-
From net
இன்று காலை வாக்கிங் முடித்து வரும்போது ஒரு ஆட்டோ கண்ணில் பட்டது....
துரத்தி சென்று அதை படம் பிடித்தேன்....இதோ உங்கள் பார்வைக்கு...அதன் டிரைவருடன் பேசினேன்...
அந்த கால கட்டத்தை சேர்ந்தவரும் இல்லை... பிறகு எப்படி அவருக்கு எம்.ஜி.ஆர் மேல் அன்பு, பக்தி மரியாதை எல்லாம் என்று அவரிடமே கேட்டேன்....
" சார் என் பேரு சுரேஷ், கோவை பொன்னையராஜபுரம் ....
பக்தி செலுத்த, போற்றி பின்பற்ற தலைமுறை தேவை இல்லை சார்... எப்படி வாழவேண்டும் என்று என் போன்ற சாதாரண மக்களுக்கு அவர் படங்கள் தான் பாடம்...
அவரை சாதாரண நடிகராக உலகம் பார்க்கிறது...நான் ஒரு ஆசானாக, தலைவராக, பரோபகாரியாக, ஏன் ஒரு அவதாரமாகவே பார்க்கிறேன்....
தினமும் காலையில் அவர் படத்துக்கு பூ போட்டு வணங்காமல் என் தொழிலை தொடங்குவதில்லை...வர்றேன் சார்" என்று கூறி கிளம்பினார்...
ஆயிரம் நடிகர்கள் வந்து போகின்றனர், ஆயிரம் அரசியல் தலைவர்கள் வந்து போகின்றனர்...யாருக்குமே ரசிகர்கள் மட்டும் தான் இருந்திருக்கின்றனர்....பக்தர்கள் இருந்ததில்லை....எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம் மட்டும் இல்லை...அதையும் கடந்தவர்...
http://i49.tinypic.com/35lrvid.jpg
-
Dear Jai Shankar Sir,
THANK YOU VERY MUCH. You have given different news with rare pictures.
Please continue with that.
Ever Yours
S. Selvakumar
Endrum M.G.R.
Engal Iraivan
-
பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அறக்கட்டளையின் சார்பில் ரத்த தானம் செய்யும்போது தலைவரின் டிவிடி போடப்பட்டது..ரத்ததானம் செய்யும் இளைஞரின் தலைக்கு மேல் தலைவரின் ராஜாவின் பார்வை பாடலின் ஸ்டில் பாருங்கள்
http://i46.tinypic.com/j770nq.jpg
-
-
-
-
-
-
மக்கள் திலகத்தின் பெருமைகளை என்றென்றும் பறை சாற்றும் மதுரை நகர் பற்றிய ஹிந்து நாளேட்டின் பதிவு .
MGR continues to live in the minds of Madurai people
Naadodi Mannan re-released in the city still draws huge crowds, as always
MADURAI: One of the things that have made theorists of popular culture and even political scientists to look and re-look into a phenomenon is in fact that of the late Chief Minister and matinee idol M.G. Ramachandran.
MGR's super hit film Naadodi Mannan was re-released in Madurai on March 18, 2011 at Thanga Regal Theatre and even after almost 50 years since its release the film invited huge crowds.
Madurai was always seen as the bastion of MGR and it was here many of his firsts were achieved.
Madurai is a city which is synonymous with a strong visual culture and carnivals, the most important aspect of the visual culture still even in this era of creative commons and digital era seems to be films.
Madurai has Asia's biggest film theatre, Thangam (now defunct) with a seating capacity close to 4,000.
It has had a history of frenetic fan following which always had a spiritual dimension where the film stars who were treated as demigods. MGR always had (still has a) vivid presence in the visual, political, and emotional landscape of Madurai, says film historian Sara Dickey.
Demigod Status
In fact it was here that when MGR suffered a stroke, fans cut off fingers, limbs, and offered them to God praying for his recovery.
It was Madurai Veeran( Warrior of Madurai) a film after the folklore legend turned deity, the first MGR film which ran for 25 weeks (silver jubilee), his first fan club was from Madurai and his foray into politics all had the Madurai connection, and of course his last film Maduraiyai Meeta Sundarapandian (The King who liberated Madurai) had the city as its central subject.
MGR came to cinema from a stage career, beginning at the age of six, when he entered the Madurai Original Boys Company, where he learned acting, dancing, and sword-fighting—arts that served him well in his later career.
It was in Tamukkam grounds in Madurai, a grand function was held on October 26, 1958 to celebrate the astounding success of Naadodi Mannan.
Glittering procession
MGR was taken in a glittering procession from Mangamma Chathiram to the venue where leaders of political parties and film artistes offered their felicitations and presented him with a golden sword. When the film was re-released in Chintamani Theatre here on December 29, 2006, crowds poured in huge numbers.
MGR's fans and general public unable to find seats sat on the steps and even on the floor and watched the movie, says an MGR loyalist.
Dickey in her book Cinema and Urban Poor in South India (Cambridge University Press) says that when the Second All-World International MGR Fan Club Conference was held in Madurai in 1986 - a political event despite its cinema-related title - was inaugurated by a two-mile procession that began at 7 a.m., and by 11 p.m., many people were still waiting their turn to cross the starting line.
Apart from the fact that MGR was with the Dravida Munnetra Kazhagam, it was his fan clubs which formed the rank and file of his All India Anna Dravida Munnetra Kazhagam. MGR's success in politics paved way for many film stars to follow.
