நன்றி சார்.
Printable View
Meenava Nanban 36th Year post.
http://www.mgrroop.blogspot.in/2013/...nanban-36.html
http://i44.tinypic.com/14nz7s1.jpg
தியாகிகளான தலைவர்களாலே
சுதந்திரம் என்பதை அடைந்தோமே....
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.
கலை மன்னன்
ஸ்டைல் மன்னன் - அலிபாபாவும் 40 திருடர்களும்
மாடர்ன் தியேட்டர்ஸ் திரு. சுந்தரம் தனது பேட்டியில் மக்கள் திலகத்தின் உடற்கட்டையும், அவருடைய நிறத்தையும் காட்டுவதற்காகவே அலிபாபாவும் 40 திருடர்களும் திரைப்படத்தை வண்ணப்படமாக எடுத்தோம் என்றார். அந்த அளவிற்கு நம் எழில் வேந்தன் அழகாகவும், காண்போர் மனம் மயங்குபவராகவும் இருந்தார்.
http://i39.tinypic.com/143lum0.jpg
அதில் மக்கள் திலகம் அணிந்திருக்கும் அரேபிய உடைகள் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். அந்த உடைகள் தலைவருக்கு மிகவும் பொருத்தமானதா இருக்கும்..அவர் ஒரு இயல்பான இஸ்லாமியர் போன்றே காணப்படுவார்.. அதற்கு தகுந்தாற்போல் அவர் நிறமும் , பாடி லாங்குவேஜும் இணைந்தே இருக்கும். மேலும் 'அல்லா ஒருவரே எனக்கு முதலாளி', அல்லா மீது ஆணையிட்டு சொல்கிறேன்' போன்ற வசனங்களும், படத்தில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அரங்கங்களும் நம்மை பாக்தாத் நகருக்கே அழைத்து செல்லும்.
http://i39.tinypic.com/261oqqd.jpg
எல்லாவற்றிற்கும் மேலாக தலைவரின் வாள்வீச்சு பிரமிப்பூட்டும் விதமாக இருக்கும். இதற்கு முன்பு, இதே தலைப்பில் ஒரு படம் இருந்தும் மாடர்ன் தியேட்டர்ஸின் இந்த திரைப்படத்தின் நாயகனாக, புரட்சி நடிகராய் இருந்ததால் மட்டுமே, இது அனைவரின் பாராட்டுதலையும், மகத்தான வெற்றியையும் பெற்றது என்றால் அது மிகையாகாது. இந்த திரைப்படத்தின் உடைகளையும், ஸ்டைலையும் அப்போது தலைவரின் ரசிகர்கள் நிறையபேர் பின்பற்றினர். எனவே, அலிபாபவிலிருந்தே எம்ஜிஆர் ஸ்டைல் தொடங்கிவிட்டது.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
rare picture
http://i42.tinypic.com/w6xcw2.jpg
இனிய நண்பர் திரு கலிய பெருமாள் சார்
மக்கள் திலகத்தின் '' அலிபாபாவும் 40 திருடர்களும் '' பற்றிய செய்தியும் மக்கள் திலகத்தின் படமும்
அருமையான பதிவு . நீங்கள் பதிவு செய்த நேரம்
திருப்பரங்குன்றம் - லக்ஷ்மி அரங்கில்
''அலிபாபாவும் 40 திருடர்களும் '''
நேற்று முதல் தினசரி மூன்று காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது .
1955ல் வந்த காவியம் 58 ஆண்டுகள் கடந்த பின்னரும் வெள்ளி திரையில் வலம் வருவது
மக்கள் திலகத்தின் சாதனை . .
