https://www.youtube.com/watch?v=iM4hXOpYAcM
https://www.youtube.com/watch?v=JZyw5iFgTYs
https://www.youtube.com/watch?v=Qveg840rPDY
Printable View
ஹீரோயினி அறிமுக பாடல்கள் எத்தனையோ இன்று வரை வந்து கொண்டிருக்கிறது. அந்த பாடல்களை யார் அமைத்திருந்தாலும், ராஜா சார் மட்டும் தான் கதையில் அந்த ஹீரோயினிக்கு கொடுக்கபட்டிருக்கும் பாத்திரத்துக்கும், கதை களத்துக்கும் ஏற்றவாறு இன்ட்ரொடுக்க்ஷன் சாங் கொடுத்து அசத்த முடியும் . (பவதாரிணி பாடி கெடுத்த பாடல்களை விட்டுவிடுவோம்)
அறுவடை நாள் படத்தில் வந்த இந்த பாடலை யாராவது மறக்க முடியுமா? படத்தில், இந்த விளையாட்டு பெண் வளர்ந்து, ஆளாகி, ஆங்காங்கே சந்திக்க போகும் துரதிர்ஷ்ட வசமான நிகழ்ச்சிகளை பாடலும், பாடலில் வரும் சத்தங்களும் நம்மை தயார் செய்து விடும். நான் அதிகமுறை கேட்டு ரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று.
https://www.youtube.com/watch?v=DRQJnp1v4UY
பாடல்: வானத்துல வெள்ளி ரதம் படம்: எங்க ஊரு மாப்பிள்ளை (1989)
பாடியவர்கள்: மனோ, சித்ரா
எழுதியவர்: வாலி
பழுத்த பழம் காத்திருக்க
அணில் கடிக்கும் வேளை இது.
நதியில் எழும் நீர் அலை போல்
நினைவில் எழும் நாயகி நான்..
ஆஹா.....
ராமராஜன் பாடல் என்று பாடலை கேட்காமல் விட்டு விடாதீர்கள்.. ராஜா சாரின் டிபிகல் விண்டேஜ் பாடல், உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். இந்த பாடலை மறந்து போனவர்கள் மீண்டும் ஒரு முறை கேட்டால் மகிழ்வீர்கள்.
சமீபத்தில் நளினியின் மகன் திருமண பதிவை பார்த்த போது ராமராஜனின் நிலையை பார்த்து மிகவும் பரிதாப பட்டேன். பாவம்.
https://www.youtube.com/watch?v=InGis3MPuso
இதே நாளில் 1882 வருடம் பிறந்த மகாகவி சுப்ரமணிய பாரதியாரை பற்றி படமெடுக்க பலர் முயன்றனர்.பாலச்சந்தர் ,கமலஹாசன் மற்றும் பலர் ..ஆனால் பல்வேறு காரணங்களால் அது நடக்காமல் 2000 ஆம் ஆண்டு தான் அது சாத்திய மாயிற்று ..இந்த திரை படத்தை நானும் எனது நண்பனும் இது திரை இடப்பட்ட ,தேவி பாலா திரைஅரங்கில், நூறாவது நாளில் தான் சென்று பார்த்தோம் .பெயர் போட ஆரம்பித்ததுமே ஒரு கிளாசிகல் முகப்பு இசை ..ஒரு அமைதியான மெலடி இல் ஆரம்பித்து ஒரு பெருந்துயரத்தில் முடிந்தது .
பிராமண குடும்பத்தில் பிறந்த ஒருவன் எப்படி இந்த ஜாதி ,மதம் ,பந்தபாசம் ,பணம்,சடங்குகள் ,இப்படிதான் இருக்க வேண்டும் என்று சமூகம் உருவாக்கி வைத்த நியதிகள் போன்ற அற்ப விசயங்களில் இருந்து விடுபட்டு ஒரு மஹா மனிதனாக ,இயற்கையை இரசிப்பவனாக,கலகக்காரனாக ,ஒரு மகாகவியாக மாறுகின்றான் என்பதையும் பிறகு எல்லாவற்றையும் வெறுத்து ,சமூகத்தால் புறகணிக்க பட்டு,சொந்த குடும்பத்தால் கூட புரிந்து கொள்ள படாமல் தன் காலத்திற்கு முன்னரே மரணத்தை தழுவுகின்ற சோகத்தை முடிந்த வரையில் நேர்மையாகவும் ,சுவாரசியமாகவும் ,உணர்ச்சிமயமாகவும் பதிவு செய்தது இந்த திரைப்படம் .
"Amadeus " திரைபடத்தின் இறுதி காட்சியில் மொசார்ட் இறந்ததும் அவரது கடைசி இசை குறிப்பான "lacrimosa " பின்னணியில் ஒலிக்க அவரது இறுதி சடங்கு நடைபெறும,கண்ணீர் மல்கும் தருணம் அது. ..
அதே போல இந்த படத்தில் பாரதி இறந்ததும் அவரின் இறுதி சடங்கு ஆரம்பிக்கும் போது "நல்லதோர் வீணை ..பாடல் அந்த மொத்த சோகத்தையும் இசைக்க ...அதுவரையில் திரைஅரங்கில் ஒரு விதமான தயக்கத்துடனும் ,சலசலப்புடனும் இருந்த கூட்டத்தினுள் ..ஒரு ஆழ்ந்த நிசப்தம் உருவாகியது..எல்லோர் கண்களும் நீரால் நிரம்பியது .பல பெண்கள் அழ ஆரம்பித்து விட்டனர்.ஆனால் நாங்களோ 'ச்சே ஆண்கள் கண்ணீர் சிந்துவதா ' என்று எங்களை கட்டுபடுத்தி கொண்டு இருக்க ..மேஸ்ட்ரோ இளையராஜா "வல்லமை தாராயோ என்று ஆரம்பிக்க எங்களையும் மீறி கண்ணீர் வந்துவிட்டது ..எனது நண்பன் என்னை பார்த்து "That ,My Friend, is Music "என்று சொன்னது இன்னும் கூட என்னால் மறக்க முடியவில்லை ..மொசார்ட்டின் 'lacrimosa 'இசைக்கு சற்றும் குறைவில்லா ஒரு இசை ..
இதுவும் ஒரு 'period' பிலிம் தான்.இது மாத்ரி திரைப்படங்களுக்கு எப்படி பின்னணி இசை இருக்க வேண்டும் என்று இந்த திரைபடத்தின் பின்னணி இசையை கேட்டால் உங்களுக்கே புரியும் .முகப்பு இசை ,காசியில் பாரதி இருக்கும் போது வரும் சம்ஸ்கிருத பாடல்.பாரதி இதுதான் எனது அடையாளம் என்று முடிவு செய்யும் போது வரும் இசை ,ஆரம்பத்தில் கர்நாடிக் வடிவில் இருக்கும் பின்னணி இசை .பாரதி, ஷெல்லியின் கவிதையை வாசிக்கும் போது வெஸ்டேர்ன் க்லஸ்ஸிகல் இசையாக மாறி ஒலிப்பது என்று படம் முழுவதும் பின்னணி இசையில் பின்னி இருப்பார் ..
மயில் போல பாடலை பாடிய பவதாரிணிக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது ..ஆனால் அந்த பாடலுக்கும்,படத்தின் மற்ற மறக்க முடியா பாடல்களுக்கும் ,இந்த பின்னணி இசை கோர்வைகளுக்கு இசைஅமைத்த மேஸ்ட்ரோ விற்கு தேசிய விருது கிடைக்காதது எப்படி என்று தான் தெரியவில்லை ..படத்தின் முழு பின்னணி இசை தொகுப்பு..
https://soundcloud.com/navinmozart/i...complete-score
பாடல்: புதிய பறவை பறந்ததே..
படம்: தென்றல் வரும் தெரு (1994)
பாடியவர்: சொர்ணலதா
எழுதியவர்: மு. மேத்தா
இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் குரலை வருத்தி பாடும் கோரஸ் குயில்களும், உடல் வலிக்க குழுவாக ஆடும் நடன மங்கைகளுமே என் நினைவில் வருவார்கள். இரு பிரிவினருக்குமே அங்கீகாரம் அதிகம் கிடைப்பதில்லை. ஊதியமும் அதிகம் தருவார்களா என தெரியவில்லை.