The images of film stars here are used to form new social identities and for newer forms of assertion. Dickey, once in an interview to The Hindu, said that fan clubs could definitely be seen as an extension of the political space and an emerging political society that would check the hegemony of civil society.
-
புதுச்சேரியில் எங்க வீட்டு பிள்ளையைக் காண சென்னையிலிருந்து உரிமைக்குரல் ஆசிரியர் திரு. ராஜ், திரு. ஹயாத், திரு. சுந்தர், திரு.சி.எஸ்.குமார், திரு. லோகநாதன், திரு. நாகராஜ் ஆகியோர் வந்திருந்தனர். அவர்கள் ஞாயிற்றுகிழமை மாலை காட்சிக்கு வந்திருந்து தலைவருக்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து சந்தோஷத்துடன் கொண்டாடினார்கள்..திரு. லோகநாதன் அவர்கள் கேமராவில் எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை இங்கே உங்கள் பார்வைக்கு வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்..புது படங்கள் ஈ அடிக்கும் இந்த காலத்தில் நமது தலைவரின் படத்திற்கு நிறைய ரசிகர்கள் வந்திருந்து ஆரவாரத்துடன் படம் பார்த்தனர்.
http://i48.tinypic.com/v45j55.jpg
-
-
Brand MGR still rules kollywood
MGR. It's a name that spells magic on the silver screen even today. Marthur Gopala Ramachandran (MGR) virtually dominated Tamil cinema for over three decades beginning 1950. He rose to stardom by playing characters that featured him as the saviour of the poor. An actor-turned-politician, MGR still charms Kollywood.
To cash in on MGR's huge fan base that exists even today, several films are titled after MGR's blockbusters, his hit songs are remixed and retuned and several actors have adopted him as their role models.
Films like Ayirathil Oruvan, Nam Naadu, Anbae Vaa, Nadodi Mannan, Ninaithathai Mudipavan, Pachaikili Muthucharam, Thottal Poo Malarum are inspired by the movies and songs of the legend.
Even after two decades of his death, MGR still manages to hold his sway in Kollywood.
When asked, a prominent director says, 'it is natural that every film personality gets inspired by MGR. After all, we grew up watching his films. At a time when mythological moves were the order of the day, he created a silent revolution coming up with movies on mass-based themes that were socially relevant.'
MGR has emerged as a brand today. Any project named after MGR's film or song attracts immediate attention, he adds.
To prove a point, a couple of MGR's blockbuster movies were re-released recently. They have gone on to collect good revenue. Films like Nadodi Mannan. directed and enacted by MGR and Ayirathil Oruvan were re-released last year in over a dozen theatres across the State. It was celebration time for several thousand MGR fans, who thronged cinema halls in large numbers to watch their favourite hero.
According to Marimuthu, an ardent fan of MGR, 'he is a God to us. We grew up watching his movies. No doubt, there is a huge demand for his movies and songs even today'.
Some of his popular songs like Thottal Poo Malarum, Adho Antha Paravai Polae, Nan Aanai Ittal and Nan Yaar Nee Yar were remixed for some of the recent films.
Says music director D Imman: ' Following a demand from the audience, we chose to remix some golden hits of MGR. But it is no easy job. I have to satisfy several thousands of his fans without spoiling the original charm'.
He is the biggest celebrity in Tamil cinema even today. His unique deeds and achievements are unparallel, says director P Vasu.
'My father Peethambaram had worked as a make-up man for MGR and I had an opportunity to watch the matinee idol in very close quarters. He inspired me to enter filmdom,' he adds.
A demi-God to several film personalities, MGR will continue to rule the masses, say his fans in chorus.
�M Bharat Kumar
-
-
-
COURTESY - ROOP SIR
Fort of MGR- MADURAI
Madurai is historically a famous city and to MGR Madurai people are the first to introduce MGR Fans club in the year 1950, which later spread to all of India and the World.
MGR was very sentimental about Madurai. His first 25 weeks film was Madurai Veeran and his last acted movie was Madurai Meeta Sundarapandian. Many of the titles also came from Madurai some are KALIYUGA PARI and KALAI SUDAR. MGR contested from Madurai West constituency in 1980 and won by substantial vote difference. Madurai was said to be MGR's Fort as far as the film and political life are concerned.
Madurai Central Theatre
Pictures posted here are taken presently and during the re-release of MGR films such as Kulabaghavali, Thaiyai katha thanaiyan, Engal Thangam, Ayirathil Oruvan, Ninaithathai Mudipavan, Nadodi Mannan, Ithayaveenai etc. Note the decorations on MGR.
The Film records in Madurai: Source Sarithiram Padaitha Makkal Thilgam MGR, Special Edition - released as Kalaiventhan MGR Bakthargal Trust Silver Jubilee Year Issue 2006.
46 films has crossed more than 100 days in Madurai alone and 6 films has crossed 25 weeks they are :
Madurai Veeran
Enga Vetu Pillai
Matukara Velan
Adimaipen
Ulagam Sutrum Valiban
Urimai Kural.
