மக்கள் போற்றும் பட்டமே நிலையானது
மெல்லிசை மன்னர்கள் / மெல்லிசை மன்னர் இசை அமைத்த மக்கள் திலகம் எம்ஜிஆர் பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட் .அதற்காக மெல்லிசை மன்னருக்கு கிடைத்த புகழ் உலகம் உள்ள வரை நிலைத்து நிற்கும்.
.மக்களால் வழங்கப்படும் பட்டம் தான் நிலையாக நிலைத்து நிற்கும் . உதாரணம் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன்
விருதுகள் வழங்கும் பொறுப்பு மத்திய அரசிடம் உள்ளது .மாநில அரசு சிபாரிசு செய்தால் கூட மத்திய அரசு ஏற்று கொள்ள மறுப்பதும் .உண்டு . மேலும் மக்கள் திலகத்தின் வெற்றிக்கு முழு காரணம் அவருடைய திறமை , உழைப்பு மற்றும் மனித நேயம்.
இசையால்தான் எம்ஜிஆர் அரசியல், சினிமா வெற்றி பெற்றார் என்பது ஒரு சிலரின் கருத்து இருப்பதை அவர்களது சொந்த கருத்தாக எடுத்து கொள்ளலாம் .அந்த கருத்தை உள்நோக்கத்துடன் விமர்சனம் செய்தால் அதை ஏற்று கொள்ள முடியாது .உணர வேண்டியவர்கள் உணர்ந்தால் சரி . ஏற்கனவே ஒரு சிலர் எம்ஜிஆர் அவர்களின் திரை உலக மற்றும் அரசியல் உலக வெற்றிகளை ஏற்க மனமில்லாமல் பல் வேறு விளக்கங்களை தேடி தேடி இன்னும் முழுமை பெறாமல் முயற்சி செய்து கொண்டு வருவதை பார்த்து கொண்டு வருகிறோமே .அதிலாவது அற்ப மகிழ்ச்சி கிடைக்கட்டுமே