http://i67.tinypic.com/2hqe0et.jpg
Printable View
தே.தீனதயாளன் எழுதிய, 'பெரியவர் காமராஜர்' நூலிலிருந்து: கடந்த, மே, 1973ல் திண்டுக்கல்லில் பார்லிமென்ட் இடைத்தேர்தல் நடந்த போது, தலைவர் காமராஜர் மதுரையில் தங்கி, மாலையிலிருந்து, நள்ளிரவு வரை, தொகுதியில் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்து வந்தார்.
ஓட்டுப்பதிவு நாளன்று, ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் சென்று, ஓட்டுப்பதிவு நிலவரத்தை விசாரித்து வந்தார், அப்போதைய தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மூப்பனார். வழியில், மதுரை மாவட்ட காங்கிரஸ் தலைவர், பழ.நெடுமாறனை சந்தித்து ஓட்டுப்பதிவு நிலவரம் பற்றி பேசி கொண்டிருந்தபோது, காங்., ஜெயிக்காது என்று கணித்து விட்டனர்.
நெடுமாறனிடம், மூப்பனார், 'ஓட்டு எண்ணும் சமயம் தலைவர் இங்கு இருக்க வேணாம்; நாளைக்கே அவரை சென்னைக்கு அனுப்பிடலாம்...' என்றார்.
அன்று இரவு, காமராஜர் தங்கியிருந்த இடத்திற்கு வந்த கட்சிக்காரர்கள், 'ஜெயித்து விட்டோம்...' என்றனர். 'எனக்கென்னவோ, எம்.ஜி.ஆர்., கட்சி தான் ஜெயிக்கும்ன்னு தோணுது; பார்க்கலாம்...' என்றார் காமராஜர். கட்சிக்காரர்கள் எல்லாம் போன பின், அங்கு வந்த மூப்பனார் மற்றும் நெடுமாறன், 'ஐயா, நமக்கு ஜெயிக்கிற வாய்ப்பு இல்ல...' என்று கூறி, 'ஓட்டு எண்ணும்போது, நீங்க இருக்க வேணாம்; நாங்க பாத்துக்கிறோம். நீங்க புறப்படுங்க...' என்றனர்.
'தோத்துப் போவோம்கிறதுக்காக, நான் ஏன் ஊருக்கு போகணும்... நம்ம கட்சி தோத்து போகுதேங்கற கவலையோட வர்ற நம்ம ஆளுங்களுக்கு ஆறுதலும், தைரியமும் கூற வேணாமா? அதுவும், 20 நாளா, வேலை வெட்டி எல்லாம் விட்டுட்டு இரவு, பகலா வேலை செய்தவனை பார்த்து பேசாம போனா எப்படின்னேன்... தோக்கற சமயம் தான் நாம அவங்களோட இருக்கணும்...' என்றார் காமராஜர்.
அவ்வாறே, தேர்தல் தோல்வியினால் சோர்ந்து போய், தன்னை சந்திக்க வந்த தொண்டர்களுக்கு, ஆறுதல் கூறி, தேற்றினார் காமராஜர்.
கடிதம் எழுதும் போது, உட்கார்ந்து எழுதுவதை விட, நின்றபடி எழுதிப் பாருங்கள்; அனாவசிய வார்த்தைகள் இல்லாமல், கடிதம் சுருக்கமாக முடிந்து விடும்!
- அனுபவஸ்தர்.
courtesy dinamalar thinnai
நேற்று புதியதலைமுறை டிவி யில் பேசிய பண்டூரிட்டி ராராமசந்திரன் 1967 ல் முதல் ஆமைசரவை பட்டியல் தயாரித்து முதல் பிரதிகளை ஒன்றை எம் ஜி ஆர் க்கும் ஒன்றை கவர்ணருக்கும் வழங்கினார் அறிஞர் அண்ணா என்ற சரித்திர முக்கிய நிகழ்ச்சியை கூறினார்
தி மு க எம் ஜி ஆர் கட்சி என்றே வளர்ந்து ஆட்சியை பிடித்தது
எம் ஜி ஆர் சக்தி அழிக்க முடியாத
அழியாஅழியாத சக்தி
இன்று மக்கள் திலகம், புரட்சித் தலைவரைப் பற்றி இழிவாகப் பேசிய போதைத் தலைவரின் மனைவி பிரமலாதாவின் அநாகரீகமான பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறுகின்ற உண்ணாவிரதப் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
துப்பாக்கி குண்டு துளைத்தபின்பும் அந்தக் குரலில் இருந்த உணர்ச்சிகள், உருக்கம், ஏற்ற இறக்கங்கள் அபாரமானவை. வெகு அபூர்வமாக ஒரு சில இடங்களில் அவரது குரலில் சிறிது சிரமம் தெரியுமே தவிர கடைசி வரை உச்சரிப்புக்கு வெகுவாக முக்கியத்துவம் கொடுத்து தமிழை அழகாகப் பேசியவர் மக்கள் திலகம். குண்டடிபட்ட பின்பும் அவரது பேச்சு எல்லோருக்கும் தெளிவாகப் புரிந்தது. குண்டடிபட்ட பின்னர் சுமார் 40 படங்கள் அந்தக் குரலைக் கொண்டே பேசி நடித்து வெற்றிகரமாக ஓடின என்பதை விட வேறு எந்த ஆதாரமும் இதற்குத் தேவையில்லை. மிமிக்ரி என்ற பெயரில் எத்தனையோ பேர் அந்தக் குரலைப் பழிக்கும் விதமாகப் பேசி வருகிறார்கள். குண்டடி படுவதற்கு முன்னர் இருந்த எம்.ஜி.ஆரின் குரலை மட்டுமல்ல, குண்டடி பட்டபின்னர் இருந்த அவரது குரலைக்கூட யாராலும் காப்பிஅடிக்க இயலவில்லை என்பதே இன்று வரை நிதர்சனமான உண்மை.
தலைவர் குண்டடி பட்டபின்புதான் அவரது குரல் தனித்தன்மை பெற்றது..அது அவருக்கு அடையாளமா அமைந்தது..எனக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பிடித்தது அந்த குரல்தான்..எங்களை போன்ற ஏழைகளின் உரிமைக்குரல்..
http://i68.tinypic.com/212br5v.jpg
கடந்த 2006ம் ஆண்டு மறைந்த நடிகர் எஸ் என் கெம்பையா (உலகம் சுற்றும் காவியத்தில் புத்த துறவியாக நடித்தவர்) அவர்களை அவரது இல்லத்தில் (சத்தியமங்கலம்) சந்தித்து அவரின் திரைத்துறை அனுபவங்களை கேட்டேன். அந்தப்பேட்டி இதயக்கனி மாத இதழில் வெளியானது. நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.
எஸ். ரவிச்சந்திரன்
http://s9.postimg.org/nfyi0yncv/image.jpg
இன்று மாலைக்காட்சி
கோவை - தர்சனா -
மாட்டுக்காரவேலன்
அரங்கு நிறைந்தது.
தகவல் - திரு வி பி ஹரிதாஸ்.
புகைப்படங்கள் - திரு சாமுவேல்