ரொம்ப நல்ல பாடல். நல்ல சுத்தமான ஒலியில் பாடலை கேட்க கேட்க சுகமான வலி வரும். பாடலில் வரும் மஞ்சள் மற்றும் சிவப்பு கஸ்தூரி பறவை போலவே இருப்பார்கள்.. படம் வெளிவந்து 20 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. நேற்று பார்த்தது போலவே நினைவு.
https://www.youtube.com/watch?v=aEJrAr1otBc
Raga's steaming audio of this song: http://play.raaga.com/tamil/song/alb...Paravai-266300
Short and sweet speech from the Pithamagan of Carnatic music Shri Semmangudi Srinivasa Iyer on Shri. Ilayaraja.
செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் பூஜை அறையில் ராஜாவின் படம் உண்டு என்று இரு வேறு நபர்கள் இரு வேறு இடங்களில் எழுதி படித்து உள்ளேன். இதை யாரவது confirm பண்ண முடியுமா ? Thanks in advance. :)
https://www.youtube.com/watch?v=UOSN...ature=youtu.be
Ilayaraja is not a musician , He is a Music Lesson:
https://www.youtube.com/watch?v=biX7...ature=youtu.be
"மாமியார் வீடு" பாடல்களின் தரம் சார்பாக இங்கே எழுதியிருக்கிறேன்.. வாய்ப்பு கொடுத்த தோழருக்கு நன்றி.
http://www.mayyam.com/talk/showthrea...=1#post1191581
"மாமியார் வீடு" பாடல்கள் இங்கே.. இத்தளம் www.ilayaraja.in மீண்டும் உயிர்பெற்றிருக்கிறது... ரசிகர்களுக்கு வரம்.
http://www.ilayaraja.in/tamil-songs/...mamiyaar-veedu
இந்த முறை: "அம்மையப்பா அடிவாங்கிடப் பிறந்தேன் உண்மையப்பா உதைவாங்கியே இளைத்தேன்" - எனக்கு நானே நீதிபதி என்ற படத்திலிருந்து மலேசியாவாசுதேவன் குரலில் அமைந்த பாடல்.
http://www.mayyam.com/talk/showthrea...=1#post1191806
http://ilayaraja.in/tamil-songs/play...ne-neethipathi
வாய்ப்பு கொடுத்த தோழருக்கு மீண்டும் நன்றி.
Devathai Sound Track- Master Piece
https://soundcloud.com/navin-mozart/...complete-score
காற்றுக்கென்ன வேலி பாணியில் அடி பெண்ணே..
-- திரு கோபால்.
ஹலோ.. போறபோக்குல எப்படி அதுக்கும் இதுக்கும் முடிச்சி போடுறிங்க? இரண்டு பாடலுமே திருமண ஒப்பந்தம் / சம்பந்தத்தை இருபாலினரும் உணர்கையில் தொடர்கிறது. ஆனால் அதுபோல சூழ்நிலையில் பெண் குரலில் நிறையப் பாடல்கள் வந்திருப்பதாக நினைக்கிறென். அனு - வள்ளி. இருவரின் கதாபாத்திரமும் முற்றிலும் வேறான தன்மை கொண்டவை. வாழும் இடம்/சூழ்நிலை, பழகும் மனிதர்கள், தனிப்பட்ட குணம், இளமையின் ஏக்கங்கள், உலகம்/இயற்கை மீதான தனது அபிப்ராயங்கள் எல்லாமே வெவ்வேறு தளங்கள். இரண்டு பாடல் வரிகள் (குரு-கண்ணதாசன், சிஷ்யர்-பஞ்சு அருணாசலம்) வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் வழி மிக எளிதாகவே இதை உணரலாம். ராஜா தனது முத்திரையை "அடிப்பெண்ணே" மெட்டமைப்பிலும், பின்னணி இசையிலும் பாத்திரத்தின் உணர்வுகளுக்கு ஏற்ப மிக அழகாக நெய்திருப்பார். அந்த இசை வகையை குறிப்பிட்டு ஒரு குடைக்குள் அடைக்க முடியாது. அது "ராஜா" என்ற அவரே அறிமுகப் படுத்தி வைத்த இசை வகை.
