இரங்கல் செய்தி
---------------------------
http://i67.tinypic.com/11v5cfr.jpg
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தோற்றுவித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை காத்து வந்தவரும், தமிழக முதலமைச்சரும்
ஆகிய செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் காலமானார் என்கிற செய்தி , தமிழக
மக்களையும், குறிப்பாக அ. தி.மு.க. தொண்டர்களையும் அதிர்ச்சி மற்றும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது .
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய , இறைவன் எம்.ஜி.ஆர். அவர்கள் அருள்
புரிவாராக
தமிழக முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பாக எங்களது
ஆழ்ந்த இரங்கலையும் , துயரத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் .
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் துவக்கிய இயக்கத்தை , மேலும் செம்மையாக்கி , இந்த நெருக்கடியான நேரத்தில் , துவண்டு விடாமல் , பக்தர்கள் /தொண்டர்கள் ஒன்று கூடி, ஒற்றுமையுடன் , கழகத்தை கட்டி காப்பதில் உறுதி
எடுத்து கொள்ள வேண்டிய நேரமிது .
ஆர். லோகநாதன்
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு .