http://i57.tinypic.com/2emg4kg.jpg
Printable View
உன்னை விட மாட்டேன்
https://www.youtube.com/watch?v=-jkV9zhSL6E
வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் திறப்பு விழா இன்று நடந்தது. அது கட்டபொம்மன்/நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை தான்! ஒரு விஷயம் தெளிவு ஆகிறது, நடிகர் திலகம் அவர்களுக்கு மணிமண்டபம் கட்டினால் என்ன வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மணிமண்டபம் கட்டினால் என்ன இரண்டும் ஒன்று தான். இனி வீரபாண்டிய கட்டபொம்மன் வரிவிலக்கு அளிப்பது விதிவிலக்கு [EXCEPTIONAL CASE] அடிபடையில் வழங்க வேண்டும்.
I am very satisfied that all goods things re. NT are happening during Super Cosmic Power's[புரட்சித்தலைவர்] AIADMK's Party rule only.. So was the case with KK, his memorial house was established during Thalaivar's regime only [ not before that].
நதியைப் போல நாமும் நடந்து பயன் தர வேண்டும்
கடலைப் போலே விரிந்த இதயம் இருந்திட வேண்டும்
வானம் போலப் பிறருக்காக அழுதிட வேண்டும்
வாழும் வாழ்க்கை உலகில் என்றும் விளங்கிட வேண்டும்
விளங்கிட வேண்டும்
http://i60.tinypic.com/2hnuc79.jpg
பெரிய சாதனை இல்லாவிட்டாலும் என்னை ஊக்கப்படுத்தும் முயற்சியாக எனது 800 பதிவுகளுக்கு வாழ்த்து தெரிவித்த நல்லிதயங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
http://i57.tinypic.com/2hqb33q.jpg
இன்று திருமண நாள் விழா காணும் அருமை சகோதரர் பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
இன்று திருமண நாளை கொண்டாடும் இனிய நண்பர் திரு செல்வகுமார் அவர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்
இனிய நண்பர் குமார் சார்
மக்கள் திலகத்தின் பொற்கால ஆட்சியின் நிழற்படங்கள் மிகவும் அருமை . மக்கள் முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் கலந்து கொண்ட விழாக்கள் , மற்றும் வெள்ள நிவாரண பணிகளை மேற்பார்வையிடும் படங்கள் எல்லாமே அருமை .
நேற்றும் இன்றும் உங்களின் மின்னல் வேக பதிவுகள் -பாராட்டுக்குரியது . மேலும் இது போன்ற பொக்கிஷங்களை
பத்திரமாக பாதுகாத்து திரியில் பதிவிடும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி சார் . பலரும் பார்த்திராத ஆவணங்கள் .
குமார் சார்
முக நூலில் தாங்கள் பதிவிட்ட உலகம் சுற்றும் வாலிபன் மற்றும் உரிமைக்குரல் வசூல் பட்டியல் எல்லோராலும் பாராட்டை பெற்று வருவதாக பல நண்பர்கள் தகவல் தெரிவித்தார்கள் .
தமிழக அரசியல் வார இதழில் வெளியான கேள்வி பதில்
http://i59.tinypic.com/2a0hpmt.jpg
பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
எஸ் ரவிச்சந்திரன்
சென்னை சரவணாவில் இன்று முதல் (19/06/2015) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் தேவரின் "தொழிலாளி " தினசரி 3 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது.
இந்த முறை சற்று வித்தியாசமாக சுவரொட்டிகள் தயாரிக்கப்பட்டு ஒட்டப்பட்டுள்ளன.
http://i59.tinypic.com/2kmv50.jpg
தகவல் உதவி : ஓட்டேரி திரு. பாண்டியன்.
தமிழ் இந்து -19/06/2015
மறைந்த பழம்பெரும் நடிகர் டி.ஆர். மகாலிங்கம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு
அந்தக் காலத்தில் மிகவும் நெருக்கமானவர்.
மதுரையில் நடிகர் சங்க அலுவலகம் கட்டுவதற்கு, இவர் கேட்ட மாத்திரத்தில்
பெருமளவு நிதி வழங்கியதோடு, மற்ற நடிகர்களிடமும் நிதி திரட்டிக் கொடுத்தார்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
டைம் பாஸ் -27/06/2015
http://i57.tinypic.com/a1h3dv.jpg
Please watch till 8:48:
https://www.youtube.com/watch?v=f6fjSETI5D0
This video should be watched by NT fans as well [ elsewhere there was a posting by one individual that we do not put the complete paper clipping ......., Puratchi Thalivar Devotees do not have any such intentions at any time.
