-
விருதோ, கவுரவமோ அதற்கு முற்றிலும் தகுதியானவர்களை சென்று அடையும் போது நம்முடைய மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. தமிழில் நாடகம், சினிமா மற்றும் தொலைக்காட்சிகளில், தன் தனித்தன்மையான நடிப்புத் திறமையால், இந்தியாவிலும், வெளிநாடுகளில் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற நடிகர் ஏ.ஆர்.எஸ்., என்று அறியப்படும் ஏ.ஆர்.ஸ்ரீநிவாசன்,
தமிழ் நாடகத்துறையில், அளப்பரிய சாதனைகள் புரிந்த பம்மல் சம்பந்த முதலியார் (1959), டி.கே. சண்முகம் (1962), எஸ்.வி.சகஸ்ரநாமம் (1968), பூர்ணம் விஸ்வநாதன் (1992) போன்ற மாமேதைகள் வரிசையில், 20 நீண்ட ஆண்டுகளுக்குப் பின், ஏ.ஆர்.எஸ்சுக்கு, இந்தியாவின் மிக உயரிய விருதான சங்கீத நாடக அகாடமி விருது வழங்கப்பட்டது; இது, தமிழ் நாடக மேடைக்கு கிடைத்த கவுரவம். 2011ம் ஆண்டுக்கான, இந்த விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, அக்., 9, 2012ல் ராஷ்ட்ரபதி பவனில் வழங்கினார்.
'நான் எந்த நாடகத்தையுமே முழுமையாகப் பார்த்ததில்லை. நான் முழுவதுமாக பார்த்த முதல் நாடகம் இது தான்...' என்று, 'இம்பர்பெக்ட் மர்டர்' என்ற நாடகத்தை குறிப்பிட்டு பாராட்டினார் சிவாஜி. இந்நாடகத்தில் எழுத்தாளர் விட்டல் என்ற பாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து, அனைவரையும் கவர்ந்தவர் ஏ.ஆர்எஸ்.,
'போலீஸ் அதிகாரி என்றாலே தொப்பை, முறுக்கி விடப்பட்ட மீசை, பெல்ட் மற்றும் பூட்ஸ் என்ற அடையாளங்களை உடைத்தவர்.
'உங்கள் நடிப்பு நாடகத்திற்கு நாடகம் வித்தியாசமாகவும், புதுமையாகவும் இருக்கிறது...' என்று பிரபல இயக்குனர், ஏ.சி.திருலோக் சுந்தர் இவரைப் பாராட்டியுள்ளார்.
'இப்போதெல்லாம் வேலைப்பளுவில், முன்போல உங்கள் நாடகங்களை பார்த்து ரசிக்க முடியாமல் போய்விட்டது...' என்று, அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., குறிப்பிடும் அளவுக்கு, சிறந்த நாடகங்களை இயக்கி நடித்தவர் ஏ.ஆர்.எஸ்.,
இப்படி பலரது பாராட்டுதல்களை பெற்றுள்ள ஏ.ஆர்.எஸ்., கல்லூரி படிப்பை முடித்த பின், ( பி.எஸ்சி., பி.எல்.,) பிலிப்ஸ் நிறுவனத்தில் விற்பனை அதிகாரியாக பணியாற்றினார். அப்போது, அலுவலக, மனமகிழ் மன்ற கிளப்பில் நடைபெற்ற நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தவர், முதன் முதலில், 1964ல் பூர்ணம் விஸ்வநாதன் எழுதிய, 'அண்டர் செகரட்ரி' என்ற நாடகத்தில் நடித்தார். அந்த நாடகத்தில் ஒய்.ஜி.பி., - சோ மற்றும் சந்தியா (ஜெ., தாயார்) நடித்தனர். ஏ.ஆர்.எஸ்., போன்றே முதல்முறையாக அந்நாடகத்தில், நடிக்க வந்த மற்றொரு பிரபலம் ஜெயலலிதா.