https://www.youtube.com/watch?v=k0F8PvI9vLQ
இன்று "கண்ணில் என்ன கார்காலம்" பாடலைக் கேட்டுக்கொண்டே இருக்கையில் ட்வீட்டரில் இச்செய்தியையும் வாசிக்க நேர்ந்தது. புல்லரித்துவிட்டது. என்னே ஒரு தற்செயல் நிகழ்வு! கண்ணில் நீர்த்திவலைகள் கோர்த்தது. உணர்ச்சிகள் குவியலாக கொட்டிக்கிடக்கும் ஜாடியிலிருந்து காலப் பெருவெள்ளத்தில் ராஜா நிகழ்தகவு சோழிகளை உருட்டிவிட்டுக் கொண்டெ இருக்கிறார் போலும். இதுபோல சந்தர்ப்பங்கள் வாய்க்கப்பெறுவதை ஒவ்வொரு ராஜா ரசிகரும் அவ்வப்போது ஏதாவது ஒரு தருணத்தில் உணரலாம்.
https://pbs.twimg.com/media/B5e9cGkIAAIvsj-.jpg
https://www.youtube.com/watch?v=oCBhFFBylUM
கண்ணில் என்ன கார்காலம் பாடலை இன்று ஏன் கேட்க நேர்ந்தது எனப் பார்த்தால்.. போன வெள்ளியன்று திரு விக்கி அவர்கள் இப்பாடலின் ஆரம்ப இசையை மட்டுமே அவரது மகனுடன் இசைப்பதை யூடியூபில் பார்க்கநேரிட்டு, அது தொடர்த்தியாக மனதில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=BmT4...ature=youtu.be
Quote:
Originally Posted by Vicky
venkkiram - the same album has two more gems "malarey malarey" - with top-notch interludes - perfect song to listen during an afternoon rain !
and 'yenna desamo' - KJY perfect choice for that kind of a melody.
Rajini in this film - was such a casually endearing performance !
IMHO, had he chosen to play such roles - in-between his 'mass' roles (with Deva's thundering 'aiy aiy aiy' chorus background OMG!), one film a year with such roles showing his depth - would have given us all a super foil to Kamal's 'armageddon-like' creative run - putting Tamil cinema elsewhere.
Rajini had all the makings of our own cross between Billy Bob Thornton & Philip Seymour Hoffman - recently watching Thornton in A Simple Plan as a stuttering / stammering younger brother along with elder brother and friend involved in a stolen-money-greed plan gone wrong murder story - was nothing short of brilliant - https://www.youtube.com/watch?v=gNtGI_D85mQ -
Rajini had all the charisma of a Hoffman and the talent of a Thornton IMHO - instead caricaturing himself over 10 years - under/unutilized
இன்று உலக மகளிர் தினம்.
வீடாளும் பெண்மை இங்கே நாடாளும் காலம் வந்தும்,
ஊமைகள் போலவே என்றும் ஓயாமல் கண்ணீர் சிந்தும்.
உலகமெல்லாம் விடிந்த பின்னும்
உங்களின் இரவுகள் விடிவதில்லை!
https://www.youtube.com/watch?v=K0MNzaOonMI
top notch editing - and an underrated song (of the many songs of IR!)
ஹனிபா மறைந்துவிட்டார். மறக்கமுடியுமா அந்தக் குரலை எந்நாளும்!
நட்டநடு கடல் மீது..
https://www.youtube.com/watch?v=5GtNSb6YQtA
உன் மதமா என் மதமா..
https://www.youtube.com/watch?v=9CeKP6a55AY
Been listening to Rudrama Devi, a wonderful album and it provoked me to pick up several other IR songs. Been listening esp., to these 2 collection and juggling Rudrama Devi songs inbetween, a glad year so far :
https://www.youtube.com/watch?v=qSt3kZ--BDk
https://www.youtube.com/watch?v=zEqGFjUgnoI
PS : Thanks to the person who collected and concatenated this awesome series of musical bits, and also for providing an index to easily acess various pieces.
Movie name: Karagatakkari
Villupattu gets a new dimension in Maestro's composition.
https://www.youtube.com/watch?v=8GK-o7Egt2k
https://www.youtube.com/watch?v=xPBiw1wEqC4
sri kanaka mahalakshmi recording dance troupe
Songs
நினைத்து நினைத்து வரைந்த ஓவியம்...
https://www.youtube.com/watch?v=ZcckP3nk-YQ
1982'ல் மேற்படி பாடலில் கார்த்திக்கை நினைத்து அருணாவை உருக வைத்த ராஜா சார்... பின்னாளில், (1990)சொர்கத்தின் வாசற்படியில்..