உன்னை விட மாட்டேன்
https://www.youtube.com/watch?v=eKLG5CqiYKY
நெல்லை நகர எம்ஜிஆர் மன்றம் வெளியிட்ட ''நீதிக்கு தலை வணங்கு '' இலவச சிறப்பு மலர்
18.3.1976
http://i57.tinypic.com/2qm3tlh.jpg
http://i62.tinypic.com/2dlm0pg.png
சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்களின் 800 பதிவுகளில், பெரும்பாலானவை, பல பொய்த்தகவல்களுக்கு விளக்கமுடன் அதே சமயத்தில் நகைச்சுவையுடன் அளித்த பதில்களும், ஒரு சிலர் மறந்து போன பழைய பதிவுகளை, தக்க சமயத்தில், மீண்டும் நினைவு படுத்தி, அவர்களை மவுனமாக்கிய பதில்களும் உள்ளடக்கியது.
சகோதரர் திரு. சி. எஸ். குமார் அவர்கள் அளித்த 700 பதிவுகளில் பல, முக்கிய, அரிய தகவல்களும், புகைப்படங்களும் அடங்கியது. போற்றி பாதுக்கக்க வேண்டிய பொக்கிஷம், !
இருவருக்கும் பாராட்டுக்களுடன் நன்றி !
எனது 38வது திருமண நாளையொட்டி, நேற்று, திரி வாயிலாகவும், அலைபேசி மூலமும், மற்றும் குறுந்தகவல்கள் அனுப்பியும், வாழ்த்துக்கள் தெரிவித்த திரியின் அன்பர்கள், அனைத்துலக எம். ஜி.ஆர். பொது நல சங்க உறுப்பினர்கள், மக்கள் திலகத்தின் ஏனைய அன்பர்கள் அனைவருக்கும், எனது பணிவான நன்றி !
இன்று முற்பகல் 11.00 மணிக்கு, சன்-லைப் தொலைக்காட்சியில், நம் எழில் வேந்தனின் "தாய் சொல்லை தட்டாதே" காவியம் ஒளி பரப்பாகிறது. .
http://i61.tinypic.com/29bzixj.jpg http://i60.tinypic.com/1ywqh0.jpg
http://i62.tinypic.com/2jc81i0.jpg http://i60.tinypic.com/xmodh1.jpg
பேராசிரியர் செல்வகுமார் சார்
உங்கள் இனிய திருமண நாளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் . [ தாமதமாக இன்று சொல்கிறேன் ]
dear professor
though belated wishing you a very happy anniversary.
my special prayers for you to celebrate golden jubilee and beyond of your anniversary
rks
''கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது.''
மக்கள் திலகம் எம்ஜிஆர் .
அனந்தராமன் என்கிற திரு ஆதிராம் அவர்களே
உங்கள் விளக்கத்தை படித்தேன் . கடந்த 8 ஆண்டுகளாக எல்லா திரிகளையும் படித்தவன் என்ற முறையில்
எனக்குள் எழுந்த சில கேள்விகளுக்கு பதில் இது வரை கிடைக்கவில்லை .இருந்தாலும் உங்களுடைய பதிவை மேற்கோள் காட்டி என்னுடைய பதிவினை உங்கள் முன் வைக்கிறேன் .
''என்னுடைய பதிவுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாதபோது' - ஆதிராம் 1
என் பதிவு .1
நீங்கள் அப்படியென்ன உலகத்தில் யாரும் கேட்காத சட்ட கேள்விகள் கேட்டு விட்டீர்கள் உங்களுக்கு பயந்து மற்றவர்கள் தப்பிக்க உபாயம் தேடுவதற்கு.
''இதற்கு கல்நாயக் போன்ற சிலர் விளக்கம் அளித்திருக்கிறார்கள்'' - ஆதிராம் -2
என் பதிவு -2
நீங்கள் சொல்பவரே நீங்கள்தான் என்று சொல்கிறார்கள். அதுவும் நான் சொல்லல அய்யா!அதுவும் உங்கள் திரியிலேயே பலர் சொல்லி நான் படித்திருக்கிறேன். அது உண்மையாய் இருந்தால் உங்களுக்கு நீங்களே விளக்கம் கொடுத்துக் கொள்வது போல ஆகி விடுமே! அது உண்மையில்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பமும் இல்லை இல்லை உங்கள் விருப்பமும். ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.
