மாலை மலர் -06/10/18
http://i63.tinypic.com/14m883l.jpg
Printable View
மாலை மலர் -06/10/18
http://i63.tinypic.com/14m883l.jpg
மக்கள் குரல் -06/10/18
http://i68.tinypic.com/2jdrn69.jpg
தினச்சுடர் ,பெங்களூரு
http://i68.tinypic.com/2hhpx7d.jpg
மக்கள் திலகம் அவர்களின் வித்தியாசமான ஆங்கிலோ இந்தியன் பெண் வேடத்தில் சூப்பர் பாடல்.
பொதுவாக ஆண் நடிகர்கள் பாடும் போது பின்னணி பாடுபவர்கள் ஆண் பாடகர்களாக இருக்கும். பெண் நடிகைகள் பாடும் போது பின்னணி பாடுவது பெண் பாடகிகளாகத்தான் இருக்கும். ஆனால் பெண்ணுக்கு ஆண் பாடகரும், ஆணுக்கு பெண் பாடகரும் பின்னணி பாடிய சில அரிய நிகழ்ச்சிகள் நடந்ததுண்டு.
படம் பார்க்கும் போது அந்த சுவாரஸ்யத்தில் நமக்குத் தெரியாது. யாராவது சொல்லும் போதோ, அல்லது பத்திரிகையில் படிக்கும் போதோ தான் நமக்குத் தெரியும். இது போல் பெண் வேடமிட்ட நடிகர் சோவிற்கு எல்.ஆர்.ஈஸ்வரி ஒரு பாடல் பாடி உள்ளார்.
படம் நான் யார் தெரியுமா.
ரம்பையின் காதல் என்ற படத்தில் ஒரு ஆண் நடிகருக்கு SC - கிருஷ்ணன் உடன் இணைந்து ஆணுக்காக ஜிக்கி பாடி உள்ளார்.
இதே பாணியில் 1968 ல் வெளிவந்த தேவர் பிலிம்ஸ் காதல் வாகனம் படத்தில் வில்லன் அசோகனை ஏமாற்ற ஆங்கிலோ இந்தியன் பெண் வேடத்தில் புரட்சித் தலைவர் அவர்களின் அற்புத நடிப்பில், எம் ஜி ஆர் அவரகளுக்காக முழுப்பாடலையும் எல்.ஆர்.ஈஸ்வரி பாடி உள்ளார்.
கே.வி.மகாதேவன் இசையில் ஒரு வித்தியாசமான பாடல்.
இன்னா மேன் பொண்ணு நான்
ச்சும்மா ச்சும்மா பார்க்காதே... Thanks Friends...
தினத்தந்தி -07/10/18
http://i65.tinypic.com/qn8djk.jpg
பாக்யா வார இதழ் -12/10/18
http://i66.tinypic.com/nd99ts.jpg
http://i65.tinypic.com/2ekktww.jpg
http://i65.tinypic.com/ac9q0.jpg
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரை மற்றும் அரசியல் உலகின் "ஒளி விளக்கு "
பொன்விழா நிகழ்ச்சி அரங்கேற்றம் .
------------------------------------------------------------------------------------------------------------------------
கடந்த ஞாயிறு (30/9/18) அன்று சென்னை தி.நகர் பி.டி.தியாகராயர் அரங்கத்தில்
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் அரசியல் உலகின் "ஒளி விளக்கு " திரைப்பட பொன்விழா நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது .
அரங்கத்தில் காலை 11 மணியளவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . வெளியூர் பக்தர்கள் உள்பட சுமார்
50 நபர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர் .அதன்பின் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் திரை மற்றும் அரசியல் பணிகள் குறித்து பக்தர்கள் கருத்தரங்கத்தில்
பங்கேற்றனர் . பெங்களூரில் இருந்து, திரு.எம்.ஜி.ஆர். மணி, திரு.சடகோபன், திரு.தனபால், திரு.எம்.ஜி.ஆர். ரவி, திரு.சம்பங்கி, திரு.சந்திரசேகரன், சென்னை,
திரு.அஷ்ரப் , திருவாரூர், திரு.புருஷோத்தமன், கோவை மற்றும் சிலர் கலந்து கொண்டு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். புகழுக்கு பெருமை சேர்த்தனர் .
கருத்தரங்கத்தின் முடிவில் திரு.மேகலா சித்ர வேல், (எழுத்தாளர் ), கவிஞர் திரு. முத்துலிங்கம், திரு.எம்.ஏ. முத்து , (உடைஅலங்கார நிபுணர் ) ஆகியோர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு புகழாரம் சூட்டும் வகையில் பேசினர்
அனைவரையும் வரவேற்று திரு. துரை கருணா (பத்திரிகையாளர் ) உரை நிகழ்த்தினார் .இறுதியில் "ஒளி விளக்கு" [பொன்விழா மலர் , உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ். ராஜு அவர்களால் வெளியிடப்பட்டு, திரு. முத்துலிங்கம்
மலரை பெற்றுக்கொண்டார் . நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உள்ளூர், மற்றும் வெளியூர் பக்தர்கள் சுமார் 200 நபர்களுக்கு அருகில் உள்ள பாலாஜி பவன் ஓட்டலில் மதிய உணவு ஏற்பாடு உரிமைக்குரல் மாத இதழ் சார்பில் செய்யப்பட்டிருந்தது .
பிற்பகல் 3 மணியளவில் ஒளிவிளக்கு, மற்றும் 1968ல் வெளியான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படங்களின் தொகுப்பு காண்பிக்கப்பட்டது .
மாலை 4 மணி முதல் இரவு 7 மணிவரையில் இடைவிடாது ஸ்ரீதர் நவராக்ஸ் குழுவின் இன்னிசையில் புரட்சி தலைவரின் புரட்சி கீதங்கள் இசைக்கப்பட்டன .
இரவு 7.30 மணியளவில் சென்னை மாநகர முன்னாள் மேயர் திரு.சைதை துரைசாமி, மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா நிகழ்ச்சி பற்றிய சிறப்புகள் பேசும்போது , தமிழக அரசு சார்பில் 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில்நூற்றாண்டு விழா நடத்தி முடித்து, ஒளிவிளக்கு பொன்விழா காணும் நேரத்தில் சென்னையில் நிறைவு விழா நடத்தி புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு பெருமை சேர்த்ததற்கு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி மற்றும் சக அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார் .
சமீபத்தில் இலங்கையில் புரட்சி தலைவர் பிறந்த இடத்தில நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசியதை பற்றி பெருமையாக பேசினார் .
நிகழ்ச்சியின் முடிவில் முக்கிய நபர்களுக்கும், வெளியூர், மற்றும் உள்ளூர் அமைப்புகள் சார்ந்தவர்களுக்கும், நினைவு பரிசு, வழங்கி கௌரவித்தார் .
முன்னதாக பெங்களூரு பக்தர்கள் திரு. சைதை துரைசாமி அவர்களுக்கு மலர்மாலை, பெங்களூரு குல்லா,அணிவித்து மரியாதை செய்தனர் .
உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜு அவர்களுக்கும், பல்வேறு அமைப்புகள் சார்ந்தவர்கள் ,மற்றும் வெளியூர் பக்தர்கள் ஒளிவிளக்கு பொன்விழா நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியதற்கு பொன்னாடை அணிவித்து
மகிழ்வித்தனர் .
ஒளிவிளக்கு பொன்விழா நிகழ்ச்சி பற்றிய புகைப்படங்கள் தொகுப்பு
http://i68.tinypic.com/15d5gt1.jpg
http://i67.tinypic.com/29z3hwj.jpg
திரு.முத்துலிங்கம் புரட்சி தலைவர் படத்திற்கு மலரஞ்சலி
திரு.பி.எஸ். ராஜு, புரட்சி தலைவர் படத்திற்கு மலரஞ்சலி
http://i64.tinypic.com/10r4prd.jpg
திரு.முத்துலிங்கம் குத்துவிளக்கேற்றும் காட்சி
http://i68.tinypic.com/xgk7xz.jpg
திரு.எம்.ஏ. முத்து (உடைஅலங்கார நிபுணர் ) குத்துவிளக்கேற்றும் காட்சி
http://i67.tinypic.com/s5v9ep.jpg
திரு.துரை கருணா (பத்திரிகையாளர் ) புரட்சி தலைவருக்கு மலரஞ்சலி
http://i64.tinypic.com/20awa6g.jpg