http://i160.photobucket.com/albums/t...psgwzaptlg.jpg
http://dinaethal.epapr.in/490340/Din...2015#page/13/1
Printable View
நேற்று பல வருடங்களுக்கு பிறகு ஒரு மலையாள படம் பார்த்தேன் [ Drishyam / ட்ரிஷ்யம்]. இதை பார்க்கதுண்டியது இந்த பத்தின் தமிழக்கம் பாபநாசம் "முடி சுருட்டி விட்டது - இது சிவாஜி ஸ்டைல்" என்ற ஒரு வசனம். நல்ல படம். ஆனால் இந்த படத்தை சுருக்கமாக சொல்லவேண்டும் என்றல் மக்கள் திலகம் பாடல் தான்:
http://videos.filmibeat.com/tamil/tr...er-131586.html
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே -
பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்க்கையிலே
பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை -
நல்ல பண்பு தவறிய பிள்ளையைப் பெற்றவர் பேர் சொல்லி வாழ்வதில்லை
Good Movie but makes me feel that it is a mixture of many movies which we have seen in the 1960's and 1970's.
அடிமைப்பெண் காவியத்தை பார்த்த அனுபவம் :
01-05-1969 அன்று இக்காவியம் வெளியாகும் சென்னை மிட்லண்ட் திரையரங்கத்தை அலங்கரிக்க, அதற்கு முந்தைய நாளான
30-04-1969 அன்று நானும் என் 9வது வகுப்பு பள்ளி தோழர்களும் சென்னை வெலிங்டன் திரையரங்கில், மறு வெளியீட்டில், அப்போது திரையிடப்பட்ட "மதுரை வீரன்" காவியத்துக்கு இரவு காட்சி கண்டு விட்டு , எங்கள் பணியினை துவக்கினோம். (பள்ளி விடுமுறை காலம் என்பதால், நாங்கள் அவரவர் வீட்டில் நண்பர் வீட்டில் தங்குவதாக
கூறி விட்டு எல்லோரும் இரவு காட்சிக்கு வந்து விட்டோம் ) .
அப்போதைய சென்னை மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் திரு. கல்யாணசுந்தரம் அவர்களின் வழிமுறைகளின்படி, சென்னை மாவட்ட எம். ஜி. ஆர். மன்ற அமைப்புக்கள் ஒவ்வொன்றும் ஒரு பொறுப்பினை ஏற்றுக்கொண்டன. சென்னை திருவல்லிக்கேணி ஜாம்பஜார் பகுதியில் இயங்கி வந்த, நான் சார்ந்திருந்த எம். ஜி. ஆர். மன்ற அமைப்பின் சார்பில் வழக்கம்போல், இதற்கு முன்பு அதே மிட்லண்ட் அரங்கில் வெளியான 'ஒளி விளக்கு' காவியத்தின் வண்ண ஸ்டில்ஸ்களை ஒட்டி பெரிய ஸ்டார் ஒன்றை தயார் செய்து திரையரங்க நுழைவு வாயிலில் தொங்க விட்டோம். பிறகு, கையால் வரையப்பட்ட மக்கள் திலகத்தின் பிரம்மாண்டமான பேனர்களுக்கு மாலைகள் அணிவித்து மகிழ்ந்தோம்.
இந்த காவியத்தை காண வந்த ரசிக பெருமக்களுக்கு இனிப்புக்கள் வழங்கி ஆனந்தம் அடைந்தோம்.
பின்னர் மதியம் காட்சியில், எனது பள்ளித்தோழர்களுடன் இந்த காவியத்தை கண்டு களிக்கும் பாக்கியத்தை பெற்றோம். திரையில் நமது பொன்மனச்செம்மல் அவர்கள் முதன் முதலில் தோன்றியவுடன் ரசிகர்களின் வாழ்த்து முழக்கங்கள் விண்ணை பிளந்தன. தீப ஆராதனை ஒரு புறம், புரட்சி நடிகர் வாழ்க , மக்கள் திலகம் வாழ்க என்ற கோஷம் மறுபுறம். வண்ண உதிரிபூக்கள் TITLE காட்டியதில் தொடங்கி நம் மக்கள் திலகம் திரையில் முதன் முதலில் தோன்றும் காட்சி வரை வீசிய வண்ணம் இருந்த ரசிகர்கள் இன்னொரு புறம் உற்சாக ஊற்றாம் நம் காவிய நாயகனை கண்டவுடன் ஆனந்த நடனம் ஆடும் ரசிகர்கள் கூட்டம் வேறு ஒரு புறம். புதுமையான முறையில், நமது நடிகமன்னன் எம். ஜி. ஆர். அவர்கள் ஒற்றைக்காலில் வலையின் மீது வில்லன் அசோகனிடம் வாள் போரிடும் சண்டைக் காட்சி, வலையின் கீழே வரிசையாக குத்தீட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. வலையை இழுத்து பிடித்திருந்த விதத்தில் இருவரும் எம்பி எம்பி குதித்து சண்டை போடும் போது வலையின் அடிப்பகுதி அந்த கூர்மையான குத்தீட்டிகளை தொட்டு விட்டு வரும். பார்ப்பதற்கே மயிர்க்கூச்செறியும் இந்த சண்டை காட்சி வேறு எந்த படத்திலும் அதுவரை காணப்படாத புதுமைக்காட்சியாகும். இந்த காட்சியில் ரசிகர்கள் உணர்ச்சியின் எல்லைக்கே சென்று ஆர்ப்பரித்து பலத்த கைத்தட்டலும், விசில் சப்தமும் திரையரங்கை அதிர வைத்தது.
முதல் பாடல் "அம்மா என்றால் அன்பு" என்று நடிகை ஜெயலலிதா
http://i62.tinypic.com/ml5v14.png
தனது சொந்த குரலில் பாடிய பாடலின்போது அமைதியாய் இருந்த ரசிகர் கூட்டம்,
பின்பு எதிரின்னா என்ன என்று நம் மக்கள் திலகம் நடிகை ஜெயலலிதாவை பார்த்து போது, அதற்கு அவர் "நீங்க இருந்தா தங்கள் வாழ்வு அழிந்து விடும் - ன்னு நினைக்கிறாங்களே அவங்கதான் எதிரி என்று விளக்கம் அளித்தபின்பு, நம் பொன்மனச்செம்மல் அவர்கள் "நான் அப்படி நினைக்கலேயே" என்று கூறுவதும், மீண்டும் நடிகை ஜெயலலிதா அவர்கள் "எல்லோரும் உங்களை மாதிரி இருப்பாங்களா" என்று வினவுவதும், அதற்கும் பதிலாக நம் கலைச்சுடர் எம். ஜி. ஆர். அவர்கள் "அப்படின்னா, அந்த எதிரியை பார்த்து, நான் உனக்கு எதிரி இல்லை என்று சொல்லிட்டு வந்திடறேன் " என்று பதிலுரைக்கும் போதும்,
http://i61.tinypic.com/xfe2xk.jpg
பலத்த கைத்தட்டல்களை எழுப்பி, நகைச்சுவை உணர்வுடன் இந்த காட்சியை ரசித்தது.
தாய்மையை பெருமைபடுத்தும் விதத்தில் பின்பு வரும் "தாயில்லாமல் நானில்லை" என்ற பாடல்
http://i58.tinypic.com/oqbx1w.jpg
படமாக்கப்பட்ட விதமும், அந்த பாடலுக்கு முன் பண்டரிபாய்க்கும், நம் மக்கள் திலகத்துக்கும் நடைபெறும் உரையாடல் காட்சிகளும் நெஞ்சை தொட்டன. பெண்கள் கூட்டம் இந்த காட்சியை கண்டு உணர்ச்சிவசப்பட்டதை காண முடிந்தது. ONCE MORE கேட்டது ஒரு ரசிகர் கூட்டம். "தாயில்லாமல் நானில்லை" என்ற அந்த பாடல் தற்போது பலரது செல்போன்களில் RING TONE ஆக உள்ளது. நானும் எனது செல்போனில் இந்த பாடலைத்தான் RING TONE ஆக வைத்துள்ளேன்.
