http://i1146.photobucket.com/albums/...psiji5t3t1.jpg
Printable View
திரையில் பக்தி
இந்த படத்தில் எந்த பாடலை சொல்வது
எல்லாமே விட்டல மகிமைதான்.. அருமை அருமை.
நான் சிறு வயதில் பார்த்து ரசித்த படங்களில் இதுவும் ஒன்று. (சாந்தா சக்குபாய், சக்ரதாரி)
இதோ நாகய்யா புஷ்பவல்லி, ஜெமினி நடிப்பில் அற்புத படம் (பக்த கோர கும்பர்)
https://www.youtube.com/watch?v=thkAc0mbNfM
தங்கப் பெட்டியுடன் ஹோட்டலில் ஸ்ரீகாந்த். வெற்றுடம்பு மனிதர்களுக்கு நடுவே ஆடும் பாவை ஜெயகுமாரி. கழுகு போல கண்காணிக்க வரும் இளமை விஜயகுமார். ஆர்ப்பாட்ட இசை. திகிலடயைச் செய்யும் ஆண் குரல்கள்.
'நீயோ தங்கமுள்ள பெட்டி
நானோ இன்ப வெல்லக் கட்டி'
என்று ஸ்ரீகாந்தைக் காப்பாற்றத் துடிக்கும் ஜெயகுமாரி. கேபரெட் பாடல்களுக்கென்றே அவதாரம் எடுத்த ராட்சஸி குரல்.
'அன்னம் இங்கே ஆடுகின்றது.
ஆசை நெஞ்சில் ஊறுகின்றது
என்னை யாரும் தொட்டதில்லை
கன்னம் காயப்பட்டதில்லை'
பாடல் கலக்குகிறது கோரஸின் துணையோடு. பாடலின் இறுதியில் ஈஸ்வரியின் 'தா தரதுரு தரதுரு தரரா' க்களைக் கேட்கத் தவறாதீர்கள்.
'மாணிக்கத் தொட்டில்' படத்தில் இதுவரை அதிகம் நீங்கள் கேட்டறியாப் பாடல்.
https://youtu.be/H1spMbPvdNA
ஒரு ஜோர் பாடல். நாயகன் ஓ.கே. ஆனால் நாயகி உவ்வே.... இடிக்கிறது. பாடகர் திலகம் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் 'ஜீவனாம்சம்' திரைப்படத்தில்.இந்த குமாரி செய்யும் அக்கிரமங்களை நினைத்தால் மனம் கொதிக்கிறது. எப்படி இப்படியெல்லாம்? சே! பாடலை பார்க்கும் ஆசையே விட்டுப் போகிறது.
https://youtu.be/9G2vXxxt-9Y
இன்னொரு அற்புதமான பாடல். அதே ஜெய்தான். டி.எம்.எஸ் கலக்கி எடுத்து விடுவார். சுசீலா அம்மாவும் பிய்த்து உதறி விடுவார்கள். ஜெய், முகமூடி அணிந்து பாரதி, சோ, விஜயஸ்ரீ, குமாரி ராதா அனைவரும் கலந்து கொள்ளும் பாடல். பாரதி, விஜயஸ்ரீ, ராதா எல்லோருக்குமே சுசீலா வாய்ஸ்தான். அதே போல ஜெய், சோ இருவருக்குமே டி.எம்.எஸ் பாடுவார். பர்த் டே கப்புக்குள் நிற்கும் பர்த் டே கேர்ள் விஜயஸ்ரீ. க்ரூப் டான்சர்ஸ் மூவ்ஸ் அருமை. குறிப்பாக பெண் டான்சர்ஸ்.
இசை சாம்ராஜ்யமே நடக்குமிந்தப் பாட்டில். டிரம்பெட், சாக்ஸ், கிடார், பியானோ என்று சகல இசைக்கருவிகளுக் கலந்து கட்டி விளையாடும்.
எனக்கு அப்போதிலிருந்து மிகவும் பிடித்த பாடல் இது.
ஹேப் ஹேப் ஹேப்
ஹேப் ஹேப்பி பர்த்டே
ஹேப் ஹேப் ஹேப்
ஹேப் ஹேப்பி பர்த்டே
நினைத்தால் மணக்கும்
கிடைத்தால் இனிக்கும்
தங்க நிறம் வண்டாடும் பூமுகம்
மஞ்சள் நிறம் தள்ளாடும் மெல்லிடை
முல்லை இனம் என்னென்ன வண்ணங்களோ
தங்க நிறம் வண்டாடும் பூமுகம்
மஞ்சள் நிறம் தள்ளாடும் மெல்லிடை
முல்லை இனம் என்னென்ன வண்ணங்களோ
(நினைத்தால்)
முத்தங்கள் சிந்தாதது
முந்தானை பின்னாதது
கன்னங்கள் பொன்னானது
கையோடு சேராதது
முத்தங்கள் சிந்தாதது
முந்தானை பின்னாதது
கன்னங்கள் பொன்னானது
கையோடு சேராதது
மானோ மீனோ மாங்கனி தானோ
வாழைப் பூவில் ஊறிய தேனோ
மானோ மீனோ மாங்கனி தானோ
வாழைப் பூவில் ஊறிய தேனோ
அம்மம்மா பெண்ணா இது
அப்பப்ப்பா என்னாவது
(நினைத்தால்)
தித்திக்கும் செம்மாதுளை
சிங்காரச் செண்டானது
அல்லிப்பூ பந்தாடுது
அச்சாரம் கொள்ளாதது
தித்திக்கும் செம்மாதுளை
சிங்காரச் செண்டானது
அல்லிப்பூ பந்தாடுது
அச்சாரம் கொள்ளாதது
வேலோ வில்லோ விழியொரு பாவம்
மேலும் மேலும் விளையுது ராகம் (பாரதி அட்டகாசம் பண்ணுவார். கோரஸ் அருமை)
அம்மம்மா பெண்ணா இது
அப்பப்பா என்னாவது
அம்மம்மா பெண்ணா இது
அப்பப்ப்பா என்னாவது
(நினைத்தால்)
ஈரேழு பருவத்திலே என்னென்ன வைத்தானம்மா
பாலூறும் பெண்மயிலே பல்லாக்கு செய்தானம்மா
ஈரேழு பருவத்திலே என்னென்ன வைத்தானம்மா
பாலூறும் பெண்மயிலே பல்லாக்கு செய்தானம்மா
நானோ நீயோ மாப்பிள்ளை யாரோ
யாரோ யாரோ யார் அறிவாரோ
நானோ நீயோ மாப்பிள்ளை யாரோ
யாரோ யாரோ யார் அறிவாரோ
அம்மம்மா பெண்ணா இது
அப்பப்பா என்னாவது
அம்மம்மா பெண்ணா இது
அப்பப்ப்பா என்னாவது
(நினைத்தால்)
ஹேப் ஹேப் ஹேப்
ஹேப் ஹேப்பி பர்த்டே
ஹேப் ஹேப் ஹேப்
ஹேப் ஹேப்பி பர்த்டே
https://youtu.be/NbSzzahJ4tc
anbu vazhi
https://youtu.be/VPdWZyuJvRM
வாசு ஜி..