இந்நாடக அனுபவம் குறித்து ஏ.ஆர்.எஸ்., கூறும் போது, 'அன்டர் செகரட்டரி' நாடகம் முடிந்ததும், கலைஞர்களை பாராட்ட மேடைக்கு வந்தார் எம்.ஜி.ஆர்., அப்போது, நான், 'மேக் - அப்' கலைத்துக் கொண்டிருந்தேன். எம்.ஜி.ஆர்., உங்களை கூப்பிடுகிறார் என்று சொன்னதும், அவசரமாக, 'மேக் - அப்' பை கலைத்துவிட்டு, ஒரு வித பயத்தோடு ஓடினேன். என் கைகளை கெட்டியாகப் பிடித்து, 'எனக்கு கே.பி.கேசவன் என்ற ஒரு நடிகர், குருவாக இருந்தார்; முழு சூட் போட்டால் அவருக்கு அவ்வளவு அழகாக பொருத்தமாக இருக்கும். இன்று உங்களைப் பார்த்ததும் அவர் ஞாபகம் வந்து விட்டது. முழு சூட் உங்களுக்கு, 'பர்பெக்டாக' பொருந்துகிறது...'' என்று கூறிய போது, எனக்குள் உற்சாக மின்சாரம் பாய்ந்த மாதிரி இருந்தது. அப்போதிருந்து, எந்த விழாக்களில் பார்த்தாலும் என் பேர் சொல்லி அழைத்து பேசுவார் எம்.ஜி.ஆர்., அப்போதெல்லாம் பத்மஸ்ரீ விருது பெற்றது போல் அப்படி ஒரு மகிழ்ச்சியும், பெருமையும் ஏற்படும்...' என்று கூறினார் ஏ.ஆர்.எஸ்.,
courtesy dinamalar varamalar
-
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
கோயில்=கடவுள்,தெய்வம்,இறைவன்,ஆண்டவன்= எம்.ஜி.ஆர்.
கோவில்-சொல் வரிசையில் வரும் பாடல்.
உலகே உன் கோவில் ஒன்றே உன் வேதம்
http://www.youtube.com/watch?v=dryGzA_zOzk
-
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
கோயில்=கடவுள்,தெய்வம்,இறைவன்,ஆண்டவன்= எம்.ஜி.ஆர்.
கோவில் தெய்வம் -சொல் வரிசையில் வரும் பாடல்.
உள்ளம் ஒரு கோவில் உன் உருவம் அதில் தெய்வம்.
http://www.youtube.com/watch?v=TieQtdRcRQE
-
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
கோயில்=கடவுள்,தெய்வம்,இறைவன்,ஆண்டவன்= எம்.ஜி.ஆர்.
இறைவன்-ஆண்டவனே -சொல் வரிசையில் வரும் பாடல்.
இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு
தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளி விளக்கு
ஆண்டவனே உன் பாதங்களை நான்கண்ணீரில் நீராட்டினேன்
http://www.youtube.com/watch?v=FevCCrPz7Nc
-
-
-
தேக்கு மரம் உடலை தந்தது சின்ன யானை நடையை தந்தது
பூக்கலெல்லாம் சிரிப்பை தந்தது பொன் அல்லவோ {என் தலைவனுக்கு} நிறத்தை தந்தது
என்று கவிஞர்களின் கற்பனைக்கு எட்டாத கந்தர்வ பேரழகன்
-
http://i1170.photobucket.com/albums/...psd654ef2e.jpg
வடபழனி ஹோட்டல் சரவணா பவனில், கிருபானந்த வாரியார் அவர்கள் அனைத்து தலைவர்களும் இருக்கும் படங்கள் வைதிருகிறர்கள். அனைவரும் அவரை வணங்குவதை
காணலாம். புரட்சி தலைவருடன் அவர் இருக்கும் படத்தை உற்றுநோக்கினால், வாரியார் அவர்கள் M.G.R. அவர்களை வணங்குவார்,
அது கூடாது என்பதுபோல் M.G.R. அவர்கள் வாரியாரின் கைகளை பிடித்திருப்பார்
-
மக்கள் திலகத்தின் நெருங்கிய நண்பரும் படதயாரிப்பாளருமான சின்னப்பா தேவரின் நினைவு நாள் இன்று .
http://i60.tinypic.com/9b8viw.jpg
தாய்க்கு பின் தாரம் முதல் நல்ல நேரம் வரை 16 படங்கள் தயாரித்த பெருமை பெற்றவர் தேவர் .
-
கலைவேந்தன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் அறக்கட்டளை ,திரு .வி.க.நகர் பகுதி (சென்னை ) செயலாளர் திரு. பி. கோதண்டராமன் அவர்களின் திருமணம், இன்று மாலை
சென்னை புளியந்தோப்பில் நடைபெற உள்ளது.
பல்வேறு எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளைச் சார்ந்தவர்கள்
கலந்து கொள்ள உள்ளனர்.
அதன் அழைப்பிதழின் தோற்றம் நமது நண்பர்களின் பார்வைக்கு.
http://i59.tinypic.com/29du3w8.jpg
-
-
-
-
-
-
-
07-09-1967 அன்று வெளியான, மக்கள் திலகத்தின் "காவல் காரன்" ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் முன் அட்டை தோற்றம் :
http://i61.tinypic.com/acc1o6.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
07-09-1967 அன்று வெளியான, மக்கள் திலகத்தின் "காவல் காரன்" ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் பின் அட்டை தோற்றம் :
http://i61.tinypic.com/2rww61i.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
நம் பொன்மனசெம்மலை கதாநாயகனாக கொண்டு தனது தேவர் பிலிம்ஸ் பானரில் 16 படங்களை தயாரித்தவர் சாண்டோ சின்னப்பா தேவர். அன்னாரின் நினைவு நாளான இன்று அவரை போற்றி வணங்கிடுவோம்.
அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கு கொண்ட முதல்வர் புரட்சித்தலைவர்.
http://i59.tinypic.com/2reihp1.jpg
குறிப்பு : மற்ற நடிகர்களை வைத்து படங்கள் தயாரித்த போது, " தண்டாயுதபாணி பிலிம்ஸ் " என்ற பெயரைத்தான் உபயோகப்படுத்தினார் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. "முருகா" என்றும் "ஆண்டவனே" என்றும் நமது மக்கள் திலகத்தை, கடவுளாக பாவித்து, அழைத்தவர் சின்னப்பா தேவர். நமது எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்களும், தான் கதாநாயகனாக நடித்த முதல் படத்திலேயே சின்னப்பா தேவர் அவர்களுக்கு நடிக்க சிபாரிசு செய்தார். ஆழாமான நட்பின் அடையாளமாக திகழ்ந்தது இந்த இருவரின் (புரட்சித் தலைவர் முதல்வரான பின்பும்) கடைசி வரையிலான நட்பு.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
Quote:
Originally Posted by
Yukesh Babu
ONE OF THE RARE STILLS. THANK YOU Mr. YUKESH BABU.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
வசூல் சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். அவர்கள், குண்டடி பட்ட பிறகு, தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று கோடிக்கணக்கான ரசிக பெருமக்கள் "காவல் காரன்' வெற்றி மூலம் உறுதி செய்தனர்.
"காவல் காரன்" பற்றிய அபூர்வ செய்தி குறிப்புக்களையும், அருமையான நிழற்படங்களையும் பதிவிட்ட சகோதரர் திரு. ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றி !
http://i57.tinypic.com/whfwhl.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
-
இன்று தேசிய கண்தான தினம்
===நண்பர்களே கண்தானம் செய்வீர்=== —
http://i62.tinypic.com/2lw57gw.jpg
-
பாராட்டுக்கு நன்றி திரு. ஜெய்சங்கர். தங்களின் தாயார் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்.
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
காவல்காரன் records
http://i59.tinypic.com/2mch9t.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
-
http://i62.tinypic.com/34hti5v.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
-
-
-
-
“எனது தந்தை கலைவாணர் மறைந்த பிறகு, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் எங்களின் மொத்தக் குடும்பத்தையும் தத்தெடுத்துக் கொண்டு, எங்கள் எல்லோரையும் வளர்த்து ஆளாக்கினார். மைசூர் என்ஜினியரிங் கல்லூரியில் எனக்குப்பணம் கட்டிப் படிக்க வைத்ததும் அவர்தான்.
கல்லூரியில் சேர்வதற்கு முதல் நாள் என்னை, பொன்மனச் செம்மல் தன்னுடைய ராமாவரம் தோட்ட இல்லத்திற்கு அழைத்தார். சென்றேன்.
என்னிடம், ‘உங்க அப்பா கலைவாணர் எவ்வளவு சம்பாதிச்சார்னு தெரியுமா?’ என்றார்.
‘தெரியாது’ என்றேன்.
