Originally Posted by
A.ANAND
புகைப்பதை நான் விட்டுவிட்டேன்.. நீயும் விட்டுடு அம்பரீஷ்!- சூப்பர் ஸ்டார் ரஜினி
பெங்களூர்: புகைப் பிடிப்பதை நான் விட்டுவிட்டேன். நீயும் அந்தப் பழக்கத்தை விட்டுவிடு அம்பரீஷ், என சூப்பர் ஸ்டார் ரஜினி கூறினார்.
கன்னட நடிகர் அம்பரீசின் 60-வது பிறந்தநாள் விழா பெங்களூரில் நடந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி நடிகர், நடிகைகள் விழாவில் பங்கேற்று அம்பரீசின் 40 ஆண்டு கால திரையுலக சாதனைகளை பாராட்டிப் பேசினர். ரஜினியும் நேரில் வாழ்த்தினார்.
அவர் பேசும்போது, அம்பரீஷ் திறமையான நடிகர். அவரிடம் கிருஷ்ணர், பீமன், சகுனி, துரியோதனன் அம்சங்களைப் பார்க்கிறேன். சமையலில் பீமனுக்கு நிகர் அவர். பிரியாணி சாப்பிடுவதற்காக அவரது வீட்டுக்கு போவேன். கர்ணனைப் போன்ற கொடையாளி.
துரியோதனனைப் போல அனைத்து நல்லது கெட்டதுகளையும் அறிந்தவர் அவர். துரியோதனனைப் போலவே, கெட்ட விஷயம் தெரிந்த பிறகும் விடாமல் இருக்கிறார்.
புகை பிடிப்பதனால் வரும் பாதிப்புகள் அம்பரீசுக்கு தெரியும். ஆனாலும் அதை அவர் விடவில்லை. புகைப் பழக்கத்தால்தான் என் உடல்நிலை இந்த அளவு பாதிக்கப்பட்டது. அதனால் நான் அடியோடு அதை விட்டுவிட்டேன். அம்பரீஷ், நீயும் இந்தப் பழக்கத்தை இன்றோடு விட்டுவிடு," என்றார்.
தொடர்ந்து சத்ருகன் சின்ஹா பேசுகையில், "புகைப்பிடிக்கும் பழக்கத்தை அம்பரீஷ் விட்டு விட வேண்டும். ரஜினி, அம்பரீஷ் மற்றும் நான் சினிமாவில் ஸ்டைலாக சிகரெட் பிடிப்பவர்கள். சில வருடங்களுக்கு முன் புகையிலை ஒழிப்பு தினமான மே 31-ல் சிகரெட் பிடிப்பதை நான் நிறுத்தி விட்டேன். ரஜினியும் நிறுத்திவிட்டார்.
அதுபோல் அம்பரீஷும் இப்பழக்கத்தை விட வேண்டும். புகையை விடுவதால் உடல் ஆரோக்கியம் ஏற்படும். ரசிகர்கள் நீண்ட காலம் அவரை பார்க்கவேண்டும்," என்றார்.
appadiye thanni adikarathayum niruthina romba nallathu thalaiva...