எனக்கும் "மாணிக்கப் பதுமைக்கு" பாட்டு மட்டும்தான் தெரியும். நீதிதேவன் படம் பற்றி எதுவுமே நினைவில் இல்லை.. ஆனால்... இன்னொரு பாட்டு கேட்க நல்லா இருக்கும்.. அதை யோசிச்சு சொல்றேன். ...
ஏ.வி.எம்.ராஜன், காஞ்சனா நடித்து "நியாயம் கேட்கிறேன்" என்று ஒரு படம் வந்தது. அதில் டி.எம்.எஸ் பாடும் "வேர்வைத்துளிகளே பேசுங்கள்" மற்றும் "கண்ணன் பிறந்ததும் சிறைச்சாலை" என்ற இரு அழகான பாடல்கள் நினைவில் இருக்கின்றன. அதிலேயும் ஒரு டூயட் பாடல் கேட்ட நினைவு...
ராகவ்ஜி, வாசுஜி... மற்ற நண்பர்கள் யாருக்கேனும் தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்க..
மதுண்ணா!
'நீதிதேவன்' படத்தில் சீர்காழி ஈஸ்வரி இணைந்து பாடும் பாடல் ஒன்று உண்டு.
'கோடையிலே மழை பொழிஞ்சி
ஓடையிலே நீர் நெறஞ்சி
காடு செழிச்சுதுன்னு கொட்டு மேளம்
அய்யா... கனவு பலிச்சிதுன்னு கொட்டு மேளம்'
இந்தப் பாட்டை சொல்றீங்களா? அல்லது வேறயா?
மதுண்ணா!
ஒரு டவுட். 'நியாயம் கேட்கிறேன்' என்று ஆனந்தபாபு நடித்து ஒரு படம் வெளிவந்தது. நன்றாகத் தெரியும். அப்படியே விஜயலலிதா போன்ற முக அமைப்பு கொண்ட தேவிபாலா என்பவர்தான் நாயகி.
ஏ..வி.எம்.ராஜன் நாயகனாக நடித்த படம் 'நியாயம் கேட்கிறோம்' என்று ஞாபகம். 1973-ல் வந்த படம் என்று நினைவு.
நீங்கள் சொன்னது போல்
கண்ணன் பிறந்ததும் சிறைச்சாலை
அந்த காந்தி இருந்ததும் சிறைச்சாலை
சிறைச்சாலை ஒரு கல்லூரி
அங்கு சென்று திரும்பியவன் ஒரு குருநாதன்
புரட்சியைத் தந்ததும் சிறைச்சசாலை
பல புத்தகம் பிறந்ததும் சிறைச்சாலை
இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வர
இறைவன் படைத்ததும் சிறைச்சசாலை
என்று வரிகள் கொஞ்சம் நினைவுக்கு வருகின்றன. சரியா தவறா என்று தெரியவில்லை. தேடிப் பிடித்து விடுவோம்.
வாசு சார்
மது சொல்வது போல் ஏவிஎம் ராஜன் நடித்த படம் நியாயம் கேட்கிறேன்.
ஆனந்த் பாபு நடித்த படம் தான் நியாயம் கேட்கிறோம்.
நியாயம் கேட்கிறேன் படத்தில் மாமா இசையில் ஒரு சூப்பர் டூயட் பாடல் உள்ளது. பல்லவி வரிகள் நினைவுக்கு வரவில்லை.
நினைவு படுத்திப்பார்க்கிறேன்.
ஜி!
வாங்கோ! வாங்கோ! வணக்கம். நலமா?
ஆனந்த் பாபு நடித்த 'நியாயம் கேட்கிறேன்' படத்தின் டைட்டில்.
http://i1087.photobucket.com/albums/.../Untitledn.jpg
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
திரையில் பக்தி வெகு அழகாக முடித்த ரவிக்கு ஒரு ஓ..
*
ம்ம் பாட்ஸ் லாம் கேக்கணும்..கேக்காம இருக்கயே இது நியாயமான்னு கேக்கப் படாத் :)
*
நேற்று ஓமான்பற்றி எழுதிய பாக்கள்..
*
Oman - 4
முயலாமை என்றகதை மொட்டவிழ்ந்து இங்கே
சுயமாக ஆமைகள் சூரில் – தயங்காமல்
பற்பல காதங்கள் பாங்காகத் தான்கடந்து
முட்டைகள் இட்டிடு மே..
சிறுகப்பல் போலவே சீர்மை மிகவாய்
பொறுமையாய் ஆமை பொறுப்பாய் – நறுவிசு
நன்றாகக் கொண்டே நகர்ந்தே கடலிலே
மெள்ளமாய்ச் சேர்ந்திடு மே..
(இந்த வருட ஆரம்பத்தில் பெளர்ணமியன்று Sur சென்றது வித்தியாசமான அனுபவம்.. இரவு பதினொன்றரைக்கு மேலே நிலா சிரிக்க கீழே கடல் மணல் சற்றே வித்தியாசமாய்ப் பரந்து விரிந்திருக்க விரைவாக நடக்கலாம் என்று பார்த்தால்…ம்ஹூஹூம் முடியவில்ல..
ஏனாம்.. ஏனென்றால் ஒரு அடி வைத்தால் அடுத்த அடி கால் தொபுக்கடீரென்று உள்ளே போனது..ஏனெனில் அந்தக் கடற்கரையில் அந்த சீஸனின் போது எங்கிருந்தோ வரும் கடலாமைகள் நல்ல இடமாய்ப் பார்த்து முட்டை போடுவதற்கு கிடுகிடு என்று பள்ளம் தோண்டி த் தோண்டிப் பார்க்குமாம்..சரியில்லை இது முட்டையிட வசதிப்படாது என நினைத்தால் மறுபடி மணல் போட்டு மூடிவிடுமாம்..அந்த மணல் தொளதொள என இருப்பதால் கால்கள் தொபுக்..என உள்ளே போகும்..