சினிமாவுல மட்டுமே கோடிக்கணக்கிலே சம்பாதிச்சார். அதுபோல – நாடகம், வில்லுப்பாட்டுன்னு நிறைய சம்பாதிச்சார். இப்ப அவர் சம்பாதிச்ச சொத்து என்ன இருக்கு?
‘ஒன்றுமே இல்லை!’
‘அதனாலே செல்வம் அழியக் கூடியது. கல்வி ஒண்ணுதான் என்றைக்குமே அழியாதது. அந்தக் கல்விச் செல்வத்தை நான் உனக்குக் கொடுத்திருக்கேன். நல்லா படிச்சு முன்னுக்கு வரணும்!’
என்று ஒரு தந்தை மகனுக்கு உபதேசிப்பதுபோல் அந்தப் பாசமிக்க தலைவன் எனக்கு உபதேசித்துப் படிக்க அனுப்பினார்.
அவர் காட்டிய வழியில், அவர் வியர்வையில் உருவாகிய பணத்தில் படித்து இன்று நான் நல்லதொரு பதவியில் இருக்கிறேன். அந்த மனித தெய்வத்தால் எங்களது மொத்தக் குடும்பமுமே சந்தோஷத்தில் இருக்கிறது. "
- மக்கள்திலகம் பற்றி அண்ணன் நல்லதம்பி என்.எஸ்.கே.
## அண்ணன் Nallathambi Nsk அவர்களின் திருமண நாள்
இன்று . அண்ணனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும்
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் ! ( Photo from : Nallathambi Nsk Album )
http://i1170.photobucket.com/albums/...psf12017aa.jpg
-
-
-
-
வணக்கம் அன்பு நெஞ்சங்களே!
வரலாற்றிலே இடம் பிடித்த புரட்சித் தலைவரின், சாதனைத் திரைப்படமாக 1965ம் ஆண்டிலே வெளிவந்த "ஆயிரத்தில் ஒருவன்" நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் திரையில் வெளியிடப்பட்டு, 175 நாட்களைக் கடந்து மீண்டும் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது.
இந்த 175 நாள் வெள்ளி விழா நிகழ்வின் தொகுப்பு, நேற்று ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதை பார்த்து மகிழ்ந்தேன் என்று சொல்வதைவிட, அங்கே உரையாற்றிய நகைச்சுவை நடிகர் விவேக் புரட்சித் தலைவரைப்பற்றிச் சொன்ன சில புதிய தகவல்கள் என்னை மெய் சிலிர்க்க வைத்தது மட்டுமல்ல, கண் கலங்கவும் வைத்தது என்றால் அது மிகையாகாது.
விவேக் அவர்கள் நல்ல நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல, ஒரு நல்ல (மிமிக்ரி) பலகுரல் மன்னன் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். திரைப்படங்களிலே அநேகமாக அவர் எல்லா முன்னணி நடிகர்களைப் போலவும் மிமிக்ரி செய்து நம்மை சிரிக்க வைப்பார். ஆனால் இதுவரையிலும் அவர் புரட்சித் தலைவரைப் போல ஒரு படத்திலாவது மிமிக்ரி செய்யவில்லையே என நானும் சிந்தித்ததுண்டு.
அதற்குக் காரணம் நேற்றைய அவரின் உணர்ச்சிக் கொந்தளிப்பான புரட்சித் தலைவர் பற்றிய உரையைக் கேட்டபோதுதான் புரிந்தது. அவரின் உள்ளத்தை ஆக்கிரமித்து வாழும் புரட்சித் தலைவரை அவர் எப்படி கிண்டல் செய்ய முடியும்? விவேக் அவர்களின் உரை அவரது உள்ளத்தின் அடித்தளத்திலே இருந்து எழுந்த உணர்வுகளின் உச்ச கட்டமாகவே இருந்தது. உங்களுக்கு என் வணக்கம் விவேக் அவர்களே!!!