நீங்களே ஒரு பெயரில் பதிவிட்டு ஒரு கால் மணி நேரமோ அரை மணி நேரமோ சென்றபின் நீங்களே உங்களுக்குண்டான வேறு பெயரில் (பெயர்களில்) உங்களுக்கு லைக்குகள் போட்டுக் கொள்கிறீர்களாமே! சிரிக்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.
ஆனால் நான் கூட பல சமயங்கள் பார்த்திருக்கிறேன். who is online பார்க்கும் போது நீங்கள் குறிப்பிட்ட அந்த வேறு ஒருவரும் பச்சை விளக்கில் இருக்கிறார் அடுத்த வினாடி உங்கள் பெயர் லாகின் ஆகி பச்சை விளக்கில் மின்னுகிறது. உடன் நாயகர் லாக்-ஆப் ஆகி பச்சை விளக்கு அணைகிறது. அப்புறம் உங்களுடையது அணைந்து பரணி சாம்ராஜ்யம் என்று லாகின் ஆகி விளக்கு எரிகிறது.
இதுமட்டுமல்லாமல் 'ஊர்வசி', கிரிஜா என்று பொம்பளைகள் பெயரில் அடிக்கடி வேறு உங்கள் பின்னாலேயே விளக்குகளாய் லாகின் ஆகி மாறி மாறி மின்னி மின்னி அணைகின்றன. நண்பர்கள் தங்கள் 'எண்ணங்கள் எழுத்துக்களை' சொல்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை சார். நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.
எழுத்தாளர் சுஜாதா ஆண் என்று அனைவருக்கும் தெரியும்.ஆனால் பெண் பெயரில் எழுதுவார். ஆனால் அவர் பெண்ணாக மாற முடியுமா? ஜீன்ஸ் பேன்ட் போட்டு அத்தை மகனுடனோ சித்தி பையனுடனோ பின்னாடி பைக்கில் கால் தூக்கிப் போட்டு எறி குஜாலாக படம் பார்க்க போக முடியுமா? குளித்துக் கொண்டிருக்கம் போது ரவிச்சந்திரன் மேட்டர் வந்தால் அப்படியே வர முடியுமா? பெண் புனைப் பெயர்தானே .ஆனால் அவர் ஆண்தானே! ஆனா ஆணே இங்கு பெண்ணாக மாறி விட்ட அதிசயமெல்லாம் நடந்துது என்று நான் சொல்லி சிரிக்கல சார். சொல்றாங்க. ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான். பெண் இல்ல.
அது எப்படி உங்கள் பெயர் வரும் போது மட்டும் இவர்கள் பின்னாலேயே உங்களைத் தொடர்ந்து வருகிறார்கள் என்பது மட்டும் புரியாத புதிராகவே உள்ளது. ஒருவேளை உங்களுக்கும் மிஞ்சிய ஒற்று வேலை பார்ப்பவர்கள் போல் இருக்கிறது. நீங்கள் எப்போது ஹப்பில் அமர்வீர்கள் என்று வேலை வெட்டி இல்லாமல் இவர்கள் பார்த்துக் கொண்டு நீங்கள் வந்ததும் உங்கள் பின்னாடியே ஓடி வந்து விடுகிறார்களே! அப்படி என்று சொல்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.
நாயகர் பதிவிடும் போது ஆதிராமும் லாகினில் இருக்கிறார். ஆனால் உஷாராக பதிவு போடாமல் இருக்கிறார். அப்புறம் சந்தேகம் கொண்டு யாராவது கேட்டால் அரை மணி நேரத்தில் ஆதிராம் ஓடி வந்து நாயகருக்கு லைக் போட்டு விட்டு தற்காப்பு நாடகம் நடத்தி ஓடி விடுகிறார்..அப்போது நாயகர் லாக்-ஆப் ஆகி விடுவார். ஏனென்றால் நாயகருக்கு நான் லைக் போட்டேன் என்று சொல்லி நாங்கள் இருவரும் வெவேறு நபர்கள் என்று தப்பித்துக் கொள்ளலாம் அல்லவா! அப்படின்னு சொல்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை சார். நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.