முன்னால் நிலாவெளிச்சத்தில் கைட் ஒல்லியாய் ப் போக பதினைந்து பேர் கொண்ட குழுவாகிய நாங்கள் மெல்ல மெல்ல மெல்ல பார்த்து நடக்க கிட்டத்தட்ட முக்கால் கிலோ மீட்டர் கடந்ததும்..கைட் எதிர்பாராமல் உறவினரைப் பார்த்த காதலி மிரண்டு காதலனிடம் சொல்வது போல உதட்டில் கைவைத்து ஷ் என்று சொல்லி ஓரிடத்தில் காட்ட.. ஒரு பெரிய ஆமை அந்த நிலவொளியில் மூன்பாத் எடுத்துக் கொண்டிருந்தது..
இல்லை இல்லை..மெல்ல நகர்ந்தது..
நாங்கள் மூச்சு மெல்ல மெல்ல விட்டு ஆர்வமாய்ப் பார்க்க அது மெள்ள நகர..கடற்கரை மணலில் அது இருந்த இடம் ஒரு செவ்வகப் பள்ளமாய் ஆக..கொஞ்சம் கொஞ்சமாய் கடல் நோக்கி நகர.. பீரங்கி வண்டிகளில் இரண்டு ட்ராக் வரும் – இது ஒற்றை ட்ராக்காட்டமாக கோடுகிழித்து மெல்ல மெல்ல மெல்ல கடலை நோக்கி நகர்ந்து.. கடலை அடைந்தே விட்ட கணத்தில்…
என்னாச்சுன்னா அம்புட்டு தான்..சாக்லேட் தர்றேன் வா என்றவுடன் தாவுமே குழந்தை, தமன்னாவைப் பார்த்தவுடன் குதிக்குமே மனசு.. அதைப்போலே ஒரே தாவல் தான்..பின் கடலலைகள் அதைத்தாலாட்டியதோ அல்லது அது தான் கொஞ்சியதோ தெரியவில்லை..அப்படியே நீந்தி நீந்தி மறைந்தும் விட்டது..
கைட் அந்த ஆமைக்கு 45 வயதிருக்கும் எனச் சொன்னான்
முட்டைகள் பார்க்க முடியவில்லை.. வேறு இருஆமைகள் தொலைவிலிருந்து பார்த்தோம் (அதுகளுக்கு இருபத்தைந்து வயதாம்..ம்ம் கிட்டப் போகவேண்டாம் எனச் சொல்லியதால் போகவில்லை)
பின் திரும்பினோம் வேகமாய் ஆமை நினைவுகளைச் சுமந்து..(தூக்கம் வந்ததும் இன்னொருகாரணம்..)
**
https://youtu.be/1WCxSHN4aUE
வெகு அழகான பாட்டு..வெகு அழகான நடை..
//வெகு அழகான நடை//
சின்னா! உங்கள் நடையைப் போலவே.:)
//சின்னா! உங்கள் நடையைப் போலவே.// Thank you.. naan chinnak kutti yaanai.. avar Imayam.. irunthaalum thanks :)
வாசு சார்
ம்...ம்... உங்களை நெருங்க முடியுமா... சபையோர்களே நியாயம் கேட்கிறேன்... இது சரியா.. இப்படியா வாசு சார் போட்டுத் தாக்குவது...
எனிவே அந்த ஏவிஎம் ராஜன் படம் டைட்டில் றேனோ றோமோ .... சிவிஆர் சார் இயக்கியது.. கேவிஎம் இசை அது மட்டும் கண்டிப்பாகத் தெரியும்..
வாசு அண்ணா அவர்களே
http://www.mediafire.com/listen/434j...ECK19B3TMS.mp3
என்னிடம் உள்ள பாடல் இதோ உங்களுக்கு ... உபயம் நமது தூத்துக்குடி வள்ளல் பேராசிரியர் திரு கந்தசாமி அவர்கள்
இது தவிர வியர்வை துளிகளே (TMS) மற்றும் கல்யாணத்தை (TMS & PS ) பாடலும் உள்ளன..வேண்டுமா ?
நன்றி
சுந்தரபாண்டியன்
அன்பு சுந்தரபாண்டியன் சார்,
பேராசிரியர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். மது அண்ணாவும், நம் ராகவேந்திரன் சாரும் மிக்க சந்தோஷம் அடைவார்கள்.
மதிய வணக்கம் ரவி சார்.
நகைச்சுவை உணர்வு ஒரு வரம்!
ஒரு புதிய பதிவு . புதிய கண்ணோட்டத்தில் . இதுவும் ஒரு நெடும் தொடர் அல்ல . சற்று மாறுப்பட்ட கருத்துக்கள் . இப்பொழுது நிலவி வரும் சூழ்நிலையில் , " இதுவும் கடந்து போகும் " என்று நாம் சொல்லிக்கொண்டாலும் , மனதில் ஆழமான வலி இருப்பது உண்மைதான் . சற்று சூழ்நிலையை மறக்க இந்த தலைப்பை எடுத்துக்கொண்டேன் . "சிரிப்புக்கு " "நகைச்சுவைக்கு " அதிகமாக நாம் முக்கியத்துவம் தருவதில்லை . வாழ்க்கை ஒரு இயந்திரமாகவே ஓடுகிறது . நகைச்சுவை நிறைந்த பதிவுகளை நாம் இங்கு போடாவிட்டாலும் , பேசாவிட்டாலும் , சம்பந்தப்பட்ட பாடல்களை தொகுத்து வழங்க இருக்கிறேன் . ரசிக்கலாமா ??
http://i818.photobucket.com/albums/z...psjnrvojjc.jpg
வாழ்க்கையின் துன்பங்களிலிருந்து தற்காலிகமாகவேனும் விடுதலையளிக்கும் நபரை அனைவருக்கும் பிடிக்கும். இந்த வாழ்க்கையானது துன்பங்களால் நிறைந்தது.
நாள்தோறும் ஏதேனும் ஒரு சோதனையோ அல்லது கவலையோ ஒவ்வொரு மனிதனுக்குமே ஏற்படுகிறது. அதனால் ஏற்படும் மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு மகிழ்ச்சி உணர்வை அடைய ஒவ்வொருவருமே விரும்புகின்றனர். மகிழ்ச்சியை உடனடியாகவும், எப்போது வேண்டுமானாலும் எளிதாக தரக்கூடிய ஒரு அம்சம் என்னவென்றால், நகைச்சுவை உணர்வு. இந்த நகைச்சுவை உணர்வுள்ள மனிதர் அனைவராலும் விரும்பப்படும் ஒருவர். இவர் தனக்கு மட்டுமின்றி, மற்றவர்களுக்கும் எப்போதுமே சந்தோஷத்தை தருபவராக இருக்கிறார்.
http://i818.photobucket.com/albums/z...psdraa1kli.png
எப்போதும் தன்னை துரதிருஷ்டவாதியாகவே நினைத்துக்கொண்டு, தான் உள்ளிட்ட எல்லோரையும் குறைகூறிக் கொண்டிருக்கும் மனிதர்களை யாரும் விரும்புவதில்லை.
உருளுவது தலையா, தலைப்பாகையா?
19ம் நூற்றாண்டில், ஈரான் நாட்டில் பஹாய் சமயத்தைச் சார்ந்த ஒருவருக்கு பொய்யான குற்றச்சாட்டின் பெயரில் அந்நாட்டின் ஷியா அரசாங்கம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. சிரச்சேதத்தின் மூலம் அந்த மரண தண்டனையை நிறைவேற்றத் திட்டம். களத்திற்கு கொண்டுசென்று அவரது குனிந்த தலையை கொலையாளி வெட்டுகையில் குறி தவறி அவரின் தலைப்பாகையின் மீது கத்திப் பட்டு அந்த தலைப்பாகை உருண்டு ஓடியது. அந்த சூழ்நிலையிலும் அந்த பஹாய் சிரித்துக்கொண்டே கூறியதாவது, "உருண்டு ஓடுவது எனது தலையா அல்லது தலைப்பாகையா?" என்பதுதான். தனது உயிர்போகும் தருவாயில்கூட, தனது நகைச்சுவை உணர்வின் மூலம் அந்த இடத்தில் கலகலப்பைக் கொண்டு வந்தார். இதுபோன்ற ஒரு மனிதர் அநியாயமாக இறக்கிறாரே என்று அங்கிருந்த காவலர்களில் யாரேனும் ஒருவர் நிச்சயம் வருந்தியிருக்கக்கூடும். நகைச்சுவை உணர்வானது ஒரு மனிதனை எந்த சூழலிலும் சந்தோஷமாக வைக்கும் என்பது இந்த சம்பவத்தின் மூலம் புலனாகிறது.
முகலாய பேரரசர் அக்பர் கூட நகைச்சுவை உணர்வுகொண்ட பீர்பாலை தனது அமைச்சர்களில் ஒருவராக ஆக்கிக் கொண்டார். மிகப்பெரிய பேரரசை பலவித நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆண்ட அக்பருக்கு, பீர்பால் போன்றவர்களின் நகைச்சுவை உணர்வு சந்தோஷத்தையும், நிம்மதியையும் அளித்தது.
http://i818.photobucket.com/albums/z...psjak8hny3.jpg
வித்தியாசம் அறியுங்கள்
நகைச்சுவை உணர்வு என்றால் என்ன என்பதைப் பற்றி ஒரு தெளிவான புரிதல் இருப்பது முக்கியம். பிறரை கேலியும், கிண்டலும் செய்வது(பல திரைப்படங்களில் வருவதுபோல்) நகைச்சுவையல்ல. அதெல்லாம் திரைப்படங்களுக்குத்தான் ஒத்துவரும். நிஜ வாழ்வில் நகைச்சுவை என்பது நமது எதிரியைக்கூட நண்பராக மாற்றுவதாய் இருக்க வேண்டும். பிறரை ஏளனம் செய்வதற்கும், நகைச்சுவை உணர்வுக்கும் சமயத்தில் வித்தியாசம் என்பது மிகவும் குறைவாக இருப்பதுபோல் தோன்றும். ஆனாலும் அந்த வித்தியாசத்தைப் புரிந்துகொள்வது முக்கியம். இதை மட்டும் நீங்கள் அறிந்துவிட்டால், மிகவும் வெற்றிகரமான மனிதராக நீங்கள் இருப்பீர்கள்.
நகைச்சுவை உணர்வில் இன்னொரு சுவாரஸ்யமான அம்சம் என்னவெனில், நமது குறைகளின் மீது நாமே சிரித்துக் கொள்வதாகும். நமது குறைகளை உணர்ந்து நாமே சிரித்துக் கொள்வதன் மூலம் அது நாளடைவில் திருத்தப்படும். இதன்மூலம் மற்றவர்கள் அதைப்பார்த்து சிரிப்பதை தவிர்க்கலாம்.
ஒருவேளையில் ஈடுபட்டிருக்கும்போது சீரியசாக இருக்க வேண்டும் என்று பலரும் பொதுவாக அறிவுரை சொல்வதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அப்படியென்றால், முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு, பிறரிடம்கூட எதையும் பேசாமல் இருந்து, நமது வேலையைப் பற்றி மட்டுமே பேசுவது என்று அர்த்தமல்ல. அப்படியெனில், அதுபோன்ற ஆலோசனைகளை உதறித் தள்ளவும். உலகின் பல வெற்றிகரமான தொழிலதிபர்கள் சிறந்த நகைச்சுவை உணர்வுள்ளவர்கள்.
http://i818.photobucket.com/albums/z...psvqzpfwnw.jpg
சில முக்கிய நன்மைகள்
* நல்ல நகைச்சுவை உணர்வானது, தகவல்தொடர்பில் உள்ள தடைகளைத் தகர்த்து, நீங்கள் ஒரு அணுகக்கூடிய நபர்தான் என்பதை மற்றவர்களுக்குத் தெரிவிக்கிறது.
* தப்பெண்ணங்களைத் தடுத்து, நட்புரீதியான சூழலை உருவாக்குகிறது.
* அகந்தையைக் கலைந்து நம்பிக்கையை அதிகரிக்கிறது.
* மற்றவர்களின் உணர்வுகள் புண்படாமல், சிலவகை செய்திகளைத் தெரிவிக்க, நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு உதவுகிறது.