பின்பும் உரையாற்றிய புரட்சித்தலைவரின் ஒப்பனைக் கலைஞராக இருந்த பீதாம்பரம் அவர்களின் மகன் இன்றைய முன்னணி இயக்குநர் பி. வாசு அவர்கள் மக்கள் திலகத்தை நன்றியோடு நினைவு கூர்ந்த விதம், சத்யராஜ் அவர்கள் மக்கள் திலகத்தின் சிறப்பியல்புகளைக் கூறிய விதம், சரத்குமார் அவர்களும் இதையே சொன்ன விதம், வசனகர்த்தா சண்முகம், மெல்லிசை மன்னர், பி. சுசீலா அம்மா, திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் அவர்கள், கவியரசுவின் புதல்வர் காந்தி கண்ணதாசன் மற்றும் பலர் ஆற்றிய உரைகளெல்லாமே புரட்சித் தலைவரின் சிறப்பியல்புகளுக்குக் கட்டியம் கூறுவதாகவே அமைந்திருந்தன.
சுமார் ஒன்றரை மணி நேரம் போனதே தெரியாமல் ஆழ்ந்து ரசித்துக் கொண்டிருந்தேன். ஆமாம், எப்போதுமே சாதனைகளுக்கு மட்டும் சொந்தக்காரர் அல்லாமல், பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு வாழ்க்கை நெறியை தன் படங்களாலும், பாடல்களாலும், வாழ்க்கையாலும் அறிவுறுத்திய புரட்சித் தலைவரின் புகழ், நேற்றைய நிகழ்வில் உரையாற்றிய அனைவரும் கூறியது போல தலைமுறைகள் எல்லாவற்றையும் கடந்து நிற்கத்தான் போகிறது. விவேக் அவர்கள் கூறியது போல, அந்தப் புகழும், சாதனையும் "ஒரு எம்.ஜி.ஆருக்கு மட்டும்தான், வேறு எந்த நடிகருக்கோ, கலைஞருக்கோ கிடைக்கப் போவதில்லை".
நிகழ்வில் பங்கு கொண்ட அனைத்துக் கலைஞர்களுக்கும், அற்புதமான இந்த நிகழ்வை ஒளிபரப்பிய ஜெயா தொலைக்காட்சிக்கும் மனமார்ந்த நன்றியும், வணக்கமும்
courtesy net
-
மக்கள் திலகத்தின் நம்பிக்கையான விசுவாசமானவர் திரு ஆர் .எம் .வீரப்பன் அவர்களின் பிறந்த நாள் இன்று .
1956ல் துவங்கிய நாடோடி மன்னன் படம் தயாரிப்பு முதல் 1977 வரை மக்கள் திலகத்தின் மேலாளராக பணி புரிந்து
எம்ஜிஆரின் வெற்றிகளுக்கு பக்க பலமாக விளங்கியவர் .
1963ல் சத்யா மூவிஸ் என்ற நிறுவனத்தை துவக்கி 6 வெற்றி படங்களை தயாரித்தவர் ..
தெய்வத்தாய் - 1964
நான் ஆணையிட்டால் - 1966
காவல்காரன் - 1967
கண்ணன் என் காதலன் - 1968
ரிக்ஷாக்காரன் - 1971
இதயக்கனி - 1975
அரசியல் உலகில் அவருடைய பங்கும் மகத்தானது . மக்கள் திலகம் அவர்களின் அரசியல் - திரை உலகம் இரண்டிலும் பல வெற்றிகளுக்கு திரு ஆர்.எம் .வீ அவர்கள் படை தளபதியாக விளங்கினார் . அவர் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துவோம்
.
-
-
திரைப்பட விநியோகஸ்தர் மற்றும் புரட்சி தலைவரின் பக்தர் ,
பொன்மனச்செம்மல் ,எம் .ஜி. ஆர்.நற்பணி சங்க ஆலோசகருமான திரு. நீலகண்டன் அவர்களின் மகளுக்கும் ,
திரு.ரமேஷ் (பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கத்தின் நிர்வாகி )அவர்களின் சித்தப்பா மகனுக்கும் நாளை (10/09/14)சென்னை கொருக்குபேட்டையில் நடைபெற உள்ளது. இன்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பெருந்திரளான புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
திருமண அழைப்பிதழின் தோற்றம், மற்றும் சுவரொட்டி
ஆகியன நமது நண்பர்களின் பார்வைக்கு.
http://i61.tinypic.com/8vrxnc.jpg
-
-
-
இந்த வார தமிழக அரசியல் இதழில் பிரசுரம் ஆன செய்தி.
http://i60.tinypic.com/2cgj3as.jpg