாலும்) கோயில் நின்று பேசினால்தான் நிம்மதி.
கற்பகம் சந்திர மண்டலத்திலிருந்து வந்தவள் அல்ல, ராஜேந்திரனும் செவ்வாய்க் கிரகத்திலிருந்து வந்தவன் அல்ல. ஒரே வீட்டில் காலம் முழுக்க இருப்பவர்கள். மற்றவர்களாவது வேலை வெட்டி என்று வெளியில் போய் வருவார்கள். இவர்கள் இருவரும் மேய்ச்சலுக்கு போகும் மாடுகள் அல்ல, தொழுவத்தில் கட்டிய மாடுகள். இருந்தும் இவர்கள் அபியின் கல்யாணம் பற்றியும் ஆனந்தியின் கல்யாணம் பற்றியும் பேச தேர்ந்தெடுக்கும் இடம் கோயில். ஆனந்தி கார்த்திக் கல்யாணம் பற்றியும், அபி - மகேஷ் கல்யாணம் பற்றியும் இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருப்பதை பின்னால் இருந்து 'குள்ளநரி' கலா கேட்டுவிடுகிறாள். அடுத்து அவள் எங்கே போய் யாரிடம் வத்தி வைப்பாள் என்று எல்.கே.ஜி. குழந்தையிடம் கேட்போம்......
'இதோ பாரும்மா குழந்தை, இந்த அக்கா இப்போ நேரா எங்கே போவாங்க?'
'அதுவா... வந்து... வந்து... அலமேலு ஆன்ட்டி வீட்டுக்கு போவாங்க'.
(தண்டனை கொடுப்பதில் மனிதனின் தீர்ப்பு சிலசமயம் தவறாக முடிவதுண்டு. ஆனால் கடவுளின் தீர்ப்பில் தவறு வருமா?. இந்த சந்தேகம் நமக்கு வரக்காரணம், உடம்பு முழுக்க விஷத்தை வைத்துக்கொண்டு, 'ஐந்தரை அடி சயனைட் பாட்டிலாக' உலவிக்கொண்டிருக்கும் கலாவை விட்டு விட்டு, நல்லவனான அவள் கணவனுக்கு கைகால்கள் விளங்காமல் செய்திருப்பதால் அப்படி ஒரு சந்தேகம் வருகிறது. இது கதாசிரியரின் கற்பனைக்கதை என்று விட்டுவிட்டாலும், நிஜ வாழ்க்கையிலும் சில இடங்களில் (பல இடங்களில்..?) அப்படித்தானே இருக்கிறது?. நல்லவர்கள்தானே எப்போதும் கஷ்ட்டப்படுகிறார்கள்?. மனிதனின் சட்டங்கள் மட்டும் ரொம்ப லட்சணமாக இருக்கிறதா?. மண்டையை பிளக்கும் உச்சி வெயிலில் வேலை செய்யும் விவசாயிக்கும், முதுகு ஒடிய மூட்டைதூக்கிப் பிழைத்து மானத்தோடு வாழ நினைக்கும் தொழிலாளிக்கும் அடுத்த வேளை உணவுக்கு உத்திரவாதம் இல்லை. ஆனால் குற்றம் செய்துவிட்டு ஐந்தாண்டு சிறைத்தண்டனை பெறும் ஒரு அயோக்கியனுக்கு, ஐந்தாண்டுகள் உணவுக்கு அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்கிறது. அவர்களுக்கு வாராவரம் கோழிக்கறியாம், சிறையிலேயே சினிமாவாம். எந்த அரசியல்வாதியின் முப்பாட்டன் வீட்டு சொத்திலிருந்தும் அல்ல, நம்முடைய வரிப்பணத்தில் இருந்து. இவற்றையெல்லாம் பார்க்கும்போது, கேள்விப்படும்போது நம்முடைய இ.பி.கோ. சட்டப் புத்தகங்களையெல்லாம் ஒரு பெரிய மைதானத்தில் போட்டு தீ வைத்துக்கொளுத்தினால் என்ன என்று தோன்றவில்லையா?. சரி, விஷயம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு மேல் எழுதினால் இந்தப்பதிவு நீக்கப்படவும் வாய்ப்புள்ளது).