மக்கள் திலகம் திரி யின் சார்பாக அனைவருக்கும் இனிய
''சுதந்திர தின வாழ்த்துக்கள் ''
மக்கள் திலகம் எம்ஜிஆர் தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக 15.8.1977 அன்று சென்னை கோட்டையில் சுதந்திர தினத்தன்று தேசிய கொடி ஏற்றி சிறப்புரைஆற்றினார் .
http://i41.tinypic.com/11cehib.jpg
1977-1987 வரை தொடர்ந்து சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றிய பெருமை மக்கள் திலகத்திற்கு உண்டு .திரை உலகிலும் , அரசியல் உலகிலும் பல புரட்சிகள் புரிந்து சாதனை படைத்தவர் நம் மக்கள் திலகம் ..
தமிழ் நாட்டின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை அறிவித்து அதனை செயல் படுத்தி நிறைவேற்றிய
பெருமை அவருக்கு சேரும் .
சுதந்திர தினமான இன்று கடந்த காலத்தில் [1977-1987 ] மக்கள் திலகத்தின் சீரிய பணிகளின் வெற்றிகளை நினைத்து பெருமை கொள்வோம் .
http://i44.tinypic.com/2lvznuc.jpg
KUDUMBA THALIVAN - 51-ST ANNIVERSARY TODAY
தேவரின் ''குடும்ப தலைவன் ''
15.8.1962
மக்கள் திலகத்தின் சிறந்த படங்களில் இந்த படமும் இடம் பெறுகிறது .
அண்ணன் -தம்பி கதை அமைப்பில் வந்த குடும்ப சித்திரம் .
இனிய பாடல்கள் - நடிப்பு என்று வந்த அருமையான படம் .
தொடர்ந்து 50 ஆண்டுகளாக மறு வெளியீடு செய்யப்பட்டு வரும் படம் .
மக்கள் திலகத்தின் '' கணவன் '' இன்று 46 வது ஆண்டு துவக்கம் .
http://i41.tinypic.com/24zb1o1.jpg
15.8.1968ல் வந்த படம் .
http://i40.tinypic.com/os7o0o.jpg
மக்கள் திலகத்தின் கதையின் மூலம் உருவான பொழுது போக்கு படம் . இனிய பாடல்கள் நிறைந்த படம் ..
உண்மையின் சிரிப்பை ரசிக்கின்றேன் .....
அடி ஆத்தி ..யாருக்கு நீ ------
நான் உயிர் பிழைத்தேன் .. உன் ....
மயங்கும் வயது ....
நீங்க நினைச்சா நடக்காதா ....
சொர்ணத்தின் அருமையான வசனங்கள் - இன்றும் பொருந்தும் .
தேசப்பற்று கொண்ட தெய்வம், தேசிய ஒருமைப்பாட்டில் நம்பிக்கை கொண்ட தேவன்,
தமிழக மக்களின் மனதில் நிரந்தரமாக வீற்றிருக்கும் தங்கத் தலைவரின் அற்புதமான தோற்றம் .......ஆஹா ! என்ன அழகு !
அருமைச் சகோதரர் திரு. கலியபெருமாள் அவர்களுக்கு நன்றி !
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் !
அன்பன் :: சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
எம்.ஜி.ஆரின் பொன்மொழிகள்
நம்பிக்கை எதன் மீது ஏற்பட்டாலும் சரிதான்; அது உண்மையில் நம்பிக்ககைக்க உரியதாக இருக்க வேண்டும்; அப்போதுதான் வெற்றிக் கிட்டும்.
கடமைகளை இன்முகத்துடன் ஆற்றி உரிமைகளைப் பெற்றிடுவோம்! அமைதியும் ஒற்றுமையும் காத்து வளர்ச்சிக்கு வழிவகுப்போம்! புதிய சமத்துவ சமதர்ம அமைப்புக்காகத் தொடர்ந்து பாடுபடுவோம்!
அறிவியல் துறையில் போட்டி வேண்டும். ஆற்றலுக்கு முதலிடம் தரப்பட வேண்டும். ஆற்றல் இல்லாதவர்களுக்கு அது கிடைக்க வழி செய்யப்பட வேண்டும்.
