Is this Kalai arasi (after that skylab burns)?
R
Printable View
இனிய நண்பர் திரு ரவி கிரண் சூர்யா
நீங்கள் பார்த்த அந்த ஸ்டில்
நாம் படத்தில் இடம்பெற்ற மக்கள் திலகத்தின் ஸ்டில் .
நண்பர் திரு. ஆர்.கே.எஸ். அவர்களுக்கு,
இந்தக் காட்சி தலைவர் நடித்து 1953ம் ஆண்டு வெளியான ‘நாம்’ திரைப்படத்தில் இடம் பெற்ற காட்சி. முற்போக்கு எண்ணம் கொண்ட இளைஞராகவும் குத்துச் சண்டை வீரராகவும் தலைவர் அருமையாக நடித்திருப்பார். அவரது வீட்டுக்கு வில்லன் வீரப்பா தீ வைத்ததால் முகம் கருகி பாதிக்கப்படும். அதுவே இந்தக் காட்சி. இப்படத்தில் தலைவருடன் ஜானகி அம்மையார் நடித்திருக்கிறார். வசனம் திரு.கருணாநிதி.
உங்களிடம் நட்புணர்வோடு ஒரு கோரிக்கை. தமிழர்களுக்கு அறிவையும் தன்மானத்தையும் ஊட்டி தலைநிமிரச் செய்தவரும் உங்கள் அபிமான நடிகரான திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு ‘சிவாஜி’ என்ற பட்டத்தை வழங்கியவருமான அய்யா பெரியார் அவர்களை, ‘திராவிடர் கழக உரிமையாளர்’ என்றும் புதுமுக நடிகரிடம் சரண் என்றும் கூறி கொச்சைப்படுத்தாதீர்கள் என்று அன்போடு கோருகிறேன். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
என் மனதை கவர்ந்த நடிகர் - எம்ஜிஆர்
எத்தனையோ பல மொழி திரைப்படங்களை பார்த்தாலும் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் எம்ஜிஆர் தான் என்பதை பெருமையுடன் கூறுகிறேன் . எம்ஜிஆரின் ஆரம்ப கால படங்களில் அவரின் வசீகர தோற்றம் ,வெண்கல குரல் ,
வீர தீர விளையாட்டுக்கள் நிறைந்த சாகசங்கள் ,என்று ராஜா -காலத்து கதைகளாக இருந்தது . ராஜகுமாரி - மருதநாட்டு இளவரசி -மந்திரிகுமாரி - சர்வதிகாரி - மர்மயோகி -குலேபகாவலி - அலிபாபாவும் 40 திருடர்களும் - மதுரை வீரன்
புதுமை பித்தன் - மகாதேவி - சக்கரவர்த்தி திருமகள் - நாடோடி மன்னன் - மன்னாதி மன்னன் - அரசிளங்குமரி -விக்கிரமாதித்தன் - காஞ்சித்தலைவன் போன்ற படங்களில் எம்ஜிஆர் அவர்கள் அரச உடையில் ஒரு நிஜ மன்னராகவே
தோற்றமளித்தார் .
எம்ஜிஆர் ஒரு சிறந்த நடிகர் என்பதை எல்லா படங்களிலும் காணலாம் . எம்ஜிஆர் ஒரு சகலாகலாவல்லவர் என்பதை
நாடோடிமன்னன் - அடிமைப்பெண் - உலகம் சுற்றும் வாலிபன் படங்கள நிரூபித்தது .
என் தங்கை - மலைக்கள்ளன் - தாய்க்கு பின் தாரம் - நல்லவன் வாழ்வான் - பாசம் - பெற்றால்தான் பிள்ளையா படங்களில்
அவரின் சோக நடிப்பு பிரமாதமாக பேசப்பட்டது .