100 days films are
01. Rajakumari
02. Mohini
03. Maruthanatu Elavarasi
04. Manthiri Kumari
05. Marmayogi
06. Sarvathigari
07. En Thangai
08. Jenovah
09. Malaikallan
10. Kulabaghavali
11. Alibabavum Narpathu Thirudargalum
12. Thaikupin Tharam
13. Chakravarthi Thirumagal
14. Puthumaipithan
15. Mahadevi
16. Nadodi Mannan
17. Baghdad Thirudan
18. Thirudatha
19. Thai sollulai thatatha
20. Thaiyai katha thanaiyan
21. Neethiku pin pasam
22. Panakara Kudumbam
23. Ayrathil Oruvan
24. Anba Vaa
25. Kavalkaran
26. Oli Vilaku
27. Nam Nadu
28. En Annan
29. Engal Thangam
30. Kumarikottam
31. Rickshawkaran
32. Nallaneram
33. Idhyaveenai
34. Netru Indru Nalai
35. Sirithu Vazha Vendum
36. Ninathathai Mudipavan
37. Idhyakani
38. Pallandu Vazhga
39. Indru Pol Endrum Vazhga
40. Meenava Nanban
-
-
-
-
நன்றி - முரளி கண்ணன் - இணையத்தளம்
எம் ஜி யார் திரைப்படங்கள் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம்
நான் பிறந்து மூன்று ஆண்டுகள் மட்டுமே எம்ஜியார் திரைப்படங்களில் நடித்தார். ஆனால் அதன்பின் ஓர் பத்து ஆண்டுகளுக்கு அவரது படங்கள் இடைவிடாமல் ரீ ரிலிஸ் ஆகி எங்கள் ஊர் தியேட்டர்களை அலங்கரித்துக் கொண்டுதான் இருந்தன. அப்படி ரீ ரிலீஸ் ஆனவை எல்லாமே மக்களால் நல்ல வரவேற்பைப் பெற்ற படங்கள் தான். அதுபோக அவர் நடித்த பல படங்களை தொலைக்காட்சி வழியாக கண்டுள்ளேன்.
ஒரு படத்தை அது ரிலீஸ் ஆகும் காலகட்டத்தில் மக்களுடன் சேர்ந்து பார்க்கும் போதுதான் அப்படம் ஏற்படுத்தும் உணர்வை நேரடியாக அறியமுடியும். அதன்பின் தொடரும் காலங்களில் அப்படம் அவர்கள் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கத்தையும் உணர முடியும்.
முதலில் பிரபலங்கள் எம் ஜி யார் படங்களால் சமூகத்தில் ஏற்பட்ட தாக்கம் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
ஓட்டேரி பக்கம் போய் பார்த்தீங்கண்னா, அங்க இப்பவும் தண்டால், பஸ்கி எடுத்துக்கிட்டு ஒரு கூட்டமே இருக்கும். மது அருந்த மாட்டாங்க, சிகரெட் குடிக்க மாட்டாங்க. அவங்க அப்படி செய்யுற இடத்துல ஒரு எம்ஜியார் புகைப்படம் இருக்கும். அப்படி அவங்கள மாத்துனவர் எம்ஜியார்.
இது கமல்ஹாசன் பல வருடங்களுக்கு முன் கொடுத்த பேட்டியில் சொன்னது.
எம்ஜியார் படம் ரிலீஸ் ஆகப்போகுதுன்னா அந்தப் படத்தோட ஸ்டில்லுகள பார்த்துட்டு, அதே மாதிரி டிரஸ் பண்ணிட்டு போயிருவோம். அப்படி ஒரு தடவை சிந்தாமணி தியேட்டருக்குப் போன போது, எங்களை மாதிரியே நிறையப் பேர் வந்திருந்தாங்க.
இது விஜயகாந்த், ஆனந்த விகடனில் வெளியான அவரைப்பற்றிய தொடரில் சொன்னது.
நான் வித்தியாசமா டிஸைன் செஞ்சு, ஒரு பேண்ட் தைக்கச் சொல்லி போட்டுக்கிட்டேன். எங்கப்பா அதைப் பார்த்து திட்டுனாரு. ஆனா அதுக்கடுத்து வெளியான படத்துல எம்ஜியார் அந்த மாடல் பேண்ட் தான் போட்டிருந்தார். இளைஞர்கள்கிட்ட நல்ல வரவேற்பு. அப்பதான் எனக்குத் தெரிஞ்சது. ஏன் எங்கப்பா ட்ரான்ஸ்போர்ட்ல வேலை பார்க்குறாரு, எம்ஜியார் சூப்பர் ஸ்டாரா இருக்காருன்னு.
பாண்டியராஜன் – தான் தயாரித்த குமுதம் இதழில் எழுதியது.
எம்ஜியார் தனி கதாநாயகனாக நடித்தது 47ல். 53 ஆம் ஆண்டு அவர் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். பின் 72ல் அங்கிருந்து வெளியேறினார். பின்னர் அதிமுகவைத் தொடங்கி 77 வரை நடித்தார்.
47 முதல் 53 வரை வெளியான படங்களின் வெற்றியும், அப்போதைய அரசியல் சூழ்நிலையும் எம்ஜியார் தனக்கான பாதை எது என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ள உதவியது.
மந்திரி குமாரி, மருத நாட்டு இளவரசி (வசனம் : கருணாநிதி), மர்மயோகி, சர்வாதிகாரி ஆகிய சரித்திர பிண்ணனி உள்ள படங்கள், அதில் எம்ஜியாரின் பாத்திரப் படைப்பு, அவர் பேசிய வசனங்கள் அவருக்கு நல்ல இமேஜைக் கொடுத்திருந்தன.
இப்போது அந்த கால அரசியல் சூழ்நிலையைப் பார்ப்போம். சுதந்திரம் கிடைத்து காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. பெரும்பாலான மாவட்டங்களுக்கு ஜமீன்தார்கள், பண்ணையார்கள், தொழிலதிபர்கள் தான் பிரதிநிதியாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். அதிகாரம் பரவலாக்கப்படாமல் ஓரிடத்தில் குவிந்திருந்தது.