சமுதாய உணர்வோடு நாம் பிரச்சினைகளை அணுக வேண்டும்; நாம் தனி மனிதர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது நாம் ஒரு சமுதாயத்தின் அங்கங்கள் என்பது!
வயிற்றுப் பசியைத் தீர்த்துக்கொண்டால் மட்டும் போதாது! விலங்கினங்கள் கூடத்தான் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்கின்றன. அவற்றினின்றும் மேம்பட்ட நிலையை ஒவ்வொரு செயலிலும் ஓர் ஒழுங்கினை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.
வன்முறைதான் போராட்ட முறை என்றால் தோல்விதான் அதற்குப் பரிசாக்க் கிடைக்கும் என்பது நிச்சயம்.
http://i43.tinypic.com/2db2r6d.jpg
எழுத்தாளர்களின் திறமை என்பது காலப்போக்கில் மாறுவது என்றாலும் அந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் எதிர்காலச் சந்ததிகளின் தலையெழுத்தை நிர்ணயிக்கின்றவைகள்.
எழுத்துக்கள் என்பதில் பல்வேறு வகை இருக்கின்றன. பிறரைச் சிந்திக்க வைக்கிற மாதிரி எழுதுவது ஒரு வகை. பிறரைப் புண்படுத்தாமல் எழுதுவது ஒரு வகை. பிறரை வைத்துச் சிந்திக்க வைப்பது ஒருவகை அப்படிச் சிந்திக்க மறுப்பபவர்களைச் சந்திக்கு இழுப்பது என்பது ஒருவகை.
எழுத்தாளர் என்றால் எழுத்தை ஆள்பவர்கள் என்று கருதுவதால் அந்த எழுத்துக்கு அவர்கள் உரிமையுள்ளவர்கள்.
உழைப்பே உயர்வு தரும்; உழைப்போம் உயர்வோம்; உழைப்போரே உயர்ந்தோர்; உழைப்பவராலே உலகம் உயர்ந்திடும்.
நமது சமுதாயத்தின் அனைத்துப் பகுதி மக்களும் நல்லிணக்கமான முறையில் சீராக முன்னேற்றம் பெற உத்தரவாதம் தரப்பட வேண்டும்; சமநிலைக்குப் பங்கம் ஏற்படாத வகையில் வளர்ச்சிகள் அமைய வேண்டும்.
அரசியலோடு நாகரிகத்தை, அரசியலோடு நாணயத்தை, அரசியலோடு நல்ல நோக்கத்தை, அரசியலோடு ஜனநாயகத்தை, அரசியலோடு உயர்ந்த பண்பாட்டை இணைத்துத் தந்த நல்ல ஜனநாயகவாதி அண்ணா அவர்கள்.
சமத்துவச் சமுதாயம் காண்பதே உழைக்கும் வர்க்கத்தின் உண்மையான இலட்சியம் எனும் மூலக் கருத்திற்கு முதலிடம் தாருங்கள்.
உழைக்கும் மக்களே ஒன்று சேர்ந்திடுங்கள். பேதப்படுத்தும் சக்திகளை ஒதுக்கித் தள்ளிடுவீர். உழைப்பவரே உயர்ந்தோர் என்னும் த்துதவத்தை நிலைநாட்டுவீர்.
ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை தேவை. மகிழ்ச்சி தேவை. இந்தத் தேவைகளுக்கு அடிப்படை வளரவும் வாழவும் தடையில்லாமல் இருப்பதுதான்.
தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியோரின் நலன்களைக் காப்பாற்றி அவர்களை மேம்படுத்தப் பாடுபடுவோம்.
சமுதாயத்தில் மக்கள் வாழ்வதற்காக ஏற்றத் தாழ்வற்ற சமதர்ம சமுதாயத்தை அமைக்க வேண்டும்.