இரண்டு பாடலும் ஒரே ராகமோ என்னமோ தெரியவில்லை, ஏதோ ஒரு ஒற்றுமை இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது..
https://www.youtube.com/watch?v=NXTWhHmEGMg
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராஜா!
தெரிந்த மொழியில், நடையில் எனது எண்ணக் குவியல் இங்கே.
http://venkkiramweb.blogspot.com/2015/06/blog-post.html
https://www.youtube.com/watch?v=wc1JJ89o6wc
நமது மண்ணின் இறைவழிபாடு, சடங்குமுறைகளை இசையில் ஆவணப்படுத்த உன் அளவுக்கு யாருமே இங்கே இல்லை.
https://www.youtube.com/watch?v=-LRLXF2j1ps
:notworthy:
அமுதா, உனக்காக நான் அலைந்த அந்த
நான்கு ஆண்டுகள் ஓடியதே தவிர
நீ என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
ஆனால், கல்லூரியின் கடைசி நாளில்
நான் அவர் பாடல் ஒன்றை பாட,
கண் விரிய முதன் முதலில் என்னை பார்த்தாயே
அட, நீயும் ராஜா ரசிகனா என்பது போல்?
உன் முறை வந்த போது
சிலிர்த்தெழுந்து அவர் பாடல் ஒன்றை
பாடிய உன்னை மறப்பேனா?
அமுதா, உன்னை நினைக்கும் பொழுதெல்லாம்
அவர் நினைவுக்கு வருகிறார்.
அவரை கேட்கும் போதெல்லாம் நீ நினைவில் வருகிறாய்.
உனக்கும் எனக்கும் இடையில் எதுவும் இல்லை.
எட்டாத உயரத்தில் நீ இருக்கிறாய்.
உன்னை பார்த்து இருப்பத்திமூன்று ஆண்டுகள் ஓடி விட்டது.
இருந்தால் என்ன?
நாம் இருவருமே அவரை தானே அன்றாடம் கேட்கிறோம்.
இன்று அவருக்கு பிறந்த நாள், உளமார வாழ்த்தி இருப்பாய்..
உன்னுடன் நானும் சேர்ந்து வாழ்த்துகிறேன்.
https://www.youtube.com/watch?v=tRPch8z7-ac
https://www.youtube.com/watch?v=crO9G1iUzGI
இவர் ஒரு அமுதசுரபி..
கிருஷ்ணச்சந்தர் ஜானகி அவர்களின் இனிமயான குரலில் ஆனந்தமாய் நம் மனதுக்குள் சென்று நடனம் ஆடுகின்றது
ஏன் இம்மாதிரி பாடல்கள் எல்லாம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் யாரும் பாட முன்வரவில்லை?
https://www.youtube.com/watch?v=3RlKPvr8crk
ராஜா சாரின் துள்ளளான பாடல், மைனா மைனா மாமன் புடிச்ச மைனா..
இந்த பாடலில், வாத்தியங்களின் அமைப்பும், இசை கோர்வையும் இன்றைய தொழில்நுட்பம் மற்றும் காலகட்டத்துக்கு சற்றும் சளைத்தது இல்லை.
https://www.youtube.com/watch?v=VLGL7ekWEW0
சில வருடங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி தொடராக வந்த பாரதிராஜாவின் தெற்கத்தி பொண்ணுக்காக, ராஜா சார் போட்டு கொடுத்த பாடல். இதுக்கு என்ன சார் கொறைச்சல்?
https://www.youtube.com/watch?v=DHEm0vMGmCo
Film movie: Mella pesungal
Wish Deepan chakravarthy could have sung many more songs.
https://www.youtube.com/watch?v=iCdkj4jlygA
A gem of a song. Kaanada fusion with top class interludes
https://www.youtube.com/watch?v=oKAaQcNwNOs
பிரபஞ்சக் கூத்து! இளையராஜா.
பாடல்களின் பின்னணி இசையை கேட்போர் நாடி நரம்பினுள் செலுத்திய ராகதேவன்.
https://www.youtube.com/watch?v=WGZT2dDx5zY
Guitar Prasanna performs 'Ilamai itho itho'!
https://www.youtube.com/watch?v=_cgO2ABdHXs
Madha Un kovil and Thaalattu Greatest hits of "Ilaiya"Raaja. Original Official Version.
https://www.youtube.com/watch?v=LXgyi7lLbR4
K
Thank you for bringing this song.