பொழுது போக்கு படங்கள் என்று பார்த்தால் எங்க வீட்டு பிள்ளை - ஆயிரத்தில் ஒருவன் - குடியிருந்த கோயில் -மாட்டுக்காரவேலன் - ரிக்ஷாக்காரன் - உரிமைக்குரல் - இதயக்கனி போன்ற படங்களில் எம்ஜிஆரின் நடிப்பும் காட்சிகளும்
பாடல்களும் சிறப்பாக இருந்தது . சண்டை பிரியர்களுக்கு கேட்கவே வேண்டாம் .எல்லாவிதமான சண்டை காட்சிகளிலும் எம்ஜிஆரின் ஸ்டைல் தனி சிறப்பு இருந்தது.
எம்ஜிஆர் பட பாடல்கள் - தேனிசை விருந்து . காதல் பாடல் - அறிவுரை தத்துவ பாடல் - சோக பாடல் என்று இவரின் பாடல்கள் என்றுமே தோற்றதில்லை .எம்ஜிஆர் ஒரு புதுமை விரும்பி என்பதை அவரின் பல படங்களில்அணிந்திருந்த
உடைகளே சாட்சி .மாறு வேட காட்சிகளில் எம்ஜிஆரை போல் வேறு எந்த நடிகரும் இது வரை நடித்ததில்லை .
பெரும்பாலான படங்களில் எம்ஜிஆர் ஓடி வரும் அழகே தனி அழகு . சண்டை காட்சிகளில் அவர் அடிக்கும் டைவ்
எதிரிகளை பந்தாடும் பாங்கு ,சிரித்து கொண்டே சண்டை போடும் முக பாவம் இன்னும் சொல்லி கொண்டே போகலாம் .
காதல் காட்சிகளில் அவரின் புன்னகை தோற்றம் , காந்த விழிகள் , நம்மை மயக்கி விடும் . எம்ஜிஆரின் காதல் பாடல்கள்
எல்லாமே படு சூப்பர் . எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்தது 115 படங்கள் .குறைந்தது 100 படங்கள் இன்று பார்த்தாலும்
மனதிற்கு நிறைவாகவும் , தெம்பாகவும் , புத்துணர்ச்சியும் அளிக்கிறது .
இப்படி பல பெருமைகளை திரை உலகிற்கு வழங்கிய எம்ஜிஆரை நான் என் மானசீக குருவாக ஏற்று கொண்டது என் வாழ்வில் கிடைத்த மாபெரும் பாக்கியம் .
கலைவேந்தன் சார்
எங்கே நேற்று நீங்கள் திரிக்கு வரவில்லை ? மக்கள் திலகத்தின் ''பரிசு'' விமர்சனம் எதிர்பார்த்தேன் .ஏமாற்றம் .
பெரியார் - அண்ணா - இருவரின் கொள்கைகளுக்கு நம் மக்கள் திலகம் உயிரூட்டினாரே - மறக்க முடியுமா /
திராவிடம் என்ற சொல்லிற்கும் - திராவிட வரலாற்றை புரியாதவர்களும் என்ன சொல்லியும் புரிய வைக்க
முடியாது .எம்ஜிஆர் என்றால் ஒரு சிலருக்கு மலையாளி என்று பிரித்தாளும் பேதைமை ஒன்றுதான் தெரியும் .
.
அருமை நண்பர் திரு கலைவேந்தன் அவர்களுக்கு,
திரைப்பட தகவலுக்கு நன்றி. Excellent make up & nice effort & tolerance !
தாங்கள் என் எழுத்துக்களை தவறாக புரிந்துகொண்டீர்கள் என்று நினைகிறேன்.
திராவிட கழக நிறுவனர் evr அவர்கள் என்பதை நான் கொச்சை படுத்த சொல்லவில்லை. உண்மை அதுதானே. அதை ஆங்கிலத்தில் எழுதி இருந்தால் founder என்று எழுதியிருப்பேன். அதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.
அதே போல நடிகர் திலகம் அவர்கள் ஒரு புதுமுக நடிகர்தானே பட்டம் பெற்ற சமயத்தில். அவர் நடிப்பில் மிகவும் ஈர்க்கப்பட்டு, அவர் பேசிய வசனங்கள் அவரது மனதை தொட்டதால் அவர் கலைக்கு சரண் அடைந்து, அவருக்கு "சிவாஜி" என்ற பட்டம் கொடுத்தார்.
