MAY 01 இதய தெய்வம் அவர்களின் திருமணநாள்
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...f5&oe=5ECEF694
Printable View
MAY 01 இதய தெய்வம் அவர்களின் திருமணநாள்
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...f5&oe=5ECEF694
இன்று 01/05/2020 - காலை 11.30 மணிக்கு zee திரையில், உழைப்பாளர்களை மைய படுத்தும் கதை களம். ¶
நடிகர்திலகம் நடித்த - 'இரும்புத்திரை' - படத்தை காண தவறாதீர்கள். ¶
நடிகர்திலகம், வைஜந்திய மாலா, சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
நடிகர் திலகத்தின் திருமணநாள் இன்று May 01
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...41&oe=5ED0A1EC
பாசமலர் தொடர்பான முந்தைய பதிவில் படம் பார்க்க நானும் நண்பரும்.சென்றதும் தியேட்டரில் அன்று மகளிருக்கான சிறப்பு காட்சியாக பாசமலர் ஆகி விட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பினோம் எனச் சொல்லியிருந்தேன், வேண்டுமானால் அன்று இரவுக் காட்சி பார்த்திருக்கலாம் ஆனால் நாங்கள் ஹாஸ்டலுக்கு வந்து சேர வேண்டும் முப்பது வருடங்களுக்கு முந்தைய ஹாஸ்டல் கட்டுப்பாடுகளை சொல்லவே தேவையில்லை,
மறுநாள் திங்கள் அன்றைய மாலைப் பொழுது எப்போது வரும் என்ற சிரமம் எல்லாம் தெரியாமல் முதல் நாள் கிடைத்த நண்பர் இன்று அமையாமல் நான் மட்டுமே பாச மலரை பார்த்து அழுதேன்,
காட்சிகளை அடுக்கிக் கொண்டே போகலாம், எந்தக் காட்சியில் அழுதேன் என்று ரீ வைண்டிங் பார்த்தோமானால் கன்னத்தில் துப்பாக்கி வைத்து தேய்த்துக் கொள்ளும் சீனிற்கே அழுதிருக்கிறேன், துப்பாக்கியை வைத்துக் கொண்டு கௌபாய் என டுமீல் டுமீல் என சுட்டுக் கொண்ட படங்களை ஒன்றிரண்டு பார்த்திருக்கிறேன், நமது தலைவர் துப்பாக்கியின் முனையில் கண்ணீரை துடைத்துக் கொள்கிராரே? பாசத்தை
துப்பாக்கி முனையில் யார் காட்டுவார்கள்? என சிந்தனை பறக்கத் தான் செய்தது,
மற்ற காட்சிகளையெல்லாம் எப்படி விவரிப்பது, பாச மலர் பார்ப்பவர்களுக்கு ஒரு சௌகரியம் கிடைத்தது, தங்களது சொந்த பந்த சோக சமாச்சாரங்கள் எல்லாவற்றையும் ஒரு சேர கொண்டு வந்து படம் பார்க்கும் போது கொட்டித் தீர்த்துக் கொள்வார்கள் போல, பாசமலர் ஒவ்வொருவரின் வீட்டு அன்றாட வாழ்க்கையோடு ஒன்றிணைந்து போனதால் தானே அறுபது ஆண்டுகளாக பாசமலர் உதாரண மலராகவே இன்று வரையிலும் நீடிக்கிறது,
தொடர்ந்தார் போல காட்சிகள், அந்த சூழலில் நான் கூட ஜெமினி அவர்களை திட்டத்தான் செய்தேன், அந்தக் கிழவியை என கூச்சல் போடுவோர் மத்தியில் நானும் சேர்ந்து கொண்டேன்,
பார்த்து ரசித்த மொத்த காட்சிகளை பற்றிய விவரங்களை வேறு ஒரு பதிவில் தொடரலாம்,
இப்போது எனக்குள் இருந்த பழைய பாசமலர் தொடர்பான கணக்கை எடுக்கிறேன்,
முன்னர் டூரிங் கொட்டகையில் எத்தனையோ நடிகர் திலகம் படம் பார்த்த போதெல்லாம் " பாச மலர் " எப்போது வரும் எனக் கேட்டதுண்டு, ஸ்கூல் பசங்க கேள்விக்கு அப்போதைய ஆபரேட்டர்கள் பதில் சொல்வார்களா என்ன?
போஸ்டர் ஒட்டிய அண்ணன்மார்களே ஏகத்துக்கும் பந்தா காட்டுவார்கள், அதனால் பாசமலரைப் பற்றிய எண்ணம் நீடித்த காலமெல்லாம் கடந்து இப்போது பாசமலர் பார்த்தாயிற்று,
இப்போது கல்லூரி காலம்
விடுமுறை வந்ததும் வழக்கமாக ஊருக்கு வந்து நண்பர்கள் ஏராளம், அப்போது இளைய திலகம் பிரபுவின் சின்னத்தம்பி பட்டிதொட்டியெல்லாம் வெளுத்து வாங்கிக் கொண்டு இருக்கிறது, ஒரு ஊரிலிருந்து வேறு ஒரு ஊருக்கு போகிறோம் என்றால் ஏறும் பேருந்து முதல் நிற்கும் பஸ் நிறுத்த டீ கடை, பேருந்து நிலையம் என சின்னத் தம்பி பாட்டுத்தான் கேட்கும், நம்ம ஊருக்கு அருகிலுள்ள ஊரின் டூரிங் கொட்டகையில் சின்னத் தம்பி, நாங்க ஒரு படையோடு தான் படம் பார்க்கும் பழக்கம், அன்றும் எங்கள் குரூப்போடு சின்னத் தம்பி பார்த்த கையோடு ஆப்பரேட்டரிடம் பாச மலர் படத்தை போடுங்கையா என்ற பேச்சுக்கு மதிப்பு கொடுத்த ஆபரேட்டர் டூரிங் கொட்டகையில் அன்று முதலாளி இருந்ததால் அவரிடமே நேரிடையாக எங்களை அறிமுகம் செய்து விஷயத்தை விவரித்தார்,
அந்த முதலாளி "தம்பி சிவாஜி படமெல்லாம் ஓடி ஓடி பிலிம் ரோலெல்லாம் பழசாயிடிச்சு, சரி பழைய ரோல் தானே கொஞ்சம் ரேட்டையாவது கம்மியாக் கொடுக்கிறார்களா? அதுவும் கிடையாது,
இதோ சின்னத் தம்பி 15 ஆயிரம் ரூபா ஒரு வாரம் ஓடினா போதும் , ஓட்டுவதில் எந்த சிரமமும் கிடையாது,
ஆனா சிவாஜி படங்கள் இப்பவும் 9ஆயிரம் 10 ஆயிரம் என இருக்கிறது, அதுவும் நீங்க கேட்கிற பாசமலர் 10 ஆயிரத்துக்கு கீழ கெடைக்காது
நாங்க கொண்டு வந்தாலும் ஆபரேட்டர் பெரிய ரிஸ்க் எடுப்பாரு, கொஞ்சம் அறுந்தாலும் நீங்க போடும் கூச்சல் கொஞ்சமாகவா இருக்கும்",
நாங்கள் ரொம்பவே சோர்ந்து போனதை கவனித்த சினிமா கொட்டகை முதலாளி "இன்னமும் ரெண்டு வாரம் பொருங்க புதிய பிரிண்ட் உத்தமன் வருது, தீபாவளி யைக் கொண்டாடுங்கோ என்றார்
சொன்னபடியே தீபாவளியும் வந்தது உத்தமனும் வந்தது
வெடியாய் வெடித்து வசூலையும் குவித்தது,
இன்று 01-05-2020
நடிகர் திலகத்தின் மண நாள் கொண்டாட்டம், மே தின நாள் முன்னிட்டு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் சேனலில் காலை 10 மணிக்கு "பாச மலர்"
பார்த்து மகிழ்வோம்,
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...bd&oe=5ED254A1
Thanks Sekar Parasuram
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...32&oe=5ED1C2AD
Thanks Ramesh Prabhu
கூட்டம் சேர்க்க அன்றைய திமுகவில் இருந்த போது மேடைகளில் எம்ஜிஆர் எப்படி எல்லாம் பேசியிருக்கிறார்??