''இந்த குற்றச்சாட்டு வந்த துவக்கத்திலேயே மாடரேட்டர்கள் தீர ஆராய்ந்து, புகாரில் உண்மையில்லை என்று கண்டறிந்து என்னை தொடர அனுமதித்துள்ளனர்'' - ஆதிராம் -3
என் பதிவு -3
ஓஹோ! இந்தக் குற்றச்சாட்டு துவக்கத்திலேயே வந்து விட்டதா? நான் ஒரு மாங்கா. இப்பத்தான் உங்களை மாதிரி துப்பு துலக்கி கண்டு பிடிச்சுட்டேன்னு பெருமைபட்டா மக்கா ஆரம்பத்திலேயே கண்டு பிடித்து விட்டார்களா? சதிகாரர்கள். இவர்களை சும்மா விடக் கூடாது நாயகரே சாரி ஆதிராம் . சாரி அனந்த ராமன்
அது சரி.எந்த மாடரேட்டர்கள் ஆராய்ந்து சொன்னார்கள் என்று சொல்ல முடியுமா? ஆதாரம் இருந்தால் கொடுங்கள். நான் உங்களை குறை சொல்பவர்களை உண்டு இல்லை என்று ஆக்கி விடுகிறேன். ஒரு மனுஷரை இப்படியா சந்தேகப்படுவது? இருந்தாலும் மாடரேட்டர்கள் உங்களையேவா பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் ஆதிராம் ஒருவர்தான் வேறு பெயரில் வரவில்லை என்று எங்காவது அறிவித்திருக்கிறார்களா? அப்படி என்று நான் கேட்கவில்லை. கேட்கிறார்கள். சொல்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.
''முத்துராமன் என்ற பெயரில் ஒருவர் இந்த சந்தேகத்தை கொளுத்திப்போட்டார்'' -ஆதிராம் 4
என் பதிவு 4
முத்துராமன் மட்டுமா கொளுத்திப் போட்டார். அதற்கு முன்னும் பின்னும் பலர் கண்டு பிடித்து விட்டார்களே. உங்களுக்கும் பாரிஸ்டர் என்று அப்போது இருந்த ஒருவருக்கும் இது சம்பந்தமாக பக்கம் பக்கமாக வாக்குவாதம் நடந்ததே. சொல்கிறார்கள். ஆனால் நான் நம்பவில்லை சார். நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.
''இந்த ஆராய்ச்சி இன்றோடு முடியட்டுமே'' -ஆதிராம் -5
என் பதிவு - 5
ஏன் பயப்படுகிறீர்கள் சார். நீங்கள்தான் மற்றவர்கள் இல்லையே. யாராவது ஏதாவது ஆராய்ச்சி பண்ணிவிட்டுப் போகட்டுமே. நீங்கள்தான் யோக்கியர் ஆயிற்றே. அப்புறம் ஏன் இந்த நடுக்கம். பயப்படாதீர்கள். நாங்கல்லாம் இருக்கோம். விட்டுத் தள்ளுங்கள். நீங்கள் இப்படி பயப்பட்டால் நீங்கள் செய்வது எல்லாம் உண்மை என்று ஆகிவிடும். இன்னும் வகையாக மற்றவர்கள் பேச நீங்களே வழி செய்து கொடுத்தது போல் ஆகி விடும்.
உங்கள் தலைவர் நடித்த ராஜா ராஜ சோழன் படத்தில் ஒற்று வேலை பார்க்க நம்பியார் சிவாஜியின் நம்பிக்கைக்கு பாத்திரமாவது போல் நடிப்பார். ஆனால் மனோரமாவை வைத்து நம்பியாரையே ஒற்றும், வேவும் பார்த்து அவரை கையும் களவுமாக பிடிப்பார் சிவாஜி. அது மாதிரி நீங்க எங்க மக்கள் திலகம் எம்ஜிஆர திரியில் வந்து ஒற்று வேலை பார்க்கும் போது உங்களைப் பற்றி எங்க திரியிலே இருந்து வந்து ஒற்று வேலை செஞ்சி எங்க ஆளுங்க கண்டு பிடிச்சதுதான் இவ்வளவு விஷயமும். என்ன தைரியம் இருந்தா அந்த ஆளு இங்கே வந்து ஒற்று வேலை பார்த்திருப்பாரு அப்படின்னு இங்க உள்ளவங்க கேக்குறாங்க. ஆனால் நான் நம்பவில்லை ஆதி . நீங்கள் வெவ்வேறு ஆள்தான்.