* பகைமை மற்றும் தப்பெண்ணம் போன்றவைகளின் கடும் எதிரியாக நகைச்சுவை உணர்வு விளங்குகிறது.
* பிறரின் மீது நேர்மறை எண்ணத்தையும் வழங்குகிறது.
நகைச்சுவை உணர்வு வாழ்வில் இந்தளவிற்கு நன்மைகளை வழங்குகையில், அதை நாம் ஏன் முயற்சிக்கக்கூடாது? உண்மையில் அது எளிதான விஷயமில்லைதான். சரியான நேரத்தில் சரியான இடத்தில் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துவது உண்மையிலேயே ஒரு மாபெரும் கலை. இது சிலருக்கு இயல்பிலேயே இருக்கும். பலர் இந்தக் கலையை முயற்சி செய்துதான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பு
உங்களின் நகைச்சுவை உணர்வானது, மற்றவர்களை சந்தோஷப்படுத்துவதற்குத்தான் என்றில்லை. எப்போதும் தன்னம்பிக்கையாக இருப்பதற்கும், சுய கவலையிலிருந்து விடுபடவும், கஷ்டங்களை மறக்கவும், கவலையைப் போக்கவும் உங்களுக்கே உங்களின் நகைச்சுவை உணர்வு துணைபுரியும். நீங்கள் மேடையேறி பேசும் நகைச்சுவையாளராக இருக்க வேண்டியதில்லை. உங்களையும், உம்மைச் சுற்றியுள்ள சில நபர்களையும் சந்தோஷப்படுத்தினாலே போதும். வாழ்க்கை என்றும் இனிக்கும்.
இது கலியுகம் என்பதை விட இயந்திரயுகம் என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும். காரணம் இன்று மனிதர்கள் செய்ய வேண்டிய வேலைகளை இயந்திரங்கள் செய்கின்றன. இயந்திரங்கள் செய்ய வேண்டிய வேலைகளை மனிதர்கள் செய்கின்றனர். இன்றைய மனிதர்கள், மனிதர்களோடு பழகுவதை விட இயந்திரங்களோடே இல்லறம் செய்ததின் விளைவு ‘சிரிப்பு’என்ற உணர்வே இல்லாத இயந்திரமாய் மனிதர்கள் மாறிப்போனார்கள்.
இடுக்கண் வருங்கால் நகுக (துன்பம் வரும்போது சிரியுங்கள்), வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்ற பழமொழிகளை எல்லாம் மறந்த இனமாய் தமிழினம் வாழ பழக்கப்பட்டு வருகிறது.
“நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப”
-என பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியர்,தனது தொல்காப்பியத்தில் மனிதர்களின் எட்டு வகையான உணர்வுகளை பதிவு செய்ததில், நகை(சிரிப்பு) இதற்கே முதலிடம் வகுத்துள்ளார் என்றால் சிரிப்பின் மகத்துவத்தை நாம் அறிய வேண்டும்.
இன்றைய இயந்திர உலகில் மனிதன் தன் சுயத்தை, மனிதன் தன் அடையாளத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழப்பதும் ஓய்வற்ற உழைப்பு,போதிய ஊதியமின்மை,பணத்தேவை,பேராசை போன்ற காரணங்களே மனிதன் உண்மையாக சிரிக்க மறந்ததற்கு காரணம் எனலாம்.
இனி சிரிப்புக்களை சுமந்து வரும் சில பாடல்களை ரசிப்போம்
ரவி...எனக்கு அழுவாச்சியா வருது...உங்களை மாதிரி சப்ஜெக்ட் பிடிச்சு எழுத முடியலையேன்னு.. :)
என்னுடைய நண்பர் ஒருத்தர்..அவரும் என்னைப் போலவே டயட்..ப்ளஸ் ஆ.அ.கா.ஜ எல்லாம் செய்பவர்.. ஸோ
டயட் ப்ரகாரம் ஈவ்னிங்க் அவர் சென்று மூன்று முட்டை ஆம்லெட் சாப்பிடுவது வழக்கம்.. நைட் டின்னர் மோர் தான்..
கா.ஜ நாளில் ஈவ்னிங் எனக்கு ஃபோன்..
கண்ணா
என்னாச்சு
அதாவது வழக்கம் போல ஈவ்னிங்க் போய் எக் ஆர்டர் பண்ணினேனா..அப்புறம் தான் இன்னிக்கு சாப்பிடக்கூடாதுன்னு நினைவு வந்தது..
அப்புறம் என்ன பண்ணினே..
வேறென்ன செய்ய..ஆம்லெட்ல ஆனியன் போடாதேன்னுட்டேன் :)
**
CK - ஒரு பக்கம் 108 காயத்ரி - இன்னொருபக்கம் - ஒரு கருவை வெளிவராமல் உள்ளே தள்ளுவிக்கும் செயல் - உங்களை புரிந்துக்கொள்ளவே முடியவில்லை - நீங்கள் நல்லவரா ? கெட்டவரா ? ( டண்ட டண்ட டையிங் ---- back ground music )
நகைச்சுவை உணர்வு ஒரு வரம்! பதிவு 1
இந்த பாடல் இன்றைய சூழ்நிலைக்கும் எவ்வளவு பொருத்துகிறது பாருங்கள் !!
https://www.youtube.com/watch?v=54qGTIOkuww
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன்
செயலைப் பார்க்கச் சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன்
செயலைப் பார்க்கச் சிரிப்பு வருது
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
லாரடி லாரடி லாரடி பாரடி
மேடை ஏறிப் பேசும்போது
ஆறு போல பேச்சு
மேடை ஏறிப் பேசும்போது
ஆறு போல பேச்சு
கீழே இறங்கிப் போகும்போது
சொன்னதெல்லாம் போச்சு
கீழே இறங்கிப் போகும்போது
சொன்னதெல்லாம் போச்சு
காசை எடுத்து நீட்டு
கழுதை பாடும் பாட்டு
ஆசை வார்த்தை காட்டு
உனக்குங் கூட ஓட்டு
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன்
செயலைப் பார்க்கச் சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன்
செயலைப் பார்க்கச் சிரிப்பு வருது
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
உள்ள பணத்தைப் பூட்டி வச்சு
வள்ளல் வேஷம் போடு
உள்ள பணத்தைப் பூட்டி வச்சு
வள்ளல் வேஷம் போடு
ஒளிஞ்சு மறைஞ்சு ஆட்டம் போட்டு
உத்தமன் போல் பேசு
ஒளிஞ்சு மறைஞ்சு ஆட்டம் போட்டு
உத்தமன் போல் பேசு
நல்ல கணக்கை மாத்து,
கள்ளக் கணக்கை ஏத்து
நல்ல நேரம் பாத்து
நண்பனயே மாத்து
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன்
செயலைப் பார்க்கச் சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன்
செயலைப் பார்க்கச் சிரிப்பு வருது
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
https://www.youtube.com/watch?v=7cT4XQiwxYE
வயதாக ஆக எண்ணங்களுக்கும் வயதாகின்றது..
ஒரு மாதிரி கொஞ்சம் விட்டேத்தியான மனோபாவம் வருகிறது..
கொய்ங்க் என்று ர்ர்ரூம் என்ற ஸ்கூட்டி சத்தத்தில் சிகப்புச் சுடிதார் படபடக்கத்
தாண்டிச் செல்லும் இளம் பெண் கண்ணில் பட்டாலும் ஈர்ப்பில்லை..ம்ம்
பாவம் கொழந்தை..என்ன படிக்குதோ..பார்த்தா க்ல்யாணம் ஆகாதவள் போல் தோன்றுகிறது..
நல்ல இடமா அமையணும்
என நினைத்து மறு நொடி மறந்தும் போகிறது..
ம்ம் என்னவாழ்க்கை இது என சலிப்பும் உண்டாகின்றது
ஆழ்கடலில் குதிந்தங்கே நீச்ச லிட்டு
...அணுஅணுவாய் அங்குமிங்கும் தேடித் தேடி
மீள்வதற்காய் முத்தெடுத்து மேலே வந்து
..மீண்டுந்தான் கடலினிலே மூழ்கி மூழ்கி
வீழ்ந்துநிதம் தேடுவதா பூமி வாழ்க்கை
..விரக்தியினிலே மன்முந்தான் சலிப்பைக் கொள்ள
பாழ்நெஞ்சே கேள்வாழ்க்கை இஃதே மாயை
.. பரமனவன் பதம்நாடு நிஜமும் அதுவே..
என்று தான் சொல்லிக் கொள்ள வேண்டியதாகிறது..
இதையே ஒள்வை நாலடியில் சொல்கிறார்..
ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு
பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.
வாழ்க்கையில ஒருஸ்டேஜில் விரும்பிய பொருள் மறு ஸ்டேஜில் அவ்வளவாய் ஆர்வத்தைக் கூட்டுவதில்லை..
கல்லூரி இளைஞனிடம் போய் இந்தாடா இது தான் நீ ஆசைப்பட்டு விளையாடிய பேட்ட்ரி கார் என்றால் ஓ.கேயா சொல்வான்..ம்ஹூம் என்று
தான் சொல்வான்..
எனில் சிறுவயதில் குட்டிக்கார் மீதுகாதல் பின் இளமையில் பெரிய கார், பெரிய கைகாரி மீது காதல்கள்..
அதுவே கல்யாணம் கண்டு காட்சி எல்லாம் கண்டு குடும்பசூழலில் உழன்று வயதானால்..காதலும் கசந்துவிடும்..
பின் என்ன தான் செய்வது..
வாழ்க்கை ஆரம்பத்தில் :அறவேலைகள் பல செய்யவேண்டும். பின் தீய எண்ணம் கொள்ளாமல் நல்லவழியில்
பொருள் ஈட்டவேண்டும்..கண்ணுக்கினிய காதலியை மணந்து அல்லது அம்மா அப்பா சொன்னதனால் கண்ணுக்கினியவளை
மணந்து கருத்து வேறுபாடு கொள்ளாமல் ஜாலியாக இருந்து குழந்தை குட்டி பெற்றுக் கொண்டு இருப்பதே இன்பமாகத் தான் இருக்கும்..ஆனால்
வயதனால் இம்மூன்றையும் விட்டு இறைவனை நினைந்தால் பேரின்ப வீடு என்னும் மொட்சம் நமக்குக் கிட்டுமாம்..
ம்ம்
*
சரி இந்த ஜோடிகள் என்ன சொல்றாங்க..
https://youtu.be/KlK5J-LEF1c
நகைச்சுவை உணர்வு ஒரு வரம் ! :-D:):smile2::???:
பதிவு 2
குலுங்க குலுங்க சிரிக்கும் போது எல்லோருமே குழந்தையாகி விடுகிறோம் - கவலைகள் , காற்றில் வால் இல்லாத பட்டம் போல மிதக்கின்றன ...
https://www.youtube.com/watch?v=MWlbSAfCnq0
சிரிப்பில் உண்டாகும் ராகம் - அபூர்வ ராகம் - அனுபவித்தால் தான் இந்த ராகத்தை புரிந்து கொள்ள முடியும்
https://www.youtube.com/watch?v=hkkByqt0qgU
ரவி சார்!
உங்களுடைய புதிய தலைப்பு நான் எப்போதுமே மிக மிக ரசிக்கக் கூடியது. சிரிப்பைப் பற்றிய தங்களது பல்வேறு முன்னோட்டக் கருத்துக்களை ரசித்தேன். பதிவைப் பார்த்தாலே குபீர் சிரிப்பை வரவழைக்கப் போகிறீர்கள் என்பது மட்டும் புரிகிறது. சிரிப்பு சம்பந்தமான திரைப்பட பாடல்களையும் இணைத்து தருவதற்கு நன்றிகள். எப்போதும் போல இந்தத் தலைப்பையும் பின்னி எடுத்து விடுவீர்கள் என்பது சொல்லித்தான் தெரிய வேண்டுமா? சிரிப்பாய் சிரிப்பதற்கு பதில் வாழ்க்கையில் கள்ளமில்லாமல் சிரித்து வாழ்வதுதான் சிறந்த வாழ்க்கை என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளவன் நான்.