பெரியாரே கணேசன் நடிப்புல "surrender" ஆயிடாருப்பா ! என்று அந்த காலத்திலேயும் பலர் நிச்சயமாக பேசியிருப்பர்.
நீங்கள் குறிப்பிட்டதில் ஒரு சிறிய மாற்றம் மட்டும் தான் செய்யவேண்டியது.
அதாவது தாங்கள் எழுதியதை போல தமிழர்களுக்கு அறிவோ தன்மானமோ எந்த காலத்திலும் இல்லாமல் இல்லை.. நிச்சயம் தமிழர்களுக்கு அறிவும் இருந்திருக்கிறது, தன்மானமும் இருந்திருக்கிறது. ஆகையால் பெரியார் வந்துதான் அந்த இரெண்டையும் தமிழர்களுக்கு ஓடியிருக்கவேண்டும் என்பதில்லை.
அதற்காக அவர் முற்றிலும் அதை செய்யவில்லை என்று கூறவில்லை. செய்தார் நிச்சயமாக செய்தார்..தமக்கு தாமே ஒரு நம்பிக்கை இல்லாமல், தைரியமில்லாமல், முன்னேறவேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் நாம் பிற்படுத்தபட்டோர் என்ற inferiority complex மட்டுமே கொண்டிருந்த ஒரு குறிப்பிட்ட சதவிகித மக்களுக்கு, ஒரு குறிப்பிட்ட இனம் மற்றும் சமூகத்திற்கு எதிராக மட்டும் (அந்த சமூகம், இனத்தை தவிர இன்னும் பல சமூகம் மற்றும் இனம் அப்படி நடந்தாலும்) அப்படி ஒரு நல்ல காரியத்தை செய்தார். இல்லை என்று நான் மறுக்கவில்லை. நான் அவரை நிச்சயமாக கொச்சை படுத்தவில்லை கலைவேந்தன் சார்.
சில வேளைகளில் நாம் கூட சொல்வதுண்டு...அவன் பாட்டுக்கு நான் அடிமை.....இறைவா நான் உன் அடிமை....தலைவா..உனுக்கு நான் அடிமை என்று...இவை அன்பால், அந்த ஆளுமைக்கு கட்டுப்பட்டு நாம் கூறுவதாகும். அதற்காக நாம் அடிமையா என்ன ? அதே போல தான் சார். நடிகர் திலகம் அவர்களுடைய நடிப்புக்கு சரண் என்ற அர்த்தமாகும். வேறு எதுவும் இல்லை.
என்ன சார்...கலைஞர்களை கூத்தாடிகள் என்று அவர்கள் தொழிலை சொல்லி அழைத்த evr அவர்கள் வாயாலேயே..."சிவாஜி" என்ற பட்டத்தையும் ..."நடிகர் திலகம் விஞ்ஞான ரீதியான நடிகர்" என்று பாராட்டிய evr அவர்கள் போய் நீங்கள் கூறிய அர்த்தத்தில் உரைபேனா?...என்ன சார் ஒரு நிமிஷத்திலே இப்படி என்னை நினசிடீங்களே ..
Regards
rks
முரசு டிவியில் நேற்று மக்கள் திலகத்தின் வேட்டைக்காரன் ஒளிபரப்பானது .
இன்று சன் லைப் - தற்போது மக்கள் திலகத்தின் வேட்டைக்காரன் ஓடிகொண்டிருக்கிறது .
courtesy - net
தேர்தலில் சாதனை படைத்த எம்.ஜி.ஆர்
வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்- அதை
வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்
என்று தன் ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் தனது வெற்றியைக் காணிக்கையாக்கிய எம்ஜிஆரின் தேர்தல் வரலாறு சுவையானது.
முதன்முதலாக அவர் மக்களை கடந்த 1957 ல் திமுக கட்சியின் சார்பில் சந்தித்து வாக்கு சேகரித்தார். பின்னர் திமுக தலைவர் அண்ணா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க 1967ல் பரங்கிமலைத் தொகுதியில் வேட்பாளர் ஆனார்.