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...07&oe=5ECF998D
நடிகர் திலகம் சிவாஜியின் பிறந்த நாள் விழா பேரணியில் நடிகர் திலகம் ஏற்று நடித்த
கட்டபொம்மன்
வீர சிவாஜி
வ.உ.சிதம்பரனார்
திருப்பூர் குமரன்
பாரதி
ஆகிய வேடமேற்று குதிரையில் பவனி வரும் நடிகர் திலகம் ரசிகர்கள்,
எந்த ஒரு தலைவருக்கும் கிடைத்திடாத சிறப்பு இது போன்ற பேரணி நிகழ்வுகள்,
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...45&oe=5ED04B3Bhttps://scontent.fyyz1-1.fna.fbcdn.n...d6&oe=5ED0F15B
நடிகர்திலகத்தின் திருமண நாளையொட்டி
கோவை வடக்கு நகர சிவாஜி மன்றம் சார்பில் இனிப்பும் காரமும் அளிக்கப்பட்டது. கொரோனோ காலமாதலால், இந் நிகழ்ச்சியில் நடந்து செல்வோரை அழைத்து இனிப்பு வழங்கப்பட்டது.
இந் நிகழ்ச்சியை வடக்கு நகர தலைவர்
LIC நாகராஜ், சுரேஷ் கோபாலகிருஷ்ணன்
ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...80&oe=5ED341CB
Thanks Senthilvel
Sivaji Ganesan Untold Story | Exclusive Interview with Sivaji Chandrasekaran | அன்று முதல் இன்று வரை
உலகம் போற்றும் உத்தமர்.ஆலயம் இல்லா ஆண்டவன் .விளம்பரம் தேடா வள்ளல்.கலியுக கர்ணன் சிவாஜி அவர்கள்
https://youtu.be/kBaOa8JWzzsஉலகம் போற்றும் உத்தமர்.ஆலயம் இல்லா ஆண்டவன் .விளம்பரம் தேடா வள்ளல்.கலியுக கர்ணன் சிவாஜி அவர்கள்
எம்ஜிஆர் ஜானகிகாக சிவாஜி கணேசன் அரசியல் தேர்தலில் நின்று தோற்று போனபோது இந்த தோல்வி எனக்கு ஏற்பட்ட தோல்வி இல்லை இது எனது தந்தை எம்ஜிஆருக்கு ஏற்பட்ட தோல்வி எனது தாயார் ஜானகி அம்மையாருக்கு ஏற்பட்ட தோல்வி இந்த தோல்வி எனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் என்று தனது வெறுப்பையும் ஆதங்கத்தையும் வெளிபடுத்தினார்.
Thanka fri...
கண்ணதாசன் சொல்வதை போல அரசியல் கற்று கொள்ள வேண்டும் என்றால் முதலில் சூழ்ச்சிகளை கற்று கொள்ள வேண்டும் என்பதை போல சிவாஜி சூழ்ச்சிகளை கற்று கொண்ட இருந்தால் இன்று அவர் தனது கட்சிக்கு மட்டும் தலைவராக இல்லாமல் தமிழ்நாட்டுக்கே தலைவராக மாறியிருப்பார்.
Thanks fri...