அடுத்த பாடல் " காலத்தை வென்றவன் நீ"
http://i57.tinypic.com/35aprwh.jpg
என்ற பாடலில் " ஓயாமல் உழைப்பதில் சூரியன் நீ " என்ற வரி இடம் பெறும் போது, கரங்கள் பல உதய சூரியன் வடிவில் குவிக்கப்பட்டு அதில் நம் நடிகப்பேரரசர் எம். ஜி. ஆர். அவர்கள் நடுநாயகமாய் ஸ்டைல் ஆக தோற்றமளித்த காட்சியில் ரசிகர்களின் பலத்த ஆரவாரம், தலைவா என்ற கோஷம், கை தட்டல்கள் இவைகளால் திரையரங்கம் மீண்டும் அதிர்ந்தது.
"ஆயிரம் நிலவே வா" என்ற மென்மையான காதல் பாடல்
http://i59.tinypic.com/34doaoo.jpg
ஜெய்ப்பூர் அரண்மனையிலும், அது கண்ணாடி மாளிகையில் படமாக்கப்பட்ட விதமும் கண் கொள்ளா காட்சி. இந்த பாடல் மூலம், திரு.எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்கள் மிகவும் பிரபலம் அடைந்தார். இந்த காட்சி ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது.
பிறகு வரும் பாலைவனப்பாடல் "ஏமாற்றாதே ஏமாற்றாதே" யில்,
http://i61.tinypic.com/vpdv61.jpg
அதிர வைக்கும் இசைத்திறனை முழுமையாக வெளிப்படுத்தி இருப்பார் திரை இசைத்திலகம் கே. வி. மகாதேவன். இந்த பாடல் நடனக்காட்சி இப்போதும் பேசப்படுவது ஒரு தனிச்சிறப்பு.
"உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது' பாடல் காட்சியில்,
http://i61.tinypic.com/snf79w.jpg
" நீ கடவுளை பார்த்தது கிடையாது, அவன் கருப்பா சிவப்பா தெரியாது, இறைவன் ஒருவன் இருக்கின்றான், இந்த "ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்" என்ற வரிகள் வரும் பொழுது, வேங்கையன் அழைத்து வரும் கூட்டம் தங்கள் முகத்திரையை விலக்கும் காட்சி மூலம், தான் சார்ந்திருந்த இயக்கமான, பேரறிஞர் அண்ணா அவர்களின் தி. மு. க வின் மீது கொண்ட ஈடுபாடும், ஏழைகள் நலனில் அக்கறை கொண்டவர் இவர் போல் எவரும் இருக்க முடியாது என்பதும் நன்கு புலனாகிறது.
இறுதி காட்சியில், நம் இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்கள் சிங்கத்துடன் மோதி
http://i60.tinypic.com/a9tp1k.jpg
போரிடும் காட்சி கண்டு மெய்சிலிர்த்தோம். இந்த காட்சி பற்றி இந்தி நடிகர் திரு. ராஜ் கபூர் கருத்து தெரிவிக்கையில், :டூப் இல்லாத நிஜமான "சிங்க சண்டை" யை வியந்து பாராட்டி, இது போல் நடிக்க தன்னால் கூட முடியாது என்று கூறினார்.
மொத்தத்தில், "அடிமைப்பெண்" காவியம் நம் தமிழக ரசிகர்களை மட்டுமல்ல மொத்த இந்திய திரைப்பட ரசிகர்களையும் வியக்க வைத்தது என்றால் அது மிகையாகாது. .
சிறப்பம்சங்கள் :
1. "பிலிம்பேர்" பத்திரிகை, 1969ம் ஆண்டின் சிறந்த தமிழ் படமாக "அடிமைப்பெண்" காவியத்தை தேர்வு செய்தது. அது தொடர்பான விழா 19-04-1970 ஞாயிற்று கிழமை இரவு மும்பை சண்முகானந்தா ஹாலில் நடைபெற்றது. அது சமயம், அப்ப்போது இந்திய செய்தி துறை ராஜாங்க மந்திரியான ஐ. கே. குஜ்ரால் (பின்னாளில் இவர் பாரத பிரதமராகவும் சிறிது காலம் பதவி வகித்தார்) அவர்கள் நம் மக்கள் திலகத்துக்கு நினைவுப்பரிசினை வழங்கினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக பங்கேற்ற மறைதிரு. ராஜ்கபூர் அவர்கள் நம் பொன்மனசெம்மலை ஆரத்தழுவி தன் அன்பை வெளிப்படுத்தினார்.
http://i60.tinypic.com/20fvm6f.jpg
இந்த விழாவில், வருவாய் இல்லாத நலிந்த இந்தி கலைஞர்களுக்கு உதவும் வகையில், ரூபாய் 15,000/- நன்கொடை வழங்கியபொழுது, பெரும் ஆரவாரத்துடன், பலத்த கைதட்டல் பெற்ற நம் மக்கள் திலகத்தை, இந்தி பட உலகினர் அனைவரும் வரவேற்று, பாராட்டி, தங்கள் மகழ்சியை வெளிபடுத்தி, வாழ்த்தினர்.
நம் பொன்மனச்செம்மலின் கொடைத்தன்மையை பற்றி கேள்விப்பட்டிருந்த வட மாநிலத்தவர் பலருக்கு இந்த செய்கையானது பிற மொழிக் கலைஞர்கள் மேல் நம் பொன்மனச்செம்மலுக்கு உள்ள பற்றினையும், அன்பினையும், ஈடுபாட்டினையும் வெளிப்படுத்தியது.
மேற்கூறிய இந்த இனிய சம்பவங்களையும், நினைவுகளையும், , அப்போதே, எனது நண்பரும், மும்பை மாதுங்கா பகுதியில் இயங்கி வந்த மக்கள் திலகம் எம். ஜி. ஆர். மன்ற செயலாளார் தஞ்சை கே. எஸ்.சோமசுந்தரம் அவர்கள், பின்னர் மகிழ்ச்சியுடன், என்னுடன் பகிர்ந்து கொண்டார்.
இந்த "பிலிம்பேர்" விருது நிகழ்ச்சியை பின்னர், சென்னை திரையரங்குகளில், இந்தி நடிகர் ராஜேஷ் கண்ணா அவர்கள் நடித்த "சச்சா ஜூட்டா"
2. 1969ம் ஆண்டிற்கான தமிழக அரசின் சிறந்த படமாக "அடிமைப்பெண்" தேர்ந்தெடுக்கப்பட்டது.
3. ஜெய்ப்பூர் அரண்மணை மற்றும் கண்ணாடி மாளிகையில் முதலும், கடைசியுமாக படப்பிடிப்பு நடைபெற்றது இந்த காவியத்துக்கு மட்டுமே !
4. 'பனிப்புயல்' ஒன்றை செயற்கையாக உருவாக்கி அது இயற்கையானது போல் காட்டி, ரசிகர்களை பிரமிக்க வைத்த காவியம் "அடிமைப்பெண்"
5. உயர் வகுப்பு நுழைவு சீட்டு மதிப்பு ரூபாய் 2.93 அப்போது ரூபாய் 100க்கு (இன்றைய மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று யூகித்து கொள்ளுங்கள்) விற்கப்பட்டு தமிழ் திரையுலகினரை திகைக்க வைத்த காவியம் தான் "அடிமைப்பெண்'
6. ஒரு படத்தின் பாடல் காட்சியில் (நான் ஆணையிட்டால் படத்தில் இடம் பெற்ற ' நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்' என்ற பாடலில்) "வருகிறது" என்று காண்பிக்கப்பட்ட பெருமைக்குரிய காவியம் அடிமைப்பெண்.
8. முன்பதிவு ஆரம்பித்த இரண்டே நாட்களில், சென்னையில் திரையிடப்பட்ட 4 அரங்குகளிலும் 100 காட்சிகள் முதன் முதலில் அரங்கு நிறைந்த காவியம் "அடிமைப்பெண்"
இதர தகவல்கள் :
1. இந்த காவியம் "கோஹி குலோம் நஹி" என்ற பெயரில் இந்தியில் ட ப்பிங் செய்யப்பட்டு மும்பை நகரில் உள்ள 'ரிவோலி' தியேட்டரில் வெளியிடப்பட்டு, கோலாகலமாக தொடக்க விழா கொண்டாடப்பட்டது. மும்பை நகரில் வெற்றிகரமாக ஓடிய வெகு சில தமிழ் படங்களில் பிரதான இடம் பெற்றது.
2. கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரில் மெஜெஸ்டிக், சாரதா, அபேரா ஆகிய 3 திரையரங்குகளில் 80 நாட்களும், நவ்ரங் அரங்கில் 75 நாட்களும், மைசூர் நகரில் ராஜ்மஹால் அரங்கில் 75 நாட்களும், ஷிமோகாவில் 60 நாட்களும் வெற்றிகரமாக ஓடி, அண்டை மாநிலத்திலும் "வெற்றிக்கொடி நாட்டிய வேங்கையன்" என்று பரபரப்பாக பேச வைத்த காவியம் அடிமைப்பெண்.
3. கேரளா மாநிலம் திருவனந்தபுரம் சக்தி அரங்கில் 70 நாட்களும், எர்ணாகுளம் சென்ட்ரல் அரங்கில் 70 நாட்களும், கொல்லம் ( QUILON) கவிதா அரங்கில் 70 நாட்களும், கோழிக்கோடு நகரில் 68 நாட்களும், திருச்சூரில் 55 நாட்களும் ஓடி ஒரு புதிய வரலாறு படைத்தது.
4. தமிழகமெங்கும் 56 அரங்குகளிலும், கர்நாடக மாநிலத்தில் 6 அரங்குகளிலும், கேரளா மாநிலத்தில் 5 அரங்குகளிலும், முதல் வெளியீட்டில் "அடிமைப்பெண்" காவியம் திரையிடப்பட்டது. அவற்றில் 16 அரங்குகளில் 100 நாட்கள் மற்றும் அதற்கு மேலும், 16 அரங்குகளில் 75 நாட்கள் மற்றும் அதற்கு மேலும், 35 அரங்குகளில் 50 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் ஓடியது. ;
5. மறு வெளியீடுகளிலும், தமிழகமெங்கும் ஒரு புது சகாப்தத்தை உருவாக்கிய காவியம் என்ற பெருமையை பெற்ற மாபெரும் காவியம்.
சமீபத்திய உதாரணம் : மதுரை சென்ட்ரல் அரங்கில்,
http://i59.tinypic.com/4h7ejm.jpg
1.09,000 ரூபாய் வசூலித்து ஒரு பெரிய புரட்சி செய்து மதுரை மாநகரில் இதுவரை எந்த படத்துக்கும் இது போல் கூட்டம் அலை மோதியதில்லை என்ற எழுச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக சென்ட்ரல் அரங்கில் ஞாயிறு அன்று அரங்கு நிறைந்து, ரசிகர்களின் ஏமாற்றத்தை தவிர்க்கும் வகையில், அவர்களின் வேண்டுகோளை ஏற்று, மேலும் 100 டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு, நின்று கொண்டே இந்த காவியத்தை கண்டு களித்தனர்.
மேலும், 26-10-2007 அன்று சென்னை மெலோடி அரங்கில் திரையிடப்பட்ட பொழுது, பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய அடைமழை கொட்டிய ,போதும் அரங்கு நிறைந்து மக்கள் டிக்கெட் கிடைக்காமல் சோகத்துடன் திரும்பிய காட்சி இன்னும் நெஞ்சை விட்டு அகலாதிருக்கிறது.
6. "அம்மா என்றால் அன்பு" என்ற பாடலை முதன் முதலில் மறைதிரு. டி. எம். எஸ். அவர்கள் பாடி பதிவு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
7. "அடிமைப்பெண்" காவியத்தை பற்றி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் கருத்து : தனி ஒரு நடிகர் இவ்வளவு பெரிய அளவில் படம் எடுத்திர்ப்பதை கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டேன். இதில் எவ்வளவு பெரிய ரிஸ்க் இருக்கிறது தெரியுமா, நான் இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்க மாட்டேன். ஆதாரம் : 1969 பொம்மை மாத இதழ்.
இறுதி குறிப்பு :
பேரறிஞர் அண்ணா அவர்கள் காலமானதை தொடர்ந்து, 07-02-1969 அன்று ஊட்டியில் நடக்கவிருந்த "அடிமைப்பெண்" படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது.
http://i61.tinypic.com/2m65rmb.jpg
நம் இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்கள் சிங்கத்துடன் மோத தயாராகும் காட்சி