Thalaattu.. What a tune and the complete song flows so nice in its entirety. Orchestration and arrangements at its best. Imagine bringing so many variations and scheme of emotions from various instruments those days when we had just single track recording live with everyone present with a specific call sheet?. Mindblowing to even just think of it.
Only Raaja fossible.
This composition will be 4 decades old very soon.
I still remember listening to the Panasonic radio with all the hissing disturbing noises which came as complimentary. I say this as I listened to it in a suburb of bangalore and my mother religiously turned to radio at beetime and listened to Thiruchi and Ceylon stations each day and night.
I wish I could take a time machine and transcend again to those glorious days.
Thanks for taking me on this short trip.
மாதா உன் கோயிலில் பாடல் ஒலிப்பதிவின்போது ஜானகி அழுதுவிட்டாராம் துக்கம் தாளாமல்.. இப்பாடலில் தாய்மையோடு கலந்து நிற்கும் பக்தி ரசம் வேறு மதத்தவர்கள் கேட்கும்போதும் மெய்மறந்து போவது தனிச்சிறப்பு. மெலடிக்கும், பின்னணி இசைக்கும் ராஜா கட்டமைக்கும் பாலம் வேறுயாராலும் நினைத்தே பார்க்கமுடியாத ஒன்று. அதனால்தான் காலம் கடந்தும் இப்படைப்பாக்கம் செழுமையோடு நிற்கிறது.. பல உள்ளங்களை அசைத்துப் பார்க்கிறது.
Guitar Prasanna and "chinna kannan azhaikkiraan" !
https://www.youtube.com/watch?v=dwXIo2VcRS8
Thank you K and Rasayya for taking us through the lane of nostalgia. :)
"thAlAttu" is such an exquisitely crafted MadhyamAvathi beauty by Raja, well sung by SPB and PS.
வய்யாரி கோடாரம்மா (பிரேமிஞ்ச்சு பெள்ளடு)
***இந்த திரி சற்றே தொய்வடைந்து விட்டது, தயவு செய்து நீங்கள் கேட்டு ரசித்த பாடல்களை மற்றவர்களுக்கு சொல்லலாமே..
இந்த தெலுங்கு பாடலில் ஜானகியும் , பாலசுப்ரமணியமும் மாற்றி மாற்றி ஹொ ஹொ ... ஹொ எனும்போது என்னால் பரவசபடுவதை நிறுத்த முடியவில்லை (ராஜா சாரை என்றென்றும் நான் நேசிக்க எத்தனை காரணங்களை சொன்னாலும் இது போன்ற சங்கதி அள்ளி அள்ளி தந்திருக்கிறாரே மனிதர் !! )
இரண்டு முறை கல...வரம் என்று பாலு பிரித்து பாடும் போதும் கவனிக்க ! இடை இசையில் ஒலிக்கும் சப்தங்கள் 1984-1986 காலகட்டங்களை யாருக்கேனும் நினைவு படுத்தலாம்.
நவ்வேட்டி நக்ஷத்ராலு என்று தொடங்கி ராதிகா என்று முடியும் வரை ஒரே வாக்கியமாய் இடை விடாமல் வருவதை ஆச்சர்யத்தோடு கவனிக்காமல் இருக்க முடியவில்லை. அடுத்த சரணத்திலும் அதே மேஜிக்.
இன்று காலை தான் இந்த பாடலுக்கான வீடியோவை முதல் முறையாக பார்த்தேன், ஒரு வாரமாய் ஐடியூன்சில் பாடலை மட்டுமே கேட்டு, என் மனக்கண்ணால் நான் பார்த்து வைத்திருந்த காட்சிகள் அனைத்தையும் நொறுக்கி தள்ளி விட்டார்கள் ராஜேந்திர பாபுவும், பானுப்ரியாவும். ராஜா சார் பாடல்களுக்கு அப்படி ஒரு கதி அமைந்து விடுவதை இன்று வரை நிறுத்த முடியவில்லை.
dailymotion video of the song: http://www.dailymotion.com/video/x17...odaramma_music
https://www.youtube.com/watch?v=O3PoBNexENY