ஒரு மனிதன் இளைஞனாயிருக்கும் வரை அவனுக்கு அமைப்பை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற எண்ணம் தன்னிச்சையாகவே இருக்கும். திருமணம் முடிந்தோ அல்லது பொறுப்புக்கள் அதிகரிக்கும் போதோ அமைப்புடன் சமரசம் செய்து வாழ்க்கையை ஓட்டிவிட வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்கும். அப்போதைய கால கட்டத்தில் வெள்ளையர் ஆட்சி இல்லை. அமைப்பு என்பது நிலப்பிரபுத்துவம் ஆக இருந்தது. அது காங்கிரஸையும் நேரடியாகக் குறித்தது.
பெரியார், 1925ல் இருந்தே காங்கிரஸுக்கு எதிரான நிலைப்பாடில் இருந்தார். அவர்களுக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களைப் பரப்பி வந்தார். அவரால் கவரப் பட்ட இளைஞர்கள் அந்த அமைப்புக்கு எதிரான மனநிலையில் இருந்து வந்தார்கள்.
1953ல் எம்ஜியார் திமுகவில் இணைந்து பின் 72ல் வெளியேறும் வரை அவர் நடித்த திரைப்படங்களில் எல்லாம் பெரியாருடைய கருத்துகளையும், திமுகவின் கொள்கைகளையும் பிரதிபலித்துக் கொண்டே தான் வந்தார்.
இந்தக் கால கட்டத்தில் அவர் நடித்த அப்போதைய சமூகத்தை பிண்ணனியாகக் கொண்ட படங்களில் எல்லாம், அவர் ஒரு சாதாரண குடும்பப் பிண்ணனி கொண்டவராக இருப்பார். பெருந்தனக்காரர்கள் ஊரை சுரண்டுவார்கள். எதிர்த்துக் கேட்பார். உடனே அவர்கள் சூழ்ச்சி செய்து இவரை சிக்கலில் தள்ளுவார்கள். பின் அதில் இருந்து மீள்வார். ஊர் கொண்டாடும்.
இந்த சிக்கலில் இருந்து மீள அவர் பெரிய வித்தையெல்லாம் செய்ய மாட்டார். தனி மனித ஒழுக்கமுள்ளவராக, பொது வாழ்வில் நேர்மையானவராக இருந்தே அதை சாதிப்பார். முக்கியமாக தன் பாத்திரப் படைப்பில் எந்த ஜாதியின் சாயலும் வராமல் பார்த்துக் கொண்டார்.
பெருந்தனக்காரர்கள் அப்போதைய காங்கிரஸ் முதலாளிகளையும், சாதாரணன் அப்போதைய நடுத்தர, ஏழை இளைஞனையும் பிரதிபலித்தது. அப்போது திமுகவில் இப்படிப்பட்ட இளைஞர்களே இருந்தார்கள். அவர்கள் தங்களை அடையாளப் படுத்திக் கொள்ள இது உதவியது.
அதனால் தான் எம்ஜியார் உபயோகப் படுத்தும் உடையை உடுத்தும் (பேகிஸ்) , கடவுள் விஷயத்தில் தான் நேரடியாகப் பங்கு கொள்ளாத மனோபாவம், ஜாதிப் பெயர்களை தன் பெயரில் பின்னால் போட்டுக்கொள்ளாத ஒரு இளைஞர் கூட்டம் உருவாகியது.
இப்படி ஒருவருடன் ஒரு கூட்டமே தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளுமா?
53-72 காலகட்டம். ஆத்மார்த்தமாக, எந்த இடையூறுமின்றி படம் பார்க்கிறார்கள். தங்களை அடையாளப் படுத்திக் கொள்கிறார்கள். சில பண்புகளால் கவரப் பட்டு தங்களை மேம்படுத்தவும் அந்தக் கால இளைஞர்கள் முயல்கிறார்கள்.
எம்ஜியாரும் அந்தப் பிம்பம் கலைந்து விடாமல் தன்னால் ஆன எல்லா முயற்சிகளையும் செய்தே வந்திருக்கிறார். அப்போதைய பிரம்மாண்ட பட நிறுவனங்களான, விஜயா வாகினி (எங்க வீட்டு பிள்ளை) , ஏவிஎம் (அன்பே வா) மற்றும் ஜெமினிக்கு (ஒளி விளக்கு) தலா ஒரு படங்கள் மட்டுமே செய்திருக்கிறார். மார்டன் தியேட்டர்ஸில் அதற்கு முன் இரு படங்களிலும், 53க்கு பின் ஒரே படத்திலும் (அலிபாபாவும் 40 திருடர்களும்) மட்டுமே நடித்திருக்கிறார். இவை எல்லாமே பிளாக் பஸ்டர்ஸ்.
அந்தக் கால கட்டத்தில் பல தயாரிப்பாளர்களை (உதா தேவர் பிலிம்ஸ், சத்யா மூவிஸ் ) எம்ஜியார் உருவாக்கியிருக்கிறார் (அவர் வசதிக்காக என்றே பலரும் குறிப்பிட்டிருக்கிறார்கள்). என்றாலும் தனக்கு மிகப் பெரும் வெற்றிப்படங்களைக் கொடுத்தவர்களுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற முன் வர வில்லை என்பதும் பல சாமானியர்களை தயாரிப்பாளர் ஆக்கியதும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்திருக்கலாம்.