#சிவாஜியின்_கொடைத்_தன்மை_உண்மை_என்ன?என்னமோ 'எம்ஜியார் மட்டுந்தான் கொடைவள்ளல், சிவாஜி ஒரு கஞ்சர்' என்று வெகுகாலமாகவே தமிழ்நாட்டு ஜனங்களிடையே ஒரு பொய்யான ஒரு தகவல் பரப்பப்பட்டு வந்திருக்கிறது.அதைப் பற்றியெல்லாம் அந்த அப்பாவி என்றுமே கவலைப்பட்டதில்லை. 'சிலரைப்' போல, தான் செய்ததை விளம்பரப் படுத்தும் ஊடகத் தந்திரங்களை அவர் அறிந்தவருமில்லை.இருந்தாலும் அவரது அபிமானிகள் அவர் செய்த நற் காரியங்கள் பலவற்றைப் பட்டியலிட்டிருக்கிறார்கள்.அது இங்கே: 1. சிவாஜி அவர்கள் அன்றைய பாரத பிரதமர் நேருவிடம் நடிப்பின் ராஜா சிவாஜி 1959.ல் மதிய உணவு திட்டத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் (இன்றைய மதிப்பில் ஒரு கோடி) வழங்கினார்.2. 1961ல் தாம்பரத்தில் காசநோய் மருத்துவமனை கட்டுவதற்காக ரூபாய் ஒரு லட்சம் வழங்கினார்.3. 1962ல் இந்திய - சீனா போரின்போது ஒரு பெருந்தொகையை யுத்த நிதியாக வழங்கினார்.4. புதுவை அரசின் பகலுணவு திட்டத்திற்கு ரூபாய் 1 லட்சம் வழங்கினார்.5. நேருஜி நினைவு அறக்கட்டளை நிதிக்காக ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வழங்கினார்.6. பெங்களூரில் நாடகை அரங்கம் கட்ட ரூபாய் இரண்டு லட்சம் வழங்கினார்.7. 1960ல் பெருவெள்ளம் சென்னையை சூழ்ந்தபோது காமராஜர் முன்னிலையில் 1 லட்சம் உணவு பொட்டலங்களை அவரது இல்லத்தில் தயாரித்து கொடுத்ததோடு 800 மூட்டை அரிசியும் அள்ளிகொடுத்துள்ளார்.8.1968-ல் உலகத்தமிழ்மாநாடு பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் நடைபெற்றபோது சென்னை கடற்கரையில் 10 தமிழறிஞர்களுக்கு சிலை வைக்கப்பட்டது. அதிலே திக்கெட்டும் தமிழ் பரப்பிய திருவள்ளுவருக்கு சிலை அமைத்து தந்தது சிங்க தமிழன் சிவாஜி.9. சிலையும் அமைத்து உலக தமிழ மாநாட்டிற்கு நிதியாக ரூபாய் 5 லட்சம் (இன்றைய மதிப்பு 5 கோடி) அள்ளித்தந்து அண்ணாவையே அசர வைத்தவர் சிவாஜி.10. 1965ல் இந்தியாவுடன் பாகிஸ்தான் போரிட்டபோது அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம் திருமதி. கமலா அம்மையாரின் 400 பவுன் தங்க நகைகளையும், பெங்களூரில் சிவாஜிக்கு பரிசாக கிடைத்த 100 பவுன் தங்க பேனாவையும், மொத்தம் 500 பவுன் இன்றைய மதிப்பு ரூ.1,00,00,000 கொடுத்து தேசத்தையே திரும்பி பார்க்க வைத்தவர்.11.யுத்த நிதி அன்றைய முதலமைச்சர் திருமகு. பக்தவச்சலத்திடம் 1 லட்சம் நிதி வழங்கினார். மீண்டும் தமிழகமெங்கும் நாடகங்கள் நடத்தி தன்னுடைய வியர்வையில் விளைந்த வெள்ளிகாசுகளாம் 17 லட்சம் (இன்றைய மதிப்பு 100 கோடி) வாரி வழங்கி தேசம் வெற்றிபெற துணை நின்றவர் சிவாஜி.12. வெள்ளிவழா கண்ட பாசமலர் திரைப்படம் இந்தியில் ராக்கி என்ற பெயரில் சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து திரையிட்டு நாடு முழுவதும் வசூலான ஒரு நாள் தொகையை மீண்டும் யுத்த நிதியாக வழங்கி பெருமை சேர்த்தவர்.13. 1972ல் ராஜா திரைப்படத்தின் மூலம் வசூலான ஒரு நாள் தொகையை விமானபடையில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கினார் சிவாஜி.14.வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை 112 முறை தொடர்ந்து நடத்தி அதன் மூலம் வசூலான 32 லட்சத்தை (இன்றைய மதிப்பு 300 கோடி) பல கல்லூரிகளுக்கு வாரி வழங்கி கல்வியின் சிறப்பை உலகிற்கு உணர்த்தினார்.15.1961ல் மும்பையில் பல பகுதியில் நாடகம் நடத்தியபோது பல லட்சம் மக்கள் திரண்டனர். அதன் மூலம் கிடைத்த 5 லட்சத்தை மகாராஷ்டிரா அரசிடம் வழங்கினார்.16. தனக்கு சொந்தமான கோடம்பாக்கம் நிலத்தை அன்றைய மதிப்பு பல லட்சம் இன்றைய மதிப்பு பல கோடி நலிந்த நடிகர் நடிகைகள் வீடு கட்டிக்கொள்ள இலவசமாக வழங்கி நடிகர்களின் காவலராய் திகழ்ந்தவர்.17.தன்னை வைத்து முதல் படம் எடுத்த திரு. பெருமாள் முதலியார் அவர்களின் வீட்டிற்கு வருடந்தோறும் பொங்கலன்று சென்று சீர் செய்து அவர்கள் குடும்பத்திற்கு தன் இறுதி மூச்சு உள்ளவரை உதவிவந்தவர் நடிகர் திலகம். பொதுவாகவே நடிப்பது ஒன்றைத் தவிர வேறு தந்திரங்கள் ஏதும் தெரியாத வெள்ளந்தி மனம் கொண்ட கலைஞன் சிவாஜி. அதனால்தான் திரையில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் ஜொலித்த அந்த மகா கலைஞனால் அரசியலில் நிலைக்க முடியவில்லை. என்றாலும் என்னைப் போன்ற கோடிக்கணக்கானோர் நெஞ்சில், இந்தக் கட்டை வேகும் வரையிலும் அவர் வாழ்ந்திருப்பார், இன்னும் வரும் நூற்றாண்டுகளுக்கும் அவர் செய்த நடிப்புச் சாதனைகள் நிலைத்திருக்கும்
Thanks fri...
யாருக்குதெரியும்இந்தமகாகர்ணனின்அருமை.திருச்சிஅருகேதிருவானைக்காவல்கோவிலில்உள்ளயானைநடிகர்திலகம்சிவாஜியால்வழங்கப்பட்டது.அந்தயானையைபராமரிக்கமுடியாதநிலையில்கோவில்நிர்வாகம்திரு.சிவாஜியிடம்எங்கள்கோவில்வருமானத்தில்யானைக்குதீனிபோடமுடியவில்லை.வேறுகோவிலுக்குயானையைகொடுத்துவிடுங்கள்என்றுகூறினார்களாம்.அதற்குநடிகர்திலகம்நாளைவாருங்கள்பதில்சொல்கிறேன்.என் றுகூறினாராம்.ஒருவாரம்வரைபதில்வராதகாரணத்தால்கோவில்நிர்வாகம்மீண்டும்நடிகர்திலகத்தைகாணசென்றபோது!அவர்சொன்னவார்த்தைநிர்வாகத்திற்குஅதிர்ச்சிஅழித்தது.என்னவென்றால்கோவிலுக்குஅருகேஇரண்டுஏக்கர்நிலம்வாங்கியுள்ளதாகவும்.அந்தவிளைநிலத்தில்பயிர்செய்துவரும்வருமானத்தில்கோவிலுக்கும்யானைக்கும்.யானைபாகனுக்கும்.விவசாயிக்கும்கொடுக்கஏற்பாடுசெய்துள்ளதாகவும்.யானைபாகனுக்கும்.விவவசாயிக்கும்.வீடுஒன்றுஅமைத்துததருவதாகவும்கூறிஅதிர்ச்சிஅளித்தார்.நடிகர்திலக ம்.இன்றுவரைநடந்துகொண்டிருக்கிறது.அந்தயானைஇறந்தபிறகுமீண்டும்ஒருயானையைவாங்கிகொடுத்துள்ளார்.கலைவாரிசுஇளையதிலகம்பிரபுஅவர்கள்என்றுகோவிலுக்குசமீபத்தில்சென்றபோதுசொன்னார்யானைபாகன்.சொல்லாமல்செய்யும்கலியுககர்ணன்குடும்பம்.கஜதானம்(யானைதானம்)செய்வதுநாடுசெழிப்புடன்எந்தவிதபஞ்சம்இல்லாமல்மக்கள்வாழசெய்யும்தானம்.இதுபோல்கோவில்களுக்குஆறுயானைவாங்கிகொடுத்துள்ளார்.நடிகர்திலகம் என்பதுகுறிப்பிடதக்கது.தனக்கெனவாழாமல்நாடும்.ஊரும்வாழவழிவகுத்தஇந்தமாபெரும்தலைவனைஎன்றென்றும்போற்றிவணங்குவோம்
Thanks fri...