சமூக முன்னேற்றமும், பொருளாதார வளர்ச்சியும் ஒரு நாட்டின் இன்றியமையாத தேவை என்றாலும், அதன் பலன்கள் ஏழை, எளிய மக்களுக்குக் கிடைப்பதுஅவசியம்.
தமிழ் நலன், தமிழின் பண்பாடு, தமழ்ச் சமுதாயம் தமிழ் கலாச்சாரம் வளர வேண்டும் என்பது நமது நோக்கமாக இருத்தல் வேண்டும்.
ஒரு மனிதனின் எண்ணமும், நோக்கமும் மட்டுமே போதாது. செயலும் பண்பாட்டுடன் இருக்க வேண்டும். இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் நாட்டில் நல்லவை நடக்கும்
மாநிலத்தில் தொழில்கள் வளர வேண்டுமென்றால் மத்திய அரசின் உதவியும் அனுமதியும் முதலீடும் அவசியம்; தனியார் துறையின் ஆரவமும் அதிகரிக்க வேண்டும் என்பதையும் அவர் மிக விரைவிலேயே புரிந்து கொண்டார் என்றாலும் இருக்கின்ற நிதி வசதியை வைத்துக்கொண்டு ஏழை எளிய மக்களுக்குப் பயன்படுமாறு என்னென்ன திட்டங்களை உருவாக்க முடியும் என்று யோசித்தார்.
”ஏழைமக்களை வாட்டும் இரு பிரச்சினைகள் பசிக் கொடுமையும், வேலையில்லாத திண்டாட்டமுந்தான் இவை இரண்டையும் நான் நன்றாய் அறிவேன். என் இளமைக்காலத்தில் இவ்விரண்டையும் நான் அனுபவித்திருக்கிறேன்.!”
- இது முதல்வர் புரட்சித் தலைவர் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியதாகும்.
http://i39.tinypic.com/k3ksr9.jpg
இவ்வாறு ஏழைகளின் முக்கிய தேவையைத் துல்லியமாகய் உணர்ந்திருந்த புரட்சித் தலைவர் எடுத்துக்கொண்ட முதல் திட்டம் கிராம மேம்பாட்டுத் திட்டமாகும்.
பொருளாதார ஆதார சுருதி
விவசாய வளர்ச்சியே நம்நாட்டுப் பொருளாதாரத்தின் ஆதார சுருதி ஆகும்; அதனால் விவசாயிகளுக்கு வழங்கும் மின்சாரக் கட்டணத்தை யூனிட்டுக்கப் பன்னிரண்டு காசுகளாக்க் குறைத்தார் புரட்சித் தலைவர்.
விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கும் கடனை விரிவுபடுத்தினார். சுமார் 40 கோடி ரூபாயை உடனடியாக வழங்கச் செய்தார்.
அடுத்து, விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியங்களை நிர்ணயம் செய்து ஒரு சட்டத்தை நிறைவேற்றினார். இதனால் நெல் உற்பத்தி ஆண்டுக்கு 60 இலட்சம் டன்களாக உயர்ந்தது.
புதிய தொழில்கள் பலவற்றைத் தொடங்க தனியார் துறைக்கு ஊக்கமளித்தார். அரசுத் துறையிலும் புதிய பல தொழில்களைத் தொடங்க ஏற்பாடு செய்தார். தொழிற்கழகங்களும் மாவட்டத் தொழில் மையங்களும், மாவட்டம் தோறும் தொடங்கப்பட்டன.
132 கோடி ரூபாய் முதலீட்டில் காகித ஆலை ஒன்றும் தொடங்கப்பட்டது.
கைத்தறி நெசவாளர்களின் வாழ்வை உயர்த்துவதற்காக என்றே தனியாக அமைச்சர் ஒருவரை நியமித்தார்.