தன்வீட்டுக்கதவு தட்டப்படுவதைக்கேட்டு உஷா கதவைத்திறந்து பார்க்க, யாரோ ஒருவர் 'பேக்'குடன் நின்றுகொண்டிருக்க... 'யார் நீங்க? என்ன வேணும்?'
'நான் தினச்சுடர் பத்திரிகை நிருபர். உங்களை ஒரு பேட்டியெடுக்கலாம்னு வந்திருக்கேன்'
'பேட்டி கொடுக்கும் அளவுக்கு நான் ஒண்ணும் வி.ஐ.பி.அல்லவே".
'அதில்லீங்க, நீங்களும் உங்க கணவர் ஆதித்யாவும் டைவர்ஸ் செஞ்சுக்கப்போறீங்க. அது சம்மந்தமா கோர்ட்டில் சொல்ல முடியாத விஷயங்களை சொன்னால் பத்திரிகையில் போடுவோம். அதனால...'
'அதனால உங்க பத்திரிகை பத்தாயிரம் பிரதி கூடுதலாக விற்கும். அதுதானே. இதோ பாருங்க, இது என்னுடைய பெர்சனல் விஷயம். இது பத்தி பேப்ப்ர்ல வருவதை நான் விரும்பலை'.
'நீங்க சொன்னதை அப்படியே எழுதிடட்டுமா?'
'நீங்க என்ன வேணும்னாலும் எழுதிக்குங்க. போங்க இங்கிருந்து'.
பத்திரிகைக்காரரின் பேச்சைக்கேட்ட உஷாவின் அம்மாவுக்கு, பேசாமல் ஆதியுடன் சமாதானமாக போயிடலாம்னு தோன்ற, அது பற்றிப்பேச ஆரம்பிக்கிறாள். ஆனால் உஷாவும் அவள் அப்பாவும் மறுக்கின்றனர். டைவர்ஸ் கிடைத்தபின் உஷாவின் அடுத்த வாழ்க்கை பற்றி அம்மா பேச, உஷா கோபப்படுகிறாள். தான் காலம் முழுக்க ஆண்துணையில்லாமலேயே வாழ விரும்புவதாக தன் குழந்தையை வளர்த்து ஆளாக முடியும் என்று சொல்வதுடன் வழக்கம்போல ஆண்களைப்பற்றி மோசமான லெக்சர் கொடுக்கிறாள். அன்பான அப்பாவும், ஆதரவான தொல்காப்பியனும் பக்கத்தில் இருக்கும்போது, இவள் ஏன் ஆதி என்ற அயோக்கியனையே ஸ்கேலாக வைத்து ஆண்களை அளக்கிறாள் என்பது புரியாத ஒன்று. ஏற்கெனவே அபியைப்பற்றி சொல்லும்போதும் இதைச்சொன்னேன் என்று நினைக்கிறேன். (நியாயத்தை எடுத்துச்சொலவ்து, ஸேம்சைட் கோல் போடுவதாகாது என்பது என் எண்ணம்.)
குழந்தை சொன்னதுபோலவே அலமேலுவின் வீட்டுக்கு வரும் கலா, வழக்கம்போல கொஞ்சநேரம் அலமேலுவின் வெட்டி பந்தாக்களை கேட்டுவிட்டு (இம்முறை ஷேர் மார்க்கெட்), பின்னர் மெல்ல அபியின் இரண்டாவது திருமணம் பற்றி தான் காதால் கேட்ட விஷயத்தைப்போடு உடைக்கிறாள்...