தெனாலி ராமனுக்கு ராயர் ஒரு விஷயத்தில் மரண தண்டனை கொடுத்தவுடன் மற்றவர் ராமன் மீது இரக்கம் காட்ட ராயரை வேண்ட, அதற்கு கிருஷ்ண தேவராயர் 'சரி! உன் இஷ்டப்படியே உன் இறப்பு இருக்க முடிவு செய்து கொள். நீ எப்படி இறக்க விரும்புகிறாய்? எனக் கேட்க, அதற்கு ராமன் 'அரசே! நான் கிழவனாகி இருக்க விரும்புகிறேன்' என்று போட்டானே ஒரு போடு. புத்திசாலித்தனம் கலந்த மேதையின் அறிவார்ந்த நகைச்சுவை அல்லவா அது! தானும் தப்பித்து மற்றவர்களையும் மகிழ்வித்த அதி புத்திசாலித்தனமான நகைச்சுவை உணர்வு. இது போல நிறைய சங்கதிகள் தங்கள் பதிவில் வரப்போகிறது என்பது தெரிகிறது. வாழ்த்துக்கள்.
வாழ்க்கை என்பது இப்படி யதார்த்தத்தை மீறி இருக்கக் கூடாது. வயது மீறி வரம்பு மீறி உறவுகள் அமைத்துக் கொள்ளக் கூடாது என்பதை மிக அழகாக விளக்கும் பாடல். கல்யாணம் என்பது விளையாட்டல்ல. அதில் விபரீத விளையாட்டுக்கள் விளையாடுவது பெரும் தீங்கில் போய் முடியும். அபூர்வ ராகங்கள் அபஸ்வர ராகங்களாகி விட்டால் இப்படித்தான் எல்லோரும் கைகொட்டி சிரிப்பார்கள் இல்லையா ரவி சார்?
'இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று' என்று சொல்லிய இயக்குனர் 'இவருக்கு ஜோடி இவரா?' என்று எல்லோரையும் வாய் பிளக்க வைத்த 'அபூர்வ ராகங்கள்' படத்தில் ஷேக் முகம்மது பாடிய பாடல். முகக் கோணல்களில் ஊரார் சிரிசிரியென்று சிரிக்க, வயதொத்தாத ஜோடிகள் வருந்தி ஒடியும் அளவிற்கு கேலிக்கு ஆளான கதை.
https://youtu.be/fQsH_Wcep68
:) :) ஓய் திட்டறீரா பாராட்டறீரா..
நகைச்சுவை உணர்வு ஒரு வரம் எனப் போட்டுவிட்டு சிரிப்பைச் சுமந்து வரும் பாடல்கள் போடும் ரவிக்கு ஒரு ஓ :) அவரது உழைப்பு நம் எல்லோருக்கும் தேவை..
‘’ நல்ல நேரம் பார்த்து
நண்பனையே மாத்து” எதற்காக ச் செவ்வெழுத்துக்கள் எனத் தெரியவில்லை..
*
கை கொட்டிச் சிரிப்பார்கள் நல்ல பாடல் தான்.. உங்கள் உபபதிவுகள் எல்லாம் மிக அருமையாக இருக்கின்றதுவாசுசார்..:)
மதுண்ணா!
சுந்தரபாண்டியன் சார் புண்ணியத்தால் பலவருடங்களுக்கு முன் கேட்ட
'கல்யாணத்தை மனதில் வைத்து கையைத் தொட்டுப் பார்க்கவா
கம்பன் சொன்ன வார்த்தையெல்லாம் நான் சொல்லவா
கண்ணே நான் சொல்லவா'
பாடலை மனதார கேட்டு ரசித்தேன்.
இப்பாடலின் சரணங்கள் இப்போது கேட்டவுடன் நன்றாக நினைவுக்கு வந்து விட்டன. இதில் வேடிக்கை பார்த்தீர்களா? அப்படியே இந்த டியூனை நடிகர் திலகத்தின் 'உத்தமன்' படத்தில் 'நாளை நாளை என்றிருந்தேன்' டூயட்டில் மகாதேவன் யூஸ் பண்ணியிருப்பார்.
'கல்யாணத்தை மனதில் வைத்து' பாடலில்
'குழல் வளர்ந்து கொடிகளைப் போல் பாதம் தழுவுது
குறுகுறுத்த விழியில் வண்டு மோகம் பாடுது'
என்ற சரணங்களை கவனித்தால் 'உத்தமன்' பட 'நாளை நாளை என்றிருந்தேன்' பாடலின்
'பூமியெங்கும் பச்சை சேலை மணமகள் கோலம்
பூத்த பூக்கள் பார்க்கும் பார்வை விழிகளின் ஜாலம்'
சரண டியூனை அப்படியே ஒத்திருக்கும். ம்.:)
சின்னா!
எங்கேயும் அதிகம் கிடைக்காத ரேர் சாங்க்ஸ் எவ்வளவு போடுறோம். கேக்குறீரா?:) அதை விட்டு சண்டை மூட்டி விடப் பாக்குறீரே!
10 விஜயகுமாரி பாட்டைப் போட்டால்தான் நீரெல்லாம் அடங்குவீர்.:)
" கொய்ங்க் என்று ர்ர்ரூம் என்ற ஸ்கூட்டி சத்தத்தில் சிகப்புச் சுடிதார் படபடக்கத்
தாண்டிச் செல்லும் இளம் பெண் கண்ணில் பட்டாலும் ஈர்ப்பில்லை..ம்ம்
பாவம் கொழந்தை..என்ன படிக்குதோ..பார்த்தா க்ல்யாணம் ஆகாதவள் போல் தோன்றுகிறது..
நல்ல இடமா அமையணும்" - ck
ck - மிகவும் இந்த வரிகளை ரசித்தேன் - இப்படிப்பட்ட மனப்பக்குவம் , கட்டுப்பாடு - சற்றே என்னை மீண்டும் சிந்திக்க வைத்தன - உண்மையில் ck தான் எழுது இருக்காரா - அல்லது மண்டபத்தில் யாராவது எழுதி அதை இந்த தமிழ் திருச்சபையில் வந்து வாசிக்கிறார என்று தான் புரியவில்லை .... என் அடுத்த பதிவின் தலைப்பு " புரிந்த புதிரும் , புரியாத ck வும் "
ரவிங்காணும்.. மனப்பக்குவம்ங்கறது வேறு.. ஜாலியா இருக்கறதுங்கறது வேறு..தவிர மற்றவர்களிடமிருந்து காப்பி அடித்தால் அதைச் சொல்லும் மனத்திட்பமும் எனக்கு இருக்கிறது என்று ஆன்றோர்கள் சொல்வார்கள்..:)
எனக்கு நகைச்சுவை உணர்வுகொஞ்சம் கம்மி தான்.. எப்படித் தெரிஞ்சது தெரியுமா..கடந்த பத்து நிமிஷமாய்ச் சிரிச்சுண்டே இருக்கேங்காணும்.. எதுக்குத்தெரியுமா..ஒரு கல்லூரி மாணவி என நினைக்கிறேன்..ஃபுல் ஹிலாரியஸா அதேசமயத்துல பக்குவமாகவும் எழுதியிருக்காங்க..நீங்களும் சிரிப்பதற்காக..