அரிஜன மேம்பாட்டுக்காகத் தனி இயக்குநர் ஒருவரின் தலைமையில் தனித்துறையை ஏற்படுத்தினார். அரிஜன வீட்டு வசதி வாரியம் ஒன்றும் தனியாக நிறவப்பட்டது. நலிந்த பிரிவினருக்கு ஏராளமான வீடுகளைக் கட்டிக் கொடுக்கவும் ஏற்பாடு செய்தார்.
புரட்சித் தலைவர் நடித்துக் கவியரசர் பாடல்கள் எழுதியுள்ள படங்கள் பெரும்பாலனவற்றுள், தத்துவார்த்தமான பாடல்கள் ஒன்றிரண்டு நிச்சயமாக இடம் பெற்றிருக்கும்.
அப்பாடல்களே கதையின் உச்சகட்ட நிலையின் உயர்மகுடங்களாகவும் திகழ்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
விளையாட்டு வீரராக, சமூகசேவை செய்யும் வாலிபராகக் ‘குடும்பத் தலைவன்’ படத்தில் வரும் நாயகன் எம்.ஜி.ஆர், உலகியல் தத்துவத்தைக் கூறி நடிப்பதாக வரும் பாடல் காட்சிக்கென்று, கண்ணதாசன் எழுதி, டி.எம். சௌந்தரராஜன் இனிய குரலில் பாடிய பாடலைக் காணுங்களேன்!
“மாறாதய்யா மாறது!
மனமும் குணமும் மாறாது!
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
தூய தங்கம் தீயில் வெந்தாலும்…(மாறா)
காட்டுப் புலியை வீட்டில் வச்சு
கறியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையைக் கொடுத்து
கோபுரத்தின் மேல் நிக்க வச்சாலும்… (மாறா)
வரவறியாமல் செலவழிச்சாலும் நிலைக்காது!
மனசறியாமல் காதலிச்சாலும் பலிக்காது!
காலமில்லாமல் விதை விதைச்சாலும் முளைக்காது!
காத்துலே விளக்கை ஏத்தி வச்சாலும் எரியாது!
திட்டும் வாயைப் பூட்டி வச்சாலும்
திருடும் கையைக் கட்டி வச்சாலும்
தேடும் காதைத் திருகி வச்சாலும்
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்….(மாறா)”
பாடலைக் கண்டீர்கள்!
இதில் இடம்பெற்றுள்ள உலகியல் உண்மைத் தத்துவங்களில், எவற்றைப் பொய்யென்று நம்மால் புறந்தள்ள முடியும்?
இவற்றைப் புரட்சித்தலைவர், திரையில் கூறித் தோன்றும் காட்சிகளில் திரையரங்குகளில் எழுந்த தரவொலிகளைக் கேட்டு மனம் மகிழாதாரும் இருந்ததுண்டோ? இப்படி எத்தனையோ நாட்டு நடப்புத் தத்துவப் பாடல்களை, நல்லவர் எம்.ஜி.ஆர். படங்களில், கவியில் வல்லவராம் நம் கண்ணதாசன் எழுதியுள்ளார்.
http://i40.tinypic.com/2aig9xw.jpg
இப்பொழுது வெற்றி நடை போடுகிறது
தினசரி 3 காட்சிகளாக
திருப்பரங்குன்றம் லட்சுமி திரையரங்கில்
உலக நடிகப் பேரரசர் வாழும்
அலிபாபாவும் 40 திருடர்களும்
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர் .
samoogappadangalin dress style follow panninaargal endraal ok.
But 'Alibaba' dress stylai fans follow panninaargalaa?. Persian (paaraseega) udaiyil thamizhaga veedhigalil nadandhaargalaa?.
Definitely a great achievement. MGR'n thaakkam beyond limitations.
http://i42.tinypic.com/2wbtdo7.jpg
courtesy- net
http://i39.tinypic.com/256edea.jpg
MAKKAL THILAGAM MGR IN NEETHIKKU PIN PASAM - BANGALORE VILAMBARAM
15.8.1971
மக்கள் திலகத்தின் சிறப்பு தேன்கிண்ணம் ஆல் இந்தியா ரேடியோ - சென்னை விவாத பாரதியில் ஒலி பரப்பானது .