''என் உண்மைப்பெயர் கூட ஆதிராம் இல்லை. அனந்தராமன்'' - ஆதிராம் -6
என் பதிவு -6
ஓ...இருக்கிற பேரெல்லாம் போதாது என்று இன்னொரு பேரா. தாங்கல ஆதி ! இப்போ மத்தவங்க சொல்றத நான் நம்பித்தான் ஆகணும் போல இருக்கு. என் பெயரே எனக்கு மறந்துடும் போல் இருக்கு. அஞ்சாறு பெயர்ல நீங்க எப்படித்தான் கில்லாடித்தனமா இவ்வளவு நாள் சாமர்த்தியமா குப்பை கொட்டுறீங்களோ தெரியல. ஒற்றர் வேவு வேலை பார்த்து எங்க திரியை உங்க திரி போல வேகமாக பாகம் கடக்க வச்சதுக்கும், இன்னும் கொஞ்ச நாள்ல உங்களையும் மிஞ்சி நாங்க அடுத்த பாகம் போக உதவி செஞ்சதுக்கும் உங்களுக்கு நன்றி.
ஆமா! நாயகரை ரொம்ப ரெண்டு மூணு நாளா காணோமே. ரொம்ப அப்செட்டோ. நீங்க மட்டுமே வரீங்க. சரி இப்பதான் சொல்லிட்டோமில்ல. அவரும் நீங்களும் இப்போ ஒண்ணா வந்து நாங்க ரெண்டு பெரும் வேற வேற ஆள்னு நம்ப வச்சுடுவீங்க. நவராத்திரி வேஷம் கட்டினவரே உங்களிடம் தோத்துப் போகணும். உங்களையெல்லாம் ரசிகரா வச்சிருந்தாரே..அவரை சொல்லணும்.
சரி வருத்தப்படாதீங்க. சுவிட்சை மாத்தி மாத்தி போடுங்க.
ஆதிராம்
என்னோட பொது வாழ்க்கையில் உங்களை போன்று பன்முக ஆற்றல் கொண்ட ஒருவரை இப்போதுதான் பார்கிறேன் .
வேண்டுகோள்
உங்கள் அழகு திருமுகத்தை திரியில் பதிவிடுங்களேன் . எல்லோருடைய குழப்பமும் தீரும் .பதிவீர்களா ?
கல் நாயக் சென்னையில் இருப்பதால் அவரை நேரில் சந்திக்கிறேன் .
கடைசியாக மக்கள் திலகத்தின் பொன்னந்தி மாலை - பாடலை பதிவிட்ட திரு கார்த்திக் எங்கே ?
ஆயிரத்தில் ஒருவனை - மிக நேர்த்தியாக விமர்சனம் செய்த சாரதா பல வருடங்களாக காண வில்லையே ?
ஒரே ஒருவரின் சாமர்த்தியம் - பலரை எப்படி அலை கழிக்கிறது ?
மாடரேட்டர்கள் ஏமாறலாம் . பதிவாளர்கள் ஏமாறலாம் . பார்வையாளர்கள் ஏமாறலாம் .
பைபிள் - பகவத் கீதை - குரான் மீது நம்பிக்கை கொண்டவன் நான் .
சிரித்து வாழ வேண்டும் படத்தில் மக்கள் திலகம் பாடுவார்
''யாரும் அறியாமல் செய்யும் தவறென்று
ஏமாற்றும் நினைவை மாற்றுங்கள்
ஒன்றில் ஒன்றாய் எங்கும் நின்றான்
ஒருவன் அறிவான் எல்லாம்
காலம் பார்த்து நேரம் பார்த்து
அவனே தீர்ப்பு சொல்வான் !
அஸ்ஸலாமு அலைக்கும் !
பேராசிரியர் செல்வகுமார்,
தங்களுக்கு என் உளமார்ந்த மணநாள் நல்வாழ்த்துக்கள். தங்கள் இல்வாழ்வில் எல்லா நலனும் பெற்று வளமாய் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்