அந்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி அன்று மாலை ஐந்தரை மணியளவில் பிரச்சாரத்திற்குக் கிளம்பிகொண்டிருந்த எம்ஜிஆரைச் சந்தித்த எம்.ஆர். ராதா அவரைத் துப்பாக்கியால் சுட்டார். கழுத்தில் கட்டுப்போட்ட எம்ஜிஆரின் சுவரொட்டிகள் திமுகவுக்கு பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது.
1972ம் ஆண்டு திமுகவை விட்டு வெளியேற்றப்பட்ட எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கி ஆறே மாதத்தில் திண்டுக்கல் இடைத்தேர்தல் வந்தது. அங்கு நிறுத்தப்பட்ட மாயத்தேவர் அமோக வெற்றிபெற்றார்.
அதிமுகவை எதிர்த்து நின்று நான்கு முக்கிய கட்சிகளும் டெபாசிட்டை இழந்தன. எம்ஜிஆர் மத்திய அரசோடு இணக்கமாக இருக்க விரும்பி இந்திரா காங்கிரசுடன் கூட்டுச்சேரும்போது நாடாளுமன்றத்துக்கு 2:1 என்று தொகுதிப் பங்கீடு செய்வார்.
இதுவே சட்டமன்றத்தேர்தல் என்றால் தமக்கு இரண்டு பங்கும் கூட்டணிக் கட்சிக்கு ஒரு பங்கும் பிரித்துக்கொள்வார். தனது வெற்றி பெரும்பான்மையான வெற்றியாக அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்.
கிறிஸ்தவ மதம் வலுவாக இருக்கும் சாத்தான் குளத்திலும், இசுலாமியர் நின்றால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்று கருதப்படும் வாணியம்பாடியிலும் இந்து வேட்பாளரை நிறுத்தி தனது செல்வாக்கால் வெற்றிப்பெறச் செய்வார். 1985ல் அவர் அமெரிக்காவில் சிகிச்சைபெற்று வந்த நிலையிலும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினார்.
தொடர்ந்து மூன்றுமுறை சட்டசபை தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்று தன் ஆயுட்காலம் வரை முதலமைச்சராக இருந்தவர் இவர் ஒருவரேயாவார்.
Ayirathil Oruvan 190th victory day and Golden Jubilee of 1964 MGR movies was celebrated in Press Club today evening.
http://i125.photobucket.com/albums/p...psbf1e0191.jpg
Nagai Dharuman and Poovai Senguttuvan were chief guests of the function.
In the above image Nagai Dharuman giving a speech about our Puratchi Thalaivar.
Another information regarding the photo is from the collection of M.G.Chakrapani family.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த பரிசு திரைப்படம் 51 ஆண்டுகள் நிறைவு ஆனது
வெளியான தேதி : 15-11-1963
http://i61.tinypic.com/10nuckw.jpg
திரையில் கதாநாயகியைக் காதலிப்பதில் எம்.ஜி.ஆர் கைதேர்ந்தவராக இருந்தார் . பிறகு மெல்ல மெல்ல வளர்ந்து வாள் சண்டை குஸ்தி என ஆக்க்ஷன் ஹீரோவாக காட்சிகளில் அதிகம் ரசிக்கப்படும் நாயகனாக உருப்பெற்றார் - தமிழ் ஹிந்து தினசரி 14-11-14
சென்னை சரவணாவில் 14-11-14 முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் அலிபாபாவும் 40 திருடர்களும் தினசரி 3 காட்சிகள்
http://i62.tinypic.com/20h6cgp.jpg
பூவை செங்குட்டவன் - மக்கள் திலகத்திற்கு எழதிய பாடல் . புதிய பூமி படத்தில் இடம் பெற்ற நான் உங்கள் வீட்டு பிள்ளை . அருமையான பாடல் .
இன்று "இசைத்தென்றல்" ஸ்ரீ திருச்சி லோகனாதன் அவர்களின் 25 வது நினைவுதினம்.
http://www.youtube.com/watch?v=T32rZg8M4xs
http://i59.tinypic.com/2zscpzn.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Congrats Sailesh Sir. Though you are on OverSea..You See Over MGR Fans. Thank You.
Our Makkalthilgam MGR Thread's Majestic writer mr. Saileshbasu achieve 9ne another record 3001 postings register here... hats off sir...
குறுகிய காலத்துக்குள் 3000 பதிவுகள் வழங்கி சாதனை படைத்த சகோதரர் திரு. சைலேஷ் பாசு அவர்களுக்கு எனது இனிய வாழ்த்துக்கள்.
http://i61.tinypic.com/11sfo5c.jpg
http://i61.tinypic.com/15yf2ms.jpghttp://i58.tinypic.com/107a0b7.jpgதலைவரின் முதல் கதாநாயகி மாலதி மன்னரின் மனைவி. தலைவரின் கடைசி கதாநாயகி லதா மன்னரின் மகள். என்ன ஒரு ஒற்றுமை.
தலைவரின் kathaanayakikalhttp://i57.tinypic.com/65uxl3.jpghttp://i62.tinypic.com/2v9ysfl.jpg
சகோதரர் திரு. வேலூர் ராமமூர்த்தி அவர்களின் வெளிநாட்டு பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள் !
http://i57.tinypic.com/30skbb4.jpg
அன்பு நண்பர்களுக்கு
ஆனந்த விகடன் 2012 வார இதழில் வெளி வந்த செய்தி . எல்லோரும் படித்து இருப்பீர்கள் என்றாலும் இன்று நான் இதை மீண்டும் படித்தேன் வேறு ஒரு வலை பூவில். பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் பகிர்ந்து உள்ளேன்.
சிறுக்கி... சினிமா கிறுக்கி!
'நான் பிறந்து வளர்ந்தது கோயம்புத்தூர் - அன்னூர்பாளையம் தம்பி. சின்ன வயசுல இருந்தே சினிமா ஆசை. சினிமாவுக்குப் போறேன்னு யார் கிளம்பினாலும் 'நானும் வர்றேன்’னு கிளம்பிடு வேன். 'இந்தச் சிறுக்கி சரியான சினிமாக் கிறுக்கியா இருக்காளே’னு அக்கம்பக்கத்துல கிண்டல் பண்ணுவாங்க. அதுவும் எம்.ஜி.ஆர். படம்னா முதல் நாள் முதல் ஷோ பாத்துடுவேன். அந்தச் சமயத்தில்தான் எனக்குக் கல்யாணம் நடந்துச்சு. தயாரிப்பாளர் தேவர் எங்க வூட்டுக்காரருக்கு ஃப்ரெண்டு. அப்ப தேவரு எம்.ஜி.ஆரை வெச்சு 'விவசாயி’ படம் எடுத்துக்கிட்டு இருந்தாரு. கோவையில் ஷூட்டிங். எம்.ஜி.ஆருடன் டான்ஸ் ஆட பொண்ணுங்களைத் தேடிட்டு இருந்தாங்க. நான் அப்ப செம டான்ஸ் போடுவேன். என் சினிமா ஆசை எங்க வூட்டுக்காரருக்கும் தெரியும். 'சரி கழுத நடிச்சுத் தொலை’னு நடிக்க பச்சைக் கொடி காட்டினாரு. அந்த 22 வயசுல தொடங்குன சினிமாப் பயணம், கடவுள் புண்ணியத்தால இன்ன மும் நிக்காம ஓடிட்டே இருக்கு ராசா!'' - வானத்தைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டபடி உற்சாகமாகப் பேசுகிறார் ரெங்கம்மா. இவரை சிறிதும் பெரிதுமான கேரக்டர்களில் ஏகப்பட்ட சினிமாவில் பார்த்திருப் போம்.
http://www.vikatan.com/av/2012/02/zj...ages/c115c.JPGhttp://www.vikatan.com/av/2012/02/zj...ages/c115a.jpg
'' 'நீதிக்குத் தலைவணங்கு’, 'நான் ஏன் பிறந்தேன்’, 'காவல்காரன்’னு எம்.ஜி.ஆர் பட குரூப்லயே டான்ஸ் ஆடிட்டு இருந்தேன். 'மீனவ நண்பன்’ல ஒரு சீன்ல சேறும் சகதியுமா இருந்த ஒரு இடத்துல நடிக்க ஹீரோயினி லதா மேடம் ரொம்பப் பயந்தாங்க. அப்ப அவங்களுக்காக நான்தான் டூப் போட்டு அந்த ஸீனை ஒரே டேக்ல முடிச்சேன். 'பிரமாதம் ரெங்கம்மா’னு எம்.ஜி.ஆர். உட்பட எல்லாரும் பாராட்டினாங்க. எனக்கு எம்.ஜி.ஆர்னா உசுருங்க. கட்சி மீட்டிங், சினிமா ஷூட்டிங்னு அவரு எங்க இருந்தாலும் என்னையும் அங்க பாக்கலாம். அந்தச் சமயத்துலதான் அவரு தி.மு.க-வுல இருந்து பிரிஞ்சுவந்து அ.தி.மு.க-வை ஆரம்பிச்சாரு. அப்போ அவரோட உருவத்தைப் பச்சை குத்தி இருந்தேன். இது அவருக்குத் தெரியாது. இதை லதாம்மா அவர்கிட்ட சொல்லிடுச்சு. உடனே என்னைக் கூப்பிட்டவரு, 'எதுக்கு இந்த மாதிரி எல்லாம் பண்றே?’னு திட்டினார். 'இது என் அண்ணன் உருவம். அதை வரைய உங்கக்கிட்டக்கூட அனுமதி வாங்க வேண்டியது இல்லை’னு சொன்னேன். உடனே அவர் 'நமக்கு எப்பவுமே தலைவர் அண்ணாதான்’னு சொல்லி ஆட்களை வரவெச்சு தன் முன் னாலேயே அண்ணா படத்தைப் பச்சை குத்தவெச் சார். இதுதான் அந்தப் படம்'' என்று கையைக் காட்டி சிரித்த ரெங்கம்மா தொடர்கிறார்.
''தம்பி, எம்.ஜி.ஆர். இன்னமும் ஃப்ரிஜ்லவெச்ச ரோசாப்பூ கணக்கா என் கண்ணுக்குள்ளவே நிக்கிறாரு. எம்.ஜி.ஆர். அளவுக்கு இல்லாட்டியும் சிவாஜியும் எனக்குப் பிடிக்கும். அப்பவே பிரமாண்டமா எடுத்த 'ராஜராஜசோழன்’ படத்துல அவர்கூட டான்ஸ் ஆடினது மறக்கவே முடியாது.
அப்ப வந்த எல்லாப் படங்கள்லயும் நான் டூப், குரூப் டான்சர்தான். 'சின்ன டயலாக்கூடப் பேசாம நம்ம வாழ்க்கை இப்படியே போயிடுமோ’னு வருத்தமா இருக்கும். அந்த வருத்தத்தை 'வைதேகி காத்திருந்தாள்’ மூலம் போக்கினவரு ஆர்.சுந்தர்ராஜன்தான். 'அந்தப் பாட்டு வாத்தியார் மகள பாத்தீயா? வெள்ளப் புடவை கட்டிட்டுப் போறதும் தெரியல... வர்றதும் தெரியல... அவ, தண்ணி அடிக்கிற அந்தப் பையனை வெச்சுட்டு இருக்காடீ. அதனாலதான் ஊருக்குள்ள மழை பெய்ய மாட்டேங்குது’னு பேசினதுதான் சினிமாவுல நான் பேசின முதல் வசனம்.
அர்ஜுனோட நடிச்ச 'சின்னா’ படத்துல வில்லன் மன்சூர் அலிகான் என்னை 70 அடி உயரத்தில இருந்து தண்ணியில தள்ளிவிடுறது மாதிரி சீன். டைரக்டர் ஆக்ஷன்னு சொன்னதும், மன்சூர் என் மேல கையவெச்சு லேசாத் தள்ளி விட்டாரு. ரியலா இருக்கட்டுமேனு நினைச்சு நான் உண்மையிலேயே தண்ணில குதிச்சுட்டேன். ஒரு நிமிஷம் எல்லாரும் பயந்துட்டாங்க. நான் ரொம்பச் சாதாரணமா நீச்சல் அடிச்சு மேல எந்திரிச்சு வந்தேன். செமத்தியா திட்டு விழுந்துச்சு.
அப்புறம் நம்ப தமிழ்நாட்டு மவராசன் காமராஜருக்கு அம்மாவா நடிக்கக் கூப்பிட்டாங்க. எவ்வளவு பெரிய புண்ணியம். உடனே ஒப்புக்கிட்டேன். சரியா ஷூட்டிங் அன்னைக்கு என்னைக் கண்ணும் கருத்துமா பார்த்துக்கிட்ட எங்கம்மா தவறிடுச்சு. என்ன ஆனாலும் பரவா யில்லைனு சொல்லி சங்கரன்கோயில் போய் எல்லாச் சீனையும் ஒரே டேக்ல முடிச்சுக் கொடுத்துட்டு வந்தேன். நான் வர்றதுக்குள்ள எங்க ஆத்தாவை எடுத்து அடக்கம் பண்ணிட் டாங்க.
தெருவுல இறங்கிப் போறப்ப எல்லாரும் என்னை அடையாளம் கண்டுக்குறாங்க. ஏதோ அவங்களோட சொந்த பாட்டி மாதிரி உரிமை யோட பேசுறாங்க. 'அந்த வசனத்தைப் பேசு பாட்டி’ம்பாங்க. ஒரு சில பொடிப்பசங்க என் னைப் பாத்ததும் தயங்கி நிப்பானுங்க. 'அட கிட்ட வந்து பேசுடா’னு நானாப் போய் பேசு வேன். இந்தப் பெருமைதான் ராசா சினிமாவுல நான் கண்ட சொகம்!
தமிழ் மட்டுமில்லாம மலையாளம், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, இந்தினு ஏகப்பட்ட மொழிகள்லயும் நடிச்சுட்டு இருக்கேன். 'அலை கள்’னு ஒரு படத்துல கதாநாயகியா நடிச்சி அஞ்சு விருது வாங்கினேன். 'சுதந்திரம்’ படத்துல நடிச்சதுக்காக அசாம்ல விருது கொடுத்தாங்க. இப்ப சீரியல்லகூட நடிச்சுட்டு இருக்கேன்.
அப்ப இருந்த ஹீரோ எம்.ஜி.ஆர், சிவாஜியில இருந்து இப்ப இருக்கிற அஜீத், விஜய், சிம்பு, ஆர்யானு பலபேர்கூட நடிச்சு இருக்கேன். அதே மாதிரி நாகேஷ்ல இருந்து விவேக், வடிவேலு, கஞ்சா கறுப்புனு எல்லார்கூடவும் காமெடி பண்ணியிருக்கேன். 54 வருஷமா ஓய்வே இல்லாம தொடர்ந்து ஓடிட்டே இருக்கேன்.
எனக்கு மூணு பொண்ணுங்க. ரெண்டு பசங்க. என் ரெண்டாவது பொண்ணு சரோஜாவும் நிறைய படங்கள்ல நடிச்சிருக்கா. இப்ப என் பேத்தி டினா, கதாநாயகியா நடிச்ச 'பாரி’ங்கிற படம் ரிலீஸ் ஆகியிருக்கு. மூணு தலைமுறையா நான் நடிச்சிட்டு இருக்கேன். இதைவிட இந்தச் சிறுக்கிக்கு என்ன சந்தோஷம் ராசா வேணும்?''
http://www.vikatan.com/av/2012/02/zj...mages/c115.jpg