ஒரு மணி நேரத்தில் மக்கள் திலகம் அவர்கள் தன்னுடைய விருப்பமான பாடலை பதிவு செய்தார் . அவருக்கு பிடித்த பாடல்களின் ஒன்று கூட அவருடைய படங்களில் இருந்து ஒலி பரப்பவில்லை . மற்ற நடிகர்களின் பாடல்களை விருப்பமாக தெரிவித்தார் .
நிகழ்ச்சியில் இறுதியில் தனக்கு பிடித்த பாடல் என்று நடிகர் திலகத்தின் ''பிராப்தம் '' படத்தில் இடம் பெற்ற ''சொந்தம் எப்போதும் தொடர் கதைதான் '' என்ற பாடல் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று கூறி ஒலி பரப்பினார் .
மறக்க முடியாத அவரின் தேன் கிண்ணம் இன்றுடன் 42 ஆண்டுகள் கடந்துள்ளது .
http://i125.photobucket.com/albums/p...psfedddb9a.jpg
From Madakulam Prabhakaran.
http://i125.photobucket.com/albums/p...ps2c7ae635.jpg
1984 ஆம் ஆண்டு தலைவர் சுதந்திரதினத்தன்று கோட்டையில் கொடியினை ஏற்றிவைத்து பேசும்போது எடுக்கப்பட்ட படம் இது .
இதில் வேதனை என்னவென்றால் அதன் பின்னர் தலைவர் சில நாட்களிலேயே சுகவீனமுற்று உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டார்கள்.
எனவே அதன்பிறகு தலைவருக்கு சரிவர பேசமுடியாத நிலை ஏற்பட்டது . இந்த விழாவிற்கு பின்னர் தலைவரின் வெங்கலக்குரலோசையை நாம் கேட்கமுடியவில்லை என்பது வருத்தமான செய்தி .
Madakulam Prabhakaran
http://www.youtube.com/watch?v=6_FPsDeomx4
அனைவருக்கும் சுதந்திர தினவாழ்த்துக்கள்
வினோத் சார் & ரூப் குமார் சார்,
தாங்கள் குறிப்பிட்ட அந்த தேன் கிண்ணம் நிகழ்ச்சியில் அடிமைப்பெண் படத்திலிருந்து தாயில்லாமல் நானில்லை என்ற ஒரே ஒரு எம்.ஜி.ஆர் படப் பாடல் மட்டும் ஒலிபரப்பப்பட்டது என்பதாகக் கேள்விப்பட்டுள்ளேன். சிவாஜி படத்திலிருந்து 3 பாடல்கள் ஒலிபரப்பப்பட்டதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். ரூப்குமார் சார் தாங்கள் முயற்சி செய்து அதன் ஒலி வடிவத்தைப் பதிவு செய்ய வேண்டுகிறேன். நன்றி.
M.g.r. நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்த போது அவருக்காக வேலன்
'பகைவனின் காதலி'என்ற நாடகத்தை கதை வசனத்தோடு எழுதிக்
கொடுத்தார். அந்த நாடகத்தை நடத்தும் போது எம்ஜி.ஆரின் கால்கள்
முறிந்து விட்டது .அப்பொழுது ஏ .கே.வேலன் அவர்கள் ஆர்.எம்.வீரப்பனை எம்.ஜி.ஆருக்கு அறிமுகம் செய்து,எம்.ஜி.ஆரின் நிறுவனங்களை கண்காணிக்க ஏற்பாடு செய்தார் .வேலனால் எம்.ஜி.ஆருக்கு அறிமுகப் படுத்தப் பட்ட ஆர்.ம் .வீரப்பன் பின்னாளில்
எம்.ஜி.ஆர். அவர்களின் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
ஆட்சிக்கு வந்த போது அமைச்சராக பட்டார் .