*
நன்றி மிஸ் விவி.. முக நூல்
*
ப்ரூக்பீல்ட் மாலில் ஒரு படம் பார்க்கப் போனால் ஒரு டிக்கெட் விலை 120 ரூபாய். ஆன்லைன் புக்கிங் செய்தால் இன்னும் கூடுதல் கட்டணம். தியேட்டர் ஏரியாவுக்குள் போகும்போது பையை சோதனையிடுவார்கள். சாப்பாடு எதுவும் கொண்டு போகக் கூடாது.
எப்போதுமே பசியில் இருக்கும் நாங்கள் (வளர்ர புள்ளீங்கல்ல) எப்படியாவது எச்சில் முழுங்கிக் கொண்டு உட்கார்ந்தாலும் பக்கத்து சீட்காரர்கள் மினி மீல்ஸும் ஆளுயர கோக் டம்ளரும் வாங்கிக் கொண்டு வந்து உட்காரும் போது அவர்களுக்கு எங்களால் வயிற்று வலி வந்துவிடக் கூடாதென்னும் ஒரே நல்லெண்ணதோடு food court போனால் கிராஸ்கட் கமலா ஸ்டோர் வாசலில் பத்து ரூபாய்க்கு விற்கும் பாப்கார்னை 80 ரூபாய் என்பான். 20 ரூபாய் பாப்கார்னை 120 ரூபாய் என்பான்.
டிக்கெட் காசுக்கே பர்சை வழித்து சில்லறை பொறுக்கி கொடுத்திருப்போம். மறுபடி காலேஜ் பேக் ஹேண்ட் பேக் என எல்லாவற்றிலும் துழாவி ஒரு 100 200 தேற்றி எல்லாருக்குமாக ஒரே ஒரு பாப்கார்ன் ஒரே ஒரு கோக் (ஸ்ட்ரா எடுக்க மறந்துடாதீங்கடி) வாங்கி வெற்றிக் களிப்போடு தியேட்டருக்கு திரும்புவதற்குள் பாதி படம் ஓடிவிடும். (இருக்கற 100 ரூபாய்க்கு பாப்கார்ன் மட்டுந்தான் வாங்க முடியும்ன்னு தெரிஞ்சாலும் வரிசைல நின்னு ஏய் ஐஸ்க்ரீம் வாங்கலாமா ஏய் காம்போ வாங்கலாமா ஏய் துபாய வாங்கலாமான்னு கொஞ்ச நேரம் கன்பீசன்ல திணறற வரைக்கும் ஆப்பரேட்டர் அன்கிள் படம் போடாமயா இருப்பாரு?)
அதிலும் ஒருத்தி உண்டு. அவள் கையில் பாப்கார்ன் போனால் மொக்கைப் படமாக இருந்தாலும் மெய்மறந்து பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டே படத்தில் லயித்துவிடுவாள். அதனால் கடைசியாக தான் அவள் கையில் பாப்கார்ன் கொடுப்போம். மீறி முதலிலேயே அவள் எடுத்துவிட்டால் அவள் அதைத் திருப்பி தரும் வரை ஸ்க்ரீனை பார்க்காமல் அவளைப் பார்த்துக்கொண்டிருப்போம். (இரு தரேன் குறுகுறுன்னு பார்க்காத)
இந்த கேப்பில் 'எங்க இருக்க வீட்டுக்கு எப்ப வருவ அங்கேர்ந்து கரெக்டா பஸ் ஏறிடுவேல்ல' என எல்லாருக்கும் வரிசையாக போன் வேறு. படம் முடித்து வெளியே வரும்போது வெளியே பெருமழை பெய்து ஓய்ந்திருக்கும். "இவளே பஸ்ஸுக்கு காசிருக்குல்ல?இல்லாட்டி இந்தா பத்து ரூபாய்" என ஒருத்தி நீட்டுவாள்.
'தமிழே எனக்கு கொஞ்சம் தான் புரியும் இதுல மலையாள படத்துக்கு வேற இழுத்துட்டு வரீங்களேடி' என புலம்பிக்கொண்டே இந்திக்காரி கிளம்புவாள். நிவின் பாலி வீட்டில் தோட்டக்காரியாகவாவது சேர வேண்டும் என திட்டம் போட்டுக்கொண்டே வீட்டுக்கு கிளம்பி வருவோம்.
இதே ப்ராசஸ் அடுத்த மாதமும் தொடரும்.
#நாங்க_படம்_பாக்க_போற_கதை
வாசு - உங்கள் கண்ணப்ப நாயினார் பதிவுகள் மிகவும் அருமை - உங்களின் தன்னடக்கம் - என்னை புல்லரிக்க வைத்துவிட்டது - எனது குல தெய்வமான குசலாம்பாள் சமேத சரளாநாதேஸ்வரர் அவரை வணங்கி , புள் அரித்த இடங்களில் தடிப்பு வராமல் இருக்க விபூதியை உடலெங்கும் தடவிக்கொண்டேன் . சில கொப்பளங்கள் மறைந்துவிட்டன .. யார் சொன்னது உங்களுக்கு ஆன்மிகம் வராது என்று ?? நீங்கள் எழுதுவதில்லை .. நீங்களும் எழுதினால் , நான் துண்டைக்காணோம் , துணியைக்காணோம் என்று என்றோ ஓடியிருப்பேன் . அருமையான பாடல்கள் . திருவருட்செல்வரில் இந்த வேடத்தை நடிகர் திலகம் நடித்திருக்க வேண்டும் - நடிப்பில் உருகி இறைவன் தன் கண்களை தோண்டி ந .தி க்கு கொடுத்திருப்பார் . பக்தி என்ற சொல்லுக்கு நல்ல உதாரணம் நம் இந்து மதத்திலிருந்து சொல்ல வேண்டுமென்றால் ஒன்று கண்ணப்பர் அடுத்த ஒன்று ஆண்டாள் . மிக்க நன்றி