சிவாஜியின் திரிசூலம் 200வது பட விழா மதுரையில் நடைபெற்றபோது பைலட் பிரேம்நாத் பட தயாரிப்பாளர் சலீம் சிவாஜியின் மார்பளவு உருவ தங்க சிலையை சிவாஜிக்கு பரிசளி த்தார்.இந்தியாவில் வேறு எந்த நடிகருக்கும் இவ்வளவு விலை உயர்ந்த பரிசுப் பொருள் யாரும் இதற்க்கு முன் வழங்கியதில்லைசிங்கப்பூர் அரசு சுதந்திரம் பெற்று 150ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு தங்க சுரங்கம் படத்தை அதிகார ப் பூர்வமாக தேர்ந்தெடுத்துசிங்கப்பூர் வெளி விவகார மந்திரி முன்னிலையில் சிறப்பு காட்சி காட்டப்பட்ட பெருமை சிவாஜியின் நடிப்புக்கு கிடைத்த பெருமையாகும்
Thanks fri...
அறுபதுகளின் இறுதியில் பால் தாக்கரே தமிழ் படங்களை மும்பையில் திரையிட எதிர்ப்பு தெரிவித்து தென்னிந்திய திரைப்படங்கள் ஓடிய தியேட்டர்களை அவரது தொண்டர்கள் தாக்கிக் கொண்டு இருந்த காலம்.அப்போது சிவாஜி நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து கொண்டு இருந்திருக்கிறது.அதை தடுக்க வேண்டும் என்று சொன்ன சிவசேனா தொண்டர்களுக்கு , பால் தாக்கரே சொன்ன பதில் இதுதான் ' சிவாஜி பார்க்கில் இருக்கும் மராட்டிய சிவாஜி சிலை செய்ய பெரிய நிதி உதவி அளித்தவர் சிவாஜி கனேசன்.அவரால்தான் தென்னிந்தியாவில் சிவாஜியின் புகழ் பரவியது.அவரது சினிமாவின் படப்பிடிப்பிற்கு எந்த இடையூறும் செய்யக் கூடாது' என்றாராம்.அமெரிக்க அரசால் அதிகார பூர்வமாக அழைக்கப்பட்டு கவுரவ படுத்தப் பட்ட ஒரே இந்திய நடிகர் சிவாஜி கணேசன்!.
Thanks fri...
நடிகர் திலகத்தின் நடிப்பை காட்சிக்கு காட்சி அங்குளம் அங்குளமாக திரைத்துறையில் ஆராய்ச்சி பயிலும் துறையினருக்கு விளக்கும் எடிட்டர் திரு பி.லெனின் அவர்கள்,
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...e4&oe=5ED36D01
Thanks.. Sekar
அவலமான இக்காலகட்டத்தில் ஏழை மக்களுக்கு கொடைவள்ளல் சிவாஜி ரசிகர்கள்
தொடர்ந்தும் உதவும் காட்சிகள்
நேற்று 30/4/2020. ஞாயிற்றுக்கிழமை தெங்கம்புதூர் பணிக்கன்குடியிருப்பு எனது இல்லத்தில் வைத்து 700. ஏழை எழிய மக்களுக்கு அரிசி காய்கறி மாஸ் ஆகியவை முன்னாள் மத்திய மந்திரி திரு பொன் ராதகிருஷ்ணன் அவகளின் தலைமையில் வழங்கபட்டது.
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...29&oe=5ED05633
Thanks... Bala Krish Nan
முத்தமிழ் வளர்த்த மதுரையில்
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...b7&oe=5ED04E23