எம்.ஜி.ஆர் நடித்து வெளி வந்த மாட்டுக்கார வேலன் ஏ.கே.வேலனின்
கதையாகும் .இது ஐந்து மொழிகளில் எடுக்கப் பட்டு வெற்றி வாகை சூடியது.மூலக்கதை -ஏ .கே.வேலன் என போடக்கூட முதலில் தயங்கினர்.
வேலனின் மற்றும் ஒரு கதையான பவானி m.g.r. அவர்களின்
அரசகட்டளை யாக எடுக்கப் பட்டது .
பழைய நட்பை மறவாத எம்.ஜி.ஆர் அவர்கள் வேலனின் படப் பிடிப்பு தளமான அருணாசலம் ஸ்டுடியோவில் நவரத்தினம் பட ஷூட்டிங்கின்
போது வேலனின் இல்லம் தேடி வந்து நலம் விசாரித்தார். வேலனின் எளிமையான வாழ்க்கையை கண்டு வியந்தார். வேலனின் பிள்ளைகளிடம் பேசி மகிழ்ந்தார் .வேலனையும், அவரது மனைவியையும்
தமது இல்லத்திற்கு விருந்துக்கு அழைத்தார் .எம்.ஜி.ஆரின் இல்லத்திற்கு
சென்ற வேலனையும் .வேலனின் மனைவி ஜெயலக்குமி அவர்களையும்
திருமதி. ஜானகி ராமசந்திரன் அவர்கள் அன்புடன் வரவேற்று உபசரித்தார்.நண்பர்கள் பேசி மகிழ்ந்தனர். மீண்டும் நட்பு தொடர்ந்தது
எம்.ஜி ஆர் அவர்களின் அழைப்பினால் வேலன் அவர்கள் அன்று தி.மு.க.விலிருந்து விலகி அண்ணா தி.மு.க.வில் சேர்ந்தார்.இது அன்றைய தின பத்திரிகைகளில் "பல ஆண்டு காலமாய் தி.மு.க.வில் இருந்த ஏ .கே. வேலன் கட்சி மாறினார் "என எழுதியது .ஆனால் வேலனோ மீண்டும் அரசியல் வாழ்க்கையில் ஈடுப்பட விரும்ப வில்லை . அரசியலில் இருந்து விலகியே இருந்தார்
ஏகே வேலன் அவர்களது வலைத்தளத்திலிருந்து
நீண்ட இடைவெளிக்கு பிறகு சேலம் நகரில் மக்கள் திலகத்தின் '' நாடோடி மன்னன் '' அலங்கார்''
அரங்கில் நேற்று முதல் திரையிடப்பட்டுள்ளது .
கோவை ராயல் அரங்கில் ''நினைத்ததை முடிப்பவன் '' இன்று முதல் .
கே - தொலைகாட்சியில் இன்று 1 மணிக்கு '' நம்நாடு ''
http://i42.tinypic.com/34hcf36.jpg
http://i43.tinypic.com/71s8c2.jpg
மக்கள் திலத்தின் '' நீதிக்கு பின் பாசம் '' 15.8.1963 அன்று சென்னை நீங்கலாக தென்னாடெங்கும் வெளியானது . சென்னை நகரில் 18.8.1963 அன்று சித்ரா -கிரவுன் - மேகலாவில் வெளியானது .
சென்னையில் 3 நாட்கள் தாமதமாக வெளிவர காரணம் .
1963 மே மாதம் வெளிவந்த மக்கள் திலகத்தின் பெரிய இடத்து பெண் படம் சித்ரா - கிரவுன் இரண்டு அரங்கிலும் 17-8-1963 அன்று 100 நாட்கள் கடந்தது . நீதிக்கு பின் பாசம் 18.8.1963 அன்று வெளியானது .
தகவல் . நன்றி திரு பம்மலார் சார் .