வாசு சார் - உங்கள் மாதவன் பதிப்பு :
புதியது புதியது உங்கள் வர்ணனை
இனியது இனியது உங்கள் வரிகள்
அருமை இந்த பதிவு
வாழ்வில் இப்படி எழுதவிரும்பவது என் கனவு
:):smokesmile:
Printable View
வாசு சார் - உங்கள் மாதவன் பதிப்பு :
புதியது புதியது உங்கள் வர்ணனை
இனியது இனியது உங்கள் வரிகள்
அருமை இந்த பதிவு
வாழ்வில் இப்படி எழுதவிரும்பவது என் கனவு
:):smokesmile:
நன்றி g94127302 உடனே ராஜா ராணி பார்த்து விட்டேன் , கோபால் சார் பழியில் இருந்து தப்பி விட்டேன் என்று சந்தோஷம்.
நடிகர்திலகத்தின் படங்களில் ஐட்டம் நடிகையர் ( 6 )
‘ஐஸ்கிரீம்’ ஸ்னேகலதா (என் மகன்)
ஒவ்வொரு படத்துக்கும் ஒரு பாலிவுட் ஐட்டம் நடிகையை தன் படங்களுக்கு இறக்குமதி செய்வது என்ற வழக்கத்தை தயாரிப்பாளர் பாலாஜி தனது ராஜா படத்தில் துவக்கினார். அப்படத்தில் நடித்திருந்த பத்மாகன்னாதான் நமது தொடரின் பிள்ளையார் சுழி. தொடர்ந்து என்மகன் படத்தில் ஸ்னேகலதாவையும், உனக்காக நான் படத்தில் லீனாதாஸையும் இறக்குமதி செய்து தமிழக ரசிகர்களை ஆசுவாசப்படுத்தினார். (இடையில் நீதி படத்தில் ஒரு ஆணுக்கு பெண்வேடம் போட்டு ஐட்டம் பிகர் என்று பாலாஜி ஏமாற்றியதை மறப்போம்)
இப்போது போல மும்பையில் கல்லூரி பட்டம் பெற்றதும் சென்னைக்கு விமான / ரயில் டிக்கட் எடுக்கும் நடிகையர் கூட்டம் அப்போது கிடையாது. எப்போதாவது ஒருமுறை ஹெலனைக்கொண்டு வந்து காட்டுவார்கள். அவ்வளவுதான். இந்நிலையில் ‘என் மகன்’ படத்துக்காக 'பே-இமான்' படத்தின் கதையை வாங்கிய கையோடு ஸ்னேகலதாவையும் புக் பண்ணிக்கொண்டு வந்துவிட்டார். ராஜாவில் ரந்தாவா நடித்ததுபோல இப்படத்தில் ஷெட்டி நடிப்பதாக இருந்தது. என்ன காரணமோ கைகூடவில்லை. அதிரடிப்புயல் வரவில்லை. ‘கவர்ச்சித்தென்றல்’ மட்டுமே மும்பையில் இருந்து கரைகடந்து தமிழகத்தில் வீசிப்போனது.
எந்தப்பூட்டையும் திறக்கும் சாமர்த்தியமான பூட்டு ரிப்பேர் தொழிலாளி ராஜாவுக்கு (நடிகர்திலகம்) தொழிலதிபர் ஜெகன்நாத் (மேஜர்) மகள் ராதா(மஞ்சுளா)வுடன் காதல். ராஜாவை திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் மகள் தன்னை வெறுத்து விடுவாளோ என்ற எண்ணத்தில் மகளைப் பெண்பார்க்க ராஜாவை வரச்சொல்வதுபோல வரச்சொல்லிவிட்டு, மறுபக்கம் ராஜாவை வரவிடாமல் செய்ய தன் கையாட்கள் மூலம் ராஜாவை ஒரு கொலைப்பழியில் சிக்க வைக்கிறார் ஜெகன்நாத். அப்படி கொலை செய்யப்படுவள்தான் ஸ்னேகலதா.
அவசரமாக பாம்பே போகவேண்டும் என்றும் அதற்கான டாக்குமென்ட்டுகள் பீரோவுக்குள் இருப்பதாகவும் கெஞ்சும் மனோகரின் பேச்சை நம்பி பீரோவை சிரமப்பட்டு ராஜா திறக்க போராடிக்கொண்டிருக்கும் சமயம் மனோகர் உள்ளே செல்ல, மறுகதவைத் திறந்து கொண்டு, (தன்னையும் முடிந்தவரை திறந்து வைத்துக் கொண்டு) ஐந்தரை அடி ஐஸ்கிரீமாக வெளிவந்து ராஜாவை பின்பக்கமாக வந்து கட்டிக்கொள்ளும் அழகுச்சிலையாக ஸ்னேகலதா. உள்ளாடையைவிட சற்றே சற்று கூடுதலான உடையணிந்து வர, கால்களிரண்டும் கிட்டத்தட்ட 'வெட்டவெளியாக'.
ஆனால் பெண்பார்க்கப்போகும் அவசரத்திலும், அதற்குள் பீரோவைத் திறக்க வேண்டுமென்ற அவசரத்திலும் இருக்கும் ராஜாவுக்கு ஏற்கெனவே திறந்திருக்கும் எதையும் பார்த்து ரசிக்கும் ஆர்வமில்லை. நமக்குத்தான் எந்த அவசரமும் இல்லையே. அதனால் ஒரு இடம் விடாமல் கண்களை மேய விட நினைத்தால் அதற்குள் உள்ளிருந்து மனோகரின் அழைக்கும் குரல். (மனோகர் ராஜாவுக்கு மட்டும் வில்லன் அல்ல நமக்கும்தான்). அழைப்பைக்கேட்டு ஐஸ்கிரீம் உள்ளே நகர்கிறது.
உள்ளேயிருந்து ஹாலுக்கு வரும் மனோகர் "திறக்க முடியலைன்னா உடைச்சிடுங்க" என்று அனுமதி கொடுக்க, ராஜா பீரோவை உடைத்து கதவைத்திறக்க, உள்ளேயிருந்து பிணமாக சரிந்து விழுகிறாள் ஐஸ்கிரீம் ஸ்னேகலதா. முதுகில் சொருகியிருக்கும் கத்தியை ராஜா எடுக்க (வழக்கம்போல) வில்லன் கூட்டம் ராஜா, கையில் கத்தி, கீழே ரத்த வெள்ளத்தில் பெண்ணின் பிணம் அனைத்தையும் ஒருசேர கச்சிதமாக photo எடுக்கிறது.
ஒருபக்கம் நம்ம ஆள் இக்கட்டில் மாட்டிக்கிட்டாரே என்ற வருத்தம். இன்னொரு பக்கம் சரியாகக்கூட பார்க்காத ஸ்னேகலதாவை இப்படி திடீர்னு கொன்னுட்டாங்களே (இந்த பாலாஜி சரியான கொலைகாரப் பாவியாக இருப்பார் போலிருக்கே. ஒவ்வொரு பம்பாய் ஐட்டமாக அழைத்து வந்து கொன்று தள்ளுகிறாரே) என்ற ஆத்திரம். 'என்ன இது, இத்துனூண்டு சீனுக்காகவா இந்த ஐட்டத்தை பம்பாயிலிருந்து கொண்டு வந்தார்?' என்று குழப்பம். (பே-இமான் பார்க்கலை இல்லையா, அதான்). “ராதாவை விட்டு ஏன் விலகிப்போகிறீர்கள் அண்ணா?” என்று கேட்கும் தங்கை ரோஜாரமணியிடம் சொல்லும் பிளாஷ்பேக்கில் வருகிறது இத்தனையும்.
ஆச்சு, படம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஐட்டத்தை மறந்து (ஹி.. ஹி.. மறக்கவில்லை, மனதில் ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு) படத்தில் லயிக்கிறோம். நமது தலைவர் இரட்டை வேடங்களில் பிளந்து கட்டிக்கொண்டிருக்கிறார். தங்கையின் திருமணத்துக்காக பேங்கர் ஜெகன்நாத் வீட்டிலேயே திருடி, மாட்டிக்கொண்டு சிறைக்குப்போக.....
பிரேம் நகர் (இந்தி வசந்த மாளிகை) படத்துக்காக போடப்பட்ட பிரம்மாண்ட செட். அதில் பேங்கர் ஜெகன்நாத் (மேஜர்), ஜெகதீஷ் (பாலாஜி) இவர்கள் முன் ஒருபெண்ணை மனோகர் முக்காடிட்டு அழைத்துவர, "உன்னை அடையாளம் காட்டக்கூடியவன் இப்போ ஜெயில்ல இருக்கான்,ஸோ, இந்த முக்காடு இனிமே உனக்குத் தேவையில்லை" என்று சொன்னவாறு மேஜர் முக்காட்டை அகற்ற, "அட, ஐஸ்கிரீம் ஸ்னேகா, குழந்தை இருக்கிறாளா?. அவசரப்பட்டு பாலாஜிக்கு கொலைகாரர் பட்டமெல்லாம் கொடுத்திட்டோமே' என்றிருந்தது. (அதாவது நிஜமாக கொலை நடக்காமல் தான் கொலை செய்துவிட்டதுபோல ராஜாவை நம்ப வைத்து அந்த போட்டோவைக்காட்டியே தங்கள் கூட்டத்தில் சேர்த்துக்கொண்ட கொள்ளைக்கூட்டம்).
மெல்லிசை மன்னர் அதிரடியாக இசைமுழங்க, ஈஸ்வரியின் துள்ளும் குரலில் "சொல்லாதே சொல்லாதே ஊரார்க்கு சொல்லாதே நான் என்ன தந்தேன் என்று" பாடலுக்கு ஸ்னேகலதா ஆட, தேவிபேரடைஸ் தியேட்டர் குளிரில்கூட நம் உடம்பு சூடாகும் அனுபவம் ஆகா. இதே உணர்வு ஒளிப்பதிவாளர் மஸ்தானுக்கும் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் கேமராவில் புகுந்து விளையாடி இருப்பார். குறிப்பாக லோ ஆங்கிளில் எடுத்திருக்கும் அந்த ஷாட். இப்போ சாதாரணமாக தெரியலாம். அப்போ அதெல்லாம் புதுமை. இரண்டு வித்தியாச உடைகளில் ஸ்னேகலதாவின் ஆட்டம்னா செம்மையான ஆட்டம். இதற்கிடையே அவள் ஆட்டத்தின்போது ஜெகதீஷுடன் நெருக்கமாகவும், ஜெகன்னாத்தின் முதுகில் உப்புமூட்டை ஏறியபடியும் இருக்கும் காட்சிகளை போட்டோ எடுத்து இருவரையும் பிற்பாடு மோத விடுகிறார் மனோகர்.
ராஜா ஜெயிலில் இருக்கிறான் என்ற தைரியத்தில் வெளியே நடமாடும் ஸ்னேகலதாவை, தங்கையின் திருமணத்துக்காக கண்டிஷன் பெயிலில் வளர்ப்புத்தந்தை சப்-இன்ஸ்பெக்டர் ராமையாவுடன் (இன்னொரு நடிகர்திலகம்) வந்துகொண்டிருக்கும் ராஜா பார்த்துவிட, அவள் காரில் ஏறித்தப்பிக்கிறாள். இருந்தாலும் காரை அடையாளம் கண்டு இடத்தைக்கண்டுபிடித்து, மாறுவேடத்தில் 'சோன்பப்படி' பாட்டெல்லாம் பாடி, அவளால் ஏற்பாடு செய்யப்பட அடியாட்களுடன் சண்டையிட்டு அவளைப்பிடிக்க...... அதோடு கதையில் ஸ்னேகலதாவின் பார்ட் முடிகிறது.
"சொல்லாதே சொல்லாதே ஊரார்க்கு சொல்லாதே நான் என்ன தந்தேன் என்று" என்று சொன்னாலும், பாம்பே ஐஸ்கிரீம் ஸ்னேகலதா வரும் காட்சிகளில் அவரால் அடையும் பரவசத்தை சொல்லாமல் இருக்க முடியுமா?. அதனால்தான் ஊரார்க்கு மட்டுமல்ல உலகத்தாருக்கே சொல்லி விட்டேன்.....
பல விஷயங்கள் , நம் முன்னோர்கள் சொன்னதை இன்றும் உண்மையாக இருப்பதை பார்க்கிறோம் - இன்று சயின்ஸ் என்பது எவளவோ வருடங்களுக்கு முன்பே நமது முன்னோர்கள் அறிவித்த உண்மைகள் - காலபோக்கில் நாமும் அதை பெரிதும் பொருட்படுத்துவதில்லை . இந்த உதாரணத்தை கொஞ்சம் பார்ப்போமா ??
In Hanuman Chalisa , It is said :
"Yug sahastra yojan per bhanu !
Leeyo taahi madhu phal janu !!"
1 Yug = 12000 years
1 Sahastra = 1000
1 Yojan = 8 miles
Yug * Sahastra * Yojan = par Bhanu
12000 * 1000 * 8miles
1 mile = 96000000 miles = 960000000 * 1.6kms = 153,60,00,000 kms to Sun
NASA has said that , it is the exact distance between Earth and Sun (bhanu) , which proves Hanuman ji did jump to planet sun , thinking it as a sweet fruit ( Madhu phal--)
It is really interesting how accurate and meaningful our ancient scriptures are -- unfortunately barely it is recognized , interpreted accurately or realized by any in today's time ----
Same thing happened in NT's case also - it is amazing to see his talents , achievements , glory when the same getting unfolded by many stalwarts including many hubbers in this thread - but when he was alive though all facts of his glory of acting talents were known , they were misinterpreted , not realized by many
and due recognitions were not conferred by Indian Govt. Like NASA , the truth would be revealed one day that a great actor was born in Tamil nadu - that was the day the nation would feel ashamed of itself for not recognizing accurately about NT and his talents - that day is not very far from reach !!
:):smokesmile:
//ஆனால் பெண்பார்க்கப்போகும் அவசரத்திலும், அதற்குள் பீரோவைத் திறக்க வேண்டுமென்ற அவசரத்திலும் இருக்கும் ராஜாவுக்கு ஏற்கெனவே திறந்திருக்கும் எதையும் பார்த்து ரசிக்கும் ஆர்வமில்லை. // ஹிஹி..:) ரொம்ப காலததுக்கு முன்னால் பார்த்த படம்..ஸ்னேகலதா ஃபோட்டோ போடுமேன்... நன்று கார்த்திக் சார்..
ஆனா அந்தப் படத்தில மஞ்சுளா தான் கிட்டத் தட்ட அந்த் ரேஞ்ச்ல இருப்பாரில்லை.. ரெண்டு பாட்டுல :)
சிநேகலதா மட்டுமல்ல சி.ஐ.டி பாதி பாதியை தவிர அவரின் ஹெலன் தொடங்கி சிலுக்கு முடிய அனைத்து ஐட்டமும் ஜோர்தான்.என்னுடைய தேர்வு
1)ஆலம்
2)ஹெலன்
3)விஜயஸ்ரீ
4)ஜெய் குமாரி
5)பத்மா கன்னா
6)சினேக லதா
7)வெண்ணிற ஆடை நிர்மலா
8)ராஜஸ்ரீ
9)vpkb காஞ்சனா
10)விஜய லலிதா
அது சரி, மேற்கொண்டு இரண்டு எழுதியாயிற்று.(பெண் வேடமிட்ட ஆணையும் சேர்த்து)ஆலத்தை பற்றி மட்டும் எழுதாமல் வெறுப்பேற்றி கொண்டிருந்தால் நியாயமா?
Dear Vasudevan Sir, CK Sir, Bharani Sir, Raghavendran Sir, Gopal Sir and other Sirs,
Thanks for your response and i feel very sorry that am unable to pass on my comment here immediately on the wonderful postings of Vasudevan sir, Raghavendran Sir, Gopal Sir etc.,
The issues is these days am on travel for quite a bit. I post few things from my tab and mobile in my free time. Post my Grandmother's demise 15 - 20 days back am not able to spend time in the night to post many things or write a comment.
Vasudevan sir,
Your posts are tremendous and one can easily asses the time and effort required for the same. All your posts carry extraordinary values. Equal to sculptures of those days. Superb sir ! Our God's wishes and blessings will always be with you !
Raghavendran Sir,
Your posts too are highly informative especially Nadigar Thilagam's Filmography. When any new person sees that, am sure, he / she will conclude that Nadigar Thilagam was SECOND to NONE interms of the Film's success or the release time collections. One Small suggestion. Please HIGHLIGHT and MENTION --> SEE THE THREAD ....Filmography..to see the Release, 100 Days, Silver Jubilee Advertisements of NAdigar Thilagam Films..." Because, our people ( General public) need bit of spoon feeding. that's why.
Once they see these and when they do not see the authentic ads of others, they will realise who is the real emperor of Cinema till date.
Gopal Sir,
What to say about your write up ? You may be henceforth called as "Mayyaththin Sandilyan ". This will be the ideal title for you...! All your writeup do carry the equal weightage of Class & Mass !!
All the hubbers are making it very interesting....My special enquiries to Mr,Karthik. .....Though, he comes out with something inbetween...it may be called as "Oru Vaasagam endraalum Thiruvaasagam " type. !
My special thanks to "The Gentleman of Thread" Esvee Sir for posting Nadigar Thilagam's article every now and then. !
Take Care
இயக்குனர் மாதவன் பற்றிய பதிவை ரசித்த சின்னக் கண்ணன் சார், வாசுதேவன் சார், சி.ராமச்சந்திரன் சார், ராகவேந்திரன் சார், சந்திர சேகரன் சார், பொன் ரவிச்சந்திரன் சார், கோபால் சார், கார்த்திக் சார், கல்நாயக் சார், ரவி சார், சரஸ்வதி லக்ஷ்மி மேடம் அனைவருக்கும் என் ஆழ்ந்த நன்றி!
கோபால் சார்,
'ராஜா ராணி' காதலை மட்டுமல்லாமல் படத்திற்கான குறு விமர்சனத்தையும் சுவையாகத் தந்தற்கு நன்றி! (என்னை மிக மிக கவர்ந்த படம். பின்னால் வருகிறேன்.)
'அருணோதயா தீபாவளி' நடிகர் திலகத்தின் அரிய பேப்பர் கட்டிங்கிற்கு ரொம்ப ரொம்ப நன்றி!
Dear Ravi sir,your article,NASA,old-scriptures,NT was fine.Our people don't realize the value of the thing they have.The day is not far ,when people accept NT as the DOYEN of film-world globally.
டியர் கார்த்திக் சார்,
தங்கள் அன்பிற்கு நன்றி! ஐட்டம் நடிகையர் வரிசையில் தாங்கள் அளித்துள்ள சிநேகலதா பற்றிய பதிவு சிம்ப்ளி சூப்பர். ரசித்துப் படித்தேன்.
http://ttsnapshot.com/out.php/i13242...h58m36s136.png
இன்னொன்று தெரியுமா! பாலாஜியின் இறக்குமதிகளிலேயே என்னை மிகவும் கவர்ந்தவர் சிநேகலதா. கொள்ளை அழகு. கவர்ச்சி கூட ஆபாசமாய் தெரியாது. நானும் கோபால் சாரும் பல தடவை இந்த அழகுப் புயலைப் பற்றி செல்லில் பேசுவோம். கிட்டத்தட்ட பிரபல இந்தி நடிகை ஆஷா பரேக் சாயலில் இருப்பார் சிநேகலதா.
கவர்ச்சிப் பாவையாக மட்டுமல்லாமல் இறுதியில் பாலாஜியின் குகையில் கயிற்றால் கட்டிப் போடப் பட்டிருக்கும் நடிகர் திலகத்திடம் "என்னால் பிடிபட்ட நீங்க என்னாலேயே விடுதலையாகப் போறீங்க"...என்று கயிற்றை அறுத்து விடுவிப்பது அவருடைய இரக்க மனத்தைக் காட்டும் காட்சி. அதுவரை அவர் மேலிருந்த சின்ன வெறுப்பும் (வெறுப்பா! அது ஏது என்கிறீர்களா?) நம்மிடையே அப்போது அடிபட்டுப் போய் விடும்.
மாடர்ன் டிரெஸ்களில் கலக்கிய இந்த நவநாகரீக மங்கையை தங்கள் பதிவின் மூலம் நிரந்தரமாக மறக்க முடியாமல் செய்து விட்டீர்கள்.
அருமை.(வாலிபம் திரும்பி வந்து விட்டதோ!)...
இதோ உங்கள் ஸாரி நம் சினேகலதா. (சி.க.சார் ரொம்ப சந்தோஷப்படுவார்.)
http://i812.photobucket.com/albums/z...psc174a031.jpg
http://i812.photobucket.com/albums/z...ps26c9f1cf.jpg
http://i812.photobucket.com/albums/z...ps916ba8ce.jpg
http://i812.photobucket.com/albums/z...ps921dccf0.jpg
இனி சிநேகலதாவின் 'சிக்'கென்ற ஆடையில் 'சில்' என்ற "சொல்லாதே... சொல்லாதே"....பாடல் சூப்பர் கிளியர் பிரமிட் கம்பனி டிவிடி வீடியோவில்.
http://www.youtube.com/watch?feature...&v=ky6u1YWAbfs
டியர் ரவி (g94127302) சார்,
தங்கள் உயரிய பாராட்டிற்கு மிக்க நன்றி!
தங்களின் அசாதராணமான ஆங்கிலப் பதிவுகள் தூள் கிளப்புகின்றன. அருமையான விஷயங்களை கொண்டு வந்து அலசி இறுதியில் அதை தலைவருடன் அழகாக கோர்த்து, இணைத்து முடிச்சுப் போடும் தங்கள் பாணி முற்றிலும் புதிது. அதிலும் நாசா பதிவு அற்புதம். (ஹனுமான்ஜியின் பழத் தாவல் அட்டகாசம்). அழகான உவமை. வித்தியாசமான சிந்தனை. தங்கள் பதிவுகளில் நுண்ணிய அறிவு புலப்படுகிறது. தங்கள் மனித நேயமும் விளங்குகிறது. வித்தியாசமான தங்கள் சிந்தனைக் களத்திற்கு என் மனமகிழ்ந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். தங்கள் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர் நோக்கும்
அன்பன்
வாசுதேவன்.
சிவாஜியின் காதல்கள்-4
புதையல்-1957
சின்ன சின்ன இழை பின்னி விண்ணோடும் முகிலோடும் விளையாடிய தங்க மோகன தாமரை பரிமளா ----உனக்காக எல்லாம் உனக்காக.
முதல் காட்சி -தபால் கொண்டு வருபவர், தபால் படிக்காமலே கிழிக்க படுவதை கண்டு ஆச்சர்யமுற்று கேட்க,நீங்களே படித்து பாருங்கள் என்று தபால் காரரை அந்த பருவ மங்கை வேண்ட,தபால் காரர் ,இப்படி கசமுசான்னு கிழிச்சிட்டியே ,ஒட்டுமா என்று ஓட்ட வைத்து(சத்தமாவா,மனசுக்குள்ளா,உங்க இஷ்டம்) ,அவர் படிக்கும் அழகிலே ,மயங்கி மனதை பறி கொடுத்து கிழிக்க பட்ட கடிதத்தையும் போற்றி வைக்கும் பரிமளா-துரை காதல் முதல் காட்சியிலேயே களை கட்டி விடும்.(படிக்கும் நடிகர் யாரென்று சொல்லவும் வேண்டுமோ)
குதிரை வண்டியில் வரும் துரையை தோழிகள் கேலி செய்ய ,நிபந்தனையற்ற ஆதரவை துரைக்கு நல்கி,கடையாணி கழற்றிய வண்டியை துரத்தி சென்று ,அம்மா அப்பாவை பற்றி பரிமளா விசாரிக்க,(இருக்காங்களா,அவங்க இதுக்கு சம்மதிப்பாங்களா ,துரையின் கிண்டல்),தன் கதையை சொல்ல இரவு தனியாக கடற்கரை பக்க மண்டபத்துக்கு வர சொல்ல, அட...பரிமளாவும் சரிதான் சொல்லி விடுகிறாள்.என்ன கதை...
ஒரு காதல் காட்சி படு சுவாரஸ்யமாகவும் ,கதைக்கே திருப்பு முனையாகவும் அமையும் அதிசயம் இந்த மண்டப சந்திப்பு காட்சி....
இரவிலே தாமரையாய்,பகலில் நிலவாய் ,குறுந்தொகை படிக்கும் காதலர்கள்...முகத்தையும்,இதழையும் வருடும் துரையின் கரங்கள்,நாணத்தோடு ரசிக்கும் பரிமளா,கோடி கதைகள் பேசி ,பார்ப்போர் காதல் உணர்வையும் தூண்டி துடித்தெழ செய்யும்.தன்னுடைய கதையை சொல்லி இதுதான் தங்கம் புதைத்த இடம் (தங்கை தங்கம்)என்று காட்ட,தங்க புதையலை தேடி அலையும் வெள்ளியம்பலம் கோஷ்டி காதில் பட,துரத்த பட்டு மதகடியில் காதலர்கள் ஒளியும் காட்சி...அந்த கால சொல்லி அடித்த கில்லி.....
விண்ணோடும் முகிலோடும் காட்சி-சுருங்க சொன்னால் தமிழில் வந்த முதல் முதல் அசல் காதல் காட்சி. இன்ப லாகிரியில் உன்மத்தம் கொண்ட காதல் பித்தோடு காதலர்கள் களி நடம் ஆடும் ,நடிப்பின் சாதனை.Silhoutte என்று சொல்ல படும் நிழல் படத்தில் தொடங்கி,துரத்தி விளையாடி,கை கோர்த்து கடலில் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து களித்து, ஜடையை இழுத்து,விளையாடி,குட்டி கரணம் அடித்து இன்ப பித்து உணர்த்தி,விளையாட்டாய் மடியில் கை போட செல்லமாய் தட்டி விடும் அழகி. காதலி கையை பிடித்து முட்டி போட்டே நடை பழகும் கடற்கரையோர காதல்....பார்த்து களியுங்கள் அய்யாமார்களே....
இந்த காதல் இப்படியென்றால், துர்பார்க்கிய ,வயதானவனுக்கு சூழ்ச்சியினால் வாழ்க்கை பட்டு ,பாதாள அறையில் அடை படும் துரையின் மேல் ஒருதலை காதல் கொள்ளும் மேனகா...சகதியில் விழுந்து விட்ட சந்தனத்தை உதாசீனம் செய்வதா,என்னும் மேனகாவிடம்,பின்னே அதை மேலே எடுத்து பூசி கொள்வதா என்னும் துரையிடம்,இல்லையில்லை குப்பையில் கோமேதகம் இருந்தால் என்னும் உதாரணத்திற்கு,நமக்கு சொந்தமில்லாதது என்று பதிலுக்கு, தனியுடமை என்கிறீர்களா என்னும் மேனகாவிடம்,இந்த மாதிரி விஷயங்களில் பொதுவுடைமை கூடாதம்மா என்னும் குறும்பு...
வந்திருப்பது மாறுவேட பரிமளா என்று அறியாமல் ,குடு குடுப்பை காரனிடமே துரையை வசிய படுத்த வேண்ட ...(குடுகுடுப்பை காரர் பாவம் துரையின் பிடியில்,தட்டலில் திணறினாலும்,இரவு உருண்டு புரண்டு அருகில் படுப்பார்.அது என்னாடா படியில் மேல் நோக்கி உருண்டு என்ற துரை கிண்டல்),தப்பி போக மேனகாவை ஏமாற்ற ,சத்தியமா உன்னை பிரிய மாட்டேன் என்று மாறுவேட பரிமளா கையால் அடித்த சத்தியம் செய்து,ஓடும் போது என் கதி என்று கேட்கும் மேனகாவிடம் நீ வேறா என்று அடிதடி சண்டை வேறு...(துரை ரசிக்க வேறு செய்வார்)புதையல் சுவடியை காதலர்களை பலி கொடுக்க மாற்றியெழுதும் மேனகாவே இறுதியில் பலியாகும் சோகம்....
பரிமளாவை ஒரு தலையாய் காதலிக்கும் துக்கா ராம் (சந்திர பாபுவின் மிக சிறந்த பாத்திரம்)...நூற்று கணக்காய் தினம் கடிதம் எழுதி குவிப்பதும்,(முதல் காட்சி கடித உபயம் இவரே),பரிமளா சீயக்காய் தூள் ஆர்டர் வரும் போது அதகளம் செய்வதும்,பரிமளா இவரை வெள்ளியம்பலத்திடம் மாட்டி வைக்க,புதையலை தேடி அலைய கட்டாய படுத்த படுவதும் (தின அட்டவணை வேறு குளித்தல்,சாப்பிடுதல்,தூங்குதல்,உலா போதல் என்று!!!),கடைசியில் பரிமளா தன்னை காதலிக்கவில்லையென்றாலும் தான் மாட்டுவதை விரும்பவில்லை என்று அவள் நல்லுள்ளத்தை புரிந்து தானே போலீசிடம் செய்யாத குற்றத்திற்கு சரணடையும் தியாகி காதலர்...
புதையல்...விறுவிறுப்பான தங்க காதல் புதையல்.
கார்த்திக் சார்,
என் மகனின் மூலமான 'பே-இமான்' பற்றி மறக்காமல் குறிப்பிட்டிருந்ததற்கு நன்றி! பொதுவாக இத்தகைய மூலங்களை யாரும் அதிகமாகக் கண்டு கொள்வதில்லை. ஆனால் இதில் எனக்கு மிக மிக ஆர்வமும், விருப்பமும் உண்டு. தங்கள் ஞாபக சக்திக்கு என் ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
'பே-இமான்' படத்தில் தந்தை போலீஸ் ராமையாப் பிள்ளை வேடத்தில் வில்லன் நடிகர் பிரான் அவர்களும், மகன் திருடன் ராஜா வேடத்தில் மனோஜ் குமாரும் நடித்திருந்தனர். தமிழில் இரண்டு பாத்திரங்களையும் நடிகர் திலகமே ஏற்றார். கதாநாயகி ராக்கி. இந்தி, தமிழ் இரண்டிலும் சிநேகலதாதான். பிரேம்சோப்ரா பிரதான வில்லன். (பாலாஜி வேடம்)
இதோ 'பே-இமான்' (1972) இந்திப் படத்திலிருந்து சில நிழற்படங்கள்.
பிரான்
http://103.imagebam.com/download/i_R...21h57m27s3.png
மனோஜ் குமார்
http://107.imagebam.com/download/JAq...h57m18s168.png
ராக்கி
http://106.imagebam.com/download/GQ_...h57m50s227.png
சிநேகலதாவும் பிரேம்சோப்ராவும்
http://108.imagebam.com/download/x1h...1h59m38s28.png
சிநேகலதாவும் பிரேம்சோப்ராவும். (சிநேகலதா இரண்டு வருடங்களுக்கு முன்னர் இன்னும் சின்னப் பெண்ணாகத் தெரிவதைப் பாருங்கள்)
http://www.bollywoodvinyl.com/ekmps/...5D-5478-p.jpeg
இந்தியில் 'சொல்லாதே... சொல்லாதே'...(Dekho Ji Raat Ko Gulam Ho Gaya)
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=3UtEtcw7NI8
//இன்ப லாகிரியில் உன்மத்தம் கொண்ட காதல் பித்தோடு காதலர்கள் களி நடம் ஆடும் ,நடிப்பின் சாதனை.Silhoutte என்று சொல்ல படும் நிழல் படத்தில் தொடங்கி,துரத்தி விளையாடி,கை கோர்த்து கடலில் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து களித்து, ஜடையை இழுத்து,விளையாடி,குட்டி கரணம் அடித்து இன்ப பித்து உணர்த்தி,விளையாட்டாய் மடியில் கை போட செல்லமாய் தட்டி விடும் அழகி. காதலி கையை பிடித்து முட்டி போட்டே நடை பழகும் கடற்கரையோர காதல்.// ஹலோவ்..ஜி.எஸ் (கோபால் சார்) இது என்ன படக் காட்சியா மனதில் பதிந்திருந்த அனுபவக் காட்சியா..ம்ம் கலக்குங்க..
அது சரீ ஈ.. நான் புதையல் முழுக்கப் பார்த்ததில்லை (அதுக்காக மெம்பர்ஷிப் கான்ஸல் செஞ்சுடாதீங்க) பரிமளா பத்மினி தானே.. யாரந்த மேனகா
என்.வி.எஸ்(நெய்வேலி வாசுதேவன் சார்), மிக்க நன்றிங்க..நன்னாத்தான் இருக்கா கொயந்தை..இப்போ தள்ளாத வ்யதாயிருப்பாங்க..ஆமா இவங்க தான் ப்ரசண்ட் சினேகாவோட பாட்டியா :)
வாசுதேவன் சார், கோபால் சார், சின்னக்கண்ணன் சார் தங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.
டியர் வாசுதேவன் சார்,
ஒவ்வொருமுறையும் நான் ஐட்டம் நடிகையர் பற்றி பதிவிடும்போது எழுத்துக்களால் மட்டுமே அமைந்த என் பதிவுகளை மேலும் அழகு படுத்தும் விதமாக மேற்கொண்ட தகவல்களையும், நிழற்படங்களையும், வீடியோ பதிவுகளையும் தந்து முழுமையாக்குவது தாங்கள்தான். இம்முறையும் அதே போல ஸ்டில்களையும், வீடியோவையும், மேலதிக விவரங்களையும் தந்து ஸ்னேகலதா பதிவை சுவையூட்டி இருப்பதுடன், என்மகன் படத்தின் இந்தி பதிப்பான பே-இமான் படத்தின் பதிவுகளையும் தந்து அசத்தி விட்டீர்கள். மனமார்ந்த நன்றி.
வழக்கமாக இதுபோன்ற வில்லன் கூட்டத்து அழகிகள் இறுதியில் மனம் மாறி கதாநாயகனுக்கு உதவி செய்வதோடு அந்த வில்லனின் துப்பாக்கி குண்டுக்கே இறையாவதாக நமது கதாசிரியர்கள், இயக்குனர்கள் கதையமைப்பார்கள். (பட்டணத்தில் பூதம், மீண்டும் வாழ்வேன் படங்களில் 'சாக்லேட்', வைரநெஞ்சம் படத்தில் 'ஒன்பது', ராஜாவில் 'குழந்தை' உள்பட பல அழகிகளுக்கு இந்த முடிவுதான். ஆனால் ஐஸ்கிரீமுக்கு இப்படத்தில் அப்படியில்லை என்பது ஆறுதல்).
தங்கள் சிறந்த சப்போர்ட்டுக்கு மீண்டும் மீண்டும் நன்றி....
வாசு சார்,
கார்த்திக் சாரோடு சேர்த்து நானும் உங்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டவன். உங்கள் முனைவு இல்லையென்றால் பல பதிவுகளுக்கு visual சப்போர்ட் கிடைத்திருக்காது. தங்கள் உழைப்பினால் பலர் பதிவுகள் மேலும் மெருகேறி விளங்கின என்றால் மிகை அல்ல. உங்கள் சிநேகத்திற்கு நன்றி.
புதையலைத் தோண்டி காதல் முத்துக்கள் எடுத்துத் தந்த கோபால் துரைக்கு பாராட்டுக்கள்.
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலாவின் வெளிச்சத்தில் காதல் உணர்வுகளை புதுமையாகப் பிரதிபலித்த பரிமளா துரை.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=_IeGUw7uSfs
நடிகர் திலகத்தின் நடை
*
5..பல்லால் எடுத்துவிட்ட பாம்பு…!
*
“குட்மார்னிங் பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்”
“குட் மார்னிங்க் மிஸ்.”
“குட்மார்னிங்க் ஞெஞ்ஞமிஞ்ஞ…”
“யாரது..குட்மார்னிங்கோட என்னமோ சொன்னது.. நவீன் நீயா..என்ன சொன்ன..”
“ஆமா மிஸ்.. இந்த ப்ளூ ஸாரில நீங்க ரொம்ப பியூட்டி ஃபுல் மிஸ்..”
“சரி சரி..ஐஸ் வைக்காத..டெஸ்ட்ல மார்க்லாம் கூட்டிப் போடமாட்டேன்..ஓகே..க்ளாஸ்..இன்னிக்கு ஒங்களுக்கு ஒரு கதை சொல்லப் போறேன்..யூ நோ.. நேம்ஸ் நா என்ன..நீ சொல்லு ப்ரீத்தி..”
“டீச்சர்.. நேம்ஸ்னா பேர்கள்.. மை நேம் இஸ் ப்ரீத்தி.. யுவர் நேம் இஸ் அர்ச் அர்ச் அர்ச்சனா மிஸ்..சரியா டீச்சர்….இவன் என்னமோ சொல்றான்..”
“டேய் என்னடா சொன்ன..
“நான் சொல்றேன் டீச்சர்.. உங்களை பூனைக் கண்ணு மிஸ்னு சொல்றான்..”
“நான் அப்படிச் சொல்லவே இல்லை யே..இவ பொய் சொல்றா”
“சரி சரி.. அழாத.. பெயர் என்பது எல்லாருக்கும் அவங்களோட அப்பா அம்மாவால வைக்கப் படுவது..ஆனாக்க ஒரு ஆள் தன்னோடா நல்ல செயல்களால பேரெடுத்தா தான் குட்.. அவன் நல்ல ஆள்ங்கறோம்..இப்படித் தான் ஒரு நாள் ஒரு மகான் ஒரு ஊருக்குப் போனாராம்.. மகான்னா என்ன தெரியுமா..”
“டீச்சர் நானு”
“சொல்லு விஷால்.. “
“அதான் நானு சொன்னேனே.. எங்கப்பா என்னை என்னரும மவனேன்னு கொஞ்சுவார்..”
“ஹைய்யோ.. அது மகன் டா.. மகான்னா வேற.. அதாவது காட் ஐ நினைச்சு ஜபிச்சு காட் டோட அருள் பெற்றவங்க.. அந்த மகான் என்ன பண்றார்னா.. அந்த ஊருக்குள்ள போனா ஊரு முழுக்க அவர் பேரு..”
“அவர் பேரென்ன மிஸ்..”
“சொல்றேன்.. பாத்தா ஹோட்டல், மளிகைக் கடை அதாவது சூப்பர் மார்க்கெட், ஜவுளிக்கடை அப்படி இப்படின்னு எல்லாத்துலயும் அவர் பேர் தான்.. பாத்தாரு..யாரோட வியாபாரங்கள் இதுன்னு விசாரிச்சார்.
.”
“ஐ நோ டீச்சர்..ஏதாவது பொலிட்டீஷியனா இருக்கும்”
“சும்மா இரு படவா..கேட்டா அதெல்லாம் ஒரு அப்பூதி அடிகள்ங்கறவருக்குச் சொந்தம்ங்கறாரு..இவரும் அந்த அப்பூதி அடிகள் வீட்ட விசாரிச்சு போறாரு.. அவங்க வீட்டுத் திண்ணைல உட்கார்றார்.. என்னடா கையைத் தூக்கற..”
“திண்ணைன்னா என்ன டீச்சர்..
“காலம்.. திண்ணைன்னா அந்தக் காலத்துல வீட்டுக்கு வெளில மேடை மாதிரி வாசலுக்குப் பக்கத்துல போட்டிருப்பாங்க.. நீ அபார்ட்மெண்ட்டா உனக்குத் தெரிய வாய்ப்பில்லை.. சரியா.. அங்க மிஸஸ் அப்பூதி சின்ன குண்டுக் கொழுக்கட்டையாட்டமா வந்து விசாரிக்கறா..கூடவே அப்பூதி அடிகளும்.. “சார் நீங்க மகா பெரியவா போல இருக்கேளே.. நீங்க யாரு..”
அதுக்கு அந்த மகான் ஒரு தெய்வீகச் சிரிப்புச் சிரிக்கறார்..” நான் யார்ங்கறது இருக்கட்டும்..ஒன்னோட வீட்டில இது என்ன பேருன்னு கேக்கறார்.. இதுவா.. சார்.. இது திரு நாவுக்கரசர் இல்லம் அப்படிங்கறார் அப்பூதி..என்னடா தூங்கற..”
“இல்ல டீச்சர் கண்ணுல தூசி.. ப்ராமிஸா..”
“அப்புறம் கேள்வி கேட்டா ஆன்ஸர் சொல்லலைன்னா பிச்சுடுவேன்.. அப்பூதி சொல்றார்.. சார்..அது என்னோட மானசீக குரு நாதர்..மிக உயர்ந்தவர்.. நிறைய நல்ல காரியம் பண்றவர்..காட் மாதிரி அதனால அவர் பேர் வெச்சேன்ங்கறார்.. இந்தப் பெரியவர் சிரிக்கறார்.. அவன் என்னடாப்பா பண்ணிட்டான்..அவனப் போய் ஓஹோங்கறியே.. அப்பூதிக்கும் அவர் வொய்ஃபுக்கும் கோபம் வருது..இன்னா சார்..என்னோட குருவப் பத்தி அவன் இவன்னு பேசுறங்கறார்..கொஞ்சம் இரு..”
“டீச்சர் நான் வேணும்னா ப்ரின்சிபல் ரூம் வாசல்ல கோல்ட் வாட்டர் எடுத்துக்கிட்டு வரட்டா..
“இதுவே போதும்.. அந்தப் பெரியவர் நான் தான் அந்த நாவுக்கரசர்னு சொல்லிச் சிரிக்க கொஸ்டின்க்கு ஆன்ஸர் தெரியலைன்னா நீங்கள்ளாம் முழிப்பீங்களே அதே மாதிரி மிஸ்டர் அண்ட் மிஸஸ் அப்பூதி முழிக்கறாங்க.. தென் அவர் கால்ல டபக்குன்னு விழுந்துடறாங்க..அப்ப இந்த நவீன் மாதிரி ஒல்லியா ஒரு பையன் வீட்டுக்கு உள்ள இருந்து வர்றான்.. இவன் தான் என்னோட சன்..உங்க பேர் நாவுக்கரசர்னு வெச்சுருக்கேன்ங்கறார்.. ஓ குட். அப்படின்னு அந்தப் பெரியவர் சிரிக்கறார்.. அப்பூதி “சார்..எங்க வீட்டில நீங்க லஞ்ச் சாப்பிடணும் கொஞ்சம் ஹாஃப் அன் அவர் கொடுத்தீங்கன்னா என் வீட்டுக்காரி தூள் கிளப்பிடுவான்னு சொல்றார்..என்னடா கையைத் தூக்கறே..
ஹாஃப் ஹவர்ல ஹோட்டல்லதான் கிடைக்கும் மிஸ்..வீட்டில முடியாது.. டூ அவர்ஸ் ஆகும் டொமொட்டோ ரசம், பொடொட்டோ கறி பண்ண..”
“ஏன் அப்பா ஹெல்ப் பண்ண மாட்டாரா..”
“சமைக்கறதே அவர் தானே மிஸ்.. அம்மா ஒக்காந்து சூப்பர் சிங்க்ர் பாத்துக்கிட்டிருக்கும்.. நான் பக்கத்துல ஒக்காந்து ஹோம் வொர்க் பண்ணுவேன்..ப்ராமிஸா மிஸ்..”
“சமத்து தான் போ..அப்புறம் என்ன ஆச்சுன்னா நாவுக்கரசர்..சரின்னு சொன்னவுடனே மிஸஸ் அப்பூதி சமைக்கறாங்க..பையன்கிட்ட போய் வீட்டுக்குப் பின்னால போய் பனானா லீவ் பறிச்சுட்டு வாடாங்கறாங்க..அவன் பறிக்கறச்சே பாத்தா அவன் காலுக்குக் கீழ ஒரு பாம்பு..”
“அச்சசோ.. அந்த பாம்ப மிதிச்சுட்டானா டீச்சர்..பாம்பு செத்துப் போச்சா..பாவம் பாம்பு..”
“அடச்சே..அந்தப் பாம்பு கடிச்சு பையன் மயக்கமா வாழையிலையோட போய் அம்மாகிட்ட கொடுத்துட்டு பொசுக்குன்னு போய்டறான்..
“போய்டறான்னா..”
காட் கிட்ட போய்டறான்..அதான் நீயே சொன்னேல்ல செத்துப் போய்டறான்..இவங்க ஒரே அழுகை..ஹஸ்பெண்ட் அப்பூதிகிட்டயும் சொல்ல அவரும் அழுகை..சரி சரி..குரு வந்துருக்கார்..குருன்னா டீச்சர். குருவுக்கு சாப்பாடு போட்டுடுவோம்னு சொல்லிகிட்டு இருக்கறச்சே நாவுக்கரசர் அப்படியே குளிச்சு முடிச்சுட்டு வயசான தளர் நடையில் வர்றார்.. அழகா இருக்கும்..சாப்பிடலாமான்னு அப்பூதி கேக்க சரிங்கறார்.. ஒன்னோட பையனையும் கூப்பிடுங்கறார்.. பையன் தான் காட் கிட்ட போய்ட்டானே.. ரெண்டு பேரும் அழறாங்க.. விஷயத்தைக் கேள்விப் பட்டதும் வெக்ஸ் ஆகி ஒரு பாட்டுப் பாடறார் பாரு.. பாம்பே வந்து வெஷம் எடுத்துடுது..
”
“நிஜம்மாவா ..ஹவ் இஸ் இட் பாஸிபிள்..”
“கேள்வி கேக்கறதப் பாரேன்..எல்லாம் சிவன் அருளால..
*
எல்லையிலா சக்தியினை ஏற்றமுடன் கொண்டதென
கிள்ளை மொழியினைத் கீறித்தான் பார்த்தனையோ
நல்ல பெயரெல்லாம் நாகமே நீஎடுக்க
பிள்ளை பிழைக்கவைப் பாய்..
அப்படின்னு சொல்றாரா..
*
அதுக்குப் பாம்பு என்ன பண்ணித்து//
கசப்பாய் உடலெங்கும் காட்டருவி போல
விஷத்தால் கருநீல வண்ணமென மாறிவிட
கல்லே உருகக் கதறிய பாடலினால்
பல்லால் எடுத்துவிட்ட பாம்பு..
*
புரியுதா..”
*
“ஆமா ஏன் டீச்சர் திடீர்னு வேற லாங்க்வேஜ்ல பேசறாங்க..ஹிந்தி தானே ரேணு..”
“இல்லடா..அது ஃப்ரெஞ்ச்னு நினைக்கறேன்..இல்லையா டீச்சர்..”
அடி கொடுப்பேன்.. நான் பாடினது தமிழ்ப் பாட்டு தான்..ஸோ அப்புறம் என்ன.. மிஸ்டர் ,மிஸஸ், மாஸ்டர் அப்பூதி ஹாப்பியாகி நாவுக்கரசர் கால்ல விழுந்தாங்க.. அவரும் பை சொல்லிட்டுக் கிளம்பிட்டார்..”
அவ்ள தானா..
“இல்லப்பா..இன்னும் ஒரு கதை சொல்லலாம்..அத நாளைக்குச் சொல்றேன்..ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லிடறேன்.. நாவுக்கரசர் தாத்தா.. அவர் பேரன் மாதிரி இன்னொரு மகான் ஞான சம்பந்தர் நவீன் வயசு இருக்கும்.. ஆனா அவன் மாதிரி சோம்பேறி கிடையாது.. நிறைய ஞானஸ்தர் இறைவனருள் பெற்றவர்..அவரோட இவரும் சேர்ந்து அருட்பார்வையோட அந்தச் சிறுவனுக்கு இணையா நடப்பார் பாரு..வாவ்.. ரொம்ப அழகா இருக்கும்”
“யாரு சிவாஜி தானே டீச்சர்..திருவருட்செல்வர் தானே படம்”
“எப்படிடா தெரியும்..
எங்க குட் ஓல்ட் தாத்தா எப்பவும் பழைய படம் தான் பாப்பார்..அப்ப பார்த்திருக்கேன்..”
“டேய் சிவாஜின்னே படம் இருக்குல்லடா..”
“அது வேறடா..இந்த சிவாஜி நடிகர் திலகம்..”
”அதுக்கில்லடா..எங்கப்பா அந்தப் படத்தோட ஹீரோயினோட ஃபேனாக்கும்!”
“ச் ச்.. என்ன பேச்சு.. ஸோ க்ளாஸ்..இந்தக் கதை மூலமா என்ன தெரிஞ்சுக்கிட்டீங்க..”
நான் சொல்லட்டுமா மிஸ்..”
“சொல்லு ரேணு..”
“யாராவது கெஸ்ட் வந்தாங்கன்னா வீட்டில இருக்கற எவர்ஸில்வர் ப்ளேட்ல்யே தான் சாப்பாடு போடணும்.. சரியா டீச்சர்..”
“உன்னை உதைக்கணும்..டிங் டிங்.. சரி சரி பெல் அடிச்சுடுச்சு..ஸீயூ இன் நெக்ஸ்ட் க்ளாஸ்”
“தாங்க் யூ மிஸ்..”
“ஏண்டா இப்படி க் கத்தறீங்க..ஓகே..பை..:)
***
வாசக தோஷ ஷந்தவ்யஹ :)
Pudayal - watch online
<iframe width="560" height="315" src="http://www.indopia.com/embed/Vaecdzyzzzymzztn/" frameborder="0" allowfullscreen></iframe>
:):smokesmile:
சின்னக் கண்ணன் சார்
தங்களுடைய நடையில் நடிகர் திலகத்தின் நடையைப் படித்துக் கொண்டே நடை போட்டேன் பாருங்கள்... விழாத குறை ...
இனிமேல் செல் போனில் இன்டர்நெட் பார்க்கக் கூடாது என்பது ஒரு படிப்பினை... இத்தனைக்கும் வீட்டுக்குள்ளேயே....
ரவி சார்
ஹனுமான் சாலீச... நடிகர் திலகம் .... என்ன அருமையான ஆய்வு... சூப்பர் சார்...
கோபால் ..
தங்கம் புதைக்கப் பட்ட இடம் இது தான் ...
ஆமாம்... இந்த மய்யம் திரியில் தான் அந்தத் தங்கம் உள்ளது...
இப்போது எங்கெங்கோ தோண்டுகிறார்களே.... வேஸ்ட்...
கோபால் என்கிற தங்கப் புதையல் நடிகர் திலகம் உருவம் பொதித்த நாணயங்களாக தேடி எடுத்துத் தரும் புதையலை எடுத்துச் செல்லுங்கள்...
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறார் ஞானத் தங்கமே..
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே...
வாசு சார்
இயக்குநர் வரிசையில் தங்களுடைய சிறந்த பதிவுகளுக்காக...
பிரபல ஹாலிவுட் இயக்குநர் ரிச்சர்ட் ஆட்டன்பரோ வை நினைவு படுத்தும்...
சூப்பர் ஸ்டைல் கிங்கின் அட்டகாசத் தோற்றம்..
http://i1146.photobucket.com/albums/...ps423fcdf9.jpg
//that day is not very far from reach // நல்ல கட்டுரை ரவி ஜி..இன்னும் எழுதுங்கள்..
ஆர்.எஸ்.. பார்த்து.. நடக்கும் போது அடிபடவில்லையே... :) நன்றி..ஆனால் எனக்கு உங்களோட முன் அவதார் தான்பிடிச்சுருந்தது..ஜி.எஸ் ஸோட வாக்வாதம் பண்ணிட்டு அடுத்து என்ன பதில் சொல்லலாம்னு யோசிக்கறா மாதிரி :) கண்ணா எஸ்கேப்
அட ராமசந்திரா .. சி.க நீங்களும் சேந்துனுட்டேளா.. பேஷ்
கார்த்திக் சார் இதுவரைக்கும் நிறைய எழுதாம தலைவரோட ஐட்டம் கேர்ள்ஸ் பற்றி மட்டும் பக்கம் பக்கமா எழுதறார் நீங்களும் அதை பார்த்து ஹும் ஹும். சரியில்லை...:lol:
jokes apart, MR Karthik very nice writeup so far .. Kudos :clap:
பன்மொழி புலவர் வாசுதேவனார் பாணியில் (வீடியோ இல்லாமல்)ஒன்றை முயன்று பாப்போம்.
புதையல் படம் கீழ்கண்ட மொழிகளில் டப்(அ)மொழிமாற்றம் கண்டது.
மலையாளம்- என்ட இஷ்ட குஞ்சுமோன் துரையோட ராவுகள்.
கன்னடம்- ஹுதேயலு
தெலுங்கு-ரக்த அடாவல்லு மேடாலு ரஹச்யம்
ஹிந்தி-ராத் பரிவார் ஔலட் வாரிஸ்.
அடப்பாவி! நினக்கு ஹிர்தயம் லேது? நினக்கு மாத்திரம் வேண்டி யான் படமிட்டது கண்டோ! எந்தா! வல்லிய ஒரு மனுஷனாயி! பாவம் கொடூரன்!
ஸாரி, ராஜேஷ் சார்,
மறுக்கிறேன்.
என்னுடைய 2100+ பதிவுகளில் வெறும் 6 பதிவுகள் மட்டுமே ஐட்டம் நடிகையர் பற்றியது. அதுவும்கூட ராஜா படத்தின் பதிவுகள் திரியில் இடம்பெற்றபோது, அதில் நடித்திருந்த பத்மகன்னா பற்றி (அப்படத்தில் அவரது ரோல் மிகவும் பிடிக்கும் என்பதால்) தனிப்பதிவு இடப்போய் சில நண்பர்களின் உந்துதலால் இத்தொடரைத் துவங்கினேன். இத்தனைக்கும் இது அவ்வளவு சுவாரஸ்யமான தொடர் அல்ல.
என்னுடைய மற்ற பதிவுகளை நீங்கள் படித்ததில்லைஎன நினைக்கிறேன். நான் பதித்தவற்றுள் எனக்கே மிகவும் பிடித்தவை / பிடிப்பவை நடிகர்திலகத்தின் படங்கள் வெளியான நாளில் எனது தியேட்டர் அனுபவப் பதிவுகளே. மிக விரைவில் அவற்றை மீண்டும் தொடர்வேன்.
நன்றியுடன்
mister_k....
//என்னுடைய 2100+ பதிவுகளில் வெறும் 6 பதிவுகள் மட்டுமே ஐட்டம் நடிகையர் பற்றியது. // பாருங்க எல்லாத்துக்குமே ஒரு கவர்ச்சி தேவைப் படுது கே.எஸ் (கார்த்திக் சார்) :) //இத்தனைக்கும் இது அவ்வளவு சுவாரஸ்யமான தொடர் அல்ல. // உங்களுக்கு வேண்டுமானால் இருக்கலாம் :)
நடிகர் திலகத்தின் ஸ்டைல் சண்டைக் காட்சிகள் (வீடியோ தொடர்) 12
Don't Miss It
படம்: விளையாட்டுப் பிள்ளை
http://i1.ytimg.com/vi/L6nBNSlN6ck/m...jpg?v=506bc738
வெளிவந்த ஆண்டு: 20.02.1970
தயாரிப்பு: ஜெமினி நிறுவனம்
சண்டைப்பயிற்சி : சுவாமிநாதன்
http://i812.photobucket.com/albums/z...ps4a15cc73.jpg
நடிகர் திலகம் மோதும் வில்ல விலங்குகள் : யானை, காளை
இயக்கம்: A.P. நாகராஜன்
இதயத்தைப் படபடக்க வைக்கும், வீறு கொண்ட வேங்கையென நடிகர் திலகம் யானை, காளையுடன் மோதும் சண்டைக்காட்சிகள்.
இதுவரை நடிகர் திலகம் பல வில்லன்களுடன் மோதிய தொடர்களைக் கண்டு களித்தீர்கள். இப்போது மாறுதலுக்கு வித்தியாசமாக 'விளையாட்டுப் பிள்ளை' படத்தில் யானை, மற்றும் காளையுடன் ஆக்ரோஷமாக மோதும் சண்டைக்காட்சியைக் காணப் போகிறீர்கள். சற்று அபூர்வப் படமான இப்படத்தின் இந்த சண்டைக்காட்சியை பலரும் மறந்திருக்கலாம். இப்போது ஞாபகப்படுத்திக் கொண்டு கண்டு மகிழலாம்.
இப்படம் முழுக்க பல விளையாட்டுப் போட்டிகளில் கலந்து வெற்றி வாகை சூடும் அற்புதமான வேடம் தலைவருக்கு. கபடி, சிலம்பம், ரேக்ளா வண்டி பந்தயம் என்று தூள் கிளப்புபவருக்கு மிக சிரமமான, உயிரைப் பணயம் வைத்து யானை, மற்றும் காளையுடன் துணிச்சலாக மோதும் வீரமான வேடம்.
முதலில் யானையுடன் மோதும் காட்சி
http://i812.photobucket.com/albums/z...ps6d0edbee.jpg
மகன் சிவக்குமார் படிக்கும் காலேஜில் புதுக் கட்டிட திறப்பு விழாவிற்கு கலந்து கொள்ள சென்று இருக்கிறார் கிராமத்து வீரன் முத்தையா. அங்கு சிறப்பு விருந்தினராக மாகாராஜா (எஸ்.வி.ராமதாஸ்) மற்றும் அவரது தங்கை இளைய ராணி (காஞ்சனா) வருகை தருகின்றனர். மகாராஜாவுக்கு மாலை போட்டு வரவேற்க யானை ஒன்று மகாராஜாவை நோக்கி செல்ல, விழாவின் அதிர்வேட்டுச் சத்தத்தில் யானை மிரண்டு யானைக்கு மதம் பிடித்து அங்கிருக்கும் பொருள்களை துவம்சம் செய்கிறது. கீழே தடுமாறி விழும் மகாராஜாவை மிதிக்கவும் வருகிறது. இதை கவனித்துக் கொண்டிருக்கும் முத்தையா வீரத்துடன் யானையுடன் போராடி மகாராஜாவின் உயிரைக் காப்பாற்றுகிறார்
கிராமத்து வீரன் முத்தையாவாக அளவெடுத்து தைத்தாற் போன்று அத்தனை பொருத்தம் இந்த வேடம் நடிகர் திலகத்திற்கு. சும்மா புகுந்து விளையாடுவார். வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு தடாலெனப் பாய்ந்து மகாராஜாவைக் காப்பாற்றி பின் யானையுடன் மோதுவார். யானையின் தந்தங்களைப் பிடித்து வலது பக்கமும், இடது பக்கமும் ஓடுவது படு துணிச்சல். அதே போல் யானை இவரை தூக்கிக் கிடாசும் போது அங்கு போடப் பட்டிருக்கும் நாற்காலிகளின் மேல் அப்படியே ஓடி விழுவது திக்...திக்....ஒவ்வொரு தரமும் யானை தூக்கி இவரைப் போடும் போது விழுகையில் இவர் கண்களில் தெரியும் மிரட்சியைப் பாருங்கள். யானை கீழே விழுந்து கிடக்கும் தன்னருகே வந்தவுடன் புயல் போல அந்த இடத்தை விட்டு தாவி உருள்வது டாப். மறுபடி நாற்காலிகள் மீது தூக்கி வீசப்பட்டவுடன் ஒரு நாற்காலியைத் தூக்கி வீசியபடி விருட்டென எழுந்திருப்பார். பின் யானையின் துதிக்கையை பிடித்தபடி சுற்றும்போது பந்தல் காலில் மோதிக் கொள்வார். பின் யானை மீதேறி அதன் தலைப் பகுத்தியைக் கைகளால் குத்தியபடியே யானையை அடக்கி படுக்க வைப்பார்.
நிஜமாகவே மெய் சிலிர்க்கும் காட்சி. அசாத்திய துணிச்சலுடன் மிக தத்ரூபமாக நடிகர் திலகம் உயிரைப் பணயம் வைத்து செய்திருப்பார்.
அடுத்து காளையுடன் மோதும் காட்சி
http://i812.photobucket.com/albums/z...ps4d4e28f5.jpg
மிருகங்களை வைத்து ஷோ நடத்துபவர்கள் வைக்கும் காளை அடக்கும் போட்டியில் முத்தையன் இளையராணியுடன் கலந்து கொள்கிறார். அடங்காத முரட்டுக் காளையையும் அடக்கிக் காட்டுவதாக ஷோ நடத்துபவர்களிடம் சவால் விட்டு காளையுடன் மோதத் தயாராகிறார். முத்தையனைக் கொல்ல காளையின் கொம்பிலே வில்லனால் விஷம் தடவப் படுகிறது. இதைக் கேள்விப்பட்ட முத்தையன் மனைவியும், மகன் மாணிக்கமும் பதறி அடித்து ஓடி வருகிறார்கள். தந்தையை ஆபத்திலிருந்து காப்பாற்ற மகன் முதலில் காளையுடன் மோதித் தோற்கிறான். பின் முத்தையன் களத்தில் இறங்கி அந்த முரட்டுக் காளையை அடக்கி வெற்றி கொள்கிறான்.
மகன் சிவக்குமார் காளையுடன் மோதி அடிபட்டுக் கிடக்கையில் பதறி ஓடி வந்து நடிகர் திலகம் திமிர்ப் பிடித்த காளையுடன் மோதுவார். (சிவக்குமார் மோதுவதற்கு முன்னால் காளையுடன் மோத தயார் நிலையில் இவர் ரெடியாகும் அழகே அழகு!) மாட்டின் இரு கொம்புகளையும் பிடித்து சுற்றி ஓடி வருவது, மாடு முட்டியவுடன் தூரப் போய் விழுந்து அதே வேகத்தில் எழுந்திருப்பது என்று இதிலும் நிறைய வீர சாகசங்கள் புரிவார் நடிகர் திலகம்.
ஒருமுறை காளை இவரை முட்டி மோதியவுடன் சுற்றியிருக்கும் தகரத் தடுப்புகளின் மீது போய் விழுந்து அப்படியே சுவற்றில் அடித்த பந்து போலத் திரும்புவார். உண்மையாலுமே நெஞ்சை உறைய வைக்கும் காட்சி இது.
உச்சக்கட்ட காட்சி ஒன்று. டூப்பே இல்லாமல் மாட்டின் கொம்புகளைப் பிடித்துத் தொங்கியவாறு யாரும் எதிர்பாராவகையில் சட்டென ஜம்ப் செய்து தன் இரு கால்களாலும் மாட்டின் முகப் பகுதியை இறுக்கிப் பிடித்தபடி செய்யும் ரத்தத்தை உறைய வைக்கும் ஆக்ஷன். (மேலே உள்ள ஸ்டில்லைப் பாருங்கள்). அப்பப்பா! என்ன ஒரு துணிச்சல்! வேகம்! பார்ப்பவர்களின் சப்த நாடியும் ஒடுங்கிப் போகும். நீங்களே பாருங்கள். நம் விளையாட்டுப் பிள்ளையின் வீர தீரச் செயல்களை.
நன்றி!
முதன்முறையாக இணையத்தில் தரவேற்றி உங்களுக்காக
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=uE25fCTYP7g
அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்
கார்த்திக் சார் ,
தங்கள் அத்தனை பதிவுகளும் சுவாரஸ்யம்தான். என்னை இந்த மையத்திற்கு இழுத்து ஈர்த்தவை.