'ஏய், நீ என்ன சொல்றே கலா. அந்த அபிக்கு ஏற்கெனவே என் பையனோடு கல்யாணம் ஆகி டைவர்ஸும் ஆச்சு. அந்த டாக்டர் ஏன் போயும் போயும் அவளைக் கல்யாணம் பண்ணிக்க விரும்புறான். ஒரு வேளை அவன் நிஜமாவே டாக்டர் இல்லையோ'.
'இல்லகா, அவன் டாக்டர் படிப்புலயே விசேஷமா படிச்சவனாம், அதாவது பைத்தியங்களையெல்லாம் குணப்படுத்துற டாக்டராம்'.
'அப்போ பைத்தியக்கார டாக்டரா, அப்படீன்னா அந்த குடும்பத்துக்கு பொருத்தமானவன்தான்'.
அப்போது வெளியேயிருந்து வீட்டுக்குள் பாஸ்கர் வர, அதே சமயம் மாடியில் இருந்து சங்கீதாவும் இறங்கி வர, பாஸ்கர் அலமேலுவிடம் கோபமாக...
'ஏம்மா உனக்கு வேறு வேலை இல்லையா?. அந்த அபியைக் குறை சொல்வதே உனக்கு வேலையா போச்சு. பாவம்மா அந்த அபி. ஏன் அவளைப்பத்தி எப்போதும் புரளி பேசிக்கிட்டே இருக்கே (????)'
மகனின் பேச்சு அலமேலுவுக்கு திகைப்பை உண்டாக்குகிறது. இவனா இப்படி...?.
'அதில்லைடா பாஸ்கரா, அந்த அபிக்கு இன்னொரு கல்யாணம் பண்ணப்போறதா....'
'விடும்மா. அவங்க என்ன வேணும்னாலும் பண்ணிட்டுப்போறாங்க' என்றவன் கலாவின் பக்கம் திரும்பி, 'ஏங்க, உங்களுக்கு வேலையில்லைன்னா அப்பளம் போடுங்க, ஊதுபத்தி செஞ்சு வியாபாரம் பண்ணுங்க. அதைவிட்டு ஏன் இங்கே வந்து புரளி பேசிக்கிட்டு இருக்கீங்க?' கன்னத்தில் பளார் என்று விழாத குறையாக பாஸ்கர் கேட்க, கலாவின் முகம் வாடுகிறது. 'இதென்னாடா கிணறு வெட்ட பள்ளம் தோண்டினால் உள்ளேயிருந்து பூதம் வருகிறதே' என்று ஏமாற்றம். (பாஸ்கர், சங்கீதாவுக்காக நடிக்கிறானா அல்லது உண்மையாகவே சொன்னானா தெரியாது. ஆனால் கலாவுக்கு கிடைத்த டோஸ் தேவையானதே).
வெளியில் புறப்பட்டுக்கொன்டிருக்கும் ஆதியிடம் 'இன்னைக்கு நியூஸ் பேப்பர் படிச்சீங்களா?' என்று ரேகா கேட்க, அதற்கு கிரி 'நான் படிச்சிட்டேன், ஒண்ணும் விசேஷம் இல்லையே'
'ஆதி, இவரை மாதிரி ஆளுங்களை உங்க செக்ரட்டரியா வச்சிருந்தா உருப்பட்ட மாதிரிதான். இதோ பாருங்க அந்த உஷா உங்களுடனான டைவர்ஸ் பத்தி பேட்டி கொடுத்திருக்கா' என்று சொல்லி அந்த பத்திரிகை நிருபர் விட்டிருந்த சரடுகளைப்படித்துக்காட்ட, ஆதியின் ரத்தம் சூடேறுகிறது.
'கிரி, இன்னைக்கு என்னுடைய எல்லா அப்பாயிண்ட்மெண்ட்டுகளையும் கேன்சல் பண்ணு. இதுல உடனடியா ஒரு முடிவு எடுத்தாகணும்'.
:clap: nanraaga sOneergaL :DQuote:
Originally Posted by saradhaa_sn
:lol:Quote:
Originally Posted by saradhaa_sn
:ty: