சென்னை மகாலட்சுமி தியேட்டரில் 2-வது வாரமாக ஓடும் எம்.ஜி.ஆரின் ஒளிவிளக்கு
எம்.ஜி.ஆர். படங்கள் சென்னை தியேட்டர்களில் மீண்டும் திரையிடப்பட்டு வசூல் குவித்து வருகிறது. ஏற்கனவே அடிமைப் பெண், நினைத்ததை முடிப்பவன், உலகம் சுற்றும் வாலிபன், நாடோடி மன்னன் உள்ளிட்ட பல படங்கள் தொடர்ந்து திரையிடப்பட்டன. அப்படங்கள் அதிக வசூல் ஈட்டியது.
தற்போது ரிலீசாகும் புதுப்படங்களை மிஞ்சி லாபம் பார்த்தது. தற்போது ஒளிவிளக்கு படம் மகாலட்சுமி தியேட்டரில் திரையிடப்பட்டு 2-வது வாரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. இது எம்.ஜி.ஆரின் 100-வது படமாகும்.
இந்த படத்தில் ஆண்டவனே உன் பாதங்களை, தைரியமாக சொல் நீ மனிதன்தானா, நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங், ருக்குமணியே பப்பரப்பா போன்ற இனிமையான பாடல்கள் இடம்பெற்றுள்ளன. எம்.ஜி.ஆர். உடல் நலமின்றி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது தமிழகம் முழுவதும் ஆண்டவனே உன் பாதங்களை என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது.
ஒளிவிளக்கு படம் தினமும் 3 காட்சிகள் திரையிடப்பட்டு உள்ளது. இப்படம் தொடர்ந்து ஓடுவதையொட்டி தியேட்டர் முன்னால் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் பட்டாசு வெடித்தனர். இனிப்பும் வழங்கினார்கள். எம்.ஜி.ஆர். பேனருக்கு பால் அபிஷேகமும் செய்தனர். ஒரு வாரத்தில் ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 400 வசூல் ஈட்டியுள்ளது.
Courtesy malaimalar 14-10.2012