இந்த காலகட்டத்தில் அவர் நடித்த அரசர் கதைகளிலும் கூட சுத்த தமிழ்ப் பெயர்களை தான் தன் பாத்திரத்துக்கு வைத்தார். (நாடோடி மன்னன் : மார்தாண்டன், வீராங்கன், ஆயிரத்தில் ஒருவன் : மணிமாறன்). அவர் மன்னனாக இருந்தால் மக்கள் நலமே சிந்தனையாக இருப்பதாகவே காட்சிகள் இருக்கும். எனவே இளைஞர்கள் இந்தப் படங்களிலும் தங்களை அடையாளப் அடுத்திக் கொள்ள முடிந்தது.
சமூகப் படங்களில் அவர் ஒழுக்கமானவராக தன்னை காட்டியதோடு மட்டுமல்லாமல் தன் உடைகளிலும் எளிமையைக் காட்டினார். சட்டை பேண்ட் அணிந்திருப்பார். வாட்ச் அணிந்திருப்பார். மோதிரம், செயின் ஆகியவை வெளிப்படையாகத் தெரியாது.
இப்போது கூட அறுபது வயதுக்கு மேல் உள்ள பல ஆண்களைப் பாருங்கள். வசதி இருந்தும் வாட்சுடன் நிறுத்திக் கொண்டிருப்பார்கள். நன்கு மீசை வளரும் அளவுக்கு மரபணு இருக்கும். ஆனாலும் அதை உதட்டுக்கு மேல் ஒரு மெல்லிய கோடாக மட்டுமே வைத்திருப்பார்கள். இதற்கு எம்ஜியாரின் மீசைதான் காரணம்.
அப்போது தொலைக்காட்சி இல்லை. மீடியாக்கள் 24 மணி நேரமும் செய்திக்காக அசுரப்பசியோடு இரை தேடி அலையவில்லை. இத்தனை நாளிதழ், பத்திரிக்கைகளும் இல்லை. எனவே அவரின் உண்மையான கேரக்டர் என்பது படத்தில் வந்ததுதான் என்று மக்கள் நம்பவேண்டிய கட்டாயம். இது இளைஞர்களிடம் நல்ல தாக்கத்தையே ஏற்படுத்தியது. ராமனாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் பல இளைஞர்களுக்கு ஏற்பட்டது.
அடுத்ததாகப் பார்க்கப் போனால் அவர் குறிப்பிட்ட தொழில் செய்தவராக நடித்த படங்கள். ரிக்*ஷாகாரன், படகோட்டி, மாட்டுக்கார வேலன், இவையெல்லாம் அந்தந்த செக்மெண்ட் இளைஞர்களுக்கு ஒரு அந்தரங்க பூரிப்பைக் கொடுத்ததாக சொல்வார்கள். எனக்குத் தெரிந்த வளையல்காரர் ஒருவரின் வீட்டில் பெரிய எம்ஜியார் படமிருக்கும். காரணம் கேட்டதற்கு அவர் சொன்னது “ படகோட்டியில வளையல் காரரா வருவார்”
அது மாறுவேடம். இருந்தும் அவருக்கு ஒரு அகமகிழ்ச்சி.
பொதுவாக எம்ஜியாரின் படங்களில் காவல்துறை அதிகாரி நேர்மையானவராகவே காட்டப்படுவார். அது நம்பியாராக இருந்தாலும் சரி. அசோகனாக இருந்தாலும் சரி. உயர் அதிகாரிகள் நன்மையையே செய்வார்கள். எனவே இவர் படங்களைப் பார்ப்பவர்கள் காவலர்களை மரியாதையுடன்தான் பார்த்தார்கள்.
இவர் கட்டமைத்த எதிரி என்று பார்த்தால் பணக்காரர்களும், தவறான அரசர்களும் தான். இது இயல்பாக திமுகவிற்கு இளைஞர்களை திருப்பிவிட ஏதுவாக இருந்தது.
ஆனால் 72க்குப் பின் நடித்த படங்களில் மறைமுகமாக கருணாநிதி மற்றும் திமுகவுக்கு எதிரான கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கும். கவர்ச்சி காட்சிகளும் கூடுதலாக இருக்கும் வகையில் படங்கள் இருந்தன. அவற்றாலும் கவரப்பட்ட ஒரு தலைமுறை உருவானது.
எம்ஜியார் என்ற பிம்பத்தை கட்டமைக்க உதவியதும், அதன்மூலம் அவர் அக்கால இளைஞர்களை நல் வழியில் பாதித்ததும் 53-72ல் வெளியான படங்களின் மூலமே. அது திமுகவிற்கும் பெரும் உதவியாக இருந்தது.
-
பாரத ரத்னா எம்.ஜி.ஆர் இறந்தது 25-12-1987.
இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி , ப்ரெசிடென்ட் ஆர்.வெங்கட்ராமன், வைஸ் ப்ரெசிடென்ட் ஷங்கர் தயாள் ஷர்மா மூவரும் தனி விமானங்களில் சென்னைக்கு வந்து எம்.ஜி.ஆருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள், இது போன்று இந்த மூன்று பதவியில் இருப்பவர்களில் ஒரே நேரத்தில் டெல்லியை விட்டு கிளம்பியதில்லை.
மத்திய அரசு தன் எல்லா அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவித்தது, எம்.ஜி.ஆருக்கு மரியாதை செய்யும் வகையில், தமிழ்நாடு , புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா , கோவா , ஹரியானா,மத்திய பிரதேசம், போன்ற மாநிலங்களும் விடுமுறை அறிவித்தன.
ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவ் , கர்நாடக முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே, முன்னாள் முதல்வர் குண்டு ராவ், காஷ்மீர் முதல்வர் பாரூக் அப்துல்லா , குஜராத் முதல்வர் அமர்சிங் சௌத்ரி, முன்னாள் குடியரசு தலைவர்கள் சஞ்சீவ ரெட்டி, ஜெயில்சிங் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.ஸ்ரீலங்கா அரசின் சார்பில், மந்திரி தொண்டைமான் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
ஹிந்தி நடிகர்கள் திலிப்குமார், தேவ் ஆனந்த, பிரான்,தர்மேந்திரா,ஹேமாமாலினி , பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் , நாகேஸ்வரராவ் , ராஜ்குமார் மற்றும் தமிழ் தெலுகு கன்னட மலையாள திரையுலகத்தினர் பலர் வந்திருந்தனர்.
ஸ்ரீலங்கா, சிங்கப்பூர் , மலேசியா ரஷ்ய நாடுகளின் பார்லிமென்ட்களில் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியா முழுவதும் தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டது. எல்லா மாநிலங்களிலும் அரைக்கம்பத்தில் தேசிய கொடி பறக்கவிடப்பட்டன.
திருச்செந்தூர், திருப்பதி, திருவேற்காடு , பார்த்தசாரதி பெருமாள், காஞ்சிபுரம் உள்பட பல கோவில்களில் எம்.ஜி.ஆர் ஆத்மா சாந்தி அடைய கோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.
தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா , கர்நாடக ஆகிய மாநிலங்களை சேர்ந்த 15 ஆயிரம் ரசிகர்கள் அவர் இறந்த துக்கதிற்காக மொட்டை அடித்துக்கொண்டனர்.
இந்தியாவின் எல்லா மாநில சட்ட சபைகளிலும் அவர் நினைவாக இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தூர்தர்ஷன் ,தமிழகத்தில் செய்த முதல் நேரடி ஒளிபரப்பு,அவர் இறுதி யாத்திரைக்குதான்.
தமிழக அமைச்சர்கள் தவிர, பூட்டா சிங், நரசிம்ம ராவ் ,பா.சிதம்பரம் ஆகியோர் இறுதி ஊர்வலத்தில் நடந்து வந்தனர்.இறுதி ஊர்வலத்தில் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். டிசம்பர் 25, 1987 மதியம் 1:20க்கு இறுதி ஊர்வலம் ஆரம்பமானது. ராணுவ வண்டியில் அவரது உடல் வைக்கப்பட்டது, அண்ணா சாலை , ஜெமினி, கதீட்ரல் ரோடு, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக நான்கு மணி நேரத்தில் கடற்கரைக்கு ஊர்வலம் வந்து சேர்ந்தது. வழி நெடுக ஹெலிகாப்ட்டர் மூலம் எம்.ஜி.ஆர் உடல் மீது மலர் தூவப்பட்டது.
இலங்கையில் தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் சுமார் ஐந்து லட்சம் தோட்ட தொழிலாளர்கள் துக்கம் அனுஷ்டித்து பணிக்கு செல்லவில்லை. N.t.ராமராவ், குண்டுராவ் , டீ.ஜி.பி ராஜேந்திரன் , போலீஸ் கமிஷனர் தேவாரம் ஆகியோர் இராணுவத்தினரோடு சேர்ந்து கயிற்றை பிடித்து அவரது உடல் அடங்கிய சந்தன பெட்டியை கீழே இறக்கினார்கள். வழி நெடுக கட்டிடங்களில் இருந்து பூக்கள் தூவி மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
கூட்டத்தின் நெரிசலில் ஐந்து பேர் சிக்கி இறந்தனர். எம்.ஜி.ஆர் இறந்ததை கேட்டு அதிர்ச்சியில் இறந்தோர் நான்கு பேர். தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டோர் 25 பேர்.
எம்.ஜி.ஆர் இறந்தபின் ராஜீவ் காந்தி தலைமையிலான மத்திய அரசு, அவருக்கு பாரத ரத்னா விருது அறிவித்தது.
-எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம் நூலில் இருந்து
-
-
-
Quote:
Originally Posted by
ravichandrran
தூள் சார்.
தொடரட்டும் உங்கள் முயற்சி.
-
Quote:
Originally Posted by
kaliaperumal vinayagam
எங்க வீட்டுப்பிள்ளை படத்தின் காட்சிகள் வெயிட்ட திரு.கலியபெருமாள் அவர்களுக்கு என் நன்றி.
-
காலத்தை வென்ற காவிய நாயகன் எம்.ஜி.ஆர். புத்தகவிமர்சனம்.
மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரன் என்கிற எம்.ஜி.ஆரால் பயனடைந்த மற்றும் முன்னுக்கு வந்த பலர் அவரை மறந்து விட்ட நிலையில் எம்.ஜி.ஆர் எனும் மூன்றெழுத்தில் மயங்கிக் கிடக்கும் சிலர் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் இப்படி இருப்பவர்களில் தேனியைச் சேர்ந்த நாகராஜ் என்கிற ராஜதாசனும் ஒருவர். இவர் எம்.ஜி.ஆர் மீது அளவற்ற பற்று கொண்டவர். இந்தப் பற்றுதலால் அவர் எம்.ஜி.ஆர் பற்றி எந்தச் செய்தி கிடைத்தாலும் அதைச் சேகரித்து வைத்துக் கொள்வார். எம்.ஜி.ஆர் படம் எந்தப் பத்திரிகையில் வந்தாலும் அதை வாங்கிப் பத்திரப்படுத்தி விடுவார். இப்படி எம்.ஜி.ஆர். திரைப்பட குறுந்தகடுகள், நூல்கள் என இவரது சேகரிப்புகள் ஏராளம். இதற்காக இவர் எம்.ஜி.ஆர். நினைவுக் களஞ்சியம் எனும் ஒரு அமைப்பைத் தானாகவே தோற்றுவித்துக் கொண்டார். இதன் மூலம் பல இடங்களில் எம்.ஜி.ஆர் நினைவுகளை வெளிப்படுத்தும் சேகரிப்புகளைக் கொண்டு சென்று கண்காட்சி நடத்துவார்.
இவருக்கு இந்த சேகரிப்புகளில் முக்கியமான தகவல்களைக் கொண்டு ஒர் நூலாக்கினால் எப்படியிருக்கும்? என்கிற எண்ணம் தோன்றியிருக்க வேண்டும். இந்த நூலை உருவாக்கி விட்டார். இந்த நூலில் இந்திய அரசியல் தலைவர்கள் ஜவஹர்லால் நேரு, எஸ்.இராதாகிருஷ்ணன், இராஜகோபாலாச்சாரியார், ஔவை தி.க.சண்முகம், அண்ணாத்துரை, ராஜீவ்காந்தி மற்றும் கருணாநிதி ஆகியோர் எம்.ஜி.ஆருக்கு எழுதிய கடிதங்களின் நகல்கள் இடம் பெற்றுள்ளன. இது போல் பாரத ரத்னா விருது நகல், சென்னைப் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்ட நகல், கருணாநிதி, கண்ணதாசன் ஆகியோர் எழுதிய கவிதை நகல்கள், எம்.ஜி.ஆர் பெயரிலான பேருந்து படம், அந்தப் பேருந்துக்கான பயணச்சீட்டு நகல், எம்.ஜி.ஆர் படம் போட்ட சில தபால்தலைகள், எம்.ஜி.ஆர் பயன்படுத்திய முகவரி அட்டை (Visiting Card) , கடிதத் தலைப்புகள் (Letter Head) நகல்கள் போன்றவை தரப்பட்டுள்ளன. இதில் எம்.ஜி.ஆர் நூறு ரூபாய் கேட்டு மருதநாட்டு இளவரசி படத்தயாரிப்பாளர் ஜி.முத்துசாமிக்கு எழுதிய கடித நகல் கூட இடம் பெற்றுள்ளது.
எம்.ஜி.ஆர் குறித்து வி.என்.சிதம்பரம், எம்.ஜி.ஆர்.முத்து, ஏ.வி.எம்.சரவணன், திருச்சி சவுந்திரராஜன், நாகை தருமன், எம்.என்.நம்பியார் ஆகியோர் எழுதிய சிறு கட்டுரைகள், கவிஞர், விஎஸ்.வெற்றிவேல் எழுதிய கவிதை போன்றவைகளும் இடம் பெற்றுள்ளன. இது தவிர, எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள் அவை வெளியான ஆண்டு, இயக்குனர் விபரங்கள் கொண்ட பட்டியல், எம்.ஜி.ஆரின் சொந்த நாடகங்கள் குறித்த தகவல்கள், எம்.ஜி.ஆர் படப் பாடலாசிரியர்கள் பட்டியல், எம்.ஜி.ஆர் பெற்ற விருதுகள் பட்டியல், எம்.ஜிஆர்- ஜெயலலிதா இணைந்து நடித்த படங்களின் பட்டியல் போன்றவையும் தரப்பட்டிருக்கின்றன.
இந்த நூலில் எம்.ஜி.ஆர் செய்திகளில்லாமல் இவர் கருணாநிதியைப் பாராட்டி எழுதிய கவிதை ஒன்றும், ஜெயலலிதாவைப் பாராட்டி எழுதிய கவிதை ஒன்றும் இடம் பெற்றுள்ளது. இது தவிர, இந்நூலாசிரியரான ராஜதாசன் குறித்து சில இதழ்களில் வெளியான செய்திகளும் இதில் தரப்பட்டுள்ளன.
சென்னை, மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்டுள்ள இந்நூலுக்கு இந்திய அரசின் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் மற்றும் திரைப்பட இயக்குனர் விசு ஆகியோர் எழுதிய வாழ்த்துரைகளும் இதில் இடம் பெற்றுள்ளன. தேனி ராஜதாசன் எழுதிய அல்லது தொகுத்துள்ள காலத்தை வென்ற காவிய நாயகன் எம்.ஜி.ஆர் என்கிற இந்நூல் எம்.ஜி.ஆர் பற்றுடையவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
-
இனிய நண்பர் ரூப் சார்
தேனி ராஜதாசன் அவர்கள் எழுதிய மக்கள் திலகத்தின் புத்தகம் பற்றிய குறிப்புகள் அருமை .
புத்தகம் வந்து விட்டதா ? விபரம் தெரிவிக்கவும் .
-
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்
இயற்கை கொஞ்சும் மலை உச்சியில் மக்கள் திலகம் கம்பீரமாக நிற்கும் எழிலான தோற்றமும் சுற்றி காணப்படும் காட்சிகளும் உங்களின் கற்பனை திறனுக்கு ஒரு சபாஷ்.
தொடர்ந்து பல புதுமைகளை தொடரவும் .
-
மக்கள் திலகம் ரசிகர்களுக்கு ஒரு இனிய செய்தி
மக்கள் திலகம் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படம் விரைவில் புதிய பரிணாமத்தில் நம்மையெல்லாம் மகிழ வைக்க வருகிறது .
1965ல் வந்த ஆயிரத்தில் ஒருவன் 48 ஆண்டுகளில் பல முறை திரைக்கு வந்து பல சாதனைகள் புரிந்தது .
மற்ற விபரங்கள் விரைவில் .....
-
தமிழ் புத்தாண்டு 14.4.2013
மக்கள் திலகத்தின் புகழுக்கு ஒரு வைர கிரீடம்
உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக
தமிழ் திரை களஞ்சியம் - நமது மக்கள் திலகம்
இதுவரை பார்த்த .... பார்க்காத ...
கண்ணுக்கும் மனதுக்கும் விருந்து படைக்கும்
அந்த இனிய திருநாளில் ....
ஒன்று கூடிகண்டு மகிழ்வோம்
-
-
Quote:
Originally Posted by
ravichandrran
திரு ரவிச்சந்திரன் அவர்கள் அறிவது ---
புரட்சித் தலைவரின் இந்த கம்பீரமான தோற்றம் காணும் போது -
ஒரு இளமை உணர்வு பொங்கி எழுகிறது.
நின்று நிமிர்ந்து என் பிள்ளை நடக்கையில் (நிற்கையில்) ராஜ நடை தோற்கும் என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.
தொடர்ந்து மணிக்கணக்கில் நேரத்தை செலவழித்து, பார்வையாளர்களை மகிழ்ச்சியடைய வைக்கும் தங்களுக்கு எனது உளங்கனிந்த நன்றி !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்
-
Quote:
Originally Posted by
kaliaperumal vinayagam
2.அடுத்ததாக இந்த விழாவில் கலந்து கொண்டவர் ஒரு அமெரிக்கர்..அவருடைய பெயர் Basten CONUS அவர் தலைவரைப்பற்றி கேட்டார்..நிறைய தெரிந்துகொண்டார் நடிகராய் இருந்து முதலமைச்சராய் ஆனவர் என்று சொன்னேன். அதற்கு அவர் லைக் ரொனால்ட் ரீகன்? என்று கேட்டார். ஆமாம்..ஆனால் அவருக்கு முன்னோடி எங்கள் எம்.ஜி.ஆர்..என்றேன்..அவர் ஆச்சர்யத்தில் வாயை பிளந்தார்..எம்ஜிஆரை பற்றி நிறைய கேட்டறிந்து அதிசயித்து போனார். மேலும் திரைப்படதிர்கானா நோட்டிசை அவரே விநியோகித்தார்..அவருடைய ஈமெயில் முகவரியும் கொடுத்திருக்கிறார்..திரு.செல்வகுமார் சார் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்..நம் தலைவரின் பெருமைகளை உங்களால் எவ்வளவு முடியுமோ எல்லாவற்றையும் முடிந்தால் புகைப்படத்துடன் அவருடைய ஈமெயிலுக்கு ஆங்கிலத்தில் அனுப்ப முடியுமா என்று கேட்டுகொள்கிறேன் (bconus@gmail.com).
http://i46.tinypic.com/mll0yo.jpg
திரு. கலியபெருமாள் அவர்கள் அறிவது -
நமது இதய தெய்வத்தின் புகழை புவியெங்கும் பறை சாற்றிட மேலும் ஒரு சந்தர்ப்பம் அளித்து, இந்த அமெரிக்கர் மின்னஞ்சல் முகவரியை அளித்தமைக்கும் எனது பணிவான நன்றி.
ஆங்கிலத்தில், கவிதை மற்றும் உரை நடையில், நிழற்படங்களுடன் கூடிய பல்வேறு செய்திகள் அவருக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். இந்த கடமையாற்றுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.
எல்லாப் புகழும் எங்கள் குல தெய்வம் எம்.ஜி.ஆர்.அவர்களுக்கே !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்
-
புதுச்சேரியில் எங்க வீட்டுப் காண பேராசிரியர் திரு. செல்வகுமாரும் அவர்களும் வந்திருந்தார்..அவருடைய ஆசிரிய பணிக்கிடையே, அடுத்த நாள் அதிக வேலை இருந்தும் தலைவரை பார்க்க சென்னையில் இருந்து வந்திருந்து எங்கள் மகிழ்ச்சியில் கலந்து கொண்டார். அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்..மேலும் சென்னையில் இருந்து தலைவரைக் காண பலர் வந்திருந்தனர்..அவர்கள் பெயர் தெரியவில்லை.
http://i49.tinypic.com/18ixiv.jpg
-
-
-
-
-
-
-
இன்றைய அரசியல் அசாதாரண சூழ் நிலையில் 19.3.2013- 11 மணி .
அன்றே நம் மக்கள் திலகம் பாடிய பாடல் எவ்வளவு பொருத்தம் பாருங்கள் .
எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலேசொந்த நாட்டிலே நம் நாட்டிலே
(எத்தனைக்)
சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை வலையினில் மாட்டி(எத்தனைக்)
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
பாடும் பறவை.. பாயும் மிருகம்..
பாடும் பறவை பாயும் மிருகம்
இவைகளுகெல்லாம் பகுத்தறிவில்லை
ஆனால் அவைகளுக்குள்ளே சூழ்ச்சிகள் இல்லை
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது